494. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ.
பாடம் : 90 (கூட்டுத் தொழுகையின்போது) இமாம் வைத்துக்கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னா-ருப்போருக்கும் தடுப்பாகும்.
494. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்ப தற்காகத் தொழுகைத் திடல் நோக்கிப்) புறப்படும்போது, ஈட்டியை எடுத்துவருமாறு (தம் ஊழியரைப்) பணிப்பார்கள். (தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளியில்) நபியவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள்.

பயணத்தின்போதும் (குறுக்குச் சுவரில்லாத திறந்தவெளியில் தொழ நேர்ந்தால்) இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள். இதனால்தான் (நம்) தலைவர்களும் (திறந்தவெளியில் தொழும்போது தமக்கு முன்னால்) ஈட்டியை வைத்துக் கொள்கின்றனர்.


அத்தியாயம் : 8
495. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ ـ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ ـ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، تَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْمَرْأَةُ وَالْحِمَارُ.
பாடம் : 90 (கூட்டுத் தொழுகையின்போது) இமாம் வைத்துக்கொள்ளும் தடுப்பே (சுத்ரா) பின்னா-ருப்போருக்கும் தடுப்பாகும்.
495. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (புறநகர் மக்காவிலுள்ள) ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழு வித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. அவர்களுக்கு முன்னால் (அந்தக் கைத்தடிக்கு அப்பால்) பெண்கள் மற்றும் கழுதைகள் நடந்துசென்றன.

அத்தியாயம் : 8
496. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ.
பாடம் : 91 தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடை வெளி இருக்க வேண்டும்?
496. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று தொழும் இடத்திற்கும் (பள்ளி

வாச-ன் கிப்லா திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஆடு ஒன்று நடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.


அத்தியாயம் : 8
497. حَدَّثَنَا الْمَكِّيُّ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كَانَ جِدَارُ الْمَسْجِدِ عِنْدَ الْمِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا.
பாடம் : 91 தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடை வெளி இருக்க வேண்டும்?
497. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் (கிப்லா திசையில் அமைந்த) சுவருக்கும் சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) இடையே ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

அத்தியாயம் : 8
498. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا.
பாடம் : 92 (தடுப்பாக நட்டுவைக்கப்படும்) ஈட்டியை நோக்கித் தொழுவது
498. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்(கள் திறந்த வெளியில் தொழும்போது, அவர்)களுக்காக ஈட்டி (பூமியில்) நட்டுவைக்கப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.

அத்தியாயம் : 8
499. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَصَلَّى بِنَا الظُّهْرَ وَالْعَصْرَ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ، وَالْمَرْأَةُ وَالْحِمَارُ يَمُرُّونَ مِنْ وَرَائِهَا.
பாடம் : 93 (தடுப்பாக நட்டு வைக்கப்படும்) கைத்தடியை நோக்கித் தொழு வது
499. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு எங்க ளுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) தொழுவித்தார்கள்.

அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. பெண்மணிகள் மற்றும் கழுதைகள் அந்தக் கைத்தடிக்கு அப்பால் சென்றுகொண்டிருந்தன.


அத்தியாயம் : 8
500. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، قَالَ حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ وَمَعَنَا عُكَّازَةٌ أَوْ عَصًا أَوْ عَنَزَةٌ وَمَعَنَا إِدَاوَةٌ، فَإِذَا فَرَغَ مِنْ حَاجَتِهِ نَاوَلْنَاهُ الإِدَاوَةَ.
பாடம் : 93 (தடுப்பாக நட்டு வைக்கப்படும்) கைத்தடியை நோக்கித் தொழு வது
500. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் எங்களுடன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி, அல்லது (சாதாரண) கைத்தடி, அல்லது (சற்று) பெரிய கைத்தடியும் தண்ணீர் நிரம்பிய தோல் பையும் இருக்க, அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். அவர்கள் தமது தேவையை முடித்துக்கொண்டதும் நாங்கள் அவர்களிடம் அந்தத் தண்ணீர் பையைக் கொடுப்போம்.

அத்தியாயம் : 8
501. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ فَصَلَّى بِالْبَطْحَاءِ الظُّهْرَ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، وَنَصَبَ بَيْنَ يَدَيْهِ عَنَزَةً، وَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ.
பாடம் : 94 மக்கா உள்பட எல்லா இடங் களிலும் (திறந்தவெளியில் தொழும்போது) தடுப்பு வைத்துக்கொள்ளல்
501. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் புறப்பட்டுவந்து (புறநகர் மக்காவிலுள்ள) ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) இரண்டிரண்டு ரக்அத்களாக (எங்களுக்குத்) தொழுவித்தார்கள். தமக்கு முன்னால் கைத்தடி ஒன்றை (தடுப்பாக) நட்டுவைத்தார்கள். (தொழுகைக்காக) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரில் எஞ்சியதை மக்கள் (தம் மேனியில்) தடவிக்கொண்டனர்.

அத்தியாயம் : 8
502. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ. فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ. قَالَ فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا.
பாடம் : 95 தூண்களை நோக்கித் தொழுவது “(பள்ளிவாச-ல் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களைவிட (அவற்றை நோக்கித்) தொழுபவர்களே அத்தூண்களுக்கு அதிக உரிமை படைத்த வர்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுதுகொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்டபோது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, “இதை நோக்கித் தொழுவீராக!” என்று கூறினார்கள்.
502. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (அபூமுஸ்-ம்) சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு) செல்வது வழக்கம். சலமா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதிகள் (வைக்கப்படும் இடத்திற்கு) அருகிலுள்ள தூணருகே தொழுவார்கள். ஆகவே நான், “அபூமுஸ்-ம்! தாங்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே காண்கி றேனே (என்ன காரணம்)?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்து (அதை முன்னோக்கி நின்று) தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். (ஆகவேதான், நானும் இதைத் தேர்ந்தெடுத்துத் தொழுகி றேன்)” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 8
503. حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ كِبَارَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِنْدَ الْمَغْرِبِ. وَزَادَ شُعْبَةُ عَنْ عَمْرٍو عَنْ أَنَسٍ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 95 தூண்களை நோக்கித் தொழுவது “(பள்ளிவாச-ல் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களைவிட (அவற்றை நோக்கித்) தொழுபவர்களே அத்தூண்களுக்கு அதிக உரிமை படைத்த வர்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுதுகொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்டபோது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, “இதை நோக்கித் தொழுவீராக!” என்று கூறினார்கள்.
503. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மஃக்ரிப் (தொழுகைக்காக பாங்கு சொல்லும்) நேரம் மூத்த நபித்தோழர்கள் (இரு ரக்அத்கள் முன்சுன்னத் தொழுவதற் காகப் பள்ளிவாச-லுள்ள) தூண்களை நோக்கி விரைவதை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘(மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கு சொல்லும் நேரம் முதல்) நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) வெளியேறும்வரை’ எனக் கூடுதலாக ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 8
504. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ وَبِلاَلٌ، فَأَطَالَ ثُمَّ خَرَجَ، وَكُنْتُ أَوَّلَ النَّاسِ دَخَلَ عَلَى أَثَرِهِ فَسَأَلْتُ بِلاَلاً أَيْنَ صَلَّى قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ.
பாடம் : 96 கூட்டுத் தொழுகை அல்லாதவற்றைத் தூண்களுக்கு இடையே தொழுவது59
504. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) நபி (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக் குள் நுழைந்தனர். நீண்ட நேரம் உள்ளே இருந்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். (வெளியே வந்த வுடன்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முதல் ஆளாக நானே கஅபா வினுள் நுழைந்தேன்.

பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (கஅபாவுக்குள்) எங்கே (எந்த இடத்தில்) தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ‘முன்னால் உள்ள இரண்டு தூண் களுக்கு இடையில்’ என்று பதிலளித் தார்கள்


அத்தியாயம் : 8
505. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا، فَسَأَلْتُ بِلاَلاً حِينَ خَرَجَ مَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ، وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثُمَّ صَلَّى. وَقَالَ لَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ وَقَالَ عَمُودَيْنِ عَنْ يَمِينِهِ.
பாடம் : 96 கூட்டுத் தொழுகை அல்லாதவற்றைத் தூண்களுக்கு இடையே தொழுவது59
505. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத், பிலால், கஅபாவின் பொறுப்பாளரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார்கள். (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்(துகொண்டிருந்)த பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (உள்ளே) என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “ஒரு தூணைத் தமக்கு இடப் பக்கமும் மற்றொரு தூணைத் தமக்கு வலப் பக்கமும் மூன்று தூண்களைத் தமக்குப் பின்புறமும் இருக்குமாறு செய்(து, தொழு)தார்கள்” என்று கூறினார்கள். அன்று இறையில்லம் கஅபாவினுள் ஆறு தூண்கள் இருந்தன.

(அபூஅப்தில்லாஹ் புகாரீ ஆகிய நான் கூறுகின்றேன்:)

(இதன் அறிவிப்பாளர்களின் ஒருவ ரான) மா-க் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் “தமது வலப் பக்கம் இரண்டு தூண்கள் (இருக்குமாறு தொழுதார்கள்)” என்று இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.60

அத்தியாயம் : 8
506. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، كَانَ إِذَا دَخَلَ الْكَعْبَةَ مَشَى قِبَلَ وَجْهِهِ حِينَ يَدْخُلُ، وَجَعَلَ الْبَابَ قِبَلَ ظَهْرِهِ، فَمَشَى حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثَةِ أَذْرُعٍ، صَلَّى يَتَوَخَّى الْمَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِهِ بِلاَلٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِيهِ. قَالَ وَلَيْسَ عَلَى أَحَدِنَا بَأْسٌ إِنْ صَلَّى فِي أَىِّ نَوَاحِي الْبَيْتِ شَاءَ.
பாடம் : 97
506. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும்போது கஅபாவை நோக்கி நேராகச் சென்று, அதன் கதவு தமது முதுகுக்குப் பின்னால் இருக்குமாறு தமக்கும் எதிர் சுவருக்கு மிடையே சுமார் மூன்று முழ இடைவெளி விட்டு நெருக்கமாக நின்று தொழுவார்கள்.

(அதாவது,) நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் எந்த இடத்தில் நின்று தொழுததாகத் தமக்கு பிலால் (ரலி) அவர்கள் தெரிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். “நம்மில் ஒருவர் கஅபாவில் தாம் நாடிய எந்தப் பகுதியில் நின்று தொழுதாலும் தவறேது மில்லை” என்றும் கூறுவார்கள்.

அத்தியாயம் : 8
507. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا. قُلْتُ أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ. قَالَ كَانَ يَأْخُذُ هَذَا الرَّحْلَ فَيُعَدِّلُهُ فَيُصَلِّي إِلَى آخِرَتِهِ ـ أَوْ قَالَ مُؤَخَّرِهِ ـ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَفْعَلُهُ.
பாடம் : 98 ஊர்தி ஒட்டகம், ஒட்டகம், மரம், சிவிகை ஆகியவற்றை(த் தடுப்பாக வைத்து அவற்றை) நோக்கித் தொழுவது
507. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் (திறந்தவெளியில் தொழும்போது) தமது ஊர்தி ஒட்டகத்தை குறுக்கே (தடுப்பாக) நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் (அவர்களிடம்), “ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்...?” என்று கேட் டேன். “இந்தச் சிவிகையை எடுத்து நேராக வைத்து அதன் (பின்னால் இருக்கும்) சாய்மானக் குச்சியை நோக்கித் தொழுவார் கள்” என்று பதிலளித்தார்கள்.61

இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறே செய்துவந்தார்கள்.

அத்தியாயம் : 8
508. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَعَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ، فَيَجِيءُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَتَوَسَّطُ السَّرِيرَ فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَىِ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي.
பாடம் : 99 கட்டிலை நோக்கித் தொழுவது
508. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(“தொழுபவருக்குக் குறுக்கே நாய், கழுதை, பெண் ஆகியோர் சென்றால், தொழுகை முறிந்துவிடும் என்று ஒருவர் கூறினார். அவரிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்களை நாய்க்கும் கழுதைக்கும் சமமாக்குகிறீர்களா? நான் கட்டிலில் ஒருக்களித்துப் சாய்ந்து படுத்திருப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து நடுக் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்கள் பார்வையில் படும் விதமாக படுத்திருக்கப் பிடிக்காமல் நான் கட்டி-ன் இரு கால்களினூடே நுழைந்து வெளியேறிவிடுவேன்; எனது போர்வையி-ருந்தும் நழுவிச் சென்றேவிடுவேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 8
509. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا يُونُسُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي صَالِحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَحَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ قَالَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ الْعَدَوِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو صَالِحٍ السَّمَّانُ قَالَ رَأَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فِي يَوْمِ جُمُعَةٍ يُصَلِّي إِلَى شَىْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ شَابٌّ مِنْ بَنِي أَبِي مُعَيْطٍ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَدَفَعَ أَبُو سَعِيدٍ فِي صَدْرِهِ، فَنَظَرَ الشَّابُّ فَلَمْ يَجِدْ مَسَاغًا إِلاَّ بَيْنَ يَدَيْهِ، فَعَادَ لِيَجْتَازَ فَدَفَعَهُ أَبُو سَعِيدٍ أَشَدَّ مِنَ الأُولَى، فَنَالَ مِنْ أَبِي سَعِيدٍ، ثُمَّ دَخَلَ عَلَى مَرْوَانَ فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ مِنْ أَبِي سَعِيدٍ، وَدَخَلَ أَبُو سَعِيدٍ خَلْفَهُ عَلَى مَرْوَانَ فَقَالَ مَا لَكَ وَلاِبْنِ أَخِيكَ يَا أَبَا سَعِيدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَىْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْهُ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ "".
பாடம் : 100 தொழுதுகொண்டிருப்பவர் தமக்கு முன்னால் குறுக்கே நடந்து செல்பவரைத் தடுப்பது தொழுகையின் அமர்வின்போதும் (மக்கள் நடமாட்டம் நிறைந்த) கஅபாவில் தொழும்போதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் குறுக்கே சென்றவரைத் தடுத்திருக்கிறார்கள். “சண்டையிட்டுத்தான் அ(வ்வாறு செல்ப) வரைத் தடுக்க முடியுமென்றால் அவ்வாறு செய்துகொள்” என்றும் கூறுவார்கள்.
509. அபூஸா-ஹ் தக்வான் அஸ் ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் தமக்கு குறுக்கே செல்லாம-ருக்கத் தடுப்பு ஒன்றை வைத்துக்கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று தொழுது கொண்டிருப்பதை நான் கண்டேன்.

அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் (கையை வைத்துத்) தள்ளினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடைபாதை யேதும் இல்லை என்பதைக் கண்ட அந்த இளைஞர், மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப்போனார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் முன்பைவிடக் கடுமையாக அவரைத் தள்ளினார்கள்.

உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்துகொண்டது பற்றி அவர் முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள்.

அப்போது மர்வான், “உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்கும் இடையே என்ன பிரச்சினை, அபூசயீத் அவர்களே?” என்று கேட்டார்.

அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், “மக்கள் தமக்குக் குறுக்கே செல்லாம-ருக்கத் தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றைத் தடுப்பாக வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, யாரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்துசெல்ல முயன்றால், அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத்தால், அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன்தான் ஷைத்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான், இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்துகொண்டேன்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 8
510. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي فَقَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ "". قَالَ أَبُو النَّضْرِ لاَ أَدْرِي أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً.
பாடம் : 101 தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே நடந்து செல்வது பாவச் செயலாகும்.
510. புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் என்னை அபூஜுஹைம் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன கேட்டார்கள் என்பதை விசாரித்து (அறிந்து) வருமாறு கூறினார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு என்ன (பாவம்) ஏற்படும் என்பதை அறிந்தால், தொழுபவருக்கு முன்னால் செல்வதைவிட நாற்பதுவரை நிற்பது அவருக்கு நல்லதாக இருக்கும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அபுந்நள்ர் சா-ம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள், ‘நாற்பது நாட்கள்’ என்று சொன்னார்களா, அல்லது ‘நாற்பது மாதங்கள்’ என்று சொன்னார்களா, அல்லது ‘நாற்பது ஆண்டுகள்’ என்று சொன்னார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.62

அத்தியாயம் : 8
511. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ ـ يَعْنِي ابْنَ صُبَيْحٍ ـ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ فَقَالُوا يَقْطَعُهَا الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ. قَالَتْ قَدْ جَعَلْتُمُونَا كِلاَبًا، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ يُصَلِّي، وَإِنِّي لَبَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، وَأَنَا مُضْطَجِعَةٌ عَلَى السَّرِيرِ، فَتَكُونُ لِي الْحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَسْتَقْبِلَهُ فَأَنْسَلُّ انْسِلاَلاً. وَعَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ نَحْوَهُ.
பாடம் : 102 தொழுதுகொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமரலாமா? தொழுதுகொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமர்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள். தம்மால் தொழுபவரின் கவனம் சிதறும் என்றால்தான் இந்த நிலை. கவனம் சிதறாது என்றால் (அதனால் தவறில்லை. ஏனெனில்,) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “அவ்வாறு முன்னோக்குவதை நான் பொருட்படுத்தவில்லை. ஒரு மனிதர் இன் னொரு மனிதரின் தொழுகையை முறித்து விட முடியாது” என்று கூறியுள்ளார்கள்.
511. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழு கையை முறிக்கும் செயல்கள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது சிலர், (தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்லும்) “நாயும் கழுதையும் பெண்ணும் தொழு கையை முறித்துவிடுவர்” என்று கூறினர்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(பெண்களாகிய) எங்களை நாய்களுக்குச் சமமாக்கிவிட்டீர்களே? நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கையில் நான் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே கட்டி-ல் ஒருக்களித்துப் படுத்திருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். (தொழுது கொண்டிருக்கும்) அவர்களுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லாமல் (நான் கட்டி--ருந்து) நழுவிச் சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 8
512. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةٌ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ.
பாடம் : 103 உறங்கிக்கொண்டிருப்பவருக்குப் பின்னால் (அவரை நோக்கித்) தொழுவது
512. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களது விரிப்பில் குறுக்கே உறங்கிக்கொண்டிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அவர்கள் ‘வித்ர்’ தொழ எண்ணும் போது, என்னை எழுப்புவார்கள். (அதன்பின்) நான் ‘வித்ர்’ தொழுவேன்.

அத்தியாயம் : 8
513. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجْلاَىَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَىَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا. قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ.
பாடம் : 104 பெண்ணுக்குப் பின்னால் (அவளை நோக்கிக்) கூடுத லான தொழுகைகளைத் தொழு வது
513. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (படுத்து) உறங்கிக்கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லா திசையில் (அவர்கள் ‘சிரவணக்கம்’ செய்யுமிடத்தில்) இருக்கும். அவர்கள் சிரவணக்கத்திற்கு வரும்போது என்னைத் தமது விரலால் குத்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் எழுந்து நின்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக்கொள்வேன்.

அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இல்லை.

அத்தியாயம் : 8