5233. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ امْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً وَاكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا. قَالَ "" ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ "".
பாடம்: 112 (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர் தவிர (வேறு) எந்த (அந்நிய) ஆணும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கலாகாது; கணவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணிடம் செல்லலாகாது.
5233. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது?)” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(போருக்குச் செல்வதிலிருந்து பெயரை) திரும்பப் பெற்றுக்கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள்.163

அத்தியாயம் : 67
5234. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَلاَ بِهَا فَقَالَ "" وَاللَّهِ إِنَّكُنَّ لأَحَبُّ النَّاسِ إِلَىَّ "".
பாடம்: 113 மக்கள் அருகிலிருக்க, அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனியாக(ப் பேசிக்கொண்டு) இருப்பது அனுமதிக்கப்பட்டதே!
5234. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக்கொண்டி ருந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 67
5235. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا وَفِي الْبَيْتِ مُخَنَّثٌ، فَقَالَ الْمُخَنَّثُ لأَخِي أُمِّ سَلَمَةَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا أَدُلُّكَ عَلَى ابْنَةِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَدْخُلَنَّ هَذَا عَلَيْكُنَّ "".
பாடம்: 114 பெண்களைப்போல் நடந்து கொள்கின்றவர்(களான அரவானி)கள் ஒரு பெண்ணிடம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
5235. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள் என் கணவர்) நபி (ஸல்) அவர்கள் என் அருகில் இருந்துகொண்டி ருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப்போல் நடந்துகொள்ளும்) ‘அரவானி’ ஒருவனும் இருந்துகொண்டி ருந்தான். அந்த ‘அரவானி’ என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவிடம், ‘‘நாளை தாயிஃப் நகர்மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானுடைய164 மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று (அவளது மேனி அழகை வர்ணித்துக்) கூறினான்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இவன் உங்களிடம் ஒருபோதும் வரக் கூடாது” என்று சொன்னார்கள்.165

அத்தியாயம் : 67
5236. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، عَنْ عِيسَى، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ.
பாடம்: 115 (அந்நிய ஆடவர்களான) அபிசீனியர்கள் போன்றவர்களைக் குழப்பத் திற்கிடமில்லாதிருப்பின் ஒரு பெண் பார்க்கலாம்.
5236. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல்துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக்கொண்டிருந்த அபிசீனியர் களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக்கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும்வரை பார்த்துக்கொண்டி ருந்தேன். விளையாட்டுகள்மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.166

அத்தியாயம் : 67
5237. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ لَيْلاً فَرَآهَا عُمَرُ فَعَرَفَهَا فَقَالَ إِنَّكِ وَاللَّهِ يَا سَوْدَةُ مَا تَخْفَيْنَ عَلَيْنَا، فَرَجَعَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، وَهْوَ فِي حُجْرَتِي يَتَعَشَّى، وَإِنَّ فِي يَدِهِ لَعَرْقًا، فَأُنْزِلَ عَلَيْهِ فَرُفِعَ عَنْهُ وَهُوَ يَقُولُ "" قَدْ أَذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَوَائِجِكُنَّ "".
பாடம்: 116 தம் தேவைகள் நிமித்தம் பெண்கள் வெளியே செல்லலாம்.
5237. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் (பர்தா அணிவது சட்டமாக்கப் பட்டபின் ஒருநாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள். அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் அடையாளம் புரிந்துகொண்டு, ‘‘சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை” என்று சொன்னார்கள். உடனே சவ்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அது குறித்து அவர்களிடம் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் எனது அறையில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அந்தச் சமயத்தில் அவர்களுக்கு (வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம்போல் அதனால் ஏற்படும் சிரமநிலை) அகற்றவும் பட்டது. அப்போது அவர்கள், ‘‘(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான்” என்றார்கள்.167

அத்தியாயம் : 67
5238. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى الْمَسْجِدِ فَلاَ يَمْنَعْهَا "".
பாடம்: 117 பள்ளிவாசல் உள்ளிட்ட இடங் களுக்குச் செல்ல பெண் தன் கணவரிடம் அனுமதி கோருவது
5238. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168

அத்தியாயம் : 67
5239. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ جَاءَ عَمِّي مِنَ الرَّضَاعَةِ فَاسْتَأْذَنَ عَلَىَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ "" إِنَّهُ عَمُّكِ فَأْذَنِي لَهُ "" قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ. قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّهُ عَمُّكِ فَلْيَلِجْ عَلَيْكِ "". قَالَتْ عَائِشَةُ وَذَلِكَ بَعْدَ أَنْ ضُرِبَ عَلَيْنَا الْحِجَابُ. قَالَتْ عَائِشَةُ يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ الْوِلاَدَةِ.
பாடம்: 118 பால்குடி உறவு முறையுள்ள ஒரு பெண்ணிடம் செல்வதும் அவளைப் பார்ப்பதும் அனுமதிக் கப்பட்டதாகும்.
5239. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) என் பால்குடித் தந்தை (அபுல் குஐஸ்) அவர்களுடைய சகோதரர் (அஃப்லஹ் என்பார்) வந்து என் வீட்டுக்குள்ளே வர அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் அவருக்கு அனுமதியளிப்ப தில்லை என்று நான் இருந்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் அது குறித்துக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர்தானே! அவருக்கு உள்ளே வர அனுமதி கொடு!” என்று சொன்னார்கள்.

உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பெண்தானே எனக்குப் பாலூட்டினார். இந்த ஆண் எனக்குப் பாலூட்டவில்லையே! (பாலூட்டிய தாயின் கணவரும் அவருடைய சகோதரரும் எனக்கு எந்த வகையில் உறவினர் ஆவார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் உன்னுடைய (பால்குடித்) தந்தையின் சகோதரர்தான். எனவே, அவர் உன்னிடம் (உன் வீட்டுக்குள்) வரலாம்” என்று சொன்னார்கள்.

-இது எங்களுக்கு ‘பர்தா’ அணியும் சட்டம் விதியாக்கப்பட்ட பின்னால் நடந்தது.-

(மேலும்,) இரத்த உறவின் காரணத்தால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படுவதைப் போன்றே பால்குடியாலும் நெருங்கிய உறவு ஏற்படும்.169

அத்தியாயம் : 67
5240. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُبَاشِرِ الْمَرْأَةُ الْمَرْأَةَ فَتَنْعَتَهَا لِزَوْجِهَا، كَأَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا "".
பாடம் : 119 ஒரு பெண் மற்றொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவுவதும், அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் வர்ணித் துக் கூறுவதும் கூடாது.
5240. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 67
5241. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُبَاشِرِ الْمَرْأَةُ الْمَرْأَةَ فَتَنْعَتَهَا لِزَوْجِهَا كَأَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا "".
பாடம் : 119 ஒரு பெண் மற்றொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவுவதும், அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் வர்ணித் துக் கூறுவதும் கூடாது.
5241. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்றுமேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.170

அத்தியாயம் : 67
5242. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ "" قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ لأَطُوفَنَّ اللَّيْلَةَ بِمِائَةِ امْرَأَةٍ، تَلِدُ كُلُّ امْرَأَةٍ غُلاَمًا، يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ الْمَلَكُ قُلْ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ وَنَسِيَ، فَأَطَافَ بِهِنَّ، وَلَمْ تَلِدْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ نِصْفَ إِنْسَانٍ "". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ لَمْ يَحْنَثْ، وَكَانَ أَرْجَى لِحَاجَتِهِ "".
பாடம்: 120 ஒருவர் ‘‘நான் இன்றிரவு என் துணைவியர் அனைவரிடமும் (தாம்பத்திய உறவுக்காகச்) சென்று வருவேன்” என்று கூறுவது
5242. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவி யரிடமும் சென்று வருவேன். அப்பெண் களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்), ‘‘இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள்.

ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்று கூறியிருந்தால் அவர் தமது சத்தியத்தை முறித்திருக்கமாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) மேலும், அது (‘இன்ஷா அல்லாஹ்’ என்பது) அவரது தேவை நிறைவேற உதவியிருக்கும்.171

அத்தியாயம் : 67
5243. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَكْرَهُ أَنْ يَأْتِيَ الرَّجُلُ أَهْلَهُ طُرُوقًا.
பாடம்: 121 நீண்ட பயணத்திலிருந்து திரும்பு கின்றவர் இரவில் திடீரென தமது வீட்டினுள் நுழையலாகாது. தம் வீட்டார்மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்திடவும், அவர்களின் குற்றங் குறைகளைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்பு நேர்ந்திடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.
5243. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (வெளியிலிருந்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் வருவதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கக்கூடியவர்களாயிருந்தார்கள்.


அத்தியாயம் : 67
5244. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَطَالَ أَحَدُكُمُ الْغَيْبَةَ فَلاَ يَطْرُقْ أَهْلَهُ لَيْلاً "".
பாடம்: 121 நீண்ட பயணத்திலிருந்து திரும்பு கின்றவர் இரவில் திடீரென தமது வீட்டினுள் நுழையலாகாது. தம் வீட்டார்மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்திடவும், அவர்களின் குற்றங் குறைகளைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்பு நேர்ந்திடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.
5244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம்.172

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 67
5245. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ هُشَيْمٍ، عَنْ سَيَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ، قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ، فَلَمَّا قَفَلْنَا تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ قَطُوفٍ فَلَحِقَنِي رَاكِبٌ مِنْ خَلْفِي، فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا يُعْجِلُكَ "". قُلْتُ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ. قَالَ "" فَبِكْرًا تَزَوَّجْتَ أَمْ ثَيِّبًا "". قُلْتُ بَلْ ثَيِّبًا. قَالَ "" فَهَلاَّ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ "". قَالَ فَلَمَّا قَدِمْنَا ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ "" أَمْهِلُوا حَتَّى تَدْخُلُوا لَيْلاً ـ أَىْ عِشَاءً ـ لِكَىْ تَمْتَشِطَ الشَّعِثَةُ وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ "". قَالَ وَحَدَّثَنِي الثِّقَةُ أَنَّهُ قَالَ فِي هَذَا الْحَدِيثِ "" الْكَيْسَ الْكَيْسَ يَا جَابِرُ "". يَعْنِي الْوَلَدَ.
பாடம்: 122 குழந்தைத் தேட்டம்173
5245. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக்கூடிய ஒட்டகத்தின்மீது இருந்த வாறு நான் அவசரப்பட்டுக்கொண்டிருந் தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) ‘‘உமக்கு என்ன அவசரம்?” என்று கேட்டார்கள். ‘‘நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னிகழிந்த பெண்ணை மணந்தாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள்.

பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக் கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.174

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்” என்றார்கள். அதாவது ‘‘குழந்தை யைத் தேடிக்கொள்” என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.


அத்தியாயம் : 67
5246. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَخَلْتَ لَيْلاً فَلاَ تَدْخُلْ عَلَى أَهْلِكَ حَتَّى تَسْتَحِدَّ الْمُغِيبَةُ وَتَمْتَشِطَ الشَّعِثَةُ "". قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَعَلَيْكَ بِالْكَيْسِ الْكَيْسِ "". تَابَعَهُ عُبَيْدُ اللَّهِ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْكَيْسِ.
பாடம்: 122 குழந்தைத் தேட்டம்173
5246. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளும்வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலை வாரிக்கொள்ளும்வரை (பொறுமையாயிரு!)” என்று கூறிவிட்டு, ‘‘புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 67
5247. حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا سَيَّارٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ، فَلَمَّا قَفَلْنَا كُنَّا قَرِيبًا مِنَ الْمَدِينَةِ تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ لِي قَطُوفٍ، فَلَحِقَنِي رَاكِبٌ مِنْ خَلْفِي فَنَخَسَ بَعِيرِي بِعَنَزَةٍ كَانَتْ مَعَهُ، فَسَارَ بَعِيرِي كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنَ الإِبِلِ، فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ. قَالَ "" أَتَزَوَّجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" أَبِكْرًا أَمْ ثَيِّبًا "". قَالَ قُلْتُ بَلْ ثَيِّبًا. قَالَ "" فَهَلاَّ بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ "". قَالَ فَلَمَّا قَدِمْنَا ذَهَبْنَا لِنَدْخُلَ، فَقَالَ "" أَمْهِلُوا حَتَّى تَدْخُلُوا لَيْلاً ـ أَىْ عِشَاءً ـ لِكَىْ تَمْتَشِطَ الشَّعِثَةُ، وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ "".
பாடம்: 123 (கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக்கத்தியைப் பயன்படுத் திக்கொள்ள வேண்டும்; தலைவிரி கோலமாக இருந்தவள் தலைவாரிக்கொள்ள வேண்டும்.
5247. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பிவந்த நாங்கள் மதீனாவை நெருங்கிக்கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லும் என் ஒட்டகத்தில் இருந்தவாறு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரம் எனக்குப் பின்னால் இருந்து வாகனத்தில் ஒருவர் என்னை வந்தடைந்து தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ கண்ட ஒட்டகங்களிலேயே அதிவிரைவாக ஓடக்கூடியது போல ஓடியது.

நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இருந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் ஆனவன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் செய்துகொண்டுவிட்டாயா?” என்று கேட்க, நான், ‘‘ஆம்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப்பெண்ணையா, கன்னிகழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள்.

நான், ‘‘இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப்பெண்ணை மணந்து, அவளோடு நீயும், உன்னோடு அவளுமாய்க் கூடிக்குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு) வந்து (ஊருக்குள்) நுழைய முற்பட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களை சென்றடைய) இஷா நேரம்வரைப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்” என்றார்கள்.175

அத்தியாயம் : 67
5248. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ اخْتَلَفَ النَّاسُ بِأَىِّ شَىْءٍ دُووِيَ جُرْحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ، فَسَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَكَانَ مِنْ آخِرِ مَنْ بَقِيَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ، فَقَالَ وَمَا بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلاَمُ تَغْسِلُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَعَلِيٌّ يَأْتِي بِالْمَاءِ عَلَى تُرْسِهِ، فَأُخِذَ حَصِيرٌ، فَحُرِّقَ فَحُشِيَ بِهِ جُرْحُهُ.
பாடம்: 124 தங்கள் கணவன்மார்கள், தங்களு டைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய புதல்வர்கள், தங்கள் கணவன்மார்களின் புதல்வர்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் (உடன் நெருங்கிப் பழகும்) பெண்கள், தங்களுடைய அடிமைகள், (பெண்கள்மீது) வேட்கையில்லாத தம்மை அண்டி வாழ்கின்ற ஆண்கள், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி ஏதும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களது அலங்காரத்தை இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் வெளிக்காட்ட வேண்டாம் (எனும் 24:31ஆவது இறைவசனம்)
5248. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போர் நாளில் (காயமுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காயத்திற்கு என்ன மருந்திடப்பட்டது என்பது தொடர்பாக மக்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதி (ரலி) அவர்களிடம் (சென்று அது பற்றிக்) கேட்டார்கள். -சஹ்ல் (ரலி) அவர்கள் மதீனாவில் கடைசியாக எஞ்சியிருந்த நபித்தோழர்களில் ஒருவராய் இருந்தார்கள்.-அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

மக்களிலேயே இது குறித்து என்னைவிட நன்கறிந்தவர் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. (உஹுத் போரில் காயமடைந்த) நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து (அவர்களுடைய புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களே இரத்தத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்துகொண்டிருந்தார்கள். பின்பு ஒரு பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. பிறகு (கரிக்கப்பட்ட பாயின்) சாம்பலை நபியவர் களின் காயத்தில் வைத்து அழுத்தப் பட்டது.176

அத்தியாயம் : 67
5249. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ سَأَلَهُ رَجُلٌ شَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْعِيدَ أَضْحًى أَوْ فِطْرًا قَالَ نَعَمْ لَوْلاَ مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ ـ يَعْنِي مِنْ صِغَرِهِ ـ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى ثُمَّ خَطَبَ، وَلَمْ يَذْكُرْ أَذَانًا وَلاَ إِقَامَةً، ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَرَأَيْتُهُنَّ يَهْوِينَ إِلَى آذَانِهِنَّ وَحُلُوقِهِنَّ يَدْفَعْنَ إِلَى بِلاَلٍ، ثُمَّ ارْتَفَعَ هُوَ وَبِلاَلٌ إِلَى بَيْتِهِ.
பாடம்: 125 உங்களில் பருவ வயதை அடையாத (சிறு)வர்கள் (உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் மட்டும் அனுமதி பெற்றுக்கொள்ளட்டும்! எனும் 24:58ஆவது வசனத்தொடர்)
5249. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘தாங்கள் (பெருநாட்களான) ஈதுல் அள்ஹாவிலோ ஈதுல் ஃபித்ரிலோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆம் (இருந்திருக்கிறேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் (பெருநாள் தொழுகையில்) அவர்களுடன் கலந்துகொண்டு (பெண்கள் பகுதிவரை சென்று) இருக்க முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று (மக்களுடன் பெருநாள்) தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு உரை நிகழ்த்தினார்கள்.

-இந்த இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (அத்தொழுகைக்குமுன்) பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதாகக் கூறவில்லை.-

பிறகு நபி (ஸல்) அவர்கள் பெண்கள் இருந்த பகுதிக்கு வந்து (மார்க்க விஷயங்களையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். மேலும், (ஏழை எளியோருக்கு) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்.

உடனே அப்பெண்கள், தங்களின் காதுகளுக்கும் கழுத்துகளுக்கும் தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்களிடம் கொடுப்பதை நான் கண்டேன். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.177

அத்தியாயம் : 67
5250. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ عَاتَبَنِي أَبُو بَكْرٍ وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأْسُهُ عَلَى فَخِذِي.
பாடம்: 126 ஒருவர் தம் நண்பரிடம் ‘‘இன்றிரவு தாம்பத்திய உறவைத் தொடங்கினீர் களா?” என்று கேட்பதும்,178 ஒருவர் தம் புதல்வியைக் கண்டிக்கும்போது இடுப்பில் குத்துவதும்
5250. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள் என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைக் கண்டித்தார்கள். என் இடுப்பில் தமது கரத்தால் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது மடியில் தலைவைத்துப் படுத்திருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது.179

அத்தியாயம் : 67
5251.
பாடம்: 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர் களானால், அவர்களுடைய ‘இத்தா’விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, ‘இத்தா’வைக் கணக்கிட்டுவாருங்கள் (65:1) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஹ்ஸூ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) ‘அஹ்ஸய்னாஹு’ எனும் சொல்லுக்கு ‘அதை நாம் கணக்கிட்டு மனனமிட்டோம்’ என்பது பொருள். ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமல் (மாதவிடாய் போன்றவற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கின்ற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) ‘தலாக்குஸ் ஸுன்னா’ ஆகும்.2
5251. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.

ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்.

பிறகு அவர் நாடினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் நாடினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும்.

(மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2:228ஆவது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தா’ காலத்தைக் கணக்கிட்டுக்கொள்வ தற்கு ஏற்ற) காலகட்டமாகும்” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் :
5252. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، قَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" لِيُرَاجِعْهَا "". قُلْتُ تُحْتَسَبُ قَالَ "" فَمَهْ "". وَعَنْ قَتَادَةَ عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ "" مُرْهُ فَلْيُرَاجِعْهَا "". قُلْتُ تُحْتَسَبُ قَالَ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ.
பாடம்: 2 மாதவிடாயிலிருக்கும் பெண்ணுக்கு மணவிலக்கு அளிக்கப்பட்டாலும் அந்த மணவிலக்கு நிகழ்ந்ததாகவே கருதப்படும்.4
5252. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, இது குறித்து (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார் கள்:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘(தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன?” என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில் (பின்வருமாறு) காணப்படுகிறது:

நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு நீங்கள் கட்டளையிடுங்கள்” என்று கூறினார்கள்.

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘(மாதவிடாய்ப் பருவத்தில்) செய்யப்பட்ட இந்த மணவிலக்கு) மணவிலக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 68