5850. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدٍ أَبِي مَسْلَمَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ.
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5850. சயீத் அபூமஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘ஆம் (தொழுதுவந்தார்கள்)” என்று சொன்னார்கள்.69


அத்தியாயம் : 77
5851. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا. قَالَ مَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ، وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمَ التَّرْوِيَةِ. فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَمَّا الأَرْكَانُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمَسُّ إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا وَأَمَّا الإِهْلاَلُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ.
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5851. உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த் தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்க வில்லை” என்று கூறினேன். அவர்கள் ‘‘அவை யாவை? இப்னு ஜுரைஜே!” எனக் கேட்டார்கள்.

நான் ‘‘(கஅபாவைச் சுற்றி வரும்போது அதன் மூலைகளில் ‘ஹஜருல் அஸ்வத்’ மற்றும் ‘ருக்னுல் யமானி’ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை நான் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹிஜ்ஜா மாத) பிறை பார்த்தவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும் நீங்கள் மட்டும் (துல்ஹிஜ்ஜா) எட்டாவது நாள் வரும்வரை இஹ்ராம் கட்டாமருப்பதை நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)” என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன். (அதனால் தான் நானும் அப்படிச் செய்கிறேன்.) (முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் அங்கத் தூய்மை (உளூ) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன்.

மஞ்சள் நிறமோ, அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதனால் (என் ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹிஜ்ஜா எட்டாம் நாள்) இஹ்ராம் கட்டுவதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் (துல்ஹிஜ்ஜா எட்டாம் நாள்) பயணத்திற்குத் தயாராகி நிற்கும்வரை இஹ்ராம் கட்டி நான் பார்த்ததில்லை.70


அத்தியாயம் : 77
5852. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَلْبَسَ الْمُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِزَعْفَرَانٍ أَوْ وَرْسٍ، وَقَالَ "" مَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ "".
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5852. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

மேலும், ‘‘(இஹ்ராம் கட்டியிருக்கும் போது) காலணிகள் கிடைக்காதவர், (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால் களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.71


அத்தியாயம் : 77
5853. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ لَمْ يَكُنْ لَهُ إِزَارٌ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَكُنْ لَهُ نَعْلاَنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ "".
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5853. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(இஹ்ராமின்போது) கீழங்கி இல்லாத வர் முழுக்கால் சட்டை அணிந்துகொள் ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்துகொள்ளட்டும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.72

அத்தியாயம் : 77
5854. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ.
பாடம்: 38 முதலில் வலது கால் காலணியை அணிய வேண்டும்.
5854. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தாம் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும், தலைவாரிக் கொள்ளும்போதும், காலணி அணிந்துகொள்ளும்போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.73

அத்தியாயம் : 77
5855. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ "".
பாடம்: 39 முதலில் இடது கால் காலணியைக் கழற்ற வேண்டும்.
5855. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது கால் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதல் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 77
5856. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا، أَوْ لِيَنْعَلْهُمَا جَمِيعًا "".
பாடம்: 40 ஒரேயொரு காலணியில் நடக்க லாகாது.
5856. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் : 77
5857. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ أَنَّ نَعْلَ، النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ لَهَا قِبَالاَنِ.
பாடம்: 41 ஒரு காலணியில் இரண்டு வார் களும் இருக்கலாம்; ஒரே வாரும் இருக்கலாம்.
5857. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன.


அத்தியாயம் : 77
5858. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ خَرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ بِنَعْلَيْنِ لَهُمَا قِبَالاَنِ، فَقَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ هَذِهِ نَعْلُ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 41 ஒரு காலணியில் இரண்டு வார் களும் இருக்கலாம்; ஒரே வாரும் இருக்கலாம்.
5858. ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரு காலணி களை எங்களுக்குக் காட்டினார்கள்.

(பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘இதுதான் நபி (ஸல்) அவர்களின் காலணியாகும்” என்று சொன்னார்கள்.74

அத்தியாயம் : 77
5859.
பாடம்: 42 பதனிடப்பட்ட தோலால் ஆன சிவப்புநிறக் கூடாரம்
5859. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்புக் கூடாரத் தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்த தண்ணீரை எடுத்ததை நான் பார்த்தேன். மக்கள் அந்தத் தண்ணீருக்காகப் போட்டியிட்டனர்.

அதில் சிறிது கிடைக்கப்பெற்றவர் அதைத் (தமது மேனியில்) தடவிக் கொண்டார். அதிலிருந்து சிறிதும் கிடைக் கப் பெறாதவர் தம் தோழர் கையிலிருந்த ஈரத்தை எடுத்து (தடவி)க்கொண்டார்.75


அத்தியாயம் :
5860. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، ح وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الأَنْصَارِ، وَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ.
பாடம்: 42 பதனிடப்பட்ட தோலால் ஆன சிவப்புநிறக் கூடாரம்
5860. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப் பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டி னார்கள்.76

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5861. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَحْتَجِرُ حَصِيرًا بِاللَّيْلِ فَيُصَلِّي، وَيَبْسُطُهُ بِالنَّهَارِ فَيَجْلِسُ عَلَيْهِ، فَجَعَلَ النَّاسُ يَثُوبُونَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُصَلُّونَ بِصَلاَتِهِ حَتَّى كَثُرُوا فَأَقْبَلَ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ خُذُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَإِنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دَامَ وَإِنْ قَلَّ "".
பாடம்: 43 பாய் போன்றவற்றின் மீது அமர் வது
5861. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத் தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழு வார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன்மீது அமர் வார்கள்.

மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகிவிடவே, நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படையமாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்” என்று சொன்னார்கள்.77

அத்தியாயம் : 77
5862. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ أَبَاهُ، مَخْرَمَةَ قَالَ لَهُ يَا بُنَىَّ إِنَّهُ بَلَغَنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ فَهْوَ يَقْسِمُهَا، فَاذْهَبْ بِنَا إِلَيْهِ، فَذَهَبْنَا فَوَجَدْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَنْزِلِهِ، فَقَالَ لِي يَا بُنَىَّ ادْعُ لِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَعْظَمْتُ ذَلِكَ. فَقُلْتُ أَدْعُو لَكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا بُنَىَّ إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ. فَدَعَوْتُهُ فَخَرَجَ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرٌ بِالذَّهَبِ، فَقَالَ "" يَا مَخْرَمَةُ هَذَا خَبَأْنَاهُ لَكَ "". فَأَعْطَاهُ إِيَّاهُ.
பாடம்: 44 பொன் பித்தான் பொருத்தப்பட்ட ஆடை
5862. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டி ருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டி யுள்ளது. ஆகவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி (ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அருமை மகனே! எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள்.

அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், ‘‘உங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘என் அன்பு மகனே! (நபி -ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்” என்று சொல்ல, நான் நபி (ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் பொன் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப் பட்டு மேலங்கியொன்றை எடுத்துக் கொண்டுவந்து, ‘‘மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்” என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத்தார்கள்.78

அத்தியாயம் : 77
5863. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ سَبْعٍ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ ـ أَوْ قَالَ حَلْقَةِ الذَّهَبِ ـ وَعَنِ الْحَرِيرِ، وَالإِسْتَبْرَقِ، وَالدِّيبَاجِ، وَالْمِيثَرَةِ الْحَمْرَاءِ، وَالْقَسِّيِّ، وَآنِيَةِ الْفِضَّةِ، وَأَمَرَنَا بِسَبْعٍ بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجَنَائِزِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَرَدِّ السَّلاَمِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِبْرَارِ الْمُقْسِمِ، وَنَصْرِ الْمَظْلُومِ.
பாடம்: 45 பொன் மோதிரங்கள்
5863. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘பொன் மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப் பட்டு, அலங்காரப் பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்க ளுக்குத் தடை விதித்தார்கள்.

மேலும், நோயாளிகளை நலம் விசாரிப் பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் உங்க ளுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்குப் பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவி புரிவது ஆகிய ஏழு (நற்)செயல் களைக் கடைப்பிடிக்குமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.79


அத்தியாயம் : 77
5864. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ. وَقَالَ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ سَمِعَ النَّضْرَ سَمِعَ بَشِيرًا مِثْلَهُ.
பாடம்: 45 பொன் மோதிரங்கள்
5864. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரத்தை அணிய வேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 77
5865. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ، فَاتَّخَذَهُ النَّاسُ، فَرَمَى بِهِ، وَاتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ أَوْ فِضَّةٍ.
பாடம்: 45 பொன் மோதிரங்கள்
5865. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து)கொண்டார்கள். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் தமது பொன் மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள்.80

அத்தியாயம் : 77
5866. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَاتَّخَذَ النَّاسُ مِثْلَهُ، فَلَمَّا رَآهُمْ قَدِ اتَّخَذُوهَا رَمَى بِهِ، وَقَالَ "" لاَ أَلْبَسُهُ أَبَدًا "". ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ الْفِضَّةِ. قَالَ ابْنُ عُمَرَ فَلَبِسَ الْخَاتَمَ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَبُو بَكْرٍ ثُمَّ عُمَرُ ثُمَّ عُثْمَانُ، حَتَّى وَقَعَ مِنْ عُثْمَانَ فِي بِئْرِ أَرِيسَ.
பாடம்: 46 வெள்ளி மோதிரம்
5866. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பொன் மோதிரம்’ அல்லது ‘வெள்ளி மோதிரம்’ ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று (இலச்சினை) பொறித்தார்கள். மக்களும் அதைப் போன்று மோதிரத்தைத் தயாரித்து (அணிந்து)கொண்டனர்.

மக்கள் அதைத் தயாரித்து (அணிந்து)கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது தமது மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்துகொண்டார்கள். பிறகு (அதை) உமர் (ரலி) அவர்களும், பிறகு உஸ்மான் (ரலி) அவர்களும் அணிந்துகொண்டார்கள். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது.81

அத்தியாயம் : 77
5867. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ فَنَبَذَهُ فَقَالَ "" لاَ أَلْبَسُهُ أَبَدًا "". فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
பாடம்: 47
5867. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டிருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். மக்களும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்.


அத்தியாயம் : 77
5868. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا، ثُمَّ إِنَّ النَّاسَ اصْطَنَعُوا الْخَوَاتِيمَ مِنْ وَرِقٍ وَلَبِسُوهَا، فَطَرَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمَهُ، فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ وَزِيَادٌ وَشُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ ابْنُ مُسَافِرٍ عَنِ الزُّهْرِيِّ أَرَى خَاتَمًا مِنْ وَرِقٍ.
பாடம்: 47
5868. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றை நான் கண்டேன். பிறகு மக்கள், (அதைப் போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டனர்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5869. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا حُمَيْدٌ، قَالَ سُئِلَ أَنَسٌ هَلِ اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا قَالَ أَخَّرَ لَيْلَةً صَلاَةَ الْعِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ. قَالَ "" إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا "".
பாடம்: 48 மோதிர(க்கல் பதிக்கும்) குமிழ்
5869. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.82


அத்தியாயம் : 77