5538. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يُحَدِّثُهُ عَنْ مَيْمُونَةَ، أَنَّ فَأْرَةً، وَقَعَتْ، فِي سَمْنٍ فَمَاتَتْ، فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهَا فَقَالَ "" أَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ "". قِيلَ لِسُفْيَانَ فَإِنَّ مَعْمَرًا يُحَدِّثُهُ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ. قَالَ مَا سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ إِلاَّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَقَدْ سَمِعْتُهُ مِنْهُ مِرَارًا.
பாடம்: 34 உறைந்த அல்லது உருகிய நெய்யில் எலி விழுந்துவிட்டால்...?53
5538. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) எலி ஒன்று நெய்யில் விழுந்து இறந்துவிட்டது. (அந்த நெய்யை உண்ணலாமா? என்று) அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு, அ(தில் மீதியுள்ள)தை உண்ணுங்கள்” என்று பதிலளித்தார்கள்.54

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக் கிறார்கள். ஸுஹ்ரீயிடமிருந்து நான் இந்த ஹதீஸைப் பலமுறை செவியுற் றுள்ளேன்.


அத்தியாயம் : 72
5539. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الدَّابَّةِ، تَمُوتُ فِي الزَّيْتِ وَالسَّمْنِ وَهْوَ جَامِدٌ أَوْ غَيْرُ جَامِدٍ، الْفَأْرَةِ أَوْ غَيْرِهَا قَالَ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِفَأْرَةٍ مَاتَتْ فِي سَمْنٍ، فَأَمَرَ بِمَا قَرُبَ مِنْهَا فَطُرِحَ ثُمَّ أُكِلَ، عَنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ.
பாடம்: 34 உறைந்த அல்லது உருகிய நெய்யில் எலி விழுந்துவிட்டால்...?53
5539. யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், எலி போன்ற உயிரினம் உறைந்த அல்லது உறையாத எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றில் விழுந்து இறந்துவிட்டால் (அப்பொருளை உண்ணலாமா?) என்பது குறித்து வினவப்பட்டது. அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நெய்யில் (விழுந்து) இறந்துவிட்ட எலியையும் அதையொட்டி இருந்த நெய்யையும் (உடனே எடுத்து) எறியும்படி கட்டளையிட் டார்கள். அவ்வாறே அவை (எடுத்து) எறியப்பட்டன. பிறகு (அந்த மீதி நெய்) உண்ணப்பட்டது” என்று உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் குறித்து எங்களுக்குச் செய்தி எட்டியது” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 72
5540. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ ـ رضى الله عنهم ـ قَالَتْ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ "" أَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ "".
பாடம்: 34 உறைந்த அல்லது உருகிய நெய்யில் எலி விழுந்துவிட்டால்...?53
5540. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்து (செத்து)விட்ட எலி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு (மீதி நெய்யை) உண்ணுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 72
5541. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَرِهَ أَنْ تُعْلَمَ الصُّورَةُ،. وَقَالَ ابْنُ عُمَرَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُضْرَبَ. تَابَعَهُ قُتَيْبَةُ حَدَّثَنَا الْعَنْقَزِيُّ عَنْ حَنْظَلَةَ وَقَالَ تُضْرَبُ الصُّورَةُ.
பாடம்: 35 பிராணிகளின் முகத்தில் அடையாளமிடல்
5541. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் பிராணியின் முகத்தில் அடையாள மிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், ‘‘பிராணிகளை அடிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்றும் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘‘(பிராணிகளின்) முகத்தில் அடிப்பதற்கு...” என வந்துள்ளது.55


அத்தியாயம் : 72
5542. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِأَخٍ لِي يُحَنِّكُهُ، وَهْوَ فِي مِرْبَدٍ لَهُ، فَرَأَيْتُهُ يَسِمُ شَاةً ـ حَسِبْتُهُ قَالَ ـ فِي آذَانِهَا.
பாடம்: 35 பிராணிகளின் முகத்தில் அடையாளமிடல்
5542. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் (தாய்வழிச்) சகோதரன் ஒருவனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபியவர்கள் இனிப்புப் பொருளை மென்று (குழந்தை யாயிருந்த) அவனது வாயிலிடுவதற்காக அவனை நான் கொண்டுசென்றபோது அவர்கள் தமது (ஆட்டுத்) தொழுவம் ஒன்றில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிற்கு அதன் காதுகளில் அடையாளம் இட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன்.

அத்தியாயம் : 72
5543. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّنَا نَلْقَى الْعَدُوَّ غَدًا، وَلَيْسَ مَعَنَا مُدًى. فَقَالَ "" مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلُوا، مَا لَمْ يَكُنْ سِنٌّ وَلاَ ظُفُرٌ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفْرُ فَمُدَى الْحَبَشَةِ "". وَتَقَدَّمَ سَرَعَانُ النَّاسِ فَأَصَابُوا مِنَ الْغَنَائِمِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم فِي آخِرِ النَّاسِ فَنَصَبُوا قُدُورًا فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ وَقَسَمَ بَيْنَهُمْ وَعَدَلَ بَعِيرًا بِعَشْرِ شِيَاهٍ، ثُمَّ نَدَّ بَعِيرٌ مِنْ أَوَائِلِ الْقَوْمِ وَلَمْ يَكُنْ مَعَهُمْ خَيْلٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ. فَقَالَ "" إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا فَعَلَ مِنْهَا هَذَا فَافْعَلُوا مِثْلَ هَذَا "".
பாடம்: 36 ஒரு கூட்டத்தாருக்குக் கிடைத்த போர்ச் செல்வத்தில் ஓர் ஆட்டையோ ஒட்டகத்தையோ அவர்களில் ஒருவர் மற்றவரின் அனுமதியின்றி அறுத்துவிட்டால் அதை உண்ணலாகாது. நபி (ஸல்) அவர்களிடமிருந்து ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (பின்வரும்) ஹதீஸ் இதற்கு ஆதார மாகும். தாவூஸ் (ரஹ்) அவர்களும் இக்ரிமா (ரஹ்) அவர்களும், திருடன் (திருடிக் கொண்டு வந்து) அறுத்த பிராணியைக் குறித்துக் கூறும்போது, ‘‘அதை எறிந்து விடுங்கள்” என்று கூறினர்.
5543. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(அல்லாஹ்வின் தூதரே! நாம் உணவுக்காக ஒட்டகங்களை அறுக்க நம் வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால், அவற்றின் கூர் மழுங்கி) நாளை நம்மிடம் (கூரான) வாட்களே இல்லாத நிலையில் எதிரியைச் சந்திக்க வேண்டிவருமே” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருந்தால் (அதை) உண்ணுங்கள். ஆனால், அது பல்லாலோ நகத்தாலோ மட்டும் அறுக்கப்பட்டிருக்கக் கூடாது. அது (ஏன் கூடாது என்பது) பற்றி இதோ நான் உங்களுக்குக் கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகமோ அபிசீனியர்களின் கத்தியாகும்” என்று பதிலளித்தார்கள்.

மக்களில் அவசரப்பட்ட சிலர் (வேகமாக) முந்திச்சென்று போர்ச் செல்வங்களை எடுத்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களோ மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். (போர்ச் செல்வமாகக் கிடைத்த பிராணிகளைப் பெற்ற) அந்த மக்கள் சமையல் பாத்திரங்களை (அடுப்புகளின் மீது) வைத்து (சமைக்கத் தொடங்கி) விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (பங்கிட்டுத் தருவதற்கு முன்பே இப்படி அவர்கள் செய்ததால்) அந்தப் பாத்திரங்களைக் கவிழ்த்து (அவற்றில் இருப்பவற்றைக் கொட்டி)விடும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன.

(பின்னர்) நபி (ஸல்) அவர்கள் மக்களி டையே (அச்செல்வங்களை) பங்கிட்டார்கள். அப்போது ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு (பங்குவைக்கப்பட்ட) ஒட்டகம் ஒன்று முன்வரிசையிலிருந்த மக்களிடையே இருந்து வெருண்டோடியது. அவர்களிடம் அப்போது (அதைப் பிடித்து வர) குதிரை எதுவும் இருக்கவில்லை. அப்போது ஒரு மனிதர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதைத் தடுத்து நிறுத்திவிட்டான்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிடையேயும் கட்டுக்கடங்காதவை உள்ளன. ஆகவே, இவற்றில் இப்படிக் கட்டுக்கடங்காமல் வெருண்டோடும் பிராணியை இதைப் போன்றே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.56

அத்தியாயம் : 72
5544. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَنَدَّ بَعِيرٌ مِنَ الإِبِلِ ـ قَالَ ـ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ، قَالَ ثُمَّ قَالَ "" إِنَّ لَهَا أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَكُونُ فِي الْمَغَازِي وَالأَسْفَارِ فَنُرِيدُ أَنْ نَذْبَحَ فَلاَ تَكُونُ مُدًى قَالَ "" أَرِنْ مَا نَهَرَ ـ أَوْ أَنْهَرَ ـ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، غَيْرَ السِّنِّ وَالظُّفُرِ، فَإِنَّ السِّنَّ عَظْمٌ، وَالظُّفُرَ مُدَى الْحَبَشَةِ "".
பாடம்: 37 ஒரு கூட்டத்தாருக்குரிய ஒட்டகம் வெருண்டோடிட அவர்களில் ஒருவர் நன்மையை நாடி அதன்மீது அம்பெய்து அதைக் கொன்று விட்டால் அ(தை உண்ப)து செல்லும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து ராஃபிஉ (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (பின்வரும்) ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்:
5544. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒட்டகக் கூட்டத்திலிருந்து ஓர் ஒட்டகம் வெருண்டோடியது. அப்போது ஒரு மனிதர் அம்புகளை அதன் மீது எய்து அதைத் தடுத்து நிறுத்தினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இவற்றிலும் கட்டுக்கடங்காதவை உள்ளன. ஆகவே, இவற்றில் எது உங்களை மீறிச்செல்கிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறப்போர்களிலும் பயணங்களிலும் இருப்போம். அப்போது நாங்கள் பிராணிகளை அறுக்க விரும்புவோம். (எங்களிடம்) கத்தி இருக்காது. (அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்யும் எதுவாயினும் அதைக் கொண்டு விரைவாக அறுத்திடுங்கள். (அதன் மீது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும்பட்சத்தில் (அதைச்) சாப்பிடுங்கள்; பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. ஏனெனில், பல் எலும்பாகும்; நகம் அபிசீனியர்களின் கத்தியாகும்” என்று பதிலளித்தார்கள்.57

அத்தியாயம் : 72

5545. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ الإِيَامِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، مَنْ فَعَلَهُ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلُ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَىْءٍ "". فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ وَقَدْ ذَبَحَ فَقَالَ إِنَّ عِنْدِي جَذَعَةً. فَقَالَ "" اذْبَحْهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ "". قَالَ مُطَرِّفٌ عَنْ عَامِرٍ عَنِ الْبَرَاءِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ "".
பாடம்: 38 நிர்ப்பந்தத்திற்குள்ளானவன் (செத்தவற்றை) உண்பது58 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வழிபடுபவர் களாக இருப்பீர்களாயின், அவனுக்கு நன்றி செலுத்திவாருங்கள். (தானாகச்) செத்த பிராணி, உதிரம், பன்றியிறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக் காக அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற் றையே உங்களுக்கு அல்லாஹ் தடை செய்துள்ளான். ஆயினும், எவரேனும் விருப்பமில்லாமலும் எல்லை மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. (2:172,173) அல்லாஹ் கூறுகின்றான்: ஆனால், உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமை ‘னால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப்பட்ட வற்றைப் புசித்து)விட்டால் (அது குற்றமாகாது) (5:3). அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் சாப்பிடாம ருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றிச் சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான். ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழிதவறச்செய்கிறார்கள்; எல்லை மீறிச் செல்பவர்களை நிச்சயமாக உம்முடைய இறைவன் நன்கறிவான் (6:118,119). மாண்பும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: (தாமாகச்) செத்தவை, வடியும் இரத்தம், பன்றி மாமிசம் ஆகியவற்றைத் தவிர உண்பவர்கள் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப் பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை.-ஏனெனில், நிச்சயமாக இவை அசுத்தமாகும்.- அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல் அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது). ஆனால், எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு, எல்லை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் (அது குற்றமாகாது; ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும் பெருங் கருணையுடையோனாகவும் இருக்கின்றான் (6:145). அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிருந்து அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வழிபடுகின்றவர்களாக இருப்பின் அவனது அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். (நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவை யெல்லாம்: தானே செத்ததும், இரத்தமும், பன்றியிறைச்சியும், எதன் மீது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டதோ அதுவுமேயாகும். ஆனால், எவரேனும் எல்லை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் நிர்ப்பந்திக்கப்பட்(டு அவற்றைப் புசித்துவிட்)டால் (அது குற்றமாகாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான் (16:114, 115). பாடம்: 1 குர்பானி கொடுப்பது நபிவழி யாகும். இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அது நபிவழியும் (மக்களால்) அறியப்பட்ட ஒரு நடைமுறையும் ஆகும்” என்று சொன்னார்கள்.2
5545. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானி பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண)இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொôன்னார்கள்.

உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்துவிட்டிருந்த) அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) என்னிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள்.3

மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் யார் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு நிறைவாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று சொன்னார்கள்.

இதையும் பராஉ (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.4


அத்தியாயம் : 73
5546. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ "".
பாடம்: 38 நிர்ப்பந்தத்திற்குள்ளானவன் (செத்தவற்றை) உண்பது58 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வழிபடுபவர் களாக இருப்பீர்களாயின், அவனுக்கு நன்றி செலுத்திவாருங்கள். (தானாகச்) செத்த பிராணி, உதிரம், பன்றியிறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக் காக அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற் றையே உங்களுக்கு அல்லாஹ் தடை செய்துள்ளான். ஆயினும், எவரேனும் விருப்பமில்லாமலும் எல்லை மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. (2:172,173) அல்லாஹ் கூறுகின்றான்: ஆனால், உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமை ‘னால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப்பட்ட வற்றைப் புசித்து)விட்டால் (அது குற்றமாகாது) (5:3). அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் சாப்பிடாம ருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றிச் சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான். ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழிதவறச்செய்கிறார்கள்; எல்லை மீறிச் செல்பவர்களை நிச்சயமாக உம்முடைய இறைவன் நன்கறிவான் (6:118,119). மாண்பும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: (தாமாகச்) செத்தவை, வடியும் இரத்தம், பன்றி மாமிசம் ஆகியவற்றைத் தவிர உண்பவர்கள் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப் பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை.-ஏனெனில், நிச்சயமாக இவை அசுத்தமாகும்.- அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல் அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது). ஆனால், எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு, எல்லை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் (அது குற்றமாகாது; ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும் பெருங் கருணையுடையோனாகவும் இருக்கின்றான் (6:145). அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிருந்து அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வழிபடுகின்றவர்களாக இருப்பின் அவனது அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். (நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவை யெல்லாம்: தானே செத்ததும், இரத்தமும், பன்றியிறைச்சியும், எதன் மீது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டதோ அதுவுமேயாகும். ஆனால், எவரேனும் எல்லை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் நிர்ப்பந்திக்கப்பட்(டு அவற்றைப் புசித்துவிட்)டால் (அது குற்றமாகாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான் (16:114, 115). பாடம்: 1 குர்பானி கொடுப்பது நபிவழி யாகும். இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அது நபிவழியும் (மக்களால்) அறியப்பட்ட ஒரு நடைமுறையும் ஆகும்” என்று சொன்னார்கள்.2
5546. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம(து சொந்தத் தேவை)க்காகவே அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கின் றாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம் களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 73
5547. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ بَعْجَةَ الْجُهَنِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَصْحَابِهِ ضَحَايَا، فَصَارَتْ لِعُقْبَةَ جَذَعَةٌ. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ صَارَتْ جَذَعَةٌ. قَالَ "" ضَحِّ بِهَا "".
பாடம்: 2 குர்பானி பிராணிகளை மக்களி டையே தலைவர் பங்கிடுவது
5547. உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் களிடையே குர்பானி பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (எனது பங்காக ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதையே நீங்கள் குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள்.5

அத்தியாயம் : 73
5548. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ، قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهْىَ تَبْكِي فَقَالَ "" مَا لَكِ أَنَفِسْتِ "". قَالَتْ نَعَمْ. قَالَ "" إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ "". فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ، فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ.
பாடம்: 3 பயணி மற்றும் பெண்களுக்கு குர்பானி உண்டா?6
5548. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக் குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும்முன் ‘சரிஃப்’ எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள் ‘‘இ(ந்த மாத விடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர” என்று சொன்னார்கள்.

நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப் பட்டது. நான், ‘‘இது என்ன?” என்று கேட்டேன். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.7

அத்தியாயம் : 73
5549. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ "" مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ ـ وَذَكَرَ جِيرَانَهُ ـ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ. فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ، فَلاَ أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ مَنْ سِوَاهُ أَمْ لاَ، ثُمَّ انْكَفَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى كَبْشَيْنِ فَذَبَحَهُمَا، وَقَامَ النَّاسُ إِلَى غُنَيْمَةٍ فَتَوَزَّعُوهَا أَوْ قَالَ فَتَجَزَّعُوهَا.
பாடம்: 4 ஹஜ் பெருநாளன்று இறைச்சியை விரும்பி உண்ணுதல்
5549. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார்.

மேலும், தம்மிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது.

பிறகு நபி (ஸல்) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் குர்பானி கொடுத்த)னர்.8

அத்தியாயம் : 73
5550. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ، أَىُّ شَهْرٍ هَذَا "". قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ "" أَلَيْسَ ذَا الْحِجَّةِ "". قُلْنَا بَلَى. قَالَ "" أَىُّ بَلَدٍ هَذَا "". قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ "" أَلَيْسَ الْبَلْدَةَ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَأَىُّ يَوْمٍ هَذَا "". قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ قَالَ "" أَلَيْسَ يَوْمَ النَّحْرِ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ ـ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ، وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ فَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ، أَلاَ فَلاَ تَرْجِعُوا بَعْدِي ضُلاَّلاً، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَلَعَلَّ بَعْضَ مَنْ يَبْلُغُهُ أَنْ يَكُونَ أَوْعَى لَهُ مِنْ بَعْضِ مَنْ سَمِعَهُ ـ وَكَانَ مُحَمَّدٌ إِذَا ذَكَرَهُ قَالَ صَدَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ـ أَلاَ هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ "".
பாடம்: 5 துல்ஹிஜ்ஜா பத்தாவது நாள் மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் என்போரின் கூற்று9
5550. அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள் மக்காவில் ஆற்றிய உரையில்), ‘‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதா (அல்ஆகிரா)வுக்கும் ‘அபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று கூறிவிட்டு, ‘‘இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள்.

நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று பதிலளித்தோம். அம்மாதத்திற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்று சொன்னோம். ‘‘இது எந்த நகரம்?” என்றும் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று சொன்னோம். அப்போதும் அவர்கள் இந்நகரத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு ‘‘இது (புனித) நகரமல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம்” என்றோம்.

அடுத்து ‘‘இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும் அந்த நாளுக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு, ‘‘இது ‘குர்பானி கொடுக்கும்’ (நஹ்ருடைய) நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம்.

(பின்னர் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களின் இந்த(ப் புனித) மாதத்தில், உங்களின் இந்த(ப் புனித) நகரத்தில், உங்களின் இந்த நாள் புனிதம் பெற்றிருப்பதைப் போன்றே உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியனவும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் வினைகள் குறித்து விசாரிப்பான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்கின்ற வழிதவறியவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தியை (நேரடியாக)க் கேட்டவரைவிட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு காப்பவராயிருக்கலாம்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘‘நபி (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள்” என்று கூறுவார்கள்.-

பிறகு ‘‘நான் தெரிவித்துவிட்டேனா? நான் தெரிவித்துவிட்டேனா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.10

அத்தியாயம் : 73
5551. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يَنْحَرُ فِي الْمَنْحَرِ. قَالَ عُبَيْدُ اللَّهِ يَعْنِي مَنْحَرَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 6 (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானி கொடுப்பது
5551. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த அறுக்குமிடத்திலேயே, அதாவது நபி (ஸல்) அவர்கள் அறுத்த இடத்திலேயே தமது குர்பானி பிராணி களை அறுத்துவந்தார்கள்.


அத்தியாயம் : 73
5552. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَذْبَحُ وَيَنْحَرُ بِالْمُصَلَّى.
பாடம்: 6 (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானி கொடுப்பது
5552. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானி பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.

அத்தியாயம் : 73
5553. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُضَحِّي بِكَبْشَيْنِ وَأَنَا أُضَحِّي بِكَبْشَيْنِ.
பாடம் : 7 கொம்புகள் உள்ள இரு செம்மறி யாட்டுக் கடாக்களை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தது அவையிரண்டும் கொழுத்தவை என்று (மற்றோர் அறிவிப்பில்) கூறப்படுகிறது. உமாமா பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மதீனாவில் குர்பானி பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனை வருமே (பொதுவாக குர்பானி பிராணி களை) கொழுக்க வைத்துவந்தார்கள்.
5553. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரு செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்துவந்தார்கள். நானும் இரு செம்மறியாட்டுக் கடாக் களை குர்பானி கொடுத்துவந்தேன்.


அத்தியாயம் : 73
5554. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ فَذَبَحَهُمَا بِيَدِهِ. تَابَعَهُ وُهَيْبٌ عَنْ أَيُّوبَ. وَقَالَ إِسْمَاعِيلُ وَحَاتِمُ بْنُ وَرْدَانَ عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَنَسٍ.
பாடம் : 7 கொம்புகள் உள்ள இரு செம்மறி யாட்டுக் கடாக்களை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தது அவையிரண்டும் கொழுத்தவை என்று (மற்றோர் அறிவிப்பில்) கூறப்படுகிறது. உமாமா பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மதீனாவில் குர்பானி பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனை வருமே (பொதுவாக குர்பானி பிராணி களை) கொழுக்க வைத்துவந்தார்கள்.
5554. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.11

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 73
5555. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ ضَحَايَا، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ضَحِّ أَنْتَ بِهِ "".
பாடம் : 7 கொம்புகள் உள்ள இரு செம்மறி யாட்டுக் கடாக்களை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தது அவையிரண்டும் கொழுத்தவை என்று (மற்றோர் அறிவிப்பில்) கூறப்படுகிறது. உமாமா பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மதீனாவில் குர்பானி பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனை வருமே (பொதுவாக குர்பானி பிராணி களை) கொழுக்க வைத்துவந்தார்கள்.
5555. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களி டையே குர்பானி பிராணிகளாகப் பங்கிடும்படி ஓர் ஆட்டு மந்தையை என்னிடம் அளித்தார்கள். (அவ்வாறே நானும் பங்கிட்டேன். இறுதியில்) வெள்ளாட்டுக் குட்டி ஒன்று மீதி இருந்தது. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘நீங்கள் அதை குர்பானி கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.12

அத்தியாயம் : 73
5556. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُطَرِّفٌ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ ضَحَّى خَالٌ لِي يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" شَاتُكَ شَاةُ لَحْمٍ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي دَاجِنًا جَذَعَةً مِنَ الْمَعَزِ. قَالَ "" اذْبَحْهَا وَلَنْ تَصْلُحَ لِغَيْرِكَ "". ثُمَّ قَالَ "" مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا يَذْبَحُ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ "". تَابَعَهُ عُبَيْدَةُ عَنِ الشَّعْبِيِّ وَإِبْرَاهِيمَ. وَتَابَعَهُ وَكِيعٌ عَنْ حُرَيْثٍ عَنِ الشَّعْبِيِّ. وَقَالَ عَاصِمٌ وَدَاوُدُ عَنِ الشَّعْبِيِّ عِنْدِي عَنَاقُ لَبَنٍ. وَقَالَ زُبَيْدٌ وَفِرَاسٌ عَنِ الشَّعْبِيِّ عِنْدِي جَذَعَةٌ. وَقَالَ أَبُو الأَحْوَصِ حَدَّثَنَا مَنْصُورٌ عَنَاقٌ جَذَعَةٌ. وَقَالَ ابْنُ عَوْنٍ عَنَاقٌ جَذَعٌ، عَنَاقُ لَبَنٍ.
பாடம்: 8 ‘‘ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டை குர்பானி கொடுப்பீ ராக! உமக்குப் பிறகு வேறெவருக் கும் அது செல்லாது” என்று அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியது
5556. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபுர்தா என்றழைக்கப்பட்டுவந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)” என்று சொன்னார்கள். அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று வினவினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது” என்று சொல்லிவிட்டு, ‘‘தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுப்பவர், தமக் காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக் குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்óம்களின் வழிமுறையைப் பின்பற்றி விட்டார்” என்று கூறினார்கள்.13

இந்த ஹதீஸ் பத்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சில அறிவிப்புகளில் ‘அபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘என்னிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளது” என அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 73
5557. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ الْبَرَاءِ، قَالَ ذَبَحَ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبْدِلْهَا "". قَالَ لَيْسَ عِنْدِي إِلاَّ جَذَعَةٌ ـ قَالَ شُعْبَةُ وَأَحْسِبُهُ قَالَ ـ هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. قَالَ "" اجْعَلْهَا مَكَانَهَا، وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ "". وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالَ عَنَاقٌ جَذَعَةٌ.
பாடம்: 8 ‘‘ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டை குர்பானி கொடுப்பீ ராக! உமக்குப் பிறகு வேறெவருக் கும் அது செல்லாது” என்று அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியது
5557. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். ஆகவே, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘அதற்குப் பதிலாக வேறொன்றை அறுப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை; (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று வினவினார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது” என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) நான் எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதையே அதற்குப் பதிலாக அறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள்.

இது பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘‘என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட பெட்டை வெள்ளாட்டைத் தவிர வேறொன்றுமில்லை” என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாக உள்ளது.

அத்தியாயம் : 73