5765. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ، يَقُولُ أَوَّلُ مَنْ حَدَّثَنَا بِهِ ابْنُ جُرَيْجٍ، يَقُولُ حَدَّثَنِي آلُ، عُرْوَةَ عَنْ عُرْوَةَ، فَسَأَلْتُ هِشَامًا عَنْهُ فَحَدَّثَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُحِرَ حَتَّى كَانَ يَرَى أَنَّهُ يَأْتِي النِّسَاءَ وَلاَ يَأْتِيهِنَّ. قَالَ سُفْيَانُ وَهَذَا أَشَدُّ مَا يَكُونُ مِنَ السِّحْرِ إِذَا كَانَ كَذَا. فَقَالَ "" يَا عَائِشَةُ أَعَلِمْتِ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ، أَتَانِي رَجُلاَنِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي، وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ، فَقَالَ الَّذِي عِنْدَ رَأْسِي لِلآخَرِ مَا بَالُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ أَعْصَمَ، رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ، كَانَ مُنَافِقًا. قَالَ وَفِيمَ قَالَ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ. قَالَ وَأَيْنَ قَالَ فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ، تَحْتَ رَعُوفَةٍ، فِي بِئْرِ ذَرْوَانَ "". قَالَتْ فَأَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم الْبِئْرَ حَتَّى اسْتَخْرَجَهُ فَقَالَ "" هَذِهِ الْبِئْرُ الَّتِي أُرِيتُهَا، وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ، وَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ "". قَالَ فَاسْتُخْرِجَ، قَالَتْ فَقُلْتُ أَفَلاَ أَىْ تَنَشَّرْتَ. فَقَالَ "" أَمَا وَاللَّهِ فَقَدْ شَفَانِي، وَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى أَحَدٍ مِنَ النَّاسِ شَرًّا "".
பாடம் : 49 சூனியத்தை(யும் அதற்குப் பயன் படுத்தப்பட்ட பொருளையும்) அகற்றலாமா? கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரை விட்டுச் சூனிய முடிச்சை அவிழ்க்கலாமா? தன் மனைவியுடன் கூடமுடியாதபடி தடுக்கப்பட்ட ஒரு மனிதரின் மந்திரக் கட்டை விடுவிக்கலாமா?” என்று நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘‘அதனால் குற்றமில்லை; இப்படிச் செய்பவர்கள் (சூனியத்தை) குணப்படுத்தவே விரும்புகிறார்கள். (மக்களுக்குப்) பயனளிக்கக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) தடை விதிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.91
5765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவி யரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்துகொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், ‘‘இந்த மனிதரின் நிலையென்ன?” என்று கேட்டார். மற்றவர் ‘‘சூனியம் செய்யப்பட்டுள்ளார்” என்று சொன்னார்.

அதற்கு அவர், ‘‘யார் அவருக்குச் சூனியம் வைத்தார்?” என்று கேட்டார். மற்றவர், ‘‘யூதர்களின் நட்புக் குலமான ‘பனூ ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்” என்று பதிலளித்தார். அவர், ‘‘எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்க, மற்றவர், ‘‘சீப்பிலும் சிக்கு முடியிலும்” என்று பதிலளித்தார். அவர், ‘‘எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்க, மற்றவர், ‘‘ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் ‘தர்வான்’ குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளைஉறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பிவந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்சமரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன” என்று சொல்லிவிட்டுப் பிறகு ‘‘அந்தப் பேரீச்சம்பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது” என்றும் கூறினார்கள்.

நான், ‘‘தாங்கள் (பாளைஉறையை) ஏன் உடைத்துக்காட்டக் கூடாது?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திó ருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டார்கள்.92

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 76
5766. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا فَعَلَهُ، حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهْوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ، ثُمَّ قَالَ "" أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ "". قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" جَاءَنِي رَجُلاَنِ، فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ، ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ، الْيَهُودِيُّ مِنْ بَنِي زُرَيْقٍ. قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ، وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ. قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ "". قَالَ فَذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ، فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ، ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ "" وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ، وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ "" لاَ، أَمَّا أَنَا فَقَدْ عَافَانِي اللَّهُ وَشَفَانِي، وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا "". وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ.
பாடம் : 50 சூனியம்93
5766. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வதைப் போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் என்னிடம் இருந்தபோது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்த்தித்துக்கொண்டே இருந்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்” என்று கூறினார்கள்.

நான், ‘‘என்ன அது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், ‘‘இந்த மனிதரின் நோய் என்ன?” என்று கேட்க, மற்றவர், ‘‘இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். முதலாமவர், ‘‘இவருக்கு யார் சூனியம் வைத்தார்?” என்று கேட்க, மற்றவர், ‘‘பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் எனும் யூதன்” என்று பதிலளித்தார்.

முதலாமவர், ‘‘எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது?” என்று கேட்க, அடுத்தவர், ‘‘சீப்பிலும் சிக்குமுடியிலும் ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும்” என்று சொன்னார். முதலாமவர், ‘‘அது எங்கே வைக்கப்பட்டுள்ளது?” என்று கேட்க, அடுத்தவர், ‘‘தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில்” என்று பதிலளித்தார்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக் குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார் கள். சுற்றிலும் பேரீச்சமரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.)

பிறகு ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்சமரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்(து பார்த்)தீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்திவிட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்து விடுவார்களோ என அஞ்சினேன்” என்று சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.

அத்தியாயம் : 76
5767. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّهُ قَدِمَ رَجُلاَنِ مِنَ الْمَشْرِقِ، فَخَطَبَا، فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا ـ أَوْ ـ إِنَّ بَعْضَ الْبَيَانِ لَسِحْرٌ "".
பாடம் : 51 சில சொற்பொழிவுகளில் ஈர்ப்பு உள்ளது.
5767. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில்மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘சில சொற்பொழிவில் கவர்ச்சி உள்ளது’ அல்லது ‘சொற்பொழிவுகளில் சில கவர்ச்சியாகும்’ என்று கூறினார்கள்.94

அத்தியாயம் : 76
5768. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمٌ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنِ اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرُّهُ سَمٌّ وَلاَ سِحْرٌ ذَلِكَ الْيَوْمَ إِلَى اللَّيْلِ "". وَقَالَ غَيْرُهُ "" سَبْعَ تَمَرَاتٍ "".
பாடம் : 52 சூனியத்திற்கு ‘அஜ்வா’ எனும் (அடர்த்தியான உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை மருந்தாகப் பயன் படுத்துவது
5768. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம்பழங்களை யார் (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறாரோ அவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவுவரை இடரளிக்காது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் அலீ பின் மதீனீ (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்கள் ‘‘ஏழு பேரீச்சம்பழங்களை” என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்துள்ளார்கள்.95


அத்தியாயம் : 76
5769. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، قَالَ سَمِعْتُ عَامِرَ بْنَ سَعْدٍ، سَمِعْتُ سَعْدًا ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ تَصَبَّحَ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرُّهُ ذَلِكَ الْيَوْمَ سَمٌّ وَلاَ سِحْرٌ "".
பாடம் : 52 சூனியத்திற்கு ‘அஜ்வா’ எனும் (அடர்த்தியான உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை மருந்தாகப் பயன் படுத்துவது
5769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ எந்தச் சூனியமோ இடரளிக்காது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 76
5770. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ عَدْوَى، وَلاَ صَفَرَ، وَلاَ هَامَةَ "". فَقَالَ أَعْرَابِيٌّ يَا رَسُولَ اللَّهِ فَمَا بَالُ الإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ، فَيُخَالِطُهَا الْبَعِيرُ الأَجْرَبُ فَيُجْرِبُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَمَنْ أَعْدَى الأَوَّلَ "".
பாடம் : 53 ஆந்தை குறித்த (மூட) நம்பிக்கை கூடாது.96
5770. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘‘தொற்றுநோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்து போனவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையல்ல” என்று சொன்னார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (பாலை)மணலில் மான்களைப் போன்று (ஆரோக் கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்குபிடித்த ஒட்டகம் கலந்து அவற்றையும் சிரங்குபிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.97


அத்தியாயம் : 76
5771. وَعَنْ أَبِي سَلَمَةَ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، بَعْدُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ "". وَأَنْكَرَ أَبُو هُرَيْرَةَ حَدِيثَ الأَوَّلِ قُلْنَا أَلَمْ تُحَدِّثْ أَنَّهُ لاَ عَدْوَى فَرَطَنَ بِالْحَبَشِيَّةِ. قَالَ أَبُو سَلَمَةَ فَمَا رَأَيْتُهُ نَسِيَ حَدِيثًا غَيْرَهُ.
பாடம் : 53 ஆந்தை குறித்த (மூட) நம்பிக்கை கூடாது.96
5771. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘நபி (ஸல்) அவர்கள், ‘வியாதிபிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் ஆரோக்கியமான ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தன் ஒட்டகத்தைக் கொண்டுசெல்ல வேண்டாம்” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதை பின்பு நான் செவியுற்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் முந்தைய ஹதீஸை (தாம் அறிவிக்கவில்லையென்று) மறுத்தார்கள். நாங்கள், ‘‘தொற்றுநோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நீங்கள் அறிவிக்கவில்லையா?” என்று கேட்டோம்.

அவர்கள் (தாம் கூறவில்லையென்று மறுத்துக் கோபத்துடன்) அபிசீனிய மொழியில் ஏதோ பேசினார்கள். இதைத் தவிர (தாம் அறிவித்த) வேறெந்த ஹதீஸையும் அவர்கள் மறந்து நான் பார்த்ததில்லை.

அத்தியாயம் : 76
5772. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، وَحَمْزَةُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ عَدْوَى، وَلاَ طِيَرَةَ، إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلاَثٍ فِي الْفَرَسِ، وَالْمَرْأَةِ، وَالدَّارِ "".
பாடம் : 54 தொற்றுநோய் கிடையாது.98
5772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருக்க முடியுமென்றால்) மூன்று விஷயங்களில்தான். குதிரையிலும் மனைவியிலும் வீட்டிலும்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.99

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 76
5773. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ عَدْوَى ".
பாடம் : 54 தொற்றுநோய் கிடையாது.98
5773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 76
5774. قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُورِدُوا الْمُمْرِضَ عَلَى الْمُصِحِّ ".
பாடம் : 54 தொற்றுநோய் கிடையாது.98
5774. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வியாதிபிடித்த ஒட்டகத்தை ஆரோக் கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.100


அத்தியாயம் : 76
5775. وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ الدُّؤَلِيُّ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ عَدْوَى ". فَقَامَ أَعْرَابِيٌّ فَقَالَ أَرَأَيْتَ الإِبِلَ تَكُونُ فِي الرِّمَالِ أَمْثَالَ الظِّبَاءِ فَيَأْتِيهِ الْبَعِيرُ الأَجْرَبُ فَتَجْرَبُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَمَنْ أَعْدَى الأَوَّلَ ".
பாடம் : 54 தொற்றுநோய் கிடையாது.98
5775. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘தொற்றுநோய் கிடையாது” என்று சொன்னார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து, ‘‘(பாலை) மணல் மான்களைப் போன்று ஆரோக்கியமாக இருந்துகொண்டிருக்கும் ஒட்டகங்களிடம் சிரங்குபிடித்த ஒட்டகம் வந்து (கலந்து) அவற்றுக்கும் சிரங்குபிடிக்கச் செய்து விடுகின்றதே, இதுபற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் முதல் ஒட்டகத்திற்குத் தொற்றச்செய்தது யார்?” என்று கேட்டார்கள்.101


அத்தியாயம் : 76
5776. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ عَدْوَى، وَلاَ طِيَرَةَ، وَيُعْجِبُنِي الْفَأْلُ "". قَالُوا وَمَا الْفَأْلُ قَالَ "" كَلِمَةٌ طَيِّبَةٌ "".
பாடம் : 54 தொற்றுநோய் கிடையாது.98
5776. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று சொன்னார்கள். மக்கள், ‘‘நற்குறி என்றால் என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மங்கலமான) நல்ல சொல்” என்று பதிலளித்தார்கள்.102

அத்தியாயம் : 76
5777. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَاةٌ فِيهَا سَمٌّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اجْمَعُوا لِي مَنْ كَانَ هَا هُنَا مِنَ الْيَهُودِ "". فَجُمِعُوا لَهُ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي سَائِلُكُمْ عَنْ شَىْءٍ فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ "". فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ. فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَبُوكُمْ "". قَالُوا أَبُونَا فُلاَنٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَذَبْتُمْ بَلْ أَبُوكُمْ فُلاَنٌ "". فَقَالُوا صَدَقْتَ وَبَرِرْتَ. فَقَالَ "" هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ "". فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ، وَإِنْ كَذَبْنَاكَ عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا. قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَهْلُ النَّارِ "". فَقَالُوا نَكُونُ فِيهَا يَسِيرًا، ثُمَّ تَخْلُفُونَنَا فِيهَا. فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا "". ثُمَّ قَالَ لَهُمْ "" فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ "". قَالُوا نَعَمْ. فَقَالَ "" هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا "". فَقَالُوا نَعَمْ. فَقَالَ "" مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ "". فَقَالُوا أَرَدْنَا إِنْ كُنْتَ كَذَّابًا نَسْتَرِيحُ مِنْكَ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ.
பாடம் : 55 நபி (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது பற்றிய குறிப்பு இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் குறித்து அறிவித் துள்ளார்கள்.103
5777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப் பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவு டன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள்.

அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் ‘‘சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்களே!” என்று பதிலளித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்கள் தந்தை இன்னார்” என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தான்” என்று கூறினார்கள். யூதர்கள், ‘‘நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று (மறுபடியும்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘சரி, அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே இதையும் அறிந்துகொள்வீர்கள்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நரகவாசிகள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களிடம், ‘‘அதில் நீங்கள்தான் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்குப் பதிலாக ஒரு போதும் புகமாட்டோம்” என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம், ‘‘நான் (இன்னும்) ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். யூதர்கள், ‘‘சரி” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘ஆம் (கலந்திருக்கி றோம்)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்களிக்காது” என்று பதிலளித்தார்கள்.104

அத்தியாயம் : 76
5778. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهْوَ فِي نَارِ جَهَنَّمَ، يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سَمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسَمُّهُ فِي يَدِهِ، يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ، يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا "".
பாடம் : 56 விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும் விஷம் அருந்துவதும்105
5778. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டே இருப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.106


அத்தியாயம் : 76
5779. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ أَبُو بَكْرٍ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اصْطَبَحَ بِسَبْعِ تَمَرَاتٍ عَجْوَةٍ لَمْ يَضُرَّهُ ذَلِكَ الْيَوْمَ سَمٌّ وَلاَ سِحْرٌ "".
பாடம் : 56 விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும் விஷம் அருந்துவதும்105
5779. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்107

அத்தியாயம் : 76
5780. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، رضى الله عنه قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ. قَالَ الزُّهْرِيُّ وَلَمْ أَسْمَعْهُ حَتَّى أَتَيْتُ الشَّأْمَ. و
பாடம் : 57 கழுதைப் பால்108
5780. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்.109

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘நான் ஷாம் நாட்டிற்கு வரும்வரை இந்த ஹதீஸை செவியுற்ற தில்லை” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 76
5781. َزَادَ اللَّيْثُ قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ وَسَأَلْتُهُ هَلْ نَتَوَضَّأُ أَوْ نَشْرَبُ أَلْبَانَ الأُتُنِ أَوْ مَرَارَةَ السَّبُعِ أَوْ أَبْوَالَ الإِبِلِ. قَالَ قَدْ كَانَ الْمُسْلِمُونَ يَتَدَاوَوْنَ بِهَا، فَلاَ يَرَوْنَ بِذَلِكَ بَأْسًا، فَأَمَّا أَلْبَانُ الأُتُنِ فَقَدْ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُحُومِهَا، وَلَمْ يَبْلُغْنَا عَنْ أَلْبَانِهَا أَمْرٌ وَلاَ نَهْىٌ، وَأَمَّا مَرَارَةُ السَّبُعِ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ أَنَّ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ.
பாடம் : 57 கழுதைப் பால்108
5781. மற்றோர் அறிவிப்பில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்திருப்பதாவது:

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், ‘‘கழுதைப் பாலில் நாங்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யலாமா? அல்லது அதைப் பருகலாமா? அல்லது விலங்குகளின் பித்தநீரை, அல்லது ஒட்டகத்தின் சிறுநீரை அருந்தலாமா?” என்று கேட்டேன்.

அவர்கள், ‘‘முஸ்லிம்கள் ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சை பெற்றுவந்தார்கள். அதில் தவறேதும் இருப்பதாக அவர்கள் கருதவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென்று தடை விதித்ததாகச் செய்தி எமக்கு எட்டியுள்ளது. ஆனால், அவற்றின் பாலை அருந்துங்கள் என்றோ அருந்தாதீர்கள் என்றோ எந்தக் கட்டளையும் அல்லது தடை உத்தரவும் நமக்கு எட்டவில்லை” என்று சொன்னார்கள்.

விலங்குகளின் பித்தநீரைப் பொறுத்த வரை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாக அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 76
5782. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، مَوْلَى بَنِي تَيْمٍ عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى بَنِي زُرَيْقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لْيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً وَفِي الآخَرِ دَاءً "".
பாடம் : 58 பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்...
5782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால், அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.110

அத்தியாயம் : 76

5783. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، يُخْبِرُونَهُ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ "".
பாடம்: 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக் கும் (ஆடை) அலங்காரத்தையும், தூய்மையான வாழ்வாதாரங்களையும் தடை செய்தவர் யார்? (7:32)2 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள். (ஆனால்,) விரயம் செய்யாதீர்கள்; தற்பெருமை கொள்ளாதீர்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விரயம் அல்லது தற்பெருமை ஆகிய இரண்டும் உன்னை அண்டாத வரை நீ விரும்பியதை உண்ணலாம்; நீ விரும்பி யதை உடுத்தலாம்.
5783. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5784. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ "". قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَ شِقَّىْ إِزَارِي يَسْتَرْخِي، إِلاَّ أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَسْتَ مِمَّنْ يَصْنَعُهُ خُيَلاَءَ "".
பாடம்: 2 தற்பெருமையின்றி ஒருவர் தமது கீழங்கியை இழுத்துச் செல்வது3
5784. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் தமது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின் றாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகிறது” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்” என்று கூறினார்கள்.4


அத்தியாயம் : 77