394. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلاَ تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا "". قَالَ أَبُو أَيُّوبَ فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ، فَنَنْحَرِفُ وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى. وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 29 மதீனாவாசிகள், ஷாம்(சிரியா) வாசிகள், கிழக்கில் வசிப்பவர் கள் ஆகியோரின் தொழும் திசை (கிப்லா) கிழக்கிலோ மேற்கிலோ (மதீனாவாசி களுக்கும் ஷாம்வாசிகளுக்கும்) கிப்லா இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், (மதீனாவாசிகளிடம்), “மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்காதீர்கள். அப்போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள்.23
394. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஅபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்.

இதை அறிவித்த அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள், “நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்த போது, (அங்குள்ள) கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டி ருப்பதைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையி-ருந்து) திரும்பிக் கொண்டோம்; (அவ்வாறு கட்டியவர்களுக் காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 8
395. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ، طَافَ بِالْبَيْتِ الْعُمْرَةَ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ.
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
395. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உம்ராவுக்காக (இஹ்ராம் கட்டிய) ஒருவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார். ஆனால் ஸஃபா - மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள லாமா?” என்று நாங்கள் இப்னு உமர்

(ரலி) அவர்களிடம் கேட்டோம்.25

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவை ஏழு முறைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக் குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பிறகு ஸஃபா - மர்வாவுக்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் (சயீ) ஓடினார்கள். (ஆகவே, நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.)” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
396. وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
396. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (இது பற்றி) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வா (மலை)களுக்குகிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடாத வரை மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கவே கூடாது” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 8
397. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَيْفٍ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ أُتِيَ ابْنُ عُمَرَ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ. فَقَالَ ابْنُ عُمَرَ فَأَقْبَلْتُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ، وَأَجِدُ بِلاَلاً قَائِمًا بَيْنَ الْبَابَيْنِ، فَسَأَلْتُ بِلاَلاً فَقُلْتُ أَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ رَكْعَتَيْنِ بَيْنَ السَّارِيَتَيْنِ اللَّتَيْنِ عَلَى يَسَارِهِ إِذَا دَخَلْتَ، ثُمَّ خَرَجَ فَصَلَّى فِي وَجْهِ الْكَعْبَةِ رَكْعَتَيْنِ.
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
397. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இதோ அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற் குள் நுழைந்துவிட்டார்கள்” என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள் ளிருந்து) வெளியே வந்துகொண்டிருந்த போது நான் அங்கு சென்றேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவின் இரு நிலைக்கால்களுக்கிடையே நின்றுகொண்டி ருப்பதைக் கண்டேன். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், “கஅபாவிற் குள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்; நீங்கள் கஅபாவிற்குள் நுழையும்போது இடப் பக்கமிருக்கின்ற இரு தூண்களுக்கு மத்தியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார் கள்; பிறகு வெளியே வந்து கஅபாவின் கதவை முன்னோக்கியபடி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 8
398. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا، وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ، فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ وَقَالَ "" هَذِهِ الْقِبْلَةُ "".
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
398. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துத் திசைகளிலும் பிரார்த்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதி-ருந்து வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, “இது தான் கிப்லா (தொழும் திசை)” என்று சொன்னார்கள்.26

அத்தியாயம் : 8
399. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ} فَتَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ، وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ ـ وَهُمُ الْيَهُودُ ـ مَا وَلاَّهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا {قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ} فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ ثُمَّ خَرَجَ بَعْدَ مَا صَلَّى، فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ فِي صَلاَةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ. فَتَحَرَّفَ الْقَوْمُ حَتَّى تَوَجَّهُوا نَحْوَ الْكَعْبَةِ.
பாடம் : 31 எங்கிருந்தாலும் (தொழும்போது) கிப்லா(வான கஅபா)வின் திசையையே முன்னோக்க வேண்டும். “நீங்கள் (தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி ‘தக்பீர்’ (தஹ்ரீமா) சொல்லுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
399. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்து) ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ (ஜெருசல மிலுள்ள) பைத்துல் மக்திசை நோக்கித் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) கஅபாவை நோக்கித் தாம் திருப்பப்பட வேண்டு மென்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பிக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே, (தொழுகையில் கஅபாவை முன்னோக்கும்படி ஆணையிட்டு) அல்லாஹ், “(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) விண்ணை நோக்கித் திரும்புவதை நாம் காண்கிறோம்...” (2:144) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.

உடனே நபி (ஸல்) அவர்கள் கஅபாவை முன்னோக்கி(த் தொழலா)னார்கள். (இதைக் கண்ட) அறிவற்ற மக்கள் -அதாவது யூதர்கள்- “(முஸ்-ம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று கூறினர். (அதற்கு அல்லாஹ்,) “(நபியே!) கூறுக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ் வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நல்வழியில் நடத்திச்செல்வான்” (2:142) என்று சொன்னான்.

(கஅபாவை நோக்கி கிப்லா மாற்றம் நடைபெற்ற அந்தத் தொழுகையில்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதர் தொழுதார். தொழுதுவிட்டு அவர் புறப் பட்டு(ச் செல்லும் வழியில்), பைத்துல் மக்திசை நோக்கி அஸ்ர் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்த அன்சாரி களில் சிலரைக் கடந்து சென்றார்.

அப்போது அவர் “நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழு தேன்; அவர்கள் கஅபாவை முன்னோக் கித் தொழுதார்கள் என்று நான் உறுதி கூறு கின்றேன்” என்றார். உடனே (தொழுகை யி-ருந்த) அம்மக்கள் கஅபாவின் திசையில் திரும்பிக்கொண்டார்கள்


அத்தியாயம் : 8
400. حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ، فَإِذَا أَرَادَ الْفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ.
பாடம் : 31 எங்கிருந்தாலும் (தொழும்போது) கிப்லா(வான கஅபா)வின் திசையையே முன்னோக்க வேண்டும். “நீங்கள் (தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி ‘தக்பீர்’ (தஹ்ரீமா) சொல்லுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
400. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (அமர்ந்து சைகை செய்தவாறு,) அது செல்கின்ற திசையை நோக்கி (கூடுதல் தொழுகைகளை) தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையை அவர்கள் தொழ நாடும்போது (வாகனத்தி-ருந்து) இறங்கி, கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்.




அத்தியாயம் : 8
401. حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم ـ قَالَ إِبْرَاهِيمُ لاَ أَدْرِي زَادَ أَوْ نَقَصَ ـ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ قَالَ "" وَمَا ذَاكَ "". قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا. فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ "" إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلْيَتَحَرَّى الصَّوَابَ، فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ يُسَلِّمْ، ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ "".
பாடம் : 31 எங்கிருந்தாலும் (தொழும்போது) கிப்லா(வான கஅபா)வின் திசையையே முன்னோக்க வேண்டும். “நீங்கள் (தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி ‘தக்பீர்’ (தஹ்ரீமா) சொல்லுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
401. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ர் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்கள் (அத்தொழுகை யின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா, அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இந்தத் தொழுகை யின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)” என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் அமர்வில் இருப்பதைப் போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள்.

இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன்.

ஆயினும், நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்” என்று கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும்போது, சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து ‘சலாம்’ கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்யட்டும்” என்று கூறினார்கள்.



அத்தியாயம் : 8
402. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ. فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ. فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ.
பாடம் : 32 ‘கிப்லா’ தொடர்பாக வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாக ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும்போது) அந்தத் தொழுகையைத் திருப் பித் தொழ வேண்டியதில்லை என்ற கருத்தும்.27 (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் சலாம் கொடுத்துவிட்டு மக்களை முன்னோக்கி அமர்ந்துவிட் டார்கள். பின்னர் (நபித்தோழர்கள் நினைவூட்டி யதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதார்கள்.28
402. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்து கொண்டேன்:

1. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடத்தைத் தொழுமிடமாக நாம் ஆக்கிக்கொள்ளலாமே!” என்று கேட்டேன். அப்போது, “இப்ராஹீம் நின்ற இடத்தைத் தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்” (2:125) எனும் இறை வசனம் அருளப்பெற்றது.29

2. பர்தா குறித்த இறைவசனமும் (என் கருத்துக்கு இசைவாகவே அருளப் பெற்றது.) :

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவி யரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளையிடலாமே! ஏனெனில், அவர் களுடன் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) உரையாடலாம்” என்று சொன்னேன். அப்போது பர்தா குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.

3. (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் ஒன்று சேர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டனர். அப்போது நான் அவர்களிடம், “இறைத் தூதர் உங்களை மணவிலக்குச் செய்து விட்டால், உங்களை விடச் சிறந்த துணைவியரை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கலாம்” என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறே) இந்த இறைவசனம் (66:5) அருளப்பெற்றது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 8
403. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 32 ‘கிப்லா’ தொடர்பாக வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாக ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும்போது) அந்தத் தொழுகையைத் திருப் பித் தொழ வேண்டியதில்லை என்ற கருத்தும்.27 (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் சலாம் கொடுத்துவிட்டு மக்களை முன்னோக்கி அமர்ந்துவிட் டார்கள். பின்னர் (நபித்தோழர்கள் நினைவூட்டி யதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதார்கள்.28
403. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (மஸ்ஜித்) குபாவில் சுப்ஹு தொழுகையைத் தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கடந்த இரவொன்றில், (தொழு கையின்போது) கஅபாவை முன்னோக்கும் படி ஆணையிட்டு அவர்களுக்குக் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்கித் தொழுங்கள்” என்று கூறினார்.

உடனே (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ‘ஷாம்’ நாட்டை நோக்கித் தொழுதுகொண்டிருந்த அவர்கள், கஅபாவை நோக்கி (அப்படியே தொழுகை யிலேயே) சுழன்று (திரும்பிக்) கொண்டனர்.


அத்தியாயம் : 8
404. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ خَمْسًا فَقَالُوا أَزِيدَ فِي الصَّلاَةِ قَالَ "" وَمَا ذَاكَ "". قَالُوا صَلَّيْتَ خَمْسًا. فَثَنَى رِجْلَيْهِ وَسَجَدَ سَجْدَتَيْنِ.
பாடம் : 32 ‘கிப்லா’ தொடர்பாக வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாக ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும்போது) அந்தத் தொழுகையைத் திருப் பித் தொழ வேண்டியதில்லை என்ற கருத்தும்.27 (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் சலாம் கொடுத்துவிட்டு மக்களை முன்னோக்கி அமர்ந்துவிட் டார்கள். பின்னர் (நபித்தோழர்கள் நினைவூட்டி யதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதார்கள்.28
404. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை ஐந்து ரக்அத்களா கத் தொழு(வித்)துவிட்டார்கள். (தொழுகை முடிந்து திரும்பியமர்ந்த நபியவர்களை நோக்கி) மக்கள், “தொழுகையில் (அதன் ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள்.

மக்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழு(வித்)தீர்கள் (அதனால்தான் வினவினோம்.)” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கித் திரும்பி மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.

அத்தியாயம் : 8
405. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ ـ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمَيْهِ "". ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ، ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ "" أَوْ يَفْعَلْ هَكَذَا "".
பாடம் : 33 பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது
405. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டி ருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்குச் சஞ் சலத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதி பலிப்பு அவர்களின் முகத்திலும் காணப் பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (தூய்மைப் படுத்தி)னார்கள்.

பிறகு “உங்களில் ஒருவர் தொழுகை யில் நிற்கும்போது, ‘அவர் தம் இறைவனு டன் அந்தரங்கமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கிறான்’. ஆகவே, உங்களில் யாரும் தமது கிப்லா திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப் புறமோ அல்லது தம் பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்” என்று கூறி விட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து, அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.30


அத்தியாயம் : 8
406. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلاَ يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى "".
பாடம் : 33 பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது
406. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லா திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள்.

உடனே அதைச் சுரண்டி (தூய்மைப்படுத்தி)ய பின்னர் மக்களை நோக்கி, “உங்களில் ஒருவர் தொழுதுகொண்டிருக்கும்போது தமது முகத்துக்கெதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம். ஏனெனில், அவர் தொழும்போது அவரது முகத்திற்கெதிரே அல்லாஹ் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 8
407. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى فِي جِدَارِ الْقِبْلَةِ مُخَاطًا أَوْ بُصَاقًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ.
பாடம் : 33 பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது
407. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லா திசையிலுள்ள சுவரில் ‘மூக்குச்சளியை’ அல்லது ‘எச் சிலை’ அல்லது ‘காறல் சளியை’க் கண்டார் கள். உடனே அதைச் சுரண்டி (தூய்மைப் படுத்தி)விட்டார்கள்.

அத்தியாயம் : 8
408. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ حَدَّثَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي جِدَارِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا فَقَالَ " إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ".
பாடம் : 34 பள்ளியில் (சிந்தப்பட்ட) மூக்குச் சளியைச் சிறுகற்களால் சுரண்டி (அப்புறப்படுத்தி)விடு தல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ அசிங்கத்தை மிதித்துவிட்டால் அது ஈரமாக இருந்தால் உடனே அதைக் கழுவிக்கொள்! அது காய்ந்து இருந்தால் (கழுவ) வேண்டியதில்லை” என்றார்கள்.
408. அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் சுவரில் (காறி உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய்மைப்படுத்தி)னார்கள்.

பிறகு, “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமது முகத்துக்கு எதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; தமது இடப் புறமோ பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 8
410. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي حَائِطِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَصَاةً فَحَتَّهَا ثُمَّ قَالَ " إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمْ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ".
பாடம் : 35 தொழும்போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்ப லாகாது.
410. அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய் மைப்படுத்தி)னார்கள்.

பின்னர், “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட் டால், தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; இடப் புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
412. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسًا، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَتْفِلَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ رِجْلِهِ "".
பாடம் : 35 தொழும்போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்ப லாகாது.
412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்கு முன்புறமோ தமக்கு வலப் புறமோ உங்களில் எவரும் துப்பக் கூடாது. எனினும், தமக்கு இடப் புறமோ காலுக் கடியிலோ (துப்பலாம்).

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 8
413. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي الصَّلاَةِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ، فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ "".
பாடம் : 36 இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம்.
413. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளர் தொழுதுகொண்டிருக்கும்போது தம் இறைவனுடன் தான் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்புறத்திலும் உமிழ வேண்டாம்; தமக்கு வலப் பக்கத்தி லும் உமிழ வேண்டாம்.. எனினும், இடப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழட்டும்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8