3756. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ،، قَالَ ضَمَّنِي النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى صَدْرِهِ وَقَالَ "" اللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ "". حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، وَقَالَ، "" عَلِّمْهُ الْكِتَابَ "". حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، مِثْلَهُ.
وَالْحِكْمَةُ الْإِصَابَةُ فِي غَيْرِ النُّبُوَّةِ
பாடம் : 24
(அப்துல்லாஹ்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு138
3756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, “இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத்தருவாயாக!” எனப் பிராத்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத்தருவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என வந்துள்ளது.139
மேலும், “ஞானம்' (ஹிக்மத்) என்பதற்கு, “நபித்துவம்' அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்துகொள்வது என்று பொருள்.
அத்தியாயம் : 62

3757. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَعَى زَيْدًا وَجَعْفَرًا وَابْنَ رَوَاحَةَ لِلنَّاسِ قَبْلَ أَنْ يَأْتِيَهُمْ خَبَرُهُمْ، فَقَالَ "" أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ ابْنُ رَوَاحَةَ فَأُصِيبَ ـ وَعَيْنَاهُ تَذْرِفَانِ ـ حَتَّى أَخَذَ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ "".
பாடம்: 25
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களின் சிறப்புகள்140
3757. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ஸைத் (பின் ஹாரிஸா-ரலி) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதாலிப்-ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்துசேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப்பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
“(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தமது கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தமது கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் பின் அல்வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரது கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்” என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) சொன்னார்கள்.141

3758. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ ذُكِرَ عَبْدُ اللَّهِ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَقَالَ ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، فَبَدَأَ بِهِ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأُبَىِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ "". قَالَ لاَ أَدْرِي بَدَأَ بِأُبَىٍّ أَوْ بِمُعَاذٍ.
பாடம் : 26
அபூஹுதைஃபா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட சாலிம் (ரலி) அவர்களின் சிறப்புகள்142
3758. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றியப் பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “அவர் எத்தகைய மனிதரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத் (ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிரு வரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.

3759. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ سَمِعْتُ مَسْرُوقًا، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَقَالَ " إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَىَّ أَحْسَنَكُمْ أَخْلاَقًا ".
பாடம் : 27
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் சிறப்புகள்143
3759. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், “உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்” என்று சொன்னார்கள்.144

3760. وَقَالَ " اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأُبَىِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ ".
பாடம் : 27
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் சிறப்புகள்143
3760. மேலும், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

3761. حَدَّثَنَا مُوسَى، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، دَخَلْتُ الشَّأْمَ فَصَلَّيْتُ رَكْعَتَيْنِ، فَقُلْتُ اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا. فَرَأَيْتُ شَيْخًا مُقْبِلاً، فَلَمَّا دَنَا قُلْتُ أَرْجُو أَنْ يَكُونَ اسْتَجَابَ. قَالَ مِنْ أَيْنَ أَنْتَ قُلْتُ مِنْ أَهْلِ الْكُوفَةِ. قَالَ أَفَلَمْ يَكُنْ فِيكُمْ صَاحِبُ النَّعْلَيْنِ وَالْوِسَادِ وَالْمِطْهَرَةِ أَوَلَمْ يَكُنْ فِيكُمُ الَّذِي أُجِيرَ مِنَ الشَّيْطَانِ أَوَلَمْ يَكُنْ فِيكُمْ صَاحِبُ السِّرِّ الَّذِي لاَ يَعْلَمُهُ غَيْرُهُ كَيْفَ قَرَأَ ابْنُ أُمِّ عَبْدٍ {وَاللَّيْلِ} فَقَرَأْتُ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى}. قَالَ أَقْرَأَنِيهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاهُ إِلَى فِيَّ، فَمَا زَالَ هَؤُلاَءِ حَتَّى كَادُوا يَرُدُّونِي.
பாடம் : 27
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் சிறப்புகள்143
3761. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். அப்போது, “இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், “அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்து விட்டதாக நம்புகிறேன்” என்று சொன்னேன்.
அந்த முதியவர், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் கூஃபாவாசி” என்று பதிலளித்தேன். அவர், “நபி (ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து)கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத் -ரலி) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா -ரலி) உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார்.
“உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) “வல்லய்லி' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறைவசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று மேலும் கேட்டார்கள். நான், “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா வத்தகரி வல்உன்ஸா' என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுவதைப் போன்று) ஓதிக்காட்டினேன்.
அம்முதியவர், “நபி (ஸல்) அவர்கள் தமது வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக்கொடுத்தார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதை விட்டு விட்டுப் புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்துகொண்டே யிருந்தனர்” என்று சொன்னார்கள்.145

3762. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ،، قَالَ سَأَلْنَا حُذَيْفَةَ عَنْ رَجُلٍ، قَرِيبِ السَّمْتِ وَالْهَدْىِ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى نَأْخُذَ عَنْهُ فَقَالَ مَا أَعْرِفُ أَحَدًا أَقْرَبَ سَمْتًا وَهَدْيًا وَدَلاًّ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم مِنِ ابْنِ أُمِّ عَبْدٍ.
பாடம் : 27
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் சிறப்புகள்143
3762. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அழகிய தோற்றத்திலும் நடைமுறை யிலும் நபி (ஸல்) அவர்களை ஏறக் குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு அழகிய தோற் றத்திலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்ஊதை-ரலி) அவர்களைவிட வேறெவரையும் நான் அறியமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

3763. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي الأَسْوَدُ بْنُ يَزِيدَ، قَالَ سَمِعْتُ أَبَا مُوسَى الأَشْعَرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ قَدِمْتُ أَنَا وَأَخِي مِنَ الْيَمَنِ، فَمَكُثْنَا حِينًا مَا نُرَى إِلاَّ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم، لِمَا نَرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 27
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் சிறப்புகள்143
3763. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம்.146
அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.

3764. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا الْمُعَافَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ أَوْتَرَ مُعَاوِيَةُ بَعْدَ الْعِشَاءِ بِرَكْعَةٍ وَعِنْدَهُ مَوْلًى لاِبْنِ عَبَّاسٍ، فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَقَالَ دَعْهُ، فَإِنَّهُ صَحِبَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 28
முஆவியா (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு147
3764. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள், தம்மிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப்பின் ஒரு ரக்அத் வித்ர் தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றார். (முஆவியா (ரலி) அவர்கள் ஒரு ரக்அத் வித்ர் தொழுத விஷயத்தைச் சொன்னார்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவரை (அப்படியே தொழ) விட்டுவிடு. ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்” என்று சொன்னார்கள்.

3765. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، قِيلَ لاِبْنِ عَبَّاسٍ هَلْ لَكَ فِي أَمِيرِ الْمُؤْمِنِينَ مُعَاوِيَةَ، فَإِنَّهُ مَا أَوْتَرَ إِلاَّ بِوَاحِدَةٍ. قَالَ إِنَّهُ فَقِيهٌ.
பாடம் : 28
முஆவியா (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு147
3765. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா (ரலி) அவர்கள் விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழுகிறார்” என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “முஆவியா (மார்க்கச்) சட்டநிபுணர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

3766. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، عَنْ مُعَاوِيَةَ ـ رضى الله عنه ـ قَالَ إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً لَقَدْ صَحِبْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا، يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ.
பாடம் : 28
முஆவியா (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு147
3766. ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டி ருந்த நாங்கள், நபியவர்கள் தொழக் கண்டிராத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும்-அஸ்ர் தொழுகைக்குப்பின் (உங்களில் சிலர் தொழுகின்ற) இரு ரக்அத்களையும்- தொழ வேண்டாமென்று தடை விதித் துள்ளார்கள்” என்று கூறினார்கள்.148

3767. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي، فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي "".
பாடம் : 29
ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்149
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவியாவார்.150
3767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபாத்திமா என்னில் ஒரு பகுதி யாவார். எனவே, அவருக்குக் கோப மூட்டியவர் எனக்குக் கோபமூட்டிய வராவார்.
இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.151

3768. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَبُو سَلَمَةَ إِنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا "" يَا عَائِشَ، هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلاَمَ "". فَقُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى. تُرِيدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3768. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள், “ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று சொன்னார்கள்.
நான், சலாமுக்குப் பதில் கூறும் முகமாக “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு' (அவர்மீதும் சாந்தி பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள்வளங்களும் பொழியட்டும்) என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, “நான் பார்க்க முடியாத வற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன்.153

3769. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ وَحَدَّثَنَا عَمْرٌو، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَفَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ "".
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் அதிகமானோர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண் களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை.
(உலகின் மற்ற) பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) எல்லா உணவுகளைக் காட்டிலும் “ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.154
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3770. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى الطَّعَامِ "".
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3770. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு, (மற்ற) உணவுகளைக் காட்டிலும் “ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3771. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ عَائِشَةَ، اشْتَكَتْ، فَجَاءَ ابْنُ عَبَّاسٍ فَقَالَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ، تَقْدَمِينَ عَلَى فَرَطِ صِدْقٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَى أَبِي بَكْرٍ.
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3771. காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் நோயுற் றார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! வாய்மையில் முந்தியவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் காத்திருக்கும் இடத்திற்கு (சொர்க்கத்திற்கு) நீங்கள் செல்லவிருக்கிறீர்கள்” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

3772. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ لَمَّا بَعَثَ عَلِيٌّ عَمَّارًا وَالْحَسَنَ إِلَى الْكُوفَةِ لِيَسْتَنْفِرَهُمْ خَطَبَ عَمَّارٌ فَقَالَ إِنِّي لأَعْلَمُ أَنَّهَا زَوْجَتُهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَلَكِنَّ اللَّهَ ابْتَلاَكُمْ لِتَتَّبِعُوهُ أَوْ إِيَّاهَا.
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3772. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் (தமக்கு ஆதரவாக “ஜமல்' போரில் கலந்துகொள்ளும்படி) மக்களை அழைப்பதற்காக அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹசன் (ரலி) அவர்களையும் “கூஃபா' நகருக்கு அனுப்பிவைத்தபோது (மக்களுக்கு) அம்மார் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள்.
அப்போது (தமது உரையில்), “நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த உலகிலும் மறுமையிலும் மனைவியாவார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனினும், “நீங்கள் (கலீஃபாவின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதன் மூலம்) அல்லாஹ்வி(ன் கட்டளைத)னைப் பின்பற்றுவதா? அல்லது ஆயிஷாவி(ன் யோசனைத)னைப் பின்பற்றுவதா?' என (முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு) உங்களை (ஆளாக்கி) அல்லாஹ் சோதனையில் ஆழ்த்திவிட்டான்” என்று கூறினார்கள்.155

3773. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً فَهَلَكَتْ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَاسًا مِنْ أَصْحَابِهِ فِي طَلَبِهَا، فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ، فَصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ، فَلَمَّا أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم شَكَوْا ذَلِكَ إِلَيْهِ، فَنَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ جَزَاكِ اللَّهُ خَيْرًا، فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ قَطُّ إِلاَّ جَعَلَ اللَّهُ لَكِ مِنْهُ مَخْرَجًا، وَجَعَلَ لِلْمُسْلِمِينَ فِيهِ بَرَكَةً.
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3773. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிட மிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனுல் முஸ்தலிக் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் சிலரை அதைத் தேடுவதற்காக அனுப்பினார்கள். அப்போது அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் அங்கத் தூய்மையின்றித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் (திரும்பிச்) சென்றபோது தண்ணீர் கிடைக்காததால் தமக்கேற்பட்ட நெருக் கடியான நிலையை முறையிட்டார்கள்.
அப்போதுதான் “தயம்மும்' உடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம் இறங்கியது. ஆகவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஒரு துன்பம் நேரும் போதெல்லாம் அதிலிருந்து விடுபடுகின்ற வழியொன்றை அல்லாஹ் உங்களுக்குத் தராமலிருந்ததில்லை; மேலும், அதில் முஸ்லிம்களுக்கு அருள்வளம் ஒன்றைத் தராமலும் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.156

3774. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا كَانَ فِي مَرَضِهِ، جَعَلَ يَدُورُ فِي نِسَائِهِ وَيَقُولُ "" أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا "". حِرْصًا عَلَى بَيْتِ عَائِشَةَ، قَالَتْ عَائِشَةُ فَلَمَّا كَانَ يَوْمِي سَكَنَ.
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3774. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தபோது தம் துணைவியரிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிருந்த காரணத்தால் “நாளை நான் எங்கேயிருப்பேன்? நாளை நான் எங்கேயிருப்பேன்?”157 என்று கேட்கத் தொடங்கினார்கள்.
“என் (முறைக்குரிய) நாள் வந்தபோது தான் அமைதியடைந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

3775. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ،، قَالَ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ قَالَتْ عَائِشَةُ فَاجْتَمَعَ صَوَاحِبِي إِلَى أُمِّ سَلَمَةَ، فَقُلْنَ يَا أُمَّ سَلَمَةَ، وَاللَّهِ إِنَّ النَّاسَ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، وَإِنَّا نُرِيدُ الْخَيْرَ كَمَا تُرِيدُهُ عَائِشَةُ، فَمُرِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَأْمُرَ النَّاسَ أَنْ يُهْدُوا إِلَيْهِ حَيْثُ مَا كَانَ أَوْ حَيْثُ مَا دَارَ، قَالَتْ فَذَكَرَتْ ذَلِكَ أُمُّ سَلَمَةَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ فَأَعْرَضَ عَنِّي، فَلَمَّا عَادَ إِلَىَّ ذَكَرْتُ لَهُ ذَاكَ فَأَعْرَضَ عَنِّي، فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ ذَكَرْتُ لَهُ فَقَالَ "" يَا أُمَّ سَلَمَةَ لاَ تُؤْذِينِي فِي عَائِشَةَ، فَإِنَّهُ وَاللَّهِ مَا نَزَلَ عَلَىَّ الْوَحْىُ وَأَنَا فِي لِحَافِ امْرَأَةٍ مِنْكُنَّ غَيْرِهَا "".
பாடம் : 30
ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு152
3775. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்:
(நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஒன்றுகூடி, “உம்மு சலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா, நபி (ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகின்றோம். ஆகவே, தமக்கு (தர விரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்- அல்லது செல்லுமிடத் தில்- (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர்.
(உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:)
நான் நபி (ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி (ஸல்) அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பிவந்த போது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்தபோதும் நான் அவர்களிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன்.
அப்போது அவர்கள், “உம்மு சலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும்போதும் எனக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டதில்லை” என்று பதிலளித்தார்கள்.158