561. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ.
பாடம் : 18
மஃக்ரிப் தொழுகையின் நேரம்
“நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உ செய்து) தொழுதுகொள்ளலாம்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.12
561. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சூரியன் அடிவானில் மறைந்ததும் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுபவர்களாக இருந்தோம்.
அத்தியாயம் : 9

562. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم سَبْعًا جَمِيعًا وَثَمَانِيًا جَمِيعًا.
பாடம் : 18
மஃக்ரிப் தொழுகையின் நேரம்
“நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உ செய்து) தொழுதுகொள்ளலாம்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.12
562. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஃக்ரிபையும் இஷாவையும்) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (லுஹ்ரையும் அஸ்ரையும்) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (ஜம்உ செய்து) தொழு(வித்)தார்கள்.14

563. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ـ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ـ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ الْمُزَنِيُّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاَتِكُمُ الْمَغْرِبِ "". قَالَ الأَعْرَابُ وَتَقُولُ هِيَ الْعِشَاءُ.
பாடம் : 19
மஃக்ரிப் தொழுகையை ‘இஷா’ தொழுகை எனக் குறிப்பிடுவது விரும்பத் தக்கதன்று.15
563. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது மஃக்ரிப் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களைக் கிராமப்புற அரபியர் மிகைத்துவிட வேண்டாம். கிராமப்புற அரபியர் அதை ‘இஷா’ என்று குறிப்பிட்டுவருகின்றனர்.
இதை அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

564. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً صَلاَةَ الْعِشَاءِ ـ وَهْىَ الَّتِي يَدْعُو النَّاسُ الْعَتَمَةَ ـ ثُمَّ انْصَرَفَ فَأَقْبَلَ عَلَيْنَا فَقَالَ "" أَرَأَيْتُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ "".
பாடம் : 20
‘இஷா’ என்றும் ‘அ(த்)தமா’ என் றும் குறிப்பிடுவது செல்லும்.
“நயவஞ்சகர்களுக்குப் பெரும் சுமை யான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் ஆகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
“அ(த்)தமாவிலும் (இஷா), ஃபஜ்ரிலும் உள்ள (மகத்துவத்)தை மக்கள் அறிவார் களானால், (அவ்விரண்டுக்கும் தவழ்ந்தா வது வந்து சேர்ந்துவிடுவார்கள்)” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
அல்லாஹ், “இஷா தொழுகைக்குப்பின்...” (24:58) என்று குறிப்பிடுவதால் ‘இஷா’ எனக் குறிப்பிடுவதே சிறந்ததாகும்.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது:
(யமனிலிருந்து மதீனா வந்த) நாங்கள் இஷா தொழுகையின்போது நபி (ஸல்) அவர்களிடம் முறைவைத்துச் செல்பவர்களாக இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஷாவை நன்கு இருட்டும்வரை (‘அத்தமா’) தாமதித்துத் தொழு(வித்) தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் கூறுகின்றனர்:
நபி (ஸல்) அவர்கள் இஷாவை நன்கு இருட்டும்வரை (‘அத்தமா’) தாமதித்துத் தொழுதார்கள்.
‘அ(த்)தமா’ (இஷா) தொழுகையை நபி (ஸல்) அவர்கள் தாமதித்துத் தொழுதார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ‘இஷா’வை (சில நேரங்களில் முன்னேரத்திலும்) தொழுபவர் களாக இருந்தார்கள்.
அபூபர்ஸா (நள்ரா பின் உபைத்-ர-) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷாவைத் தாமதப்படுத்து(வதையே விரும்பு)வார்கள்.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ‘இரண்டாவது இஷா’வைத் தாமதப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி), அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), இப்னு அப்பாஸ்
(ரலி) ஆகியோர் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் தொழுதார்கள்.16
564. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அ(த்)தமா’ என மக்கள் அழைத்துவந்த இஷா தொழுகையை ஒரு (நாள்) இரவில் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்து எங்களை முன்னோக்கி (எழுந்து நின்று), “இந்த இரவைப் பற்றி உங்களுக் குத் தெரியுமா? இன்றி-ருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில், இப்போது பூமியின்மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர்கூட எஞ்சியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள்.17

565. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ـ هُوَ ابْنُ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ـ قَالَ سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ صَلاَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ، وَإِذَا قَلُّوا أَخَّرَ، وَالصُّبْحَ بِغَلَسٍ.
பாடம் : 21
மக்கள் முன்பே வருகிறார்களா, தாமதமாக வருகிறார்களா என்பதை அனுசரித்து இஷா நேரத்தை அமைத்துக்கொள் வது
565. முஹம்மத் பின் அம்ர் பின் அல்ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் தொழுகை (நேரம்) பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நண்பக-ல் லுஹ்ர் தொழுகையைத் தொழுவார்கள். சூரியன் (ஒளி குறையாமல்) தெளிவாக இருக்கும்போது அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். (அதிக) மக்கள் குழுமிவிட்டால் இஷாவை விரைவாக (அதன் முன்னேரத்திலேயே) தொழுவார்கள்; மக்கள் குறைவாக இருந்தால் தாமதப்படுத்தித் தொழுவார்கள். சுப்ஹு தொழுகையை இருள் இருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்குமுன்பே) தொழுவார்கள்.18

566. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ قَالَتْ، أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً بِالْعِشَاءِ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الإِسْلاَمُ، فَلَمْ يَخْرُجْ حَتَّى قَالَ عُمَرُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ فَقَالَ لأَهْلِ الْمَسْجِدِ "" مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ غَيْرُكُمْ "".
பாடம் : 22
இஷா தொழுகையி(னை எதிர் பார்ப்பத)ன் சிறப்பு
566. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஸ்லாம் (மதீனாவுக்கு வெளியே) பரவுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (நாள்) இரவு இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். உமர்
(ரலி) அவர்கள்,“(தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” எனத் தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத் தி-ருந்து தொழுகை நடத்த) வெளியே வரவில்லை.
பிறகு வெளியே வந்து பள்ளிவாசலில் உள்ளவர்களை நோக்கி, “(தற்போது) பூமி யிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்க வில்லை” என்று கூறினார்கள்.

567. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنْتُ أَنَا وَأَصْحَابِي الَّذِينَ، قَدِمُوا مَعِي فِي السَّفِينَةِ نُزُولاً فِي بَقِيعِ بُطْحَانَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ، فَكَانَ يَتَنَاوَبُ النَّبِيَّ صلى الله عليه وسلم عِنْدَ صَلاَةِ الْعِشَاءِ كُلَّ لَيْلَةٍ نَفَرٌ مِنْهُمْ، فَوَافَقْنَا النَّبِيَّ ـ عليه السلام ـ أَنَا وَأَصْحَابِي وَلَهُ بَعْضُ الشُّغْلِ فِي بَعْضِ أَمْرِهِ فَأَعْتَمَ بِالصَّلاَةِ حَتَّى ابْهَارَّ اللَّيْلُ، ثُمَّ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّى بِهِمْ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لِمَنْ حَضَرَهُ "" عَلَى رِسْلِكُمْ، أَبْشِرُوا إِنَّ مِنْ نِعْمَةِ اللَّهِ عَلَيْكُمْ أَنَّهُ لَيْسَ أَحَدٌ مِنَ النَّاسِ يُصَلِّي هَذِهِ السَّاعَةَ غَيْرُكُمْ "". أَوْ قَالَ "" مَا صَلَّى هَذِهِ السَّاعَةَ أَحَدٌ غَيْرُكُمْ "". لاَ يَدْرِي أَىَّ الْكَلِمَتَيْنِ قَالَ. قَالَ أَبُو مُوسَى فَرَجَعْنَا فَفَرِحْنَا بِمَا سَمِعْنَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 22
இஷா தொழுகையி(னை எதிர் பார்ப்பத)ன் சிறப்பு
567. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் (யமன் நாட்டி-ருந்து) என்னு டன் கப்பலில் வந்த என் தோழர்களும் (மதீனாவிலிருந்த) ‘பகீஉ புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தார்கள். ஒவ்வோர் இரவும் இஷா தொழுகை நேரத்தில் எங்களில் ஒரு குழுவினர் முறைவைத்து நபி (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம்.
(எனது முறை வந்தபோது) நானும் என் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற நேரம் அவர்கள் (போர் ஆயத்தம் சம்பந்தப்பட்ட) ஒரு விவகாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் நள்ளிரவு நேரமாகும்வரை இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து மக்களுக்கு இஷா தொழுகை நடத்தினார்கள்.
தொழுது முடித்தபோது வந்திருந் தோரை நோக்கி, “அப்படியே இருங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, ‘இந்த நேரத்தில் உங்களைத் தவிர மக்களில் வேறு யாரும் தொழ வில்லை’ அல்லது ‘இந்த நேரத்தில் உங்க ளைத் தவிர வேறு யாரும் தொழவில்லை’ என்று கூறினார்கள் -இந்த இரண்டு வாக்கியங்களில் எதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை.- இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து செவியுற்ற இந்த விஷயத் தைக் கேட்டுப் பேருவகையடைந்தவர் களாக நாங்கள் திரும்பினோம்.

568. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا.
பாடம் : 23
இஷா தொழுகைக்குமுன் உறங்குவது விரும்பத் தகாத செயலாகும்.
568. அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ர-) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் (உறங்காமல்) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்ப வர்களாக இருந்தார்கள்.19

569. حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ، قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعِشَاءِ حَتَّى نَادَاهُ عُمَرُ الصَّلاَةَ، نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ فَقَالَ "" مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ غَيْرُكُمْ "". قَالَ وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلاَّ بِالْمَدِينَةِ، وَكَانُوا يُصَلُّونَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ.
பாடம் : 24
இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்
569. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாவை தாமதப்படுத்தி னார்கள். இறுதியில், “பெண்களும் சிறுவர்களும் (தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து) உறங்கிவிட்டனர். தொழுவிக்க வாருங்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைத்தார்கள். பிறகு அவர்கள் வந்து, “உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறு யாரும் இத்தொழு கையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி ருக்கவில்லை” என்று கூறினார்கள்.
அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெறவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும்வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் மக்கள் இஷா தொழுபவர்களாக இருந்தனர்.

570. حَدَّثَنَا مَحْمُودٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شُغِلَ عَنْهَا لَيْلَةً، فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ، ثُمَّ اسْتَيْقَظْنَا ثُمَّ رَقَدْنَا ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ يَنْتَظِرُ الصَّلاَةَ غَيْرُكُمْ ". وَكَانَ ابْنُ عُمَرَ لاَ يُبَالِي أَقَدَّمَهَا أَمْ أَخَّرَهَا إِذَا كَانَ لاَ يَخْشَى أَنْ يَغْلِبَهُ النَّوْمُ عَنْ وَقْتِهَا، وَكَانَ يَرْقُدُ قَبْلَهَا. قَالَ ابْنُ جُرَيْجٍ قُلْتُ لِعَطَاءٍ
பாடம் : 24
இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்
570. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அலுவல் காரணமாக ஓர் இரவு இஷா தொழுகையைத் தாமதப்படுத்தி னார்கள். நாங்கள் பள்ளிவாசலிலேயே உறங்குவதும் விழிப்பதும். பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தோம். பிறகு எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, “உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறு யாரும் இத்தொழுகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இஷா நேரத்துக்கு அப்பாலும் தூக்கம் தம்மை மிகைத்துவிடும் என்ற அச்ச மில்லாதபோது, இஷா தொழுகையை முன்னேரத்தில் தொழுவதையோ பின்னேரத்தில் தொழுவதையோ இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதியதில்லை. (சில வேளை முன்னேரம் தொழுவார்கள்; சில வேளை பின்னேரம் தொழுவார்கள்).
இப்னு உமர் (ரலி) அவர்கள் (தூக்கம் தம்மை மீறிவிடும் என்ற அச்சம் இல்லாத போது) இஷாவுக்குமுன் உறங்குபவர்களாக இருந்தார்கள்.

571. وَقَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً بِالْعِشَاءِ حَتَّى رَقَدَ النَّاسُ وَاسْتَيْقَظُوا، وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا، فَقَامَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ الصَّلاَةَ. قَالَ عَطَاءٌ قَالَ ابْنُ عَبَّاسٍ فَخَرَجَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الآنَ، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَهُ عَلَى رَأْسِهِ فَقَالَ " لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوهَا هَكَذَا ". فَاسْتَثْبَتُّ عَطَاءً كَيْفَ وَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَأْسِهِ يَدَهُ كَمَا أَنْبَأَهُ ابْنُ عَبَّاسٍ، فَبَدَّدَ لِي عَطَاءٌ بَيْنَ أَصَابِعِهِ شَيْئًا مِنْ تَبْدِيدٍ، ثُمَّ وَضَعَ أَطْرَافَ أَصَابِعِهِ عَلَى قَرْنِ الرَّأْسِ ثُمَّ ضَمَّهَا، يُمِرُّهَا كَذَلِكَ عَلَى الرَّأْسِ حَتَّى مَسَّتْ إِبْهَامُهُ طَرَفَ الأُذُنِ مِمَّا يَلِي الْوَجْهَ عَلَى الصُّدْغِ، وَنَاحِيَةِ اللِّحْيَةِ، لاَ يُقَصِّرُ وَلاَ يَبْطُشُ إِلاَّ كَذَلِكَ وَقَالَ " لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوا هَكَذَا ".
பாடம் : 24
இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்
571. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (நாள்) இரவு இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். (பள்ளிவாசலில் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “தொழுகைக்கு வாருங்கள்” என்று (நபி (ஸல்) அவர்களை) அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தலையி-ருந்து நீர் சொட்டத் தமது கையைத் தலையில் வைத்(து, தமது தலையி-ருந்து தண்ணீரைத் துடைத்)தவர்களாக வெளியேறி வந்ததை இன்றும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
அப்போது அவர்கள், “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின் அவர்களை இவ்வாறே (இந்த நேரத்திலேயே) தொழுமாறு பணித்திருப்பேன்” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் ம-க் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் தமது கையைத் தலையில் எவ்வாறு வைத்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்?” என்று விவரம் கேட்டேன்.
அப்போது அதாஉ (ரஹ்) அவர்கள் தம் விரல்களைச் சற்று விரித்து விரல் நுனிகளை உச்சந்தலையில் வைத்தார்கள். பிறகு விரல்களை இணைத்து முகத்தை ஒட்டி அமைந்துள்ள நெற்றிப் பொட்ட ருகிலுள்ள காதுகளின் ஓரம், தாடியின் ஓரம் ஆகியவற்றில் படுமாறு தமது பெருவிரலை அப்படியே தடவிக் கொண்டே சென்றார்கள்.
இவ்வாறு தாமதிக்காமலும் அவசரப் படாமலும் (நிதானமாகச்) செய்து காட்டி, “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் இவ்வாறே (இந்த நேரத்திலேயே இஷா தொழுகையைத்) தொழுமாறு அவர்களை நான் பணித் திருப்பேன்” என்று (நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாகக்) கூறினார்கள்.20

572. حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ، قَالَ أَخَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ صَلَّى ثُمَّ قَالَ "" قَدْ صَلَّى النَّاسُ وَنَامُوا، أَمَا إِنَّكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا "". وَزَادَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعَ أَنَسًا كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ لَيْلَتَئِذٍ.
பாடம் : 25
இஷா நேரம் பாதி இரவுவரை உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை யைத் தாமதப்படுத்துவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ர-) அவர்கள் கூறினார்கள்.
572. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள் இரவு) இஷா தொழுகையைப் பாதி இரவுவரை தாமதப்படுத்தினார்கள். பிறகே தொழு(வித்)தார்கள். பின்னர், “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். அறிந்துகொள்ளுங்கள்: ஒரு தொழுகைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கும்வரை நீங்கள் அத்தொழு கையிலேயே உள்ளீர்கள் (என்றே கருதப்படும்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.21
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அன்றிரவு நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னியதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள் ளது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள் எனக் கூடுதலாக இடம்பெற் றுள்ளது.

573. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ لِي جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ "" أَمَا إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا، لاَ تُضَامُّونَ ـ أَوْ لاَ تُضَاهُونَ ـ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا "". ثُمَّ قَالَ "" فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا "".
பாடம் : 26
ஃபஜ்ர் தொழுகையின் சிறப்பு
573. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பௌர்ணமி இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் நிலாவைக் கூர்ந்து பார்த்தபடி, “அறிந்து கொள்ளுங்கள்! இந்த நிலாவை நீங்கள் ‘நெரிசல் இல்லாமல்’ அல்லது ‘குழப்பமடையாமல்’ காண்பதைப் போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும், சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால், அவ்வாறே செய்யுங்கள் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள்.
“சூரியன் உதயமாகும் முன்னரும் மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” (50:39) எனும் இறைவசனத்தை ஓதி(க்காட்டி)னார்கள்.

574. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ "". وَقَالَ ابْنُ رَجَاءٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ أَبِي جَمْرَةَ أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ أَخْبَرَهُ بِهَذَا. حَدَّثَنَا إِسْحَاقُ، عَنْ حَبَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 26
ஃபஜ்ர் தொழுகையின் சிறப்பு
574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பக-ன் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின் றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.
இதை அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ-ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

575. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ أَنَّهُمْ، تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ. قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ ـ يَعْنِي آيَةً ـ ح.
பாடம் : 27
ஃபஜ்ர் தொழுகையின் நேரம்
575. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் மக்கள் நோன்பு நோற்க உணவருந்தி (சஹர் செய்து)விட்டுப் பின்னர் ஃபஜ்ர் தொழு கைக்காகத் தயாராவார்கள்.
இதை ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (ஸைத் (ரலி) அவர்களிடம்), “உணவு உட்கொண்டு (சஹர் செய்து) முடிப்பதற்கும் தொழுகைக்(காக இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் பாங்கு செல்வதற்)கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?” என்று கேட்டேன்.
அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) அளவு நேரம் (இடைவெளி இருந்தது)” என்று பதிலளித்தார்கள்.

576. حَدَّثَنَا حَسَنُ بْنُ صَبَّاحٍ، سَمِعَ رَوْحًا، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَزَيْدَ بْنَ ثَابِتٍ تَسَحَّرَا، فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا قَامَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ فَصَلَّى. قُلْنَا لأَنَسٍ كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلاَةِ قَالَ قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً.
பாடம் : 27
ஃபஜ்ர் தொழுகையின் நேரம்
576. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (ஒன்றாக நோன்பு நோற்க) சஹர் உணவு உட் கொண்டனர். அவர்கள் இருவரும் சஹர் செய்து முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து (சென்று) தொழுதார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் இருவரும் சஹர் உணவு உட்கொண்டு முடிப்பதற்கும் தொழுகை யில் ஈடுபடுவதற்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஒரு மனிதர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி இருந்தது)” என்று பதிலளித்தார்கள்.

577. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، يَقُولُ كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثُمَّ يَكُونُ سُرْعَةٌ بِي أَنْ أُدْرِكَ صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 27
ஃபஜ்ர் தொழுகையின் நேரம்
577. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் குடும்பத்தாருடன் நோன்பு நோற்க (சஹர்) உணவு அருந்திவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் ஃபஜ்ர் (வைகறைத்) தொழுகையில் கலந்துகொள்வதற்காக அவசர(மாகப் புற)ப்படுவேன்.

578. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ قَالَتْ، كُنَّ نِسَاءُ الْمُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الْغَلَسِ.
பாடம் : 27
ஃபஜ்ர் தொழுகையின் நேரம்
578. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகை யில் பங்கு பெறுபவர்களாக இருந்தனர்; தொழுகையை முடித்துக்கொண்டு தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா. பெண்ணா என்று) அறிந்து கொள்ள முடியாது.22

579. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الأَعْرَجِ، يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ "".
பாடம் : 28
ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத் தில்) அடைந்துகொண்டவர் (முழுத் தொழுகையையும் அடைந்துகொண்டவர் ஆவார்).
579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிப்பதற்குமுன் சுப்ஹு தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர், சுப்ஹு தொழுகையை அடைந்துகொண்டுவிட்டார். சூரியன் மறைவதற்குமுன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டவர், அஸ்ர் தொழுகையை அடைந்துகொண்டுவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.23
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

580. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ "".
பாடம் : 29
பொதுவாகத் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர் (முழுத் தொழுகையை அடைந்துவிட்டார்).
580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற் குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர், அந்தத் தொழுகையை அடைந்து கொண்டுவிட்டார்.24
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.