3769. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ وَحَدَّثَنَا عَمْرٌو، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَفَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ "".
பாடம் : 30 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் அதிகமானோர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண் களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை.

(உலகின் மற்ற) பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) எல்லா உணவுகளைக் காட்டிலும் “ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.154

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3770. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى الطَّعَامِ "".
பாடம் : 30 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3770. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு, (மற்ற) உணவுகளைக் காட்டிலும் “ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3771. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ عَائِشَةَ، اشْتَكَتْ، فَجَاءَ ابْنُ عَبَّاسٍ فَقَالَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ، تَقْدَمِينَ عَلَى فَرَطِ صِدْقٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَى أَبِي بَكْرٍ.
பாடம் : 30 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3771. காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் நோயுற் றார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! வாய்மையில் முந்தியவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் காத்திருக்கும் இடத்திற்கு (சொர்க்கத்திற்கு) நீங்கள் செல்லவிருக்கிறீர்கள்” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.


அத்தியாயம் : 62
3772. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ لَمَّا بَعَثَ عَلِيٌّ عَمَّارًا وَالْحَسَنَ إِلَى الْكُوفَةِ لِيَسْتَنْفِرَهُمْ خَطَبَ عَمَّارٌ فَقَالَ إِنِّي لأَعْلَمُ أَنَّهَا زَوْجَتُهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَلَكِنَّ اللَّهَ ابْتَلاَكُمْ لِتَتَّبِعُوهُ أَوْ إِيَّاهَا.
பாடம் : 30 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3772. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் (தமக்கு ஆதரவாக “ஜமல்' போரில் கலந்துகொள்ளும்படி) மக்களை அழைப்பதற்காக அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹசன் (ரலி) அவர்களையும் “கூஃபா' நகருக்கு அனுப்பிவைத்தபோது (மக்களுக்கு) அம்மார் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள்.

அப்போது (தமது உரையில்), “நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த உலகிலும் மறுமையிலும் மனைவியாவார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனினும், “நீங்கள் (கலீஃபாவின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதன் மூலம்) அல்லாஹ்வி(ன் கட்டளைத)னைப் பின்பற்றுவதா? அல்லது ஆயிஷாவி(ன் யோசனைத)னைப் பின்பற்றுவதா?' என (முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு) உங்களை (ஆளாக்கி) அல்லாஹ் சோதனையில் ஆழ்த்திவிட்டான்” என்று கூறினார்கள்.155


அத்தியாயம் : 62
3773. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً فَهَلَكَتْ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَاسًا مِنْ أَصْحَابِهِ فِي طَلَبِهَا، فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ، فَصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ، فَلَمَّا أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم شَكَوْا ذَلِكَ إِلَيْهِ، فَنَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ جَزَاكِ اللَّهُ خَيْرًا، فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ قَطُّ إِلاَّ جَعَلَ اللَّهُ لَكِ مِنْهُ مَخْرَجًا، وَجَعَلَ لِلْمُسْلِمِينَ فِيهِ بَرَكَةً.
பாடம் : 30 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3773. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிட மிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனுல் முஸ்தலிக் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் சிலரை அதைத் தேடுவதற்காக அனுப்பினார்கள். அப்போது அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் அங்கத் தூய்மையின்றித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் (திரும்பிச்) சென்றபோது தண்ணீர் கிடைக்காததால் தமக்கேற்பட்ட நெருக் கடியான நிலையை முறையிட்டார்கள்.

அப்போதுதான் “தயம்மும்' உடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம் இறங்கியது. ஆகவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஒரு துன்பம் நேரும் போதெல்லாம் அதிலிருந்து விடுபடுகின்ற வழியொன்றை அல்லாஹ் உங்களுக்குத் தராமலிருந்ததில்லை; மேலும், அதில் முஸ்லிம்களுக்கு அருள்வளம் ஒன்றைத் தராமலும் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.156


அத்தியாயம் : 62
3774. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا كَانَ فِي مَرَضِهِ، جَعَلَ يَدُورُ فِي نِسَائِهِ وَيَقُولُ "" أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا "". حِرْصًا عَلَى بَيْتِ عَائِشَةَ، قَالَتْ عَائِشَةُ فَلَمَّا كَانَ يَوْمِي سَكَنَ.
பாடம் : 30 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3774. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தபோது தம் துணைவியரிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிருந்த காரணத்தால் “நாளை நான் எங்கேயிருப்பேன்? நாளை நான் எங்கேயிருப்பேன்?”157 என்று கேட்கத் தொடங்கினார்கள்.

“என் (முறைக்குரிய) நாள் வந்தபோது தான் அமைதியடைந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.


அத்தியாயம் : 62
3775. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ،، قَالَ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ قَالَتْ عَائِشَةُ فَاجْتَمَعَ صَوَاحِبِي إِلَى أُمِّ سَلَمَةَ، فَقُلْنَ يَا أُمَّ سَلَمَةَ، وَاللَّهِ إِنَّ النَّاسَ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، وَإِنَّا نُرِيدُ الْخَيْرَ كَمَا تُرِيدُهُ عَائِشَةُ، فَمُرِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَأْمُرَ النَّاسَ أَنْ يُهْدُوا إِلَيْهِ حَيْثُ مَا كَانَ أَوْ حَيْثُ مَا دَارَ، قَالَتْ فَذَكَرَتْ ذَلِكَ أُمُّ سَلَمَةَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ فَأَعْرَضَ عَنِّي، فَلَمَّا عَادَ إِلَىَّ ذَكَرْتُ لَهُ ذَاكَ فَأَعْرَضَ عَنِّي، فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ ذَكَرْتُ لَهُ فَقَالَ "" يَا أُمَّ سَلَمَةَ لاَ تُؤْذِينِي فِي عَائِشَةَ، فَإِنَّهُ وَاللَّهِ مَا نَزَلَ عَلَىَّ الْوَحْىُ وَأَنَا فِي لِحَافِ امْرَأَةٍ مِنْكُنَّ غَيْرِهَا "".
பாடம் : 30 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3775. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்:

(நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஒன்றுகூடி, “உம்மு சலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா, நபி (ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகின்றோம். ஆகவே, தமக்கு (தர விரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்- அல்லது செல்லுமிடத் தில்- (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர்.

(உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:)

நான் நபி (ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி (ஸல்) அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பிவந்த போது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்தபோதும் நான் அவர்களிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன்.

அப்போது அவர்கள், “உம்மு சலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும்போதும் எனக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டதில்லை” என்று பதிலளித்தார்கள்.158

அத்தியாயம் : 62

3776. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، قَالَ قُلْتُ لأَنَسٍ أَرَأَيْتَ اسْمَ الأَنْصَارِ كُنْتُمْ تُسَمَّوْنَ بِهِ، أَمْ سَمَّاكُمُ اللَّهُ قَالَ بَلْ سَمَّانَا اللَّهُ، كُنَّا نَدْخُلُ عَلَى أَنَسٍ فَيُحَدِّثُنَا مَنَاقِبَ الأَنْصَارِ وَمَشَاهِدَهُمْ، وَيُقْبِلُ عَلَىَّ أَوْ عَلَى رَجُلٍ مِنَ الأَزْدِ فَيَقُولُ فَعَلَ قَوْمُكَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا.
பாடம் : 1 அன்சாரிகளின் சிறப்புகள் அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் (அந்த “ஃபய்உ' என்னும் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானவையே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை. (59:9)
3776. ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) “அன்சார்' (உதவியாளர்கள்) எனும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டி ருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?” என்று கேட்டேன்.

அவர்கள், “அல்லாஹ்தான் எங்களுக்கு (“அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100ஆம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸ்ரா வில்) நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் (வந்து) சென்றுகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களுடைய (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப் பார்கள். என்னை அல்லது “அஸ்த்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை நோக்கி, “உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்” என்று சொல்வார்கள்.


அத்தியாயம் : 63
3777. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ بُعَاثَ يَوْمًا قَدَّمَهُ اللَّهُ لِرَسُولِهِ صلى الله عليه وسلم فَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدِ افْتَرَقَ مَلَؤُهُمْ، وَقُتِلَتْ سَرَوَاتُهُمْ، وَجُرِّحُوا، فَقَدَّمَهُ اللَّهُ لِرَسُولِهِ صلى الله عليه وسلم فِي دُخُولِهِمْ فِي الإِسْلاَمِ.
பாடம் : 1 அன்சாரிகளின் சிறப்புகள் அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் (அந்த “ஃபய்உ' என்னும் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானவையே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை. (59:9)
3777. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச்செய்த நாளாக அமைந்தது . (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள்.

ஆகவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன்கூட்டியே நிகழச்செய்தான்.2


அத்தியாயம் : 63
3778. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَتِ الأَنْصَارُ يَوْمَ فَتْحِ مَكَّةَ ـ وَأَعْطَى قُرَيْشًا ـ وَاللَّهِ إِنَّ هَذَا لَهُوَ الْعَجَبُ، إِنَّ سُيُوفَنَا تَقْطُرُ مِنْ دِمَاءِ قُرَيْشٍ، وَغَنَائِمُنَا تُرَدُّ عَلَيْهِمْ. فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَدَعَا الأَنْصَارَ قَالَ فَقَالَ "" مَا الَّذِي بَلَغَنِي عَنْكُمْ "". وَكَانُوا لاَ يَكْذِبُونَ. فَقَالُوا هُوَ الَّذِي بَلَغَكَ. قَالَ "" أَوَلاَ تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالْغَنَائِمِ إِلَى بُيُوتِهِمْ، وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بُيُوتِكُمْ لَوْ سَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا، لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ "".
பாடம் : 1 அன்சாரிகளின் சிறப்புகள் அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் (அந்த “ஃபய்உ' என்னும் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானவையே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை. (59:9)
3778. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷியருக்குக் கொடுத்தபோது அன்சாரிகள், “அல்லாஹ்வின் மீதாணை யாக! உண்மையில், இது வியப்பாகத்தான் இருக்கிறது. நம்முடைய வாட்களில் குறைஷியரின் இரத்தம் சொட்டிக்கொண்டி ருக்க, நமக்குச் சேர வேண்டிய போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா திருப்பிக் கொடுக்கப்படுகின்றன?” என்று பேசிக்கொண்டார்கள்.3 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது.

உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, “உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?” என்று கேட்டார்கள். அவர்கள் (நபித்தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர்- ஆகவே அவர்கள், “(உண்மையில் நாங்கள் பேசிக்கொண்டதும்) உங்களுக்கு எட்டியதேதான்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுட னேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்துசென்றால் அவர்கள் செல்கின்ற பள்ளத்தாக்கிலோ கண வாயிலோதான் நானும் நடந்துசெல்வேன்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 63
3779. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" لَوْ أَنَّ الأَنْصَارَ سَلَكُوا وَادِيًا أَوْ شِعْبًا، لَسَلَكْتُ فِي وَادِي الأَنْصَارِ، وَلَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ "". فَقَالَ أَبُو هُرَيْرَةَ مَا ظَلَمَ بِأَبِي وَأُمِّي، آوَوْهُ وَنَصَرُوهُ. أَوْ كَلِمَةً أُخْرَى.
பாடம் : 2 “ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாதிருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவ னாக இருந்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது4 இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.5
3779. அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்துசென்றால் அன்சாரிகள் நடந்துசெல்லும் பள்ளத் தாக்கில்தான் நானும் நடந்துசெல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே இப்படிக் கூறியுள்ளார்கள் (என்று கூறிவிட்டு) - என் தந்தையும் என் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- “(நபியவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம்) அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களுக்குப் புகலிடம் அளித்து அவர்களுக்கு உதவி செய்தார்கள்' என்றோ... (இவ்விரு வாக்கியங்களுடன் சேர்த்து) வேறொரு வாக்கியத்தையோ சொன்னார்கள்.6

அத்தியாயம் : 63
3780. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ عَبْدِ الرَّحْمَنِ وَسَعْدِ بْنِ الرَّبِيعِ، قَالَ لِعَبْدِ الرَّحْمَنِ إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالاً فَأَقْسِمُ مَالِي نِصْفَيْنِ، وَلِي امْرَأَتَانِ، فَانْظُرْ أَعْجَبَهُمَا إِلَيْكَ فَسَمِّهَا لِي أُطَلِّقْهَا، فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا. قَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، أَيْنَ سُوقُكُمْ فَدَلُّوهُ عَلَى سُوقِ بَنِي قَيْنُقَاعَ، فَمَا انْقَلَبَ إِلاَّ وَمَعَهُ فَضْلٌ مِنْ أَقِطٍ وَسَمْنٍ، ثُمَّ تَابَعَ الْغُدُوَّ، ثُمَّ جَاءَ يَوْمًا وَبِهِ أَثَرُ صُفْرَةٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَهْيَمْ "". قَالَ تَزَوَّجْتُ. قَالَ "" كَمْ سُقْتَ إِلَيْهَا "". قَالَ نَوَاةً مِنْ ذَهَبٍ. أَوْ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، شَكَّ إِبْرَاهِيمُ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர் களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியது7
3780. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி-என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள்.

(என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள், “நான் அன்சாரிகளில் அதிகச் செல்வம் உடையவன். என் செல்வத்தை இரு பாதிகளாகப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து)விடுகிறேன். எனக்கு இரு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்ப வளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளை மணவிலக்குச் செய்து விடுகிறேன். அவளுடைய “இத்தா' காலம் முடிந்தபின் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் உங்கள் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்கட்டும். உங்கள் கடைவீதி எங்கே?” என்று கேட்டார்கள். மக்கள் அவர்களுக்கு “பனூ கைனுகா' கடைவீதியைக் காட்டினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு சென்று வியாபாரம் செய்து) தம்முடன் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றுத்தான் திரும்பினார்கள். பிறகு அடுத்த நாள் காலையும் தொடர்ந்து சென்றார்கள். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள்.)

ஒருநாள் தம்மீது (நறுமணப் பொருள் தடவிக்கொண்டிருந்ததால்) மஞ்சள் அடையாளத்துடன் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை நோக்கி, “என்ன இது?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “நான் மணம் புரிந்துகொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு எவ்வளவு (மணக்கொடை) கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம்” என்று பதிலளித்தார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்' என்று சொன்னார்களா, “ஒரு பேரீச்சங் கொட்டை எடையளவு தங்கம்' என்று சொன்னார்களா என்பதில் அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.8


அத்தியாயம் : 63
3781. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَآخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، وَكَانَ كَثِيرَ الْمَالِ، فَقَالَ سَعْدٌ قَدْ عَلِمَتِ الأَنْصَارُ أَنِّي مِنْ أَكْثَرِهَا مَالاً، سَأَقْسِمُ مَالِي بَيْنِي وَبَيْنَكَ شَطْرَيْنِ، وَلِي امْرَأَتَانِ، فَانْظُرْ أَعْجَبَهُمَا إِلَيْكَ فَأُطَلِّقُهَا، حَتَّى إِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا. فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ. فَلَمْ يَرْجِعْ يَوْمَئِذٍ حَتَّى أَفْضَلَ شَيْئًا مِنْ سَمْنٍ وَأَقِطٍ، فَلَمْ يَلْبَثْ إِلاَّ يَسِيرًا، حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَهْيَمْ "". قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ. فَقَالَ "" مَا سُقْتَ فِيهَا "". قَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ، فَقَالَ "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர் களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியது7
3781. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (புலம்பெயர்ந்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள் - சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள் - சஅத் (ரலி) அவர்கள், “அன்சாரிகள், நான் அவர்களில் அதிகச் செல்வமுடையவன் என்று அறிந்திருக் கின்றனர். என் செல்வத்தை எனக்கும் உங்களுக்கும் இடையே இரு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து)விடுவேன். எனக்கு இரு மனைவிகள் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை மணவிலக்குச் செய்துவிடுகின்றேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்துகொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்துகொள்ளுங்கள்” என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம்) கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள்வளம் வழங்கட்டும்” என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்டியையும் இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திரும்பி வந்தார்கள். சிறிது காலம்தான் சென்றிருக் கும். அதற்குள் அவர்கள் தம்மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன இது?” என்று கேட்க, “நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு என்ன (மணக்கொடை) கொடுத்தீர்கள்?” என்று கேட்டதற்கு அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக” என்று சொன்னார் கள்.9


அத்தியாயம் : 63
3782. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ أَبُو هَمَّامٍ، قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتِ الأَنْصَارُ اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَهُمُ النَّخْلَ. قَالَ "" لاَ "". قَالَ يَكْفُونَا الْمَئُونَةَ وَتُشْرِكُونَا فِي التَّمْرِ. قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர் களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியது7
3782. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்) அன்சாரிகள், “எங்களுக்கும் (முஹாஜிர்களான) அவர்களுக்குமிடையே (எங்கள்) பேரீச்ச மரங்களைப் பங்கிடுங்கள்” என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று சொல்ல அவர்கள், “(அப்படியென் றால்) அவர்கள் (முஹாஜிர் சகோதரர்கள்) எங்களுக்காக உழைக்கட்டும்; எங்களுடன் விளைச்சலில் (இலாபப்) பங்கு பெற்றுக் கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். (அதற்குச் சம்மதித்து) முஹாஜிர்கள், “நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறினர்.10

அத்தியாயம் : 63
3783. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الأَنْصَارُ لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ، وَلاَ يُبْغِضُهُمْ إِلاَّ مُنَافِقٌ، فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ "".
பாடம் : 4 அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
3783. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக் கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

இதை பராஉ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.


அத்தியாயம் : 63
3784. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ "".
பாடம் : 4 அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
3784. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத் தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

அத்தியாயம் : 63
3785. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم النِّسَاءَ وَالصِّبْيَانَ مُقْبِلِينَ ـ قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ عُرُسٍ ـ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُمْثِلاً، فَقَالَ "" اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ "". قَالَهَا ثَلاَثَ مِرَارٍ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளி டம், “நீங்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னது
3785. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(அன்சாரிப்) பெண்களும் குழந்தை களும் எதிரில் வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்.- அறிவிப்பாளர் களில் ஒருவர் கூறுகிறார்: இதை எனக்கு அறிவித்தவர், “ஒரு மண விழாவிலிருந்து வருவதை” என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நபி (ஸல்) அவர்கள் நேராக எழுந்து நின்றுகொண்டு, “இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள். இ(ந்த வாக்கியத்)தை அவர்கள் மூன்று முறை சொன்னார்கள்.


அத்தியாயம் : 63
3786. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي هِشَامُ بْنُ زَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهَا صَبِيٌّ لَهَا، فَكَلَّمَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّكُمْ أَحَبُّ النَّاسِ إِلَىَّ "". مَرَّتَيْنِ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளி டம், “நீங்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னது
3786. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தமது குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக்கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரி களான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று இருமுறை சொன்னார்கள்.

அத்தியாயம் : 63
3787. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، سَمِعْتُ أَبَا حَمْزَةَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَتِ الأَنْصَارُ: يَا رَسُولَ اللَّهِ لِكُلِّ نَبِيٍّ أَتْبَاعٌ، وَإِنَّا قَدِ اتَّبَعْنَاكَ، فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَ أَتْبَاعَنَا مِنَّا. فَدَعَا بِهِ. فَنَمَيْتُ ذَلِكَ إِلَى ابْنِ أَبِي لَيْلَى. قَالَ قَدْ زَعَمَ ذَلِكَ زَيْدٌ.
பாடம் : 6 அன்சாரிகளைப் பின்தொடர்ந்த (நட்புக் கூட்டங்கள் மற்றும் அவர் களால் விடுதலை செய்யப்பட்ட)வர்கள்
3787. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இறைத்தூதர்கள் ஒவ்வவொருவருக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த (சார்பு நிலை கொண்ட)வர்கள் இருந்தனர். நாங்கள் உங்களைப் பின்பற்றி னோம். ஆகவே, எங்களுக்கும் எங்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.


அத்தியாயம் : 63
3788. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ أَبَا حَمْزَةَ ـ رَجُلاً مِنَ الأَنْصَارِ ـ قَالَتِ الأَنْصَارُ إِنَّ لِكُلِّ قَوْمٍ أَتْبَاعًا، وَإِنَّا قَدِ اتَّبَعْنَاكَ، فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَ أَتْبَاعَنَا مِنَّا. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ اجْعَلْ أَتْبَاعَهُمْ مِنْهُمْ "". قَالَ عَمْرٌو فَذَكَرْتُهُ لاِبْنِ أَبِي لَيْلَى. قَالَ قَدْ زَعَمَ ذَاكَ زَيْدٌ. قَالَ شُعْبَةُ أَظُنُّهُ زَيْدَ بْنَ أَرْقَمَ.
பாடம் : 6 அன்சாரிகளைப் பின்தொடர்ந்த (நட்புக் கூட்டங்கள் மற்றும் அவர் களால் விடுதலை செய்யப்பட்ட)வர்கள்
3788. அன்சாரிகளில் ஒருவரான அபூஹம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகள் (நபி (ஸல்) அவர்களிடம்), “ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. நாங்கள் உங்களைப் பின்பற்றினோம். ஆகவே, எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இவர் களுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.12

அத்தியாயம் : 63