5440. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْكُلُ الرُّطَبَ بِالْقِثَّاءِ.
பாடம்: 39
பேரீச்சச் செங்காய்களுடன் வெள்ளரிக்காயை(யும் சேர்த்து) உண்பது
5440. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை நான் கண்டேன்.
அத்தியாயம் : 70

5441. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبَّاسٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا، فَكَانَ هُوَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ يَعْتَقِبُونَ اللَّيْلَ أَثْلاَثًا، يُصَلِّي هَذَا، ثُمَّ يُوقِظُ هَذَا. وَسَمِعْتُهُ يَقُولُ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنِ أَصْحَابِهِ تَمْرًا، فَأَصَابَنِي سَبْعُ تَمَرَاتٍ إِحْدَاهُنَّ حَشَفَةٌ.
பாடம்: 40
5441. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர் களுடைய துணைவியாரும் அவர்களுடைய பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக்கொண்டு முறைவைத்து எழுந்து தொழுதுவந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பிவிடுவார். (அவர் தொழுது முடித்தவுடன் இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார்.)
(அபூஹுரைராவுடன் தங்கியிருந்த போது) அவர்கள் (இவ்வாறு) கூற நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) தம் தோழர்களி டையே பேரீச்சம்பழங்களைப் பங்கிட்டார் கள். எனக்கு ஏழு பேரீச்சம்பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம்பழமாக இருந்தது.
5441லிஆ (மற்றோர் அறிவிப்பில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து எனக்கு ஐந்து பழங்கள் கிடைத்தன; அவற்றில் நான்கு (கனிந்த) பேரீச்சம்பழங்களும் (நன்கு கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம்பழம் ஒன்றும் இருந்தன. பிறகு நான் அந்தத் தாழ்ந்த ரகப் பேரீச்சம்பழத்தை என் கடைவாய்ப் பல்லால் மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.61

5442. وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ، حَدَّثَتْنِي أُمِّي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ التَّمْرِ وَالْمَاءِ.
பாடம்: 41
பேரீச்சச் செங்காய்களும் பேரீச்சங் கனிகளும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ஈசாவின் அன்னை மர்யமிடம் வானவர் கூறினார்:) பேரீச்சமரத்தின் அடிப் பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்குங்கள். அது உங்கள்மீது புத்தம் புதிய செங்காய்களை உதிர்க்கும். (19:25)
5442. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரால் வயிறு நிரம்பியிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.62

5443. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، رضى الله عنهما قَالَ كَانَ بِالْمَدِينَةِ يَهُودِيٌّ وَكَانَ يُسْلِفُنِي فِي تَمْرِي إِلَى الْجِدَادِ، وَكَانَتْ لِجَابِرٍ الأَرْضُ الَّتِي بِطَرِيقِ رُومَةَ فَجَلَسَتْ، فَخَلاَ عَامًا فَجَاءَنِي الْيَهُودِيُّ عِنْدَ الْجَدَادِ، وَلَمْ أَجُدَّ مِنْهَا شَيْئًا، فَجَعَلْتُ أَسْتَنْظِرُهُ إِلَى قَابِلٍ فَيَأْبَى، فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لأَصْحَابِهِ "" امْشُوا نَسْتَنْظِرْ لِجَابِرٍ مِنَ الْيَهُودِيِّ "". فَجَاءُونِي فِي نَخْلِي فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُكَلِّمُ الْيَهُودِيَّ فَيَقُولُ أَبَا الْقَاسِمِ لاَ أُنْظِرُهُ. فَلَمَّا رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم قَامَ فَطَافَ فِي النَّخْلِ، ثُمَّ جَاءَهُ فَكَلَّمَهُ فَأَبَى فَقُمْتُ فَجِئْتُ بِقَلِيلِ رُطَبٍ فَوَضَعْتُهُ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَكَلَ ثُمَّ قَالَ "" أَيْنَ عَرِيشُكَ يَا جَابِرُ "". فَأَخْبَرْتُهُ فَقَالَ "" افْرُشْ لِي فِيهِ "". فَفَرَشْتُهُ فَدَخَلَ فَرَقَدَ، ثُمَّ اسْتَيْقَظَ فَجِئْتُهُ بِقَبْضَةٍ أُخْرَى فَأَكَلَ مِنْهَا، ثُمَّ قَامَ فَكَلَّمَ الْيَهُودِيَّ فَأَبَى عَلَيْهِ فَقَامَ فِي الرِّطَابِ فِي النَّخْلِ الثَّانِيَةَ ثُمَّ قَالَ "" يَا جَابِرُ جُدَّ وَاقْضِ "". فَوَقَفَ فِي الْجَدَادِ فَجَدَدْتُ مِنْهَا مَا قَضَيْتُهُ وَفَضَلَ مِنْهُ فَخَرَجْتُ حَتَّى جِئْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَشَّرْتُهُ فَقَالَ "" أَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ "".
عُرُوشٌ وَعَرِيشٌ بِنَاءٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ مَعْرُوشَاتٍ مَا يُعَرَّشُ مِنْ الْكُرُومِ وَغَيْرِ ذَلِكَ يُقَالُ عُرُوشُهَا أَبْنِيَتُهَا
பாடம்: 41
பேரீச்சச் செங்காய்களும் பேரீச்சங் கனிகளும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ஈசாவின் அன்னை மர்யமிடம் வானவர் கூறினார்:) பேரீச்சமரத்தின் அடிப் பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்குங்கள். அது உங்கள்மீது புத்தம் புதிய செங்காய்களை உதிர்க்கும். (19:25)
5443. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம்பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்)வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத் திருந்தார். ‘ரூமா’ கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. ஆகவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப்போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை.
ஆகவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டுவரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் ‘‘புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம்” என்று சென்னார்கள். நான் எனது பேரீச்சந்தோப்பில் இருந்தபோது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர், ‘‘அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன்” என்று கூறலானார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சமரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அந்த யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள்முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு ‘‘(நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்?” என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘எனக்கு அங்கே படுக்கை தயார் செய்” என்று சொன்னார்கள்.
அவ்வாறே நான் அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்துவிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள்.
பிறகு ‘‘ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உமது கடனை) அடைப்பாயாக!” என்று சொன்னார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (எனது கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதியிருந்தது. நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நானே சாட்சியம் அளிக்கின்றேன்” என்று சொன்னார்கள்.
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அரீஷ்’ (பந்தல்) மற்றும் ‘அர்ஷ்’ ஆகிய சொற்களுக்கு ‘கட்டடம்’ என்பது பொருள். ‘‘(இச்சொல்லில் இருந்து பிறந்த) ‘மஅரூஷாத்’ எனும் சொல்லுக்கு ‘திராட்சை முதலியவற்றின் பந்தல்’ என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(குர்ஆனில் 2:259ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘உரூஷிஹா’ என்பதற்கு ‘அக்கிராமத்தின் கட்டடங்கள்’ எனப் பொருள் கூறப்படுகிறது.
இந்த ஹதீஸில் ‘ஓராண்டு தள்ளிப்போனது’ என்பதைக் குறிக்க ‘கலா ஆமன்’ எனும் வாக்கியம் இடம்பெறுகிறது. இது என்னிடம் சரியானதாக இல்லை. ‘ஜல்லா’ என்றிருந்தால், அதில் ஐயமில்லை. இவ்வாறு புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

5444. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم جُلُوسٌ إِذْ أُتِيَ بِجُمَّارِ نَخْلَةٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِنَ الشَّجَرِ لَمَا بَرَكَتُهُ كَبَرَكَةِ الْمُسْلِمِ "". فَظَنَنْتُ أَنَّهُ يَعْنِي النَّخْلَةَ، فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ الْتَفَتُّ فَإِذَا أَنَا عَاشِرُ عَشَرَةٍ أَنَا أَحْدَثُهُمْ فَسَكَتُّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هِيَ النَّخْلَةُ "".
பாடம்: 42
பேரீச்சங் குருத்தை உண்ணுதல்
5444. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்சமரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்” என்று சொன்னார்கள். உடனே நான், ‘‘அவர்கள் பேரீச்சமரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்” என்று நினைத்தேன். ஆகவே, நான் ‘‘அது பேரீச்சம் மரம்தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூற விரும்பினேன்.
பிறகு (என்னுடனிருப்பவர்களைத்) திரும்பிப் பார்த்தேன். (அங்கிருந்த) பத்துப் பேரில் நான் பத்தாமவனாக, அவர்கள் அனைவரிலும் இளம் வயதுடையவனாக இருந்தேன். ஆகவே, மௌனமாகி விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர் களே, ‘‘அது பேரீச்சமரம்தான்” என்று சொன்னார்கள்.63

5445. حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرُّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ "".
பாடம் : 43
‘அல்அஜ்வா’ (எனும் அடர்த்தியான மதீனா பேரீச்சம்பழம்)
5445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5446. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، قَالَ أَصَابَنَا عَامُ سَنَةٍ مَعَ ابْنِ الزُّبَيْرِ فَرَزَقَنَا تَمْرًا، فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَمُرُّ بِنَا وَنَحْنُ نَأْكُلُ وَيَقُولُ لاَ تُقَارِنُوا فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقِرَانِ. ثُمَّ يَقُولُ إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ أَخَاهُ. قَالَ شُعْبَةُ الإِذْنُ مِنْ قَوْلِ ابْنِ عُمَرَ.
பாடம்: 44
(பலர் இருக்கும் இடத்தில் ஒருவரே) இரு பேரீச்சம்பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுவது
5446. ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், ‘‘(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்” என்று சொல்வார்கள்.
பிறகு, ‘‘ஒருவர் தம் சகோதரரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தால் தவிர” என்று சொல்வார் கள்.64
‘‘அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாகும்” என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

5447. حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْكُلُ الرُّطَبَ بِالْقِثَّاءِ.
பாடம்: 45
வெள்ளரிக்காய்
5447. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்.65

5448. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""مِنَ الشَّجَرِ شَجَرَةٌ تَكُونُ مِثْلَ الْمُسْلِمِ، وَهْىَ النَّخْلَةُ "".
பாடம்: 46
பேரீச்சமரங்களில் உள்ள வளம் (பரக்கத்)
5448. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்சமரமாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.66

5449. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ الرُّطَبَ بِالْقِثَّاءِ.
பாடம்: 47
ஒரே சமயத்தில் இரு வகைப் பழங்களை அல்லது இரு வகை உணவுகளைச் சேர்த்து உண்பது
5449. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெள்ளரிக்காய்களுடன் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.67

5450. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسٍ،. وَعَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ،. وَعَنْ سِنَانٍ أَبِي رَبِيعَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، أُمَّهُ عَمَدَتْ إِلَى مُدٍّ مِنْ شَعِيرٍ، جَشَّتْهُ وَجَعَلَتْ مِنْهُ خَطِيفَةً، وَعَصَرَتْ عُكَّةً عِنْدَهَا، ثُمَّ بَعَثَتْنِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ وَهْوَ فِي أَصْحَابِهِ فَدَعَوْتُهُ قَالَ "" وَمَنْ مَعِي "". فَجِئْتُ فَقُلْتُ إِنَّهُ يَقُولُ، وَمَنْ مَعِي، فَخَرَجَ إِلَيْهِ أَبُو طَلْحَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا هُوَ شَىْءٌ صَنَعَتْهُ أُمُّ سُلَيْمٍ، فَدَخَلَ فَجِيءَ بِهِ وَقَالَ "" أَدْخِلْ عَلَىَّ عَشَرَةً "". فَدَخَلُوا فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ قَالَ "" أَدْخِلْ عَلَىَّ عَشَرَةً "". فَدَخَلُوا فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ قَالَ "" أَدْخِلْ عَلَىَّ عَشَرَةً "". حَتَّى عَدَّ أَرْبَعِينَ، ثُمَّ أَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَامَ، فَجَعَلْتُ أَنْظُرُ هَلْ نَقَصَ مِنْهَا شَىْءٌ.
பாடம்: 48
பத்துப் பத்துப் பேராக விருந்தாளி களை அனுமதிப்பதும், பத்துப் பத்துப் பேராக உணவு விரிப்பில் அமர்வதும்
5450. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு ‘முத்(து)’ அளவு தொலிநீக்கப்படாத கோதுமையை எடுத்து நொறுகலாக அரைத்து (பால் கலந்து) கஞ்சி தயாரித்துத் தம்மிடமிருந்த நெய் உள்ள தோல்பை ஒன்றையும் எடுத்து (அதிலிருந்த நெய்யை அந்தக் கஞ்சியில்) ஊற்றினார்கள். பிறகு என்னை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே அமர்ந்திருக்க நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள், ‘‘என்னுடன் இருப்பவர்களும் (வரலாமா)?” என்று கேட்டார்கள்.
நான் சென்று (என் தாயாரிடம்), ‘‘நபி (ஸல்) அவர்கள் தம்முடன் இருப்பவர்களும் வரலாமா? எனக் கேட்கிறார்கள்” என்று சொன்னேன். உடனே (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (என் மனைவி) உம்மு சுலைம் தயாரித்த (சிறிதளவு) உணவுதான்” என்று சொன் னார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டினுள்) வந்தார்கள். அந்த உணவு கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னிடம் பத்துப் பேரை வரச் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே பத்துப் பேர் வந்தார்கள். அவர்கள் அனைவரும் வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னிடம் (இன்னுமொரு) பத்துப் பேரை வரச்சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் பத்துப் பேரும் வந்து வயிறு நிரம்பும்வரை உண்டார்கள்.
பிறகு மீண்டும் ‘‘(மற்றுமொரு) பத்துப் பேரை என்னிடம் வரச்சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். இவ்வாறே நாற்பது பேரை எண்ணும்வரை சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் உண்டுவிட்டு எழுந்தார்கள். நான் அதிலிருந்து ஏதேனும் குறைந்துள்ளதா என்று கவனிக்கலானேன். (குறையாமல் அப்படியே இருந்தது.)68
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

5451. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ قِيلَ لأَنَسٍ مَا سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الثُّومِ فَقَالَ "" مَنْ أَكَلَ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا "".
பாடம்: 49
வெள்ளைப்பூண்டு மற்றும் (வாடையுள்ள) கீரை வகைகளை உண்பது விரும்பத் தக்கதன்று.
இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களி டமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.69
5451. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப்பூண்டு குறித்து என்ன சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘(அதைச்) சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம் எனச் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.70

5452. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ زَعَمَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا، أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا "".
பாடம்: 49
வெள்ளைப்பூண்டு மற்றும் (வாடையுள்ள) கீரை வகைகளை உண்பது விரும்பத் தக்கதன்று.
இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களி டமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.69
5452. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நம் பள்ளிவாசலிலிருந்து விலகி யிருக்கட்டும்’ ‘‘ என்று சொன்னதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.71

5453. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، قَالَ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَرِّ الظَّهْرَانِ نَجْنِي الْكَبَاثَ فَقَالَ "" عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ، فَإِنَّهُ أَيْطَبُ "". فَقَالَ أَكُنْتَ تَرْعَى الْغَنَمَ قَالَ "" نَعَمْ، وَهَلْ مِنْ نَبِيٍّ إِلاَّ رَعَاهَا "".
பாடம்: 50
‘அல்கபாஸ்’ - அது ‘மிஸ்வாக்’ மரத்தின் பழமாகும்.
5453. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் (‘கபாஸ்’ எனும்) மிஸ்வாக் மரத்தின் பழத்தைப் பறித்துக்கொண்டி ருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதில் கறுப்பானதைப் பறியுங்கள்; ஏனெனில், அதுதான் மிகவும் நன்றாக இருக்கும்” என்று சொன்னார்கள்.
அப்போது ‘‘தாங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அவர்கள், ‘‘ஆம்! அதை மேய்க்காத இறைத்தூதரும் உண்டா?” என்று கேட்டார்கள்.72

5454. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ، فَلَمَّا كُنَّا بِالصَّهْبَاءِ دَعَا بِطَعَامٍ فَمَا أُتِيَ إِلاَّ بِسَوِيقٍ، فَأَكَلْنَا فَقَامَ إِلَى الصَّلاَةِ، فَتَمَضْمَضَ وَمَضْمَضْنَا.
பாடம்: 51
உணவு உண்டபின் வாய் கொப்பு ளித்தல்
5454. சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குப் புறப்பட்டோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். அவர்களிடம் மாவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் (அனைவரும்) உண்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம்.

5455. قَالَ يَحْيَى سَمِعْتُ بُشَيْرًا، يَقُولُ حَدَّثَنَا سُوَيْدٌ، خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ، فَلَمَّا كُنَّا بِالصَّهْبَاءِ ـ قَالَ يَحْيَى وَهْىَ مِنْ خَيْبَرَ عَلَى رَوْحَةٍ ـ دَعَا بِطَعَامٍ فَمَا أُتِيَ إِلاَّ بِسَوِيقٍ، فَلُكْنَاهُ فَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَمَضْمَضْنَا مَعَهُ، ثُمَّ صَلَّى بِنَا الْمَغْرِبَ وَلَمْ يَتَوَضَّأْ. وَقَالَ سُفْيَانُ كَأَنَّكَ تَسْمَعُهُ مِنْ يَحْيَى.
பாடம்: 51
உணவு உண்டபின் வாய் கொப்பு ளித்தல்
5455. சுவைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். மாவு மட்டும்தான் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நாங்கள் அவர்களுடன் அதை மென்று உண்டோம். பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் அவர்களுடன் வாய் கொப்புளித்தோம். பிறகு, எங்களுடன் அவர்கள் மஃக்ரிப் தொழுகை தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை.
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஸஹ்பா’ எனும் அந்த இடம் கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ளது.73

5456. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا "".
பாடம்: 52
விரல்களைக் கைக்குட்டையால் துடைப்பதற்குமுன் அவற்றை நாக்கால் வழித்து உறிஞ்சுவது
5456. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ள வேண்டாம்.
இதை இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5457. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَأَلَهُ عَنِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ، فَقَالَ لاَ قَدْ كُنَّا زَمَانَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَجِدُ مِثْلَ ذَلِكَ مِنَ الطَّعَامِ إِلاَّ قَلِيلاً، فَإِذَا نَحْنُ وَجَدْنَاهُ لَمْ يَكُنْ لَنَا مَنَادِيلُ، إِلاَّ أَكُفَّنَا وَسَوَاعِدَنَا وَأَقْدَامَنَا، ثُمَّ نُصَلِّي وَلاَ نَتَوَضَّأُ.
பாடம்: 53
கைக்குட்டை(யால் துடைப்பது)
5457. சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘நெருப்புத் தீண்டிய (சமைத்த) உணவை உண்பதால் (தொழுகைக்காக மீண்டும்) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமா?” என்று கேட்டேன்.
அவர்கள், ‘‘தேவையில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அது போன்ற உணவு அரிதாகவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. அவ்வாறு எங்களுக்கு அது கிடைக்கும்போது எங்கள் முன்கைகள், மேல்கைகள் மற்றும் பாதங்கள்தான் எங்களின் கைகுட்டை களாக இருந்தன. பிறகு நாங்கள் தொழுவோம். (நெருப்பால் சமைத்த உணவை உண்டதற்காகப் புதிதாக) அங்கத் தூய்மை செய்யமாட்டோம்” என்று பதிலளித்தார்கள்.

5458. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ "" الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا "".
பாடம்: 54
உணவு உண்டபின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
5458. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்தபின்) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது, ‘‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப்பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

5459. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ ـ وَقَالَ مَرَّةً إِذَا رَفَعَ مَائِدَتَهُ ـ قَالَ "" الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مَكْفُورٍ ـ وَقَالَ مَرَّةً الْحَمْدُ لِلَّهِ رَبِّنَا، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مُوَدَّعٍ ـ وَلاَ مُسْتَغْنًى، رَبَّنَا "".
பாடம்: 54
உணவு உண்டபின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
5459. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘உணவு உண்ட பின்’ அல்லது ‘தமது உணவு விரிப்பை எடுக்கும்போது’ ‘‘அல்ஹம்து லில்லாஹி கஃபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்” என்று கூறுவார்கள்.
(பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. இப்புகழ் முற்றுப் பெறாதது; மறுக்க முடியாதது ஆகும்.)
சில வேளைகளில், ‘‘ல(க்)கல் ஹம்து ரப்பனா, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் ரப்பனா” என்று கூறுவார்கள். (பொருள்: உனக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது எங்கள் இறைவா! இப்புகழ் முற்றுப்பெறாதது; கைவிப்படக் கூடாதது; தவிர்க்க இயலாதது ஆகும்.)