3936. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ حَجَّةِ الْوَدَاعِ مِنْ مَرَضٍ أَشْفَيْتُ مِنْهُ عَلَى الْمَوْتِ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، بَلَغَ بِي مِنَ الْوَجَعِ مَا تَرَى، وَأَنَا ذُو مَالٍ وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ "" لاَ "". قَالَ فَأَتَصَدَّقُ بِشَطْرِهِ قَالَ "" الثُّلُثُ يَا سَعْدُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ ذُرِّيَّتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ "". قَالَ أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ إِبْرَاهِيمَ "" أَنْ تَذَرَ ذُرِّيَّتَكَ، وَلَسْتَ بِنَافِقٍ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ آجَرَكَ اللَّهُ بِهَا، حَتَّى اللُّقْمَةَ تَجْعَلُهَا فِي فِي امْرَأَتِكَ "". قُلْتَ يَا رَسُولَ اللَّهِ، أُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ "" إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً تَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً، وَلَعَلَّكَ تُخَلَّفُ حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ، وَيُضَرَّ بِكَ آخَرُونَ، اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ، وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ، لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُوُفِّيَ بِمَكَّةَ "". وَقَالَ أَحْمَدُ بْنُ يُونُسَ وَمُوسَى عَنْ إِبْرَاهِيمَ "" أَنْ تَذَرَ وَرَثَتَكَ "".
பாடம் : 49
“இறைவா! என் தோழர்கள் தங்களுடைய ஹிஜ்ரத்தை முழுமையாக நிறைவேற்றும்படி செய்” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததும், (தம் தோழர்களில் ஹிஜ்ரத் செய்ய இயலாமல்) மக்காவிலேயே இறந்துவிட்டவர்களைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்ததும்
3936. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“விடைபெறும் ஹஜ்'ஜின்போது நபி (ஸல்) அவர்கள், நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டிருந்தேன். (நபி (ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், “அல்லாஹ் வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந் நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்துவிட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தர்மம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், “அப்படியென் றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் சந்ததிகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிடத் தன்னிறைவுடையவர் களாக விட்டுச்செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடிச் செலவழிக்கின்ற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே” என்று சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தோழர்கள் (எல்லாரும் மதீனாவுக்குச்) சென்றுவிட்ட பிறகு நான் (மட்டும், இங்கே மக்காவில்) பின்தங்கிவிடுவேனா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,” நீங்கள் (இங்கு) பின்தங்கியிருந்து அல்லாஹ்வின் அன்பை நாடி நீங்கள் புரியும் நற்செயல் எதுவாயினும் அதனால் உங்களுக்குத் தகுதியும் உயர்வும் அதிகமாகவே செய்யும். சில சமுதாயத்தார் உங்களால் பலனடைவ தற்காகவும் வேறுசிலர் இழப்புக்குள்ளாவ தற்காகவும் (உங்கள் ஆயுள் நீட்டிக்கப்பட்டு இங்கேயே) நீங்கள் பின்தங்கிவிடக்கூடும்” என்று சொல்லிவிட்டு, “இறைவா! என் தோழர்கள் தங்கள் ஹிஜ்ரத்தை முழுமை யாக நிறைவேற்றும்படி செய்வாயாக! அவர்களைத் தம் கால்சுவடுகளின் வழியே (பழைய அறியாமைக் கால நிலைக்குத்) திருப்பியனுப்பிவிடாதே” என்று பிரார்த்தித் தார்கள்.
மேலும், “ஆயினும் சஅத் பின் கவ்லாதான் பாவம்” என்று சொன்னார்கள். சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்.184
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில், (உங்கள் வாரிசுகளை என்பதற்குப் பதிலாக) “உங்கள் வாரிசுகளை ஏழைகளாக நீங்கள் விட்டுச்செல்வது” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) காணப்படுகிறது.
அத்தியாயம் : 63

3937. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَآخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، فَعَرَضَ عَلَيْهِ أَنْ يُنَاصِفَهُ أَهْلَهُ وَمَالَهُ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، دُلَّنِي عَلَى السُّوقِ. فَرَبِحَ شَيْئًا مِنْ أَقِطٍ وَسَمْنٍ، فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ أَيَّامٍ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَهْيَمْ يَا عَبْدَ الرَّحْمَنِ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ. قَالَ "" فَمَا سُقْتَ فِيهَا "". فَقَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம் : 50
நபி (ஸல்) அவர்கள் தம் (முஹாஜிர் மற்றும் அன்சார்) தோழர்களிடையே எப்படிச் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்?185
“நாங்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதர உறவை ஏற்படுத்தினார்கள்” என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.186
“நபி (ஸல்) அவர்கள், சல்மான் (அல்ஃபாரிசீ -ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி னார்கள்” என்று அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.187
3937. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கும் சஅத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள், தம் குடும்பத்தாரையும் தமது செல்வத்தையும் அவருக்குச் சரிபாதியாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்குவானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே அவர் கடைவீதியைக் காட்ட அங்கு வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள்மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து), “என்ன இது, அப்துர் ரஹ்மான்!” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அன்சாரி பெண்ணொரு வரை மணம் புரிந்துகொண்டேன்” என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு (மணக்கொடையாக) என்ன கொடுத்தீர்?” என்று கேட்க, “ஒரு பேரீச்சங் கொட்டை யளவு தங்கம்” என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டை அறுத்தாவது மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக!” என்று சொன் னார்கள்.188

3938. حَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرِ بْنِ الْمُفَضَّلِ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ، بَلَغَهُ مَقْدَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَأَتَاهُ يَسْأَلُهُ عَنْ أَشْيَاءَ، فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ نَبِيٌّ مَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمَا بَالُ الْوَلَدِ يَنْزِعُ إِلَى أَبِيهِ أَوْ إِلَى أُمِّهِ قَالَ "" أَخْبَرَنِي بِهِ جِبْرِيلُ آنِفًا "". قَالَ ابْنُ سَلاَمٍ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلاَئِكَةِ. قَالَ "" أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُهُمْ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ، وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ، فَزِيَادَةُ كَبِدِ الْحُوتِ، وَأَمَّا الْوَلَدُ، فَإِذَا سَبَقَ مَاءُ الرَّجُلِ مَاءَ الْمَرْأَةِ نَزَعَ الْوَلَدَ، وَإِذَا سَبَقَ مَاءُ الْمَرْأَةِ مَاءَ الرَّجُلِ نَزَعَتِ الْوَلَدَ "". قَالَ أَشْهَدُ أَنَّ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّكَ رَسُولُ اللَّهِ. قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ، فَاسْأَلْهُمْ عَنِّي قَبْلَ أَنْ يَعْلَمُوا بِإِسْلاَمِي، فَجَاءَتِ الْيَهُودُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَىُّ رَجُلٍ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فِيكُمْ "". قَالُوا خَيْرُنَا وَابْنُ خَيْرِنَا وَأَفْضَلُنَا وَابْنُ أَفْضَلِنَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ "". قَالُوا أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ. فَأَعَادَ عَلَيْهِمْ، فَقَالُوا مِثْلَ ذَلِكَ، فَخَرَجَ إِلَيْهِمْ عَبْدُ اللَّهِ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. قَالُوا شَرُّنَا وَابْنُ شَرِّنَا. وَتَنَقَّصُوهُ. قَالَ هَذَا كُنْتُ أَخَافُ يَا رَسُولَ اللَّهِ.
பாடம் : 51
3938. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்.
பிறகு, “1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, அல்லது தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “ஜிப்ரீல்தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதிநாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப் பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டுவந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை என்றும், தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்கள்.
பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தார் ஆவர். ஆகவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து மறைந்து கொண்டார்கள்.) நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று சொன்னார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போலவே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போலவே பதிலளித்தார் கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் வெளியே வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று சொன்னார்கள்.
உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “இதைத்தான் நான் அஞ்சிக்கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.189

3939. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ أَبَا الْمِنْهَالِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مُطْعِمٍ، قَالَ بَاعَ شَرِيكٌ لِي دَرَاهِمَ فِي السُّوقِ نَسِيئَةً فَقُلْتُ سُبْحَانَ اللَّهِ أَيَصْلُحُ هَذَا فَقَالَ سُبْحَانَ اللَّهِ، وَاللَّهِ لَقَدْ بِعْتُهَا فِي السُّوقِ فَمَا عَابَهُ أَحَدٌ، فَسَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَتَبَايَعُ هَذَا الْبَيْعَ، فَقَالَ " مَا كَانَ يَدًا بِيَدٍ فَلَيْسَ بِهِ بَأْسٌ، وَمَا كَانَ نَسِيئَةً فَلاَ يَصْلُحُ ". وَالْقَ زَيْدَ بْنَ أَرْقَمَ فَاسْأَلْهُ فَإِنَّهُ كَانَ أَعْظَمَنَا تِجَارَةً، فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ فَقَالَ مِثْلَهُ. وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَقَالَ قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَنَحْنُ نَتَبَايَعُ، وَقَالَ نَسِيئَةً إِلَى الْمَوْسِمِ أَوِ الْحَجِّ.
பாடம் : 51
3939. அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் கூட்டாளி ஒருவர், சில வெள்ளிக்காசுகளைக் கடைவீதியில் தவணைக்கு விற்றார். நான் (வியப்படைந்து), “சுப்ஹானல்லாஹ்! இது சரியாகுமா? (இப்படி விற்க அனுமதியுள்ளதா?)” என்று கேட்டேன். அதற்கு அவர், “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் கடைவீதியில்தான் விற்றேன். அதை எவரும் குறை கூறவில்லை” என்று பதிலளித்தார். உடனே நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள், “நாங்கள் இந்த வியாபாரத்தை (இந்த முறையில்) செய்துவந்தபோது நபி (ஸல்) அவர்கள் (மதீனா) வந்தார்கள். “கையோடு கையாக - (உடனுக்குடன்) செய்யும் வியாபாரம் குற்றமில்லை. கடனுக்கு விற்பதாக இருந்தால் சரியில்லை' என்று சொன்னார்கள்” எனக் கூறிவிட்டு, “ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களை நீ சந்தித்துக் கேள். ஏனென்றால், அவர்தான் நம்மில் மிகப் பெரிய வியாபாரி” என்று சொன்னார்கள்.
அவ்வாறே ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்து நான் கேட்டேன். அவர்களும் பராஉ (ரலி) அவர்கள் சொன் னதைப் போன்றே சொன்னார்கள்.190
(இதைச் சிறிய மாற்றத்துடன்) அறிவிப் பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ஒருமுறை (பின்வருமாறு) கூறினார்கள்:
நாங்கள் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தபோது நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள். ஹஜ் காலம்வரை கடனுக்கு (விற்பதாக இருந்தால் சரியில்லை) என்று கூறினார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

3941. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ آمَنَ بِي عَشَرَةٌ مِنَ الْيَهُودِ لآمَنَ بِي الْيَهُودُ "".
பாடம் : 52
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191
(குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள்.
(குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3941. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என்மீது நம்பிக்கை கொண்டி ருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என்மீது நம்பிக்கை கொண்டிருந்திருப் பார்கள்.192
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3942. حَدَّثَنِي أَحْمَدُ ـ أَوْ مُحَمَّدُ ـ بْنُ عُبَيْدِ اللَّهِ الْغُدَانِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَإِذَا أُنَاسٌ مِنَ الْيَهُودِ يُعَظِّمُونَ عَاشُورَاءَ وَيَصُومُونَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" نَحْنُ أَحَقُّ بِصَوْمِهِ "". فَأَمَرَ بِصَوْمِهِ.
பாடம் : 52
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191
(குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள்.
(குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3942. அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது யூதர்களில் சிலர் (முஹர்ரம் மாதம் பத்தாம் நாளான) ஆஷூரா நாளைக் கண்ணியப்படுத்தி அதில் நோன்பு நோற்றுவந்தார்கள்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள், “அந்த நாளில் நோன்பு நோற்க நாமே அதிக உரிமையுடையவர்கள்” என்று சொல்லி அந்த நாளில் நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.193

3943. حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَجَدَ الْيَهُودَ يَصُومُونَ عَاشُورَاءَ، فَسُئِلُوا عَنْ ذَلِكَ، فَقَالُوا هَذَا الْيَوْمُ الَّذِي أَظْفَرَ اللَّهُ فِيهِ مُوسَى وَبَنِي إِسْرَائِيلَ عَلَى فِرْعَوْنَ، وَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نَحْنُ أَوْلَى بِمُوسَى مِنْكُمْ "". ثُمَّ أَمَرَ بِصَوْمِهِ.
பாடம் : 52
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191
(குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள்.
(குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3943. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் (முஹர்ரம் பத்தாம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அது பற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், “இந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கெதிராக மூசா (அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர் களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். ஆகவே, நாங்கள் மூசா (அலை) அவர் களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்” என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசா (அலை) அவர் களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்” என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்óம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.194

3944. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَسْدِلُ شَعْرَهُ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ، وَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَىْءٍ، ثُمَّ فَرَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَأْسَهُ.
பாடம் : 52
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191
(குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள்.
(குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3944. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் (முன்தலை) முடியைத் (தம் நெற்றியின் மீது) தொங்க விட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்கள் தங்கள் தலை (முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும் தொங்கவிட்டு)வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை (முடி)களைத் (தம் நெற்றிகளின் மீது) தொங்கவிட்டுவந்தார்கள்.
எந்த விஷயங்களில் (இறைக்)கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை நபி (ஸல்) அவர்கள் விரும்பிவந்தார்கள். பின்னர் (நபி (ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள்.195

3945. حَدَّثَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ هُمْ أَهْلُ الْكِتَابِ، جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ. {يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى {الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ }
பாடம் : 52
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191
(குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள்.
(குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3945. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த வேதக்காரர்கள் (எத்தகையவர்கள் எனில், குர்ஆன் எனும்) அதனைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார்கள். அதில் சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

3946. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ أَبِي وَحَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، أَنَّهُ تَدَاوَلَهُ بِضْعَةَ عَشَرَ مِنْ رَبٍّ إِلَى رَبٍّ.
பாடம் : 53
சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது196
3946. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள், “நான் ஓர் எசமானிடமிருந்து இன்னோர் எசமானாகப் பத்துக்கு மேற்பட்ட எசமானர் களின் கைக்கு (விற்கப்பட்டு) மாறிக் கொண்டிருந்தேன்” என்று சொன்னார்கள்.197

3947. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْفٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ سَمِعْتُ سَلْمَانَ ـ رضى الله عنه ـ يَقُولُ أَنَا مِنْ، رَامَ هُرْمُزَ.
பாடம் : 53
சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது196
3947. சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் “ராம ஹுர்முஸ்' எனுமிடத்திலிருந்து வந்தவன்.198
அத்தியாயம் : 63
3947. சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் “ராம ஹுர்முஸ்' எனுமிடத்திலிருந்து வந்தவன்.198
அத்தியாயம் : 63
3948. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ فَتْرَةٌ بَيْنَ عِيسَى وَمُحَمَّدٍ صلى الله عليه وسلم سِتُّمِائَةِ سَنَةٍ.
பாடம் : 53
சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது196
3948. சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஈசா (அலை) அவர்களுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடை யிலான காலம் அறுநூறாண்டுகளாகும்.199

(நபிகளார் காலத்துப்)போர்கள்
3949. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، كُنْتُ إِلَى جَنْبِ زَيْدِ بْنِ أَرْقَمَ، فَقِيلَ لَهُ كَمْ غَزَا النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةٍ قَالَ تِسْعَ عَشْرَةَ. قِيلَ كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ قَالَ سَبْعَ عَشْرَةَ. قُلْتُ فَأَيُّهُمْ كَانَتْ أَوَّلَ قَالَ الْعُسَيْرَةُ أَوِ الْعُشَيْرُ. فَذَكَرْتُ لِقَتَادَةَ فَقَالَ الْعُشَيْرُ.
பாடம் : 1
“அல்உஷைரா' அல்லது “அல் உசைரா' போர்
முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் புரிந்த முதலாவது அறப்போர் “அல்அப்வா' ஆகும்; பிறகு “புவாத்' ஆகும்; பிறகு “அல்உஷைரா' ஆகும்.2
3949. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?” என்று அவர்களிடம் வினவப்பட்டது. “பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?” என்று வினவப் பட்டபோது, “பதினேழு” என்றார்கள்.
“இவற்றில் முதல் போர் எது?” என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “அல்உஸைரா அல்லது அல்உஷைர்” என்று பதிலளித்தார்கள்.
க(த்)தாதா (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், “அல்உஷைராதான் (சரியான உச்சரிப்பு)” என்றார்கள்.
அத்தியாயம் : 64

3950. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مَيْمُونٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ حَدَّثَ عَنْ سَعْدِ بْنِ مُعَاذٍ، أَنَّهُ قَالَ كَانَ صَدِيقًا لأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَكَانَ أُمَيَّةُ إِذَا مَرَّ بِالْمَدِينَةِ نَزَلَ عَلَى سَعْدٍ، وَكَانَ سَعْدٌ إِذَا مَرَّ بِمَكَّةَ نَزَلَ عَلَى أُمَيَّةَ، فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ انْطَلَقَ سَعْدٌ مُعْتَمِرًا، فَنَزَلَ عَلَى أُمَيَّةَ بِمَكَّةَ، فَقَالَ لأُمَيَّةَ انْظُرْ لِي سَاعَةَ خَلْوَةٍ لَعَلِّي أَنْ أَطُوفَ بِالْبَيْتِ. فَخَرَجَ بِهِ قَرِيبًا مِنْ نِصْفِ النَّهَارِ فَلَقِيَهُمَا أَبُو جَهْلٍ فَقَالَ يَا أَبَا صَفْوَانَ، مَنْ هَذَا مَعَكَ فَقَالَ هَذَا سَعْدٌ. فَقَالَ لَهُ أَبُو جَهْلٍ أَلاَ أَرَاكَ تَطُوفُ بِمَكَّةَ آمِنًا، وَقَدْ أَوَيْتُمُ الصُّبَاةَ، وَزَعَمْتُمْ أَنَّكُمْ تَنْصُرُونَهُمْ وَتُعِينُونَهُمْ، أَمَا وَاللَّهِ لَوْلاَ أَنَّكَ مَعَ أَبِي صَفْوَانَ مَا رَجَعْتَ إِلَى أَهْلِكَ سَالِمًا. فَقَالَ لَهُ سَعْدٌ وَرَفَعَ صَوْتَهُ عَلَيْهِ أَمَا وَاللَّهِ لَئِنْ مَنَعْتَنِي هَذَا لأَمْنَعَنَّكَ مَا هُوَ أَشَدُّ عَلَيْكَ مِنْهُ طَرِيقَكَ عَلَى الْمَدِينَةِ. فَقَالَ لَهُ أُمَيَّةُ لاَ تَرْفَعْ صَوْتَكَ يَا سَعْدُ عَلَى أَبِي الْحَكَمِ سَيِّدِ أَهْلِ الْوَادِي. فَقَالَ سَعْدٌ دَعْنَا عَنْكَ يَا أُمَيَّةُ، فَوَاللَّهِ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّهُمْ قَاتِلُوكَ. قَالَ بِمَكَّةَ قَالَ لاَ أَدْرِي. فَفَزِعَ لِذَلِكَ أُمَيَّةُ فَزَعًا شَدِيدًا، فَلَمَّا رَجَعَ أُمَيَّةُ إِلَى أَهْلِهِ قَالَ يَا أُمَّ صَفْوَانَ، أَلَمْ تَرَىْ مَا قَالَ لِي سَعْدٌ قَالَتْ وَمَا قَالَ لَكَ قَالَ زَعَمَ أَنَّ مُحَمَّدًا أَخْبَرَهُمْ أَنَّهُمْ قَاتِلِيَّ، فَقُلْتُ لَهُ بِمَكَّةَ قَالَ لاَ أَدْرِي. فَقَالَ أُمَيَّةُ وَاللَّهِ لاَ أَخْرُجُ مِنْ مَكَّةَ، فَلَمَّا كَانَ يَوْمَ بَدْرٍ اسْتَنْفَرَ أَبُو جَهْلٍ النَّاسَ قَالَ أَدْرِكُوا عِيرَكُمْ. فَكَرِهَ أُمَيَّةُ أَنْ يَخْرُجَ، فَأَتَاهُ أَبُو جَهْلٍ فَقَالَ يَا أَبَا صَفْوَانَ، إِنَّكَ مَتَى مَا يَرَاكَ النَّاسُ قَدْ تَخَلَّفْتَ وَأَنْتَ سَيِّدُ أَهْلِ الْوَادِي تَخَلَّفُوا مَعَكَ، فَلَمْ يَزَلْ بِهِ أَبُو جَهْلٍ حَتَّى قَالَ أَمَّا إِذْ غَلَبْتَنِي، فَوَاللَّهِ لأَشْتَرِيَنَّ أَجْوَدَ بَعِيرٍ بِمَكَّةَ ثُمَّ قَالَ أُمَيَّةُ يَا أُمَّ صَفْوَانَ جَهِّزِينِي. فَقَالَتْ لَهُ يَا أَبَا صَفْوَانَ وَقَدْ نَسِيتَ مَا قَالَ لَكَ أَخُوكَ الْيَثْرِبِيُّ قَالَ لاَ، مَا أُرِيدُ أَنْ أَجُوزَ مَعَهُمْ إِلاَّ قَرِيبًا. فَلَمَّا خَرَجَ أُمَيَّةُ أَخَذَ لاَ يَنْزِلُ مَنْزِلاً إِلاَّ عَقَلَ بَعِيرَهُ، فَلَمْ يَزَلْ بِذَلِكَ حَتَّى قَتَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِبَدْرٍ.
பாடம் : 2
பத்ர் போரில் கொல்லப்படவிருந்த ஒருவன் குறித்து நபி (ஸல்) அவர்கள் (முன்னறிவிப்பாகக்) கூறியது
3950. சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (அறியாமைக் காலத்தில் இணை வைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) சஅத் (ரலி) அவர்களிடம் தங்குவார். (அதே போல்) மக்கா வழியாக சஅத் (ரலி) அவர்கள் சென்றால் உமய்யாவிடம் தங்குவார்கள்.
(ஹிஜ்ரத் நடைபெற்று) நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் சஅத் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்றபோது உமய்யாவிடம் தங்கினார்கள். (அப்போது நடந்ததை சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
“இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறுவீராக” என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் தவாஃப் செய்துகொண்டிருந்தபோது) எங்களை அபூஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி), “அபூஸஃப்வானே! உம்மோடு இருக்கும் இவர் யார்?” என்று கேட்டார்.
உமய்யா, “இவர்தான் சஅத்” என்றார். அப்போது என்னிடம் அபூஜஹ்ல், “மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக்கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்ச மளித்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக்கொண்டிருப்பதை நான் காண்பதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லா விட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்கமாட்டாய்” என்று சொன்னார்.
அதற்கு அபூஜஹ்லைப் பார்த்து, நான் உரத்த குரலில், “அல்லாஹ்வின் மீதாணையாக! (கஅபாவைச்) சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்தால், நீ (வாணிபக் குழுவுடன் கடந்து) செல்லும்மதீனாவின் தடத்தை நான் இடை மறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்” என்று சொன்னேன்.
அப்போது என்னிடம் உமய்யா, “சஅதே! இந்த (மக்கா) பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான அபுல் ஹகம் (அபூஜஹ்ல்) எதிரில் சப்தமிட்டுப் பேசாதீர்!” என்று சொன்னார்.
அதற்கு நான், “உமய்யாவே! (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காமல்) எம்மை விட்டுவிடுவீராக! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (நபித்தோழர்கள்) உம்மைக் கொலை செய்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று சொன்னேன்.
“மக்காவிலா (நான் கொல்லப்படுவேன்)?” என்று உமய்யா கேட்டார். அதற்கு, “எனக்குத் தெரியாது” என்று நான் பதிலளித்தேன்.
இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது, (தம் மனைவியிடம்), “உம்மு ஸஃப்வானே! என்னைப் பார்த்து சஅத் என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டார்.
“அவர் (அப்படி) என்ன சொன்னார்?” என்று அவள் கேட்டதற்கு உமய்யா, “அவர்கள் (நபித்தோழர்கள்) என்னைக் கொலை செய்வார்கள் என்று அவர்களிடம் முஹம்மது தெரிவித்தாராம். நான், “மக்காவிலா?' என்று (சஅதிடம்) கேட்டேன். “தெரியாது' என்று சஅத் சொன்னார்” (என்று கூறிவிட்டு,) “அல்லாஹ்வின் மீதாணையாக! நான், “மக்கா'வைவிட்டு (இனிமேல்) வெளியேறப்போவதில்லை” என்றும் கூறினார்.
பத்ர் போர் நாள் வந்தபோது, போருக்குப் புறப்படும்படி மக்களைத் தூண்டிக்கொண்டிருந்த அபூஜஹ்ல், “உங்கள் வணிகக் குழுவைச் சென்ற டையுங்கள் (அதைக் காப்பாற்றுங்கள்)” என்று கூறினார்.
ஆனால், உமய்யா (மக்காவிலிருந்து) வெளியே செல்வதை வெறுத்தார். (இதை அறிந்த) அபூஜஹ்ல் அவரிடம் வந்து, “அபூஸஃப்வானே! (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்களே (போருக்குச் செல்லாமல்) பின்வாங்குவதை மக்கள் கண்டால் உங்களுடன் அவர்களும் பின்வாங்கி (போருக்குச் செல்லாமல் இருந்து)விடுவார்களே” என்று சொன்னார். அபூஜஹ்ல், உமய்யாவிடம் இதை (வலியுறுத்திச்) சொல்லிக்கொண்டே இருந்தார்.
முடிவாக, உமய்யா, “இப்போது நீ என்னை வென்றுவிட்டாய் (உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்). ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் மக்கா நகரத்தின் உயர்ரக ஒட்டகம் ஒன்றை வாங்கப்போகிறேன்” என்று சொன்னார்; (தமக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை வந்தால் தப்பி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டகம் ஒன்றும் வாங்கினார்.) பிறகு (தம் மனைவியிடம் வந்து) “உம்மு ஸஃப்வானே! (போருக்குச் செல்லத் தேவையான சாதனங்களை) எனக்குத் தயார் செய்” என்றார் உமய்யா.
அப்போது அவள், “அபூஸஃப்வானே! உங்கள் யஸ்ரிப் (மதீனா) நண்பர் (சஅத், நீங்கள் கொல்லப்படுவது குறித்து) உங்களிடம் சொன்னதை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். அதற்கு உமய்யா, “இல்லை. (மறக்கவில்லை.) இவர்களுடன் சிறிதளவு தூரம் செல்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை” என்றார்.
(பத்ர் போருக்கு) உமய்யா புறப்பட்டுச் சென்றபோது (படையினர் முகாமிட்டுத்) தங்கும் ஒவ்வோர் இடத்திலும் (தப்பியோட ஆயத்தமாக தமக்கு அருகிலேயே) தமது ஒட்டகத்தைக் கட்டிவைத்துக்கொள்ளலானார். அவர் இவ்வாறே தொடர்ந்து செய்துவந்தார். இறுதியில் பத்ர் போர்க்களத்தில் உமய்யாவை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (முஸ்லிம் படையால்) கொலை செய்தான்.3

3951. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمْ أَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا إِلاَّ فِي غَزْوَةِ تَبُوكَ، غَيْرَ أَنِّي تَخَلَّفْتُ عَنْ غَزْوَةِ بَدْرٍ، وَلَمْ يُعَاتَبْ أَحَدٌ تَخَلَّفَ عَنْهَا، إِنَّمَا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ عِيرَ قُرَيْشٍ، حَتَّى جَمَعَ اللَّهُ بَيْنَهُمْ وَبَيْنَ عَدُوِّهِمْ عَلَى غَيْرِ مِيعَادٍ.
பாடம் : 3
பத்ர் போர் சம்பவம்4
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(இதற்குமுன்) நீங்கள் வலுவிழந்தவர் களாக இருந்தும் பத்ர் போரில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்தியவர்களாகலாம்.
“உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு (பத்ரில்) உதவி செய்திருந்தது போதுமான தில்லையா?” என்று (நபியே!) நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூருவீராக! - ஆம், நீங்கள் நிலை குலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சி நடந்தால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள்மீது படையெடுத்து வருகிறார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான். நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும் உங்கள் இதயங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதனை அல்லாஹ் ஆக்கினான்!
வெற்றி என்பது மிக்க வல்லமை மிக்கவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. (அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம்,) இறைமறுப்பாளர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக, அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான். (3:123-127)
வஹ்ஷீ பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போர் தினத்தன்று ஹம்ஸா (ரலி) அவர்கள் துஅய்மா பின் அதீ பின் அல்கியாரைக் கொன்றார்கள்.5
மேலும், அல்லாஹ் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் இதனையும் நினைத்துப் பாருங்கள்: “இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டத்தார் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்துவிடுவர்' என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான்.ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தி னர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள்.(8:7)6
3951. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ர் போரிலும் கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவுமில்லை.
(ஏனெனில்) நபி (ஸல்) அவர்கள் குறைஷியரின் வாணிபக் குழுவை (வழிமறிக்க) எண்ணியே போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் எண்ணம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ர் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான்.

3952. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مُخَارِقٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ، يَقُولُ شَهِدْتُ مِنَ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ مَشْهَدًا، لأَنْ أَكُونَ صَاحِبَهُ أَحَبُّ إِلَىَّ مِمَّا عُدِلَ بِهِ، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَدْعُو عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ لاَ نَقُولُ كَمَا قَالَ قَوْمُ مُوسَى {اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلاَ} وَلَكِنَّا نُقَاتِلُ عَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ وَبَيْنَ يَدَيْكَ وَخَلْفَكَ. فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَشْرَقَ وَجْهُهُ وَسَرَّهُ. يَعْنِي قَوْلَهُ.
பாடம் : 4
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக்கொண்டிருந்ததையும் நினைத்துப்பாருங்கள். அப்போது அவன் “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்” எனப் பதிலளித்தான்.
அல்லாஹ் இதை, உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே ஆக்கினான்! தவிர, வெற்றி (என்றைக்கும்) அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான்.
(மேலும், இதையும்) நினைத்துப்பாருங்கள்: அல்லாஹ் உங்களைச் சிற்றுறக் கம் கொள்ளச்செய்து தன்னிடமிருந்து உங்களுக்கு (மன) அமைதியை ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களைவிட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள்மீது மழையையும் பொழியச் செய்தான்.
(நபியே! இதனையும்) நினைவுகூருங்கள்: உம்முடைய இறைவன் வானவர்களிடம் அறிவித்துக்கொண்டிருந்தான்: நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச்செய்யுங்கள். இதோ! மறுத்துவிட்டவர்களின் உள்ளங்களில் நான் பீதியை ஏற்படுத்திவிடுகின்றேன். எனவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டு களிலும் அடியுங்கள். (என்று கூறுங்கள்.)
இதற்குக் காரணம், (இறைமறுப்பாளர் களான) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான். மேலும், அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கிறார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான். (8:9-13)
3952. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களது அவைக்குச் சென்றேன். நான் அவர்களது அவையில் (கலந்துகொண்டு, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான (மற்ற அனைத்)தைவிடவும்எனக்கு விருப்பானதாயிருக்கும்.
(மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:)
நான், நபி (ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், “(இறைத்தூதர்) மூசாவின் சமுதாயத்தார், “நீங்களும் உங்கள் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியதுபோல நாங்கள் கூறமாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப் பக்கமும், இடப் பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளுடன்) போரிடுவோம்” என்று சொன்னேன்.
(இதைக் கேட்டதும்,) நபி (ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை நான் கண்டேன். (எனது சொல்) அவர்களை மகிழச்செய்தது.7

3953. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" اللَّهُمَّ أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ "". فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ فَقَالَ حَسْبُكَ. فَخَرَجَ وَهْوَ يَقُولُ {سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ}
பாடம் : 4
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக்கொண்டிருந்ததையும் நினைத்துப்பாருங்கள். அப்போது அவன் “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்” எனப் பதிலளித்தான்.
அல்லாஹ் இதை, உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே ஆக்கினான்! தவிர, வெற்றி (என்றைக்கும்) அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான்.
(மேலும், இதையும்) நினைத்துப்பாருங்கள்: அல்லாஹ் உங்களைச் சிற்றுறக் கம் கொள்ளச்செய்து தன்னிடமிருந்து உங்களுக்கு (மன) அமைதியை ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களைவிட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள்மீது மழையையும் பொழியச் செய்தான்.
(நபியே! இதனையும்) நினைவுகூருங்கள்: உம்முடைய இறைவன் வானவர்களிடம் அறிவித்துக்கொண்டிருந்தான்: நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச்செய்யுங்கள். இதோ! மறுத்துவிட்டவர்களின் உள்ளங்களில் நான் பீதியை ஏற்படுத்திவிடுகின்றேன். எனவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டு களிலும் அடியுங்கள். (என்று கூறுங்கள்.)
இதற்குக் காரணம், (இறைமறுப்பாளர் களான) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான். மேலும், அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கிறார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான். (8:9-13)
3953. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தமது படையினரையும் மிகப் பெருந் தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (இறைமறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ அளித்த) உனது உறுதிமொழியையும் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) நான் கோருகிறேன். (இறைவா! இந்த இறைநம்பிக்கையாளர்களை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல்போய்விடுவர்” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “போதும் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து) “விரைவில் அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவர்” என்று (54:45ஆவது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக்கொண்டே வெளியேறி வந்தார்கள்.

3954. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْكَرِيمِ، أَنَّهُ سَمِعَ مِقْسَمًا، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} عَنْ بَدْرٍ، وَالْخَارِجُونَ، إِلَى بَدْرٍ.
பாடம் : 5
3954. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையாளர்களில் யார் இடையூறு எதுவுமின்றி அறப்போரில் கலந்துகொள்ளாமல் (தமது இருப்பிடத்திலேயே) தங்கிவிடுகிறார்களோ அவர்களும், யார் தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்களோ அவர்களும் (தகுதியில்) சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆம்) இறைவசனம், பத்ர் போருக்குச் செல்லாதவர்களையும் அதில் கலந்துகொள்ளச் சென்றவர்களையும் குறிப்பிடுகின்றது.

3955. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ اسْتُصْغِرْتُ أَنَا وَابْنُ، عُمَرَ.
பாடம் : 6
பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3955. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் (பத்ர் போரின்போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ர் போரில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.)