5163. وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ أَبِي عُثْمَانَ ـ وَاسْمُهُ الْجَعْدُ ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَرَّ بِنَا فِي مَسْجِدِ بَنِي رِفَاعَةَ فَسَمِعْتُهُ يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا مَرَّ بِجَنَبَاتِ أُمِّ سُلَيْمٍ دَخَلَ عَلَيْهَا فَسَلَّمَ عَلَيْهَا، ثُمَّ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَرُوسًا بِزَيْنَبَ فَقَالَتْ لِي أُمُّ سُلَيْمٍ لَوْ أَهْدَيْنَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَدِيَّةً فَقُلْتُ لَهَا افْعَلِي. فَعَمَدَتْ إِلَى تَمْرٍ وَسَمْنٍ وَأَقِطٍ، فَاتَّخَذَتْ حَيْسَةً فِي بُرْمَةٍ، فَأَرْسَلَتْ بِهَا مَعِي إِلَيْهِ، فَانْطَلَقْتُ بِهَا إِلَيْهِ فَقَالَ لِي "" ضَعْهَا "". ثُمَّ أَمَرَنِي فَقَالَ "" ادْعُ لِي رِجَالاً ـ سَمَّاهُمْ ـ وَادْعُ لِي مَنْ لَقِيتَ "". قَالَ فَفَعَلْتُ الَّذِي أَمَرَنِي فَرَجَعْتُ فَإِذَا الْبَيْتُ غَاصٌّ بِأَهْلِهِ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَضَعَ يَدَيْهِ عَلَى تِلْكَ الْحَيْسَةِ، وَتَكَلَّمَ بِهَا مَا شَاءَ اللَّهُ، ثُمَّ جَعَلَ يَدْعُو عَشَرَةً عَشَرَةً، يَأْكُلُونَ مِنْهُ، وَيَقُولُ لَهُمُ "" اذْكُرُوا اسْمَ اللَّهِ، وَلْيَأْكُلْ كُلُّ رَجُلٍ مِمَّا يَلِيهِ "". قَالَ حَتَّى تَصَدَّعُوا كُلُّهُمْ عَنْهَا، فَخَرَجَ مِنْهُمْ مَنْ خَرَجَ، وَبَقِيَ نَفَرٌ يَتَحَدَّثُونَ قَالَ وَجَعَلْتُ أَغْتَمُّ، ثُمَّ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَحْوَ الْحُجُرَاتِ، وَخَرَجْتُ فِي إِثْرِهِ فَقُلْتُ إِنَّهُمْ قَدْ ذَهَبُوا. فَرَجَعَ فَدَخَلَ الْبَيْتَ، وَأَرْخَى السِّتْرَ، وَإِنِّي لَفِي الْحُجْرَةِ، وَهْوَ يَقُولُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلاَ مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ وَاللَّهُ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ}. قَالَ أَبُو عُثْمَانَ قَالَ أَنَسٌ إِنَّهُ خَدَمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ.
பாடம்: 65 மணமகனுக்கு அன்பளிப்பு வழங்குதல்
5163. அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளிவாசலில் (நாங்கள் இருந்துகொண்டி ருந்தபோது) அனஸ் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். அதற்கு நான், ‘‘(அவ்வாறே) செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறினேன்.

ஆகவே, அவர்கள் பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து ‘ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள். அதை என்னிடம் கொடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதை நான் எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘‘அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரது பெயரைக் குறிப்பிட்டு, அவர்களைத் தம(து மணவிருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கின்றவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும் என்னைப் பணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து(முடித்து)விட்டு, நான் திரும்பி வந்தேன். அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்தனைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப் பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்” என்று கூறினார்கள்.

அவர்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒருசிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்துவிட்டனர். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (வழக்கம்போல் தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற் காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். ‘‘(எழுந்து செல்லாமல் பேசிக் கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டி ருப்பார்கள்” என்று நான் கூறினேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து (ஸைனப் (ரலி) அவர்களது) அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (33:53ஆவது) வசனத்தை ஓதினார்கள்: இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.103

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (சிறு வயதில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன்.

அத்தியாயம் : 67
5164. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً، فَهَلَكَتْ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَاسًا مِنْ أَصْحَابِهِ فِي طَلَبِهَا، فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ فَصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ، فَلَمَّا أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم شَكَوْا ذَلِكَ إِلَيْهِ، فَنَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ جَزَاكِ اللَّهُ خَيْرًا، فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ قَطُّ، إِلاَّ جَعَلَ لَكِ مِنْهُ مَخْرَجًا، وَجُعِلَ لِلْمُسْلِمِينَ فِيهِ بَرَكَةٌ.
பாடம்: 66 மணப்பெண்ணுக்காக ஆடை அணிகலன்களை இரவல் வாங்கு தல்
5164. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரி) அஸ்மாவிடம் நான் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) காணாமல் போய்விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காகத் தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத் தார்கள். (அவர்கள் அதைத் தேடச்சென்ற னர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (அங்கத்தூய்மை செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) அங்கத்தூய்மை செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (அங்கத்தூய்மை செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர்.

அப்போதுதான் ‘தயம்மும்’ தொடர்பான (5:6ஆவது) இறைவசனம் இறங்கிற்று. எனவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், ‘‘தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு வளத்தை முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.104

அத்தியாயம் : 67
5165. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمَا لَوْ أَنَّ أَحَدَهُمْ يَقُولُ حِينَ يَأْتِي أَهْلَهُ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، ثُمَّ قُدِّرَ بَيْنَهُمَا فِي ذَلِكَ، أَوْ قُضِيَ وَلَدٌ، لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا "".
பாடம்: 67 ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது செய்ய வேண்டிய பிரார்த்தனை
5165. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது ‘பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன் னிப்னிஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ் வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!’) என்று பிரார்த்தித்து அதன்பின் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.105

அத்தியாயம் : 67
5166. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ ابْنَ عَشْرِ سِنِينَ مَقْدَمَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَكَانَ أُمَّهَاتِي يُوَاظِبْنَنِي عَلَى خِدْمَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَدَمْتُهُ عَشْرَ سِنِينَ، وَتُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا ابْنُ عِشْرِينَ سَنَةً، فَكُنْتُ أَعْلَمَ النَّاسِ بِشَأْنِ الْحِجَابِ حِينَ أُنْزِلَ، وَكَانَ أَوَّلَ مَا أُنْزِلَ فِي مُبْتَنَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِزَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، أَصْبَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِهَا عَرُوسًا، فَدَعَا الْقَوْمَ فَأَصَابُوا مِنَ الطَّعَامِ، ثُمَّ خَرَجُوا وَبَقِيَ رَهْطٌ مِنْهُمْ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَطَالُوا الْمُكْثَ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَخَرَجَ وَخَرَجْتُ مَعَهُ لِكَىْ يَخْرُجُوا، فَمَشَى النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَشَيْتُ، حَتَّى جَاءَ عَتَبَةَ حُجْرَةِ عَائِشَةَ، ثُمَّ ظَنَّ أَنَّهُمْ خَرَجُوا فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ، حَتَّى إِذَا دَخَلَ عَلَى زَيْنَبَ فَإِذَا هُمْ جُلُوسٌ لَمْ يَقُومُوا، فَرَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَجَعْتُ مَعَهُ، حَتَّى إِذَا بَلَغَ عَتَبَةَ حُجْرَةِ عَائِشَةَ، وَظَنَّ أَنَّهُمْ خَرَجُوا، فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَإِذَا هُمْ قَدْ خَرَجُوا فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنِي وَبَيْنَهُ بِالسِّتْرِ، وَأُنْزِلَ الْحِجَابُ.
பாடம்: 68 ‘வலீமா’ எனும் மணவிருந்து (மார்க்கத்தில்) உள்ளதுதான். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து அளியுங்கள்” என்றார்கள்.106
5166. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது நான் பத்து வயதுடைய (சிறு)வனாய் இருந்தேன். என் அன்னையர் (என் அன்னையும் அன்னையின் சகோதரிகளும்) என்னை நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு வற்புறுத்திக்கொண்டே யிருந்தனர். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டு காலம் பணிவிடைகள் செய்தேன். நான் இருபது வயதுடையவனாய் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

‘பர்தா’ தொடர்பான வசனம் அருளப் பெற்றது குறித்து மக்களில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து தாம்பத்திய உறவைத் தொடங்கியபோதுதான் ஆரம்பமாக அந்த வசனம் அருளப்பெற்றது.

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணந்தபோது (மணவிருந்திற்காக) மக்களை அழைத்தார்கள். மக்கள் வந்து உணவருந்திவிட்டு (நபியவர்களின் வீட்டிலிருந்து) வெளியேறிச் சென்றனர். ஆனால், அவர்களில் ஒரு குழுவினர் (மட்டும் எழுந்து செல்லாமல்) அங்கேயே நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் வெளியேறட்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் வெளியேறிவிட்டேன்.

(பிறகு நேராக) ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் நடந்தேன். பிறகு (வீட்டில் அமர்ந்திருந்த) அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று எண்ணியவாறு (வீட்டிற்குத்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். (தம் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களின் அறைக்கு அவர்கள் வந்தபோது அப்போதும் அந்தக் குழுவினர் எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்தவண்ணம் (பேசிக்கொண்டு) இருந்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன்.

மீண்டும் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் நிலைப்படிக்கு வந்துவிட்டு அந்த மூவரும் வெளியேறி யிருப்பார்கள் என்று எண்ணி (ஸைனபின் அறைக்குத்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் (மூவரும் எழுந்து) வெளியே சென்றுவிட்டிருந்தார்கள். அப்போது எனக்கும் (தம் துணைவியாரான) ஸைனப் (ரலி) அவர்களுக்கும் இடையே நபியவர்கள் திரையிட்டார்கள்.

இவ்வேளையில்தான் ‘பர்தா’ தொடர்பான (33:53ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.107

அத்தியாயம் : 67
5167. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ سَأَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَتَزَوَّجَ امْرَأَةً مِنَ الأَنْصَارِ "" كَمْ أَصْدَقْتَهَا "". قَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. وَعَنْ حُمَيْدٍ سَمِعْتُ أَنَسًا قَالَ لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ نَزَلَ الْمُهَاجِرُونَ عَلَى الأَنْصَارِ فَنَزَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ عَلَى سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ أُقَاسِمُكَ مَالِي وَأَنْزِلُ لَكَ عَنْ إِحْدَى امْرَأَتَىَّ. قَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ. فَخَرَجَ إِلَى السُّوقِ فَبَاعَ وَاشْتَرَى فَأَصَابَ شَيْئًا مِنْ أَقِطٍ وَسَمْنٍ فَتَزَوَّجَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம்: 69 ஓர் ஆட்டை அறுத்தேனும் மணவிருந்து (வலீமா) அளிப்பது
5167. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணந்துகொண்டபோது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்கு எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தீர்?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங்கொட்டை எடை அளவுத் தங்கத்தை” என்று கூறினார்கள்.

ஹுமைத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது:

(மக்கா முஸ்லிம்களான) முஹாஜிர்கள் (மக்காவைத் துறந்து) மதீனா வந்தபோது அவர்கள் அன்சாரிகளிடம் தங்கினார்கள். அதன்படி அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் சஅத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் தங்கி னார்கள். அப்போது (அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம்) சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்கள், ‘‘நான் தங்களுக்கு என் சொத்தை (சரிபாதியாக)ப் பங்கிட்டுத் தருகிறேன். என் இரு மனைவியரில் ஒருவரை மணவிலக்குச் செய்து உங்களுக்கு அவரை மணமுடித்து வைக்கிறேன்” என்று சொன்னார்கள்.

(அதை மறுத்துவிட்ட) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ் உங்கள் குடும்பத்திலும் செல்வத்திலும் வளம் வழங்குவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, கடைத்தெருவை நோக்கிச் சென்று வியாபாரத்தில் ஈடுபடலானார்கள். (முதன் முதலில்) சிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாக) அடைந்தார்கள். பின்னர் (அன்சாரிப் பெண்மணியை) மணந்துகொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்” என்று சொன்னார்கள்.108


அத்தியாயம் : 67
5168. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ مَا أَوْلَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَىْءٍ مِنْ نِسَائِهِ، مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ أَوْلَمَ بِشَاةٍ.
பாடம்: 69 ஓர் ஆட்டை அறுத்தேனும் மணவிருந்து (வலீமா) அளிப்பது
5168. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த (வலீமா) மணவிருந்தைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளிக்கவில்லை; ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மண விருந்தளித்தார்கள்.


அத்தியாயம் : 67
5169. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الْوَارِثِ، عَنْ شُعَيْبٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْتَقَ صَفِيَّةَ، وَتَزَوَّجَهَا وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا، وَأَوْلَمَ عَلَيْهَا بِحَيْسٍ.
பாடம்: 69 ஓர் ஆட்டை அறுத்தேனும் மணவிருந்து (வலீமா) அளிப்பது
5169. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரில் கைது செய்யப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும்கொண்டார்கள்; (ஸஃபிய்யா (ரலி)) அவர்களது விடுதலையையே அவர்களுக்குரிய மஹ்ராகவும் (மணக் கொடையாகவும்) ஆக்கினார்கள். அ(வர்களை மணந்த)தற்காக (விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்) ‘ஹைஸ்’ எனும் பண்டத்தை வலீமா (மணவிருந்தில்) அளித்தார்கள்.109


அத்தியாயம் : 67
5170. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ بَيَانٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ بَنَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ فَأَرْسَلَنِي فَدَعَوْتُ رِجَالاً إِلَى الطَّعَامِ.
பாடம்: 69 ஓர் ஆட்டை அறுத்தேனும் மணவிருந்து (வலீமா) அளிப்பது
5170. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம் (புதிய) மனைவி ஒருவருடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது (வலீமா விருந்திற்காக மக்களை அழைக்க) என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (தயாராயிருந்த) அந்த விருந்துக்காகச் சிலரை அழைத்தேன்.

அத்தியாயம் : 67
5171. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ ذُكِرَ تَزْوِيجُ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ عِنْدَ أَنَسٍ فَقَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى أَحَدٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَيْهَا أَوْلَمَ بِشَاةٍ.
பாடம்: 70 ஒருவர் தம் மனைவியரில் சிலருக்காகச் சிலரைவிடப் பெரிய அளவில் ‘வலீமா’ விருந்தளிப்பது
5171. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் திருமணம் குறித்துஅனஸ் (ரலி) அவர்கள் முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், ஸைனப் (ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்தபின்) மணவிருந்து (வலீமா) அளித்த அளவுக்கு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள்.

அத்தியாயம் : 67
5172. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ أَوْلَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَعْضِ نِسَائِهِ بِمُدَّيْنِ مِنْ شَعِيرٍ.
பாடம்: 71 ஓர் ஆட்டைவிடக் குறைந்த தைக் கொண்டு ‘வலீமா’ விருந் தளிப்பது
5172. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலருக்காக (அவர்களை மணந்ததன்பின்) தொலி நீக்கப்படாத கோதுமையில் இரு ‘முத்’ அளவில் வலீமா விருந்தளித் தார்கள்.110

அத்தியாயம் : 67
5173. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا "".
பாடம்: 72 வலீமா உள்ளிட்ட விருந்து அழைப்புகளை ஏற்பது கடமை; ஏழு நாட்கள் அல்லது அது போன்ற சில நாட்கள் வலீமா விருந்தளிப்பது; நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கென) ஒன்றிரண்டு நாட்கள் என்று காலம் குறிப்பிட்டதில்லை.
5173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதை ஏற்றுச் செல்லட்டும்!

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 67
5174. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فُكُّوا الْعَانِيَ، وَأَجِيبُوا الدَّاعِيَ، وَعُودُوا الْمَرِيضَ "".
பாடம்: 72 வலீமா உள்ளிட்ட விருந்து அழைப்புகளை ஏற்பது கடமை; ஏழு நாட்கள் அல்லது அது போன்ற சில நாட்கள் வலீமா விருந்தளிப்பது; நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கென) ஒன்றிரண்டு நாட்கள் என்று காலம் குறிப்பிட்டதில்லை.
5174. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (மணவிருந்து வலீமா முதலியவற்றுக்காக) அழைத்தவருக்கு (அவரது அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.111


அத்தியாயம் : 67
5175. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَشْعَثِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ، قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ ـ رضى الله عنهما ـ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ، أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجِنَازَةِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِبْرَارِ الْقَسَمِ، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِفْشَاءِ السَّلاَمِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ، وَعَنْ آنِيَةِ الْفِضَّةِ، وَعَنِ الْمَيَاثِرِ، وَالْقَسِّيَّةِ، وَالإِسْتَبْرَقِ وَالدِّيبَاجِ. تَابَعَهُ أَبُو عَوَانَةَ وَالشَّيْبَانِيُّ عَنْ أَشْعَثَ فِي إِفْشَاءِ السَّلاَمِ.
பாடம்: 72 வலீமா உள்ளிட்ட விருந்து அழைப்புகளை ஏற்பது கடமை; ஏழு நாட்கள் அல்லது அது போன்ற சில நாட்கள் வலீமா விருந்தளிப்பது; நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கென) ஒன்றிரண்டு நாட்கள் என்று காலம் குறிப்பிட்டதில்லை.
5175. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள்.

நோயாளியிடம் நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லுமாறும், தும்மியவ(ர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் விற்கே) என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக எனப்) பதில் சொல்லுமாறும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவு மாறும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுமாறும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்புமாறும், விருந்து அழைப்பை ஏற்குமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

மேலும் (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் ‘மீஸரா’ எனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.112


அத்தியாயம் : 67
5176. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي عُرْسِهِ، وَكَانَتِ امْرَأَتُهُ يَوْمَئِذٍ خَادِمَهُمْ وَهْىَ الْعَرُوسُ، قَالَ سَهْلٌ تَدْرُونَ مَا سَقَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعَتْ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ.
பாடம்: 72 வலீமா உள்ளிட்ட விருந்து அழைப்புகளை ஏற்பது கடமை; ஏழு நாட்கள் அல்லது அது போன்ற சில நாட்கள் வலீமா விருந்தளிப்பது; நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கென) ஒன்றிரண்டு நாட்கள் என்று காலம் குறிப்பிட்டதில்லை.
5176. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்டார்கள்.) மணப் பெண்ணா யிருந்த அபூஉசைதுடைய துணைவியார் (உம்மு உசைத் சலாமா பின்த் வஹ்ப்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மணப்பெண் (உம்மு உசைத்) பருகுவதற்கு என்ன தந்தார் தெரியுமா?

அவர் நபி (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைத் தண்ணீரில் ஊறப்போட்டு வைத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் (வலீமா-மணவிருந்தை) சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச் சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

அத்தியாயம் : 67
5177. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ، وَيُتْرَكُ الْفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم.
பாடம்: 73 விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவர் ஆவார்.
5177. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவர் ஆவார்.113

அத்தியாயம் : 67
5178. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ دُعِيتُ إِلَى كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ لَقَبِلْتُ "".
பாடம்: 74 ஆட்டுக்காலின் கீழ்ப்பகுதியை (மணவிருந்தாக வழங்கப்பட்டாலும் அதை) ஒருவர் (மனதார)ஏற்றுக் கொள்வது
5178. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஆட்டுக் காலின் கீழ்ப்பகுதி(யை விருந்தாக்கி, அந்த விருந்து)க்கு நான் அழைக்கப்பட்டாலும் நிச்சயம் நான் (அந்த அழைப்பை) ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக் காலின் கீழ்ப் பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக்கொள்வேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114

அத்தியாயம் : 67
5179. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَجِيبُوا هَذِهِ الدَّعْوَةَ إِذَا دُعِيتُمْ لَهَا "". قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يَأْتِي الدَّعْوَةَ فِي الْعُرْسِ وَغَيْرِ الْعُرْسِ وَهْوَ صَائِمٌ.
பாடம்: 75 மணவிருந்து முதலியவற்றுக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது
5179. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த (மண)விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (‘நஃபில்’ எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில்கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்றுச் சென்று வந்தார்கள்.

அத்தியாயம் : 67
5180. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبْصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءً وَصِبْيَانًا مُقْبِلِينَ مِنْ عُرْسٍ، فَقَامَ مُمْتَنًّا فَقَالَ "" اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ "".
பாடம்: 76 மணவிருந்திற்குப் பெண்களும் சிறுவர்களும் செல்வது
5180. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திருமண விருந்தொன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரி) பெண்களையும் சிறுவர்களையும் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே (அவர்களை நோக்கி) மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று, ‘‘இறைவா! (நீயே சாட்சி’ என்று கூறிவிட்டு, அவர்களைப் பார்த்து,) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.115

அத்தியாயம் : 67
5181. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، مَاذَا أَذْنَبْتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا بَالُ هَذِهِ النِّمْرِقَةِ "". قَالَتْ فَقُلْتُ اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ "". وَقَالَ "" إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ "".
பாடம்: 77 விருந்து நடக்கும் இடத்தில் வெறுக்கத் தக்கச் செயல் ஏதேனும் நடைபெறக் கண்டால், திரும்பி வந்துவிட வேண்டுமா? (மணவிருந்து நடைபெற்ற) வீட்டில் உருவப்படமிருப்பதைக் கண்ட இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம்மு டைய புதல்வர் சாலிமின் மணவிருந்திற்கு) அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களை அழைத்திருந்தார்கள். (இப்னு உமர் (ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களது இல்லத்திற்கு வந்த) அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அந்த இல்லத்தின் சுவரில் (ஆடம்பரமான) திரை (தொங்கவிடப்பட்டு) இருப்பதைக் கண்டார்கள். (அதைக் கண்ணுற்ற இல்லத்தின் உரிமையாளர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் உடனே, ‘‘(சுவரில் திரையைத் தொங்கவிடும்) இந்த விஷயத்தில் எங்களைப் பெண்கள் மிகைத்துவிட்டனர். (ஆதலால்தான் இந்தத் திரையை இங்கு காண்கிறீர்கள்)” என்று சொன்னார்கள். அதற்கு அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், (இது போன்ற வெறுக்கத் தக்கச் செயலைச் செய்துவிடுவார்களோ என) யார் விஷயத்தில் நான் அஞ்சினேனோ (இல்லையோ,) உங்கள் விஷயத்தில் எனக்கு அந்த அச்சம் ஏற்பட்டதில்லை. (ஆனால், நீங்களே இப்படிச் செய்துவிட்டீர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் உணவை உண்ணமாட்டேன்” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றுவிட்டார்கள்.116
5181. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள்; உள்ளே வரவில்லை. அவர்களது முகத்தில் அதிருப்தியி(ன் அறிகுறியி)னை நான் அறிந்துகொண்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ் விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘தாங்கள் இதில் அமர்ந்து கொள்வதற் காகவும், தலை சாய்த்துக்கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்” என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்’ என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்” என்று சொல்லிவிட்டு, ‘‘உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணை யைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை” என்று சொன்னார் கள்.117

அத்தியாயம் : 67
5182. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلاَّ امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ.
பாடம்: 78 மணவிருந்தின்போது ஆண்களுக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பைப் பெண்கள் தாமே ஏற்பது
5182. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் (தமது) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூஉசைத் (ரலி) அவர்களுடைய துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந் தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்த வுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அவர்கள் அந்தப் பேரீச்சங் கனிகளை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக பருகத் தந்தார்கள்.

அத்தியாயம் : 67