5193. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ أَنْ تَجِيءَ لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ "".
பாடம்: 86
கணவனுடன் படுக்கையை(ப் பகிர்ந்துகொள்வதை) வெறுத்து ஒரு பெண் (தனியாக) இரவைக் கழித்தால்...?
5193. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்துவிட்டால், அவளைப் பொழுது விடியும்வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.129
அத்தியாயம் : 67

5194. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا بَاتَتِ الْمَرْأَةُ مُهَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تَرْجِعَ "".
பாடம்: 86
கணவனுடன் படுக்கையை(ப் பகிர்ந்துகொள்வதை) வெறுத்து ஒரு பெண் (தனியாக) இரவைக் கழித்தால்...?
5194. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவருடன் படுக்கை யை(ப் பகிர்ந்துகொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும்வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5195. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلاَّ بِإِذْنِهِ، وَلاَ تَأْذَنَ فِي بَيْتِهِ إِلاَّ بِإِذْنِهِ، وَمَا أَنْفَقَتْ مِنْ نَفَقَةٍ عَنْ غَيْرِ أَمْرِهِ فَإِنَّهُ يُؤَدَّى إِلَيْهِ شَطْرُهُ "". وَرَوَاهُ أَبُو الزِّنَادِ أَيْضًا عَنْ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ فِي الصَّوْمِ.
பாடம்: 87
ஒரு பெண் தன் கணவரின் இசைவின்றி யாரையும் அவரது இல்லத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
5195. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக் கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி கணவருக்கும் கிடைக்கும்.130
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸிலுள்ள (கூடுதல்) நோன்பு பற்றிய தகவல் (மட்டும்) மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

5196. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قُمْتُ عَلَى باب الْجَنَّةِ فَكَانَ عَامَّةَ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينُ، وَأَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ، غَيْرَ أَنَّ أَصْحَابَ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَقُمْتُ عَلَى باب النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ "".
பாடம்: 88
5196. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர் களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப் பட்டோர் ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5197. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ مَعَهُ، فَقَامَ قِيَامًا طَوِيلاً نَحْوًا مِنْ سُورَةِ الْبَقَرَةِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلاً وَهْوَ دُونَ الْقِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً وَهْوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَامَ فَقَامَ قِيَامًا طَوِيلاً وَهْوَ دُونَ الْقِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً وَهْوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلاً وَهْوَ دُونَ الْقِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً وَهْوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ، ثُمَّ انْصَرَفَ، وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَقَالَ "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ هَذَا، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ. فَقَالَ "" إِنِّي رَأَيْتُ الْجَنَّةَ ـ أَوْ أُرِيتُ الْجَنَّةَ ـ فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا وَلَوْ أَخَذْتُهُ لأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا، وَرَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَ كَالْيَوْمِ مَنْظَرًا قَطُّ وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ "". قَالُوا لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" بِكُفْرِهِنَّ "". قِيلَ يَكْفُرْنَ بِاللَّهِ قَالَ "" يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، وَلَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ "".
பாடம்: 89
கணவருக்கு மாறு செய்தல்
(கணவர் என்பதைச் சுட்ட மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘அல்அஷீர்’ எனும் சொல்லுக்கு ‘துணைவன்’ என்பது பொருள். (22:13ஆவது இறைவசனத்தின் மூலத்தி லுள்ள இதே சொல்லுக்கு) ‘வாழ்க்கைக் கூட்டாளி’ என்பது பொருள்.
இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.131
5197. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகை) தொழுதார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் தொழுதார்கள். அத்தொழுகையில் ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயம் ஓதுமளவுக்கு வெகுநேரம் நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் (குனிந்து) ‘ருகூஉ’ செய்தார்கள். பின்பு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்து (நிலைக்கு வந்து) நீண்ட நேரம் நின்றார்கள்.
இ(ந்த நிலையான)து, முதலாவது நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள்.
இ(ந்த இரண்டாம் ருகூஉவான)து, முதலாம் ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்தார்கள். பிறகு ‘சஜ்தா’ (சிரவணக்கம்) செய்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து) எழுந்து (நிலையில்) நீண்ட நேரம் நின்றார்கள்.
இ(ந்த நிலையான)து, முந்தைய நிலையைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள்.
இ(ந்த ‘ருகூஉ’வான)து, முந்தைய ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பின்னர் (‘ருகூஉ’விலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முந்தைய நிலையைவிடக் குறைவானதாக இருந்தது.
பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த ‘ருகூஉ’வான)து முந்தைய ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது.
பிறகு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்தார்கள். பின்னர் ‘சஜ்தா’ செய்தார்கள். பிறகு, (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்துவிட்டிருந்த நிலையில் தொழுது முடித்தார்கள்.
பிறகு, ‘‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவரது இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டி ருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (தொழுதுகொண்டிருக்கையில்) ‘சொர்க்கத் தைக் கண்டேன்’ அல்லது ‘சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது’. அதிலிருந்து (பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(த பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள்.
மேலும், நான் (தொழுதுகொண்டி ருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள்.
மக்கள், ‘‘ஏன் (அது?) அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பெண்களின் நிராகரிப்பே காரணம்” என்றார்கள். அப்போது ‘‘பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கி றார்கள்?” என வினவப்பட்டது. அதற்கு ‘‘கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க் கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள்.
காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் ‘உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” எனப் பதிலளித்தார்கள்.132

5198. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ، فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ "". تَابَعَهُ أَيُّوبُ وَسَلْمُ بْنُ زَرِيرٍ.
பாடம்: 89
கணவருக்கு மாறு செய்தல்
(கணவர் என்பதைச் சுட்ட மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘அல்அஷீர்’ எனும் சொல்லுக்கு ‘துணைவன்’ என்பது பொருள். (22:13ஆவது இறைவசனத்தின் மூலத்தி லுள்ள இதே சொல்லுக்கு) ‘வாழ்க்கைக் கூட்டாளி’ என்பது பொருள்.
இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.131
5198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (‘மிஅராஜ்’ விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.
இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.133
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5199. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ "". قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَلاَ تَفْعَلْ، صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا "".
பாடம்: 90
உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.134
5199. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (உண்மைதான்) அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதே! (சிலநாள்) நோன்பு நோற்றுக்கொள். (சிலநாள்) நோன்பை விட்டுவிடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வழிபடு! (சிறிது நேரம்) உறங்கு!
உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு” என்று சொன்னார்கள்.135

5200. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالأَمِيرُ رَاعٍ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ زَوْجِهَا وَوَلَدِهِ، فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம்: 91
ஒரு பெண் தன் கணவரது வீட்டிற் குப் பொறுப்பாளியாவாள்.
5200. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப் பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136

5201. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ آلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نِسَائِهِ شَهْرًا وَقَعَدَ فِي مَشْرُبَةٍ لَهُ فَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ آلَيْتَ عَلَى شَهْرٍ. قَالَ "" إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ "".
பாடம் : 92
‘‘ஆண்கள், பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம், அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களது செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்... நிச்சயமாக அல்லாஹ் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்” எனும் (4:34ஆவது) இறைவசனம்
5201. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரிடம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டுத் தமது மாடி அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள். இருபத்தொன்பதாம் நாள் (அங்கிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது, ‘‘ஒரு மாதம் (துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே! (இன்னும் ஒருநாள் மீதி இருக்கிறதே அதற்குள் வந்துவிட்டீர்களே?)” என்று வினவப்பட்டது. அதற்கு, ‘‘இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள்தான்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.137

5202. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ،. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، أَنَّ عِكْرِمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَخْبَرَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَلَفَ لاَ يَدْخُلُ عَلَى بَعْضِ أَهْلِهِ شَهْرًا، فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا عَلَيْهِنَّ أَوْ رَاحَ فَقِيلَ لَهُ يَا نَبِيَّ اللَّهِ حَلَفْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْهِنَّ شَهْرًا قَالَ "" إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا "".
பாடம்: 93
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, துணைவியரின் இல்லம் அல்லாத வேறு இடத்தில் இருந்தது
நபி (ஸல்) அவர்களிடமிருந்து முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் (மனைவியரைவிட்டு விலகியிருப்பதானால் அவர்களது) வீட்டுக்குள்தான் விலகியிருக்க வேண்டுமெனக் காணப்படுகிறது. ஆனால், முதல் அறிவிப்பே சரியானதாகும்.138
5202. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத் தொன்பதாம் நாள் ‘காலையில்’ அல்லது ‘மாலையில்’ துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர் களே?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.139
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5203. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو يَعْفُورٍ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ أَبِي الضُّحَى فَقَالَ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، قَالَ أَصْبَحْنَا يَوْمًا وَنِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْكِينَ، عِنْدَ كُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ أَهْلُهَا، فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ، فَإِذَا هُوَ مَلآنُ مِنَ النَّاسِ فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَصَعِدَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ فِي غُرْفَةٍ لَهُ، فَسَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ سَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، ثُمَّ سَلَّمَ فَلَمْ يُجِبْهُ أَحَدٌ، فَنَادَاهُ فَدَخَلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَطَلَّقْتَ نِسَاءَكَ فَقَالَ "" لاَ وَلَكِنْ آلَيْتُ مِنْهُنَّ شَهْرًا "". فَمَكَثَ تِسْعًا وَعِشْرِينَ، ثُمَّ دَخَلَ عَلَى نِسَائِهِ.
பாடம்: 93
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, துணைவியரின் இல்லம் அல்லாத வேறு இடத்தில் இருந்தது
நபி (ஸல்) அவர்களிடமிருந்து முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் (மனைவியரைவிட்டு விலகியிருப்பதானால் அவர்களது) வீட்டுக்குள்தான் விலகியிருக்க வேண்டுமெனக் காணப்படுகிறது. ஆனால், முதல் அறிவிப்பே சரியானதாகும்.138
5203. அபூயஅஃபூர் அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக்கொண்டி ருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள்:
ஒருநாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுதுகொண்டி ருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தாரும் இருந்தனர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச் சென்றார்கள்.
(நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) சொன்னார்கள். ஆனால், யாரும் உமருக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும் ‘சலாம்’ சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் ‘சலாம்’ சொல்லவில்லை. பிறகும் (மூன்றாம் முறையாக) ‘சலாம்’ சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை.
அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘தங்கள் துணைவி யரை (தாங்கள்) ‘மணவிலக்குச் செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்து விட்டேன்” என்று பதிலளித்தார்கள்.
அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்.

5204. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ، ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ "".
பாடம்: 94
மனைவியரை அடிப்பது வெறுக்கப்பட்ட செயலாகும்.
‘‘(அறிவுரை கூறி, படுக்கையில் ஒதுக்கி வைத்தபிறகும் திருந்தாதபோது உங்கள் துணைவியரான) அவர்களை அடியுங்கள்” எனும் (4:34ஆவது) வசனத்தொடர்.
இதன் பொருளாவது: வலி ஏற்படாதவாறு (காயமின்றி இலேசாக) அடியுங்கள்.
5204. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுட னேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.140

5205. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ ـ هُوَ ابْنُ مُسْلِمٍ ـ عَنْ صَفِيَّةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ زَوَّجَتِ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا، فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا. فَقَالَ "" لاَ إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلاَتُ "".
பாடம்: 95
ஒரு பெண் பாவமான காரியத்தில் தன் கணவருக்குக் கீழ்ப்படிய லாகாது.
5205. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவருடைய மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்துவிட்டு, ‘‘தம் மகளின் கணவர், அவளது தலையில் ஒட்டுமுடி வைத்துவிடுமாறு என்னைப் பணிக்கிறார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்! (ஒட்டுமுடி வைத்துவிடாதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள்.

5206. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} قَالَتْ هِيَ الْمَرْأَةُ تَكُونُ عِنْدَ الرَّجُلِ، لاَ يَسْتَكْثِرُ مِنْهَا فَيُرِيدُ طَلاَقَهَا، وَيَتَزَوَّجُ غَيْرَهَا، تَقُولُ لَهُ أَمْسِكْنِي وَلاَ تُطَلِّقْنِي، ثُمَّ تَزَوَّجْ غَيْرِي، فَأَنْتَ فِي حِلٍّ مِنَ النَّفَقَةِ عَلَىَّ وَالْقِسْمَةِ لِي، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَصَّالَحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ}
பாடம் : 96
ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ள மாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ் பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை (எனும் 4:128ஆவது இறைவசனம்)
5206. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் ஒருவருடைய மனைவியாக இருந்துவருகிறாள். (அவளது முதுமை, நோய் போன்ற காரணத்தால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை மணவிலக்குச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் ‘‘என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை மணவிலக்குச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும் இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளலாம்” என்று தம் கணவரிடம் கூறுகிறாள்.
இதையே இவ்வசனம் கூறுகின்றது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை. (4:128)141

5207. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 97
‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5207. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துவந்தோம்.

5208. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرًا، رضى الله عنه قَالَ كُنَّا نَعْزِلُ وَالْقُرْآنُ يَنْزِلُ.
பாடம்: 97
‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5208. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.

5209. وَعَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْقُرْآنُ يَنْزِلُ.
பாடம்: 97
‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5209. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்)குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.

5210. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ أَصَبْنَا سَبْيًا فَكُنَّا نَعْزِلُ فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَوَإِنَّكُمْ لَتَفْعَلُونَ قَالَهَا ثَلاَثًا مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلاَّ هِيَ كَائِنَةٌ "".
பாடம்: 97
‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு)142
5210. அபூசயீத் அல்குத்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க் கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) ‘அஸ்ல்’ செய்துகொள்ளவும் விரும்பினோம். (அதுகுறித்து) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம்.
அப்போது அவர்கள் ‘‘(இந்த அஸ்லை) நீங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, ‘‘மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.143

5211. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَطَارَتِ الْقُرْعَةُ لِعَائِشَةَ وَحَفْصَةَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ بِاللَّيْلِ سَارَ مَعَ عَائِشَةَ يَتَحَدَّثُ، فَقَالَتْ حَفْصَةُ أَلاَ تَرْكَبِينَ اللَّيْلَةَ بَعِيرِي وَأَرْكَبُ بَعِيرَكِ تَنْظُرِينَ وَأَنْظُرُ، فَقَالَتْ بَلَى فَرَكِبَتْ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى جَمَلِ عَائِشَةَ وَعَلَيْهِ حَفْصَةُ فَسَلَّمَ عَلَيْهَا ثُمَّ سَارَ حَتَّى نَزَلُوا وَافْتَقَدَتْهُ عَائِشَةُ، فَلَمَّا نَزَلُوا جَعَلَتْ رِجْلَيْهَا بَيْنَ الإِذْخِرِ وَتَقُولُ يَا رَبِّ سَلِّطْ عَلَىَّ عَقْرَبًا أَوْ حَيَّةً تَلْدَغُنِي، وَلاَ أَسْتَطِيعُ أَنْ أَقُولَ لَهُ شَيْئًا.
பாடம்: 98
கணவன் பயணம் செய்யவிரும்பும் போது தம் துணைவியரிடையே (யாரை அழைத்துச் செல்வது என்பதைக்) குலுக்கல் முறையில் முடிவு செய்வது
5211. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவி யரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) எனது பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒருநாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘‘இந்த இரவு நீங்கள் எனது ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களது ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். ஆகவே, (நாங்களிருவரும் ஒருவர் மற்றவரது ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) எனது ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) சொன்னார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை) நான் தேடினேன்.
அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் எனது இரு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என்மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

5212. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلُ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ، وَهَبَتْ، يَوْمَهَا لِعَائِشَةَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْسِمُ لِعَائِشَةَ بِيَوْمِهَا وَيَوْمِ سَوْدَةَ.
பாடம்: 99
ஒரு பெண் தன் கணவரிடமிருந்து தனக்குக் கிடைக்கும் நாளை தன் சக்களத்திக்காக விட்டுக் கொடுப்பதும், அது எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதும்
5212. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள்) தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக (விட்டு)க் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும் ‘சவ்தா’ அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கிவந்தார்கள்.144