521. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهْوَ بِالْعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " بِهَذَا أُمِرْتُ ". فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ اعْلَمْ مَا تُحَدِّثُ أَوَإِنَّ جِبْرِيلَ هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقْتَ الصَّلاَةِ. قَالَ عُرْوَةُ كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ.
பாடம் : 1 தொழுகையின் சிறப்பும் அதன் நேரங்களும் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாகத் தொழுகையானது, இறைநம்பிக்கையாளர்கள்மீது குறித்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். (4:103) (‘குறித்த நேரம்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘மவ்கூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இதற்கு ‘அல்லாஹ்வால்) நேரம் குறிக்கப்பட்டது’ என்பது பொருளாகும். இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே அந்த நேரங்களை வரையறுத்துள்ளான்.
521. இப்னு ஷிஹாப் முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(வலீத் பின் அப்தில் ம-க்கின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகை யைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் வந்த உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:

(முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியில்) இராக் நாட்டில் (‘கூஃபா’ நகரின் ஆளுநராக) இருந்த முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்தி விட்டார்கள்.

அப்போது அவர்களிடம் அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் வந்து, “ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்), முஃகீராவே? (தொழுகை கடமையாக்கப்பட்ட ‘இஸ்ரா’ இரவுக்கு அடுத்த நாள் வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்து தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு (இரண்டாவது முறை) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு (மூன்றாவது முறை) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள்.

பிறகு (நான்காவதாக) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு (ஐந்தாவதாக) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவ்வாறே) தொழுதார்கள். (ஐங்காலத் தொழுகையையும் முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘இவ்வாறே (ஒவ்வொரு நாளும் தொழ வேண்டுமென) நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்’ என்று (கூறியதெல்லாம்) தாங்கள் அறிந்திருக்கவில்லையா, என்ன?” என்று கேட்டார்கள்.

(இதைச் செவியுற்ற ஆளுநர்) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதை யோசித்துக்கொள்ளுங்கள், உர்வா! ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகை யின் நேரத்தைக் காட்டினார்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “(ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீ மஸ்உத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்புச்செய்வார்கள்” என்று பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 9
522. قَالَ عُرْوَةُ وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ، وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ.
பாடம் : 1 தொழுகையின் சிறப்பும் அதன் நேரங்களும் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாகத் தொழுகையானது, இறைநம்பிக்கையாளர்கள்மீது குறித்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். (4:103) (‘குறித்த நேரம்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘மவ்கூத்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இதற்கு ‘அல்லாஹ்வால்) நேரம் குறிக்கப்பட்டது’ என்பது பொருளாகும். இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே அந்த நேரங்களை வரையறுத்துள்ளான்.
522. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது அறையி-ருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.

அத்தியாயம் : 9
523. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ ـ هُوَ ابْنُ عَبَّادٍ ـ عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا إِنَّا مِنْ هَذَا الْحَىِّ مِنْ رَبِيعَةَ، وَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِشَىْءٍ نَأْخُذْهُ عَنْكَ، وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا. فَقَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانِ بِاللَّهِ ـ ثُمَّ فَسَّرَهَا لَهُمْ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا إِلَىَّ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُقَيَّرِ وَالنَّقِيرِ "".
பாடம் : 2 “நீங்கள் அவன் பக்கமே (பாவ மன்னிப்புக் கோரி) திரும்பியவர் களாக இருங்கள்; அவனை அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள்; தொழுகையையும் கடைப்பிடி யுங்கள்; இணைவைப்போரில் உள்ளவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்” (30:31) எனும் இறைவசனம்.
523. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அப்துல் கைஸ்’ குலத்தாரின் தூதுக்குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், “(அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் ‘ரபீஆ’ குலத்தாரில் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தார் ஆவோம். (முளர் குலத்து இறைமறுப்பாளர்கள் நாம் சந்திக்கத் தடையாக உள்ளனர். போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, (தெளிவான) ஆணை யொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள். அதை உங்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்வோம்; எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களையும் அதன்பால் அழைப்போம்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிடுகிறேன்; நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமெனத் தடைவிதிக்கிறேன்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது -அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிகூறுவது- தொழுகையைக் கடைப்பிடிப்பது, ஸகாத் வழங்குவது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்தி-ருந்து ஐந்திலொரு பங்கை (இறைவனுக்காக) என்னிடம் செலுத்துவது ஆகியவைதான் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள்.

மேலும், (மது ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்படும்) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்” என்று கூறினார்கள்.2

அத்தியாயம் : 9
524. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا قَيْسٌ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 3 தொழுகையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி அளிப்பது
524. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையைக் கடைப் பிடிப்பதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்-முக்கும் நலம் நாடுவ தாகவும் உறுதிமொழி அளித்தேன்.

அத்தியாயம் : 9
525. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، قَالَ سَمِعْتُ حُذَيْفَةَ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ ـ رضى الله عنه ـ فَقَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ قُلْتُ أَنَا، كَمَا قَالَهُ. قَالَ إِنَّكَ عَلَيْهِ ـ أَوْ عَلَيْهَا ـ لَجَرِيءٌ. قُلْتُ "" فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالأَمْرُ وَالنَّهْىُ "". قَالَ لَيْسَ هَذَا أُرِيدُ، وَلَكِنِ الْفِتْنَةُ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ. قَالَ لَيْسَ عَلَيْكَ مِنْهَا بَأْسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا. قَالَ أَيُكْسَرُ أَمْ يُفْتَحُ قَالَ يُكْسَرُ. قَالَ إِذًا لاَ يُغْلَقَ أَبَدًا. قُلْنَا أَكَانَ عُمَرُ يَعْلَمُ الْبَابَ قَالَ نَعَمْ، كَمَا أَنَّ دُونَ الْغَدِ اللَّيْلَةَ، إِنِّي حَدَّثْتُهُ بِحَدِيثٍ لَيْسَ بِالأَغَالِيطِ. فَهِبْنَا أَنْ نَسْأَلَ حُذَيْفَةَ، فَأَمَرْنَا مَسْرُوقًا فَسَأَلَهُ فَقَالَ الْبَابُ عُمَرُ.
பாடம் : 4 தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
525. ஹுதைஃபா பின் அல்யமான்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும்) ‘ஃபித்னா’ (சோதனை அல்லது குழப்பம்) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கி றார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன்.

உமர் (ரலி) அவர்கள், “(அதைக் கூறுங்கள்) நீங்கள்தான் ‘நபி (ஸல்) அவர்களிடம்’ அல்லது ‘(நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றைப் பற்றி’ துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக்கூடியவராய்) இருந்தீர்கள்” என்று சொன்னார்கள்.

நான், “ஒரு மனிதன் (இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு) தன் குடும்பத்தார், சொத்து, பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ‘ஃபித்னா’வில் (சோதனையில்) ஆழ்த்தப்படுவார். அப்போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு தீமையி-ருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றேன்.

உமர் (ரலி) அவர்கள், “நான் (‘சோதனை’ எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதை(ப் பற்றி)க் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று, அடுக்கடுக்காக ஏற்படக் கூடிய (நபி (ஸல்) அவர்களால் முன்னேறிவிப்புச் செய்யப்பட்ட ‘குழப்பம்’ எனும் பொருள் கொண்ட) ‘ஃபித்னா’வைப் பற்றியே கேட்கிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு நான், “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அவற்றுக்கும் இடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது” என்று கூறினேன்.

“அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா” என்று கேட்டார் கள். நான், “இல்லை, அது உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். அதற்கு உமர்

(ரலி) அவர்கள், “அவ்வாறாயின், (அது உடைக்கப்பட்டுவிட்டால் பின்னர் மறுமை நாள்வரை) ஒருபோதும் அது மூடப் படாது” என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

நாங்கள் (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம்), “உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?” என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “ஆம்; பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். (ஏனெனில்,) பொய்கள் கலவாத செய்தியையே அவருக்கு நான் அறிவித்திருந்தேன்” என்று பதிலளித்தார்கள்.

அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களை (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் அது குறித்து)க் கேட்கச் சொன்னோம். மஸ்ரூக் அவர்கள் கேட்டதற்கு “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்தான்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 9
526. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَجُلاً، أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ، فَأَنْزَلَ اللَّهُ {أَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ}. فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ أَلِي هَذَا قَالَ "" لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ "".
பாடம் : 4 தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
526. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு (அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், “(நபியே!) பக-ன் இரு முனைகளிலும் இரவில் சில பகுதிகளிலும் தொழுகையைப் கடைப் பிடிப்பீராக. நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடும்” (11:114) எனும் வசனத்தை அருளினான்.

அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா, அல்லாஹ்வின் தூதரே! (அல்லது அனை வருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 9
527. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ، هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ "" الصَّلاَةُ عَلَى وَقْتِهَا "". قَالَ ثُمَّ أَىُّ قَالَ "" ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ "". قَالَ ثُمَّ أَىُّ قَالَ "" الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "". قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
பாடம் : 5 தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதன் சிறப்பு
527. வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி சைகை செய்தவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் தெரிவித்தார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்று பதிலளித்தார்கள்.

இ(ம் மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால், எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலளித்திருப்பார்கள்.

அத்தியாயம் : 9
528. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ، يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ "". قَالُوا لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا. قَالَ "" فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهَا الْخَطَايَا "".
பாடம் : 6 ஐவேளைத் தொழுகைகள் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
528. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவரது (வீட்டு) வாச-ல் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். “அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள்.

“இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் குற்றங்களைக் களைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 9
529. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ غَيْلاَنَ، عَنْ أَنَسٍ، قَالَ مَا أَعْرِفُ شَيْئًا مِمَّا كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم. قِيلَ الصَّلاَةُ. قَالَ أَلَيْسَ ضَيَّعْتُمْ مَا ضَيَّعْتُمْ فِيهَا.
பாடம் : 7 உரிய நேரத்தில் தொழாமல் தொழுகையைப் பாழாக்குவது
529. ஃகைலான் பின் ஜரீர் அல்மஅவலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தவற்றில் எதையும் (இன்று) என்னால் காண முடியவில்லை” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “தொழுகை இருக்கிறதே” என்று (அவர்களிடம்) கேட்கப்பட்டது.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “(உரிய நேரத்தில் நிறைவேற்றாமல்) தொழுகையைக்கூட நீங்கள் வீணாக்கிவிடவில்லையா?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 9
530. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ وَاصِلٍ أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي رَوَّادٍ، أَخِي عَبْدِ الْعَزِيزِ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ دَخَلْتُ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ بِدِمَشْقَ وَهُوَ يَبْكِي فَقُلْتُ مَا يُبْكِيكَ فَقَالَ لاَ أَعْرِفُ شَيْئًا مِمَّا أَدْرَكْتُ إِلاَّ هَذِهِ الصَّلاَةَ، وَهَذِهِ الصَّلاَةُ قَدْ ضُيِّعَتْ. وَقَالَ بَكْرٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ أَبِي رَوَّادٍ نَحْوَهُ.
பாடம் : 7 உரிய நேரத்தில் தொழாமல் தொழுகையைப் பாழாக்குவது
530. முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரி-ருந்த அனஸ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(நபி (ஸல்) அவர்களது காலத் தில் நடைமுறைப்படுத்தப்பட்டு) நான் கண்டவற்றில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் (முறையாக நடை முறைப்படுத்தப்படுவதை இன்று) என்னால் காண முடியவில்லை; இந்தத் தொழுகை கூட (உரிய நேரத்தில் நிறைவேற்றப் படாமல்) வீணடிக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 9
531. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى يُنَاجِي رَبَّهُ فَلاَ يَتْفِلَنَّ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى "". وَقَالَ سَعِيدٌ عَنْ قَتَادَةَ لاَ يَتْفِلُ قُدَّامَهُ أَوْ بَيْنَ يَدَيْهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ. وَقَالَ شُعْبَةُ لاَ يَبْزُقُ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ. وَقَالَ حُمَيْدٌ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لاَ يَبْزُقْ فِي الْقِبْلَةِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ "".
பாடம் : 8 தொழுதுகொண்டிருப்பவர் வல் லமையும் மாண்பும் மிக்க இறை வனுடன் இரகசியமாக உரை யாடுகிறார்.
531. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுதுகொண்டிருக்கையில் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, (தொழுதுகொண்டிருக்கும்போது எச்சில் வந்துவிட்டால்) அவர் தமக்கு வலப் பக்கத்தில் உமிழ வேண்டாம். மாறாக, தமது இடப் பாதத்திற்குக் கீழே உமிழட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமாகத் துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமோ, வலப் பக்கமோ துப்பலாகாது. எனினும், தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக!” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) காணப் படுகிறது.

ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கிப்லா (கஅபா) திசையில் அவர் துப்பலாகாது; தமக்கு வலப் புறமாகவும் துப்பலாகாது. எனினும், அவர் தமக்கு இடப் பக்கமோ அல்லது தமது பாதத்துக்குக் கீழேயோ துப்பட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.3


அத்தியாயம் : 9
532. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ ذِرَاعَيْهِ كَالْكَلْبِ، وَإِذَا بَزَقَ فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ "".
பாடம் : 8 தொழுதுகொண்டிருப்பவர் வல் லமையும் மாண்பும் மிக்க இறை வனுடன் இரகசியமாக உரை யாடுகிறார்.
532. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது. (தொழும்போது எச்சில் வந்துவிட்டால்) தமக்கு முன்புறமோ, வலப் புறமோ துப்பலாகாது. ஏனெனில், தொழுதுகொண்டிருப்பவர், தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடிக் கொண்டிருக்கிறார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 9
533. حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ، قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ حَدَّثَنَا الأَعْرَجُ عَبْدُ الرَّحْمَنِ، وَغَيْرُهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ.وَنَافِعٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ".
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் கடுமையாகும்போது, வெப்பம் தணியும்வரை (லுஹ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமை யான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச் சால் உண்டாகிறது.5

இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
535. حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، سَمِعَ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ أَذَّنَ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَالَ "" أَبْرِدْ أَبْرِدْ ـ أَوْ قَالَ ـ انْتَظِرِ انْتَظِرْ "". وَقَالَ "" شِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ "". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ.
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
535. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தோம். அப்போது) நபி (ஸல்) அவர்களின் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின் பிலால் (ரலி) அவர்கள்) லுஹ்ர் தொழுகைக்கு ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வெப்பம் தணியட்டும்; வெப்பம் தணியட் டும்’ அல்லது ‘பொறுப்பீராக; பொறுப்பீராக’ என்று கூறிவிட்டு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டா கிறது. வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

(எனவே நாங்கள் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்). எந்த அளவுக்கென்றால் மணல் மேடுகளிலிருந்து நிழல் படிவதை நாங்கள் பார்த்தோம்.


அத்தியாயம் : 9
536. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ".
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் கடுமையாகிவிடும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
537. وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا. فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ .
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
537. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தன் இறைவனிடம், “இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே!” என முறையிட்டது. ஆகவே, அதற்கு அல்லாஹ் (ஓய்வு தரும் வகை யில்) குளிர் காலத்தில் ஒரு மூச்சும், கோடை காலத்தில் மற்றொரு மூச்சுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதி யளித்தான்.

அவைதான் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமை யான குளிரும் ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
538. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَبْرِدُوا بِالظُّهْرِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ "". تَابَعَهُ سُفْيَانُ وَيَحْيَى وَأَبُو عَوَانَةَ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹ்ர் தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 9
539. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُهَاجِرٌ أَبُو الْحَسَنِ، مَوْلًى لِبَنِي تَيْمِ اللَّهِ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبْرِدْ "". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ "". وَقَالَ ابْنُ عَبَّاسٍ تَتَفَيَّأُ تَتَمَيَّلُ.
பாடம் : 10 பயணத்தின்போது வெப்பம் தணிந்தபின் லுஹ்ரை தொழுவது
539. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்), லுஹ்ர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்டபோது, (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (சிறிது நேரம் கழித்து) மீண்டும் அவர் ‘பாங்கு’ சொல்ல முற்பட்டபோது அவரிடம், “வெப்பம் தணியட்டும்” என்று மணல் மேடுகளிலி ருந்து நிழல் படிவதை நாங்கள் பார்க்கும் வரை (இவ்வாறு) கூறினார்கள்.

பிறகு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது. எனவே, வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள்” என்று சொன்னார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘நிழல் படிதல்’ (‘தத்தஃபய்யஉ’) என்றால், ‘நிழல் சாய்தல்’ (தத்தமய்யலு) என்று பொருள்.

அத்தியாயம் : 9
540. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ، فَقَامَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، فَذَكَرَ أَنَّ فِيهَا أُمُورًا عِظَامًا ثُمَّ قَالَ "" مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَ عَنْ شَىْءٍ فَلْيَسْأَلْ، فَلاَ تَسْأَلُونِي عَنْ شَىْءٍ إِلاَّ أَخْبَرْتُكُمْ مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا "". فَأَكْثَرَ النَّاسُ فِي الْبُكَاءِ، وَأَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ السَّهْمِيُّ فَقَالَ مَنْ أَبِي قَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا. فَسَكَتَ ثُمَّ قَالَ "" عُرِضَتْ عَلَىَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا فِي عُرْضِ هَذَا الْحَائِطِ فَلَمْ أَرَ كَالْخَيْرِ وَالشَّرِّ "".
பாடம் : 11 உச்சிப்பொழுதுக்குப் பிறகே ‘லுஹ்ர்’ நேரம் (ஆரம்பமாகிறது.) (கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாதபோது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.6
540. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த (நண்பகலின்)போது (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்) தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள். அந்நாளில் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் நிகழும் என்று குறிப்பிட்டார்கள்.

பிறகு (அவர்கள் விரும்பாத பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்டபோது), “(இன்று) யார் எது குறித்துக் கேட்க விரும்பினாலும் கேட்கட்டும். இந்த இடத்தில் நான் இருக்கும்வரை எது குறித்து நீங்கள் என்னிடம் கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன்” என்று (கோபத்துடன்) கூறினார்கள். எனவே, மக்கள் அதிகமாக அழலாயினர். நபி (ஸல்) அவர்களோ, “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறிக்கொண்டி ருந்தார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஹுதாஃபாதான் உம்முடைய தந்தை” என்று பதிலளித்துவிட்டு மீண்டும், “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறலானார்கள்.

(நபியவர்களின் கோபத்தை அறிந்துகொண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள், “சற்றுமுன் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இதோ இந்தச் சுவரில் சொர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சியைப் போன்று) நன்மையிலும் தீமையிலும் வேறெந்தக் காட்சியையும் நான் (ஒருபோதும்) கண்டதில்லை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 9