5203. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو يَعْفُورٍ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ أَبِي الضُّحَى فَقَالَ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، قَالَ أَصْبَحْنَا يَوْمًا وَنِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْكِينَ، عِنْدَ كُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ أَهْلُهَا، فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ، فَإِذَا هُوَ مَلآنُ مِنَ النَّاسِ فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَصَعِدَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ فِي غُرْفَةٍ لَهُ، فَسَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ سَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ سَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، فَنَادَاهُ فَدَخَلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَطَلَّقْتَ نِسَاءَكَ فَقَالَ "" لاَ وَلَكِنْ آلَيْتُ مِنْهُنَّ شَهْرًا "". فَمَكَثَ تِسْعًا وَعِشْرِينَ، ثُمَّ دَخَلَ عَلَى نِسَائِهِ.
பாடம்: 93 நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, துணைவியரின் இல்லம் அல்லாத வேறு இடத்தில் இருந்தது நபி (ஸல்) அவர்களிடமிருந்து முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் (மனைவியரைவிட்டு விலகியிருப்பதானால் அவர்களது) வீட்டுக்குள்தான் விலகியிருக்க வேண்டுமெனக் காணப்படுகிறது. ஆனால், முதல் அறிவிப்பே சரியானதாகும்.138
5203. அபூயஅஃபூர் அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக்கொண்டி ருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள்:

ஒருநாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுதுகொண்டி ருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தாரும் இருந்தனர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச் சென்றார்கள்.

(நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) சொன்னார்கள். ஆனால், யாரும் உமருக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும் ‘சலாம்’ சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் ‘சலாம்’ சொல்லவில்லை. பிறகும் (மூன்றாம் முறையாக) ‘சலாம்’ சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை.

அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘தங்கள் துணைவி யரை (தாங்கள்) ‘மணவிலக்குச் செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்து விட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்.

அத்தியாயம் : 67
5204. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ، ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ "".
பாடம்: 94 மனைவியரை அடிப்பது வெறுக்கப்பட்ட செயலாகும். ‘‘(அறிவுரை கூறி, படுக்கையில் ஒதுக்கி வைத்தபிறகும் திருந்தாதபோது உங்கள் துணைவியரான) அவர்களை அடியுங்கள்” எனும் (4:34ஆவது) வசனத்தொடர். இதன் பொருளாவது: வலி ஏற்படாதவாறு (காயமின்றி இலேசாக) அடியுங்கள்.
5204. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுட னேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.140

அத்தியாயம் : 67
5205. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ ـ هُوَ ابْنُ مُسْلِمٍ ـ عَنْ صَفِيَّةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ زَوَّجَتِ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا، فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا. فَقَالَ "" لاَ إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلاَتُ "".
பாடம்: 95 ஒரு பெண் பாவமான காரியத்தில் தன் கணவருக்குக் கீழ்ப்படிய லாகாது.
5205. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவருடைய மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்துவிட்டு, ‘‘தம் மகளின் கணவர், அவளது தலையில் ஒட்டுமுடி வைத்துவிடுமாறு என்னைப் பணிக்கிறார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்! (ஒட்டுமுடி வைத்துவிடாதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 67
5206. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} قَالَتْ هِيَ الْمَرْأَةُ تَكُونُ عِنْدَ الرَّجُلِ، لاَ يَسْتَكْثِرُ مِنْهَا فَيُرِيدُ طَلاَقَهَا، وَيَتَزَوَّجُ غَيْرَهَا، تَقُولُ لَهُ أَمْسِكْنِي وَلاَ تُطَلِّقْنِي، ثُمَّ تَزَوَّجْ غَيْرِي، فَأَنْتَ فِي حِلٍّ مِنَ النَّفَقَةِ عَلَىَّ وَالْقِسْمَةِ لِي، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَصَّالَحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ}
பாடம் : 96 ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ள மாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ் பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை (எனும் 4:128ஆவது இறைவசனம்)
5206. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் ஒருவருடைய மனைவியாக இருந்துவருகிறாள். (அவளது முதுமை, நோய் போன்ற காரணத்தால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை மணவிலக்குச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் ‘‘என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை மணவிலக்குச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும் இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளலாம்” என்று தம் கணவரிடம் கூறுகிறாள்.

இதையே இவ்வசனம் கூறுகின்றது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை. (4:128)141

அத்தியாயம் : 67
5207. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 97 ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5207. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துவந்தோம்.


அத்தியாயம் : 67
5208. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرًا، رضى الله عنه قَالَ كُنَّا نَعْزِلُ وَالْقُرْآنُ يَنْزِلُ.
பாடம்: 97 ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5208. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.


அத்தியாயம் : 67
5209. وَعَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْقُرْآنُ يَنْزِلُ.
பாடம்: 97 ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5209. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களது காலத்தில்)குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.


அத்தியாயம் : 67
5210. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ أَصَبْنَا سَبْيًا فَكُنَّا نَعْزِلُ فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَوَإِنَّكُمْ لَتَفْعَلُونَ قَالَهَا ثَلاَثًا مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلاَّ هِيَ كَائِنَةٌ "".
பாடம்: 97 ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5210. அபூசயீத் அல்குத்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க் கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) ‘அஸ்ல்’ செய்துகொள்ளவும் விரும்பினோம். (அதுகுறித்து) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம்.

அப்போது அவர்கள் ‘‘(இந்த அஸ்லை) நீங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, ‘‘மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.143

அத்தியாயம் : 67
5211. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَطَارَتِ الْقُرْعَةُ لِعَائِشَةَ وَحَفْصَةَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ بِاللَّيْلِ سَارَ مَعَ عَائِشَةَ يَتَحَدَّثُ، فَقَالَتْ حَفْصَةُ أَلاَ تَرْكَبِينَ اللَّيْلَةَ بَعِيرِي وَأَرْكَبُ بَعِيرَكِ تَنْظُرِينَ وَأَنْظُرُ، فَقَالَتْ بَلَى فَرَكِبَتْ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى جَمَلِ عَائِشَةَ وَعَلَيْهِ حَفْصَةُ فَسَلَّمَ عَلَيْهَا ثُمَّ سَارَ حَتَّى نَزَلُوا وَافْتَقَدَتْهُ عَائِشَةُ، فَلَمَّا نَزَلُوا جَعَلَتْ رِجْلَيْهَا بَيْنَ الإِذْخِرِ وَتَقُولُ يَا رَبِّ سَلِّطْ عَلَىَّ عَقْرَبًا أَوْ حَيَّةً تَلْدَغُنِي، وَلاَ أَسْتَطِيعُ أَنْ أَقُولَ لَهُ شَيْئًا.
பாடம்: 98 கணவன் பயணம் செய்யவிரும்பும் போது தம் துணைவியரிடையே (யாரை அழைத்துச் செல்வது என்பதைக்) குலுக்கல் முறையில் முடிவு செய்வது
5211. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவி யரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) எனது பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒருநாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘‘இந்த இரவு நீங்கள் எனது ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களது ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். ஆகவே, (நாங்களிருவரும் ஒருவர் மற்றவரது ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) எனது ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) சொன்னார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை) நான் தேடினேன்.

அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் எனது இரு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என்மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அத்தியாயம் : 67
5212. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلُ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ، وَهَبَتْ، يَوْمَهَا لِعَائِشَةَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْسِمُ لِعَائِشَةَ بِيَوْمِهَا وَيَوْمِ سَوْدَةَ.
பாடம்: 99 ஒரு பெண் தன் கணவரிடமிருந்து தனக்குக் கிடைக்கும் நாளை தன் சக்களத்திக்காக விட்டுக் கொடுப்பதும், அது எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதும்
5212. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள்) தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக (விட்டு)க் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும் ‘சவ்தா’ அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கிவந்தார்கள்.144

அத்தியாயம் : 67
5213. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ وَلَوْ شِئْتُ أَنْ أَقُولَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَكِنْ قَالَ السُّنَّةُ إِذَا تَزَوَّجَ الْبِكْرَ أَقَامَ عِنْدَهَا سَبْعًا، وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ أَقَامَ عِنْدَهَا ثَلاَثًا.
பாடம்: 100 மனைவியரிடையே நீதி செலுத்துவது (அல்லாஹ் கூறுகின்றான்:) பல மனைவியரிடையே நீதிசெலுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டாலும் ஒருபோதும் உங்களால் அது முடியாது. அதற்காக (ஒரே மனைவியிடம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விட்டுவிடாதீர்கள்... அல்லாஹ் பரந்த ஆற்றலுடையவனும் அறிவார்ந்தவனும் ஆவான். (4:129, 130)145 பாடம்: 101 கன்னிகழிந்த பெண்(ணான மனைவி) இருக்க, கன்னிப் பெண்ணை ஒருவர் மணந் தால்...?
5213. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாட்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாட்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் (காலித், அல்லது அபூகிலாபா) கூறுகிறார்: இதை நபி (ஸல்) அவர்களே கூறினார்கள் என்று நான் சொன்னால் அது தவறாகாது; எனினும், அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதன்படி ‘நபிவழி’ என்று கூறி யுள்ளேன்.

அத்தியாயம் : 67
5214. حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا أَيُّوبُ، وَخَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ مِنَ السُّنَّةِ إِذَا تَزَوَّجَ الرَّجُلُ الْبِكْرَ عَلَى الثَّيِّبِ أَقَامَ عِنْدَهَا سَبْعًا وَقَسَمَ، وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ عَلَى الْبِكْرِ أَقَامَ عِنْدَهَا ثَلاَثًا ثُمَّ قَسَمَ. قَالَ أَبُو قِلاَبَةَ وَلَوْ شِئْتُ لَقُلْتُ إِنَّ أَنَسًا رَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ أَيُّوبَ وَخَالِدٍ قَالَ خَالِدٌ وَلَوْ شِئْتُ قُلْتُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 102 கன்னிப் பெண்(ணான மனைவி) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை ஒருவர் மணந்தால்...?
5214. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் கன்னிகழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால் முதலில் கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவார். பிறகு (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார்.

ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னிகழிந்த பெண்ணிடம் மூன்று நாட்கள் தங்கிவிட்டு பிறகுதான் (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார். இதுவே நபிவழியாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்:

நான் நினைத்தால், இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று சொல்ல முடியும். (அது தவறாகாது. ஆயினும், முறைப்படி அனஸ் அவர்கள் கூறிய பிரகாரமே அறிவித்துள்ளேன்.)

மற்றோர் அறிவிப்பில், காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நினைத்தால் இதை நபி (ஸல்) அவர்களே கூறினார்கள் என்று சொல்ல முடியும்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 67
5215. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُمْ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي اللَّيْلَةِ الْوَاحِدَةِ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ.
பாடம்: 103 ஒரே குளியலில் ஒருவர் தம் மனைவியர் அனைவரிடமும் சென்று வருவது146
5215. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் எல்லா துணைவியரிடமும் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். அப்போது அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்.147

அத்தியாயம் : 67
5216. حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا انْصَرَفَ مِنَ الْعَصْرِ دَخَلَ عَلَى نِسَائِهِ، فَيَدْنُو مِنْ إِحْدَاهُنَّ، فَدَخَلَ عَلَى حَفْصَةَ، فَاحْتَبَسَ أَكْثَرَ مَا كَانَ يَحْتَبِسُ.
பாடம்: 104 ஒருவர் தம் துணைவியரைச் சந்திக்க பகலில் செல்வது
5216. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள்.

அத்தியாயம் : 67
5217. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسْأَلُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ "" أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا "". يُرِيدُ يَوْمَ عَائِشَةَ، فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكُونُ حَيْثُ شَاءَ، فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ حَتَّى مَاتَ عِنْدَهَا. قَالَتْ عَائِشَةُ فَمَاتَ فِي الْيَوْمِ الَّذِي كَانَ يَدُورُ عَلَىَّ فِيهِ فِي بَيْتِي، فَقَبَضَهُ اللَّهُ، وَإِنَّ رَأْسَهُ لَبَيْنَ نَحْرِي وَسَحْرِي، وَخَالَطَ رِيقُهُ رِيقِي.
பாடம்: 105 ஒருவர் தம் துணைவியரில் குறிப் பிட்ட ஒருவரது இல்லத்தில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற (மற்ற வர்களிடம்) அனுமதி கோரி, அவர்களும் அவருக்கு அனுமதி யளித்தால் (அது செல்லும்).
5217. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கிக்கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியளித்தனர்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை எனது வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கிவந்தார்களோ அந்த நாளில்தான் என் வீட்டில் வைத்து இறந்தார்கள். எனது நெஞ்சுக்கும் நுரையீரலுள்ள பகுதிக்கும் இடையே அவர்களது தலை இருந்தபோது, (மிஸ்வாக் குச்சியை என் வாயால் கடித்து மென்மைப்படுத்திக் கொடுத்திருந்ததால்) அவர்களின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான்.148

அத்தியாயம் : 67
5218. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنهم ـ دَخَلَ عَلَى حَفْصَةَ فَقَالَ يَا بُنَيَّةِ لاَ يَغُرَّنَّكِ هَذِهِ الَّتِي أَعْجَبَهَا حُسْنُهَا حُبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاهَا ـ يُرِيدُ عَائِشَةَ ـ فَقَصَصْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَبَسَّمَ.
பாடம்: 106 ஒருவர் தம் துணைவியரில் ஒருவரை மற்றவரைவிட அதிகமாக நேசிப்பது
5218. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் அண்டை வீட்டு அன்சாரீ நண்பர், நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, என்னருமை மகளே! தம் அழகும், தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர் -ஆயிஷா- (நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக்கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே!” என்று கூறினேன்.

பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்.149

அத்தியாயம் : 67
5219. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، حَدَّثَتْنِي فَاطِمَةُ، عَنْ أَسْمَاءَ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي ضَرَّةً، فَهَلْ عَلَىَّ جُنَاحٌ إِنْ تَشَبَّعْتُ مِنْ زَوْجِي غَيْرَ الَّذِي يُعْطِينِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَىْ زُورٍ "".
பாடம்: 107 தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக்கொள்வதும், தடை செய்யப்பட்ட சக்களத்திப் பெருமையும்
5219. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொண்டால், அது குற்றமாகுமா?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போலியான மேல் மற்றும் கீழ் ஆடைகளை) அணிந்துகொண்டவர் போலாவார்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 67
5220. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ "".
பாடம்: 108 ரோஷம் கொள்வது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விடவும் ரோஷக்காரன்” என்று சொன் னார்கள்.
5220. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைவிட அதிக ரோஷ முள்ளவர் யாருமில்லை. அதனால்தான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.150


அத்தியாயம் : 67
5221. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَا أُمَّةَ مُحَمَّدٍ مَا أَحَدٌ أَغْيَرَ مِنَ اللَّهِ أَنْ يَرَى عَبْدَهُ أَوْ أَمَتَهُ تَزْنِي يَا أُمَّةَ مُحَمَّدٍ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا "".
பாடம்: 108 ரோஷம் கொள்வது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விடவும் ரோஷக்காரன்” என்று சொன் னார்கள்.
5221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மதின் சமுதாயமே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.

முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.151


அத்தியாயம் : 67
5222. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ أُمِّهِ، أَسْمَاءَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ شَىْءَ أَغْيَرُ مِنَ اللَّهِ "".
பாடம்: 108 ரோஷம் கொள்வது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னை விடவும் ரோஷக்காரன்” என்று சொன் னார்கள்.
5222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை.

இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 67