4109. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ "" نَغْزُوهُمْ وَلاَ يَغْزُونَنَا "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4109. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போர் (முடிந்து குறைஷியர் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள், “(இனி போர் தொடுப்பதானால்,) நாமே அவர்களின் மீது போர் தொடுக்க வேண்டும்; அவர்கள் நம்மீது (இனி) போர் தொடுக்க (சக்தி பெற) மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 64

4110. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ صُرَدٍ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ حِينَ أَجْلَى الأَحْزَابُ عَنْهُ "" الآنَ نَغْزُوهُمْ وَلاَ يَغْزُونَنَا، نَحْنُ نَسِيرُ إِلَيْهِمْ "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4110. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பியபோது, “இப்போது (போர் புரிவ தானால்) நாம்தான் அவர்களுடன் போர் புரிய வேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரிய முடியாது; நாம்தான் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.183

4111. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ يَوْمَ الْخَنْدَقِ "" مَلأَ اللَّهُ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4111. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “எதிரிகளுடைய வீடுகளையும், அடக்கத் தலங்களையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.184

4112. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ جَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ أَنْ تَغْرُبَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَاللَّهِ مَا صَلَّيْتُهَا "" فَنَزَلْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4112. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை நான் அஸ்ர் தொழ இயலவில்லை” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் இதுவரை அஸ்ர் தொழவில்லை” என்று கூறினார்கள்.
பின்னர் “புத்ஹான்' எனும் பள்ளத் தாக்கிற்கு நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்தோம். சூரியன் மறைந்தபிறகு அஸ்ரையும் அதன் பின்னர் மஃக்ரிபையும் (எங்களுடன்) நபியவர்கள் தொழுதார்கள்.185

4113. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ "" مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ "". فَقَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ "". فَقَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ "". فَقَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4113. ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்து)க் கொண்டு வருபவர் யார்?” என்று கேட்டார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள், “நான்' என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும், “எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள். பிறகு, “எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டுவருபவர் யார்?” என்று (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என்னுடைய (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.186

4114. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ، أَعَزَّ جُنْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ وَغَلَبَ الأَحْزَابَ وَحْدَهُ، فَلاَ شَىْءَ بَعْدَهُ "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4114. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரில் எதிரிகள் தோல்வி யுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும்போது), “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். கூட்டுப் படையினரை அவனே தன்னந்தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப்போவது) இல்லை” என்று கூறினார்கள்.

4115. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، وَعَبْدَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الأَحْزَابِ فَقَالَ "" اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4115. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அகழ்ப் போரின்போது ஒன்றுதிரண்டு தாக்கவந்த எதிர்)கூட்டுப் படையினருக்குக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, “இறைவா! குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்குத் தீர்ப்பவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்றுதிரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.187
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4116. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، وَنَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَفَلَ مِنَ الْغَزْوِ، أَوِ الْحَجِّ، أَوِ الْعُمْرَةِ، يَبْدَأُ فَيُكَبِّرُ ثَلاَثَ مِرَارٍ ثُمَّ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونُ سَاجِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ "".
பாடம் : 30
அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171
இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4116. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜி லிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது முதலில் மூன்று முறை, “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியன. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன்.
நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாகவும் அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம். அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டுப் படையினரை தோற்கடித்துவிட்டான்.188
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4117. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْخَنْدَقِ وَوَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ، أَتَاهُ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَقَالَ قَدْ وَضَعْتَ السِّلاَحَ وَاللَّهِ مَا وَضَعْنَاهُ، فَاخْرُجْ إِلَيْهِمْ. قَالَ "" فَإِلَى أَيْنَ "". قَالَ هَا هُنَا، وَأَشَارَ إِلَى بَنِي قُرَيْظَةَ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ.
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4117. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள், அகழ்ப் போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே வைக்கவில்லை. எனவே, அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்கே (போவது)?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, இங்கே!” என்று “பனூ குறைழா' (என்னும் யூதக்) குலத்தாரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கிச் சைகை காட்டினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.190

4118. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى الْغُبَارِ سَاطِعًا فِي زُقَاقِ بَنِي غَنْمٍ مَوْكِبِ جِبْرِيلَ حِينَ سَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بَنِي قُرَيْظَةَ.
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4118. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் “பனூ குறைழா' குலத்தாரை நோக்கிச் சென்றபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனிவந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போதுகூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.191

4119. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ "" لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ "". فَأَدْرَكَ بَعْضُهُمُ الْعَصْرَ فِي الطَّرِيقِ، فَقَالَ بَعْضُهُمْ لاَ نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا. وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي، لَمْ يُرِدْ مِنَّا ذَلِكَ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ.
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4119. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள்.192 வழியிலேயே அஸ்ர் (தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழ வேண்டாம்” என்று கூறினர். வேறுசிலர், “(தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை; (“வேகமாக அங்கு போய்ச்சேருங்கள்' என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.193

4120. حَدَّثَنَا ابْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، وَحَدَّثَنِي خَلِيفَةُ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، وَإِنَّ أَهْلِي أَمَرُونِي أَنْ آتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَسْأَلَهُ الَّذِينَ كَانُوا أَعْطَوْهُ أَوْ بَعْضَهُ. وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ أَعْطَاهُ أُمَّ أَيْمَنَ، فَجَاءَتْ أُمُّ أَيْمَنَ فَجَعَلَتِ الثَّوْبَ فِي عُنُقِي تَقُولُ كَلاَّ وَالَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ لاَ يُعْطِيكَهُمْ وَقَدْ أَعْطَانِيهَا، أَوْ كَمَا قَالَتْ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" لَكِ كَذَا "". وَتَقُولُ كَلاَّ وَاللَّهِ. حَتَّى أَعْطَاهَا، حَسِبْتُ أَنَّهُ قَالَ "" عَشَرَةَ أَمْثَالِهِ "". أَوْ كَمَا قَالَ.
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4120. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா மற்றும் பனுந் நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரை, நபி (ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக்கொள்ளும்படி அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தனர். (பனூ குறைழா, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட பின்னர் அன்சாரிகளிடமே அந்த மரங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.194
(அந்தச் சமயத்தில்) என் குடும்பத்தார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்குத் தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும், அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் அந்த மரங்களை (பராமரிக்கும் பொறுப்பைத் தம் வளர்ப்புத் தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (நான் அந்த மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்தார்கள். எனது கழுத்தின் மீது துணியைப் போட்டு, “முடியாது! யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு (அவற்றைத்) தரமாட்டார் கள். (ஏனெனில்,) அவற்றை அவர்கள் எனக்கு (உரிமையாக்கித்) தந்துவிட்டார்கள்” என்றோ அல்லது இது போல வேறொரு வார்த்தையையோ கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (உம்மு அய்மன் (ரலி) அவர்களைப் பார்த்து அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அதற்குப் பகரமாக) உங்களுக்கு இந்த அளவு தருகிறேன்” என்று கூறினார்கள். (அப்போது) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த அளவு நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தரும்வரை (அவற்றை உங்க ளிடம் திருப்பித் தர) முடியாது” என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
அனஸ் (ரலி) அவர்கள், “அது போன்று பத்து மடங்கு (தருவதாக' நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ) அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையைக் கூறியதாகவோ நான் எண்ணுகிறேன்.

4121. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَ أَهْلُ قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ، فَأَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى سَعْدٍ، فَأَتَى عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا مِنَ الْمَسْجِدِ قَالَ لِلأَنْصَارِ "" قُومُوا إِلَى سَيِّدِكُمْ ـ أَوْ ـ خَيْرِكُمْ "". فَقَالَ "" هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ "". فَقَالَ تَقْتُلُ مُقَاتِلَتَهُمْ وَتَسْبِي ذَرَارِيَّهُمْ. قَالَ "" قَضَيْتَ بِحُكْمِ اللَّهِ "". وَرُبَّمَا قَالَ "" بِحُكْمِ الْمَلِكِ "".
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4121. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) “பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தம் கோட்டையிலிருந்து)இறங்கிவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரó) அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவரை' அல்லது “உங்களில் சிறந்தவரை' நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள்.
பிறகு, “(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பிற்கு (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்ய வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்” என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” அல்லது “அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” என்று சொன்னார்கள்.195

4122. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ، رَمَاهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ يُقَالُ لَهُ حِبَّانُ ابْنُ الْعَرِقَةِ، رَمَاهُ فِي الأَكْحَلِ، فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْمَةً فِي الْمَسْجِدِ لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ، فَلَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْخَنْدَقِ وَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ، فَأَتَاهُ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ وَهْوَ يَنْفُضُ رَأْسَهُ مِنَ الْغُبَارِ فَقَالَ قَدْ وَضَعْتَ السِّلاَحَ وَاللَّهِ مَا وَضَعْتُهُ، اخْرُجْ إِلَيْهِمْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَأَيْنَ "". فَأَشَارَ إِلَى بَنِي قُرَيْظَةَ، فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَلُوا عَلَى حُكْمِهِ، فَرَدَّ الْحُكْمَ إِلَى سَعْدٍ، قَالَ فَإِنِّي أَحْكُمُ فِيهِمْ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ، وَأَنْ تُسْبَى النِّسَاءُ وَالذُّرِّيَّةُ، وَأَنْ تُقْسَمَ أَمْوَالُهُمْ. قَالَ هِشَامٌ فَأَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ أَنَّ سَعْدًا قَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنَّهُ لَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَىَّ أَنْ أُجَاهِدَهُمْ فِيكَ مِنْ قَوْمٍ كَذَّبُوا رَسُولَكَ صلى الله عليه وسلم وَأَخْرَجُوهُ، اللَّهُمَّ فَإِنِّي أَظُنُّ أَنَّكَ قَدْ وَضَعْتَ الْحَرْبَ بَيْنَنَا وَبَيْنَهُمْ، فَإِنْ كَانَ بَقِيَ مِنْ حَرْبِ قُرَيْشٍ شَىْءٌ، فَأَبْقِنِي لَهُ حَتَّى أُجَاهِدَهُمْ فِيكَ، وَإِنْ كُنْتَ وَضَعْتَ الْحَرْبَ فَافْجُرْهَا، وَاجْعَلْ مَوْتَتِي فِيهَا. فَانْفَجَرَتْ مِنْ لَبَّتِهِ، فَلَمْ يَرُعْهُمْ وَفِي الْمَسْجِدِ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ إِلاَّ الدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ فَقَالُوا يَا أَهْلَ الْخَيْمَةِ مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ فَإِذَا سَعْدٌ يَغْذُو جُرْحُهُ دَمًا، فَمَاتَ مِنْهَا رضى الله عنه.
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4122. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான ஹிப்பான் பின் அல்அரிகா எனப்படுபவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டுவந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள்.
அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு “எங்கே?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது “பனூ குறைழா' குலத்தார் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பலநாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
சஅத் (ரலி) அவர்கள், “பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்பட வேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந் தோடிக்கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள், “இறைவா! உன்னுடைய தூதரை நம்பிக்கை கொள்ளாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும்விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷியரான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷியருடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச்செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்குமரணத்தை அளித்துவிடு” என்று பிரார்த்தித்தார்கள்.
அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த “பனூ ஃகிபார்' குலத்தாருக்கு சஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தம்மை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம்தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், “கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக்கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னார்மீது அன்பு கொள்வானாக!196

4123. حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيٌّ، أَنَّهُ سَمِعَ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِحَسَّانَ "" اهْجُهُمْ ـ أَوْ هَاجِهِمْ ـ وَجِبْرِيلُ مَعَكَ "".
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4123. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள், (“பனூ குறைழா' நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், “இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.197

4124. وَزَادَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ قُرَيْظَةَ لِحَسَّانَ بْنِ ثَابِتٍ "" اهْجُ الْمُشْرِكِينَ، فَإِنَّ جِبْرِيلَ مَعَكَ "".
பாடம் : 31
நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4124. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பனூ குறைழா' போரின்போது ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி, இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.

4125. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ أَخْبَرَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِأَصْحَابِهِ فِي الْخَوْفِ فِي غَزْوَةِ السَّابِعَةِ غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ. قَالَ ابْنُ عَبَّاسٍ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْخَوْفَ بِذِي قَرَدٍ.
பாடம் : 32
“தாத்துர் ரிக்காஉ' போர்198
இதுதான் “முஹாரிபு கஸ்ஃபா' போராகும். இவர்கள் “ஃகதஃபான்' குலத் தின் ஒரு பிரிவினரான “பனூ ஸஅலபா' கூட்டத்தார் ஆவர்.199
இப்போரில் நபி (ஸல்) அவர்கள் “நக்ல்' என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள்.200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், (“தாத்துர் ரிக்காஉ' போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான) அபூமூசா (ரலி) அவர்கள் கைபர் போருக்குப் பின்னால்தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.
4125. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் செய்த) ஏழாவது போரான “தாத்துர் ரிக்காஉ' போரின்போது தம் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அச்சநேரத் தொழுகையைத் தொழுதார்கள்.201
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை “தூ கரத்' எனும் இடத்தில் தொழுதார்கள்.202

4126. وَقَالَ بَكْرُ بْنُ سَوَادَةَ حَدَّثَنِي زِيَادُ بْنُ نَافِعٍ، عَنْ أَبِي مُوسَى، أَنَّ جَابِرًا، حَدَّثَهُمْ صَلَّى النَّبِيُّ، صلى الله عليه وسلم بِهِمْ يَوْمَ مُحَارِبٍ وَثَعْلَبَةَ.
பாடம் : 32
“தாத்துர் ரிக்காஉ' போர்198
இதுதான் “முஹாரிபு கஸ்ஃபா' போராகும். இவர்கள் “ஃகதஃபான்' குலத் தின் ஒரு பிரிவினரான “பனூ ஸஅலபா' கூட்டத்தார் ஆவர்.199
இப்போரில் நபி (ஸல்) அவர்கள் “நக்ல்' என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள்.200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், (“தாத்துர் ரிக்காஉ' போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான) அபூமூசா (ரலி) அவர்கள் கைபர் போருக்குப் பின்னால்தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.
4126. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
முஹாரிப் மற்றும் ஸஅலபா போரின்போது203 நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுதார்கள்.

4127. وَقَالَ ابْنُ إِسْحَاقَ سَمِعْتُ وَهْبَ بْنَ كَيْسَانَ، سَمِعْتُ جَابِرًا، خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى ذَاتِ الرِّقَاعِ مِنْ نَخْلٍ فَلَقِيَ جَمْعًا مِنْ غَطَفَانَ، فَلَمْ يَكُنْ قِتَالٌ، وَأَخَافَ النَّاسُ بَعْضُهُمْ بَعْضًا فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم رَكْعَتَىِ الْخَوْفِ. وَقَالَ يَزِيدُ عَنْ سَلَمَةَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْقَرَدِ.
பாடம் : 32
“தாத்துர் ரிக்காஉ' போர்198
இதுதான் “முஹாரிபு கஸ்ஃபா' போராகும். இவர்கள் “ஃகதஃபான்' குலத் தின் ஒரு பிரிவினரான “பனூ ஸஅலபா' கூட்டத்தார் ஆவர்.199
இப்போரில் நபி (ஸல்) அவர்கள் “நக்ல்' என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள்.200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், (“தாத்துர் ரிக்காஉ' போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான) அபூமூசா (ரலி) அவர்கள் கைபர் போருக்குப் பின்னால்தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.
4127. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(நஜ்த் பகுதி “ஃகதஃபான்' குலத்தார் வசித்துவந்த) “நக்ல்' எனுமிடத்திற்கு “தாத்துர் ரிக்காஉ' போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது “ஃகதஃபான்' குலத்தாரின் ஒரு கூட்டத்தைச் சந்தித்தார்கள். மக்களில் சிலர் சிலரைக் கண்டு அஞ்சினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களுடன்) அச்சநேரத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
சலமா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களுடன் நான் “அல்கரத்' போரில் கலந்துகொண்டேன்.

4128. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ وَنَحْنُ سِتَّةُ نَفَرٍ بَيْنَنَا بَعِيرٌ نَعْتَقِبُهُ، فَنَقِبَتْ أَقْدَامُنَا وَنَقِبَتْ قَدَمَاىَ وَسَقَطَتْ أَظْفَارِي، وَكُنَّا نَلُفُّ عَلَى أَرْجُلِنَا الْخِرَقَ، فَسُمِّيَتْ غَزْوَةَ ذَاتِ الرِّقَاعِ، لِمَا كُنَّا نَعْصِبُ مِنَ الْخِرَقِ عَلَى أَرْجُلِنَا، وَحَدَّثَ أَبُو مُوسَى بِهَذَا، ثُمَّ كَرِهَ ذَاكَ، قَالَ مَا كُنْتُ أَصْنَعُ بِأَنْ أَذْكُرَهُ. كَأَنَّهُ كَرِهَ أَنْ يَكُونَ شَىْءٌ مِنْ عَمَلِهِ أَفْشَاهُ.
பாடம் : 32
“தாத்துர் ரிக்காஉ' போர்198
இதுதான் “முஹாரிபு கஸ்ஃபா' போராகும். இவர்கள் “ஃகதஃபான்' குலத் தின் ஒரு பிரிவினரான “பனூ ஸஅலபா' கூட்டத்தார் ஆவர்.199
இப்போரில் நபி (ஸல்) அவர்கள் “நக்ல்' என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள்.200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், (“தாத்துர் ரிக்காஉ' போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான) அபூமூசா (ரலி) அவர்கள் கைபர் போருக்குப் பின்னால்தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.
4128. அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்துப் பயணம் செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்துவிட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததால் தான் அந்தப் போருக்கு “தாத்துர் ரிக்காஉ' (ஒட்டுத் துணிப் போர்) என்று பெயர் சூட்டப்பட்டது.
அறிவிப்பாளர் அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்தபின் அபூமூசா (ரலி) அவர்கள், தாம் இதை அறிவித்ததைத் தாமே விரும்பாமல், “நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல்தான் இருந்தேன்” என்றார்கள். தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லைபோலும்.