5560. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي زُبَيْدٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ "" إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ هَذَا فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ نَحَرَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ يُقَدِّمُهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَىْءٍ "". فَقَالَ أَبُو بُرْدَةَ يَا رَسُولَ اللَّهِ ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ، وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. فَقَالَ "" اجْعَلْهَا مَكَانَهَا، وَلَنْ تَجْزِيَ أَوْ تُوفِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ "".
பாடம்: 11
(பெருநாள்) தொழுகைக்குப் பிறகு (குர்பானி பிராணிகளை) அறுப்பது
5560. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) ‘‘நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச்சென்று குர்பானி பிராணிகளை அறுப்பதாகவே இருக்க வேண்டும். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறாரோ அவர் தமது குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாடு எதிலும் சேராது” என்று சொன்னார்கள்.
அப்போது அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவ தற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘முதலில் அறுத்ததற்குப் பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ‘அது செல்லாது’ அல்லது ‘நிறைவேறாது’ என்று பதிலளித்தார்கள்.17
அத்தியாயம் : 73

5561. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ "". فَقَالَ رَجُلٌ هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ ـ وَذَكَرَ مِنْ جِيرَانِهِ فَكَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَذَرَهُ ـ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ شَاتَيْنِ فَرَخَّصَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ أَدْرِي بَلَغَتِ الرُّخْصَةُ أَمْ لاَ، ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ ـ يَعْنِي فَذَبَحَهُمَا ـ ثُمَّ انْكَفَأَ النَّاسُ إِلَى غُنَيْمَةٍ فَذَبَحُوهَا.
பாடம்: 12
(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்து விட்டவர் (தொழுகை முடிந்தபின்) மீண்டும் (வேறொன்றை) அறுக்க வேண்டும்.
5561. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.:
(ஈதுல் அள்ஹா பெருநாளன்று) நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘இது, இறைச்சி விரும்பி உண்ணப் படும் நாள்” என்று சொல்லிவிட்டு, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார்.
நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக்கொண்டதைப்போல் இருந்தது. அந்த மனிதர், ‘‘என்னிடம் இரண்டு (இறைச்சி) ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதி யளித்தார்கள்.
அந்த அனுமதி மற்றவர்களுக்கும் பொருந்துமா; அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பிறகு நபி (ஸல்) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவற்றை அறுத்தார்கள். பிறகு மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று அவற்றை அறுத்தார்கள்.18

5562. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، سَمِعْتُ جُنْدَبَ بْنَ سُفْيَانَ الْبَجَلِيَّ، قَالَ شَهِدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ فَقَالَ "" مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ "".
பாடம்: 12
(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்து விட்டவர் (தொழுகை முடிந்தபின்) மீண்டும் (வேறொன்றை) அறுக்க வேண்டும்.
5562. ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்” என்று சொன்னார்கள்.19

5563. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ، فَقَالَ "" مَنْ صَلَّى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، فَلاَ يَذْبَحْ حَتَّى يَنْصَرِفَ "". فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَعَلْتُ. فَقَالَ "" هُوَ شَىْءٌ عَجَّلْتَهُ "". قَالَ فَإِنَّ عِنْدِي جَذَعَةً هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّتَيْنِ آذْبَحُهَا قَالَ "" نَعَمْ، ثُمَّ لاَ تَجْزِي عَنْ أَحَدٍ بَعْدَكَ "". قَالَ عَامِرٌ هِيَ خَيْرُ نَسِيكَتِهِ.
பாடம்: 12
(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்து விட்டவர் (தொழுகை முடிந்தபின்) மீண்டும் (வேறொன்றை) அறுக்க வேண்டும்.
5563. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (ஈதுல் அள்ஹா பெரு)நாளன்று தொழுதுவிட்டு, ‘‘நமது தொழுகையைத் தொழுது (அதில்) நம்முடைய (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கியவர் எவரும் (தொழுகை முடிந்து) திரும்பும் வரை (குர்பானி பிராணியை) அறுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் (தொழுகைக்கு முன்பே அறுத்து) அதைச் செய்துவிட்டேனே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நீங்கள் அவசரப்பட்டு (அறுத்து)விட்ட பொருளாகும்” என்று சொன்னார்கள்.
அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான இரு ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. நான் அதை அறுக்கலாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி (நீங்கள் அறுக்கலாம்). பிறகு உங்களைத் தவிர வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘அதுவே (அவர் தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) அவருடைய இரு குர்பானிகளில் சிறந்ததாகும்” எனக் கூறுகிறார்கள்.

5564. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صَفْحَتِهِمَا، وَيَذْبَحُهُمَا بِيَدِهِ.
பாடம்: 13
அறுக்கப்படும் பிராணியின் பக்கவாட்டில் கால் வைத்(து மிதி)த்துக்கொள்வது
5564. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார் கள். அப்போது தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தமது கரத்தால் அவற்றை அறுப்பார்கள்.20

5565. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا.
பாடம்: 14
பிராணியை அறுக்கும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) கூறுவது
5565. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.21

5566. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ أَتَى عَائِشَةَ، فَقَالَ لَهَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنَّ رَجُلاً يَبْعَثُ بِالْهَدْىِ إِلَى الْكَعْبَةِ، وَيَجْلِسُ فِي الْمِصْرِ، فَيُوصِي أَنْ تُقَلَّدَ بَدَنَتُهُ، فَلاَ يَزَالُ مِنْ ذَلِكَ الْيَوْمِ مُحْرِمًا حَتَّى يَحِلَّ النَّاسُ. قَالَ فَسَمِعْتُ تَصْفِيقَهَا مِنْ وَرَاءِ الْحِجَابِ فَقَالَتْ لَقَدْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَبْعَثُ هَدْيَهُ إِلَى الْكَعْبَةِ، فَمَا يَحْرُمُ عَلَيْهِ مِمَّا حَلَّ لِلرِّجَالِ مِنْ أَهْلِهِ، حَتَّى يَرْجِعَ النَّاسُ.
பாடம்: 15
ஒருவர் தமது குர்பானி பிராணியை (ஹஜ்ஜில்) அறுப்பதற்காக அனுப்பி வைப்பதால் அவர்மீது எந்தத் தடையும் விதிக்கப்படாது.22
5566. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! ஒருவர் தமது குர்பானி பிராணியை கஅபாவிற்கு (வேறொருவர் மூலம்) அனுப்பிவிட்டு (தமது) ஊரில் உட்கார்ந்துகொள்கிறார். தம்முடைய அந்த ஒட்டகத்திற்கு (அது குர்பானி பிராணி என்பதைக் காட்டும் அடையாள மாக) கழுத்தில் மாலை கட்டித் தொங்கவிடப்பட வேண்டுமென்றும் சொல்லி அனுப்புகிறார். அந்த நாளிலிருந்து மக்கள் (ஹாஜிகள்) இஹ்ராமிலிருந்து விடுபடும் நாள்வரை தாமும் இஹ்ராம் கட்டியவராகவே நடந்துகொள்கிறார் (என்றால் அவருக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை நான் கேட்டேன். (தொடர்ந்து) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிகளுடைய கழுத்து மாலைகளைக் கோத்துவந்தேன். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய (இந்தக்) குர்பானி பிராணிகளை (ஹஜ் பருவத்தில்) கஅபாவிற்கு அனுப்புவார்கள். எனினும், அவர்களுடைய குடும்பத்திலிருந்த மற்ற ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் எதுவுமே மக்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பும்வரை அவர்களுக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை” என்று சொன்னார்கள்.23

5567. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نَتَزَوَّدُ لُحُومَ الأَضَاحِيِّ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ، وَقَالَ غَيْرَ مَرَّةٍ لُحُومَ الْهَدْىِ.
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5567. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்பானி பிராணிகளின் இறைச்சியை (குர்பானி கறியை) மதீனாவுக்குச் செல்லும்போது பயண உணவாக எடுத்துச் செல்வோம்.25
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், (தம் அறிவிப்பு களில் ‘குர்பானி பிராணிகளின் இறைச்சி’ என்பதைக் குறிக்க மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘லுஹூமுல் அளாஹீ’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘லுஹூமுல் ஹத்யி’ எனும் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கையாண்டுள்ளார்கள்.

5568. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ، أَنَّ ابْنَ خَبَّابٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا سَعِيدٍ، يُحَدِّثُ أَنَّهُ كَانَ غَائِبًا، فَقَدِمَ فَقُدِّمَ إِلَيْهِ لَحْمٌ. قَالَ وَهَذَا مِنْ لَحْمِ ضَحَايَانَا. فَقَالَ أَخِّرُوهُ لاَ أَذُوقُهُ. قَالَ ثُمَّ قُمْتُ فَخَرَجْتُ حَتَّى آتِيَ أَخِي قَتَادَةَ ـ وَكَانَ أَخَاهُ لأُمِّهِ، وَكَانَ بَدْرِيًّا ـ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنَّهُ قَدْ حَدَثَ بَعْدَكَ أَمْرٌ.
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5568. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு பயணத்தில் இருந்ததால் அப்போது நான்) ஊரில் இருக்கவில்லை. பிறகு (பயணத்திலிருந்து திரும்பி) வந்தேன். (சாப்பிடும்போது) என் முன்னே இறைச்சி வைக்கப்பட்டது. அதை வைத்தவர், ‘‘இது எங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சி” என்று சொன்னார். நான், ‘‘இதை எடுத்துவிடுங்கள். நான் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னேன்.
பிறகு எழுந்து புறப்பட்டு என் சகோதரர் அபூகத்தாதா (ரலி)அவர்களிடம் சென்றேன். -அபூகத்தாதா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராகவும் பத்ர் போரில் கலந்துகொண்டவராகவும் இருந்தார்கள்.- நான் நடந்ததை அவர்களிடம் கூற, அவர்கள் ‘‘நீங்கள் பயணம் சென்றபின் மறுஉத்தரவு பிறந்தது” என்று சொன்னார் கள்.26

5569. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ ضَحَّى مِنْكُمْ فَلاَ يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَفِي بَيْتِهِ مِنْهُ شَىْءٌ "". فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ الْمَاضِي قَالَ "" كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا "".
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5569. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் யார் குர்பானி பிராணியை அறுக்கிறாரோ அவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாட்களுக்குப்பின் (அதிலிருந்து எதுவும் அவரது வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்” என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக்கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று நான் விரும்பி னேன்” எனப் பதிலளித்தார்கள்.

5570. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ الضَّحِيَّةُ كُنَّا نُمَلِّحُ مِنْهُ، فَنَقْدَمُ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ فَقَالَ "" لاَ تَأْكُلُوا إِلاَّ ثَلاَثَةَ أَيَّامٍ "". وَلَيْسَتْ بِعَزِيمَةٍ، وَلَكِنْ أَرَادَ أَنْ يُطْعِمَ مِنْهُ وَاللَّهُ أَعْلَمُ.
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5570. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘‘மூன்று நாட்களுக்குமேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்து வதற்கல்ல; மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பி னார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.27

5571. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ أَنَّهُ شَهِدَ الْعِيدَ يَوْمَ الأَضْحَى مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ نَهَاكُمْ عَنْ صِيَامِ هَذَيْنِ الْعِيدَيْنِ، أَمَّا أَحَدُهُمَا فَيَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ وَأَمَّا الآخَرُ فَيَوْمٌ تَأْكُلُونَ نُسُكَكُمْ.
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5571. அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஈதுல் அள்ஹா பெருநாள் தொழுகையில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே தொழுதுவிட்டுப் பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘‘மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது என உங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். இவ்விரண்டில் ஒன்று, ‘உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள்’ ஆகும். மற்றொன்றோ, ‘நீங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை உண்ணும் (ஈதுல் அள்ஹா) பெருநாள்’ ஆகும்” என்று சொன்னார்கள்.

5572. قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَكَانَ ذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ، فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ هَذَا يَوْمٌ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِيهِ عِيدَانِ، فَمَنْ أَحَبَّ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ مِنْ أَهْلِ الْعَوَالِي فَلْيَنْتَظِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ فَقَدْ أَذِنْتُ لَهُ.
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5572. அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது:
பின்னர் நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. அவர்கள் உரை நிகழ்த்தும் முன்பே தொழுதுவிட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள்.
அப்போது, ‘‘மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரு பெருநாட்கள் ஒன்றுசேர்ந்து (கிடைத்து) உள்ளன. ஆகவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் எவர் ஜுமுஆவை (வெள்ளிக்கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகின் றாரோ அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) எவர் தமது இல்லத்துக் குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.

5573. قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُهُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَاكُمْ أَنْ تَأْكُلُوا لُحُومَ نُسُكِكُمْ فَوْقَ ثَلاَثٍ. وَعَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي عُبَيْدٍ نَحْوَهُ.
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5573. அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது:
பிறகு நான் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை (குத்பா) நிகழ்த்தும் முன்பே தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள்.
அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று சொன்னார்கள்.28
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5574. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُلُوا مِنَ الأَضَاحِيِّ ثَلاَثًا "". وَكَانَ عَبْدُ اللَّهِ يَأْكُلُ بِالزَّيْتِ حِينَ يَنْفِرُ مِنْ مِنًى، مِنْ أَجْلِ لُحُومِ الْهَدْىِ.
பாடம்: 16
குர்பானி பிராணிகளின் இறைச்சி களில் உண்ணத் தக்கவையும் சேமிக்கத் தக்கவையும்24
5574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானி பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள்.

குடிபானங்கள்
5575. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا، ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا، حُرِمَهَا فِي الآخِرَةِ "".
பாடம்: 1
‘‘இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும். எனவே, அதைக் கைவிடுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம்” எனும் (5:90ஆவது) இறைவசனம்
5575. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவ மன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.2
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 74

5576. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ، وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا، ثُمَّ أَخَذَ اللَّبَنَ، فَقَالَ جِبْرِيلُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ، وَلَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ. تَابَعَهُ مَعْمَرٌ وَابْنُ الْهَادِ وَعُثْمَانُ بْنُ عُمَرَ وَالزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ.
பாடம்: 1
‘‘இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும். எனவே, அதைக் கைவிடுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம்” எனும் (5:90ஆவது) இறைவசனம்
5576. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) மதுவும் (மற்றொன்றில்) பாலும் இருந்த இரு கிண் ணங்கள் கொண்டுவரப்பட்டன. அவர்கள் அவ்விரண்டையும் பார்த்துவிட்டுப் பால் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘‘இயற்கை மரபில் உங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயமே வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன்னார் கள்.3
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5577. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا لاَ يُحَدِّثُكُمْ بِهِ غَيْرِي قَالَ "" مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَظْهَرَ الْجَهْلُ، وَيَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتُشْرَبَ الْخَمْرُ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً قَيِّمُهُنَّ رَجُلٌ وَاحِدٌ "".
பாடம்: 1
‘‘இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும். எனவே, அதைக் கைவிடுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம்” எனும் (5:90ஆவது) இறைவசனம்
5577. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்துபோவதும், விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.4

5578. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، وَابْنَ الْمُسَيَّبِ، يَقُولاَنِ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ "". قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُحَدِّثُهُ عَنْ أَبِي هُرَيْرَةَ ثُمَّ يَقُولُ كَانَ أَبُو بَكْرٍ يُلْحِقُ مَعَهُنَّ "" وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ، يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَبْصَارَهُمْ فِيهَا حِينَ يَنْتَهِبُهَا وَهْوَ مُؤْمِنٌ "".
பாடம்: 1
‘‘இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டு வைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும். எனவே, அதைக் கைவிடுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம்” எனும் (5:90ஆவது) இறைவசனம்
5578. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகின்றவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றின் (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து (தம் தந்தை) அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தமக்கு அறிவித்துவந்ததாகக் கூறினார்கள்.
மேலும், அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள், ‘‘(என் தந்தை) அபூபக்ர் (ரஹ்) அவர்கள் இந்த (ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று) விஷயங்களுடன் (நான்காவதாக), ‘‘(மக்களின்) மதிப்புமிக்க செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்” என்பதையும் (நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக) சேர்த்து அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.5

5579. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا مَالِكٌ ـ هُوَ ابْنُ مِغْوَلٍ ـ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَقَدْ حُرِّمَتِ الْخَمْرُ، وَمَا بِالْمَدِينَةِ مِنْهَا شَىْءٌ.
பாடம்: 2
திராட்சை உள்ளானவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மது6
5579. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(திராட்சையால் தயாரிக்கப்படும்) மது மதீனாவில் சிறிதும் இல்லாதிருந்த நிலையில் அது தடை செய்யப்பட்டது.7
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.