5605. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، وَأَبِي، سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْداللَّهِ، قَالَ جَاءَ أَبُو حُمَيْدٍ بِقَدَحٍ مِنْ لَبَنٍ مِنَ النَّقِيعِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَّ خَمَّرْتَهُ وَلَوْ أَنْ تَعْرُضَ عَلَيْهِ عُودًا "".
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5605. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 74
5606. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَذْكُرُ ـ أُرَاهُ ـ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ أَبُو حُمَيْدٍ ـ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ـ مِنَ النَّقِيعِ بِإِنَاءٍ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَّ خَمَّرْتَهُ، وَلَوْ أَنْ تَعْرُضَ عَلَيْهِ عُودًا "". وَحَدَّثَنِي أَبُو سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5606. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒருவரான அபூஹுமைத் (ரலி) அவர்கள் ‘அந்நகீஉ’ எனும் இடத்திலிருந்து பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்று அவரிடம் கேட்டார் கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 74
5607. حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ مَكَّةَ وَأَبُو بَكْرٍ مَعَهُ قَالَ أَبُو بَكْرٍ مَرَرْنَا بِرَاعٍ وَقَدْ عَطِشَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَحَلَبْتُ كُثْبَةً مِنْ لَبَنٍ فِي قَدَحٍ، فَشَرِبَ حَتَّى رَضِيتُ، وَأَتَانَا سُرَاقَةُ بْنُ جُعْشُمٍ عَلَى فَرَسٍ فَدَعَا عَلَيْهِ، فَطَلَبَ إِلَيْهِ سُرَاقَةُ أَنْ لاَ يَدْعُوَ عَلَيْهِ، وَأَنْ يَرْجِعَ فَفَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5607. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவிலிருந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து) வந்தார்கள். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடன் இருந்தபோது நாங்கள் ஓர் ஆட்டிடையனைக் கடந்துசென்றோம். அபபோது நான் (ஆட்டிலிருந்து) ஒரு கிண்ணத்தில் சிறிது பால் கறந்(து நபியவர்களுக்குக் கொடுத்)தேன். நான் திருப்தியடையும்வரை அதை நபி (ஸல்) அவர்கள் பருகினார்கள்.

(எங்களைப் பிடிக்க) சுராக்கா பின் ஜுஉஷும் ஒரு குதிரையில் எங்களை நோக்கி வந்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது சுராக்கா தமக்கெதிராகப் பிரார்த்திக்க வேண்டாமென்றும், தாம் திரும்பச் சென்றுவிடுவதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார் கள்.29


அத்தியாயம் : 74
5608. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نِعْمَ الصَّدَقَةُ اللِّقْحَةُ الصَّفِيُّ مِنْحَةً، وَالشَّاةُ الصَّفِيُّ مِنْحَةً، تَغْدُو بِإِنَاءٍ، وَتَرُوحُ بِآخَرَ "".
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால்தருகின்ற ஒட்டகமும், (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகின்ற ஆடும்தான் தர்மங்களிலேயே சிறந்த தாகும். (அதிலிருந்து) காலையில் ஒரு கிண்ணத்திலும் மாலையில் ஒரு கிண்ணத்திலும் நீ பால் கறந்துகொள் ளலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30


அத்தியாயம் : 74
5609. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ وَقَالَ "" إِنَّ لَهُ دَسَمًا "".
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5609. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்புளித்தார்கள். அப்போது, ‘‘இதில் (பால்) கொழுப்பு இருக்கிறது” என்று சொன்னார்கள்.31


அத்தியாயம் : 74
5610. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" رُفِعْتُ إِلَى السِّدْرَةِ فَإِذَا أَرْبَعَةُ أَنْهَارٍ، نَهَرَانِ ظَاهِرَانِ، وَنَهَرَانِ بَاطِنَانِ، فَأَمَّا الظَّاهِرَانِ النِّيلُ وَالْفُرَاتُ، وَأَمَّا الْبَاطِنَانِ فَنَهَرَانِ فِي الْجَنَّةِ فَأُتِيتُ بِثَلاَثَةِ أَقْدَاحٍ، قَدَحٌ فِيهِ لَبَنٌ، وَقَدَحٌ فِيهِ عَسَلٌ، وَقَدَحٌ فِيهِ خَمْرٌ، فَأَخَذْتُ الَّذِي فِيهِ اللَّبَنُ فَشَرِبْتُ فَقِيلَ لِي أَصَبْتَ الْفِطْرَةَ أَنْتَ وَأُمَّتُكَ "". قَالَ هِشَامٌ وَسَعِيدٌ وَهَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الأَنْهَارِ نَحْوَهُ، وَلَمْ يَذْكُرُوا ثَلاَثَةَ أَقْدَاحٍ.
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5610. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (‘மிஅராஜ்’ எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக்கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக்கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்தி லுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரு நதிகளாகும்.

அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. பால் கிண்ணம், தேன்கிண்ணம், மதுக்கிண்ணம் ஆகியவைதான் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், ‘‘நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்” என்று சொல்லப்பட்டது.

இதை அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32

இதே ஹதீஸ் மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (சொர்க்கத்து) நதிகள் குறித்து மேற்கண்டபடி அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால்,) மூன்று கிண்ணங்கள் பற்றி குறிப்பிடவில்லை.

அத்தியாயம் : 74
5611. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالاً مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرَحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَ الْمَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ. قَالَ أَنَسٌ فَلَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ يَقُولُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ مَالِي إِلَىَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَخٍ ذَلِكَ مَالٌ رَابِحٌ ـ أَوْ رَايِحٌ شَكَّ عَبْدُ اللَّهِ ـ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَفِي بَنِي عَمِّهِ. وَقَالَ إِسْمَاعِيلُ وَيَحْيَى بْنُ يَحْيَى رَايِحٌ.
பாடம்: 13 சுவை நீரைத் தேடுவது
5611. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் ஏராளமான பேரீச்சமரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம்.

‘‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்” எனும் (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், ‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும், அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் அதைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது. அது ‘(மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே!’ அல்லது ‘அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!’ என்று கூறினார்கள். -அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (இவ்வாறு) சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.-

(தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘‘தர்மம் செய்வது குறித்து) நீங்கள் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘(அவ்வாறே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” எனக் கூறிவிட்டுத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்களும் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களும் ‘நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!’ என்றே அறிவித்துள் ளார்கள்.33

அத்தியாயம் : 74
5612. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا، وَأَتَى دَارَهُ فَحَلَبْتُ شَاةً فَشُبْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْبِئْرِ، فَتَنَاوَلَ الْقَدَحَ فَشَرِبَ، وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، فَأَعْطَى الأَعْرَابِيَّ فَضْلَهُ، ثُمَّ قَالَ "" الأَيْمَنَ فَالأَيْمَنَ "".
பாடம்: 14 பாலில் தண்ணீர் கலந்து அருந் துவது
5612. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றி ருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர்.

(தாம் அருந்திய) பான் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, ‘‘வலப் பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.34


அத்தியாயம் : 74
5613. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَمَعَهُ صَاحِبٌ لَهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنْ كَانَ عِنْدَكَ مَاءٌ بَاتَ هَذِهِ اللَّيْلَةَ فِي شَنَّةٍ، وَإِلاَّ كَرَعْنَا "". قَالَ وَالرَّجُلُ يُحَوِّلُ الْمَاءَ فِي حَائِطِهِ ـ قَالَ ـ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي مَاءٌ بَائِتٌ فَانْطَلِقْ إِلَى الْعَرِيشِ ـ قَالَ ـ فَانْطَلَقَ بِهِمَا، فَسَكَبَ فِي قَدَحٍ، ثُمَّ حَلَبَ عَلَيْهِ مِنْ دَاجِنٍ لَهُ ـ قَالَ ـ فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ شَرِبَ الرَّجُلُ الَّذِي جَاءَ مَعَهُ.
பாடம்: 14 பாலில் தண்ணீர் கலந்து அருந் துவது
5613. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூபக்ர்) உடன் ஓர் அன்சாரியிடம் சென்றார்கள். நபி ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம், ‘‘உங்களிடம் இன்று இரவு தோல்பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் இருந்தால் (அதை எங்களுக்குப் புகட்டுங்கள்). இல்லையென்றால் நாங்கள் (இந்தத் தொட்டியில்) வாய் வைத்துக் குடித்துக்கொள்வோம்” என்று சொன் னார்கள்.

அப்போது அந்த அன்சாரி தமது தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் இரவிலேயே (தோல் பையில் ஊற்றி) வைத்த தண்ணீர் உள்ளது. பந்தலுக்கு வாருங்கள்” என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றார்.

அங்கு கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன்மீது தமது வளர்ப்பு ஆட்டிலிருந்து (பால்) கறந்து ஊற்றினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதை) அருந்தினார்கள். பிறகு அவர் களுடன் வந்த அந்த நண்பரும் (அபூபக்ர்) அருந்தினார்.35

அத்தியாயம் : 74
5614. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ الْحَلْوَاءُ وَالْعَسَلُ.
பாடம்: 15 இனிப்புச்சாறு, தேன் ஆகியவற்றை அருந்துவது இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கடுமையான தாகம் போன்ற) நெருக்கடி நிலையில்கூட மனிதனின் சிறுநீரை அருந்துவது அனுமதிக்கப்பட்டதன்று. ஏனெனில், அது அசுத்தமாகும்.36 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்களுக்குத் தூய்மையான (நல்ல) பொருட்கள் (மட்டுமே) அனுமதிக்கப் பட்டுள்ளன. (5:4) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மது பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ள பொருட் களில் உங்களது நலத்தை அவன் அமைக்கவில்லை” என்று கூறினார்கள்.
5614. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.37

அத்தியாயம் : 74
5615. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّزَّالِ، قَالَ أَتَى عَلِيٌّ ـ رضى الله عنه ـ عَلَى باب الرَّحَبَةِ، فَشَرِبَ قَائِمًا فَقَالَ إِنَّ نَاسًا يَكْرَهُ أَحَدُهُمْ أَنْ يَشْرَبَ وَهْوَ قَائِمٌ، وَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَ كَمَا رَأَيْتُمُونِي فَعَلْتُ.
பாடம்: 16 நின்றுகொண்டு நீர் அருந்துவது38
5615. நஸ்ஸால் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்றுகொண்டே அருந்தி னார்கள்.

பிறகு ‘‘மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 74
5616. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ، سَمِعْتُ النَّزَّالَ بْنَ سَبْرَةَ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ صَلَّى الظُّهْرَ ثُمَّ قَعَدَ فِي حَوَائِجِ النَّاسِ فِي رَحَبَةِ الْكُوفَةِ حَتَّى حَضَرَتْ صَلاَةُ الْعَصْرِ، ثُمَّ أُتِيَ بِمَاءٍ فَشَرِبَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَذَكَرَ رَأْسَهُ وَرِجْلَيْهِ، ثُمَّ قَامَ فَشَرِبَ فَضْلَهُ وَهْوَ قَائِمٌ ثُمَّ قَالَ إِنَّ نَاسًا يَكْرَهُونَ الشُّرْبَ قَائِمًا وَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ.
பாடம்: 16 நின்றுகொண்டு நீர் அருந்துவது38
5616. நஸ்ஸால் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் தமது (ஆட்சியின்போது) லுஹ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு கூஃபா நகர(ப் பள்ளிவாசல்) முற்றத்தில் மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக அமர்ந்தார்கள். அதற்குள் அஸ்ர் தொழுகை வந்துவிட்டது. பிறகு தண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் (அதை) அருந்திவிட்டுத் தமது முகத்தையும் தம் இரு கைகளையும் கழுவினார்கள். -அறிவிப்பாளர் ஆதம் பின் அபீஇயாஸ் (ரஹ்) அவர்கள், தலை மற்றும் கால்களையும் குறிப்பிட்டார்கள்.- பிறகு எழுந்து அதன் மீதியை நின்று கொண்டு பருகினார்கள்.

பிறகு, ‘‘மக்கள் சிலர் நின்றுகொண்டு (நீர்) அருந்துவதை வெறுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களோ நான் செய்ததைப் போன்று செய்தார்கள்” என்று சொன்னார் கள்.


அத்தியாயம் : 74
5617. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ شَرِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَائِمًا مِنْ زَمْزَمَ.
பாடம்: 16 நின்றுகொண்டு நீர் அருந்துவது38
5617. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ‘ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து (நீர்) பருகினார்கள்.

அத்தியாயம் : 74
5618. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، أَخْبَرَنَا أَبُو النَّضْرِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّهَا أَرْسَلَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِقَدَحِ لَبَنٍ، وَهُوَ وَاقِفٌ عَشِيَّةَ عَرَفَةَ، فَأَخَذَ بِيَدِهِ فَشَرِبَهُ. زَادَ مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ عَلَى بَعِيرِهِ.
பாடம்: 17 ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு (நீர்) பருகுவது
5618. உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அரஃபா தினமான துல்ஹிஜ்ஜா ஒன்பதாம் நாளன்று) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் கிண்ணம் ஒன்றை அனுப்பினேன். அவர்கள் அரஃபா நாளின் அந்த மாலை நேரத்தில் (அரஃபா பெருவெளியில்) நின்றுகொண்டி ருந்தார்கள். அவர்கள் தமது கரத்தால் (அக்கிண்ணத்தை) எடுத்து அதைப் பருகினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மாலிக் (ரஹ்) அவர்கள் அபுந்நள்ர் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் தமது அறிவிப்பில் ‘‘ஒட்டகத்தின் மீது இருந்தபடி (பருகினார்கள்)” என்று கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.39

அத்தியாயம் : 74
5619. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ وَعَنْ شِمَالِهِ أَبُو بَكْرٍ، فَشَرِبَ، ثُمَّ أَعْطَى الأَعْرَابِيَّ، وَقَالَ "" الأَيْمَنَ الأَيْمَنَ "".
பாடம்: 18 (பானம் பரிமாறப்படும்போது அதை) அருந்துவதில் வலப் பக்கத்தில் இருப்பவர், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவர் (என்ற வரிசையில்) முன்னுரிமை பெறுவர்
5619. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப் பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப் பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் (அந்தப் பாலை) பருகிவிட்டுப் பிறகு (மிச்சத்தை) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட் டார்கள். மேலும், ‘‘வலப் பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.40

அத்தியாயம் : 74
5620. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ مِنْهُ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ. فَقَالَ لِلْغُلاَمِ "" أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ "". فَقَالَ الْغُلاَمُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. قَالَ فَتَلَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَدِهِ.
பாடம்: 19 ஒருவர் (தமக்கு இடப் பக்கமுள்ள வயதில்) மூத்தவருக்குப் பருகக் கொடுக்கத் தமது வலப் பக்கம் உள்ள(வயதில் சிறிய)வரிடம் அனுமதி கேட்க வேண்டுமா?
5620. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் சிறுவர் ஒருவரும், இடப் பக்கம் முதியவர் களும் அமர்ந்திருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அச்சிறுவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று பதில் சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.41

அத்தியாயம் : 74
5621. حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَمَعَهُ صَاحِبٌ لَهُ، فَسَلَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَصَاحِبُهُ، فَرَدَّ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي. وَهْىَ سَاعَةٌ حَارَّةٌ، وَهْوَ يُحَوِّلُ فِي حَائِطٍ لَهُ ـ يَعْنِي الْمَاءَ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنْ كَانَ عِنْدَكَ مَاءٌ بَاتَ فِي شَنَّةٍ وَإِلاَّ كَرَعْنَا "". وَالرَّجُلُ يُحَوِّلُ الْمَاءَ فِي حَائِطٍ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي مَاءٌ بَاتَ فِي شَنَّةٍ. فَانْطَلَقَ إِلَى الْعَرِيشِ فَسَكَبَ فِي قَدَحٍ مَاءً، ثُمَّ حَلَبَ عَلَيْهِ مِنْ دَاجِنٍ لَهُ، فَشَرِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ أَعَادَ، فَشَرِبَ الرَّجُلُ الَّذِي جَاءَ مَعَهُ.
பாடம்: 20 தொட்டியில் வாய்வைத்துப் பருகுவது
5621. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூபக்ர்) உடன் அன்சாரி ஒருவரிடம் (அவரது தோட்டத்திற்குச்) சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழரும் (அந்த அன்சாரிக்கு) ‘சலாம்’ (முகமன்) கூறினர். அந்த அன்சாரி பதில் சலாம் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இது வெப்பமான வேளை!” என்றார். அப்போது அவர் தமது தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரவில் தோல்பையில் (ஊற்றி) வைத்த தண்ணீர் உம்மிடம் இருந்தால் (எங்களுக்குத் தாருங்கள்). இல்லாவிட்டால் நாங்கள் (இரைத்து ஊற்றப்பட்டுள்ள இந்த நீரைத் தொட்டியில்) வாய்வைத்துக் குடித்துக்கொள்கிறோம்” என்று சொன் னார்கள்.

(தமது) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அந்த அன்சாரி, ‘‘அல்லாஹ் வின் தூதரே! இரவில் தோல்பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் என்னிடம் உள்ளது” என்று கூறியபடி பந்தலை நோக்கி நடந்தார். பின்னர் அவர் கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தமது வளர்ப்பு ஆட்டிலிருந்து பால் கறந்து (அதில் கலந்து)விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அதைப்) பருகினார்கள்.

பிறகு மறுபடியும் அவர் கொண்டுவந்தார். (அதை) நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்த மனிதர் பருகினார்.42

அத்தியாயம் : 74
5622. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ قَائِمًا عَلَى الْحَىِّ أَسْقِيهِمْ ـ عُمُومَتِي وَأَنَا أَصْغَرُهُمُ ـ الْفَضِيخَ، فَقِيلَ حُرِّمَتِ الْخَمْرُ. فَقَالَ أَكْفِئْهَا. فَكَفَأْنَا. قُلْتُ لأَنَسٍ مَا شَرَابُهُمْ قَالَ رُطَبٌ وَبُسْرٌ. فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ وَكَانَتْ خَمْرَهُمْ. فَلَمْ يُنْكِرْ أَنَسٌ. وَحَدَّثَنِي بَعْضُ أَصْحَابِي أَنَّهُ سَمِعَ أَنَسًا يَقُولُ كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ.
பாடம்: 21 சிறியோர், பெரியோருக்குப் பணிவிடை செய்வது
5622. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரி டையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களால் ஆன மதுவை ஊற்றிக் கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாக இருந்தேன். அப்போது ‘‘மது தடை செய்யப்பட்டு விட்டது” என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினார்கள்) ‘‘அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் கவிழ்த்து(க் கொட்டி) விட்டோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘அவர்களுடைய மது எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பேரீச்சச் செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ‘‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை.

என் தோழர்களில் ஒருவர் கூறினார்: அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.43

அத்தியாயம் : 74
5623. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ ـ أَوْ أَمْسَيْتُمْ ـ فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَحُلُّوهُمْ، فَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا، وَأَوْكُوا قِرَبَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، وَخَمِّرُوا آنِيَتَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، وَلَوْ أَنْ تَعْرُضُوا عَلَيْهَا شَيْئًا وَأَطْفِئُوا، مَصَابِيحَكُمْ "".
பாடம்: 22 பாத்திரத்தை மூடிவைத்தல்
5623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாகி விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள்.

மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ் வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்.

உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.44


அத்தியாயம் : 74
5624. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ ـ وَأَحْسِبُهُ قَالَ ـ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْهِ "".
பாடம்: 22 பாத்திரத்தை மூடிவைத்தல்
5624. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடி வையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.

அத்தியாயம் : 74