4395. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلْيُهْلِلْ بِالْحَجِّ مَعَ الْعُمْرَةِ، ثُمَّ لاَ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا "". فَقَدِمْتُ مَعَهُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَشَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" انْقُضِي رَأْسَكِ، وَامْتَشِطِي وَأَهِلِّي بِالْحَجِّ وَدَعِي الْعُمْرَةَ "". فَفَعَلْتُ فَلَمَّا قَضَيْنَا الْحَجَّ أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ فَقَالَ "" هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ "". قَالَتْ فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالْعُمْرَةِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا الْحَجَّ وَالْعُمْرَةَ فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4395. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “விடைபெறும் ஹஜ்'ஜ‚க்காகப் புறப்பட்டோம். (முதóல்) உம்ரா செய்வதற்காக இஹ்ராம் கட்டினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரிடம் குர்பானி பிராணி உள்ளதோ அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் சேர்த்து (கிரான்) செய்து கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறை வேற்றிய பிறகே அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்” என்று சொன்னார்கள்.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவுக்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே ஓடவுமில்லை. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன்.

அப்போது அவர்கள், “உன் தலை (முடியை) அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு” என்று சொன்னார் கள். அவ்வாறே நான் செய்தேன்.

நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் தன்யீமுக்கு அனுப்பினார்கள். (அங்கு இஹ்ராம் கட்டி) உம்ராவை நிறைவேற்றினேன். “இது (இந்த உம்ரா) உனது (விடுபட்ட) உம்ராவுக்குப் பதிலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர். பிறகு இஹ்ராமிóருந்து விடுபட்டுப் பின்னர் மினாவிலிருந்து திரும்பியபின் மற்றொரு முறையும் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் சுற்றி (தவாஃப்) வந்தனர்.434


அத்தியாயம் : 64
4396. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، إِذَا طَافَ بِالْبَيْتِ فَقَدْ حَلَّ. فَقُلْتُ مِنْ أَيْنَ قَالَ هَذَا ابْنُ عَبَّاسٍ قَالَ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى {ثُمَّ مَحِلُّهَا إِلَى الْبَيْتِ الْعَتِيقِ} وَمِنْ أَمْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الْوَدَاعِ. قُلْتُ إِنَّمَا كَانَ ذَلِكَ بَعْدَ الْمُعَرَّفِ. قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يَرَاهُ قَبْلُ وَبَعْدُ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4396. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்” என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். நான், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “குர்பானி பிராணி களை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது” (22:33) எனும் இறை வசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள், “விடைபெறும் ஹஜ்ஜின்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடும்படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக்கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், “அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங்கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங்களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதிவந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 64
4397. حَدَّثَنِي بَيَانٌ، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ طَارِقًا، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْبَطْحَاءِ فَقَالَ "" أَحَجَجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" كَيْفَ أَهْلَلْتَ "". قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ "" طُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ حِلَّ "". فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، وَأَتَيْتُ امْرَأَةً مِنْ قَيْسٍ فَفَلَتْ رَأْسِي.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4397. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் “பத்ஹா'வில் இருந்தபோது நான் சென்றேன். அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அவர்கள், “எதற் காக இஹ்ராம் கட்டினீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே (அதே ஹஜ்ஜுல் கிரானுக் காகவே) நானும் இஹ்ராம் கட்டினேன்” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே (சயீ) ஓடுங்கள்; பிறகு இஹ்ராமிóருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடிய பிறகு கைஸ் குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றேன். அவள் என் தலையில் பேன் பார்த்தாள்.435


அத்தியாயம் : 64
4398. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، أَخْبَرَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ حَفْصَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ أَزْوَاجَهُ أَنْ يَحْلِلْنَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ، فَقَالَتْ حَفْصَةُ فَمَا يَمْنَعُكَ فَقَالَ "" لَبَّدْتُ رَأْسِي وَقَلَّدْتُ هَدْيِي، فَلَسْتُ أَحِلُّ حَتَّى أَنْحَرَ هَدْيِي "".
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4398. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜை நிறைவேற்றிய ஆண்டில், (தவாஃபும் சயீயும் செய்து தலைமுடியைக் குறைத்துவிட்டு) உம்ராவிலிருந்து விடுபட்டுவிடும்படி தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், “நீங்கள் ஏன் (இஹ்ராமிóருந்து) விடுபடவில்லை?” என்று கேட்டேன். அவர்கள், “நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன். என் குர்பானி பிராணிக்குக் கழுத்தில் (அடையாள) மாலை தொங்கவிட்டுவிட்டேன். ஆகவே, நான் குர்பானி பிராணியை அறுக்கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடப்போவதில்லை” என்று சொன்னார்கள்.436


அத்தியாயம் : 64
4399. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ حَدَّثَنِي شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، وَقَالَ، مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ امْرَأَةً، مِنْ خَثْعَمَ اسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ وَالْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ "" نَعَمْ "".
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4399. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “விடைபெறும் ஹஜ்'ஜின்போது “கஸ்அம்' குலத்துப் பெண் ஒருவர் மார்க்கத் தீர்ப்பு கேட்டார். அப்போது, ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (வாகனத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தார்.

அந்தப் பெண், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், தன் அடியார்கள்மீது கடமையாக்கிய (ஹஜ்ஜின்) விதி, வாகனத்தில் சரியாக அமர முடியாத அளவுக்குத் தள்ளாத முதியவரான நிலையில் என் தந்தையிடம் வந்து சேர்ந்தது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (நிறைவேறும்)” என்று பதிலளித்தார்கள்.437

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4400. حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ وَهْوَ مُرْدِفٌ أُسَامَةَ عَلَى الْقَصْوَاءِ. وَمَعَهُ بِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ حَتَّى أَنَاخَ عِنْدَ الْبَيْتِ، ثُمَّ قَالَ لِعُثْمَانَ "" ائْتِنَا بِالْمِفْتَاحِ ""، فَجَاءَهُ بِالْمِفْتَاحِ فَفَتَحَ لَهُ الْبَابَ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأُسَامَةُ وَبِلاَلٌ وَعُثْمَانُ، ثُمَّ أَغْلَقُوا عَلَيْهِمِ الْبَابَ، فَمَكَثَ نَهَارًا طَوِيلاً ثُمَّ خَرَجَ، وَابْتَدَرَ النَّاسُ الدُّخُولَ، فَسَبَقْتُهُمْ فَوَجَدْتُ بِلاَلاً قَائِمًا مِنْ وَرَاءِ الْبَابِ فَقُلْتُ لَهُ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ صَلَّى بَيْنَ ذَيْنِكَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ. وَكَانَ الْبَيْتُ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ سَطْرَيْنِ، صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ مِنَ السَّطْرِ الْمُقَدَّمِ، وَجَعَلَ باب الْبَيْتِ خَلْفَ ظَهْرِهِ، وَاسْتَقْبَلَ بِوَجْهِهِ الَّذِي يَسْتَقْبِلُكَ حِينَ تَلِجُ الْبَيْتَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ، قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى وَعِنْدَ الْمَكَانِ الَّذِي صَلَّى فِيهِ مَرْمَرَةٌ حَمْرَاءُ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4400. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது “கஸ்வா' எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச்செய்தார்கள்.

பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம்,  “(கஅபாவின்) சாவியை எம்மிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார்.

நபி (ஸல்) அவர்களும் உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (பின் தல்ஹா-ரலி) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக்கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக்கொண்டு (உள்ளே நுழைந்து)விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன்.

அவர்கள், “அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாயில் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரு தூண்களுக்கிடையே நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும்.

நான் பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது.438

.4401 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு “விடைபெறும் ஹஜ்'ஜின்போது மாதவிடாய் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் நம்மை (மக்காவிலிருந்து புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?” என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் பரவாயில்லை. அவர் புறப்படலாம்” என்று சொன்னார்கள்.439

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4402. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نَتَحَدَّثُ بِحَجَّةِ الْوَدَاعِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَظْهُرِنَا، وَلاَ نَدْرِي مَا حَجَّةُ الْوَدَاعِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ ذَكَرَ الْمَسِيحَ الدَّجَّالَ فَأَطْنَبَ فِي ذِكْرِهِ وَقَالَ " مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلاَّ أَنْذَرَ أُمَّتَهُ، أَنْذَرَهُ نُوحٌ وَالنَّبِيُّونَ مِنْ بَعْدِهِ، وَإِنَّهُ يَخْرُجُ فِيكُمْ، فَمَا خَفِيَ عَلَيْكُمْ مِنْ شَأْنِهِ فَلَيْسَ يَخْفَى عَلَيْكُمْ أَنَّ رَبَّكُمْ لَيْسَ عَلَى مَا يَخْفَى عَلَيْكُمْ ثَلاَثًا، إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، وَإِنَّهُ أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ ".
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4402. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களி டையே இருக்க, “விடைபெறும் ஹஜ்'ஜைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். (நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை) ஹஜ்ஜத் துல் வதா (“விடைபெறும் ஹஜ்') என்பதன் கருத்தென்ன என்று எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (பிற்காலத்தில் தோன்றவிருக்கும் மகா பொய்யனான) மசீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே சொன்னார்கள். அப்போது, “அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் (அவனைப் பற்றித் தத்தம் சமுதாயத்தாருக்கு) எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், (என் சமுதாயத்தாரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனுடைய அடையாளங்களில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல்போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்- இதை மும்முறை கூறினார்கள்- உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும்” என்று சொன் னார்கள்.440


அத்தியாயம் : 64
4403. أَلاَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ . قَالُوا نَعَمْ. قَالَ " اللَّهُمَّ اشْهَدْ، ثَلاَثًا، وَيْلَكُمْ، أَوْ وَيْحَكُمُ، انْظُرُوا لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ".
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4403. “அறிந்து கொள்ளுங்கள். உங்களது இந்த நகரத்தில், உங்களது இந்த மாதத்தில், உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, “நான் (இறைச்செய்தியை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (சேர்த்துவிட்டீர்கள்)” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நீ சாட்சியாக இரு” என்று மும்முறை கூறியபின், “ “உங்களுக்கு என்ன நேரப்போகிறதோ!' அல்லது “அந்தோ பரிதாபமே!' கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4404. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَرْقَمَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَزَا تِسْعَ عَشْرَةَ غَزْوَةً، وَأَنَّهُ حَجَّ بَعْدَ مَا هَاجَرَ حَجَّةً وَاحِدَةً لَمْ يَحُجَّ بَعْدَهَا حَجَّةَ الْوَدَاعِ. قَالَ أَبُو إِسْحَاقَ وَبِمَكَّةَ أُخْرَى.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4404. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்துகொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்த பின்பு ஒரேயொரு ஹஜ்தான் செய்தார்கள். அந்த ஹஜ்ஜத்துல் வதாவுக்குப் பிறகு அவர்கள் வேறெந்த ஹஜ்ஜும் செய்யவில்லை.

அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்திற்கு முன்பு) மக்காவில் இருந்தவாறு மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்.441


அத்தியாயம் : 64
4405. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ لِجَرِيرٍ "" اسْتَنْصِتِ النَّاسَ "" فَقَالَ "" لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "".
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4405. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “ஹஜ்ஜத்துல் வதா'வின்போது என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!” என்று சொல்லிவிட்டு, “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் மாறிவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4406. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَةِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ، أَىُّ شَهْرٍ هَذَا "" قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. قَالَ "" أَلَيْسَ ذُو الْحِجَّةِ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَأَىُّ بَلَدٍ هَذَا "". قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. قَالَ "" أَلَيْسَ الْبَلْدَةَ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَأَىُّ يَوْمٍ هَذَا "" قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. قَالَ "" أَلَيْسَ يَوْمَ النَّحْرِ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ ـ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ، أَلاَ فَلاَ تَرْجِعُوا بَعْدِي ضُلاَّلاً، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَلَعَلَّ بَعْضَ مَنْ يُبَلَّغُهُ أَنْ يَكُونَ أَوْعَى لَهُ مِنْ بَعْضِ مَنْ سَمِعَهُ ـ فَكَانَ مُحَمَّدٌ إِذَا ذَكَرَهُ يَقُولُ صَدَقَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ـ أَلاَ هَلْ بَلَّغْتُ. مَرَّتَيْنِ "".
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4406. அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள “முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.442

(ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் பத்தாம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது துல்ஹிஜ்ஜா மாதம் இல்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள், “ஆம்' என்றோம்.

(பிறகு,) “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (புனிதமிக்க) நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்' என்றோம். மேலும், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாள் அல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்' என்றோம்.

(பிறகு,) “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் வழிதவறியவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர் களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்.443

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, “முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை சொன்னார்கள்” என்று கூறுவார்கள்.-

பிறகு, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தை யும்) சேர்த்துவிட்டேனா?” என்று இரண்டு முறை கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள்கூறுகிறார்கள்:

“உங்கள் மானமும்' என்பதையும் சேர்த்தே அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்.


அத்தியாயம் : 64
4407. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، أَنَّ أُنَاسًا، مِنَ الْيَهُودِ قَالُوا لَوْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا لاَتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا. فَقَالَ عُمَرُ أَيَّةُ آيَةٍ فَقَالُوا {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي}. فَقَالَ عُمَرُ إِنِّي لأَعْلَمُ أَىَّ مَكَانٍ أُنْزِلَتْ، أُنْزِلَتْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاقِفٌ بِعَرَفَةَ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4407. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் சிலர், (ஒரு குறிப்பிட்ட இறை வசனம் பற்றி), “இந்த வசனம் (யூதர்களான) எங்களிடையே அருளப்பட்டிருந்தால் நாங்கள் (இது அருளப்பெற்ற) அந்த நாளை (கொண்டாடப்பட வேண்டிய) பெருநாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று கூறினர்.

உமர் (ரலி) அவர்கள், “எந்த வசனம் அது?” என்று கேட்க அவர்கள், “ இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப்படுத்திவிட்டேன்; உங்கள்மீது என் அருட்கொடையை நிறைவாகப் பொழிந்துவிட்டேன்; உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துக்கொண்டேன்' எனும் (5:3) இறைவசனம்தான் அது” என்று பதிலளித் தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இது எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பது எனக்குத் தெரியும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“ஹஜ்—த்துல் வதா'வின் சமயத்தில்) அரஃபாவில் நின்றுகொண்டிருந்தபோது அருளப் பெற்றது” என்று சொன்னார்கள்.444


அத்தியாயம் : 64
4408. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ، وَأَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ، فَأَمَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَلَمْ يَحِلُّوا حَتَّى يَوْمَ النَّحْرِ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ وَقَالَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ. حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا مَالِكٌ مِثْلَهُ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4408. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (“விடைபெறும் ஹஜ்'ஜின் போது) புறப்பட்டோம். எங்களில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தவர்களும், ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டியிருந்தவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “ஹஜ்ஜத்துல் வதா ஆண்டில்' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.445


அத்தியாயம் : 64
4409. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ ـ هُوَ ابْنُ سَعْدٍ ـ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ مِنْ وَجَعٍ، أَشْفَيْتُ مِنْهُ عَلَى الْمَوْتِ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَلَغَ بِي مِنَ الْوَجَعِ مَا تَرَى، وَأَنَا ذُو مَالٍ وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ لِي وَاحِدَةٌ أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ "" لاَ "". قُلْتُ أَفَأَتَصَدَّقُ بِشَطْرِهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالثُّلُثِ قَالَ "" وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَلَسْتَ تُنْفِقُ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ أُجِرْتَ بِهَا، حَتَّى اللُّقْمَةَ تَجْعَلُهَا فِي فِي امْرَأَتِكَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ آأُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ "" إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً تَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً، وَلَعَلَّكَ تُخَلَّفُ حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ، اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ، وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ. لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ رَثَى لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُوُفِّيَ بِمَكَّةَ "".
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4409. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் சமயம் (நான் மக்காவிலிருந்த போது எனக்கேற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! பொருளாதார வசதியுள்ள எனக்கு என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் இந்த நோய் என்னைப் பீடித்துள்ளது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தர்மம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்' என்று சொன்னார்கள். நான், “அப்படியானால் என் சொத்தில் பாதியைத் தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்க அதற்கும், “வேண்டாம்' என்று சொன்னார்கள். நான், “மூன்றில் ஒரு பங்கைத் தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்டேன்.

அவர்கள், “மூன்றில் ஒரு பங்கா? மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடிச் செய்கின்ற செலவு எதுவாயினும் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பிரதிபலன் தரப்படும். எந்த அளவுக்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகின்ற ஒரு கவளம் உணவுக்கும்கூட (உங்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படும்)” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்.) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்” எனக் கூறிவிட்டு உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மையடைவதற்காவும் மற்றச் சிலர் துன்பமடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.

மேலும், “இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்குவாயாக! தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்தைய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) இவர்களைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே” எனப் பிரார்த்தித்தார்கள். (நோயாளியாயிருந்த மற்றொருவரான) சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக, “பாவம், சஅத் பின் கவ்லா! (அவர் நினைத்தது நடக்கவில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.446


அத்தியாயம் : 64
4410. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَلَقَ رَأْسَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4410. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “ஹஜ்—த்துல் வதா'வின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்தபின்) தம் தலையை மழித்துக்கொண்டார்கள்.447


அத்தியாயம் : 64
4411. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَخْبَرَهُ ابْنُ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَلَقَ فِي حَجَّةِ الْوَدَاعِ وَأُنَاسٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4411. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் சிலரும் விடைபெறும் ஹஜ்ஜின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்தபின்) தம் தலையை மழித்துக்கொண்டார்கள். (தோழர்கள்) சிலர் தம் தலைமுடியைக் குறைத்துக் கொண்டார்கள்.448


அத்தியாயம் : 64
4412. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، أَقْبَلَ يَسِيرُ عَلَى حِمَارٍ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ يُصَلِّي بِالنَّاسِ، فَسَارَ الْحِمَارُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ، ثُمَّ نَزَلَ عَنْهُ، فَصَفَّ مَعَ النَّاسِ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4412. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்றுகொண்டிருந்தபோது, கழுதை யொன்றில் பயணித்தபடி நான் அவர் களை நோக்கிச் சென்றேன். (எனது) அந்தக் கழுதை (தொழுகையாளிகளின்) ஓரணியில் ஒரு பகுதிக்கு முன்னால் நடந்து சென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் நின்றுகொண்டேன்.449

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4413. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، سُئِلَ أُسَامَةُ وَأَنَا شَاهِدٌ، عَنْ سَيْرِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي حَجَّتِهِ. فَقَالَ الْعَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4413. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுடன் நான் இருந்துகொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தின் வேகத்தைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவர்களின் பயண வேகம்) நடுநிலையானதாய் இருந்தது. (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடம் வந்ததும் அவர்கள் விரைந்து செல்வார்கள்” என்று சொன்னார்கள்.450


அத்தியாயம் : 64
4414. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ، أَنَّ أَبَا أَيُّوبَ، أَخْبَرَهُ أَنَّهُ، صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا.
பாடம் : 78 விடைபெறும் ஹஜ்433
4414. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (முஸ்தலிஃபாவில்) மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதேன்.451

அத்தியாயம் : 64