4800. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ، قَالُوا لِلَّذِي قَالَ الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ فَيَسْمَعُهَا مُسْتَرِقُ السَّمْعِ، وَمُسْتَرِقُ السَّمْعِ هَكَذَا بَعْضُهُ فَوْقَ بَعْضٍ ـ وَوَصَفَ سُفْيَانُ بِكَفِّهِ فَحَرَفَهَا وَبَدَّدَ بَيْنَ أَصَابِعِهِ ـ فَيَسْمَعُ الْكَلِمَةَ، فَيُلْقِيهَا إِلَى مَنْ تَحْتَهُ ثُمَّ يُلْقِيهَا الآخَرُ إِلَى مَنْ تَحْتَهُ، حَتَّى يُلْقِيَهَا عَلَى لِسَانِ السَّاحِرِ أَوِ الْكَاهِنِ، فَرُبَّمَا أَدْرَكَ الشِّهَابُ قَبْلَ أَنْ يُلْقِيَهَا، وَرُبَّمَا أَلْقَاهَا قَبْلَ أَنْ يُدْرِكَهُ، فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ، فَيُقَالُ أَلَيْسَ قَدْ قَالَ لَنَا يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا فَيُصَدَّقُ بِتِلْكَ الْكَلِمَةِ الَّتِي سَمِعَ مِنَ السَّمَاءِ ".
பாடம்: 34. ‘சபஉ’ அத்தியாயம்1 (34:5ஆவது வசனத்திலுள்ள) ‘முஆஜிஸீன’ என்பதற்கு ‘முந்திச் செல்ல முயல்பவர்கள்’ என்று பொருள். (இதே வகையைச் சேர்ந்ததும் 29:22ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘முஃஜிஸீன’ எனும் சொல்லுக்கு ‘தப்பிச்செல்ல முயல்பவர்கள்’ என்பது பொருள். (முதலில் கூறப்பட்ட) ‘முஆஜிஸீன’ என்பதற்கு ‘தோல்வியுறச் செய்ய முயல்பவர்கள்’ என்றும் பொருள் உண்டு. ‘முஆஜிஸிய்ய’ என்பதற்கு ‘என்னை முந்திச் செல்ல முயல்பவன்’ என்று பொருள். (8:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சபகூ’ எனும் சொல்லுக்கு ‘தப்பிவிட்டார்கள்’ என்பது பொருள். ‘லா யுஃஜிஸூ’ எனும் சொல்லுக்கு ‘(நம்மிடமிருந்து) அவர்கள் தப்ப முடியாது’ என்று பொருள். (29:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸ்பிகூனா’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் நம்மை மிகைத்துவிடலாம் (என நினைக்கிறார்களா?)’ என்று பொருள். ‘முஆஜிஸீன’ என்பதற்கு ‘பரஸ்பரம் மிகைத்துவிட நினைப்பவர்கள்’ என்று பொருள். (அதாவது) ‘ஒவ்வொருவரும் தமது சகாவின் இயலாமையை வெளிப்படுத்திவிட எண்ணுவது’ என்று பொருள். (34:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிஅஷார்’ எனும் சொல்லுக்கு ‘பத்திலொரு பங்கு’ என்று பொருள். (34:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உக்ல்’ எனும் சொல்லுக்கு ‘கனிகள்’ என்று பொருள். (34:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பாஇத்’ என்பதற்கும் (இன்னோர் ஓதலில் வந்துள்ள) ‘பய்யித்’ என்பதற்கும் ‘தூரத்தை அதிகப்படுத்து’ என்றே பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (34:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யஃஸுபு’ எனும் சொல்லுக்கு ‘மறையாது’ என்று பொருள். (34:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அரிம்’ எனும் சொல்லுக்கு ‘அணைக்கட்டு’ என்பது பொருள். அதாவது அல்லாஹ் அனுப்பிய செந்நீர், அணைக்கட்டை உடைத்துத் தகர்த்து, ஓடையை அரித்துப் பள்ளமாக்கிவிட்டது. (சபஉ சமுதாயத்தாரின்) இரு தோட்டங்களும் இரு மருங்கிலும் காணாமல்போய்விட்டன. தண்ணீர் வடிந்ததும் அவ்விரு தோட்டங்களும் வறண்டு காய்ந்து போய்விட்டன. இந்தச் செந்நீர் அணைக்கட்டிலிருந்த தண்ணீர் அல்ல. மாறாக, அல்லாஹ் தான் நாடிய இடத்திலிருந்து அனுப்பிவைத்த சோதனையே ஆகும். அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறுகிகிறார்கள்:2 ‘யமன்’ வாசிகளின் மொழி வழக்கில் அணைக்கட்டிற்கே ‘அல்அரிம்’ எனப்படும். வேறுசிலர், ‘அல்அரிம்’ என்பது நீரோடையையே குறிக்கும் என்பர். (34:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாபிஃகாத்’ எனும் சொல்லுக்கு ‘இரும்புக் கவசங்கள்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (34:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘நுஜாஸீ’ என்பதற்கு நாம் ‘தண்டனை வழங்குகிறோம்’ என்று பொருள்.) ‘யுஜாஸா’ என்பதற்கு ‘தண்டிக்கப்படுவான்’ என்பது பொருள். (34:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஇழுக்கும் பிவாஹிதா’ (நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே விஷயத்தைத்தான்) என்பதன் கருத்தாவது: அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிவதைத்தான். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்னா வ ஃபுராதா’ என்பதற்கு ‘ஒருவரொருவராய், இருவரிருவராய்’ என்று பொருள். (34:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தனாவுஷ்’ எனும் சொல்லுக்கு ‘மறுமையிலிருந்து உலகை நோக்கித் திரும்புதல்’ என்று பொருள். (34:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ பைன மா யஷ்தஹூன்’ (அவர்கள் ஆசைப்பட்டவை) என்பது, செல்வங்கள், குழந்தைகள், (உலக) அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றைக் குறிக்கும். (அதே வசனத்திலுள்ள) ‘அஷ்யாஇஹிம்’ என்பதற்கு ‘அவர்களைப் போன்றவர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (34:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்ஜவாப்’ எனும் சொல்லுக்கு ‘பூமியிலுள்ள தடாகம் போன்ற’ என்பது பொருள். (34:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கம்த்’ என்பதற்கு ‘அராக் (மிஸ்வாக்) மரம்’ என்று பொருள். ‘அஸ்ல்’ என்பதற்கு ‘சவுக்கு மரம்’ என்று பொருள். ‘அல்அரிம்’ என்பதன் (சொற்)பொருள் ‘வலிமை வாய்ந்தது’ என்பதாகும். பாடம்: 1 (தீர்ப்பு நாளன்று) மக்களின் உள்ளங்களிலிருந்து அச்சம் அகற்றப்படும்போது (பரிந்துரை புரிபவர்களிடம்), ‘‘உங்களுடைய இறைவன் என்ன (பதில்) சொன்னான்?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, ‘‘சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனும் பெரியவனாகவும் இருக்கிறான்” என்று அவர்கள் கூறுவார்கள் (எனும் 34:23ஆவது வசனத்தொடர்)
4800. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறைமேல் சங்கிóயால் அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்களிடம்) ‘‘உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றார்கள்.

அதற்கு அவர்கள் வினவியோரிடம், ‘‘(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் -அவன் உயர்ந்தவன்; பெரியவன்”- என்று கூறுவர். உடனே அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்களும் (அவர்களிடமிருந்து) ஒட்டுக் கேட்பவர்களும் ஒருவர் மற்றவர் மேலே இவ்வாறு இருந்துகொண்டு செவியுற்றுவிடுகின்றனர்.

இதைக் கூறும்போது (அறிவிப்பாளர்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், தம் விரல்களைச் சாய்த்து அவற்றுக்கிடையே பிரித்துக்காட்டி (ஒன்றன்மீது ஒன்றை அடுக்கி) விளக்கிக்காட்டினார்கள்.

ஆக, முதலில் ஒட்டுக்கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழே இருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழே இருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்.

சில நேரங்களில் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து)விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்துவிடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன்வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகின்றான்.

அப்போது (இதைக் கேட்கும் மக்களிடையே) இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென அவர் (குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?” என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார்.3

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4801. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّفَا ذَاتَ يَوْمٍ فَقَالَ " يَا صَبَاحَاهْ " فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ قَالُوا مَا لَكَ قَالَ " أَرَأَيْتُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ الْعَدُوَّ يُصَبِّحُكُمْ أَوْ يُمَسِّيكُمْ أَمَا كُنْتُمْ تُصَدِّقُونِي ". قَالُوا بَلَى. قَالَ " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ". فَقَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ أَلِهَذَا جَمَعْتَنَا فَأَنْزَلَ اللَّهُ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ}.
பாடம்: 2 (இறைத்தூதரான) அவரோ ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார் (எனும் 34:46ஆவது வசனத்தொடர்)
4801. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீது ஏறி, ‘‘யா ஸபாஹா!” (‘‘உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!”) என்று கூறினார்கள்.4 உடனே அவர்களை நோக்கி குறைஷியர் ஒன்றுதிரண்டு வந்து, ‘‘உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘எதிரிகள், காலையிலோ அல்லது மாலையிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். ‘ஆம் (நம்புவோம்)’ என்று அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்” என்று சொன்னார்கள். உடனே அபூலஹப், ‘‘உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். உடனே அல்லாஹ், ‘‘அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்...” எனும் (111:1ஆவது) வசனத்தை அருளினான்.5

அத்தியாயம் : 65
4802. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ فَقَالَ " يَا أَبَا ذَرٍّ أَتَدْرِي أَيْنَ تَغْرُبُ الشَّمْسُ ". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ " فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ الْعَرْشِ، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ}"
பாடம்: 35. ‘அல்மலாயிகா’ (ஃபாத்திர்) அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (35:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்மீர்’ எனும் சொல்லுக்கு ‘பேரீச்சங் கொட்டையினை மூடியுள்ள (மெல்லிய) இழை’ என்பது பொருள். (35:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்கலா’ எனும் சொல்லுக்கு ‘(பாவச்) சுமை ஏற்றப்பட்ட (ஆத்மா)’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (35:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹரூர்’ எனும் சொல், இரவு நேர வெப்பத்தைக் குறிக்கும். (மற்றொரு சொல்லான) ‘சமூம்’ என்பது, பகல் நேர வெப்பத்தைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகின்றனர்: ‘அல்ஹரூர்’ என்பது, பகல் நேர வெயிலைக் குறிக்கும். (35:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகராபீப்’ எனும் சொல்லுக்கு ‘அடர்ந்த கரிய நிறம் கொண்டவை’ என்பது பொருள். பாடம்: 36. ‘யாசீன்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (36:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸ்ஸஸ்னா’ எனும் சொல்லுக்கு ‘நாம் வலுவூட்டினோம்’ என்று பொருள். (36:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யா ஹஸ்ரத்தன் அலல் இபாத்’ (அந்தோ! அடியார்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே!) என்பதன் கருத்தாவது: இறைத் தூதர்களை அவர்கள் பரிகாசம் செய்ததே அவர்களது நஷ்டத்திற்குக் காரணமாக அமைந்தது. (36:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் துத்ரிகல் கமர’ (சூரியன் சந்திரனை எட்டிப்பிடிக்க முடியாது) என்பதன் கருத்தாவது: சூரியன், சந்திரன் இரண்டில் ஒன்றின் ஒளி மற்றதன் ஒளியை மறைக்காது; அவற்றுக்கு அந்தத் தகுதியுமில்லை. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாபிக்குந் நஹார்’ (இரவு பகலை முந்த முடியாது) என்பதன் கருத்தாவது: இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக விடாது பின்தொடரும். (36:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஸ்லகு’ என்பதற்கு ‘(இரவு, பகல்) ஒன்றிலிருந்து மற்றொன்றை நாம் வெளியேற்றுகிறோம்; அவை ஒன்றோடொன்று சேராமல் தனியாகவே சென்றுகொண்டிருக்கின்றன’ என்று பொருள். (36:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிம் மிஸ்லிஹி’ எனும் சொற்றொடருக்கு, ‘அதைப் போன்ற கால்நடைகளை’ என்று பொருள். (36:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபாகிஹூன்’ எனும் சொல் இன்னோர் ஓதலில் ‘ஃபகிஹூன்’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘ஃபகிஹூன்’ என்பதற்கு ‘(இன்பத்தில் திளைத்து) மகிழ்பவர்கள்’ என்று பொருள். (36:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்தும் முஹ்ளரூன்’ எனும் சொற்றொடருக்கு ‘‘(சிலைவணங்கிகளுக்கு எதிரான) படைகளாக, (அந்தச் சிலைகளே) விசாரணை நாளில் ஆஜர் படுத்தப்படும்” என்று பொருள். ‘‘(36:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஷ்ஹƒன்’ எனும் சொல்லுக்கு ‘நிரப்பப்பட்ட’ என்பது பொருள்” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (36:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிருக்கும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களின் சோதனைகள்’ என்று பொருள். (36:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யன்சிலூன்’ எனும் சொல்லுக்கு ‘வெளியேறுவார்கள்’ என்பது பொருள். (36:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்கதினா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் வெளியேறுமிடம்’ என்று பொருள். (36:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸைனாஹு’ எனும் சொல்லுக்கு ‘நாம் எல்லாவற்றையும் பாதுகாத்து வைத்துள்ளோம்’ என்று பொருள். (36:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மகானத்திஹிம்’ எனும் சொல்லும், ‘மகானிஹிம்’ எனும் சொல்லும் (‘அவர்களது இருப்பிடம்’ எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். பாடம்: 1 ‘‘சூரியனும் (நமது வல்லமையைப் பறைசாற்றும் பிறிதொரு சான் றாகும்). அது, தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்” எனும் (36:38ஆவது) இறைவசனம்
4802. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்பது உமக்குத் தெரியுமா, அபூதர்ரே?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது இறை அரியணைக்கு (அர்ஷ்) கீழே சிரவணக்கம் (சஜ்தா) செய்வதற்காகச் செல்கின்றது.

இதைத்தான், ‘‘சூரியன், தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இது வல்லமை மிக்கவனும் நன்கறிந்தோனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்” எனும் (36:38ஆவது) இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள்.2


அத்தியாயம் : 65
4803. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ قَوْلِهِ تَعَالَى {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا} قَالَ " مُسْتَقَرُّهَا تَحْتَ الْعَرْشِ ".
பாடம்: 35. ‘அல்மலாயிகா’ (ஃபாத்திர்) அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (35:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்மீர்’ எனும் சொல்லுக்கு ‘பேரீச்சங் கொட்டையினை மூடியுள்ள (மெல்லிய) இழை’ என்பது பொருள். (35:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்கலா’ எனும் சொல்லுக்கு ‘(பாவச்) சுமை ஏற்றப்பட்ட (ஆத்மா)’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (35:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹரூர்’ எனும் சொல், இரவு நேர வெப்பத்தைக் குறிக்கும். (மற்றொரு சொல்லான) ‘சமூம்’ என்பது, பகல் நேர வெப்பத்தைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகின்றனர்: ‘அல்ஹரூர்’ என்பது, பகல் நேர வெயிலைக் குறிக்கும். (35:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகராபீப்’ எனும் சொல்லுக்கு ‘அடர்ந்த கரிய நிறம் கொண்டவை’ என்பது பொருள். பாடம்: 36. ‘யாசீன்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (36:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸ்ஸஸ்னா’ எனும் சொல்லுக்கு ‘நாம் வலுவூட்டினோம்’ என்று பொருள். (36:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யா ஹஸ்ரத்தன் அலல் இபாத்’ (அந்தோ! அடியார்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே!) என்பதன் கருத்தாவது: இறைத் தூதர்களை அவர்கள் பரிகாசம் செய்ததே அவர்களது நஷ்டத்திற்குக் காரணமாக அமைந்தது. (36:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் துத்ரிகல் கமர’ (சூரியன் சந்திரனை எட்டிப்பிடிக்க முடியாது) என்பதன் கருத்தாவது: சூரியன், சந்திரன் இரண்டில் ஒன்றின் ஒளி மற்றதன் ஒளியை மறைக்காது; அவற்றுக்கு அந்தத் தகுதியுமில்லை. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாபிக்குந் நஹார்’ (இரவு பகலை முந்த முடியாது) என்பதன் கருத்தாவது: இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக விடாது பின்தொடரும். (36:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஸ்லகு’ என்பதற்கு ‘(இரவு, பகல்) ஒன்றிலிருந்து மற்றொன்றை நாம் வெளியேற்றுகிறோம்; அவை ஒன்றோடொன்று சேராமல் தனியாகவே சென்றுகொண்டிருக்கின்றன’ என்று பொருள். (36:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிம் மிஸ்லிஹி’ எனும் சொற்றொடருக்கு, ‘அதைப் போன்ற கால்நடைகளை’ என்று பொருள். (36:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபாகிஹூன்’ எனும் சொல் இன்னோர் ஓதலில் ‘ஃபகிஹூன்’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘ஃபகிஹூன்’ என்பதற்கு ‘(இன்பத்தில் திளைத்து) மகிழ்பவர்கள்’ என்று பொருள். (36:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்தும் முஹ்ளரூன்’ எனும் சொற்றொடருக்கு ‘‘(சிலைவணங்கிகளுக்கு எதிரான) படைகளாக, (அந்தச் சிலைகளே) விசாரணை நாளில் ஆஜர் படுத்தப்படும்” என்று பொருள். ‘‘(36:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஷ்ஹƒன்’ எனும் சொல்லுக்கு ‘நிரப்பப்பட்ட’ என்பது பொருள்” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (36:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிருக்கும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களின் சோதனைகள்’ என்று பொருள். (36:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யன்சிலூன்’ எனும் சொல்லுக்கு ‘வெளியேறுவார்கள்’ என்பது பொருள். (36:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்கதினா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் வெளியேறுமிடம்’ என்று பொருள். (36:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸைனாஹு’ எனும் சொல்லுக்கு ‘நாம் எல்லாவற்றையும் பாதுகாத்து வைத்துள்ளோம்’ என்று பொருள். (36:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மகானத்திஹிம்’ எனும் சொல்லும், ‘மகானிஹிம்’ எனும் சொல்லும் (‘அவர்களது இருப்பிடம்’ எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். பாடம்: 1 ‘‘சூரியனும் (நமது வல்லமையைப் பறைசாற்றும் பிறிதொரு சான் றாகும்). அது, தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்” எனும் (36:38ஆவது) இறைவசனம்
4803. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது” எனும் (36:38 ஆவது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நிலைகொள்ளுமிடம் இறைவனின் அரியணைக்குக் கீழே உள்ளது” என்று கூறினார்கள்.3

அத்தியாயம் : 65
4804. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَكُونَ خَيْرًا مِنِ ابْنِ مَتَّى ".
பாடம்: 37. ‘அஸ்ஸாஃப்பாத்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (37:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுக்தஃபூன’ எனும் சொல்லுக்கு ‘(ஷைத்தான்களான) அவர்கள் (வானத்தின்) எல்லாத் திசைகளிலிருந்தும் வீசி எறியப்படுவார்கள்’ என்று பொருள். (34:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இதே வகைச் சொல்லான) ‘வ யக்ஃதிஃபூன’ எனும் தொடருக்கு ‘மறைவான விஷயங்கள் குறித்து எல்லா இடங்களிலிருந்தும் (வெற்று யூகங்களை) எறிந்துகொண்டிருந்தார்கள்’ என்பது பொருள். (37:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வாஸிப்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’என்று பொருள். (37:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாஸிப்’ எனும் சொல்லுக்கு ‘ஒட்டிப் பிடிக்கக்கூடியது’ என்று பொருள். (37:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃதூனனா அனில் யமீன்’ எனும் வாக்கியத்திற்கு ‘‘நீங்கள் சத்திய வழியில் வருவதுபோல் (தவறான வழிக்குக் கொண்டு செல்வதற்காக) எங்களிடம் வந்துகொண்டிருந்தீர்கள்” என்பது பொருள். இதை (மறுமையில்) இறைமறுப்பாளர்கள், ஷைத்தான்க(ளான தம் தலைவர்க)ளை நோக்கிக் கூறுவார்கள். (37:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகவ்ல்’ எனும் சொல்லுக்கு ‘வயிற்று உபாதை’ என்று பொருள். ‘வலாஹும் அன்ஹா யுன்ஸஃபூன்’ எனும் வாக்கியத்திற்கு ‘(சொர்க்கத்தின் மதுவினால்) அவர்களின் அறிவு அகன்றுவிடாது’ என்று பொருள். (37:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கரீன்’ (நண்பன்) எனும் சொல் ஷைத்தானைக் குறிக்கிறது. (37:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹ்ரஊன்’ எனும் சொல்லுக்கு ‘ஓடுவதைப் போன்று (தம் மூதாதையர்களின் அடிச்சுவட்டைப்) பின்பற்றினார்கள்’ என்று பொருள். (37:94ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸிஃப்ஃபூன்’ எனும் சொல், அடுத்தடுத்து நெருக்கமாகக் கால் வைத்து நடப்பதைக் குறிக்கும். (37:158ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ பைனல் ஜின்னத்தி நஸபா’ (அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையே வமிசாவளி உறவை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்) என்பதன் கருத்தாவது: ‘‘வானவர்கள் அல்லாஹ்வின் புதல்வியர்; அவர்களுடைய அன்னையர் முக்கிய ஜின்களின் புதல்வியர்” எனக் குறைஷி இறைமறுப்பாளர்கள் கூறிவந்தனர். (இதற்கு மறுப்பாக) ‘‘அந்த ஜின்களும் விசாரணைக்காகத் தாங்கள் ஆஜர்படுத்தப்படுவோம் என்பதை அறிந்துள்ளனர்” என அல்லாஹ் கூறினான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (37:165ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல நஹ்னுஸ் ஸாஃப்பூன்’ (நாங்கள் அணிவகுத்து நிற்கின்றோம்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. (37:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸிராத்துல் ஜஹீம்’ எனும் சொல்லுக்கு ‘நரகத்தின் நடுப்பகுதி’ என்று பொருள். (37:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல ஷவ்பன்’ என்பதற்கு ‘கொதிக்கும் நீரில் அவர்களது உணவுக் கலக்கப்படும்’ என்று பொருள். (37:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘துஹூர்’ எனும் சொல்லின் செயப்பாட்டு எச்ச வினையும், 7:18; 17:18; 17:39 ஆகிய வசனங்களின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘மத்ஹூரா’ எனும் சொல்லுக்கு ‘விரட்டப்பட்டவன்’ என்பது பொருள். (37:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பைளும் மக்னூன்’ எனும் சொல்லுக்கு ‘(சிப்பிக்குள்) மறை(த்துப் பாதுகா)க்கப்பட்டிருக்கும் முத்து’ என்பது பொருள். (37:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ தரக்னா அலைஹி ஃபில்ஆகிரீன்’ என்பதன் கருத்தாவது: (இறைத்தூதர்) நூஹுடைய புகழை மறுமை நாள்வரை பேசப்படும்படி நாம் விட்டுவைத்தோம். (37:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸ்தஸ்கிரூன்’ எனும் சொல்லுக்கு ‘ஏளனம் செய்கிறார்கள்’ என்று பொருள். (37:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பஅல்’ எனும் சொல்லுக்கு (யமனியரின் வழக்கில்) ‘தெய்வம்’ என்பது பொருள். (38:10, 40:36 ஆகிய வசனங்களின் மூலங்களிலுள்ள) ‘அல்அஸ்பாப்’ எனும் சொல், வானத்தைக் குறிக்கிறது. பாடம்: 1 ‘‘நிச்சயமாக யூனுஸும் (இறைத்) தூதர்களாக அனுப்பப்பட்ட வர்களில் ஒருவராவார்” எனும் (37:139ஆவது) இறைவசனம்
4804. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘எவரும் தம்மை (இறைத்தூதர் யூனுஸ்) இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர் என வாதிடுவது தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 65
4805. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى فَقَدْ كَذَبَ ".
பாடம்: 37. ‘அஸ்ஸாஃப்பாத்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (37:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுக்தஃபூன’ எனும் சொல்லுக்கு ‘(ஷைத்தான்களான) அவர்கள் (வானத்தின்) எல்லாத் திசைகளிலிருந்தும் வீசி எறியப்படுவார்கள்’ என்று பொருள். (34:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இதே வகைச் சொல்லான) ‘வ யக்ஃதிஃபூன’ எனும் தொடருக்கு ‘மறைவான விஷயங்கள் குறித்து எல்லா இடங்களிலிருந்தும் (வெற்று யூகங்களை) எறிந்துகொண்டிருந்தார்கள்’ என்பது பொருள். (37:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வாஸிப்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’என்று பொருள். (37:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாஸிப்’ எனும் சொல்லுக்கு ‘ஒட்டிப் பிடிக்கக்கூடியது’ என்று பொருள். (37:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃதூனனா அனில் யமீன்’ எனும் வாக்கியத்திற்கு ‘‘நீங்கள் சத்திய வழியில் வருவதுபோல் (தவறான வழிக்குக் கொண்டு செல்வதற்காக) எங்களிடம் வந்துகொண்டிருந்தீர்கள்” என்பது பொருள். இதை (மறுமையில்) இறைமறுப்பாளர்கள், ஷைத்தான்க(ளான தம் தலைவர்க)ளை நோக்கிக் கூறுவார்கள். (37:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகவ்ல்’ எனும் சொல்லுக்கு ‘வயிற்று உபாதை’ என்று பொருள். ‘வலாஹும் அன்ஹா யுன்ஸஃபூன்’ எனும் வாக்கியத்திற்கு ‘(சொர்க்கத்தின் மதுவினால்) அவர்களின் அறிவு அகன்றுவிடாது’ என்று பொருள். (37:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கரீன்’ (நண்பன்) எனும் சொல் ஷைத்தானைக் குறிக்கிறது. (37:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹ்ரஊன்’ எனும் சொல்லுக்கு ‘ஓடுவதைப் போன்று (தம் மூதாதையர்களின் அடிச்சுவட்டைப்) பின்பற்றினார்கள்’ என்று பொருள். (37:94ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸிஃப்ஃபூன்’ எனும் சொல், அடுத்தடுத்து நெருக்கமாகக் கால் வைத்து நடப்பதைக் குறிக்கும். (37:158ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ பைனல் ஜின்னத்தி நஸபா’ (அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையே வமிசாவளி உறவை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்) என்பதன் கருத்தாவது: ‘‘வானவர்கள் அல்லாஹ்வின் புதல்வியர்; அவர்களுடைய அன்னையர் முக்கிய ஜின்களின் புதல்வியர்” எனக் குறைஷி இறைமறுப்பாளர்கள் கூறிவந்தனர். (இதற்கு மறுப்பாக) ‘‘அந்த ஜின்களும் விசாரணைக்காகத் தாங்கள் ஆஜர்படுத்தப்படுவோம் என்பதை அறிந்துள்ளனர்” என அல்லாஹ் கூறினான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (37:165ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல நஹ்னுஸ் ஸாஃப்பூன்’ (நாங்கள் அணிவகுத்து நிற்கின்றோம்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. (37:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸிராத்துல் ஜஹீம்’ எனும் சொல்லுக்கு ‘நரகத்தின் நடுப்பகுதி’ என்று பொருள். (37:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல ஷவ்பன்’ என்பதற்கு ‘கொதிக்கும் நீரில் அவர்களது உணவுக் கலக்கப்படும்’ என்று பொருள். (37:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘துஹூர்’ எனும் சொல்லின் செயப்பாட்டு எச்ச வினையும், 7:18; 17:18; 17:39 ஆகிய வசனங்களின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘மத்ஹூரா’ எனும் சொல்லுக்கு ‘விரட்டப்பட்டவன்’ என்பது பொருள். (37:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பைளும் மக்னூன்’ எனும் சொல்லுக்கு ‘(சிப்பிக்குள்) மறை(த்துப் பாதுகா)க்கப்பட்டிருக்கும் முத்து’ என்பது பொருள். (37:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ தரக்னா அலைஹி ஃபில்ஆகிரீன்’ என்பதன் கருத்தாவது: (இறைத்தூதர்) நூஹுடைய புகழை மறுமை நாள்வரை பேசப்படும்படி நாம் விட்டுவைத்தோம். (37:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸ்தஸ்கிரூன்’ எனும் சொல்லுக்கு ‘ஏளனம் செய்கிறார்கள்’ என்று பொருள். (37:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பஅல்’ எனும் சொல்லுக்கு (யமனியரின் வழக்கில்) ‘தெய்வம்’ என்பது பொருள். (38:10, 40:36 ஆகிய வசனங்களின் மூலங்களிலுள்ள) ‘அல்அஸ்பாப்’ எனும் சொல், வானத்தைக் குறிக்கிறது. பாடம்: 1 ‘‘நிச்சயமாக யூனுஸும் (இறைத்) தூதர்களாக அனுப்பப்பட்ட வர்களில் ஒருவராவார்” எனும் (37:139ஆவது) இறைவசனம்
4805. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவர்” என்று எவர் (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகின்றாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்.2

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4806. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَوَّامِ، قَالَ سَأَلْتُ مُجَاهِدًا عَنِ السَّجْدَةِ، فِي ص قَالَ سُئِلَ ابْنُ عَبَّاسٍ فَقَالَ {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ}. وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَسْجُدُ فِيهَا.
பாடம்: 38. ‘ஸாத்’ அத்தியாயம்1 பாடம் : 1
4806. அவ்வாம் பின் ஹவ்ஷப் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்திலுள்ள (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) தொடர்பாகக் கேட்டேன்.

அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்ட போது அதற்கு அன்னார், ‘‘(நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே நீங்களும் பின்பற்றிச் செல்லுங்கள்...” என்ற (6:90ஆவது) வசனத்தைப் பதிலாகச் சொன்னார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வது வழக்கம்.2


அத்தியாயம் : 65
4807. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنِ الْعَوَّامِ، قَالَ سَأَلْتُ مُجَاهِدًا عَنْ سَجْدَةِ، ص فَقَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ مِنْ أَيْنَ سَجَدْتَ فَقَالَ أَوَمَا تَقْرَأُ {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ} {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} فَكَانَ دَاوُدُ مِمَّنْ أُمِرَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم أَنْ يَقْتَدِيَ بِهِ، فَسَجَدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. {عُجَابٌ} عَجِيبٌ. الْقِطُّ الصَّحِيفَةُ هُوَ هَا هُنَا صَحِيفَةُ الْحَسَنَاتِ. وَقَالَ مُجَاهِدٌ {فِي عِزَّةٍ} مُعَازِّينَ. {الْمِلَّةِ الآخِرَةِ} مِلَّةُ قُرَيْشٍ. الاِخْتِلاَقُ الْكَذِبُ. الأَسْبَابُ طُرُقُ السَّمَاءِ فِي أَبْوَابِهَا {جُنْدٌ مَا هُنَالِكَ مَهْزُومٌ} يَعْنِي قُرَيْشًا {أُولَئِكَ الأَحْزَابُ} الْقُرُونُ الْمَاضِيَةُ. {فَوَاقٍ} رُجُوعٍ. {قِطَّنَا} عَذَابَنَا {اتَّخَذْنَاهُمْ سُخْرِيًّا} أَحَطْنَا بِهِمْ أَتْرَابٌ أَمْثَالٌ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ الأَيْدُ الْقُوَّةُ فِي الْعِبَادَةِ الأَبْصَارُ الْبَصَرُ فِي أَمْرِ اللَّهِ، {حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّي} مِنْ ذِكْرٍ. {طَفِقَ مَسْحًا} يَمْسَحُ أَعْرَافَ الْخَيْلِ وَعَرَاقِيبَهَا. {الأَصْفَادِ} الْوَثَاقِ.
பாடம்: 38. ‘ஸாத்’ அத்தியாயம்1 பாடம் : 1
4807. அவ்வாம் பின் ஹவ்ஷப் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய)சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று கேட்டேன்.

அதற்கு அன்னார், ‘‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்” என்று தொடங்கி, ‘‘(நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களு டைய வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்...” என்று முடியும் (6:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள்.

பிறகு, ‘‘எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டிருந்ததோ அத்தகையவர்களில் தாவூத் (அலை) அவர்களும் ஒருவராவார். எனவே (நபி தாவூத் (அலை) அவர்களைப் பின்பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்தார்கள். (எனவே, நாமும் ‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக சஜ்தா செய்ய வேண்டும்) என்று பதிலளித்தார்கள்.3

(38:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உஜாப்’ எனும் சொல்லுக்கு ‘வியப்புக்குரியது’ என்று பொருள்.

(38:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கித்து’ எனும் சொல்லுக்கு (பொதுவாக) ‘ஏடு’ என்பது பொருள். ஆனால், இங்கு ‘நற்செயல்களின் பதிவேடு’ என்று பொருள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(38:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்ஸத்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டவர்கள்’ என்று பொருள்.

(38:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மில்லத்துல் ஆகிரா’ (வேறு சமுதாயம்) எனும் சொல், குறைஷியர் சமுதாயத்தைக் குறிக்கிறது.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இக்திலாக்’ எனும் சொல்லுக்கு ‘பொய்’ என்பது பொருள்.

(38:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்பாப்’ எனும் சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.

(38:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்த்’ (படையினர்) எனும் சொல் குறைஷியரைக் குறிக்கிறது.

(38:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாயிகல் அஹ்ஸாப்’ (அந்தக் கூட்டத்தார்) என்பது முந்தைய தலைமுறை’னரைக் குறிக்கும்.

(38:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபவாக்’ (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு ‘(உலகின்பால்) திரும்புதல்’ என்று பொருள்.

(38:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்தனா’ எனும் சொல்லுக்கு ‘எங்களின் வேதனையை’ என்று பொருள்.

(38:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்தகத்னாஹும் சிக்ரிய்யா’ (நாம் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா?) என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா?

(38:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்ராப்’ எனும் சொல்லுக்கு ‘வயதொத்தவர்கள்’ என்பது பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(38:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அய்த்’ எனும் சொல்லுக்கு ‘வணக்க வழிபாட்டில் செயலாற்றல்’ என்றும், ‘அல்அப்ஸார்’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை’ என்றும் பொருள்.

(38:32ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஹுப்பல் கைரி அன் திக்ரி ரப்பீ’ எனும் சொற்றொடரிலுள்ள ‘அன்’ எனும் இடைச்சொல்லுக்கு ‘மின்’ எனும் இடைச்சொல்லின் பொருளாகும். (இதன்படி,) ‘‘என்னுடைய இறைவனை நினைக்காமல் இந்த நல்ல (குதிரைச்) செல்வங்களில் லயித்துவிட்டேன்” என்று இவ்வசனத்திற்குப் பொருள் அமையும்.

(38:33ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘தஃபிக்க மஸ்ஹன்’ என்பதற்கு ‘அவற்றின் கணைக்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுக்கலானார்’ என்று பொருள்.4

(38:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்ஃபாத்’ எனும் சொல்லுக்கு ‘விலங்குச் சங்கிலி’ என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4808. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ عَلَىَّ الْبَارِحَةَ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ لِيَقْطَعَ عَلَىَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ وَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي ". قَالَ رَوْحٌ فَرَدَّهُ خَاسِئًا.
பாடம்: 2 ‘‘(இறைவா!) எனக்குப்பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! நிச்சயமாக, நீயே உண்மையான கொடையாளன்” (என்று சுலைமான் கூறினார்) எனும் (38:35ஆவது) வசனத்தொடர்
4808. நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள்:

முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது -என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள்- அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன்.

அப்போது ‘‘இறைவா! எனக்குப்பின் வேறு எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக” (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘‘ஆகவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்” என்றும் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம் : 65
4809. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ يَا أَيُّهَا النَّاسُ مَنْ عَلِمَ شَيْئًا فَلْيَقُلْ بِهِ، وَمَنْ لَمْ يَعْلَمْ فَلْيَقُلِ اللَّهُ أَعْلَمُ، فَإِنَّ مِنَ الْعِلْمِ أَنْ يَقُولَ لِمَا لاَ يَعْلَمُ اللَّهُ أَعْلَمُ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ} وَسَأُحَدِّثُكُمْ عَنِ الدُّخَانِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَعَا قُرَيْشًا إِلَى الإِسْلاَمِ فَأَبْطَئُوا عَلَيْهِ فَقَالَ " اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ "، فَأَخَذَتْهُمْ سَنَةٌ فَحَصَّتْ كُلَّ شَىْءٍ حَتَّى أَكَلُوا الْمَيْتَةَ وَالْجُلُودَ حَتَّى جَعَلَ الرَّجُلُ يَرَى بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ دُخَانًا مِنَ الْجُوعِ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ * يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ} قَالَ فَدَعَوْا {رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ * أَنَّى لَهُمُ الذِّكْرَى وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُبِينٌ * ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَجْنُونٌ * إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلاً إِنَّكُمْ عَائِدُونَ} أَفَيُكْشَفُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ قَالَ فَكُشِفَ ثُمَّ عَادُوا فِي كُفْرِهِمْ، فَأَخَذَهُمُ اللَّهُ يَوْمَ بَدْرٍ قَالَ اللَّهُ تَعَالَى {يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى إِنَّا مُنْتَقِمُونَ}.
பாடம்: 3 ‘‘(நபியே! கூறுக:) நான் (இல்லாத தைச் சொல்லி) பாவனை செய் வோரில் ஒருவன் அல்லன்” எனும் (38:86ஆவது) வசனத்தொடர்
4809. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், ‘‘மக்களே! ஒன்றை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும்! அறியாதவர், ‘அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று கூறட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததைக் குறித்து ‘அல்லாஹ்வே நன்கறிந்தவன் (எனக்குத் தெரியாது)’ என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும்.

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘(நபியே!) கூறுக: நான் இதற்காக உங்களிடம் கூலி எதையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனும் அல்லன்” என்று தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கூறியுள்ளான். (38:86)

இதோ (கிந்தா எனுமிடத்தில் ஒருவர் பேசிவரும்) புகையைக் குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன் (கேளுங்கள்): அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை இஸ்லாத்திற்கு (வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அவர்கள் அதில் காலம் தாழ்த்தினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைவா! (இவர்களைத் திருத்த உன் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் காலத்து ஏழு (பஞ்சம் நிலவிய) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்!” எனப் பிரார்த்தித்தார்கள். எனவே, அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அது அனைத்தையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், (பஞ்சத்தின் கோரப் பிடியினால்) அவர்கள் பிணத்தையும், (பிராணிகளின்) தோல்களையும் உண்டார்கள். மேலும், கடும் பசியால் (கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகையைத்தான் காண்பார்.

அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) தெளிவானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும். அது வதைக்கும் வேதனையாகும். (44:10,11)

உடனே குறைஷியர், ‘‘எங்கள் இறைவா! எங்களைவிட்டு இவ்வேதனையை நீக்கிவிடு; நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கிறோம்” என்று வேண்டினர். (44:12)

‘‘(ஆனால், அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுணர்ச்சி எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) வெளிப்படையான தூதர் அவர்களிடம் வந்தே இருக்கின்றார். எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து (அவரைப் பற்றி, ‘இவர்) எவராலோ பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்’ என்று கூறினர்.

மெய்யாகவே (நீங்கள் திருந்தக் கூடுமென்று) அவ்வேதனையை (இன்னும்) சிறிது (காலத்திற்கு) நீக்கி வைத்தோம். (எனினும்,) நிச்சயமாக நீங்கள், (பாவம் செய்யவே) மீளுகின்றீர்கள்.” (44:13-15)

(நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றது.) ஆனால், மறுமை நாள் வேதனை (அவர்களைவிட்டு) அகற்றப்படவா போகிறது? ஆக, பஞ்சம் அகற்றப்பட்டது. பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்பிற்கே திரும்பிவிட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை பத்ர் போரின்போது (கடுமையாகப்) பிடித்தான்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். (44:16)6

அத்தியாயம் : 65
4810. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ يَعْلَى إِنَّ سَعِيدَ بْنَ جُبَيْرٍ أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ نَاسًا، مِنْ أَهْلِ الشِّرْكِ كَانُوا قَدْ قَتَلُوا وَأَكْثَرُوا وَزَنَوْا وَأَكْثَرُوا، فَأَتَوْا مُحَمَّدًا صلى الله عليه وسلم فَقَالُوا إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُو إِلَيْهِ لَحَسَنٌ لَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً. فَنَزَلَ {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ} وَنَزَلَ {قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لاَ تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ}
பாடம்: 39. ‘அஸ்ஸுமர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (39:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்தக்கீ பி வஜ்ஹிஹி’ (மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தால் தடுத்துக்கொள்வான்) என்பதன் கருத்தாவது: தலைகீழாக இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் எறியப்படுவான். இதையே ‘‘நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமை நாளில் நிம்மதியாக வருபவன் சிறந்தவனா?” எனும் (41:40ஆவது) வசனம் குறிப்பிடுகிறது. (39:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இவஜ்’ (கோணல்) எனும் சொல்லுக்கு ‘குழப்பம்’ என்று பொருள். (39:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ரஜுலன் சலமன் லி ரஜுல்’ என்பதன் பொருளாவது: ஒரே மனிதனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல மனிதன். இது, இணைவைப்பாளர்களின் பொய்த் தெய்வங்களுக்கும் உண்மையான (ஒரே) இறைவனுக்கும் சொல்லப்பட்ட ஓர் உவமையாகும். ‘‘(குறைஷிக் குலத்தோரான) இவர்கள் அவன் அல்லாதவர்களைக் கொண்டு (நபியே!) உங்களை அச்சுறுத்துகின்றனர்” எனும் (39:36ஆவது) வசனத்திற்கு, (‘அல்லாஹ் அல்லாத) சிலைகளைக் காட்டி அச்சுறுத்துகின்றனர்’ என்று பொருள். (39:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கவ்வல்னா’ எனும் சொல்லுக்கு, ‘நாம் வழங்கினோம்’ என்பது பொருள். ‘‘எந்த மனிதர் உண்மையைக் கொண்டுவந்தாரோ, மேலும், எவர் அவரை உண்மையாளர் என்று ஏற்றுக்கொண்டாரோ அத்தகையவர்கள்தான் வேதனையிலிருந்து தப்பக்கூடியவர்கள்” எனும் (39:33ஆவது) வசனத்திலுள்ள ‘உண்மை’ என்பது குர்ஆனையும், ‘அவரை உண்மையாளர் என ஏற்றுக்கொண்டவர்’ என்பது இறைநம்பிக்கையாளரையும் குறிக்கும். இத்தகைய இறைநம்பிக்கையாளர் (நாளை) மறுமை நாளில் (அல்லாஹ்வின் முன்) வந்து நின்றுகொண்டு, ‘‘(இறைவா!) எனக்கு நீ வழங்கிய இந்த குர்ஆனில் உள்ள (உபதேசப்)படி நான் (உலகில்) செயல்பட்டேன்” என்று கூறுவார். (39:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முதஷாகிசூன்’ எனும் சொல், நேர்மையை விரும்பாத முரடர்களைக் குறிக்கும். ‘சலமன்’ எனும் சொல்லும் ‘சாலிமன்’ எனும் சொல்லும் நல்லவரைக் குறிக்கும். (39:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஷ்மஅஸ்ஸத்’ என்பதற்கு ‘வெறுக்கும்’ என்பது பொருள். (39:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி மஃபாஸத்திஹிம்’ எனும் சொல், ‘ஃபவ்ஸ்’ (வெற்றி) எனும் வேர்ச்சொல்லிருந்து பிரிந்ததாகும். (39:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹாஃப்பீன்’ எனும் சொல்லுக்கு ‘(இறைவனின் அரியாசனத்தை,) அதன் நாலாபாகங்களையும் சூழ்ந்த வண்ணம் சுற்றி வந்துகொண்டிருப்பார்கள்’ என்று பொருள். (39:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்தஷாபிஹ்’ எனும் சொல் ‘இஷ்த்திபாஹ்’ (குழப்பம்) எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததன்று; ஷபஹ் (ஒப்பாகுதல்) எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். இதன்படி, ‘‘அல்லாஹ் அருளிய இந்த வேதத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகள் இல்லை. மாறாக, இதன் ஒரு வசனம் மற்றொரு வசனத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று ஒத்ததாய்த் திகழ்கிறது” என்று பொருள் அமையும். பாடம்: 1 ‘‘(நபியே!) கூறுவீராக: எல்லை மீறி தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவான்” எனும் (39:53ஆவது) இறைவசனம்
4810. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)” என்று கூறினர்.

அப்போது, ‘‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை...” எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது.

மேலும், ‘‘(நபியே!) கூறுவீராக: எல்லைமீறி தமக்குத்தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்...” எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 65
4811. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ حَبْرٌ مِنَ الأَحْبَارِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا مُحَمَّدُ، إِنَّا نَجِدُ أَنَّ اللَّهَ يَجْعَلُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ، وَالْمَاءَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ، وَسَائِرَ الْخَلاَئِقِ عَلَى إِصْبَعٍ، فَيَقُولُ أَنَا الْمَلِكُ. فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ تَصْدِيقًا لِقَوْلِ الْحَبْرِ ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ}
பாடம்: 2 ‘‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை” எனும் (39:67ஆவது) வசனத்தொடர்
4811. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல்மீதும், பூமிகளை ஒரு விரல்மீதும், மரங்களை ஒரு விரல்மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல்மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல்மீதும் வைத்துக்கொண்டு, ‘‘நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்” என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்” என்று சொன்னார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் கற்பிக்கும் இணைகளுக்கு அவன் அப்பாற்பட்டவன்; தூயவன்” எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

அத்தியாயம் : 65
4812. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدِ بْنِ مُسَافِرٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " يَقْبِضُ اللَّهُ الأَرْضَ، وَيَطْوِي السَّمَوَاتِ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ، أَيْنَ مُلُوكُ الأَرْضِ ".
பாடம்: 3 ‘‘மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப் பட்டு இருக்கும். அவர்கள் கற்பிக்கும் இணைகளுக்கு அவன் அப்பாற்பட்டவன்; தூயவன்” எனும் (39:67ஆவது) வசனத் தொடர்
4812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான்; வானங்களைத் தனது வலக்கரத்தில் சுருட்டிக்கொள்வான்; பிறகு, ‘‘நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்?” என்று கேட்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4813. حَدَّثَنِي الْحَسَنُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحِيمِ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنِّي أَوَّلُ مَنْ يَرْفَعُ رَأْسَهُ بَعْدَ النَّفْخَةِ الآخِرَةِ، فَإِذَا أَنَا بِمُوسَى مُتَعَلِّقٌ بِالْعَرْشِ فَلاَ أَدْرِي أَكَذَلِكَ كَانَ أَمْ بَعْدَ النَّفْخَةِ ".
பாடம்: 4 ‘‘மேலும், (அந்நாளில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள்; அல்லாஹ் நாடியவர் களைத் தவிர! பின்னர் மற்றொரு முறை எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்” எனும் (39:68ஆவது) இறைவசனம்2
4813. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியணையைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்டபோதே மூர்ச்சையாகாமல் இதே நிலையில் அன்னார் இருந்தார்களா; அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)?” என்பது எனக்குத் தெரியாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3


அத்தியாயம் : 65
4814. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ ". قَالُوا يَا أَبَا هُرَيْرَةَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ شَهْرًا. قَالَ أَبَيْتُ، وَيَبْلَى كُلُّ شَىْءٍ مِنَ الإِنْسَانِ إِلاَّ عَجْبَ ذَنَبِهِ، فِيهِ يُرَكَّبُ الْخَلْقُ.
பாடம்: 4 ‘‘மேலும், (அந்நாளில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள்; அல்லாஹ் நாடியவர் களைத் தவிர! பின்னர் மற்றொரு முறை எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்” எனும் (39:68ஆவது) இறைவசனம்2
4814. அபூசாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம் மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த இரு எக்காளங்களுக்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய நண்பர்கள், ‘‘அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர். ‘‘(இதற்கு பதில் சொல்வதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர்கள், ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று பதில் சொன்னார்கள்.

நண்பர்கள், ‘‘மாதங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது)” என்று கூறிவிட்டு, ‘‘மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால், அவனது (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4815. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَخْبِرْنِي بِأَشَدِّ، مَا صَنَعَ الْمُشْرِكُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِفِنَاءِ الْكَعْبَةِ، إِذْ أَقْبَلَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ، فَأَخَذَ بِمَنْكِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوَى ثَوْبَهُ فِي عُنُقِهِ فَخَنَقَهُ خَنْقًا شَدِيدًا، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ فَأَخَذَ بِمَنْكِبِهِ، وَدَفَعَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ {أَتَقْتُلُونَ رَجُلاً أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ}
பாடம்: 40. ‘அல்முஃமின்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (40:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹாமீம்’ எனும் (‘ஹுரூஃபுல் முகத்தஆத்’ வகையைச் சேர்ந்த) தனித்தனி எழுத்துகளுக்கு, மற்றச் சில அத்தியாயங்களின் தொடக்கத்தில் வரும் தனித்தனி எழுத்துகளின் சட்டமே ஆகும்.2 ‘ஹாமீம்’ என்பது (இந்த அத்தியாயத்தின்) பெயராகும் என்றும் சொல்லப்படுகிறது. ‘ஷுரைஹ் பின் அபீஅவ்ஃப் அல்அப்சீ’ என்பவரின் இந்தக் கவிதைவரி இதற்குச் சான்றாகும்: அம்புகள் (களத்தில்) பின்னிக்கொண்டிருக்கின்ற நேரத்திலே அவன் எனக்கு ஹாமீமை நினைவுபடுத்துகின்றான்! (இங்கு) வருவதற்கு முன்பே அவன் ஹாமீமை ஓதியிருக்கக் கூடாதா?! (40:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தவ்ல்’ எனும் சொல்லுக்கு ‘(நெடுங்காலம் செய்யப்படும்) உபகாரம்’ என்று பொருள். (40:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாகிரீன்’ எனும் சொல்லுக்கு ‘இழிவுக்குள்ளானவர்கள்’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (40:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இலந் நஜாத்தி’ (ஈடேற்றம்) என்பது இறைநம்பிக்கையைக் குறிக்கிறது. (40:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லைஸ லஹு தஅவா’ (அவற்றுக்கு எவ்வித அழைப்பும் இல்லை) எனும் வாசகத்திற்கு, ‘(தெய்வங்களாகக் கற்பனை செய்யப்பட்டு வணங்கப்பட்டுவரும்) கற்சிலைகளுக்கு (உங்கள் அழைப்பிற்கு பதில் தரும் சக்தியில்லை)’ என்று பொருள். (40:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஸ்ஜரூன்’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் நரகத்தின் எரிபொருளாக ஆக்கப்படுவர்’ என்று பொருள். (40:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தம்ரஹூன்’ எனும் சொல்லுக்கு ‘இறுமாப்புக் கொண்டவர்களாக இருந்தீர்கள்’ என்று பொருள். (ஒருமுறை) அலாஉ பின் ஸியாத் (ரஹ்) அவர்கள்3 மக்களுக்கு நரகத்தை நினைவூட்டி (உபதேசித்து)க்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘(அச்சுறுத்தும் தகவல்களைத் கூறி, அல்லாஹ்வின் கருணை குறித்து) மக்களுக்கு ஏன் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அன்னார், ‘‘மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் ஆற்றல் எனக்கு ஏது? அல்லாஹ்வே, ‘‘(நபியே!) கூறுவீராக: எல்லை மீறி தமக்குத்தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்” (39:53) என்று கூறுகின்றான். அதே நேரத்தில் ‘‘எல்லை மீறுவோர் நரகம் செல்லக்கூடியவர்களாவர்” (40:43) என்றும் கூறுகின்றான். (ஒன்றை நன்றாக நான் புரிந்துகொண்டேன்:) நீங்கள் புரிந்த தீய செயல்களுக்குக் கூட சொர்க்கத்தை உங்களுக்கு (இறைவன் வழங்குவதாக) நற்செய்தி வழங்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்! (ஆனால், ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்:) அல்லாஹ், தனக்குக் கீழ்படிந்து வாழ்பவருக்குச் சொர்க்கத்தை நற்செய்தியாகக் கூறுபவராகவும், தனக்கு மாறுசெய்யும் மனிதருக்கு நரகம் உண்டு என்று எச்சரிக்கை செய்பவராகவுமே முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பினான்” என்று சொன்னார்கள்.
4815. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள்: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிஜ்ர் பகுதியில்) தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளைப் பிடித்து, தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சுத் திணறும்படி) கடுமையாக நெறித்தான்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து, அவனது தோளைப் பிடித்து இழுத்துவிட்டு, (நபியவர்களைத் துன்புறுத்த விடாமல் தடுத்து,) ‘‘ ‘என் இறைவன் அல்லாஹ்தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிóருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்திருக்கிறார்” (40:28) என்று கேட்டார்கள்.4

அத்தியாயம் : 65
4816. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ، عَلَيْكُمْ سَمْعُكُمْ} الآيَةَ كَانَ رَجُلاَنِ مِنْ قُرَيْشٍ وَخَتَنٌ لَهُمَا مِنْ ثَقِيفَ، أَوْ رَجُلاَنِ مِنْ ثَقِيفَ وَخَتَنٌ لَهُمَا مِنْ قُرَيْشٍ فِي بَيْتٍ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ أَتُرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ حَدِيثَنَا قَالَ بَعْضُهُمْ يَسْمَعُ بَعْضَهُ. وَقَالَ بَعْضُهُمْ لَئِنْ كَانَ يَسْمَعُ بَعْضَهُ لَقَدْ يَسْمَعُ كُلَّهُ. فَأُنْزِلَتْ {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ} الآية
பாடம்: 41. ‘ஹாமீம் அஸ்ஸஜ்தா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (41:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதியா தவ்அன்’ எனும் சொல்லுக்கு ‘(என் கட்டளைக்கு இணக்கம்) தாருங்கள்’ என்று பொருள். அவை இரண்டும் (வானமும் பூமியும்) அவ்வாறே (இணக்கம்) தந்தோம் என்று கூறின என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘எனக்கு குர்ஆனில் சில (நான்கு) வசனங்கள் முரண்படுவதாகக் தெரிகிறதே!” என்று கேட்டார்.3 அவையாவன: (1) ‘‘பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவுமாட்டார்கள்” என்று (23:101ஆவது வசனத்தில்) காணப்படுகிறது. (அதே சமயம்) ‘‘பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் முன்னோக்கிக் கேள்வி கேட்டுக்கொண்டும் இருப்பார்கள்” என்று (37:27ஆவது வசனத்தில்) காணப்படுகிறது. (2) ‘‘அங்கு அவர்கள் தம்முடைய எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது” என்கிறது ஒரு (4:42) வசனம். (அதே சமயம்,) ‘‘ ‘எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இணைவைப்போராய் இருக்கவில்லை’ என்று (இணைவைப்பாளர்கள்) கூறுவார்கள்” என்கிறது மற்றொரு (6:23) வசனம். இங்கே அவர்கள் (உண்மையை) மறைத்துவிடுகிறார்களே! (3) ‘‘உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா? அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தினான். பிறகு அதை ஒழுங்குபடுத்தினான். மேலும் அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்...” எனும் (79:27-30) வசனங்கள் பூமியை அல்லாஹ் படைப்பதற்கு முன்னால் வானத்தை நிர்மாணித்ததாகக் குறிப்பிடுகின்றன. (அதே சமயம்,) ‘‘(நபியே! இவர்களிடம்) கேட்பீராக: நீங்கள் பூமியை இரண்டு நாட்களில் படைத்த இறைவனை நிராகரிக்கின்றீர்களா? மேலும், மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா? அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்! அவன் (பூமியைப் படைத்தபிறகு) அதன் மேல் மலைகளை அமைத்தான். மேலும், அதில் வளங்களை அருளினான். கேட்பவர்கள் அனைவருக்காகவும் அவரவரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பச் சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களைச் செய்து வைத்தான். இந்த அனைத்துப் பணிகளும் நான்கு நாட்களில் நிறைவேறின. பிறகு அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும் பூமியிடமும் ‘நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ வாருங்கள்’ என்று கூறினான். அவை இரண்டும், ‘நாங்கள் விரும்பியே வந்துவிட்டோம்’ எனக் கூறின” எனும் வசனங்கள் (41:9-11) வானங்களுக்குமுன் பூமியை அல்லாஹ் படைத்ததாகக் குறிப்பிடுகின்றனவே!” (4) ‘‘அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணைகாட்டுபவனாகவும் இருந்தான்”; ‘‘அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருந்தான்”; ‘‘அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருந்தான்” என்று (இறந்த கால வினையில்) பல வசனங்கள் கூறுகின்றன. அப்படியானால், இந்தப் பண்புகளெல்லாம் அல்லாஹ்வுக்கு முதலில் இருந்து, பிறகு நீங்கிவிட்டனவா? (அவருடைய கேள்விகளுக்குப் பின்வருமாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்: (முதல் கேள்விக்கான பதில்:) ‘‘எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது” எனும் (23:101ஆவது) வசனம், முதலாவது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நேரத்தைக் குறிக்கிறது. அப்போது அல்லாஹ் நாடிய சிலரைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். அப்போதுதான் ‘‘அவர்களிடையே எந்த உறவுகளும் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவுமாட்டார்கள்”. அதற்குப் பிறகு, அடுத்த எக்காளம் ஊதப்படும். அப்போது ‘அவர்கள் ஒருவரை ஒருவர் முன்னோக்கிக் கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார்கள்’. (எனவே, இந்த இரண்டு வசனங்களுக்கும் இடையில் எந்த முரண்பாடுமில்லை)” என்று பதிலளித்தார்கள். (இரண்டாவது கேள்விக்கான பதில்:) சுத்தமான ஏகத்துவவாதிகளின் பாவங்களை அல்லாஹ் மறுமை நாளில் மன்னித்துக்கொண்டிருப்பான். அப்போது, இணைவைப்பாளர்கள் தங்களிடையே, ‘‘வாருங்கள், (தோழர்களே!) நாமும் அல்லாஹ்வின் முன் ‘நாங்கள் இணைவைப்போராக ஒருபோதும் இருக்கவில்லை’ என்று கூறி (பாவமன்னிப்புப் பெற்று)விடுவோம்” என்று கூறுவர். இதையே இந்த (6:23ஆவது) வசனம் குறிப்பிடுகின்றது. பிறகு, (அவர்கள் பேச முடியாதவாறு) அவர்களின் வாய்கள்மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிடுவான். அப்போது அவர்களின் கரங்கள் (அவர்களுக்கு எதிராகப்) பேசும். அப்போது அவர்கள் தம்முடைய எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்துவிட முடியாது என்று புரிந்துகொள்வார்கள். (இந்தக் கருத்தைத்தான் 4:42ஆவது வசனம் குறிப்பிடுகின்றது.) (மூன்றாவது கேள்விக்கான பதில்:) பூமியை இரண்டு நாட்களில் அல்லாஹ் படைத்தான். பிறகு, வானத்தைப் படைத்தான். பிறகு, அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தி, இரண்டு நாட்களில் அதனை ஒழுங்குபடுத்தினான். பிறகு பூமியை அவன் விரித்தான். (அதாவது முதலில் பூமியின் படைப்பு, அடுத்து வானத்தின் படைப்பு, அடுத்து பூமியின் விரிவாக்கம் அமைந்தது.) அல்லாஹ் பூமியை விரித்தான் என்பதன் பொருளாவது: அல்லாஹ் பூமியிóருந்து தண்ணீரையும் புற்பூண்டுகளையும் வெளியாக்கினான். மேலும், மலைகள், ஒட்டகங்க(ள் முதலிய பிராணிக)ள், குன்றுகள் மற்றும் வானம் பூமிக்கிடையிலுள்ள அனைத்துப் பொருட்களையும் வேறு இரு நாட்களில் படைத்தான். இதையே ‘‘பூமியை அவன் விரித்தான்” எனும் (79:30ஆவது) வசனம் குறிப்பிடுகின்றது. ‘‘பூமியை இரண்டு நாட்களில் அவன் படைத்தான்” எனும் (41:9ஆவது) வசனத்திற்குப் பொருளாவது: பூமியும் அதிலிலுள்ள பொருட்களும் (மொத்தம்) நான்கு நாட்களில் படைக்கப்பட்டன. வானங்கள் இரண்டு நாட்களில் படைக்கப்பட்டன. (ஆக, வானங்களைப் படைக்கும்முன் பூமியைப் படைக்கும் பணியை மேற்கொண்டான். வானங்களைப் படைத்த பின்பே பூமியை விரிக்கும் பணியை மேற்கொண்டான். எனவே, இந்த இரு வசனங்களுக்குமிடையில் எந்த வித முரண்பாடும் கிடையாது)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். (நான்காவது கேள்விக்கான பதில்:) ‘‘அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணைகாட்டுபவனாகவும் இருந்தான்” என்பது போன்ற வசனங்களில் அல்லாஹ் தன் பெயர்களை எடுத்துரைக்கின்றான். அதாவது (இப்பெயர்கள் அவனுக்கு ஏற்கெனவே உள்ளன. அத்துடன்) இப்பண்புகள் அவனுக்கு என்றென்றும் இருந்துகொண்டேயிருக்கின்றன. ஏனெனில், அல்லாஹ் ஒன்றை நாடிவிட்டால் அது நடந்தே தீரும். ஆகவே, குர்ஆனில் எந்த முரண்பாட்டையும் நீ காண முடியாது. ஏனெனில், குர்ஆன் முழுவதும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இதை மின்ஹால் பின் அம்ர் அல்அசதீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (41:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகைரு மம்னூன்’ எனும் சொல்லுக்கு ‘கணக்கற்ற’ என்பது பொருள். (41:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாத்தஹா’ என்பதற்கு ‘பூமிக்குரிய உணவுப் பொருட்கள்’ என்று பொருள். (41:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீ குல்லி ஸமாஇன் அம்ரஹா’ என்பதற்கு ‘ஒவ்வொரு வானத்திற்கும் அல்லாஹ் ஏற்படுத்திய நியதிகள்’ என்று பொருள். (41:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஹிஸாத்’ எனும் சொல்லுக்கு ‘மோசமான’ என்பது பொருள். (41:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ கய்யள்னா லஹும் குரனாஅ’ எனும் வாக்கியத்திற்கு ‘(இறைமறுப்பாளர்களான) அவர்களுடன் நாம் சில (சாத்தான்) நண்பர்களை இணைத்துவிட்டோம்’ என்று பொருள். (41:30ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள்’ என்பது, மரண வேளையைக் குறிக்கின்றது. (அதாவது, ‘அல்லாஹ் எங்கள் இறைவன்’ என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்களின் மரண வேளையின்போது வானவர்கள் அவர்களிடம் இறங்கி வாழ்த்துச் சொல்கின்றனர் என்று பொருள்.) (41:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஹ்தஸ்ஸத்’ என்பதற்கு ‘(பசுமையான) தாவரங்களால் பூமி பூத்துக்குலுங்குகிறது’ என்று பொருள். ‘ரபத்’ என்பதற்கு ‘ஓங்கி வளர்கிறது’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: (41:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் அக்மாமிஹா’ எனும் சொல்லுக்கு ‘பாளை மொட்டுக்களிலிருந்து அது வெளிவருகின்றது’ என்று பொருள். (41:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல யகூலன்ன ஹாதா லீ’ (இது எனக்கே உரியது என அவன் திடமாகக் கூறுவான்) என்பதன் கருத்தாவது: இது என் செயலாற்றலால்தான் விளைந்தது; நான் இதற்கு அருகதையுள்ளவன் ஆவேன். (41:10வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவாஅன் லிஸ்ஸாயிலீன்’ எனும் சொற்றொடருக்கு ‘கேட்போர் யாவருக்கும் சரியான அளவில் அவற்றை நிர்ணயம் செய்துவைத்தான்’ என்று பொருள். (41:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப ஹதய்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களுக்கு நாம் நன்மை தீமையைக் காட்டிக்கொடுத்தோம்’ என்று பொருள். (இதே சொல் இடம்பெற்ற 90:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ஹதய்னாஹுந் நஜ்தைன்’ என்பதற்கு ‘(நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளையும் நாம் மனிதனுக்குக் காட்டினோம்’ என்று பொருள். இதைப் போன்றே (76:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இன்னா ஹதய்னாஹுஸ் ஸபீல்’ என்பதற்கு ‘நாம் அவனுக்கு (பகுத்தறிவைத் தந்து) வழிகாட்டினோம்’ என்று பொருள். ‘வழிகாட்டுதல்’ எனும் பொருள் கொண்ட ‘ஹுதா’ எனும் சொல், மோட்சத்திற்கான வழியைக் காட்டுவதையே பெரும்பாலும் குறிக்கும். இதே கருத்தில்தான் ‘‘(நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள்; அவர்களது வழியையே (நபியே! நீரும்) பின்பற்றிச் செல்வீராக!” எனும் (6:90ஆவது) வசனமும் வந்துள்ளது. (41:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யூஸஊன்’ எனும் சொல்லுக்கு ‘(பின்னோர்கள் வந்து சேர்ந்துகொள்ளும் வரையில் முன்னோர்களான) அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர்’ என்று பொருள். (41:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்மாம்’ எனும் சொல்லுக்கு ‘கனிகளை மூடியிருக்கும் பாளை’ என்பது பொருள். ‘அக்மாம்’ என்பதன் ஒருமை ‘கும்மு’ ஆகும். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: மொட்டுக்குள்ளிருந்து வெளிவரும் சமயத்தில் உள்ள திராட்சைப் பிஞ்சு ‘காஃபூர்’, ‘குஃபர்ரா’ என்று சொல்லப்படுகிறது. (41:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வலிய்யுன் ஹமீம்’ எனும் சொல்லுக்கு ‘நெருங்கிய நண்பர்’ என்று பொருள். (41:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீஸ்’ எனும் சொல் ‘ஹாஸ’ (தப்பியோடினான்) எனும் வினைச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். (இதன்படி, ‘‘தப்பியோடித் தஞ்சம் புகுமிடம் அவர்களுக்கில்லை” என்று வசனத்தின் பொருள் அமையும்.) (41:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிர்யா’ எனும் சொல்லுக்கும் (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள) ‘முர்யா’ எனும் சொல்லுக்கும் ‘சந்தேகம்’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நீங்கள் விரும்பியவற்றை செய்துகொண்டிருங்கள்” எனும் (41:40ஆவது) வசனத்தொடர், ஓர் எச்சரிக்கையாகும். (‘‘நினைத்தபடியெல்லாம் நீங்கள் செய்துகொண்டிருங்கள். உங்களை நாம் கவனித்துக்கொண்டுதானிருக்கிறோம்” என்று கூறுவதற்கு ஒப்பாகும். மற்றபடி, நன்மை தீமை என்று பிரித்துணராமல் விருப்பப்படி செயல்படுங்கள் என்பது இத்தொடரின் பொருளன்று.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக” எனும் (41:34ஆவது வசனத்திலுள்ள) ‘நன்மை’ என்பது, கோபமான நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பதையும், துன்பம் தரும் நேரத்திலும் மன்னித்துவிடுவதையும் குறிக்கும். அப்படிச் செய்தால் அவர்களை அல்லாஹ் பாதுகாக்கவும் செய்வான்; அவர்களுடைய எதிரிகள் அவர்களுக்குப் பணியவும் செய்வார்கள். இதன் மூலம் (முன்பு பகையாளியாக இருந்தவன்) உற்ற நண்பனாக மாறிவிடுவான். பாடம்: 1 (உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காது களும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்க வில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலான வற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்றே நீங்கள் எண்ணி யிருந்தீர்கள் (எனும் 41:22ஆவது இறைவசனம்)
4816. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இந்த (41:22ஆவது) வசனம் குறித்துக் கூறியதாவது:

(ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷி குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்’ (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்துகொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘‘நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். அவர்களில் ஒருவர், ‘‘(நம் பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்” என்று பதிலளித்தார்.

மற்றொருவர் ‘‘நம் பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக்கொண்டி ருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்” என்று கூறினார்.

அப்போதுதான், ‘‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களி óருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் இந்த வசனம் (41:22) அருளப்பெற்றது.

அத்தியாயம் : 65
4818. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ طَاوُسًا، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ. أَنَّهُ سُئِلَ عَنْ قَوْلِهِ {إِلاَّ الْمَوَدَّةَ فِي الْقُرْبَى} فَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ قُرْبَى آلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَقَالَ ابْنُ عَبَّاسٍ عَجِلْتَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ بَطْنٌ مِنْ قُرَيْشٍ إِلاَّ كَانَ لَهُ فِيهِمْ قَرَابَةٌ فَقَالَ إِلاَّ أَنْ تَصِلُوا مَا بَيْنِي وَبَيْنَكُمْ مِنَ الْقَرَابَةِ.
பாடம்: 2 உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களது இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்திவிட்டது. ஆகவே, நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள் (என்று அவர்களின் தோல்கள் கூறும் எனும் 41:23ஆவது இறைவசனம்) 4817அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் ‘குறைஷியரில் இருவரும் ஸகீஃப் குலத்தாரில் ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப் குலத்தாரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்’ (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘‘நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். மற்றொருவர், ‘‘நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை” என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், ‘‘நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும்போதும் அவன் கேட்கத்தான் செய்வான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ், ‘‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் வசனங் களை (41:22-24) அருளினான். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. பாடம்: 42. ‘ஹாமீம் ஐன் சீன் காஃப்’ (அஷ்ஷூரா) அத்தியாயம்1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: (42:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அகீம்’ எனும் சொல்லுக்கு ‘குழந்தை பெற(முடிய)ôத மலடி’ என்பது பொருள். (42:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரூஹம் மின் அம்ரினா’ (நம் கட்டளைகளில் உயிரான ஒன்றை) என்பது குர்ஆனைக் குறிக்கிறது. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (42:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்ரஉகும் ஃபீஹி’ எனும் சொற்றொடருக்கு ‘ஒரு சந்ததிக்குப்பின் அடுத்த சந்ததியென (உங்கள் சந்ததிகளைப் பெருகச் செய்கிறான்)’ என்று பொருள். (42:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா ஹுஜ்ஜத்த பய்னனா’ என்பதற்கு ‘எங்களுக்கு(ம், உங்களுக்கும்) இடையில் எந்தத் தர்க்கமும் வேண்டாம்’ என்பது பொருள். (42:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தர்ஃபின் கஃபிய்யின்’ எனும் சொல்லுக்கு ‘அற்பமான கடைக்கண் பார்வை’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்: (42:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப யழ்லல்ன ரவாகித அலா ழஹ்ரிஹி’ என்பதற்கு, ‘பிறகு அந்தக் கப்பல்கள் கடலில் செல்ல முடியாமல் (அலையசைவில்) ஆடிக்கொண்டு அப்படியே நின்று போய்விடும்’ என்று பொருள். (42:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘‘றஊ’ எனும் சொல்லுக்கு, ‘ஒரு புதிய வழிமுறையை வகுத்துக் கொடுத்தார்கள்’ என்பது பொருள். பாடம்: 1 ‘‘உறவினர்களிடம் அன்பு காட்டு வதைத் தவிர, இந்த (இறை)ப் பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கேட்கவில்லை என (நபியே!) கூறுக!” எனும் (42:23ஆவது) வசனத்தொடர்
4818. தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர” எனும் (42:23ஆவது) வசனத்தொடர் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ‘‘(இந்த வசனத்திலுள்ள) ‘உறவினர்கள்’ என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் உறவினர்களை (பனூ ஹாஷிமை)க் குறிக்கும்” என்று கூறினார்கள்.

உடனே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவசரப்பட்டுவிட்டீர்; குறைஷி குலத்தின் எல்லாக் கிளை’னருக்கும் நபி (ஸல்) அவர்களுடன் உறவுமுறை இருக்கத்தான் செய்தது” என்று கூறிவிட்டு, ‘‘நபி (ஸல்) அவர்கள், (குறைஷியரின் அனைத்துக் கிளை’னரையும் நோக்கி) குறைந்தபட்சம் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள உறவு முறையைப் பேணி (நல்ல முறையில்) நடந்துகொள்ள வேண்டுமென்றே பெரிதும் நான் விரும்புகிறேன் என்று சொன்னார்கள்” என விளக்கமளித்தார்கள்.

அத்தியாயம் : 65
4819. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ {وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ} وَقَالَ قَتَادَةُ مَثَلاً لِلآخِرِينَ عِظَةً لِمَنْ بَعْدَهُمْ. وَقَالَ غَيْرُهُ {مُقْرِنِينَ} ضَابِطِينَ يُقَالُ فُلاَنٌ مُقْرِنٌ لِفُلاَنٍ ضَابِطٌ لَهُ وَالأَكْوَابُ الأَبَارِيقُ الَّتِي لاَ خَرَاطِيمَ لَهَا {أَوَّلُ الْعَابِدِينَ} أَىْ مَا كَانَ فَأَنَا أَوَّلُ الأَنِفِينَ وَهُمَا لُغَتَانِ رَجُلٌ عَابِدٌ وَعَبِدٌ وَقَرَأَ عَبْدُ اللَّهِ {وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ} وَيُقَالُ أَوَّلُ الْعَابِدِينَ الْجَاحِدِينَ مِنْ عَبِدَ يَعْبَدُ. وَقَالَ قَتَادَةُ {فِي أُمِّ الْكِتَابِ} جُمْلَةِ الْكِتَابِ أَصْلِ الْكِتَابِ {أَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا أَنْ كُنْتُمْ قَوْمًا مُسْرِفِينَ} مُشْرِكِينَ. وَاللَّهِ لَوْ أَنَّ هَذَا الْقُرْآنَ رُفِعَ حَيْثُ رَدَّهُ أَوَائِلُ هَذِهِ الأُمَّةِ لَهَلَكُوا {فَأَهْلَكْنَا أَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَمَضَى مَثَلُ الأَوَّلِينَ} عُقُوبَةُ الأَوَّلِينَ {جُزْءًا} عِدْلاً.
பாடம்: 43. ‘ஹாமீம் அஸ்ஸுக்ருஃப்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (43:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலா உம்மத்தின்’ எனும் சொல்லுக்கு ‘முன்னோடியாக’ என்று பொருள். ‘(இறைமறுப்பாளர்களான) இவர்கள், நாம் அவர்களின் இரகசிய உரையாடல்களையும் ஆலோசனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் கேட்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களா?’ என்பதே ‘வ கீலிஹி யா ரப்பீ...’ என்று தொடங்கும் (43:88ஆவது) வசனத்தின் விளக்கமாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (43:33ஆவது வசனத்தின் விளக்கமாவது:) மனிதர்கள் அனைவரும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடுவார்கள் எனும் நிலை இல்லாதிருந்தால், இறைமறுப்பாளர்களின் வீடுகளுக்கு வெள்ளியாலான முகடுகளையும் படிக்கட்டுகளையும் கட்டில்களையும் நாம் ஆக்கியிருப்போம். (43:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்ரினீன்’ எனும் சொல்லுக்கு, ‘ஆற்றல் உடையவர்கள்’ என்பது பொருள். (43:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆஸஃபூனா’ எனும் சொல்லுக்கு ‘நம்மை அவர்கள் கடுங்கோபத்திற்கு உள்ளாக்கினர்’ என்று பொருள். (43:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃஷு’ எனும் சொல்லுக்கு ‘குருட்டுத்தனமாக இருப்பான்’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (43:5ஆவது வசனத்தின் கருத்தாவது:) நீங்கள் குர்ஆனை நம்ப மறுத்தாலும் தண்டிக்கப்படமாட்டீர்களா என்ன?. (43:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ மளா மஸலுல் அவ்வலீன்’ என்பதற்கு ‘முன்பு வாழ்ந்த சமூகங்களின் வழிமுறைகள் சென்றுவிட்டிருக்கின்றன’ என்று பொருள். (43:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்ரினீன்’ என்பதற்கு, ‘ஒட்டகம், குதிரை, கோவேறுகழுதை, கழுதை போன்றவற்றை வசப்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக நாங்கள் இருக்கவில்லை’ என்று பொருள். (43:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுனஷ்ஷஉ ஃபில்ஹில்யத்தி’ என்பதற்கு, ‘அழகாபரணங்களில் (அலங்கரிக்கப்பட்டு) வளர்க்கப்படுகின்ற பெண் குழந்தைகளையா ரஹ்மானுக்குக் குழந்தையாக ஆக்குகிறீர்கள்? இப்படி ஒரு தீர்ப்பை எவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று பொருள். (43:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லவ் ஷாஅர் ரஹ்மானு மாஅபத்னாஹும்’ (கருணைமிக்க இறைவன் நாடியிருந்தால், ஒருபோதும் நாங்கள் அவர்களை வழிபட்டிருக்கமாட்டோம்) என்பதற்கு ‘ஒருபோதும் நாங்கள் சிலைகளை வழிபட்டிருக்கமாட்டோம்’ என்று பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா லஹும் பி ஃதாலிக்க மின் இல்மின்’ (இந்த விஷயத்தைப் பற்றிய எதார்த்த அறிவுகூட அவர்களுக்கு இல்லை) என்பதற்கு ‘சிலைகளுக்கு ஒன்றும் தெரியாது’ என்று பொருள். (43:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீ அக்கிபிஹி’ எனும் சொல்லுக்கு ‘அவருடைய பிள்ளைகளில்’ என்று பொருள். (43:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்தரினீன்’ என்பதற்கு ‘ஒன்றாக நடந்து வருதல்’ என்று பொருள். (43:56ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சலஃப்’ (முன்னோடிகள்) என்பதன் கருத்தாவது: ‘முஹம்மத் (ஸல்) அவர்களின் (அழைப்புக்குரிய) சமுதாயமான இறைமறுப்பாளர்களுக்கு ஃபிர்அவ்னின் மக்களை முன்னோடிகளாக ஆக்கினோம்’ என்று பொருள். ‘மஸல்’ என்பதற்கு ‘படிப்பினை’ என்று பொருள். (43:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸித்தூன’ எனும் சொல்லுக்கு ‘ஆர்ப்பரித்தார்கள்’ என்று பொருள். (43:79ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முப்ரிமூன்’ எனும் சொல்லுக்கு, ‘ஒன்று கூட்டுவோர்’ என்று பொருள். (43:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்வலுல் ஆபிதீன்’ என்பதற்கு ‘முதல் நம்பிக்கையாளர்’ என்று பொருள். (43:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இன்னனீ பராஉம் மிம்மா தஅபுதூன்’ எனும் வாக்கியத்திற்கு, ‘(நீங்கள் எவற்றை வழிபடுகின்றீர்களோ) அவற்றுடன் எனக்குஎந்தத் தொடர்பும் இல்லை’ என்று பொருள். பொதுவாக, அரபுகள் ‘உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்று கூறுவதற்கு ‘நஹ்னு மின்க்கல் பராஉ வல்கலாஉ’ என்று கூறுவர். இந்த ‘பராஉ’ எனும் சொல் ஒருமை, இருமை, பன்மை, ஆண்பால், மற்றும் பெண்பால் ஆகிய எல்லா நிலைகளிலும் ‘பராஉ’ என்றே வழங்கப்படுகின்றது. ஏனெனில், இது வேர்ச் சொல்லாகும். (மற்றொரு ஓதல் முறைப்படி) ‘பரீஉன்’ என்று காணப்படுகிறது. இது பன்மையின்போது ‘பரீஊன’ என்று சொல்லப்படும். இந்த வசனத்திலுள்ள ‘பராஉ’ என்பதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ‘பரீஉன்’ என்றே ஓதினார்கள். (43:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸுஃக்ருப்’ எனும் சொல்லுக்கு ‘தங்கம்’ என்பது பொருள். (43:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மலாயிகத்தன் யக்லுஃபூன்’ எனும் சொற்றொடருக்கு ‘தம்மில் சிலருக்குச் சிலர் பிரதிநிதியாக ஆகும் வானவர்களை (உங்களிலிருந்து பூமியில் ஆக்கியிருப்பேன்)’ என்று பொருள். பாடம்: 1 ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்கள் இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!’ என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார் கள். அவர் ‘நீங்கள் (இப்படியே) இருக்கப் போகிறீர்கள்’ என்று பதிலளிப்பார் எனும் (43:77ஆவது) இறைவசனம்
4819. யஅலா பின் உமைய்யா அத்தமீமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, ‘‘ ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்கள் இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!’ என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள்” எனும் (43:77ஆவது) வசனத்தை ஓதக் கேட்டேன்.2

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(43:56ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘மஸலன் லில் ஆகிரீன்’ எனும் சொற்றொடருக்கு ‘பிற்கால மக்களுக்கு அறிவுரையாக (ஆக்கினோம்)’ என்று பொருள்.

கத்தாதா (ரஹ்) அல்லாதோர் கூறியதாவது:

(43:13ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘முக்ரினீன்’ எனும் சொல்லுக்கு ‘கட்டுப்படுத்தக்கூடியவர்கள்’ என்று பொருள். ‘இன்னார் இன்னாரைக் கட்டுப்படுத்தக்கூடியவர்’ என்பதைக் குறிக்க ‘முக்ரின்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

(43:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாப்’ எனும் சொல்லுக்கு ‘கைப் பிடிகள் இல்லாத கோப்பைகள்’ என்பது பொருள்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(43:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்முல் கிதாப்’ என்பதற்கு ‘மொத்த ஏடு - மூல ஏடு’ என்பது பொருள்.

(43:81ஆவது வசனத்தின் பொருளாவது:) ரஹ்மானுக்குக் குழந்தை இல்லை; (அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால்) கடுமையாக எதிர்ப்பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். ‘ரஜுலுன் ஆபிதுன்’ எனும் சொல்லுக்கும், ‘ரஜுலுன் அபிதுன்’ எனும் சொல்லுக்கும் ‘வழிபடும் மனிதன்’ என்றே பொருள்.

(வ கீலிஹீ யா ரப்பீ எனும் 43:88ஆவது வசனத்தை) ‘வ காலர் ரஸூலு யா ரப்பீ’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள்.3

‘‘அபித, யஅபது எனும் வினைச் சொற்கள் வழியாக வரும் (ஆபித் எனும் வினையாலணையும் பெயரின் பன்மையான) ‘ஆபிதீன்’ என்பதற்கு ‘மறுக்கக் கூடியவர்கள்’ எனப் பொருள்” என்றும் கூறப்படுகிறது.

அத்தியாயம் : 65