381. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى الْخُمْرَةِ.
பாடம் : 21 (பேரீச்சங் கீற்றினால் வேயப் பட்ட) தொழுகை விரிப்பில் தொழுவது
381. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட) தொழுகை விரிப்பின் மீது தொழுதுவந்தார்கள்.

அத்தியாயம் : 8
382. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجْلاَىَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَىَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا. قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ.
பாடம் : 22 படுக்கை விரிப்பில் தொழுவது அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள். “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
382. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (விரிப் பில் படுத்து) உறங்கிக்கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் ‘சஜ்தா’ செய்யுமிடத் தில்) இருந்துகொண்டிருக்கும். அவர்கள் ‘சஜ்தா’வுக்கு வரும்போது என்னை (தமது விரலால்) தொட்டுணர்த்துவார்கள்.

உடனே நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்துவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.


அத்தியாயம் : 8
383. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْىَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ، اعْتِرَاضَ الْجَنَازَةِ.
பாடம் : 22 படுக்கை விரிப்பில் தொழுவது அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள். “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
383. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் படுத்திருக்கும்) எனது படுக்கை விரிப்பில் தொழுவார்கள். அப்போது அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே ‘ஜனாஸா’வைப் போன்று குறுக்கே நான் படுத்திருப்பேன்.


அத்தியாயம் : 8
384. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَعَائِشَةُ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى الْفِرَاشِ الَّذِي يَنَامَانِ عَلَيْهِ.
பாடம் : 22 படுக்கை விரிப்பில் தொழுவது அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள். “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
384. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தாமும் (தம் துணைவியாரும் என் சிற்றன்னையுமான) ஆயிஷா (ரலி) அவர்களும் உறங்கும் படுக்கை விரிப்பில் (இரவில்) தொழுவார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்கள் சஜ்தா செய்யும்) ‘கிப்லா’ திசைக்கும் இடையே குறுக்கே படுத்திருப்பார்கள்.

அத்தியாயம் : 8
385. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَضَعُ أَحَدُنَا طَرَفَ الثَّوْبِ مِنْ شِدَّةِ الْحَرِّ فِي مَكَانِ السُّجُودِ.
பாடம் : 23 கடும் வெப்பத்தில் ஆடையின் (ஓரத்தின்) மீது சிரவணக்கம் செய்வது “நபித்தோழர்கள் (தாம் அணிந்திருக் கும்) தலைப்பாகையின் (ஓர் ஓரத்தின்) மீதும் தொப்பியின் மீதும் (வெயில் நேரத் தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்; இரு கைகளையும் (நிலத்தில் ஊன்றும் போது) சட்டைக் கைக்குள்ளேயே வைத் துக்கொள்வார்கள்” என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
385. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பகல் நேரத்தில்) தொழும்போது, எங்களில் சிலர் கடுமையான வெப்பம் காரணமாக ஆடையின் ஒரு பகுதியைச் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுமிடத்தில் வைத்துக்கொள் வார்கள்.

அத்தியாயம் : 8
386. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ، سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ.
பாடம் : 24 காலணியுடன் தொழுதல்
386. சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் தம் காலணி களுடன் தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.21

அத்தியாயம் : 8
387. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ بَالَ ثُمَّ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى، فَسُئِلَ فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ مِثْلَ هَذَا. قَالَ إِبْرَاهِيمُ فَكَانَ يُعْجِبُهُمْ، لأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ.
பாடம் : 25 காலுறைகளுடன் தொழுவது
387. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால் தடவி) தம் காலுறைகள்மீது ‘மஸ்ஹு’ செய்தார்கள். பிறகு அவர்கள் (காலுறைகளுடனேயே) எழுந்து தொழு வதை நான் கண்டேன்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட் டது. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக் கிறேன்” என்று பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(“காலுறைகளின் மீது ‘மஸ்ஹு’ செய்து தொழலாம்” என்ற கருத்துடைய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் உள்ளிட்ட) மக்களுக்கு, (ஜரீர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளிப்பதாய் அமைந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார்.


அத்தியாயம் : 8
388. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ وَضَّأْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَصَلَّى.
பாடம் : 25 காலுறைகளுடன் தொழுவது
388. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். (அவர்கள் உளூவின் இறுதியில், கால்களைக் கழுவாமல்) தம் காலுறைகள்மீது (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்து)விட்டு (காலுறைகளுட னேயே) தொழுதார்கள்.

அத்தியாயம் : 8
389. أَخْبَرَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ لَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம் : 26 (தொழுகையின் ஓர் அங்கமான) சிரவணக்கத்தை முழுமையாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் விளைவு)
389. அபூவாயில் (ஷகீக் பின் சலமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தமது (தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (பின் அல்யமான் -ர-) அவர்கள், அவர் தொழுது முடித்தபோது, “நீர் (உரிய முறையில்) தொழவில்லை” என்று கூறி னார்கள்.

மேலும் அவர்கள், “(இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்தவராகவே இறப்பீர்” என்று சொன்ன தாகவும் நான் எண்ணுகிறேன்.

அத்தியாயம் : 8
390. أَخْبَرَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرٍ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ نَحْوَهُ.
பாடம் : 27 சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது இரு புஜங்களையும் (விலாவோடு சேர்க்காமல்) இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
390. அப்துல்லாஹ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சிரவணக்கத்தில்) அவர்களின் இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்து வை)ப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 8
391. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمَهْدِيِّ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ صَلَّى صَلاَتَنَا، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَذَلِكَ الْمُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ "".
பாடம் : 28 (இறையில்லம் ‘கஅபா’வின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு (சிரவணக்கம் செய்யும்போது) ஒருவர் தம்முடைய இரு கால்(விரல்)களின் நுனிகளை ‘கிப்லா’வை முன்னோக்கி வைக்கவேண்டும். நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறியுள்ளார்கள்.
391. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாம் தொழுவதைப் போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்கப் பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தான் முஸ்-ம். அத்தகையவருக்கு அல்லாஹ் வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனு டைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு.

எனவே, (இப்படிப்பட்டவர்மீது) அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப் பி(னைப் பாழாக்கும் விஷயத்தி)ல் அல்லாஹ்வுக்கு(ம் அவனுடைய தூதருக் கும்) வஞ்சனை செய்துவிடாதீர்கள்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8
392. حَدَّثَنَا نُعَيْمٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَإِذَا قَالُوهَا وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلاَّ بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ "".
பாடம் : 28 (இறையில்லம் ‘கஅபா’வின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு (சிரவணக்கம் செய்யும்போது) ஒருவர் தம்முடைய இரு கால்(விரல்)களின் நுனிகளை ‘கிப்லா’வை முன்னோக்கி வைக்கவேண்டும். நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறியுள்ளார்கள்.
392. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களுடன் போரிட வேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன்.

எனவே, இதை அவர்கள் கூறி, நாம் தொழுவதைப் போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர் மற்றும் உடைமைகள் (மீது கைவைப்பது) நம்மீது தடை செய்யப்பட்டதாகிவிடும்; மேலும், (இரகசியமாகக் குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8
393. قَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ الْعَبْدِ وَمَالَهُ فَقَالَ مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ الْمُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ مَا عَلَى الْمُسْلِمِ.
பாடம் : 28 (இறையில்லம் ‘கஅபா’வின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு (சிரவணக்கம் செய்யும்போது) ஒருவர் தம்முடைய இரு கால்(விரல்)களின் நுனிகளை ‘கிப்லா’வை முன்னோக்கி வைக்கவேண்டும். நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறியுள்ளார்கள்.
393. மைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “அபூஹம்ஸா! ஓர் அடி யாரின் உயிரையும் பொருளையும் (அதன்மீது கைவைக்க விடாமல்) தடை செய்வது எது?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “யார் அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவதைப் போன்றே தொழுது, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தான் முஸ்-ம். மற்ற முஸ்-ம்களுக்கு உள்ள உரிமையும் அவருக்கு உண்டு; மற்ற முஸ்-ம்களுக்கு உள்ள கடமையும் அவருக்கு உண்டு” என்று கூறினார்கள்.22

அத்தியாயம் : 8
394. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلاَ تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا "". قَالَ أَبُو أَيُّوبَ فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ، فَنَنْحَرِفُ وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى. وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 29 மதீனாவாசிகள், ஷாம்(சிரியா) வாசிகள், கிழக்கில் வசிப்பவர் கள் ஆகியோரின் தொழும் திசை (கிப்லா) கிழக்கிலோ மேற்கிலோ (மதீனாவாசி களுக்கும் ஷாம்வாசிகளுக்கும்) கிப்லா இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், (மதீனாவாசிகளிடம்), “மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்காதீர்கள். அப்போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள்.23
394. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஅபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்.

இதை அறிவித்த அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள், “நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்த போது, (அங்குள்ள) கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டி ருப்பதைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையி-ருந்து) திரும்பிக் கொண்டோம்; (அவ்வாறு கட்டியவர்களுக் காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 8
395. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ، طَافَ بِالْبَيْتِ الْعُمْرَةَ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ.
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
395. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உம்ராவுக்காக (இஹ்ராம் கட்டிய) ஒருவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார். ஆனால் ஸஃபா - மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள லாமா?” என்று நாங்கள் இப்னு உமர்

(ரலி) அவர்களிடம் கேட்டோம்.25

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவை ஏழு முறைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக் குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பிறகு ஸஃபா - மர்வாவுக்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் (சயீ) ஓடினார்கள். (ஆகவே, நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.)” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
396. وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
396. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (இது பற்றி) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வா (மலை)களுக்குகிடையில் தொங்கோட்டம் (சயீ) ஓடாத வரை மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கவே கூடாது” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 8
397. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَيْفٍ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ أُتِيَ ابْنُ عُمَرَ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ. فَقَالَ ابْنُ عُمَرَ فَأَقْبَلْتُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ، وَأَجِدُ بِلاَلاً قَائِمًا بَيْنَ الْبَابَيْنِ، فَسَأَلْتُ بِلاَلاً فَقُلْتُ أَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ رَكْعَتَيْنِ بَيْنَ السَّارِيَتَيْنِ اللَّتَيْنِ عَلَى يَسَارِهِ إِذَا دَخَلْتَ، ثُمَّ خَرَجَ فَصَلَّى فِي وَجْهِ الْكَعْبَةِ رَكْعَتَيْنِ.
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
397. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இதோ அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற் குள் நுழைந்துவிட்டார்கள்” என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள் ளிருந்து) வெளியே வந்துகொண்டிருந்த போது நான் அங்கு சென்றேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவின் இரு நிலைக்கால்களுக்கிடையே நின்றுகொண்டி ருப்பதைக் கண்டேன். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், “கஅபாவிற் குள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்; நீங்கள் கஅபாவிற்குள் நுழையும்போது இடப் பக்கமிருக்கின்ற இரு தூண்களுக்கு மத்தியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார் கள்; பிறகு வெளியே வந்து கஅபாவின் கதவை முன்னோக்கியபடி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 8
398. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا، وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ، فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ وَقَالَ "" هَذِهِ الْقِبْلَةُ "".
பாடம் : 30 “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் இறைவசனத்தொடர்.24
398. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துத் திசைகளிலும் பிரார்த்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதி-ருந்து வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, “இது தான் கிப்லா (தொழும் திசை)” என்று சொன்னார்கள்.26

அத்தியாயம் : 8
399. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ} فَتَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ، وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ ـ وَهُمُ الْيَهُودُ ـ مَا وَلاَّهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا {قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ} فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ ثُمَّ خَرَجَ بَعْدَ مَا صَلَّى، فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ فِي صَلاَةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ. فَتَحَرَّفَ الْقَوْمُ حَتَّى تَوَجَّهُوا نَحْوَ الْكَعْبَةِ.
பாடம் : 31 எங்கிருந்தாலும் (தொழும்போது) கிப்லா(வான கஅபா)வின் திசையையே முன்னோக்க வேண்டும். “நீங்கள் (தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி ‘தக்பீர்’ (தஹ்ரீமா) சொல்லுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
399. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்து) ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ (ஜெருசல மிலுள்ள) பைத்துல் மக்திசை நோக்கித் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) கஅபாவை நோக்கித் தாம் திருப்பப்பட வேண்டு மென்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பிக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே, (தொழுகையில் கஅபாவை முன்னோக்கும்படி ஆணையிட்டு) அல்லாஹ், “(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) விண்ணை நோக்கித் திரும்புவதை நாம் காண்கிறோம்...” (2:144) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.

உடனே நபி (ஸல்) அவர்கள் கஅபாவை முன்னோக்கி(த் தொழலா)னார்கள். (இதைக் கண்ட) அறிவற்ற மக்கள் -அதாவது யூதர்கள்- “(முஸ்-ம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று கூறினர். (அதற்கு அல்லாஹ்,) “(நபியே!) கூறுக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ் வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நல்வழியில் நடத்திச்செல்வான்” (2:142) என்று சொன்னான்.

(கஅபாவை நோக்கி கிப்லா மாற்றம் நடைபெற்ற அந்தத் தொழுகையில்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதர் தொழுதார். தொழுதுவிட்டு அவர் புறப் பட்டு(ச் செல்லும் வழியில்), பைத்துல் மக்திசை நோக்கி அஸ்ர் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்த அன்சாரி களில் சிலரைக் கடந்து சென்றார்.

அப்போது அவர் “நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழு தேன்; அவர்கள் கஅபாவை முன்னோக் கித் தொழுதார்கள் என்று நான் உறுதி கூறு கின்றேன்” என்றார். உடனே (தொழுகை யி-ருந்த) அம்மக்கள் கஅபாவின் திசையில் திரும்பிக்கொண்டார்கள்


அத்தியாயம் : 8
400. حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ، فَإِذَا أَرَادَ الْفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ.
பாடம் : 31 எங்கிருந்தாலும் (தொழும்போது) கிப்லா(வான கஅபா)வின் திசையையே முன்னோக்க வேண்டும். “நீங்கள் (தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி ‘தக்பீர்’ (தஹ்ரீமா) சொல்லுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
400. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (அமர்ந்து சைகை செய்தவாறு,) அது செல்கின்ற திசையை நோக்கி (கூடுதல் தொழுகைகளை) தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையை அவர்கள் தொழ நாடும்போது (வாகனத்தி-ருந்து) இறங்கி, கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்.




அத்தியாயம் : 8