3849. حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ قَدْ زَنَتْ، فَرَجَمُوهَا فَرَجَمْتُهَا مَعَهُمْ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3849. அம்ர் பின் மைமூன் (ரஹ்)85 அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்துகொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்துகொண்டு அதன் மீது கல்லெறிந்தேன்.


அத்தியாயம் : 63
3850. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خِلاَلٌ مِنْ خِلاَلِ الْجَاهِلِيَّةِ الطَّعْنُ فِي الأَنْسَابِ وَالنِّيَاحَةُ، وَنَسِيَ الثَّالِثَةَ، قَالَ سُفْيَانُ وَيَقُولُونَ إِنَّهَا الاِسْتِسْقَاءُ بِالأَنْوَاءِ.
பாடம் : 27 “அல்கசாமா' எனும் அறியாமைக் காலச் சத்திய முறை81
3850. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிறர் வமிசத்தைக் குறைகூறுவதும் ஒப்பாரிவைத்து அழுவதும் அறியாமைக் காலத்துப் பண்புகளாகும்.

-அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் மூன்றாவது பண்பொன்றை மறந்துவிட்டார்கள்-

“நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பெய்தது என்று சொல்வதே (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அந்த மூன்றாவது பண்பாகும்” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.86

அத்தியாயம் : 63
3851. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ ابْنُ أَرْبَعِينَ، فَمَكَثَ ثَلاَثَ عَشْرَةَ سَنَةً، ثُمَّ أُمِرَ بِالْهِجْرَةِ، فَهَاجَرَ إِلَى الْمَدِينَةِ، فَمَكَثَ بِهَا عَشْرَ سِنِينَ، ثُمَّ تُوُفِّيَ صلى الله عليه وسلم.
பாடம் : 28 நபி (ஸல்) அவர்கள் (இறைத் தூதராக) நியமிக்கப்படுதல் (இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வமிசாவளி பற்றிய விவரமாவது:) அத்னானின் மகன் மஅத்தும், மஅத் துடைய மகன் நிஸாரும், நிஸாருடைய மகன் முளரும் முளருடைய மகன் இல்யாஸும், இல்யாஸுடைய மகன் முத்ரிகாவும், முத்ரிகாவின் மகன் குஸைமாவும், குஸைமாவின் மகன் கினானாவும், கினானாவின் மகன் நள்ரும், நள்ரின் மகன் மாலிக்கும், மாலிக்கின் மகன் ஃபிஹ்ரும், ஃபிஹ்ரின் மகன் ஃகாóபும், ஃகாலிபின் மகன் லுஅய்யும், லுஅய்யின் மகன் கஅபும், கஅபின் மகன் முர்ராவும், முர்ராவின் மகன் கிலாபும், கிலாபின் மகன் குஸய்யும், குஸய்யின் மகன் அப்து மனாஃபும், அப்து மனாஃபின் மகன் ஹாஷிமும், ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிபும், அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வும், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஆவார்கள்.87
3851. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு (வஹீ எனும்) வேத அறிவிப்பு அருளப்பெற்றது. அதன் பிறகு அவர்கள் மக்கா நகரில் பதிமூன்றாண்டு கள் தங்கியிருந்தார்கள். பிறகு, (இறை மார்க்கத்திற்காகப் புலம்பெயர்ந்து) ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டது. ஆகவே, அவர்கள் மதீனா வுக்கு (புலம்பெயர்ந்து) ஹிஜ்ரத் சென்றார் கள்; அங்கே பத்தாண்டுகள் தங்கினார்கள்; பிறகு இறந்தார்கள்.

அத்தியாயம் : 63
3852. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا بَيَانٌ، وَإِسْمَاعِيلُ، قَالاَ سَمِعْنَا قَيْسًا، يَقُولُ سَمِعْتُ خَبَّابًا، يَقُولُ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً، وَهْوَ فِي ظِلِّ الْكَعْبَةِ، وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ أَلاَ تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهْوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ "" لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُوضَعُ الْمِنْشَارُ عَلَى مَفْرِقِ رَأْسِهِ، فَيُشَقُّ بِاثْنَيْنِ، مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَلَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ "". زَادَ بَيَانٌ وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3852. கப்பாப் (பின் அல்அரத் -ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் ஒரு சால்வையைத் தலையணை யாக வைத்து சாய்ந்துகொண்டிருக்க, நான் அவர்களிடம் சென்றேன். அப்போது நாங்கள் இணைவைப்பவர்களால் கடும் துன்பங்களைச் சந்தித்திருந்தோம். ஆகவே, நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கமாட்டீர்களா?” என்று கேட்டேன். உடனே அவர்கள் முகம் சிவந்துபோய், (எழுந்து) உட்கார்ந்துகொண்டு சொன்னார்கள்:

உங்களுக்குமுன் (இந்த ஓரிறை மார்க்கத்தைத் தழுவி) இருந்தவர் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் கோதப்பட்டு (கொடுமைப்படுத்தப்பட்டு) வந்தார். அது அவரது எலும்புகளையும் கடந்து சென்று அதன் கீழுள்ள சதையையும் நரம்பையும் அடைந்துவிடும்.

(ஆனால்,) அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து (திசை) திருப்பிவிடவில்லை. மேலும், அவருடைய தலையின் வகிட்டில் ரம்பம் வைக்கப்பட்டு இரு கூறுகளாக அவர் பிளக்கப்படுவார். ஆனால், அதுவும் அவரை அவருடைய மார்க்கத்திருந்து திருப்பிவிடவில்லை.

நிச்சயம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். எந்த அளவுக்கென்றால், (தன் வாகனத்தில்) சவாரி செய்து வரும் ஒருவன், (யமன் நாட்டிலுள்ள) “ஸன்ஆ'விலிருந்து “ஹள்ரமவ்த்'வரை பயணம் செய்து செல்வான். (வழியில்) அவனுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைத் தவிர வேறெந்த அச்சமும் இருக்காது.

மற்றோர் அறிவிப்பில், “தன் ஆடுகள் விஷயத்தில் ஓநாய் பற்றிய அச்சத்தையும் தவிர” என்னும் வாக்கியத்தை பயான் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள் ளார்கள்.88


அத்தியாயம் : 63
3853. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّجْمَ، فَسَجَدَ فَمَا بَقِيَ أَحَدٌ إِلاَّ سَجَدَ، إِلاَّ رَجُلٌ رَأَيْتُهُ أَخَذَ كَفًّا مِنْ حَصًا فَرَفَعَهُ فَسَجَدَ عَلَيْهِ وَقَالَ هَذَا يَكْفِينِي. فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا بِاللَّهِ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3853. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்' எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) பிறகு (இறுதியில் ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். அப்போது (அங்கிருந்த) யாவரும் சிரவணக்கம் செய்யாமல் இருக்கவில்லை; ஒரேயொரு மனிதரைத் தவிர. அவர் (தரையில் சிரம்பணியாமல்) ஒரு கைப்பிடியளவு சிறு கூழாங்கற்களை எடுத்து (முகத்தருகே) உயர்த்தி (அப்படியே) அதன்மீது சஜ்தா செய்து, “இது எனக்குப் போதும்” என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். பின்னால், அவர் அல்லாஹ்வை மறுத்தவராகக் கொல்லப்பட்டதையும் நான் பார்த்தேன்.89


அத்தியாயம் : 63
3854. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدٌ وَحَوْلَهُ نَاسٌ مِنْ قُرَيْشٍ جَاءَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ بِسَلَى جَزُورٍ، فَقَذَفَهُ عَلَى ظَهْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمْ يَرْفَعْ رَأْسَهُ فَجَاءَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَأَخَذَتْهُ مِنْ ظَهْرِهِ، وَدَعَتْ عَلَى مَنْ صَنَعَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ عَلَيْكَ الْمَلأَ مِنْ قُرَيْشٍ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنَ رَبِيعَةَ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ ـ أَوْ أُبَىَّ بْنَ خَلَفٍ "". شُعْبَةُ الشَّاكُّ ـ فَرَأَيْتُهُمْ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، فَأُلْقُوا فِي بِئْرٍ غَيْرَ أُمَيَّةَ أَوْ أُبَىٍّ تَقَطَّعَتْ أَوْصَالُهُ، فَلَمْ يُلْقَ فِي الْبِئْرِ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3854. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை (கஅபா அருகில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிரவணக்கம் (சஜ்தா) செய்துகொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷியரில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டுவந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களின் முதுகிலிருந்து எடுத்துவிட்டு, அதைச் செய்தவனுக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷித் தலைவர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, “உமய்யா பின் கலஃப்' அல்லது “உபை பின் கலஃப்' ஆகியோரை நீ கவனித்துக்கொள்” என்று பிரார்த்தித்தார்கள். (அதன்படியே) இவர்கள் அனைவரும் பத்ர் போரில் கொல்லப்பட்டு ஒரு (பாழுங்)கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; “உமய்யா பின் கலஃப்' அல்லது “உபை'யைத் தவிர. அவனுடைய மூட்டுகள் துண்டாகி (தனித்தனியாகி)விட்டிருந்த காரணத்தால் அவன் மட்டும் கிணற்றில் போடப்படவில்லை.

உமய்யா பின் கலஃப் அல்லது உபை பின் கலஃப் (இந்த இருவரில் நபி (ஸல்) அவர்கள் யாரைச் சொன்னார்கள்) என்று சந்தேகப்படுபவர் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களா வார்.90


அத்தியாயம் : 63
3855. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، أَوْ قَالَ حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى قَالَ سَلِ ابْنَ عَبَّاسٍ عَنْ هَاتَيْنِ الآيَتَيْنِ، مَا أَمْرُهُمَا {وَلاَ تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ } {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَمَّا أُنْزِلَتِ الَّتِي فِي الْفُرْقَانِ قَالَ مُشْرِكُو أَهْلِ مَكَّةَ فَقَدْ قَتَلْنَا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ، وَدَعَوْنَا مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ، وَقَدْ أَتَيْنَا الْفَوَاحِشَ. فَأَنْزَلَ اللَّهُ {إِلاَّ مَنْ تَابَ وَآمَنَ} الآيَةَ فَهَذِهِ لأُولَئِكَ وَأَمَّا الَّتِي فِي النِّسَاءِ الرَّجُلُ إِذَا عَرَفَ الإِسْلاَمَ وَشَرَائِعَهُ، ثُمَّ قَتَلَ فَجَزَاؤُهُ جَهَنَّمُ. فَذَكَرْتُهُ لِمُجَاهِدٍ فَقَالَ إِلاَّ مَنْ نَدِمَ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3855. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள், “(தக்க காரணமின்றிக் கொல்வதைத் தடை செய்து) “அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய எந்த ( மனித) உயிரையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள்' எனும் இந்த (6:151, 17:33) இரு (குர்ஆன்) வசனங்களுக்கும், “ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். மறுமை நாளில் அவனுக்கு இரு மடங்கு தண்டனை அளிக்கப்படும். என்றென்றும் இழப்புக்குரியவனாய் அவன் அதில் வீழ்ந்து கிடப்பான்' எனும் (4:93) வசனத்திற்கும் இடையே இணக்கமான கருத்துக் காண்பது எப்படி என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீ கேள்” என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.91

நான் (சென்று) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “திருக்குர்ஆனில், “கருணையாளனின் உண்மையான அடியார்கள் எத்தகை யவர்கள் எனில், ...(தக்க காரணமின்றி கொல்லக் கூடாதென்று தடை செய்து) அல்லாஹ் கண்ணியத்திற்குரிய தாக்கியுள்ள மனித உயிரை நியாயத்துடனே தவிர கொல்லமாட்டார்கள்...' எனும் அத்தியாயம் அல்ஃபுர்கானின் 68ஆம் வசனம் அருளப்பட்டபோது மக்காவாசி களில் இணைவைப்போராயிருந்தவர்கள், “அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாய் ஆக்கிய மனித உயிரை நாங்கள் கொன்றிருக்கிறோம்; அல்லாஹ்வுடன் மற்ற தெய்வத்தையும் அழைத்திருக்கிறோம்; மேலும், தீய செயல்களையும் செய்திருக்கிறோம் (நாங்கள் நரகத்தில்தான் வீழ்ந்து கிடக்க வேண்டுமா? எங்களுக்கு இஸ்லாம் எப்படிப் பயன் தரும்?)” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ், “பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிகின்றவர் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனும் ஆவான்” எனும் (25:70ஆம்) வசனத்தை அருளினான். இது குற்றம் புரிந்த இறைமறுப்பாளர்களுக்கான சட்டமாகும்.

அத்தியாயம் அந்நிசாவில் (93ஆம் வசனத்தில்) கூறப்பட்டிருப்பது, இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் அறிந்த (முஸ்லிமான) ஒரு மனிதன் விஷயத்தில் ஆகும். அவன் அறிந்த பிறகும் எவரையாவது வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக விழுந்து கிடப்பான்” என்று பதிலளித்தார்கள்.92

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் இந்தக் கருத்தை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், “தன் குற்றத்திற்காக வருந்தி (பாவமன்னிப்புக் கோரி)யவனைத் தவிர (மற்றவர்கள்தான் நிரந்தரமாக நரகம் புக வேண்டியிருக்கும்)” என்று பதிலளித் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 63
3856. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ ابْنَ عَمْرِو بْنِ الْعَاصِ أَخْبِرْنِي بِأَشَدِّ، شَىْءٍ صَنَعَهُ الْمُشْرِكُونَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي حِجْرِ الْكَعْبَةِ إِذْ أَقْبَلَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ، فَوَضَعَ ثَوْبَهُ فِي عُنُقِهِ فَخَنَقَهُ خَنْقًا شَدِيدًا، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ حَتَّى أَخَذَ بِمَنْكِبِهِ وَدَفَعَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ {أَتَقْتُلُونَ رَجُلاً أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ} الآيَةَ. تَابَعَهُ ابْنُ إِسْحَاقَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عُرْوَةَ عَنْ عُرْوَةَ، قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو. وَقَالَ عَبْدَةُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ قِيلَ لِعَمْرِو بْنِ الْعَاصِ. وَقَالَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ حَدَّثَنِي عَمْرُو بْنُ الْعَاصِ.
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த (துன்பம், தொல்லை முதலிய)வை
3856. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், “இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமை யானது எது என்று எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் “ஹிஜ்ர்' பகுதியில் தொழுதுகொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களின் கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களைவிட்டு விலக்கினார்கள். மேலும், “என் இறைவன் அல்லாஹ்தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?” (40:28) என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. மேலும், இதே ஹதீஸ் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.93

அத்தியாயம் : 63
3857. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ حَمَّادٍ الآمُلِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُجَالِدٍ، عَنْ بَيَانٍ، عَنْ وَبَرَةَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ قَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا مَعَهُ إِلاَّ خَمْسَةُ أَعْبُدٍ وَامْرَأَتَانِ، وَأَبُو بَكْرٍ.
பாடம் : 30 அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது94
3857. அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்.95

அத்தியாயம் : 63
3858. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هَاشِمٌ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُ مَا أَسْلَمَ أَحَدٌ إِلاَّ فِي الْيَوْمِ الَّذِي أَسْلَمْتُ فِيهِ، وَلَقَدْ مَكَثْتُ سَبْعَةَ أَيَّامٍ وَإِنِّي لَثُلُثُ الإِسْلاَمِ
பாடம் : 31 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3858. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தை ஏற்ற நாளில்(தான் மற்றவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர். அந்நாளில்) தவிர, (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிடவில்லை. நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாட்கள் (வரை) இருந்தேன்” என்று சொல்லக் கேட்டேன்.96

அத்தியாயம் : 63
3859. حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَأَلْتُ مَسْرُوقًا مَنْ آذَنَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ. فَقَالَ حَدَّثَنِي أَبُوكَ ـ يَعْنِي عَبْدَ اللَّهِ ـ أَنَّهُ آذَنَتْ بِهِمْ شَجَرَةٌ.
பாடம் : 32 ஜின்கள் பற்றிய குறிப்பு97 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுவீராக: எனக்கு இவ்வாறு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர்...(72:1-15)98
3859. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், “ஜின்கள் குர்ஆனைச் செவியுற்ற அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், “ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித் ததாக உங்கள் தந்தை இப்னு மஸ்ஊத் (ரó) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.99


அத்தியாயம் : 63
3860. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي جَدِّي، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّهُ كَانَ يَحْمِلُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِدَاوَةً لِوَضُوئِهِ وَحَاجَتِهِ، فَبَيْنَمَا هُوَ يَتْبَعُهُ بِهَا فَقَالَ "" مَنْ هَذَا "". فَقَالَ أَنَا أَبُو هُرَيْرَةَ. فَقَالَ "" ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا، وَلاَ تَأْتِنِي بِعَظْمٍ وَلاَ بِرَوْثَةٍ "". فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ أَحْمِلُهَا فِي طَرَفِ ثَوْبِي حَتَّى وَضَعْتُ إِلَى جَنْبِهِ ثُمَّ انْصَرَفْتُ، حَتَّى إِذَا فَرَغَ مَشَيْتُ، فَقُلْتُ مَا بَالُ الْعَظْمِ وَالرَّوْثَةِ قَالَ "" هُمَا مِنْ طَعَامِ الْجِنِّ، وَإِنَّهُ أَتَانِي وَفْدُ جِنِّ نَصِيبِينَ وَنِعْمَ الْجِنُّ، فَسَأَلُونِي الزَّادَ، فَدَعَوْتُ اللَّهَ لَهُمْ أَنْ لاَ يَمُرُّوا بِعَظْمٍ وَلاَ بِرَوْثَةٍ إِلاَّ وَجَدُوا عَلَيْهَا طَعَامًا "".
பாடம் : 32 ஜின்கள் பற்றிய குறிப்பு97 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுவீராக: எனக்கு இவ்வாறு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர்...(72:1-15)98
3860. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அங்கத் தூய்மை செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி (ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒருநாள்) அவற்றைச் சுமந்துகொண்டு நான் நபி (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது, “யார் அது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நான் அபூஹுரைராதான் (வருகிறேன்)” என்று நான் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டுவருவீராக. நீர் என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்துவிடாதீர்” என்று சொன்னார்கள்.

நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்துகொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பிவிட்டேன். அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, “எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் “நஸீபீன்'100 எனுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயி ருந்தன.

அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், “அவை எந்த எலும்பையும் எந்தக் கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அல்லாஹ் விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்” என்று பதிலளித்தார்கள்.101

அத்தியாயம் : 63
3861. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا الْمُثَنَّى، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا بَلَغَ أَبَا ذَرٍّ مَبْعَثُ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لأَخِيهِ ارْكَبْ إِلَى هَذَا الْوَادِي، فَاعْلَمْ لِي عِلْمَ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، يَأْتِيهِ الْخَبَرُ مِنَ السَّمَاءِ، وَاسْمَعْ مِنْ قَوْلِهِ، ثُمَّ ائْتِنِي. فَانْطَلَقَ الأَخُ حَتَّى قَدِمَهُ وَسَمِعَ مِنْ قَوْلِهِ، ثُمَّ رَجَعَ إِلَى أَبِي ذَرٍّ، فَقَالَ لَهُ رَأَيْتُهُ يَأْمُرُ بِمَكَارِمِ الأَخْلاَقِ، وَكَلاَمًا مَا هُوَ بِالشِّعْرِ. فَقَالَ مَا شَفَيْتَنِي مِمَّا أَرَدْتُ، فَتَزَوَّدَ وَحَمَلَ شَنَّةً لَهُ فِيهَا مَاءٌ حَتَّى قَدِمَ مَكَّةَ، فَأَتَى الْمَسْجِدَ، فَالْتَمَسَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَلاَ يَعْرِفُهُ، وَكَرِهَ أَنْ يَسْأَلَ عَنْهُ حَتَّى أَدْرَكَهُ بَعْضُ اللَّيْلِ، فَرَآهُ عَلِيٌّ فَعَرَفَ أَنَّهُ غَرِيبٌ. فَلَمَّا رَآهُ تَبِعَهُ، فَلَمْ يَسْأَلْ وَاحِدٌ مِنْهُمَا صَاحِبَهُ عَنْ شَىْءٍ حَتَّى أَصْبَحَ، ثُمَّ احْتَمَلَ قِرْبَتَهُ وَزَادَهُ إِلَى الْمَسْجِدِ، وَظَلَّ ذَلِكَ الْيَوْمَ وَلاَ يَرَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى أَمْسَى، فَعَادَ إِلَى مَضْجَعِهِ، فَمَرَّ بِهِ عَلِيٌّ فَقَالَ أَمَا نَالَ لِلرَّجُلِ أَنْ يَعْلَمَ مَنْزِلَهُ فَأَقَامَهُ، فَذَهَبَ بِهِ مَعَهُ لاَ يَسْأَلُ وَاحِدٌ مِنْهُمَا صَاحِبَهُ عَنْ شَىْءٍ، حَتَّى إِذَا كَانَ يَوْمَ الثَّالِثِ، فَعَادَ عَلِيٌّ مِثْلَ ذَلِكَ، فَأَقَامَ مَعَهُ ثُمَّ قَالَ أَلاَ تُحَدِّثُنِي مَا الَّذِي أَقْدَمَكَ قَالَ إِنْ أَعْطَيْتَنِي عَهْدًا وَمِيثَاقًا لَتُرْشِدَنَّنِي فَعَلْتُ فَفَعَلَ فَأَخْبَرَهُ. قَالَ فَإِنَّهُ حَقٌّ وَهُوَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَإِذَا أَصْبَحْتَ فَاتْبَعْنِي، فَإِنِّي إِنْ رَأَيْتُ شَيْئًا أَخَافُ عَلَيْكَ قُمْتُ كَأَنِّي أُرِيقُ الْمَاءَ، فَإِنْ مَضَيْتُ فَاتْبَعْنِي حَتَّى تَدْخُلَ مَدْخَلِي. فَفَعَلَ، فَانْطَلَقَ يَقْفُوهُ حَتَّى دَخَلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَدَخَلَ مَعَهُ، فَسَمِعَ مِنْ قَوْلِهِ، وَأَسْلَمَ مَكَانَهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْجِعْ إِلَى قَوْمِكَ، فَأَخْبِرْهُمْ حَتَّى يَأْتِيَكَ أَمْرِي "". قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَصْرُخَنَّ بِهَا بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَخَرَجَ حَتَّى أَتَى الْمَسْجِدَ فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. ثُمَّ قَامَ الْقَوْمُ فَضَرَبُوهُ حَتَّى أَضْجَعُوهُ، وَأَتَى الْعَبَّاسُ فَأَكَبَّ عَلَيْهِ قَالَ وَيْلَكُمْ أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ مِنْ غِفَارٍ وَأَنَّ طَرِيقَ تِجَارِكُمْ إِلَى الشَّأْمِ فَأَنْقَذَهُ مِنْهُمْ، ثُمَّ عَادَ مِنَ الْغَدِ لِمِثْلِهَا، فَضَرَبُوهُ وَثَارُوا إِلَيْهِ، فَأَكَبَّ الْعَبَّاسُ عَلَيْهِ.
பாடம் : 33 அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி102
3861. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதர் (அல்கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, “வானத்திலிருந்து (இறைச்)செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) என்னிடம் சொல்! அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு என்னிடம் வா!” என்று சொன்னார்கள்.

உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, “அவர் நற்குணங்களைக் கடைபிடிக்கும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற் றேன்). அது கவிதையாக இல்லை” என்று சொன்னார். அபூதர், “நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை” என்று கூறிவிட்டு, பயண உணவை எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்.

மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷியர் தமக்குத் தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ (ரலி) அவர்கள் அபூதர்ரிடம், “வீட்டுக்கு வாருங்கள்” என்று சொல்ல) அவர்களைப் பின்தொடர்ந்து அபூதர் சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.

பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்துகொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும்வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். “தம் தங்குமிடத்தை அறிந்துகொள்ள இந்த மனிதருக்கு இன்னும் வேளை வரவில்லையா?” என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். அவ்விருவரும் ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.

இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக்கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), “நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டார்கள். அவர், “(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதிமொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்” என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழி யளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார்.

அலீ (ரலி) அவர்கள், “அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங் கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்றுகொள்வேன்.103 நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும்வரை என்னைப் பின்தொடருங்கள்” என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும்வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்” என்று சொன்னார்கள். அபூதர், “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளி வாசலுக்கு வந்து, உரத்த குரலில், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவுக்கு அவரை அடித் தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர்மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க்கொண்டார்கள். “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட் பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள்.

அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதேபோன்று செய்ய குறைஷியரும் அடித்தபடி அவர்மீது பாய்ந்தார்கள். உடனே (முன்பு போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.104

அத்தியாயம் : 63
3862. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، فِي مَسْجِدِ الْكُوفَةِ يَقُولُ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُنِي وَإِنَّ عُمَرَ لَمُوثِقِي عَلَى الإِسْلاَمِ قَبْلَ أَنْ يُسْلِمَ عُمَرُ، وَلَوْ أَنَّ أُحُدًا ارْفَضَّ لِلَّذِي صَنَعْتُمْ بِعُثْمَانَ لَكَانَ مَحْقُوقًا أَنْ يَرْفَضَّ.
பாடம் : 34 சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது105
3862. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் அவர்கள், நான் இஸ்லாத்தை ஏற்றதைக் கண்டித்து அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு என்னைக் கட்டிவைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். நீங்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் விஷயத் தில் (அன்னாரைக் கொலை செய்து) நடந்துகொண்டதைக் கண்டு (மனம் தாளாமல்), உஹுத் மலை தனது இடத்தை விட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே” என்று சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூஃபாவின் மஸ்ஜிதில் வைத்துக் கூற நான் கேட்டேன்.

அத்தியாயம் : 63
3863. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا زِلْنَا أَعِزَّةً مُنْذُ أَسْلَمَ عُمَرُ.
பாடம் : 35 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3863. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.

இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.106


அத்தியாயம் : 63
3864. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ فَأَخْبَرَنِي جَدِّي، زَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ، قَالَ بَيْنَمَا هُوَ فِي الدَّارِ خَائِفًا، إِذْ جَاءَهُ الْعَاصِ بْنُ وَائِلٍ السَّهْمِيُّ أَبُو عَمْرٍو، عَلَيْهِ حُلَّةُ حِبَرَةٍ، وَقَمِيصٌ مَكْفُوفٌ بِحَرِيرٍ، وَهُوَ مِنْ بَنِي سَهْمٍ، وَهُمْ حُلَفَاؤُنَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ لَهُ مَا بَالُكَ قَالَ زَعَمَ قَوْمُكَ أَنَّهُمْ سَيَقْتُلُونِي إِنْ أَسْلَمْتُ. قَالَ لاَ سَبِيلَ إِلَيْكَ. بَعْدَ أَنْ قَالَهَا أَمِنْتُ، فَخَرَجَ الْعَاصِ، فَلَقِيَ النَّاسَ قَدْ سَالَ بِهِمُ الْوَادِي فَقَالَ أَيْنَ تُرِيدُونَ فَقَالُوا نُرِيدُ هَذَا ابْنَ الْخَطَّابِ الَّذِي صَبَا. قَالَ لاَ سَبِيلَ إِلَيْهِ. فَكَرَّ النَّاسُ.
பாடம் : 35 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3864. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் தம்மை குறைஷியர் கொல்ல வருவார்கள் என்று) அஞ்சியவர்களாக(த் தமது) இல்லத்தினுள் அவர்கள் இருந்தபோது, ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ அபூஅம்ர் (எனும் குறைஷித் தலைவர்)107 கோடு போட்ட சால்வை ஒன்றைப் போட்டுக்கொண்டு பட்டினால் தைக்கப்பட்ட சட்டையொன்றை அணிந்து கொண்டு வந்து, “என்ன விஷயம்?” என்று கேட்டார் - அவர் அறியாமைக் காலத்தில் எங்கள் நட்புக் குலமாயிருந்த “பனூ சஹ்ம்' குலத்தைச் சேர்ந்தவர் - உமர் அவர்கள், “உங்கள் குலத்தார் நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கொல்ல எண்ணு கிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். அதற்கு அவர், “உம்மிடம் (நெருங்க அவர்களுக்கு) வழியில்லை” என்று சொன்னார்.

(உமர் (ரலி) கூறுகிறார்கள்:) இவ்வாறு அவர் சொன்ன பிறகு நான் அமைதியடைந் தேன். உடனே, “ஆஸ் பின் வாயில்' வெளியே சென்று (மக்கா) பள்ளத்தாக்கே நிரம்பி வழியும்படி திரண்டு நின்ற மக்களைச் சந்தித்து, “நீங்கள் எங்கே நாடிப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள், “மதம் மாறி (நமக்குத் துரோகம் செய்து) விட்ட இந்த கத்தாபின் மகனைத்தான் நாடிச் செல்கிறோம்” என்று பதிலளித்தார் கள். அதற்கு அவர், “அவரிடம் (நெருங்க உங்களுக்கு) வழியில்லை” என்று சொல்ல, (வேறு வழியின்றி) மக்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.


அத்தியாயம் : 63
3865. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ سَمِعْتُهُ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ لَمَّا أَسْلَمَ عُمَرُ اجْتَمَعَ النَّاسُ عِنْدَ دَارِهِ وَقَالُوا صَبَا عُمَرُ. وَأَنَا غُلاَمٌ فَوْقَ ظَهْرِ بَيْتِي، فَجَاءَ رَجُلٌ عَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ فَقَالَ قَدْ صَبَا عُمَرُ. فَمَا ذَاكَ فَأَنَا لَهُ جَارٌ. قَالَ فَرَأَيْتُ النَّاسَ تَصَدَّعُوا عَنْهُ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا الْعَاصِ بْنُ وَائِلٍ.
பாடம் : 35 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3865. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது மக்கள் அவர்களுடைய வீட்டருகே ஒன்றுதிரண்டு, “உமர் மதம் மாறிவிட்டார்” என்று சொல்லலானார்கள். - அப்போது சிறுவயதினனாக இருந்த நான் என் வீட்டுக் கூரைமீது அமர்ந்து கொண்டிருந்தேன் - அப்போது ஒரு மனிதர் பட்டு அங்கி ஒன்றை அணிந்து கொண்டு வந்து, “உமர் மதம் மாறிவிட்டார். அதனால் என்ன? நான் அவருக்கு அபயம் அளித்திருக்கிறேன் (ஆகவே, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது)” என்று சொன்னார்.

மக்கள் (அவர் சொன்னதைக் கேட்டு) அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டதைப் பார்த்தேன். நான், “யார் இவர்?” என்று கேட்டேன். மக்கள், “(இவர்தான்) ஆஸ் பின் வாயில்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 63
3866. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، أَنَّ سَالِمًا، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ مَا سَمِعْتُ عُمَرَ، لِشَىْءٍ قَطُّ يَقُولُ إِنِّي لأَظُنُّهُ كَذَا. إِلاَّ كَانَ كَمَا يَظُنُّ، بَيْنَمَا عُمَرُ جَالِسٌ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ جَمِيلٌ فَقَالَ لَقَدْ أَخْطَأَ ظَنِّي، أَوْ إِنَّ هَذَا عَلَى دِينِهِ فِي الْجَاهِلِيَّةِ، أَوْ لَقَدْ كَانَ كَاهِنَهُمْ، عَلَىَّ الرَّجُلَ، فَدُعِيَ لَهُ، فَقَالَ لَهُ ذَلِكَ، فَقَالَ مَا رَأَيْتُ كَالْيَوْمِ اسْتُقْبِلَ بِهِ رَجُلٌ مُسْلِمٌ، قَالَ فَإِنِّي أَعْزِمُ عَلَيْكَ إِلاَّ مَا أَخْبَرْتَنِي. قَالَ كُنْتُ كَاهِنَهُمْ فِي الْجَاهِلِيَّةِ. قَالَ فَمَا أَعْجَبُ مَا جَاءَتْكَ بِهِ جِنِّيَّتُكَ قَالَ بَيْنَمَا أَنَا يَوْمًا فِي السُّوقِ جَاءَتْنِي أَعْرِفُ فِيهَا الْفَزَعَ، فَقَالَتْ أَلَمْ تَرَ الْجِنَّ وَإِبْلاَسَهَا وَيَأْسَهَا مِنْ بَعْدِ إِنْكَاسِهَا وَلُحُوقَهَا بِالْقِلاَصِ وَأَحْلاَسِهَا قَالَ عُمَرُ صَدَقَ، بَيْنَمَا أَنَا عِنْدَ آلِهَتِهِمْ إِذْ جَاءَ رَجُلٌ بِعِجْلٍ فَذَبَحَهُ، فَصَرَخَ بِهِ صَارِخٌ، لَمْ أَسْمَعْ صَارِخًا قَطُّ أَشَدَّ صَوْتًا مِنْهُ يَقُولُ يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ رَجُلٌ فَصِيحْ يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ. فَوَثَبَ الْقَوْمُ قُلْتُ لاَ أَبْرَحُ حَتَّى أَعْلَمَ مَا وَرَاءَ هَذَا ثُمَّ نَادَى يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ، رَجُلٌ فَصِيحْ، يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقُمْتُ فَمَا نَشِبْنَا أَنْ قِيلَ هَذَا نَبِيٌّ.
பாடம் : 35 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3866. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (ஒரு விஷயத் தைப் பற்றி), “நான் இதைக் குறித்து இப்படிக் கருதுகிறேன்” என்று சொல்ல நான் கேட்பேனாயின், அந்த விஷயம் அவர்கள் கூறியதைப் போலத்தான் இருக்கும்.

ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் (தம் இடத்தில்) அமர்ந்திருந்தபொழுது அழகான ஒரு மனிதர் அவர்களைக் கடந்து சென்றார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஒன்று நான் (இவர் அஞ்ஞானக் கலாசாரத்தில் இருப்பவர் என்று) நினைத்தது தவறாயிருக்க வேண்டும்; அல்லது (நான் நினைத்தது சரியாக இருக்குமானால்) இந்த மனிதர் தமது (பழைய) அறியாமைக் கால மார்க்கத்திலேயே இருக்க வேண்டும்; அல்லது (அறியாமைக் கால) அம்மக்களுக்குக் குறிசொல்பவராக (சோதிடராக) இருந்திருக்க வேண்டும். அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அவர், உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துவரப்பட்டார். உமர் (ரலி) அவர்கள், தாம் (முன்பு சந்தேகத்துடன்) கூறியதையே அந்த மனிதரிடமும் கேட்டார்கள். அந்த மனிதர் (தம்மைப் பற்றி உமர் முன்வைத்த சந்தேகத்தால் வெறுப்படைந்தவராய்), “இன்று ஒரு முஸ்லிமான மனிதருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு போன்று நான் (எப்போதும்) பார்த்ததில்லை” என்று சொன்னார்.

உமர் (ரலி) அவர்கள், “நீ எனக்கு (அறியாமைக் காலத்தில் நடந்த) செய்தியைச் சொல்லத்தான் வேண்டும் என்று விரும்பு கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “நான் அறியாமைக் காலத்தில் அம்மக்களின் சோதிடனாக (குறிகாரனாக) இருந்தேன்” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள், “உனது பெண் ஜின் உன்னிடம் கொண்டுவந்த செய்திகளிலேயே மிகவும் வியப்புக்குரியது எது?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “நான் ஒரு நாள் கடைவீதியில் இருந்தபோது, பெண் ஜின் என்னிடம் வந்தது. அதனிடம் பீதியைக் கண்டேன். அப்போது “ஜின்கள் அடைந்துள்ள அச்சத்தை நீங்கள் பார்க்கவில்லையா? அவை (மேலுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாமல்) தோல்வியுற்றுத் திரும்புவதால் அடைந்துள்ள நிராசையை யும் நீங்கள் பார்க்கவில்லையா? அவை இளம் ஒட்டகங்களையும் அவற்றின் (சேண இருக்கையின் கீழே விரிக்கப்படும்) துணியையும் பின்பற்றிச் செல்வதைக் காணவில்லையா?'108 என்று கேட்டது” என்று சொன்னார்.

உமர் (ரலி) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். நான் (கஅபாவில்) இணைவைப்பாளர்களின் கடவுள் (சிலை)களுக்கு அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் காளைக் கன்று ஒன்றைக் கொண்டுவந்து (பலி கொடுத்து) அதை அறுத்தார். அப்போது அசரீரிக் குரல் ஒன்று வந்தது. அதைவிடக் கடுமையான குரலில் குரல் கொடுப்பவர் எவரையும் நான் செவியுற்றதேயில்லை. அது, “பகிரங்கமாகப் பகைத்துக்கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒரு மனிதர், “(அல்லாஹ்வே!) உன்னைத் தவிர வேறு இறைவனில்லை' என்று சொல்வார்” என்று குரல் கொடுத்தது. உடனே (இணைவைக்கும்) மக்கள் குதித்தெழுந்தார்கள்.

நான், “இந்த மர்மக் குரலுக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ளாமல் விடமாட்டேன்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) அந்த அசரீரி, “பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒரு மனிதர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை' என்று சொல்வார்” என்று குரல் கொடுத்தது. நான் எழுந்து சென்றுவிட்டேன். சிறிது காலத்திற்குள்ளாகவே, “இதோ ஒரு நபி (வந்துவிட்டார்)” என்று சொல்லப் பட்டது.


அத்தியாயம் : 63
3867. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدٍ، يَقُولُ لِلْقَوْمِ لَوْ رَأَيْتُنِي مُوثِقِي عُمَرُ عَلَى الإِسْلاَمِ أَنَا وَأُخْتُهُ وَمَا أَسْلَمَ، وَلَوْ أَنَّ أُحُدًا انْقَضَّ لِمَا صَنَعْتُمْ، بِعُثْمَانَ لَكَانَ مَحْقُوقًا أَنْ يَنْقَضَّ.
பாடம் : 35 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3867. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உமர் அவர்கள், நானும் அவருடைய சகோதரியும் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கட்டிவைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். -அப்போது அவர் முஸ்லிமாயிருக்க வில்லை. -உஸ்மான் (ரலி) அவர்கள் விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நீங்கள் நடந்துகொண்ட (விதத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) உஹுத் மலை தனது இடத்தைவிட்டுப் பெயர்ந்து விட்டால் அதுவும் சரியானதே” என்று (கூஃபாவின் மஸ்ஜிதில் கூடியிருந்த) மக்களிடம் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.109

அத்தியாயம் : 63
3868. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً، فَأَرَاهُمُ الْقَمَرَ شِقَّتَيْنِ، حَتَّى رَأَوْا حِرَاءً بَيْنَهُمَا.
பாடம் : 36 சந்திரன் பிளவுண்ட நிகழ்ச்சி
3868. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சந்திரனை இரு துண்டுகளாக (பிளந்திருக்க)க் காட்டினார்கள். எந்த அளவுக் கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே “ஹிரா' மலையைக் கண்டார்கள்.110


அத்தியாயம் : 63