5778. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهْوَ فِي نَارِ جَهَنَّمَ، يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سَمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسَمُّهُ فِي يَدِهِ، يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ، يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا "".
பாடம் : 56 விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும் விஷம் அருந்துவதும்105
5778. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டே இருப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.106


அத்தியாயம் : 76
5779. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ أَبُو بَكْرٍ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اصْطَبَحَ بِسَبْعِ تَمَرَاتٍ عَجْوَةٍ لَمْ يَضُرَّهُ ذَلِكَ الْيَوْمَ سَمٌّ وَلاَ سِحْرٌ "".
பாடம் : 56 விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும் விஷம் அருந்துவதும்105
5779. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்107

அத்தியாயம் : 76
5780. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، رضى الله عنه قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ. قَالَ الزُّهْرِيُّ وَلَمْ أَسْمَعْهُ حَتَّى أَتَيْتُ الشَّأْمَ. و
பாடம் : 57 கழுதைப் பால்108
5780. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்.109

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘நான் ஷாம் நாட்டிற்கு வரும்வரை இந்த ஹதீஸை செவியுற்ற தில்லை” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 76
5781. َزَادَ اللَّيْثُ قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ وَسَأَلْتُهُ هَلْ نَتَوَضَّأُ أَوْ نَشْرَبُ أَلْبَانَ الأُتُنِ أَوْ مَرَارَةَ السَّبُعِ أَوْ أَبْوَالَ الإِبِلِ. قَالَ قَدْ كَانَ الْمُسْلِمُونَ يَتَدَاوَوْنَ بِهَا، فَلاَ يَرَوْنَ بِذَلِكَ بَأْسًا، فَأَمَّا أَلْبَانُ الأُتُنِ فَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُحُومِهَا، وَلَمْ يَبْلُغْنَا عَنْ أَلْبَانِهَا أَمْرٌ وَلاَ نَهْىٌ، وَأَمَّا مَرَارَةُ السَّبُعِ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ أَنَّ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ.
பாடம் : 57 கழுதைப் பால்108
5781. மற்றோர் அறிவிப்பில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்திருப்பதாவது:

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், ‘‘கழுதைப் பாலில் நாங்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யலாமா? அல்லது அதைப் பருகலாமா? அல்லது விலங்குகளின் பித்தநீரை, அல்லது ஒட்டகத்தின் சிறுநீரை அருந்தலாமா?” என்று கேட்டேன்.

அவர்கள், ‘‘முஸ்லிம்கள் ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சை பெற்றுவந்தார்கள். அதில் தவறேதும் இருப்பதாக அவர்கள் கருதவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென்று தடை விதித்ததாகச் செய்தி எமக்கு எட்டியுள்ளது. ஆனால், அவற்றின் பாலை அருந்துங்கள் என்றோ அருந்தாதீர்கள் என்றோ எந்தக் கட்டளையும் அல்லது தடை உத்தரவும் நமக்கு எட்டவில்லை” என்று சொன்னார்கள்.

விலங்குகளின் பித்தநீரைப் பொறுத்த வரை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாக அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 76
5782. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، مَوْلَى بَنِي تَيْمٍ عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى بَنِي زُرَيْقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لْيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً وَفِي الآخَرِ دَاءً "".
பாடம் : 58 பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்...
5782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால், அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.110

அத்தியாயம் : 76

5783. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، يُخْبِرُونَهُ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ "".
பாடம்: 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக் கும் (ஆடை) அலங்காரத்தையும், தூய்மையான வாழ்வாதாரங்களையும் தடை செய்தவர் யார்? (7:32)2 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள். (ஆனால்,) விரயம் செய்யாதீர்கள்; தற்பெருமை கொள்ளாதீர்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விரயம் அல்லது தற்பெருமை ஆகிய இரண்டும் உன்னை அண்டாத வரை நீ விரும்பியதை உண்ணலாம்; நீ விரும்பி யதை உடுத்தலாம்.
5783. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5784. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ "". قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَ شِقَّىْ إِزَارِي يَسْتَرْخِي، إِلاَّ أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَسْتَ مِمَّنْ يَصْنَعُهُ خُيَلاَءَ "".
பாடம்: 2 தற்பெருமையின்றி ஒருவர் தமது கீழங்கியை இழுத்துச் செல்வது3
5784. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் தமது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின் றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகிறது” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்” என்று கூறினார்கள்.4


அத்தியாயம் : 77
5785. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَسَفَتِ الشَّمْسُ وَنَحْنُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ يَجُرُّ ثَوْبَهُ مُسْتَعْجِلاً، حَتَّى أَتَى الْمَسْجِدَ وَثَابَ النَّاسُ فَصَلَّى رَكْعَتَيْنِ، فَجُلِّيَ عَنْهَا، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا وَقَالَ "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا فَصَلُّوا وَادْعُوا اللَّهَ حَتَّى يَكْشِفَهَا "".
பாடம்: 2 தற்பெருமையின்றி ஒருவர் தமது கீழங்கியை இழுத்துச் செல்வது3
5785. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவசரத்து டன் எழுந்து தமது ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் (பள்ளிவாசலில் இருந்து சென்றுவிட்ட) மக்கள் அனைவரும் திரும்பி வந்தனர். நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணம் விலகும்வரை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, ‘‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ் வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றில் (கிரகணங்களில்) ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது, அதை அவன் அகற்றும் வரை அவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள்.5

அத்தியாயம் : 77
5786. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا ابْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ أَبِي جُحَيْفَةَ، قَالَ فَرَأَيْتُ بِلاَلاً جَاءَ بِعَنَزَةٍ فَرَكَزَهَا، ثُمَّ أَقَامَ الصَّلاَةَ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ فِي حُلَّةٍ مُشَمِّرًا، فَصَلَّى رَكْعَتَيْنِ إِلَى الْعَنَزَةِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ مِنْ وَرَاءِ الْعَنَزَةِ.
பாடம்: 3 ஆடையை வரிந்துகட்டுவது
5786. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டுவைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடையை வரிந்துகட்டிக் கொண்டு (தம் அறையிலிருந்து) வெளியே வந்ததை நான் பார்த்தேன்.

நபி (ஸல்) அவர்கள் கைத்தடி நடப்பட்டிருந்த திசையை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மக்களும் (வாகனப்) பிராணிகளும் கைத்தடிக்கு அப்பால் நபி (ஸல்) அவர்களுக்குமுன் நடந்துசெல்வதை நான் பார்த்தேன்.6

அத்தியாயம் : 77
5787. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ "".
பாடம்: 4 கணுக்கால்களுக்குக் கீழே தொங் கும் ஆடை நரகம் செல்லும்.
5787. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 77
5788. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا "".
பாடம்: 5 தற்பெருமையால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது
5788. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கர்வத்தோடு தமது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.7

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 77
5789. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ النَّبِيُّ ـ أَوْ قَالَ أَبُو الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم "" بَيْنَمَا رَجُلٌ يَمْشِي فِي حُلَّةٍ، تُعْجِبُهُ نَفْسُهُ مُرَجِّلٌ جُمَّتَهُ، إِذْ خَسَفَ اللَّهُ بِهِ، فَهْوَ يَتَجَلَّلُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம்: 5 தற்பெருமையால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது
5789. ‘நபி (ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல்காசிம் (ஸல்) அவர்கள்’ கூறி னார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதர் (தமக் குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அவரை அல்லாஹ் பூமிக்குள் புதையச்செய்து விட்டான். அவர் மறுமை நாள்வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 77
5790. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ، خُسِفَ بِهِ، فَهْوَ يَتَجَلَّلُ فِي الأَرْضِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "". تَابَعَهُ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ. وَلَمْ يَرْفَعْهُ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، أَخْبَرَنَا أَبِي، عَنْ عَمِّهِ، جَرِيرِ بْنِ زَيْدٍ قَالَ كُنْتُ مَعَ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَلَى باب دَارِهِ فَقَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம்: 5 தற்பெருமையால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது
5790. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதர் தமது கீழங்கியை (தற்பெருமையுடன் தரை யில்) இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும்படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தமது உடல்) குலுங்கியபடி மறுமை நாள்வரை பூமியினுள் அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

அவற்றில் ஒன்றில் ஜரீர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது:

நான் சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களுடன் அவர்களது வீட்டு வாசலருகே அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘‘அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மேற்சொன்ன ஹதீஸைப் போன்று கேட்டதாகக் கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.


அத்தியாயம் : 77
5791. حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ لَقِيتُ مُحَارِبَ بْنَ دِثَارٍ عَلَى فَرَسٍ وَهْوَ يَأْتِي مَكَانَهُ الَّذِي يَقْضِي فِيهِ فَسَأَلْتُهُ عَنْ هَذَا الْحَدِيثِ فَحَدَّثَنِي فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ جَرَّ ثَوْبَهُ مَخِيلَةً، لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ "". فَقُلْتُ لِمُحَارِبٍ أَذَكَرَ إِزَارَهُ قَالَ مَا خَصَّ إِزَارًا وَلاَ قَمِيصًا. تَابَعَهُ جَبَلَةُ بْنُ سُحَيْمٍ وَزَيْدُ بْنُ أَسْلَمَ وَزَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ اللَّيْثُ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ مِثْلَهُ. وَتَابَعَهُ مُوسَى بْنُ عُقْبَةَ وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ وَقُدَامَةُ بْنُ مُوسَى عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" مَنْ جَرَّ ثَوْبَهُ "".
பாடம்: 5 தற்பெருமையால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது
5791. ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்றுகொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் (மேற்கண்ட) இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்:

‘‘யார் தற்பெருமையின் காரணத்தால் தமது ஆடையை(த் தரையில்படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்.

அப்போது நான் முஹாரிப் (ரஹ்) அவர்களிடம், ‘தமது கீழங்கியை’ என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது அறிவிப்பில் சொன்னார்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘கீழங்கி’ என்றோ, ‘(முழு நீளச்) சட்டை’ என்றோ அன்னார் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5792. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا جَالِسَةٌ وَعِنْدَهُ أَبُو بَكْرٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ تَحْتَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ مِثْلُ هَذِهِ الْهُدْبَةِ. وَأَخَذَتْ هُدْبَةً مِنْ جِلْبَابِهَا، فَسَمِعَ خَالِدُ بْنُ سَعِيدٍ قَوْلَهَا وَهْوَ بِالْبَابِ لَمْ يُؤْذَنْ لَهُ، قَالَتْ فَقَالَ خَالِدٌ يَا أَبَا بَكْرٍ أَلاَ تَنْهَى هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلاَ وَاللَّهِ مَا يَزِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى التَّبَسُّمِ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لاَ، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ وَتَذُوقِي عُسَيْلَتَهُ "". فَصَارَ سُنَّةً بَعْدُ.
பாடம்: 6 குஞ்சம் வைத்த கீழங்கி9 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), அபூபக்ர் பின் முஹம்மத் (ரஹ்), ஹம்ஸா பின் அபீஉசைத் (ரஹ்), முஆவியா பின் அப்தில்லாஹ் பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோர் குஞ்சம் வைத்த ஆடைகளை அணிந்தார்கள் என்று கூறப்படுகிறது.
5792. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்க, நான் (அங்கு) அமர்ந் திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் வந்தார்.

அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ அவர்களின் மனைவியாக இருந்தேன். அவர் என்னை ஒட்டு மொத்தமாக மணவிலக்குச் செய்து விட்டார். ஆகவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அவர்களை மணமுடித்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லிவிட்டுத் தமது முகத்திரையின் குஞ்சத்தை எடுத்துக்காட்டினார்.

காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லை வாசலில் நின்றவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது காலித் அவர்கள், ‘‘அபூபக்ரே! இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் பகிரங்கமாக இப்படிப் பேசக் கூடாது என்று நீங்கள் தடுக்கமாட்டீர்களா?” என்று (வெளியிலிருந்தவாறே) கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்ததற்கு மேலாக வேறொன்றும் செய்யவில்லை.

அப்பெண்ணிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ (உன் பழைய கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச்செல்ல விரும்புகிறாய் போலும். (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது” என்று சொன்னார்கள். பிறகு (இவ்விஷயத்தில்) இதுவே (சட்ட) வழிமுறையாகிவிட்டது.10

அத்தியாயம் : 77
5793. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ، أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ قَالَ فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِرِدَائِهِ، ثُمَّ انْطَلَقَ يَمْشِي، وَاتَّبَعْتُهُ أَنَا وَزَيْدُ بْنُ حَارِثَةَ، حَتَّى جَاءَ الْبَيْتَ الَّذِي فِيهِ حَمْزَةُ، فَاسْتَأْذَنَ فَأَذِنُوا لَهُمْ.
பாடம்: 7 மேல்துண்டுகள் ‘‘கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களின் மேல்துண்டை(ப் பிடித்து) இழுத்தார்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.11
5793. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

....பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மேல்துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டார்கள். பிறகு நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர, நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் ஹம்ஸா (ரலி) அவர்கள் இருந்த வீட்டிற்குச் சென்று (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அங்கு இருந்தவர்களும் இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.12

அத்தியாயம் : 77
5794. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَلْبَسُ الْمُحْرِمُ الْقَمِيصَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ الْبُرْنُسَ، وَلاَ الْخُفَّيْنِ، إِلاَّ أَنْ لاَ يَجِدَ النَّعْلَيْنِ، فَلْيَلْبَسْ مَا هُوَ أَسْفَلُ مِنَ الْكَعْبَيْنِ "".
பாடம்: 8 (முழுநீளச்) சட்டை அணிதல் (இறைத் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை எடுத்துரைக்கும் போது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என்னுடைய இந்த (முழுநீள)ச் சட்டையை நீங்கள் எடுத்துச்சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்; அவர் பார்வையுள்ளவராக மாறிவிடுவார் (என்று யூசுஃப் கூறினார்). (12:93)
5794. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று ஒரு மனிதர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்ராம் கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணியமாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்துகொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.13


அத்தியாயம் : 77
5795. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ بَعْدَ مَا أُدْخِلَ قَبْرَهُ، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، وَوُضِعَ عَلَى رُكْبَتَيْهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ، وَاللَّهُ أَعْلَمُ.
பாடம்: 8 (முழுநீளச்) சட்டை அணிதல் (இறைத் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை எடுத்துரைக்கும் போது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என்னுடைய இந்த (முழுநீள)ச் சட்டையை நீங்கள் எடுத்துச்சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்; அவர் பார்வையுள்ளவராக மாறிவிடுவார் (என்று யூசுஃப் கூறினார்). (12:93)
5795. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்டபிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார் கள். அவ்வாறே அவர் வெளியே எடுக்கப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களின் மீது வைக்கப்பட்டார்.

நபி (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை அவர்மீது உமிழ்ந்து தமது (முழுநீளச்) சட்டையை அவருக்கு அணிவித்தார்கள். (இதன் காரணத்தை) அல்லாஹ்வே அறிவான்.14


அத்தியாயம் : 77
5796. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ جَاءَ ابْنُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ قَمِيصَهُ، وَقَالَ "" إِذَا فَرَغْتَ فَآذِنَّا "". فَلَمَّا فَرَغَ آذَنَهُ، فَجَاءَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَجَذَبَهُ عُمَرُ فَقَالَ أَلَيْسَ قَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ فَقَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ}. فَنَزَلَتْ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا} فَتَرَكَ الصَّلاَةَ عَلَيْهِمْ.
பாடம்: 8 (முழுநீளச்) சட்டை அணிதல் (இறைத் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை எடுத்துரைக்கும் போது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என்னுடைய இந்த (முழுநீள)ச் சட்டையை நீங்கள் எடுத்துச்சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்; அவர் பார்வையுள்ளவராக மாறிவிடுவார் (என்று யூசுஃப் கூறினார்). (12:93)
5796. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது அவருடைய புதல்வர் (அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே தங்களது (முழுநீளச்) சட்டையை என்னிடம் கொடுங்கள். அதில் நான் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பேன். மேலும், அவருக்காகத் தாங்கள் தொழவைத்து பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டார்.

அவரிடம் நபி (ஸல்) அவர்கள் தமது (முழுநீளச்) சட்டையை வழங்கி ‘‘(அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிப்) பணிகளை நீங்கள் முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர் (தம் தந்தையின் இறுதிப் பணிகளை) முடித்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்காக (ஜனாஸா தொழுகை) தொழுதிட வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இழுத்து ‘‘நயவஞ்சகர்களுக்குத் தொழவைக்கக் கூடாது என்று அல்லாஹ் தங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு, ‘‘நீங்கள் (நயவஞ்சகர்களான) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி, அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவேமாட்டான்” என அல்லாஹ் கூறுகின்றான் என்று சொன்னார்கள்.

உடனே ‘‘நயவஞ்சகர்களில் இறந்துவிட்டவர் எவருக்காகவும் ஒருபோதும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவர்களின் மண்ணறையருகே நிற்கவும் வேண்டாம்” எனும் (9:84ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இதையடுத்து நயவஞ்சகர்களுக்கு (ஜனாஸா) தொழுவிப்பதை நபியவர்கள் கைவிட்டார்கள்.15

அத்தியாயம் : 77
5797. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ، عَنْ طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَثَلَ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ، كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطُرَّتْ أَيْدِيهِمَا إِلَى ثُدِيِّهِمَا وَتَرَاقِيهِمَا، فَجَعَلَ الْمُتَصَدِّقُ كُلَّمَا تَصَدَّقَ بِصَدَقَةٍ انْبَسَطَتْ عَنْهُ حَتَّى تَغْشَى أَنَامِلَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَجَعَلَ الْبَخِيلُ كُلَّمَا هَمَّ بِصَدَقَةٍ قَلَصَتْ، وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ بِمَكَانِهَا. قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ بِإِصْبَعِهِ هَكَذَا فِي جَيْبِهِ، فَلَوْ رَأَيْتَهُ يُوَسِّعُهَا وَلاَ تَتَوَسَّعُ. تَابَعَهُ ابْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ وَأَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ فِي الْجُبَّتَيْنِ. وَقَالَ حَنْظَلَةُ سَمِعْتُ طَاوُسًا سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ جُبَّتَانِ. وَقَالَ جَعْفَرٌ عَنِ الأَعْرَجِ جُبَّتَانِ.
பாடம்: 9 நெஞ்சுப் பகுதியில் சட்டைக் கழுத்து அமைந்திருப்பது
5797. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்:

அவர்களின் நிலையானது, இரும் பாலான நீளங்கிகள் அணிந்த இரு மனிதர்களின் நிலையைப் போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களது மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும்போதெல்லாம் அவரது நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதத் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி) இவ்வாறு சுட்டிக்காட்டினார்கள். மேலும், ‘‘அவன் தனது நீளங்கியை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்படைவாய்; ஏனெனில்) அது விரியாது” என்றும் கூறினார்கள்.16

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஓர் அறிவிப்பில், (‘இரண்டு நீளங்கிகள்’ என்பதற்குப் பதிலாக) ‘இரண்டு கவசங்கள்’ என வந்துள்ளது.

அத்தியாயம் : 77