3929. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ الْعَلاَءِ ـ امْرَأَةً مِنْ نِسَائِهِمْ بَايَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم ـ أَخْبَرَتْهُ أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُمْ فِي السُّكْنَى حِينَ اقْتَرَعَتِ الأَنْصَارُ عَلَى سُكْنَى الْمُهَاجِرِينَ، قَالَتْ أُمُّ الْعَلاَءِ فَاشْتَكَى عُثْمَانُ عِنْدَنَا، فَمَرَّضْتُهُ حَتَّى تُوُفِّيَ، وَجَعَلْنَاهُ فِي أَثْوَابِهِ، فَدَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، شَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ "". قَالَتْ قُلْتُ لاَ أَدْرِي بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ فَمَنْ قَالَ "" أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ وَاللَّهِ الْيَقِينُ، وَاللَّهِ إِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ، وَمَا أَدْرِي وَاللَّهِ وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِي "". قَالَتْ فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ قَالَتْ فَأَحْزَنَنِي ذَلِكَ فَنِمْتُ فَأُرِيتُ لِعُثْمَانَ بْنِ مَظْعُونٍ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ. فَقَالَ "" ذَلِكَ عَمَلُهُ "".
பாடம் : 46 நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர் களுடைய தோழர்களின் மதீனா வருகை171
3929. காரிஜா பின் ஸைத் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்திருந்த அன்சாரி பெண்களில் ஒருவரான (என் தாயார்) உம்முல் அலா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார் கள்:

(மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவந்த) முஹாஜிர்களின் தங்குமிடத்தி(னை முடிவு செய்வத)ற்காக அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களின் பெயர் எங்கள் பங்கில் வந்தது. எங்களிடம் (வந்து தங்கிய) உஸ்மான் (ரலி) நோய்வாய்ப்பட்டார். ஆகவே, அவருக்கு நான் நோய்க் காலப் பணிவிடைகள் செய்துவந்தேன். இறுதியில் அவர் இறந்தும்விட்டார். அவருக்கு அவரது துணிகளால் கஃபனிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நான் (இறந்துபோன உஸ்மானை நோக்கி), “அபூசாயிபே! அல்லாஹ்வின் கருணை உங்கள்மீது உண்டாகட்டும்! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் பகர்கிறேன்” என்று கூறினேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அவரைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்று உமக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், “எனக்குத் தெரியாது. என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ் இவரைக் கண்ணியப்படுத்தாவிட்டால் பின்) யாரைத்தான் (கண்ணியப்படுத்துவான்)?” என்று நான் சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், “இவருக்கோ மரணம் வந்துவிட்டது; அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு நன்மையையே எதிர்பார்க்கின்றேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எப்படி நடந்துகொள்ளப்படும் என்பதே அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்குப் பிறகு எவரையும் நான் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் தூங்கியதும் (கனவில்) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்குரிய ஓர் ஆறு (சொர்க்கத்தில்) ஓடிக்கொண்டிருப்ப தாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், “அது அவருடைய (நற்)செயல்” என்று சொன்னார்கள்.177


அத்தியாயம் : 63
3930. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ بُعَاثٍ يَوْمًا قَدَّمَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِرَسُولِهِ صلى الله عليه وسلم، فَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَقَدِ افْتَرَقَ مَلَؤُهُمْ، وَقُتِلَتْ سَرَاتُهُمْ فِي دُخُولِهِمْ فِي الإِسْلاَمِ.
பாடம் : 46 நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர் களுடைய தோழர்களின் மதீனா வருகை171
3930. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச்செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனா வாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும், அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டு விட்டிருந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தில் இணைய ஏதுவான நிலை உருவாகியிருந்த போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள்.178


அத்தியாயம் : 63
3931. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَيْهَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحًى، وَعِنْدَهَا قَيْنَتَانِ {تُغَنِّيَانِ} بِمَا تَقَاذَفَتِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثَ. فَقَالَ أَبُو بَكْرٍ مِزْمَارُ الشَّيْطَانِ مَرَّتَيْنِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَإِنَّ عِيدَنَا هَذَا الْيَوْمُ "".
பாடம் : 46 நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர் களுடைய தோழர்களின் மதீனா வருகை171
3931. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஈதுல் பித்ர்' அல்லது “ஈதுல் அள்ஹா' (பெரு)நாளில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது “புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கை யில்லா கஞ்சிராவை அடித்துக்கொண்டு) பாடியபடி இரு பாடகியர் என்னருகே இருந்தனர்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஷைத்தா னின் (இசைக்) கருவி” என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நமது பண்டிகை (நாள்) இந்த நாள்தான்” என்று சொன்னார்கள்.179


அத்தியாயம் : 63
3932. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ،. وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، يَزِيدُ بْنُ حُمَيْدٍ الضُّبَعِيُّ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، نَزَلَ فِي عُلْوِ الْمَدِينَةِ فِي حَىٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ ـ قَالَ ـ فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى مَلإِ بَنِي النَّجَّارِ ـ قَالَ ـ فَجَاءُوا مُتَقَلِّدِي سُيُوفِهِمْ، قَالَ وَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَأَبُو بَكْرٍ رِدْفَهُ، وَمَلأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، قَالَ فَكَانَ يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاَةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، قَالَ ثُمَّ إِنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى مَلإِ بَنِي النَّجَّارِ، فَجَاءُوا فَقَالَ "" يَا بَنِي النَّجَّارِ، ثَامِنُونِي حَائِطَكُمْ هَذَا "". فَقَالُوا لاَ، وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ. قَالَ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ كَانَتْ فِيهِ قُبُورُ الْمُشْرِكِينَ، وَكَانَتْ فِيهِ خِرَبٌ، وَكَانَ فِيهِ نَخْلٌ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ، وَبِالْخِرَبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، قَالَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ ـ قَالَ ـ وَجَعَلُوا عِضَادَتَيْهِ حِجَارَةً. قَالَ قَالَ جَعَلُوا يَنْقُلُونَ ذَاكَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَهُمْ يَقُولُونَ اللَّهُمَّ إِنَّهُ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ فَانْصُرِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ.
பாடம் : 46 நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர் களுடைய தோழர்களின் மதீனா வருகை171
3932. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபோது மதீனாவின் மேற்பகுதியில் “பனூ அம்ர் பின் அவ்ஃப்' என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களி டையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனுந் நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். பனுந் நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக) தம் வாட்களைத் தொங்கவிட்டபடி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள், அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனுந் நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன் றுள்ளது.

இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் (தம் வாகனத்தை) அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் நிறுத்தினார்கள். -தொழுகை நேரம் (தம்மை) வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள்- பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனுந் நஜ்ஜார் கூட்டத்தாருக்கு நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்ப, அவர்கள் வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “பனுந் நஜ்ஜார் கூட்டத்தாரே! (பள்ளிவாசல் கட்டுவதற்காக) உங்களது இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ் வின் மீதாணையாக! அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதிலளித்தார்கள். நான் உங்களிடம் சொல்பவைதான் அந்தத் தோட்டத்தில் இருந்தன: அதில் இணைவைப்பவர்களின் அடக்கத் தலங்கள் இருந்தன. அதில் இடிபாடுகளும், சில பேரீச்சமரங்களும் இருந்தன.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இணைவைப்போரின் அடக்கத் தலங்களைத் தோண்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றிச்) சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லா திசையில் பேரீச்சமரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (கதவின்) இரு நிலைக் கால்களாக கல்லை (நட்டு) வைத்தனர். “ரஜ்ஸ்' எனும் ஈரசைச் சீரில் அமைந்த பாடலைப் பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்துவரலாயினர்.

அப்போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இருந்தார்கள். “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமை வெற்றிக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் உதவி செய்!” என்று அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்.180

அத்தியாயம் : 63
3933. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ الزُّهْرِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، يَسْأَلُ السَّائِبَ ابْنَ أُخْتِ النَّمِرِ مَا سَمِعْتَ فِي، سُكْنَى مَكَّةَ قَالَ سَمِعْتُ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ثَلاَثٌ لِلْمُهَاجِرِ بَعْدَ الصَّدَرِ "".
பாடம் : 47 முஹாஜிர் தமது (ஹஜ் அல்லது உம்ரா) வழிபாடுகளை நிறைவேற் றிய பின்பு மக்காவில் தங்குவது
3933. அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

நமிர் அல்கிந்தீயின் சகோதரி மகனான சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “முஹாஜிர், (ஹஜ் வழிபாடுகளை நிறைவேற்றிவிட்டு மினாவிலிருந்து வந்த பிறகு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றிருக்கிறீர்கள்?” என்று வினவினார்கள்.

அதற்கு சாயிப் (ரலி) அவர்கள், “மினாவிலிருந்து வந்த பின்பு மூன்று நாட்கள் (மக்காவில் தங்க) முஹாஜிருக்கு அனுமதியுண்டு' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள்.181

அத்தியாயம் : 63
3934. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ مِنْ وَفَاتِهِ، مَا عَدُّوا إِلاَّ مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ.
பாடம் : 48 ஆண்டுக் கணக்கும், மக்கள் எப்போதிருந்து இஸ்லாமிய ஆண்டுக் கணக்கை ஆரம்பித்தார்கள் என்பதும்182
3934. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப் பட்ட (அவர்களுடைய 40ஆம் வய)திலிருந்தோ அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.


அத்தியாயம் : 63
3935. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فُرِضَتِ الصَّلاَةُ رَكْعَتَيْنِ، ثُمَّ هَاجَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَفُرِضَتْ أَرْبَعًا، وَتُرِكَتْ صَلاَةُ السَّفَرِ عَلَى الأُولَى. تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ.
பாடம் : 48 ஆண்டுக் கணக்கும், மக்கள் எப்போதிருந்து இஸ்லாமிய ஆண்டுக் கணக்கை ஆரம்பித்தார்கள் என்பதும்182
3935. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்களாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றபின் நான்கு ரக்அத்களாகக் கடமையாக்கப்பட்டது. மேலும், பயணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப் பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்களாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப் பட்டது.183

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 63
3936. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ حَجَّةِ الْوَدَاعِ مِنْ مَرَضٍ أَشْفَيْتُ مِنْهُ عَلَى الْمَوْتِ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، بَلَغَ بِي مِنَ الْوَجَعِ مَا تَرَى، وَأَنَا ذُو مَالٍ وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ "" لاَ "". قَالَ فَأَتَصَدَّقُ بِشَطْرِهِ قَالَ "" الثُّلُثُ يَا سَعْدُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ ذُرِّيَّتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ "". قَالَ أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ إِبْرَاهِيمَ "" أَنْ تَذَرَ ذُرِّيَّتَكَ، وَلَسْتَ بِنَافِقٍ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ آجَرَكَ اللَّهُ بِهَا، حَتَّى اللُّقْمَةَ تَجْعَلُهَا فِي فِي امْرَأَتِكَ "". قُلْتَ يَا رَسُولَ اللَّهِ، أُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ "" إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً تَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً، وَلَعَلَّكَ تُخَلَّفُ حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ، وَيُضَرَّ بِكَ آخَرُونَ، اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ، وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ، لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُوُفِّيَ بِمَكَّةَ "". وَقَالَ أَحْمَدُ بْنُ يُونُسَ وَمُوسَى عَنْ إِبْرَاهِيمَ "" أَنْ تَذَرَ وَرَثَتَكَ "".
பாடம் : 49 “இறைவா! என் தோழர்கள் தங்களுடைய ஹிஜ்ரத்தை முழுமையாக நிறைவேற்றும்படி செய்” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததும், (தம் தோழர்களில் ஹிஜ்ரத் செய்ய இயலாமல்) மக்காவிலேயே இறந்துவிட்டவர்களைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்ததும்
3936. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“விடைபெறும் ஹஜ்'ஜின்போது நபி (ஸல்) அவர்கள், நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டிருந்தேன். (நபி (ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், “அல்லாஹ் வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந் நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்துவிட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தர்மம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், “அப்படியென் றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் சந்ததிகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிடத் தன்னிறைவுடையவர் களாக விட்டுச்செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடிச் செலவழிக்கின்ற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே” என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தோழர்கள் (எல்லாரும் மதீனாவுக்குச்) சென்றுவிட்ட பிறகு நான் (மட்டும், இங்கே மக்காவில்) பின்தங்கிவிடுவேனா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,” நீங்கள் (இங்கு) பின்தங்கியிருந்து அல்லாஹ்வின் அன்பை நாடி நீங்கள் புரியும் நற்செயல் எதுவாயினும் அதனால் உங்களுக்குத் தகுதியும் உயர்வும் அதிகமாகவே செய்யும். சில சமுதாயத்தார் உங்களால் பலனடைவ தற்காகவும் வேறுசிலர் இழப்புக்குள்ளாவ தற்காகவும் (உங்கள் ஆயுள் நீட்டிக்கப்பட்டு இங்கேயே) நீங்கள் பின்தங்கிவிடக்கூடும்” என்று சொல்லிவிட்டு, “இறைவா! என் தோழர்கள் தங்கள் ஹிஜ்ரத்தை முழுமை யாக நிறைவேற்றும்படி செய்வாயாக! அவர்களைத் தம் கால்சுவடுகளின் வழியே (பழைய அறியாமைக் கால நிலைக்குத்) திருப்பியனுப்பிவிடாதே” என்று பிரார்த்தித் தார்கள்.

மேலும், “ஆயினும் சஅத் பின் கவ்லாதான் பாவம்” என்று சொன்னார்கள். சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்.184

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில், (உங்கள் வாரிசுகளை என்பதற்குப் பதிலாக) “உங்கள் வாரிசுகளை ஏழைகளாக நீங்கள் விட்டுச்செல்வது” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) காணப்படுகிறது.

அத்தியாயம் : 63
3937. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَآخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، فَعَرَضَ عَلَيْهِ أَنْ يُنَاصِفَهُ أَهْلَهُ وَمَالَهُ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، دُلَّنِي عَلَى السُّوقِ. فَرَبِحَ شَيْئًا مِنْ أَقِطٍ وَسَمْنٍ، فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ أَيَّامٍ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَهْيَمْ يَا عَبْدَ الرَّحْمَنِ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ. قَالَ "" فَمَا سُقْتَ فِيهَا "". فَقَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம் : 50 நபி (ஸல்) அவர்கள் தம் (முஹாஜிர் மற்றும் அன்சார்) தோழர்களிடையே எப்படிச் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்?185 “நாங்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது நபி (ஸல்) அவர்கள், எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதர உறவை ஏற்படுத்தினார்கள்” என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.186 “நபி (ஸல்) அவர்கள், சல்மான் (அல்ஃபாரிசீ -ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி னார்கள்” என்று அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.187
3937. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கும் சஅத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள், தம் குடும்பத்தாரையும் தமது செல்வத்தையும் அவருக்குச் சரிபாதியாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்குவானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். (அவ்வாறே அவர் கடைவீதியைக் காட்ட அங்கு வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள்மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து), “என்ன இது, அப்துர் ரஹ்மான்!” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அன்சாரி பெண்ணொரு வரை மணம் புரிந்துகொண்டேன்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு (மணக்கொடையாக) என்ன கொடுத்தீர்?” என்று கேட்க, “ஒரு பேரீச்சங் கொட்டை யளவு தங்கம்” என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டை அறுத்தாவது மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக!” என்று சொன் னார்கள்.188

அத்தியாயம் : 63
3938. حَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرِ بْنِ الْمُفَضَّلِ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ، بَلَغَهُ مَقْدَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَأَتَاهُ يَسْأَلُهُ عَنْ أَشْيَاءَ، فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ نَبِيٌّ مَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمَا بَالُ الْوَلَدِ يَنْزِعُ إِلَى أَبِيهِ أَوْ إِلَى أُمِّهِ قَالَ "" أَخْبَرَنِي بِهِ جِبْرِيلُ آنِفًا "". قَالَ ابْنُ سَلاَمٍ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلاَئِكَةِ. قَالَ "" أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُهُمْ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ، وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ، فَزِيَادَةُ كَبِدِ الْحُوتِ، وَأَمَّا الْوَلَدُ، فَإِذَا سَبَقَ مَاءُ الرَّجُلِ مَاءَ الْمَرْأَةِ نَزَعَ الْوَلَدَ، وَإِذَا سَبَقَ مَاءُ الْمَرْأَةِ مَاءَ الرَّجُلِ نَزَعَتِ الْوَلَدَ "". قَالَ أَشْهَدُ أَنَّ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّكَ رَسُولُ اللَّهِ. قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ، فَاسْأَلْهُمْ عَنِّي قَبْلَ أَنْ يَعْلَمُوا بِإِسْلاَمِي، فَجَاءَتِ الْيَهُودُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَىُّ رَجُلٍ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فِيكُمْ "". قَالُوا خَيْرُنَا وَابْنُ خَيْرِنَا وَأَفْضَلُنَا وَابْنُ أَفْضَلِنَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ "". قَالُوا أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ. فَأَعَادَ عَلَيْهِمْ، فَقَالُوا مِثْلَ ذَلِكَ، فَخَرَجَ إِلَيْهِمْ عَبْدُ اللَّهِ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. قَالُوا شَرُّنَا وَابْنُ شَرِّنَا. وَتَنَقَّصُوهُ. قَالَ هَذَا كُنْتُ أَخَافُ يَا رَسُولَ اللَّهِ.
பாடம் : 51
3938. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்.

பிறகு, “1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, அல்லது தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “ஜிப்ரீல்தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதிநாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப் பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டுவந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை என்றும், தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தார் ஆவர். ஆகவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து மறைந்து கொண்டார்கள்.) நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று சொன்னார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போலவே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போலவே பதிலளித்தார் கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் வெளியே வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று சொன்னார்கள்.

உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “இதைத்தான் நான் அஞ்சிக்கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.189


அத்தியாயம் : 63
3939. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ أَبَا الْمِنْهَالِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مُطْعِمٍ، قَالَ بَاعَ شَرِيكٌ لِي دَرَاهِمَ فِي السُّوقِ نَسِيئَةً فَقُلْتُ سُبْحَانَ اللَّهِ أَيَصْلُحُ هَذَا فَقَالَ سُبْحَانَ اللَّهِ، وَاللَّهِ لَقَدْ بِعْتُهَا فِي السُّوقِ فَمَا عَابَهُ أَحَدٌ، فَسَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَتَبَايَعُ هَذَا الْبَيْعَ، فَقَالَ " مَا كَانَ يَدًا بِيَدٍ فَلَيْسَ بِهِ بَأْسٌ، وَمَا كَانَ نَسِيئَةً فَلاَ يَصْلُحُ ". وَالْقَ زَيْدَ بْنَ أَرْقَمَ فَاسْأَلْهُ فَإِنَّهُ كَانَ أَعْظَمَنَا تِجَارَةً، فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ فَقَالَ مِثْلَهُ. وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَقَالَ قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَنَحْنُ نَتَبَايَعُ، وَقَالَ نَسِيئَةً إِلَى الْمَوْسِمِ أَوِ الْحَجِّ.
பாடம் : 51
3939. அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் கூட்டாளி ஒருவர், சில வெள்ளிக்காசுகளைக் கடைவீதியில் தவணைக்கு விற்றார். நான் (வியப்படைந்து), “சுப்ஹானல்லாஹ்! இது சரியாகுமா? (இப்படி விற்க அனுமதியுள்ளதா?)” என்று கேட்டேன். அதற்கு அவர், “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் கடைவீதியில்தான் விற்றேன். அதை எவரும் குறை கூறவில்லை” என்று பதிலளித்தார். உடனே நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நாங்கள் இந்த வியாபாரத்தை (இந்த முறையில்) செய்துவந்தபோது நபி (ஸல்) அவர்கள் (மதீனா) வந்தார்கள். “கையோடு கையாக - (உடனுக்குடன்) செய்யும் வியாபாரம் குற்றமில்லை. கடனுக்கு விற்பதாக இருந்தால் சரியில்லை' என்று சொன்னார்கள்” எனக் கூறிவிட்டு, “ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களை நீ சந்தித்துக் கேள். ஏனென்றால், அவர்தான் நம்மில் மிகப் பெரிய வியாபாரி” என்று சொன்னார்கள்.

அவ்வாறே ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்து நான் கேட்டேன். அவர்களும் பராஉ (ரலி) அவர்கள் சொன் னதைப் போன்றே சொன்னார்கள்.190

(இதைச் சிறிய மாற்றத்துடன்) அறிவிப் பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ஒருமுறை (பின்வருமாறு) கூறினார்கள்:

நாங்கள் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தபோது நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள். ஹஜ் காலம்வரை கடனுக்கு (விற்பதாக இருந்தால் சரியில்லை) என்று கூறினார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 63
3941. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ آمَنَ بِي عَشَرَةٌ مِنَ الْيَهُودِ لآمَنَ بِي الْيَهُودُ "".
பாடம் : 52 நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191 (குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள். (குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3941. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என்மீது நம்பிக்கை கொண்டி ருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என்மீது நம்பிக்கை கொண்டிருந்திருப் பார்கள்.192

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 63
3942. حَدَّثَنِي أَحْمَدُ ـ أَوْ مُحَمَّدُ ـ بْنُ عُبَيْدِ اللَّهِ الْغُدَانِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَإِذَا أُنَاسٌ مِنَ الْيَهُودِ يُعَظِّمُونَ عَاشُورَاءَ وَيَصُومُونَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" نَحْنُ أَحَقُّ بِصَوْمِهِ "". فَأَمَرَ بِصَوْمِهِ.
பாடம் : 52 நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191 (குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள். (குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3942. அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது யூதர்களில் சிலர் (முஹர்ரம் மாதம் பத்தாம் நாளான) ஆஷூரா நாளைக் கண்ணியப்படுத்தி அதில் நோன்பு நோற்றுவந்தார்கள்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள், “அந்த நாளில் நோன்பு நோற்க நாமே அதிக உரிமையுடையவர்கள்” என்று சொல்லி அந்த நாளில் நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.193


அத்தியாயம் : 63
3943. حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَجَدَ الْيَهُودَ يَصُومُونَ عَاشُورَاءَ، فَسُئِلُوا عَنْ ذَلِكَ، فَقَالُوا هَذَا الْيَوْمُ الَّذِي أَظْفَرَ اللَّهُ فِيهِ مُوسَى وَبَنِي إِسْرَائِيلَ عَلَى فِرْعَوْنَ، وَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نَحْنُ أَوْلَى بِمُوسَى مِنْكُمْ "". ثُمَّ أَمَرَ بِصَوْمِهِ.
பாடம் : 52 நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191 (குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள். (குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3943. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் (முஹர்ரம் பத்தாம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அது பற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், “இந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கெதிராக மூசா (அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர் களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். ஆகவே, நாங்கள் மூசா (அலை) அவர் களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசா (அலை) அவர் களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்” என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்óம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.194


அத்தியாயம் : 63
3944. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَسْدِلُ شَعْرَهُ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ، وَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَىْءٍ، ثُمَّ فَرَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَأْسَهُ.
பாடம் : 52 நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191 (குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள். (குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3944. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் (முன்தலை) முடியைத் (தம் நெற்றியின் மீது) தொங்க விட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்கள் தங்கள் தலை (முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும் தொங்கவிட்டு)வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை (முடி)களைத் (தம் நெற்றிகளின் மீது) தொங்கவிட்டுவந்தார்கள்.

எந்த விஷயங்களில் (இறைக்)கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை நபி (ஸல்) அவர்கள் விரும்பிவந்தார்கள். பின்னர் (நபி (ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள்.195


அத்தியாயம் : 63
3945. حَدَّثَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ هُمْ أَهْلُ الْكِتَابِ، جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ. {يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى {الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ }
பாடம் : 52 நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம் யூதர்கள் வந்தது191 (குர்ஆனில் 5:41ஆவது வசனத்தில் வரும்) “ஹாதூ' எனும் (அரபுச்) சொல்லுக்கு “யூதர்களாக மாறிவிட்டார்கள்' என்பது பொருள். (குர்ஆனில் 7:156ஆவது வசனத்தில் வரும்) “ஹுத்னா' என்பதற்கு, “நாங்கள் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பினோம்' என்றும் “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரி (இறைவனிடம் திரும்பி)யவன்' என்றும் பொருள்.
3945. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அந்த வேதக்காரர்கள் (எத்தகையவர்கள் எனில், குர்ஆன் எனும்) அதனைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார்கள். அதில் சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

அத்தியாயம் : 63
3946. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ أَبِي وَحَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، أَنَّهُ تَدَاوَلَهُ بِضْعَةَ عَشَرَ مِنْ رَبٍّ إِلَى رَبٍّ.
பாடம் : 53 சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது196
3946. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள், “நான் ஓர் எசமானிடமிருந்து இன்னோர் எசமானாகப் பத்துக்கு மேற்பட்ட எசமானர் களின் கைக்கு (விற்கப்பட்டு) மாறிக் கொண்டிருந்தேன்” என்று சொன்னார்கள்.197


அத்தியாயம் : 63
3947. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْفٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ سَمِعْتُ سَلْمَانَ ـ رضى الله عنه ـ يَقُولُ أَنَا مِنْ، رَامَ هُرْمُزَ.
பாடம் : 53 சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது196
3947. சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் “ராம ஹுர்முஸ்' எனுமிடத்திலிருந்து வந்தவன்.198


அத்தியாயம் : 63
3948. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ فَتْرَةٌ بَيْنَ عِيسَى وَمُحَمَّدٍ صلى الله عليه وسلم سِتُّمِائَةِ سَنَةٍ.
பாடம் : 53 சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது196
3948. சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஈசா (அலை) அவர்களுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடை யிலான காலம் அறுநூறாண்டுகளாகும்.199

அத்தியாயம் : 63