5043. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ غَدَوْنَا عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ رَجُلٌ قَرَأْتُ الْمُفَصَّلَ الْبَارِحَةَ. فَقَالَ هَذًّا كَهَذِّ الشِّعْرِ، إِنَّا قَدْ سَمِعْنَا الْقِرَاءَةَ وَإِنِّي لأَحْفَظُ الْقُرَنَاءَ الَّتِي كَانَ يَقْرَأُ بِهِنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم ثَمَانِيَ عَشْرَةَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ وَسُورَتَيْنِ مِنْ آلِ حم.
பாடம்: 28 திருத்தமாகவும் நிதானமாகவும் (குர்ஆனை) ஓதுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!” (73:4). ‘‘மனிதர்களுக்கு நீர் இதைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்த குர்ஆனைப் படிப்படியாக நாம் அருளினோம்.” (17:106) பாடல்களை அவசரம் அவசரமாகப் படிப்பதைப் போன்று குர்ஆனை ஓதுவது வெறுப்புக்குரிய செயலாகும். (44:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீஹா யுஃப்ரகு’ என்பதற்கு ‘அந்த இரவில் பிரிக்கப்படுகிறது’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (17:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரக்னாஹு’ எனும் சொல்லுக்கு, ‘நாம் பிரித்து அருளினோம்’ என்பது பொருள்.
5043. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) காலையில் சென்றோம். அப்போது ஒருவர், ‘‘நேற்றிரவு நான் ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை (முழுமையாக) ஓதி முடித்தேன்” என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா? யாம் (சரியான) ஓதல்முறையைச் செவியுற்றுள்ளோம். மேலும், நபி (ஸல்) அவர்கள் தாம் (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவில் அமைந்த ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தி யாயங்களில் பதினெட்டையும் ‘ஹா மீம்’ (எனத் தொடங்கும் அத்தியாயங்களின்) குடும்பத்தில் இரண்டு அத்தியாயங்களையும் நான் மனன மிட்டுள்ளேன்” என்றார்கள்.56


அத்தியாயம் : 66
5044. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فِي قَوْلِهِ {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالْوَحْىِ وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي {لاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ} {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ * إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ * فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} قَالَ إِنَّ عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ. قَالَ وَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ.
பாடம்: 28 திருத்தமாகவும் நிதானமாகவும் (குர்ஆனை) ஓதுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!” (73:4). ‘‘மனிதர்களுக்கு நீர் இதைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்த குர்ஆனைப் படிப்படியாக நாம் அருளினோம்.” (17:106) பாடல்களை அவசரம் அவசரமாகப் படிப்பதைப் போன்று குர்ஆனை ஓதுவது வெறுப்புக்குரிய செயலாகும். (44:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீஹா யுஃப்ரகு’ என்பதற்கு ‘அந்த இரவில் பிரிக்கப்படுகிறது’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (17:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரக்னாஹு’ எனும் சொல்லுக்கு, ‘நாம் பிரித்து அருளினோம்’ என்பது பொருள்.
5044. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) இந்த ‘வஹீ’யை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கே வேத வசனங்களை மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தால் அதை மனனமிடுவதற்காக ஓதியபடி) தமது நாவையும் தம் இதழ்களையும் அசைத்துக்கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே, அல்லாஹ், ‘லா உக்சிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75ஆவது) அத்தியாயத்திலுள்ள, ‘‘இந்த வஹீயை (வேதஅறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்களது நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16, 17) வசனங்களை அருளினான்.

(அதாவது) ‘உமது நெஞ்சில் பதியச்செய்வதும் அதை நீர் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்’ (என்று சொன்னான்). ‘‘மேலும், நாம் இதை ஓதிவிட்டோமாயின் நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” (75:18). (அதாவது,) ‘நாம் இதை அருளும்போது செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பீராக!’ (என்றும் சொன்னான்). ‘‘பின்னர், இதன் கருத்தை விவரிப்பதும் எமது பொறுப்பேயாகும்” (75:19). (அதாவது) ‘உமது நாவால் அதனை (மக்களுக்கு) விளக்கித் தரச்செய்வதும் எமது பொறுப்பாகும்’ என இறைவன் கூறினான்.

(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்பு) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீயுடன்) வருகையில் நபி (ஸல்) அவர்கள் தலையைத் தாழ்த்தி (மௌனமாகக் கேட்டு)க்கொண்டிருப்பார்கள். அவர் (வசனங்களை அருளிவிட்டுச்) சென்று விடும்போது அல்லாஹ் வாக்களித்தபடி நபி (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக்கொண்டார்கள்.57

அத்தியாயம் : 66
5045. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قِرَاءَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يَمُدُّ مَدًّا.
பாடம்: 29 நீட்டி ஓதுதல்58
5045. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் ஓதுதல்முறை பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘‘(நீட்டி ஓத வேண்டிய இடங்களில்) நன்றாக நீட்டி ஓதுவது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 66
5046. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم. فَقَالَ كَانَتْ مَدًّا. ثُمَّ قَرَأَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ.
பாடம்: 29 நீட்டி ஓதுதல்58
5046. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘நபி (ஸல்) அவர்களின் ஓதுதல்முறை எப்படியிருந்தது?” என அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.

அதற்கு அவர்கள், ‘‘நீட்டி ஓதுவதே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் ‘பிஸ்மில்லா...ஹ்’ என நீட்டுவார்கள்; ‘அர்ரஹ்மா...ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹீ...ம்’ என்றும் நீட்டுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 66
5047. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو إِيَاسٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ وَهْوَ عَلَى نَاقَتِهِ ـ أَوْ جَمَلِهِ ـ وَهْىَ تَسِيرُ بِهِ وَهْوَ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ قِرَاءَةً لَيِّنَةً يَقْرَأُ وَهْوَ يُرَجِّعُ.
பாடம்: 30 தர்ஜீஉ (முறையில் ஓதுதல்)59
5047. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளன்று) பயணித்துக்கொண்டிருந்த தமது ஒட்டகத்தின் மீது இருந்தவாறு ‘அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயத்தை’ அல்லது ‘அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை’ மெல்லிய குரலில் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.60

அத்தியாயம் : 66
5048. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَهُ "" يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ "".
பாடம்: 31 இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்
5048. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), ‘‘அபூமூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது” என என்னிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 66
5049. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْرَأْ عَلَىَّ الْقُرْآنَ "". قُلْتُ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ "" إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي "".
பாடம்: 32 அடுத்தவரிடமிருந்து குர்ஆனைச் செவியேற்க விரும்புவது
5049. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘குர்ஆனை எனக்கு ஓதிக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘பிறரிடமிருந்து அதை நான் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.61

அத்தியாயம் : 66
5050. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْرَأْ عَلَىَّ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ "" نَعَمْ "". فَقَرَأْتُ سُورَةَ النِّسَاءِ حَتَّى أَتَيْتُ إِلَى هَذِهِ الآيَةِ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} قَالَ "" حَسْبُكَ الآنَ "". فَالْتَفَتُّ إِلَيْهِ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ.
பாடம்: 33 ஓதச்சொன்னவர் ஓதிக்கொண்டி ருப்பவரிடம், ‘‘(ஓதியது) போதும்” எனக் கூறுவது
5050. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். ஆகவே, நான் ‘அந்நிசா’ எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஓதினேன்.

‘‘ஒவ்வொரு சமுதாயத்திóருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உம்மை இவர் களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் (இவர்களது நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்துடன் போதும்!” என்று சொன்னார்கள். அப்போது நான் அவர்களைப் பார்த்தேன்; அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.62

அத்தியாயம் : 66
5051. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ لِي ابْنُ شُبْرُمَةَ نَظَرْتُ كَمْ يَكْفِي الرَّجُلَ مِنَ الْقُرْآنِ فَلَمْ أَجِدْ سُورَةً أَقَلَّ مِنْ ثَلاَثِ آيَاتٍ، فَقُلْتُ لاَ يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقْرَأَ أَقَلَّ مِنْ ثَلاَثِ آيَاتٍ. قَالَ عَلِيٌّ قَالَ سُفْيَانُ أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، أَخْبَرَهُ عَلْقَمَةُ، عَنْ أَبِي مَسْعُودٍ، وَلَقِيتُهُ، وَهْوَ يَطُوفُ بِالْبَيْتِ فَذَكَرَ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ مَنْ قَرَأَ بِالآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ "".
பாடம்: 34 எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: குர்ஆனில் (உங்களுக்கு) எளிதானதை ஓதுங்கள். (73:20)63
5051. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (கூஃபா நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு மனிதர் (தொழுகையில், அல்லது நாளொன்றுக்கு) குர்ஆனிலிருந்து (குறைந்தது) எவ்வளவு ஓதினால் போதும் என்று நான் ஆய்வு செய்தபோது, மூன்று வசனங்களைவிடக் குறைவான (வசனங் களைக் கொண்ட) ஓர் அத்தியாயத்தை நான் காணவில்லை; அதனால் மூன்று வசனங்களுக்குக் குறைவாக ஒருவர் ஓதுவது முறையாகாது என்ற முடிவுக்கு வந்தேன்” என்று கூறினார்கள்.

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது, அன்னாரை நான் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘‘யார் ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அவ்விரண்டுமே போதும்” என்ற நபிமொழியைக் கூறினார்கள்.64


அத்தியாயம் : 66
5052. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ أَنْكَحَنِي أَبِي امْرَأَةً ذَاتَ حَسَبٍ فَكَانَ يَتَعَاهَدُ كَنَّتَهُ فَيَسْأَلُهَا عَنْ بَعْلِهَا فَتَقُولُ نِعْمَ الرَّجُلُ مِنْ رَجُلٍ لَمْ يَطَأْ لَنَا فِرَاشًا وَلَمْ يُفَتِّشْ لَنَا كَنَفًا مُذْ أَتَيْنَاهُ فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَيْهِ ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" الْقَنِي بِهِ "". فَلَقِيتُهُ بَعْدُ فَقَالَ "" كَيْفَ تَصُومُ "". قَالَ كُلَّ يَوْمٍ. قَالَ "" وَكَيْفَ تَخْتِمُ "". قَالَ كُلَّ لَيْلَةً. قَالَ "" صُمْ فِي كُلِّ شَهْرٍ ثَلاَثَةً وَاقْرَإِ الْقُرْآنَ فِي كُلِّ شَهْرٍ "". قَالَ قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ. قَالَ "" صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْجُمُعَةِ "". قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ. قَالَ "" أَفْطِرْ يَوْمَيْنِ وَصُمْ يَوْمًا "". قَالَ قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ. قَالَ "" صُمْ أَفْضَلَ الصَّوْمِ صَوْمِ دَاوُدَ صِيَامَ يَوْمٍ وَإِفْطَارَ يَوْمٍ وَاقْرَأْ فِي كُلِّ سَبْعِ لَيَالٍ مَرَّةً "". فَلَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَاكَ أَنِّي كَبِرْتُ وَضَعُفْتُ فَكَانَ يَقْرَأُ عَلَى بَعْضِ أَهْلِهِ السُّبْعَ مِنَ الْقُرْآنِ بِالنَّهَارِ وَالَّذِي يَقْرَؤُهُ يَعْرِضُهُ مِنَ النَّهَارِ لِيَكُونَ أَخَفَّ عَلَيْهِ بِاللَّيْلِ وَإِذَا أَرَادَ أَنْ يَتَقَوَّى أَفْطَرَ أَيَّامًا وَأَحْصَى وَصَامَ مِثْلَهُنَّ كَرَاهِيةَ أَنْ يَتْرُكَ شَيْئًا فَارَقَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَيْهِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ بَعْضُهُمْ فِي ثَلاَثٍ وَفِي خَمْسٍ وَأَكْثَرُهُمْ عَلَى سَبْعٍ.
பாடம்: 34 எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: குர்ஆனில் (உங்களுக்கு) எளிதானதை ஓதுங்கள். (73:20)63
5052. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்துவைத்தார்கள். (என் தந்தை) அம்ர் (ரலி) அவர்கள் தம் மருமகளை அணுகி அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.

அப்போது அவள், ‘‘அவர் நல்ல மனிதர்தான்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை” என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, ‘‘என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன்.

அப்போது அவர்கள், ‘‘நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?” என்று கேட்டார்கள். நான், ‘‘தினந்தோறும் நோன்பு நோற்கிறேன்” என்று சொன்னேன். (‘‘குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்” என்று கேட்டார்கள். நான், ‘‘ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)” என்று சொன்னேன். அவர்கள், ‘‘மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை முழுமையாக) ஓதிக்கொள்” என்று சொன்னார்கள்.

‘‘நான் அதைவிட அதிகமாக (நோன்பு நோற்கச்) சக்தி பெற்றுள்ளேன்” என்று கூறினேன். அவர்கள் ‘‘வாரத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்” என்றார்கள். நான், ‘‘அதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) எனக்குச் சக்தி உண்டு” என்று கூறினேன். ‘‘இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!” என்று சொன்னார்கள்.

நான், ‘‘இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்கச்) சக்தி பெற்றுள்ளேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்றுக்கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி (முடித்து)க்கொள்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் (தமது முதுமையில்) குர்ஆனில் ஏழில் ஒரு பாகத்தை (அதாவது ஒரு மன்ஸிலை) தம் வீட்டாரில் சிலரிடம் பகலில் ஓதிக்காட்டுவார்கள். (இரவில்) ஓதவேண்டுமென அவர்கள் விரும்பிய பாகத்தையே (இவ்வாறு) பகலில் ஓதிக்காட்டுவார்கள். இரவில் (ஓதும்போது) சுலபமாக இருக்கட்டும் என்பதே இதற்குக் காரணம்.

அன்னார் (நோன்பு நோற்கச்) சக்தி பெறவேண்டும் என விரும்பும்போது, பல நாட்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு அந்நாட்களைக் கணக்கில் வைத்துக்கொள்வார்கள். பிறகு (வசதிப்படும் போது) அதே அளவு நாட்கள் நோன்பு நோற்பார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்தபோது (நபியவர்கள் இறந்தபோது) தாம் செய்துவந்த எந்த வழிபாட்டையும் கைவிடுவதை அன்னார் விரும்பாததே இதற்குக் காரணம்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

(அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், ‘‘மாதம் ஒருமுறை குர்ஆனை ஓதி நிறைவு செய்” என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அதைவிட அதிகமாக ஓதுவதற்குத் தம்மால் முடியும் என அன்னார் தெரிவிக்க, நபியவர்கள் நாட்களைக் குறைத்துக்கொண்டே வந்து) மூன்று நாட்களுக்கு ஒருமுறை, அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை (குர்ஆனை ஓதி நிறைவு செய் என்று நபியவர்கள் கூறினார்கள்) என அறிவிப்பாளர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். ‘ஏழு நாட்களுக்கு ஒருமுறை’ என்றே பெரும்பாலோர் கூறியுள்ளனர்.


அத்தியாயம் : 66
5053. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" فِي كَمْ تَقْرَأُ الْقُرْآنَ "".
பாடம்: 34 எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: குர்ஆனில் (உங்களுக்கு) எளிதானதை ஓதுங்கள். (73:20)63
5053. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதி முடிக்கிறாய்?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 66
5054. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى بَنِي زُهْرَةَ عَنْ أَبِي سَلَمَةَ ـ قَالَ وَأَحْسِبُنِي قَالَ ـ سَمِعْتُ أَنَا مِنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ "". قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ "" فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلاَ تَزِدْ عَلَى ذَلِكَ "".
பாடம்: 34 எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: குர்ஆனில் (உங்களுக்கு) எளிதானதை ஓதுங்கள். (73:20)63
5054. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவு செய்!” என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது” என்று கூறினேன். (அதற்குப் பிறகு படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து) இறுதியாக ‘‘அப்படியானால், ஏழு நாட்களில் (ஒரு முறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 66
5055. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ يَحْيَى بَعْضُ الْحَدِيثِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم. ـ حَدَّثَنَا مُسَدَّدٌ عَنْ يَحْيَى عَنْ سُفْيَانَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبِيدَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ الأَعْمَشُ وَبَعْضُ الْحَدِيثِ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ عَنْ إِبْرَاهِيمَ وَعَنْ أَبِيهِ عَنْ أَبِي الضُّحَى عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْرَأْ عَلَىَّ "". قَالَ قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ "" إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي "". قَالَ فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا}. قَالَ لِي "" كُفَّ ـ أَوْ أَمْسِكْ ـ "". فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ.
பாடம்: 35 குர்ஆன் ஓதும்போது அழுவது
5055. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள். நான், ‘அந்நிசா’ எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஓதினேன்.

‘‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உம்மை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது ‘நிறுத்துங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள்.

அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை நான் கண்டேன்.65

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 66
5056. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْرَأْ عَلَىَّ "". قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ "" إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي "".
பாடம்: 35 குர்ஆன் ஓதும்போது அழுவது
5056. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.66

அத்தியாயம் : 66
5057. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ عَلِيٌّ رضى الله عنه سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ حُدَثَاءُ الأَسْنَانِ، سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம்: 36 பிறருக்குக் காட்டுவதற்காக, அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக, அல்லது குற்றமிழைப்பதற்காக குர்ஆனை ஓதுவது பாவமாகும்.
5057. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் குறைந்த வயது கொண்ட இளைஞர்களாயிருப் பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர் களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன்உடலி)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.

அவர்களது இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம்வரை) செல்லாது. ஆகவே, அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்” என்று சொன்னார்கள்.

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.67


அத்தியாயம் : 66
5058. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يَخْرُجُ فِيكُمْ قَوْمٌ تَحْقِرُونَ صَلاَتَكُمْ مَعَ صَلاَتِهِمْ، وَصِيَامَكُمْ مَعَ صِيَامِهِمْ، وَعَمَلَكُمْ مَعَ عَمَلِهِمْ، وَيَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينَ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، يَنْظُرُ فِي النَّصْلِ فَلاَ يَرَى شَيْئًا، وَيَنْظُرُ فِي الْقِدْحِ فَلاَ يَرَى شَيْئًا، وَيَنْظُرُ فِي الرِّيشِ فَلاَ يَرَى شَيْئًا، وَيَتَمَارَى فِي الْفُوقِ "".
பாடம்: 36 பிறருக்குக் காட்டுவதற்காக, அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக, அல்லது குற்றமிழைப்பதற்காக குர்ஆனை ஓதுவது பாவமாகும்.
5058. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களது வழிபாடு களை கட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடுவார்கள்.

(அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் இறகைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார்.

அம்பி(ன் முனை’)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவுக்கு அம்பில் எந்தச் சுவடும் இராது.)

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.68


அத்தியாயம் : 66
5059. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمُؤْمِنُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَالْمُؤْمِنُ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالتَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَالْحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ ـ أَوْ خَبِيثٌ ـ وَرِيحُهَا مُرٌّ "".
பாடம்: 36 பிறருக்குக் காட்டுவதற்காக, அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக, அல்லது குற்றமிழைப்பதற்காக குர்ஆனை ஓதுவது பாவமாகும்.
5059. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் நாரத்தைப் பழம் போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் ‘கசப்பானது’ அல்லது ‘அருவருப்பானது.’ அதன் வாடையும் வெறுப்பானது.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69

அத்தியாயம் : 66
5060. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ "".
பாடம்: 37 உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்.
5060. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று)விடுங்கள்.70

இதை ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 66
5061. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدَبٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ "". تَابَعَهُ الْحَارِثُ بْنُ عُبَيْدٍ وَسَعِيدُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي عِمْرَانَ وَلَمْ يَرْفَعْهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَأَبَانُ. وَقَالَ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ أَبِي عِمْرَانَ سَمِعْتُ جُنْدَبًا قَوْلَهُ. وَقَالَ ابْنُ عَوْنٍ عَنْ أَبِي عِمْرَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ عُمَرَ قَوْلَهُ، وَجُنْدَبٌ أَصَحُّ وَأَكْثَرُ.
பாடம்: 37 உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்.
5061. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று)விடுங்கள்.

இதை ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 66
5062. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَجُلاً، يَقْرَأُ آيَةً، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم خِلاَفَهَا، فَأَخَذْتُ بِيَدِهِ فَانْطَلَقْتُ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" كِلاَكُمَا مُحْسِنٌ فَاقْرَآ ـ أَكْبَرُ عِلْمِي قَالَ ـ فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمُ اخْتَلَفُوا فَأَهْلَكَهُمْ "".
பாடம்: 37 உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்.
5062. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை நான் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரது கையைப் பிடித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.

(விவரத்தை விசாரித்தறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறிவிட்டு, (ஒவ்வொருவரையும் பார்த்து, ‘‘அவ்வாறே) ஓதுங்கள்!” என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், ‘‘(வேற்றுமை கொள்ளாதீர்கள்!) ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (இப்படித்தான்) வேறுபட்டனர். அது அவர்களை அழித்துவிட்டது” என்று கூறியதாகவே பெரும்பாலும் நான் கருதுகிறேன்.

அத்தியாயம் : 66