5498. حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ، فَأَصَابَ النَّاسَ جُوعٌ، فَأَصَبْنَا إِبِلاً وَغَنَمًا، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُخْرَيَاتِ النَّاسِ، فَعَجِلُوا فَنَصَبُوا الْقُدُورَ، فَدُفِعَ إِلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَمَرَ بِالْقُدُورِ فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ فَعَدَلَ عَشَرَةً مِنَ الْغَنَمِ بِبَعِيرٍ، فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، وَكَانَ فِي الْقَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ، فَأَهْوَى إِلَيْهِ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ، فَمَا نَدَّ عَلَيْكُمْ فَاصْنَعُوا بِهِ هَكَذَا "". قَالَ وَقَالَ جَدِّي إِنَّا لَنَرْجُو ـ أَوْ نَخَافُ ـ أَنْ نَلْقَى الْعَدُوَّ غَدًا، وَلَيْسَ مَعَنَا مُدًى، أَفَنَذْبَحُ بِالْقَصَبِ فَقَالَ "" مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُخْبِرُكُمْ عَنْهُ، أَمَّا السِّنُّ عَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ "".
பாடம்: 15 அறுக்கப்படும் பிராணியை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுப்பதும், நினைவிருந்தும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிடுவதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிராணியை அறுக்கும்போது (இறை நம்பிக்கையாளர்) ஒருவர் மறந்துபோய் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை யென்றால் குற்றமாகாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத பிராணியின் இறைச்சியை உண்ணாதீர்கள். அது (அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சியை உண்பது) பாவச் செயலாகும் (6:121). மறந்துவிட்டவன் பாவி எனப்படமாட்டான். (தொடர்ந்து) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களுடன் (இது தொடர்பாக வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு வழிப்பட்டால், நிச்சயமாக நீங்களும் (அவர்களைப் போன்றே) இணைவைப்போர்தான். (6:121)20
5498. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. (இந்நிலையில்) எங்களுக்குச் சில ஒட்டகமும் ஆடுகளும் (போர்ச் செல்வத்திலிருந்து) கிடைத்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின் வரிசையில் இருந்தார்கள். ஆகவே, மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்துப்) பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்துசேர்ந்து, பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன. பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றைப் பங்கிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கினார்கள்.

அப்போது அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. மக்கள் (ஓடிப்போன) அந்த ஒட்டகத்தைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களுக்கு அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறி வைத்து ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணி களிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

நான் ‘‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால் அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரியை நாங்கள் சந்திக்க நேரிடுமோ என்று ‘அஞ்சுகிறோம்’ அல்லது ‘உத்தேசிக்கின்றோம்’. ஆகவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும்போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் உண்ணலாம்; பல்லையும் நகத்தையும் (கொண்டு அறுப்பதைத்) தவிர. இதைப் பற்றி (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனிய (எத்தியோப்பிய)ர்களின் கத்திகளாகும்” என்று கூறினார்கள்.21

அத்தியாயம் : 72
5499. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ ـ يَعْنِي ابْنَ الْمُخْتَارِ ـ أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ لَقِيَ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ بِأَسْفَلِ بَلْدَحٍ، وَذَاكَ قَبْلَ أَنْ يُنْزَلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْوَحْىُ، فَقَدَّمَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُفْرَةً فِيهَا لَحْمٌ، فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهَا، ثُمَّ قَالَ إِنِّي لاَ آكُلُ مِمَّا تَذْبَحُونَ عَلَى أَنْصَابِكُمْ، وَلاَ آكُلُ إِلاَّ مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ.
பாடம்: 16 பலிபீடங்கள் மற்றும் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை
5499. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (‘வஹீ’) அருளப்படுவதற்கு முன்பு (மக்கா அருகிலுள்ள) ‘பல்தஹ்’ எனும் இடத்திற்குக் கீழ் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமக்குமுன் வைக்கப்பட்ட குறைஷியரின்) பயண உணவு ஒன்றை ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களுக்குமுன் வைத்தார்கள். அதில் (பலிபீடங்களில் அறுக்கப்பட்டவற்றின்) இறைச்சி இருந்தது. ஆகவே, அதிலிருந்து உண்ண ஸைத் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷியரிடம்), ‘‘நீங்கள் உங்கள் (சிலைகளுக்குப் பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ணமாட்டேன். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப் பட்டதோ அதைத் தவிர வேறெதையும் நான் உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.22

அத்தியாயம் : 72
5500. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ، قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُضْحِيَّةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلاَةِ فَقَالَ "" مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ "".
பாடம்: 17 ‘‘அவர் (தமது குர்பானிப்பிராணியை) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
5500. ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின்போது (தொழுகை முடிந்தபிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குர்பானி பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய குர்பானி பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்துவிட்டனர்.

(தொழுகையிலிருந்து) திரும்பிய நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் ‘குர்பானி’ கொடுத்துவிட்டிருப்பதைக் கண்டபோது, ‘‘யார் தொழுகைக்குமுன் அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் சொல் அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.23

அத்தியாயம் : 72
5501. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، سَمِعَ ابْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، يُخْبِرُ ابْنَ عُمَرَ أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّ جَارِيَةً لَهُمْ كَانَتْ تَرْعَى غَنَمًا بِسَلْعٍ، فَأَبْصَرَتْ بِشَاةٍ مِنْ غَنَمِهَا مَوْتًا، فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا، فَقَالَ لأَهْلِهِ لاَ تَأْكُلُوا حَتَّى آتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَسْأَلَهُ، أَوْ حَتَّى أُرْسِلَ إِلَيْهِ مَنْ يَسْأَلُهُ. فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْ بَعَثَ إِلَيْهِ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِأَكْلِهَا.
பாடம் : 18 (கூர்மையான) மூங்கில் கழி, வெள்ளைக் கல், இரும்பு ஆகிய வற்றால் அறுக்கப்பட்டவை24
5501. அப்துர் ரஹ்மான் பின் கஅப் பின் மாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: எங்கள் பணிப்பெண் ஒருவர் ‘சல்உ’ எனுமிடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது தம் ஆடுகளில் ஒன்று சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்தார். உடனே ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்துவிட்டார்.

(விவரம் அறிந்த) நான் என் வீட்டாரிடம், ‘‘நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி நான் கேட்கும்வரை’ அல்லது ‘நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இது குறித்துக் கேட்கும்வரை’ (இதைச்) சாப்பிடாதீர்கள்” என்று சொன்னேன்.

பிறகு ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்’ அல்லது ‘அவர்களிடம் ஆளனுப்பி வைத்தேன்’. அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிடுமாறு உத்தரவிட்டார்கள்.25


அத்தியாயம் : 72
5502. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي سَلِمَةَ أَخْبَرَ عَبْدَ اللَّهِ، أَنَّ جَارِيَةً، لِكَعْبِ بْنِ مَالِكٍ تَرْعَى غَنَمًا لَهُ بِالْجُبَيْلِ الَّذِي بِالسُّوقِ وَهْوَ بِسَلْعٍ، فَأُصِيبَتْ شَاةٌ، فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا، فَذَكَرُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَمَرَهُمْ بِأَكْلِهَا.
பாடம் : 18 (கூர்மையான) மூங்கில் கழி, வெள்ளைக் கல், இரும்பு ஆகிய வற்றால் அறுக்கப்பட்டவை24
5502. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் ஆடுகளை அவர்களுடைய அடிமைப் பெண் ஒருவர் மதீனாவின் கடைவீதிக்கு அருகில் ‘சல்உ’ எனும் இடத்திலுள்ள சிறிய மலையொன்றில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று காயமடைந்தது. உடனே அப்பெண் கல் ஒன்றை (கூர்மையாக) உடைத்து அதனால் அந்த ஆட்டை அறுத்தார். மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் இதைக் கூறி (இதை உண்ணலாமா என்று கேட்ட)னர். நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


அத்தியாயம் : 72
5503. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رَافِعٍ، عَنْ جَدِّهِ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ لَنَا مُدًى. فَقَالَ "" مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، لَيْسَ الظُّفُرَ وَالسِّنَّ، أَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ، وَأَمَّا السِّنُّ فَعَظْمٌ "". وَنَدَّ بَعِيرٌ فَحَبَسَهُ فَقَالَ "" إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا هَكَذَا "".
பாடம் : 18 (கூர்மையான) மூங்கில் கழி, வெள்ளைக் கல், இரும்பு ஆகிய வற்றால் அறுக்கப்பட்டவை24
5503. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தக்கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர. நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும். பல்லோ எலும்பாகும்.

(நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்திருந்த) ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதை ஒருவர் (அம்பெய்து) தடுத்து நிறுத்தினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வன விலங்குகளுக்கிடையே கட்டுக்கடங் காதவை சில இருப்பதைப் போன்றே, இந்த ஒட்டகங்களுக்கு இடையேயும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. ஆகவே, அவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.26

அத்தியாயம் : 72
5504. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ، فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ، فَأَمَرَ بِأَكْلِهَا. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنَا نَافِعٌ أَنَّهُ سَمِعَ رَجُلاً مِنَ الأَنْصَارِ يُخْبِرُ عَبْدَ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ جَارِيَةً لِكَعْبٍ بِهَذَا.
பாடம்: 19 (சுதந்திரமான) பெண் மற்றும் அடிமைப் பெண் அறுத்த பிராணி
5504. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் ஓர் ஆட்டை (கூர்மையான) கல் ஒன்றால் அறுத்தார். அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை உண்ணும்படி உத்தர விட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘‘கஅப் (ரலி) அவர்களுக்குரிய அடிமைப் பெண் ஒருவர் (இவ்விதம் செய்தார்)” என அன்சாரிகளில் ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.27


அத்தியாயம் : 72
5505. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ رَجُلٍ، مِنَ الأَنْصَارِ عَنْ مُعَاذِ بْنِ سَعْدٍ ـ أَوْ سَعْدِ بْنِ مُعَاذٍ ـ أَخْبَرَهُ أَنَّ جَارِيَةً لِكَعْبِ بْنِ مَالِكٍ كَانَتْ تَرْعَى غَنَمًا بِسَلْعٍ، فَأُصِيبَتْ شَاةٌ مِنْهَا، فَأَدْرَكَتْهَا فَذَبَحَتْهَا بِحَجَرٍ، فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" كُلُوهَا "".
பாடம்: 19 (சுதந்திரமான) பெண் மற்றும் அடிமைப் பெண் அறுத்த பிராணி
5505. முஆத் பின் சஅத் (ரலி), அல்லது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களுடைய அடிமைப் பெண் ஒருவர் ‘சல்உ’ எனும் மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அவற்றில் ஓர் ஆடு காயமுற்றது. உடனே அதைப் பிடித்து (கூர்மையான) கல் ஒன்றால் அப்பெண் அறுத்தார். (இது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘அதை நீங்கள் உண்ணலாம்” என்று கூறினார்கள்.28

அத்தியாயம் : 72
5506. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كُلْ ـ يَعْنِي ـ مَا أَنْهَرَ الدَّمَ إِلاَّ السِّنَّ وَالظُّفُرَ "".
பாடம்: 20 பல், எலும்பு, நகம் ஆகியவற்றால் (பிராணிகளை) அறுக்கலாகாது.
5506. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரத்தத்தை வடியச்செய்யும் (கூரிய ஆயுதம்) எதுவாயினும் அ(தனால் அறுக்கப்பட்ட)தை உண்ணுங்கள்; பல் மற்றும் நகம் (ஆகியவற்றால் அறுக்கப் பட்டதைத்) தவிர.

இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29

அத்தியாயம் : 72
5507. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ حَفْصٍ الْمَدَنِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ قَوْمًا، قَالُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ قَوْمًا يَأْتُونَا بِاللَّحْمِ لاَ نَدْرِي أَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ أَمْ لاَ فَقَالَ "" سَمُّوا عَلَيْهِ أَنْتُمْ وَكُلُوهُ "". قَالَتْ وَكَانُوا حَدِيثِي عَهْدٍ بِالْكُفْرِ. تَابَعَهُ عَلِيٌّ عَنِ الدَّرَاوَرْدِيِّ. وَتَابَعَهُ أَبُو خَالِدٍ وَالطُّفَاوِيُّ.
பாடம்: 21 கிராமவாசிகள் போன்றோரால் அறுக்கப்பட்டவை
5507. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். (அதை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்” என்று பதில் சொன்னார் கள்.

கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார் கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.30

அத்தியாயம் : 72
5508. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَحْيَيْتُ مِنْهُ.
பாடம்: 22 வேதக்காரர்கள் அறுத்த பிராணிகளையும் அவற்றின் கொழுப்பையும் உண்ணலாம். அவர்கள் பகைநாட்டினராயினும் மற்றவர்களாயினும் சரியே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்கப் பட்டவையாக (ஹலாலாக) ஆக்கப்பட் டுள்ளன. வேதம் வழங்கப்பெற்றவர்களின் உணவு உங்களுக்கும், உங்கள் உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (5:5) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அரபுக் கிறித்தவர்கள் அறுத்த பிராணிகளை உண்பது தவறன்று. அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரால் அவை அறுக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டால் அதை உண்ண வேண்டாம். அப்படி கேள்விப்படவில்லையென்றால் அல்லாஹ் அதை நமக்கு அனுமதித்துள்ளான். அவன் அவர்களுடைய இறைமறுப்பை அறிந்தும் உள்ளான். அலீ (ரலி) அவர்களைக் குறித்தும் இவ்வாறே (அவர்கள் கூறியதாக) அறிவிக்கப் பட்டுள்ளது. ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும், ‘‘விருத்தசேதனம் (சுன்னத்) செய்யப்படாத வரால் அறுக்கப்பட்ட பிராணியை உண்பதில் தவறில்லை” என்று கூறு கிறார்கள்.31 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(5:5ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்களு டைய உணவு’ என்பது அவர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளைக் குறிக்கும்” என்று கூறுகிறார்கள்.
5508. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் கொழுப்பு நிரம்பிய தோல்பை ஒன்றை எறிந்தார். அதை எடுக்க நான் பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்க்க, அங்கே நபி (ஸல்) அவர்கள் (நின்றுகொண்டு) இருந்தார்கள். (என் ஆசை அவர்களுக்குத் தெரிந்துவிட்டதால்) அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.32

அத்தியாயம் : 72
5509. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا، وَلَيْسَتْ مَعَنَا مُدًى فَقَالَ "" اعْجَلْ أَوْ أَرِنْ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ "". وَأَصَبْنَا نَهْبَ إِبِلٍ وَغَنَمٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ، فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَىْءٌ، فَافْعَلُوا بِهِ هَكَذَا "".
பாடம்: 23 வீட்டுப் பிராணிகளில் (கட்டுக்கடங்காமல்) வெருண்டோடக் கூடியவையும் வனவிலங்குகளாகவே கருதப்படும்.33 இதை (கட்டுங்கடங்காத வீட்டுப் பிராணிகளைத் தாக்கிக் காயப்படுத்துவதை) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அனுமதித் துள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உன் கைவசமுள்ள பிராணி களில் உன்னைத் தோற்கவைப்பது வேட்டைப் பிராணி போன்றதாகும். கிணற்றில் விழுந்துவிட்ட ஒட்டகத்தை உன்னால் முடிந்த விதத்தில் மீட்டு, அதை அறுத்து உண்ணலாம். அலீ (ரலி), இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோரும் இதே கருத்தைக் கொண்டிருந்தனர்.
5509. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (துல்ஹுலைஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது) ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால், அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!” என்று சொன்னேன்.

அப்போது அவர்கள், ‘‘ ‘விரைவாக’ அல்லது ‘தாமதமின்றி’ (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்). இரத்தத்தை சிந்தச்செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம்; பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! அவற்றைக் குறித்து உங்களுக்கு இதோ கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்” என்று சொன்னார்கள்.

(அப்போது) நாங்கள் போர்ச் செல்வமாக ஒட்டகத்தையும் ஆட்டையும் பெற்றோம். அவற்றிலிருந்து ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதன் மீது ஒருவர் ஓர் அம்பை எய்து அதை (ஓடவிடாமல்) தடுத்து (நிறுத்தி)விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே, இந்த ஒட்டகங்களிலும் கட்டுக்கடங்காதவை உண்டு. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.34

அத்தியாயம் : 72
5510. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ الْمُنْذِرِ، امْرَأَتِي عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ نَحَرْنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَسًا فَأَكَلْنَاهُ.
பாடம் : 24 நஹ்ரும் (ஒட்டகத்தின் கழுத்து நரம்பை அறுப்பதும்), தப்ஹும் (மற்றப் பிராணிகளின் குரல்வளைகளை அறுப்பதும்)35 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘குரல்வளையை அறுப்பதும் (தப்ஹ்), கழுத்து நரம்பை அறுப்பதும் (நஹ்ர்) அதனதன் இடத்தில் (பிராணிகளில்)தான் செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்கள்; நான், ‘‘குரல்வளையை அறுக்க வேண்டிய பிராணியின் கழுத்து நரம்பை அறுத்தால் போதுமா?” என்று கேட்டேன். ‘‘ஆம். (போதும். கழுத்து நரம்பை அறுக்க வேண்டிய) பசுமாடு தொடர்பாக அல்லாஹ் குரல்வளையை அறுப்பது என்று (குர்ஆனில்) குறிப்பிட்டுள்ளான். ஆகவே, கழுத்து நரம்பை அறுக்க வேண்டிய பிராணியின் குரல்வளையை அறுத்தாலும் செல்லும். இருப்பினும், அதன் கழுத்து நரம்பை அறுப்பதே எனக்கு விருப்பமானதாகும். ‘தப்ஹ்’ என்பது (குரல்வளையை ஒட்டி இரு பக்கங்களிலும் உள்ள) இரு பெரிய நரம்புகளைத் துண்டிப்பதாகும்” என்று சொன்னார்கள். நான், ‘‘அந்தப் பெரிய நரம்புகளையும் தாண்டி (பின்)கழுத்து எலும்பைத் துண்டிக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: நான் அப்படிக் கருதவில்லை. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் ‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுத்து எலும்பைத் துண்டிப்பதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் கழுத்தெலும்புக்கு முன்புள்ள பகுதிவரைத் துண்டித்து, அது இறக்கும்வரை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறினார்கள்” என்று தெரிவித்தார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் (இதையும் நினைவுகூருக:) மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘நீங்கள் ஒரு பசு மாட்டை அறுக்க வேண்டும் (‘தப்ஹ்’ செய்ய வேண்டும்) என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று சொன்னபோது... மனமில்லாமலேயே அதை அவர்கள் அறுத்தார்கள் (2:67-71). சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஃதகாத்’ (அறுத்தல்) என்பது குரல்வளையையும் கழுத்து நரம்பையும் அறுப்பதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் ‘‘அறுக்கும்போது ஒருவர் தலையை (முற்றாகத்) துண்டித்துவிட்டாலும் பரவாயில்லை. (அந்தப் பிராணியை உண்ணலாம்)” என்று கூறியுள்ளனர்.
5510. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம்.


அத்தியாயம் : 72
5511. حَدَّثَنَا إِسْحَاقُ، سَمِعَ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ ذَبَحْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا وَنَحْنُ بِالْمَدِينَةِ فَأَكَلْنَاهُ.
பாடம் : 24 நஹ்ரும் (ஒட்டகத்தின் கழுத்து நரம்பை அறுப்பதும்), தப்ஹும் (மற்றப் பிராணிகளின் குரல்வளைகளை அறுப்பதும்)35 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘குரல்வளையை அறுப்பதும் (தப்ஹ்), கழுத்து நரம்பை அறுப்பதும் (நஹ்ர்) அதனதன் இடத்தில் (பிராணிகளில்)தான் செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்கள்; நான், ‘‘குரல்வளையை அறுக்க வேண்டிய பிராணியின் கழுத்து நரம்பை அறுத்தால் போதுமா?” என்று கேட்டேன். ‘‘ஆம். (போதும். கழுத்து நரம்பை அறுக்க வேண்டிய) பசுமாடு தொடர்பாக அல்லாஹ் குரல்வளையை அறுப்பது என்று (குர்ஆனில்) குறிப்பிட்டுள்ளான். ஆகவே, கழுத்து நரம்பை அறுக்க வேண்டிய பிராணியின் குரல்வளையை அறுத்தாலும் செல்லும். இருப்பினும், அதன் கழுத்து நரம்பை அறுப்பதே எனக்கு விருப்பமானதாகும். ‘தப்ஹ்’ என்பது (குரல்வளையை ஒட்டி இரு பக்கங்களிலும் உள்ள) இரு பெரிய நரம்புகளைத் துண்டிப்பதாகும்” என்று சொன்னார்கள். நான், ‘‘அந்தப் பெரிய நரம்புகளையும் தாண்டி (பின்)கழுத்து எலும்பைத் துண்டிக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: நான் அப்படிக் கருதவில்லை. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் ‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுத்து எலும்பைத் துண்டிப்பதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் கழுத்தெலும்புக்கு முன்புள்ள பகுதிவரைத் துண்டித்து, அது இறக்கும்வரை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறினார்கள்” என்று தெரிவித்தார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் (இதையும் நினைவுகூருக:) மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘நீங்கள் ஒரு பசு மாட்டை அறுக்க வேண்டும் (‘தப்ஹ்’ செய்ய வேண்டும்) என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று சொன்னபோது... மனமில்லாமலேயே அதை அவர்கள் அறுத்தார்கள் (2:67-71). சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஃதகாத்’ (அறுத்தல்) என்பது குரல்வளையையும் கழுத்து நரம்பையும் அறுப்பதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் ‘‘அறுக்கும்போது ஒருவர் தலையை (முற்றாகத்) துண்டித்துவிட்டாலும் பரவாயில்லை. (அந்தப் பிராணியை உண்ணலாம்)” என்று கூறியுள்ளனர்.
5511. அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மதீனாவில் இருந்த போது குதிரையொன்றை (அதன் குரல் வளையை) அறுத்து (‘தப்ஹ்’ செய்து) அதை உண்டோம்.


அத்தியாயம் : 72
5512. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ، قَالَتْ نَحَرْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا فَأَكَلْنَاهُ. تَابَعَهُ وَكِيعٌ وَابْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامٍ فِي النَّحْرِ.
பாடம் : 24 நஹ்ரும் (ஒட்டகத்தின் கழுத்து நரம்பை அறுப்பதும்), தப்ஹும் (மற்றப் பிராணிகளின் குரல்வளைகளை அறுப்பதும்)35 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘குரல்வளையை அறுப்பதும் (தப்ஹ்), கழுத்து நரம்பை அறுப்பதும் (நஹ்ர்) அதனதன் இடத்தில் (பிராணிகளில்)தான் செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்கள்; நான், ‘‘குரல்வளையை அறுக்க வேண்டிய பிராணியின் கழுத்து நரம்பை அறுத்தால் போதுமா?” என்று கேட்டேன். ‘‘ஆம். (போதும். கழுத்து நரம்பை அறுக்க வேண்டிய) பசுமாடு தொடர்பாக அல்லாஹ் குரல்வளையை அறுப்பது என்று (குர்ஆனில்) குறிப்பிட்டுள்ளான். ஆகவே, கழுத்து நரம்பை அறுக்க வேண்டிய பிராணியின் குரல்வளையை அறுத்தாலும் செல்லும். இருப்பினும், அதன் கழுத்து நரம்பை அறுப்பதே எனக்கு விருப்பமானதாகும். ‘தப்ஹ்’ என்பது (குரல்வளையை ஒட்டி இரு பக்கங்களிலும் உள்ள) இரு பெரிய நரம்புகளைத் துண்டிப்பதாகும்” என்று சொன்னார்கள். நான், ‘‘அந்தப் பெரிய நரம்புகளையும் தாண்டி (பின்)கழுத்து எலும்பைத் துண்டிக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: நான் அப்படிக் கருதவில்லை. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் ‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுத்து எலும்பைத் துண்டிப்பதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் கழுத்தெலும்புக்கு முன்புள்ள பகுதிவரைத் துண்டித்து, அது இறக்கும்வரை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறினார்கள்” என்று தெரிவித்தார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் (இதையும் நினைவுகூருக:) மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘நீங்கள் ஒரு பசு மாட்டை அறுக்க வேண்டும் (‘தப்ஹ்’ செய்ய வேண்டும்) என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று சொன்னபோது... மனமில்லாமலேயே அதை அவர்கள் அறுத்தார்கள் (2:67-71). சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஃதகாத்’ (அறுத்தல்) என்பது குரல்வளையையும் கழுத்து நரம்பையும் அறுப்பதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் ‘‘அறுக்கும்போது ஒருவர் தலையை (முற்றாகத்) துண்டித்துவிட்டாலும் பரவாயில்லை. (அந்தப் பிராணியை உண்ணலாம்)” என்று கூறியுள்ளனர்.
5512. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் குதிரை யொன்றை (அதன் கழுத்து நரம்புகளை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.36

அத்தியாயம் : 72
5513. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، قَالَ دَخَلْتُ مَعَ أَنَسٍ عَلَى الْحَكَمِ بْنِ أَيُّوبَ، فَرَأَى غِلْمَانًا ـ أَوْ فِتْيَانًا ـ نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا. فَقَالَ أَنَسٌ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُصْبَرَ الْبَهَائِمُ.
பாடம்: 25 உயிருள்ள பிராணியின் அங்கங்களைச் சிதைப்பதும், அதைக் கட்டி வைத்து அம்பெய்து கொல்வதும், பறவையைக் கூண்டில் அடைத்து வைத்து அம்பெய்து கொல்வதும் விரும்பத்தகாத செயல்களாகும்.
5513. ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு தடவை என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்களுடன் (பஸ்ராவின் ஆட்சியரான) ஹகம் பின் அய்யூபிடம் சென்றேன். அங்கு சில ‘சிறுவர்கள்’ அல்லது ‘இளைஞர்கள்’ கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்ததை அனஸ் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் ‘‘விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 72
5514. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ دَخَلَ عَلَى يَحْيَى بْنِ سَعِيدٍ وَغُلاَمٌ مِنْ بَنِي يَحْيَى رَابِطٌ دَجَاجَةً يَرْمِيهَا، فَمَشَى إِلَيْهَا ابْنُ عُمَرَ حَتَّى حَلَّهَا، ثُمَّ أَقْبَلَ بِهَا وَبِالْغُلاَمِ مَعَهُ فَقَالَ ازْجُرُوا غُلاَمَكُمْ عَنْ أَنْ يَصْبِرَ هَذَا الطَّيْرَ لِلْقَتْلِ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُصْبَرَ بَهِيمَةٌ أَوْ غَيْرُهَا لِلْقَتْلِ.
பாடம்: 25 உயிருள்ள பிராணியின் அங்கங்களைச் சிதைப்பதும், அதைக் கட்டி வைத்து அம்பெய்து கொல்வதும், பறவையைக் கூண்டில் அடைத்து வைத்து அம்பெய்து கொல்வதும் விரும்பத்தகாத செயல்களாகும்.
5514. சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (என் தந்தையின் சகோதரர்) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவர் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்துகொண்டிருந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்தக் கோழியை நோக்கிச் சென்று அதை அவிழ்த்துவிட்டார்கள்.

பிறகு அந்தக் கோழியையும் அந்தச் சிறுவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு (யஹ்யா பின் சயீத் அவர்களிடம்) சென்று, ‘‘இந்தப் பறவையை அம்பெய்து கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று உங்கள் சிறுவரைக் கண்டித்துவையுங்கள். ஏனெனில், ஒரு விலங்கையோ (பறவை போன்ற) வேறெதையுமோ கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 72
5515. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ فَمَرُّوا بِفِتْيَةٍ أَوْ بِنَفَرٍ نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا، فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا، وَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ فَعَلَ هَذَا. تَابَعَهُ سُلَيْمَانُ عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا الْمِنْهَالُ، عَنْ سَعِيدٍ، عَنِ ابْنِ عُمَرَ، لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ مَثَّلَ بِالْحَيَوَانِ. وَقَالَ عَدِيٌّ عَنْ سَعِيدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 25 உயிருள்ள பிராணியின் அங்கங்களைச் சிதைப்பதும், அதைக் கட்டி வைத்து அம்பெய்து கொல்வதும், பறவையைக் கூண்டில் அடைத்து வைத்து அம்பெய்து கொல்வதும் விரும்பத்தகாத செயல்களாகும்.
5515. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் ‘இளைஞர்கள் சிலரை’ அல்லது ‘மக்கள் சிலரைக்’ கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்றுவிட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:

பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 72
5516. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ النُّهْبَةِ وَالْمُثْلَةِ.
பாடம்: 25 உயிருள்ள பிராணியின் அங்கங்களைச் சிதைப்பதும், அதைக் கட்டி வைத்து அம்பெய்து கொல்வதும், பறவையைக் கூண்டில் அடைத்து வைத்து அம்பெய்து கொல்வதும் விரும்பத்தகாத செயல்களாகும்.
5516. அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 72
5517. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ، عَنْ أَبِي مُوسَى ـ يَعْنِي الأَشْعَرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْكُلُ دَجَاجًا.
பாடம்: 26 கோழி இறைச்சி
5517. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கோழி (இறைச்சி) உண்பதை நான் பார்த்தேன்.

இதை ஸஹ்தம் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 72