5275. وَعَنِ ابْنِ أَبِي تَمِيمَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَعْتُبُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلاَ خُلُقٍ، وَلَكِنِّي لاَ أُطِيقُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". قَالَتْ نَعَمْ.
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5275. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ அவருடைய குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆனால், அவருடன் வாழ என்னால் முடியவில்லை” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவரும் ‘ஆம்’ (திருப்பித் தந்துவிடுகிறேன்) என்று கூறினார்.

அத்தியாயம் : 68
5276. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، حَدَّثَنَا قُرَادٌ أَبُو نُوحٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا أَنْقِمُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلاَ خُلُقٍ، إِلاَّ أَنِّي أَخَافُ الْكُفْرَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". فَقَالَتْ نَعَمْ. فَرَدَّتْ عَلَيْهِ، وَأَمَرَهُ فَفَارَقَهَا.
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவருடைய குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும், நான் இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சரி! அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ‘ஆம்’ என்று கூறினார்.

பின்னர் (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிட மிருந்து பிரிந்துவிட்டார்.

அத்தியாயம் : 68
5277. حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ جَمِيلَةَ، فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5277. இக்ரிமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அந்தப் பெண்ணின் பெயர்) ஜமீலா என்று மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம் : 68
5278. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ بَنِي الْمُغِيرَةِ اسْتَأْذَنُوا فِي أَنْ يَنْكِحَ عَلِيٌّ ابْنَتَهُمْ، فَلاَ آذَنُ "".
பாடம்: 13 (கணவன்- மனைவிக்கிடையே) பிரிவினை ஏற்படு(மோ என அஞ்சு)வதும், அவசியம் நேரும்போது ‘குலா’ செய்யும்படி (நடுவர்) யோசனை கூறலாமா என்பதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: (கணவன்-மனைவி ஆகிய) அவ்விரு வரிடையே (பிணக்கு உண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் மனைவியின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பி னால், அல்லாஹ் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிகின்ற வனாகவும் நன்குணர்ந்தவனாகவும் இருக்கின்றான். (4:35)35
5278. மிஸ்வர் பின் மக்ரமா அஸ்ஸுஹ்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘பனூ முஃகீரா குலத்தார், தங்கள் புதல்வியை அலீ (ரலி) அவர்கள் மணமு டித்துக்கொள்ள அனுமதி கோரினர்.

(ஆனால், அதை) நான் அனுமதிக்கமாட்டேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.36

அத்தியாயம் : 68
5279. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ فِي بَرِيرَةَ ثَلاَثُ سُنَنٍ، إِحْدَى السُّنَنِ أَنَّهَا أُعْتِقَتْ، فَخُيِّرَتْ فِي زَوْجِهَا. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْبُرْمَةُ تَفُورُ بِلَحْمٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ الْبَيْتِ فَقَالَ "" أَلَمْ أَرَ الْبُرْمَةَ فِيهَا لَحْمٌ "". قَالُوا بَلَى، وَلَكِنْ ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لاَ تَأْكُلُ الصَّدَقَةَ. قَالَ "" عَلَيْهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம்: 14 (திருமணமான) அடிமைப் பெண்ணை விற்பது மணவிலக்கு ஆகாது.37
5279. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத் தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப் பெற்றன:

1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார்.

2. ‘‘அடிமையின் வாரிசுரிமை (‘வலா’), விடுதலை செய்தவருக்கே உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக்கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்குமுன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘‘பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் ‘‘ஆம்! (இருக்கிறது.) ஆனால், அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள்தான் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு” என்றார் கள்.38

அத்தியாயம் : 68
5280. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، وَهَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ رَأَيْتُهُ عَبْدًا يَعْنِي زَوْجَ بَرِيرَةَ.
பாடம்: 15 ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவின் கணவர் ஓர் அடிமையாக இருந்ததை நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 68
5281. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ذَاكَ مُغِيثٌ عَبْدُ بَنِي فُلاَنٍ ـ يَعْنِي زَوْجَ بَرِيرَةَ ـ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَتْبَعُهَا فِي سِكَكِ الْمَدِينَةِ، يَبْكِي عَلَيْهَا.
பாடம்: 15 ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5281. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாவார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்துவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபோது) மதீனாவின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் அவருக்காக அழுதவண்ணம் பின்தொடர்ந்து சென்றதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள் ளது.

அத்தியாயம் : 68
5282. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ زَوْجُ بَرِيرَةَ عَبْدًا أَسْوَدَ يُقَالُ لَهُ مُغِيثٌ، عَبْدًا لِبَنِي فُلاَنٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ وَرَاءَهَا فِي سِكَكِ الْمَدِينَةِ.
பாடம்: 15 ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5282. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கறுப்பு அடிமையான பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாயிருந்தார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்து விடுவதைத் தேர்ந்தெடுத்தபோது) மதீனா வின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் சுற்றிச்சுற்றி வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

அத்தியாயம் : 68
5283. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ، بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي، وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبَّاسٍ "" يَا عَبَّاسُ أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا "". فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ رَاجَعْتِهِ "". قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي قَالَ "" إِنَّمَا أَنَا أَشْفَعُ "". قَالَتْ لاَ حَاجَةَ لِي فِيهِ.
பாடம்: 16 பரீராவின் கணவருக்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தது
5283. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுதவண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் ‘‘முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, ‘‘(அப்படி யானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

அத்தியாயம் : 68
5284. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، أَنَّ عَائِشَةَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ، بَرِيرَةَ، فَأَبَى مَوَالِيهَا إِلاَّ أَنْ يَشْتَرِطُوا الْوَلاَءَ، فَذَكَرَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ إِنَّ هَذَا مَا تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ، فَقَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "". حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ وَزَادَ فَخُيِّرَتْ مِنْ زَوْجِهَا.
பாடம்: 17
5284. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் (‘வலா’ எனும்) வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டு, (இல்லையேல் விற்க முடியாது என) மறுத்தனர். ஆகவே, இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (உன் விருப்பப்படியே) பரீராவை நீ வாங்கி விடுதலை செய்துவிடு! ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும் என்று சொன்னார்கள்.

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ‘‘இ(ந்த இறைச்சியான)து, பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்” என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இது பரீராவுக்குத்தான் தர்மம்: நமக்கு (இது) அன்பளிப்பாகும்” என்று சொன்னார்கள்.40

மற்றோர் அறிவிப்பில், ‘‘பரீரா தம் கணவர் விஷயத்தில் விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 68
5285. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ إِذَا سُئِلَ عَنْ نِكَاحِ النَّصْرَانِيَّةِ، وَالْيَهُودِيَّةِ، قَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ الْمُشْرِكَاتِ عَلَى الْمُؤْمِنِينَ، وَلاَ أَعْلَمُ مِنَ الإِشْرَاكِ شَيْئًا أَكْبَرَ مِنْ أَنْ تَقُولَ الْمَرْأَةُ رَبُّهَا عِيسَى، وَهْوَ عَبْدٌ مِنْ عِبَادِ اللَّهِ.
பாடம்: 18 ‘‘(அல்லாஹ்வுக்கு) இணைகற் பிக்கும் பெண்களை -அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணைகற்பிக்கும் (சுதந்திரமான) ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறைநம்பிக்கையுள்ள அடிமைப் பெண்ணே நிச்சயமாக மேலானவள் ஆவாள்” எனும் (2:221ஆவது) இறைவசனம்
5285. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முஸ்லிம்) கிறித்தவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணமுடித்துக்கொள்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப் பட்டால், அவர்கள் ‘‘இறைநம்பிக்கையாளர்கள் இணைகற்பிக்கும் பெண்களை மணமுடித்துக்கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவரான ஈசா (அலை) அவர்களைத் தன்னுடைய இறைவன் என்று ஒரு பெண் கூறுவதைவிட மிகப் பெரிய இணைவைப்பாக வேறொன்றையும் நான் அறியவில்லை” என்பார்கள்.41

அத்தியாயம் : 68
5286. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَقَالَ، عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ، كَانَ الْمُشْرِكُونَ عَلَى مَنْزِلَتَيْنِ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْمُؤْمِنِينَ، كَانُوا مُشْرِكِي أَهْلِ حَرْبٍ يُقَاتِلُهُمْ وَيُقَاتِلُونَهُ، وَمُشْرِكِي أَهْلِ عَهْدٍ لاَ يُقَاتِلُهُمْ وَلاَ يُقَاتِلُونَهُ، وَكَانَ إِذَا هَاجَرَتِ امْرَأَةٌ مِنْ أَهْلِ الْحَرْبِ لَمْ تُخْطَبْ حَتَّى تَحِيضَ وَتَطْهُرَ، فَإِذَا طَهُرَتْ حَلَّ لَهَا النِّكَاحُ، فَإِنْ هَاجَرَ زَوْجُهَا قَبْلَ أَنْ تَنْكِحَ رُدَّتْ إِلَيْهِ، وَإِنْ هَاجَرَ عَبْدٌ مِنْهُمْ أَوْ أَمَةٌ فَهُمَا حُرَّانِ وَلَهُمَا مَا لِلْمُهَاجِرِينَ. ثُمَّ ذَكَرَ مِنْ أَهْلِ الْعَهْدِ مِثْلَ حَدِيثِ مُجَاهِدٍ وَإِنْ هَاجَرَ عَبْدٌ أَوْ أَمَةٌ لِلْمُشْرِكِينَ أَهْلِ الْعَهْدِ لَمْ يُرَدُّوا، وَرُدَّتْ أَثْمَانُهُمْ.
பாடம்: 19 இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய) அவர்களின் ‘இத்தா’ காலமும்42
5286. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம் களையும் பொறுத்தவரையில் இணை வைப்பாளர்கள் இரு வகையினராக இருந்தனர். ஒரு வகை இணைவைப்பாளர் கள் பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்.

பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து (மதீனாவுக்கு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏறபட்டு தூய்மையடையும்வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப்பின்) தூய்மையடைந்தால் மணமுடித்துக்கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்துகொள்வதற்குமுன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள்.

பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ, பெண்ணோ (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (புலம்பெயர்ந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன.

பின்னர் (இதன் அறிவிப்பாளரான) அதாஉ (ரஹ்) அவர்கள், (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப் பாளர்(களின் பெண்)கள் குறித்து முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்திருப்பதைப் போன்று (பின்வருமாறு) அறிவிக் கிறார்கள்:

(சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்களின் ஆண் அடிமையோ, பெண் அடிமையோ (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவர்கள் (தம் நாட்டிற்குத்) திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை; அவர்களுக்குரிய விலை மட்டுமே திருப்பித் தரப்பட்டது.

அத்தியாயம் : 68
5287. وَقَالَ عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ، كَانَتْ قَرِيبَةُ بِنْتُ أَبِي أُمَيَّةَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَطَلَّقَهَا، فَتَزَوَّجَهَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، وَكَانَتْ أُمُّ الْحَكَمِ ابْنَةُ أَبِي سُفْيَانَ تَحْتَ عِيَاضِ بْنِ غَنْمٍ الْفِهْرِيِّ فَطَلَّقَهَا، فَتَزَوَّجَهَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ الثَّقَفِيُّ.
பாடம்: 19 இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய) அவர்களின் ‘இத்தா’ காலமும்42
5287. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉமய்யாவின் மகள் ‘குறைபா’ என்பவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பின்னர் அவரை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் மணந்துகொண்டார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்முல் ஹகம் அவர்கள், இயாள் பின் ஃகன்ம் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை இயாள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பிறகு அவரை அப்துல்லாஹ் பின் உஸ்மான் அஸ்ஸகஃபீ என்பவர் மணமுடித்துக்கொண்டார்.43

அத்தியாயம் : 68
5288. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ،. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَتِ الْمُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَمْتَحِنُهُنَّ بِقَوْلِ اللَّهِ تَعَالَى {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ} إِلَى آخِرِ الآيَةِ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ الْمُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ ""، لاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ قَطُّ، غَيْرَ أَنَّهُ بَايَعَهُنَّ بِالْكَلاَمِ، وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النِّسَاءِ إِلاَّ بِمَا أَمَرَهُ اللَّهُ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ "" قَدْ بَايَعْتُكُنَّ "". كَلاَمًا.
பாடம்: 20 பகை நாட்டு இணைவைப்பாளரின், அல்லது இஸ்லாமிய நாட்டு முஸ்லிமல்லாத குடிமகனின் கிறித்தவ மனைவி, அல்லது இணைவைப் பாளியான மனைவி முஸ்லிமாகி விட்டால் (என்ன சட்டம்?)44 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தன் கணவனுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக ஒரு கிறித்தவப் பெண் முஸ்லிமாகிவிட்டால்கூட உடனே அவள் தன் கணவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள். இப்ராஹீம் அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இஸ்லாமிய நாட்டின் ஒப்பந்தப் பிரஜையான முஸ்லிமல்லாத ஒரு பெண் முஸ்லிமாகிவிட்டாள். பிறகு அவள் ‘இத்தா’ காலத்தில் இருந்துகொண்டிருந்தபோது அவளுடைய கணவனும் முஸ்லிமானார். இப்போது அவள் அவருடைய மனைவிதானா? (அவர்கள் இடையிலான மணஉறவு முறிந்துவிட்டதா? அல்லது தொடர்கிறதா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இல்லை (முறிந்துவிட்டது); இனி அவளாக முன்வந்து (அதே கணவனைப்) புதிதாகத் திருமணம் செய்துகொண்டு ‘மஹ்ர்’ பெற்றுக்கொள்ள விரும்பினால் தவிர. (அப்போதுதான் பழைய கணவனுடன் தொடர்ந்து அவள் வாழ முடியும்)” என்று பதிலளித்தார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மேற்கண்ட நிலையில்) அவள் ‘இத்தா’வில் இருந்துகொண்டிருக்கும்போது கணவன் முஸ்லிமாகிவிட்டால் (புதிதாக) அவளை மணந்துகொள்ள வேண்டும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (முஸ்லிமாகிவிட்ட) அந்தப் பெண்கள் (முஸ்லிமல்லாத) தங்கள் கணவன் மார்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்தக் கணவன்மார்களும் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட வர்கள் அல்லர். (60:10) ஹசன் அல்பளி (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அக்னி ஆராதனையாளர்களான) மஜூசி தம்பதிகள் ஒரே நேரத்தில் முஸ்óமானால் (பழைய) மணஉறவிலேயே அவர்கள் இருவரும் நீடிப்பார்கள். அதே சமயம் அவர்களில் ஒருவர் மற்றவரை முந்திக்கொண்டு முஸ்லிமாகி, மற்றொருவர் (முஸ்லிமாக) மறுத்தார் எனில், (அவர்கள் இருவருக்கும் இடையே) மணமுறிவு ஏற்பட்டுவிடும்; அவள்மீது அவன் உரிமை கொண்டாட முடியாது. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இணைவைப்பாளர் களிலுள்ள ஒரு பெண் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு) முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தால், (இணை வைப்பவரான) அவளுடைய (முன்னாள்) கணவனுக்கு அவள் மணக்கொடையை (மஹ்ரை)த் திருப்பிச் செலுத்த வேண்டுமா? ஏனெனில், அல்லாஹ் ‘(இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்!’ (60:10) என்று கூறுகின்றானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘(அவசியம்) இல்லை. அதுவெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கும் (இணைவைப்பாளர் களான) ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே இருந்த ஒன்றுதான். (இன்று அது நடைமுறையில் இல்லை)” என்று பதிலளித்தார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கும் குறைஷியருக்கும் இடையே ஏற்பட்டிருந்த உடன்பாட்டின்போதுதான். (பின்னர், மக்கா வெற்றியின்போது காலாவதியாகிவிட்டது.)
5288. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இறைநம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் இறைநம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (புலம்பெயர்ந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப்பாருங்கள்...” எனும் (60:10ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (‘இணை வைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்’ என்று) இந்த நிபந்தனைகளுக்கு யார் ஒப்புதல் அளிக் கிறாரோ அவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டபோது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிட மிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெற வில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் ‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்’ என்று வார்த்தையால் மட்டுமே கூறினார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது கரம் பற்றியதைப் போன்று பெண்களிடம் செய்யவில்லை.)45

அத்தியாயம் : 68
5289. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ آلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نِسَائِهِ، وَكَانَتِ انْفَكَّتْ رِجْلُهُ فَأَقَامَ فِي مَشْرُبَةٍ لَهُ تِسْعًا وَعِشْرِينَ، ثُمَّ نَزَلَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ آلَيْتَ شَهْرًا. فَقَالَ "" الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ "".
பாடம்: 21 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாதங்கள் (வரையே) அவகாசம் உள்ளது. (அதற்குள்) அவர்கள் (தமது சத்தியத்திலிலிருந்து) திரும்பி விட்டால், அல்லாஹ் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். அவர்கள் மணவிலக்கு அளிப்பதில் உறுதியாக இருந்தால், அல்லாஹ் (அதைச்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான். (2:226,227)46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு ‘அவர்கள் மீண்டுகொண்டார்களானால்’ என்பது பொருள்.
5289. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். (இந்தக் காலகட்டத்தில்) அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந் தது. ஆகவே, அவர்கள் தமது மாடியறை யில் இருபத்தொன்பது நாட்கள் தங்கி யிருந்துவிட்டு பிறகு இறங்கி வந்தார்கள்.

அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தான்” என்று பதிலளித்தார்கள்.47

அத்தியாயம் : 68
5290. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، رضى الله عنهما كَانَ يَقُولُ فِي الإِيلاَءِ الَّذِي سَمَّى اللَّهُ لاَ يَحِلُّ لأَحَدٍ بَعْدَ الأَجَلِ إِلاَّ أَنْ يُمْسِكَ بِالْمَعْرُوفِ، أَوْ يَعْزِمَ بِالطَّلاَقِ، كَمَا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ.
பாடம்: 21 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாதங்கள் (வரையே) அவகாசம் உள்ளது. (அதற்குள்) அவர்கள் (தமது சத்தியத்திலிலிருந்து) திரும்பி விட்டால், அல்லாஹ் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். அவர்கள் மணவிலக்கு அளிப்பதில் உறுதியாக இருந்தால், அல்லாஹ் (அதைச்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான். (2:226,227)46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு ‘அவர்கள் மீண்டுகொண்டார்களானால்’ என்பது பொருள்.
5290. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ‘ஈலா’ (எனும் சத்திய) விஷயத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்தரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையில் (தம் மனைவியைத்) தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும்; அல்லது அவளை மணவிலக்குச் செய்ய உறுதியான முடிவு செய்திட வேண்டும். இதைத் தவிர வேறெதற்கும் அனுமதியில்லை” என்று கூறுவார்கள்.

அத்தியாயம் : 68
5291. وَقَالَ لِي إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، إِذَا مَضَتْ أَرْبَعَةُ أَشْهُرٍ يُوقَفُ حَتَّى يُطَلِّقَ، وَلاَ يَقَعُ عَلَيْهِ الطَّلاَقُ حَتَّى يُطَلِّقَ. وَيُذْكَرُ ذَلِكَ عَنْ عُثْمَانَ وَعَلِيٍّ وَأَبِي الدَّرْدَاءِ وَعَائِشَةَ وَاثْنَىْ عَشَرَ رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 21 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாதங்கள் (வரையே) அவகாசம் உள்ளது. (அதற்குள்) அவர்கள் (தமது சத்தியத்திலிலிருந்து) திரும்பி விட்டால், அல்லாஹ் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். அவர்கள் மணவிலக்கு அளிப்பதில் உறுதியாக இருந்தால், அல்லாஹ் (அதைச்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான். (2:226,227)46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு ‘அவர்கள் மீண்டுகொண்டார்களானால்’ என்பது பொருள்.
5291. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும்வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும்வரை (ஈலாவில்) மணவிலக்கு நிகழாது.

இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தா, ஆயிஷா (ரலி) மேலும் பன்னிரண்டு பேரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.48

அத்தியாயம் : 68
5292. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ ضَالَّةِ الْغَنَمِ فَقَالَ "" خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "". وَسُئِلَ عَنْ ضَالَّةِ الإِبِلِ، فَغَضِبَ وَاحْمَرَّتْ وَجْنَتَاهُ، وَقَالَ "" مَا لَكَ وَلَهَا، مَعَهَا الْحِذَاءُ وَالسِّقَاءُ، تَشْرَبُ الْمَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا "". وَسُئِلَ عَنِ اللُّقَطَةِ فَقَالَ "" اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، وَعَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ مَنْ يَعْرِفُهَا، وَإِلاَّ فَاخْلِطْهَا بِمَالِكَ "". قَالَ سُفْيَانُ فَلَقِيتُ رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ـ قَالَ سُفْيَانُ وَلَمْ أَحْفَظْ عَنْهُ شَيْئًا غَيْرَ هَذَا ـ فَقُلْتُ أَرَأَيْتَ حَدِيثَ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ فِي أَمْرِ الضَّالَّةِ، هُوَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ نَعَمْ. قَالَ يَحْيَى وَيَقُولُ رَبِيعَةُ عَنْ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ. قَالَ سُفْيَانُ فَلَقِيتُ رَبِيعَةَ فَقُلْتُ لَهُ.
பாடம்: 22 மனைவி மக்களையும் சொத்து களையும் விட்டுவிட்டுக் காணாமற் போனவர் பற்றிய சட்டம்49 போரின்போது (நம்) அணியிலிருந்து ஒருவர் காணாமற்போய்விட்டால் அவரை அவருடைய மனைவி ஒருவருட காலம் எதிர்பார்ப்பாள் என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி னார்கள். (பிறகு விலையை ஒப்படைப் பதற்காக) அவளுடைய எசமானை ஒரு வருட காலம் தேடினார்கள். அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. அவர் காணாமல்போய்விட்டார். ஆகவே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஏழைகளுக்கு) ஒன்றிரண்டு வெள்ளி நாணயத்தைக் கொடுத்துக்கொண்டே ‘‘இறைவா! இதை இன்ன மனிதருக்காக வழங்குகிறேன். அவர் வந்துவிட்டால் (தர்மம் வழங்கியதற்காக) எனக்கு (நன்மை) உண்டு; (அவருடைய கடனைச் செலுத்த வேண்டிய பொறுப்பும்) என்மீது உண்டு” என்று கூறிவிட்டு, ‘‘கண்டெடுக்கப்பட்ட பொருள் விஷயத்தில் இவ்வாறே செயல்படுங்கள்” என்று சொன்னார்கள். இதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள்: இருக்கும் இடம் அறியப்படுகின்ற கைதி விஷயத்தில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘அவனுடைய மனைவி மறுமணம் செய்துகொள்ளமாட்டாள். அவனுடைய சொத்துகள் பங்கு வைக்கவும்படாது. அவனைக் குறித்த தகவல் கிடைக்காவிட்டால், காணாமல்போனவன் விஷயத்தில் கையாளப்படும் அதே வழிமுறை இவன் விஷயத்திலும் கையாளப்படும்” என்று கூறினார்கள்.
5292. அல்முன்பஇஸ் (ரஹ்) அவர்களின் (முன்னாள்) அடிமையான யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், வழிதவறி வந்துவிட்ட ஆட்டைப் பற்றி வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (வினவியவரிடம்), ‘‘அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரனுக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று பதிலளித்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றி வினவப்பட்டது. (இதைச் செவியுற்ற) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந் தார்கள். (எந்த அளவுக்கென்றால்) அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன. பிறகு, ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன்தான் (நடப்பதற்கு) குளம்பும், (நீரைச் சேமிக்கத்) தண்ணீர் பையும் (வயிறும்) உள்ளதே! அதை அதன் உரிமையாளன் சந்திக்கும் வரை தண்ணீர் அருந்தி (தாகம்தணித்து)க்கொள்கிறது. மரத்திலிருந்து அது (இலை தழைகளைத்) தின்கிறது” என்று சொன்னார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்தும் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு ஓராண்டுக் காலத்திற்கு அதை அறிவிப்புச் செய்!”

‘‘அதன் (உரிமையாளரான) அடையாளம் அறிந்தவர் வந்தால் சரி! (அதை அவரிடம் கொடுத்துவிடு;) இல்லாவிட்டால் அதை உனது செல்வத்துடன் சேர்த்துக்கொள்!” என்றார்கள்.50

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த அறிவிப்பைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து (கேட்டு) மனனமிடவில்லை. ‘‘வழிதவறி வந்துவிட்டவை தொடர்பாக யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) ஹதீஸ், (நபித்தோழர்) ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டதுதானே! எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கு ரபீஆ (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(மேற்கண்ட ஹதீஸை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் (ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டார்கள்.

அத்தியாயம் : 68
5293. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ طَافَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَعِيرِهِ، وَكَانَ كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ، وَكَبَّرَ. وَقَالَتْ زَيْنَبُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فُتِحَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ "". وَعَقَدَ تِسْعِينَ.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5293. இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றிவந்தார்கள்.

அந்த (‘ஹஜருல் அஸ்வத்’ கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தமது கையிலுள்ள ஒரு பொருளால் முத்தமிடுவதுபோல்) சைகை செய்தபடி ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள்.60

ஸைனப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ‘‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போன்று (சிறிது) திறக்கப்பட்டது” என்று கூறி தமது கையால் 90 என்று (அரபி எண் வடிவில்) மடித்துக் காட்டி னார்கள்.61

அத்தியாயம் : 68
5294. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" فِي الْجُمُعَةِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي، فَسَأَلَ اللَّهَ خَيْرًا، إِلاَّ أَعْطَاهُ "". وَقَالَ بِيَدِهِ، وَوَضَعَ أَنْمَلَتَهُ عَلَى بَطْنِ الْوُسْطَى وَالْخِنْصَرِ. قُلْنَا يُزَهِّدُهَا.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5294. அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

இதைக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம் விரல்நுனிகளை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப் பாகத்தின் மீது வைத்துத் தமது கையால் சைகை செய்தார்கள். ‘‘(இதன் மூலம்) அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்” என நாங்கள் பேசிக் கொண்டோம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.62

அத்தியாயம் : 68