3696. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ، أَخْبَرَهُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالاَ مَا يَمْنَعُكَ أَنْ تُكَلِّمَ عُثْمَانَ لأَخِيهِ الْوَلِيدِ فَقَدْ أَكْثَرَ النَّاسُ فِيهِ. فَقَصَدْتُ لِعُثْمَانَ حَتَّى خَرَجَ إِلَى الصَّلاَةِ، قُلْتُ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً، وَهِيَ نَصِيحَةٌ لَكَ. قَالَ يَا أَيُّهَا الْمَرْءُ ـ قَالَ مَعْمَرٌ أُرَاهُ قَالَ ـ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ. فَانْصَرَفْتُ، فَرَجَعْتُ إِلَيْهِمْ إِذْ جَاءَ رَسُولُ عُثْمَانَ فَأَتَيْتُهُ، فَقَالَ مَا نَصِيحَتُكَ فَقُلْتُ إِنَّ اللَّهَ سُبْحَانَهُ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، وَكُنْتَ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ، فَهَاجَرْتَ الْهِجْرَتَيْنِ، وَصَحِبْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأَيْتَ هَدْيَهُ، وَقَدْ أَكْثَرَ النَّاسُ فِي شَأْنِ الْوَلِيدِ. قَالَ أَدْرَكْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ لاَ وَلَكِنْ خَلَصَ إِلَىَّ مِنْ عِلْمِهِ مَا يَخْلُصُ إِلَى الْعَذْرَاءِ فِي سِتْرِهَا. قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ، فَكُنْتُ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَآمَنْتُ بِمَا بُعِثَ بِهِ، وَهَاجَرْتُ الْهِجْرَتَيْنِ كَمَا قُلْتَ، وَصَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَبَايَعْتُهُ، فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ أَبُو بَكْرٍ مِثْلُهُ، ثُمَّ عُمَرُ مِثْلُهُ، ثُمَّ اسْتُخْلِفْتُ، أَفَلَيْسَ لِي مِنَ الْحَقِّ مِثْلُ الَّذِي لَهُمْ قُلْتُ بَلَى. قَالَ فَمَا هَذِهِ الأَحَادِيثُ الَّتِي تَبْلُغُنِي عَنْكُمْ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ شَأْنِ الْوَلِيدِ، فَسَنَأْخُذُ فِيهِ بِالْحَقِّ إِنْ شَاءَ اللَّهُ، ثُمَّ دَعَا عَلِيًّا فَأَمَرَهُ أَنْ يَجْلِدَهُ فَجَلَدَهُ ثَمَانِينَ.
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3696. உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:59

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “உஸ்மான் (ரலி) அவர்களிடம் நீங்கள் அவர்களுடைய (தாய்வழிச்) சகோதரர் வலீத் (பின் உக்பா) பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீத் விஷயத்தில் மிக அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள்.60

ஆகவே, நான் உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களைத் தேடிச் சென்றேன். அவர்களிடம், எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது உங்களுக்கு (நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “ஏ மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். உடனே, நான் திரும்பி அவ்விருவரிடமும் வந்தேன். அப்போது உஸ்மான் (ரலி) அவர்களுடைய தூதுவர் (என்னைத் தேடி) வர, நான் அவர்களிடம் (மீண்டும்) சென்றேன்.

உஸ்மான் (ரலி) அவர்கள், “உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்கள்மீது (தன்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்குப் பதிலளித்தவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். ஆகவே, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும், அதன்பின் மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்கள் மேற்கொண்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டு அவர்களுடைய வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறையக் குறைபேசுகிறார்கள் (நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?)” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்க நான், “இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம்(கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கல்வி சென்றடைந்துகொண்டிருக்கும்(போது, அந்த) அளவு (கல்வி) என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப் பில்லை.)” என்று பதில் சொன்னேன்.

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “இறைவாழ்த்துக்குப்பின் கூறுகிறேன்: அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மேலும், அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக்கொண்டேன். நான் இரு ஹிஜ்ரத்துகளை மேற் கொண்டேன். - நீங்கள் சொன்னதைப் போல்- நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை மரணிக்கச் செய்யும்வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு உமர் அவர்களிடமும் அதைப் போலவே (நடந்துகொண்டேன்.) பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். ஆகவே, அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?” என்று கேட்டார்கள்.

நான், “ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)” என்று சொன்னேன். அவர்கள், “அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகின்ற (என்னைக் குறைகூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் பின் உக்பா விஷயமாகச் சொன்னவற்றில் விரைவில் இறைவன் நாடினால் சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று சொன்னார்கள்.

பிறகு அலீ (ரலி) அவர்களை அழைத்து வலீத் பின் உக்பாவுக்கு (எதிராகச் சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) கசையடிகள் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்களும் வலீதுக்கு எண்பது கசையடிகள் கொடுத்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3697. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيغٍ، حَدَّثَنَا شَاذَانُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَعْدِلُ بِأَبِي بَكْرٍ أَحَدًا ثُمَّ عُمَرَ ثُمَّ عُثْمَانَ، ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نُفَاضِلُ بَيْنَهُمْ. تَابَعَهُ عَبْدُ اللَّهِ عَنْ عَبْدِ الْعَزِيزِ.
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3697. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது (அவர்களுடன்) நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்மீது ஓர் இறைத்தூதரும் ஒரு “சித்தீக்'கும் இரு உயிர்த்தியாகிகளும் உள்ளனர்” என்று சொன்னார்கள். (இதைக் கூறியபோது) நபியவர்கள் தமது காலால் மலையை (ஓங்கி) அடித்தார்கள் என எண்ணுகிறேன்.61


அத்தியாயம் : 62
3698. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ ـ هُوَ ابْنُ مَوْهَبٍ ـ قَالَ جَاءَ رَجُلٌ مَنْ أَهْلِ مِصْرَ حَجَّ الْبَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا، فَقَالَ مَنْ هَؤُلاَءِ الْقَوْمُ قَالَ هَؤُلاَءِ قُرَيْشٌ. قَالَ فَمَنِ الشَّيْخُ فِيهِمْ قَالُوا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ. قَالَ يَا ابْنَ عُمَرَ إِنِّي سَائِلُكَ عَنْ شَىْءٍ فَحَدِّثْنِي هَلْ تَعْلَمُ أَنَّ عُثْمَانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ. قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ وَلَمْ يَشْهَدْ قَالَ نَعَمْ. قَالَ تَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ. قَالَ اللَّهُ أَكْبَرُ. قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ أُبَيِّنْ لَكَ أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ وَغَفَرَ لَهُ، وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ، فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَتْ مَرِيضَةً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ "". وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَلَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ مَكَانَهُ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ الرُّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ الْيُمْنَى "" هَذِهِ يَدُ عُثْمَانَ "". فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ، فَقَالَ "" هَذِهِ لِعُثْمَانَ "". فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ اذْهَبْ بِهَا الآنَ مَعَكَ.
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3698. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் (சிறந்தவர்களாகக் கருதிவந்தோம்.) பிறகு (மீதமுள்ள) நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாமல் விட்டுவிட்டோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3699. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُمْ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُحُدًا، وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ، فَرَجَفَ وَقَالَ "" اسْكُنْ أُحُدُ ـ أَظُنُّهُ ضَرَبَهُ بِرِجْلِهِ ـ فَلَيْسَ عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ "".
பாடம் : 7 அபூஅம்ர் உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ (ரலி) அவர்களின் சிறப்புகள்56 “ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். “எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல, உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.57
3699. உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எகிப்துவாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தில் ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷியர்” என்று கூறினர். அவர், “இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர்.

உடனே அவர், (அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களை நோக்கி) “இப்னு உமர் அவர்களே! நான் உங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்லுங்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது (போர்க்களத்திலிருந்து) வெருண் டோடியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள். அவர், “உஸ்மான் அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள்.

அந்த மனிதர், “அவர் ஹுதைபியாவில் நடந்த “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?”62 என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்ததைப் போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும் படி) “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லை யென்று) உமக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவம் சம்பந்தமாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்து விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.63

பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா-ரலி) உஸ்மான் அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர்' போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.)

“பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;)

எனவேதான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டி னார்கள்.

பிறகு “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்' என (இப்னு உமர் (ரலி) அவர்கள்) கூறிவிட்டு, (உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீர் போகலாம்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 62
3700. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَبْلَ أَنْ يُصَابَ بِأَيَّامٍ بِالْمَدِينَةِ وَقَفَ عَلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ وَعُثْمَانَ بْنِ حُنَيْفٍ، قَالَ كَيْفَ فَعَلْتُمَا أَتَخَافَانِ أَنْ تَكُونَا قَدْ حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ قَالاَ حَمَّلْنَاهَا أَمْرًا هِيَ لَهُ مُطِيقَةٌ، مَا فِيهَا كَبِيرُ فَضْلٍ. قَالَ انْظُرَا أَنْ تَكُونَا حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ، قَالَ قَالاَ لاَ. فَقَالَ عُمَرُ لَئِنْ سَلَّمَنِي اللَّهُ لأَدَعَنَّ أَرَامِلَ أَهْلِ الْعِرَاقِ لاَ يَحْتَجْنَ إِلَى رَجُلٍ بَعْدِي أَبَدًا. قَالَ فَمَا أَتَتْ عَلَيْهِ إِلاَّ رَابِعَةٌ حَتَّى أُصِيبَ. قَالَ إِنِّي لَقَائِمٌ مَا بَيْنِي وَبَيْنَهُ إِلاَّ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ غَدَاةَ أُصِيبَ، وَكَانَ إِذَا مَرَّ بَيْنَ الصَّفَّيْنِ قَالَ اسْتَوُوا. حَتَّى إِذَا لَمْ يَرَ فِيهِنَّ خَلَلاً تَقَدَّمَ فَكَبَّرَ، وَرُبَّمَا قَرَأَ سُورَةَ يُوسُفَ، أَوِ النَّحْلَ، أَوْ نَحْوَ ذَلِكَ، فِي الرَّكْعَةِ الأُولَى حَتَّى يَجْتَمِعَ النَّاسُ، فَمَا هُوَ إِلاَّ أَنْ كَبَّرَ فَسَمِعْتُهُ يَقُولُ قَتَلَنِي ـ أَوْ أَكَلَنِي ـ الْكَلْبُ. حِينَ طَعَنَهُ، فَطَارَ الْعِلْجُ بِسِكِّينٍ ذَاتِ طَرَفَيْنِ لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ يَمِينًا وَلاَ شِمَالاً إِلاَّ طَعَنَهُ حَتَّى طَعَنَ ثَلاَثَةَ عَشَرَ رَجُلاً، مَاتَ مِنْهُمْ سَبْعَةٌ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ، طَرَحَ عَلَيْهِ بُرْنُسًا، فَلَمَّا ظَنَّ الْعِلْجُ أَنَّهُ مَأْخُوذٌ نَحَرَ نَفْسَهُ، وَتَنَاوَلَ عُمَرُ يَدَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَدَّمَهُ، فَمَنْ يَلِي عُمَرَ فَقَدْ رَأَى الَّذِي أَرَى، وَأَمَّا نَوَاحِي الْمَسْجِدِ فَإِنَّهُمْ لاَ يَدْرُونَ غَيْرَ أَنَّهُمْ قَدْ فَقَدُوا صَوْتَ عُمَرَ وَهُمْ يَقُولُونَ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ. فَصَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ صَلاَةً خَفِيفَةً، فَلَمَّا انْصَرَفُوا. قَالَ يَا ابْنَ عَبَّاسٍ، انْظُرْ مَنْ قَتَلَنِي. فَجَالَ سَاعَةً، ثُمَّ جَاءَ، فَقَالَ غُلاَمُ الْمُغِيرَةِ. قَالَ الصَّنَعُ قَالَ نَعَمْ. قَالَ قَاتَلَهُ اللَّهُ لَقَدْ أَمَرْتُ بِهِ مَعْرُوفًا، الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَجْعَلْ مَنِيَّتِي بِيَدِ رَجُلٍ يَدَّعِي الإِسْلاَمَ، قَدْ كُنْتَ أَنْتَ وَأَبُوكَ تُحِبَّانِ أَنْ تَكْثُرَ الْعُلُوجُ بِالْمَدِينَةِ وَكَانَ {الْعَبَّاسُ} أَكْثَرَهُمْ رَقِيقًا. فَقَالَ إِنْ شِئْتَ فَعَلْتُ. أَىْ إِنْ شِئْتَ قَتَلْنَا. قَالَ كَذَبْتَ، بَعْدَ مَا تَكَلَّمُوا بِلِسَانِكُمْ، وَصَلَّوْا قِبْلَتَكُمْ وَحَجُّوا حَجَّكُمْ فَاحْتُمِلَ إِلَى بَيْتِهِ فَانْطَلَقْنَا مَعَهُ، وَكَأَنَّ النَّاسَ لَمْ تُصِبْهُمْ مُصِيبَةٌ قَبْلَ يَوْمَئِذٍ، فَقَائِلٌ يَقُولُ لاَ بَأْسَ. وَقَائِلٌ يَقُولُ أَخَافُ عَلَيْهِ، فَأُتِيَ بِنَبِيذٍ فَشَرِبَهُ فَخَرَجَ مِنْ جَوْفِهِ، ثُمَّ أُتِيَ بِلَبَنٍ فَشَرِبَهُ فَخَرَجَ مِنْ جُرْحِهِ، فَعَلِمُوا أَنَّهُ مَيِّتٌ، فَدَخَلْنَا عَلَيْهِ، وَجَاءَ النَّاسُ يُثْنُونَ عَلَيْهِ، وَجَاءَ رَجُلٌ شَابٌّ، فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدَمٍ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ، ثُمَّ شَهَادَةٌ. قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لاَ عَلَىَّ وَلاَ لِي. فَلَمَّا أَدْبَرَ، إِذَا إِزَارُهُ يَمَسُّ الأَرْضَ. قَالَ رُدُّوا عَلَىَّ الْغُلاَمَ قَالَ ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ، فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ، يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ انْظُرْ مَا عَلَىَّ مِنَ الدَّيْنِ. فَحَسَبُوهُ فَوَجَدُوهُ سِتَّةً وَثَمَانِينَ أَلْفًا أَوْ نَحْوَهُ، قَالَ إِنْ وَفَى لَهُ مَالُ آلِ عُمَرَ، فَأَدِّهِ مِنْ أَمْوَالِهِمْ، وَإِلاَّ فَسَلْ فِي بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ، فَإِنْ لَمْ تَفِ أَمْوَالُهُمْ فَسَلْ فِي قُرَيْشٍ، وَلاَ تَعْدُهُمْ إِلَى غَيْرِهِمْ، فَأَدِّ عَنِّي هَذَا الْمَالَ، انْطَلِقْ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فَقُلْ يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ السَّلاَمَ. وَلاَ تَقُلْ أَمِيرُ الْمُؤْمِنِينَ. فَإِنِّي لَسْتُ الْيَوْمَ لِلْمُؤْمِنِينَ أَمِيرًا، وَقُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ. فَسَلَّمَ وَاسْتَأْذَنَ، ثُمَّ دَخَلَ عَلَيْهَا، فَوَجَدَهَا قَاعِدَةً تَبْكِي فَقَالَ يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ بْنُ الْخَطَّابِ السَّلاَمَ وَيَسْتَأْذِنُ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ. فَقَالَتْ كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي، وَلأُوثِرَنَّ بِهِ الْيَوْمَ عَلَى نَفْسِي. فَلَمَّا أَقْبَلَ قِيلَ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَدْ جَاءَ. قَالَ ارْفَعُونِي، فَأَسْنَدَهُ رَجُلٌ إِلَيْهِ، فَقَالَ مَا لَدَيْكَ قَالَ الَّذِي تُحِبُّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَذِنَتْ. قَالَ الْحَمْدُ لِلَّهِ، مَا كَانَ مِنْ شَىْءٍ أَهَمُّ إِلَىَّ مِنْ ذَلِكَ، فَإِذَا أَنَا قَضَيْتُ فَاحْمِلُونِي ثُمَّ سَلِّمْ فَقُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَإِنْ أَذِنَتْ لِي فَأَدْخِلُونِي، وَإِنْ رَدَّتْنِي رُدُّونِي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ. وَجَاءَتْ أُمُّ الْمُؤْمِنِينَ حَفْصَةُ وَالنِّسَاءُ تَسِيرُ مَعَهَا، فَلَمَّا رَأَيْنَاهَا قُمْنَا، فَوَلَجَتْ عَلَيْهِ فَبَكَتْ عِنْدَهُ سَاعَةً، وَاسْتَأْذَنَ الرِّجَالُ، فَوَلَجَتْ دَاخِلاً لَهُمْ، فَسَمِعْنَا بُكَاءَهَا مِنَ الدَّاخِلِ. فَقَالُوا أَوْصِ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اسْتَخْلِفْ. قَالَ مَا أَجِدُ أَحَقَّ بِهَذَا الأَمْرِ مِنْ هَؤُلاَءِ النَّفَرِ أَوِ الرَّهْطِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ عَنْهُمْ رَاضٍ. فَسَمَّى عَلِيًّا وَعُثْمَانَ وَالزُّبَيْرَ وَطَلْحَةَ وَسَعْدًا وَعَبْدَ الرَّحْمَنِ وَقَالَ يَشْهَدُكُمْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَلَيْسَ لَهُ مِنَ الأَمْرِ شَىْءٌ ـ كَهَيْئَةِ التَّعْزِيَةِ لَهُ ـ فَإِنْ أَصَابَتِ الإِمْرَةُ سَعْدًا فَهْوَ ذَاكَ، وَإِلاَّ فَلْيَسْتَعِنْ بِهِ أَيُّكُمْ مَا أُمِّرَ، فَإِنِّي لَمْ أَعْزِلْهُ عَنْ عَجْزٍ وَلاَ خِيَانَةٍ وَقَالَ أُوصِي الْخَلِيفَةَ مِنْ بَعْدِي بِالْمُهَاجِرِينَ الأَوَّلِينَ أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ، وَيَحْفَظَ لَهُمْ حُرْمَتَهُمْ، وَأُوصِيهِ بِالأَنْصَارِ خَيْرًا، الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ مِنْ قَبْلِهِمْ، أَنْ يُقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ، وَأَنْ يُعْفَى عَنْ مُسِيئِهِمْ، وَأُوصِيهِ بِأَهْلِ الأَمْصَارِ خَيْرًا فَإِنَّهُمْ رِدْءُ الإِسْلاَمِ، وَجُبَاةُ الْمَالِ، وَغَيْظُ الْعَدُوِّ، وَأَنْ لاَ يُؤْخَذَ مِنْهُمْ إِلاَّ فَضْلُهُمْ عَنْ رِضَاهُمْ، وَأُوصِيهِ بِالأَعْرَابِ خَيْرًا، فَإِنَّهُمْ أَصْلُ الْعَرَبِ وَمَادَّةُ الإِسْلاَمِ أَنْ يُؤْخَذَ مِنْ حَوَاشِي أَمْوَالِهِمْ وَتُرَدَّ عَلَى فُقَرَائِهِمْ، وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صلى الله عليه وسلم أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلاَّ طَاقَتَهُمْ. فَلَمَّا قُبِضَ خَرَجْنَا بِهِ فَانْطَلَقْنَا نَمْشِي فَسَلَّمَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ. قَالَتْ أَدْخِلُوهُ. فَأُدْخِلَ، فَوُضِعَ هُنَالِكَ مَعَ صَاحِبَيْهِ، فَلَمَّا فُرِغَ مِنْ دَفْنِهِ اجْتَمَعَ هَؤُلاَءِ الرَّهْطُ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ اجْعَلُوا أَمْرَكُمْ إِلَى ثَلاَثَةٍ مِنْكُمْ. فَقَالَ الزُّبَيْرُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَلِيٍّ. فَقَالَ طَلْحَةُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عُثْمَانَ. وَقَالَ سَعْدٌ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ. فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَيُّكُمَا تَبَرَّأَ مِنْ هَذَا الأَمْرِ فَنَجْعَلُهُ إِلَيْهِ، وَاللَّهُ عَلَيْهِ وَالإِسْلاَمُ لَيَنْظُرَنَّ أَفْضَلَهُمْ فِي نَفْسِهِ. فَأُسْكِتَ الشَّيْخَانِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَفَتَجْعَلُونَهُ إِلَىَّ، وَاللَّهُ عَلَىَّ أَنْ لاَ آلُوَ عَنْ أَفْضَلِكُمْ قَالاَ نَعَمْ، فَأَخَذَ بِيَدِ أَحَدِهِمَا فَقَالَ لَكَ قَرَابَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالْقَدَمُ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، فَاللَّهُ عَلَيْكَ لَئِنْ أَمَّرْتُكَ لَتَعْدِلَنَّ، وَلَئِنْ أَمَّرْتُ عُثْمَانَ لَتَسْمَعَنَّ وَلَتُطِيعَنَّ. ثُمَّ خَلاَ بِالآخَرِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ، فَلَمَّا أَخَذَ الْمِيثَاقَ قَالَ ارْفَعْ يَدَكَ يَا عُثْمَانُ. فَبَايَعَهُ، فَبَايَعَ لَهُ عَلِيٌّ، وَوَلَجَ أَهْلُ الدَّارِ فَبَايَعُوهُ.
பாடம் : 8 (கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களுக்குச் செய்துகொடுக்கப்பட்ட) சத்தியப் பிரமாண நிகழ்ச்சி, உஸ்மான் (ரலி) அவர்களது (தகுதி முன்னுரிமை) விஷயத்தில் ஒருமித்த கருத்து மற்றும் உமர் (ரலி) அவர்கள் கொலையுண்ட நிகழ்ச்சி
3700. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்குமுன் மதீனாவில் அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கும், உஸ்மான் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களுக்கும் அருகில் நின்றுகொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, “(சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்?64 அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்திவிட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் இருவரும், “அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித்தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை” என்றனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,”அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச் சுமையை சுமத்தி விட்டீர்களா? என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள்” என்றார்கள்.

அந்த இருவரும், “இல்லை. (அதன் சக்திக்கேற்பவே வரி விதித்தோம்)” என்று பதிலளித்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக்வாசி களின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில்தான் விட்டுச் செல்வேன்” என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாட்கள்கூட சென்றிருக்காது. அதற்குள் (கத்தியால்) உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்டு விட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்றுகொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்குமுன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), “சீராக நில்லுங்கள்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே இடைவெளியை காணாதபோதுதான் முன்சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் “யூசுஃப்' அத்தியாயம் (12) அல்லது “அந்நஹ்ல்' அத்தியாயம் (16) அல்லது அது போன்ற(வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகைக்காக வந்து சேரும்வரையில் முதல் ரகஅத்தில் ஓதுவார்கள்.

(சம்பவ தினத்தன்று) அப்போதுதான் தக்பீர் கூறியிருப்பார்கள். “என்னை நாய் கொன்றுவிட்டது- அல்லது தின்றுவிட்டது-” என்று கூறினார்கள் (அப்போது “அபூலுஃலுஆ ஃபைரோஸ்' என்பவன் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந் தான்).65

உடனே அந்த “இல்ஜ்' (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தனது கத்தியை எடுத்துக்கொண்டு தனது வலப் பக்கம், இடப் பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக்கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதிமூன்று ஆண்களை அவன் குத்திவிட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக்கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (கழற்றி) அவன்மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தான் பிடிபட்டுவிடுவோம் என்று எண்ணிய போது தன்னைத்தானே அறுத்துக்(கொண்டு தற்கொலை செய்து)கொண்டான்.

மேலும், (தொழுவித்துக்கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுவிப்ப தற்காகத் தம்மிடத்தில்) முன்நிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர் (ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளிவாசலின் மூலைகளில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுவித்துக்கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்டபோது அவர்கள் “சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்) என்று கூறிக்கொண்டி ருந்தார்கள்.

அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுவித்தார்கள். மக்கள் (தொழுது முடித்து) திரும்பியபோது உமர் (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் அவர்களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள்” என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, “முஃகீராவின் அடிமைதான் (உங்களைக் குத்தியவன்)” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “அந்தத் திறமையான தொழிற் கலைஞனா?” என்று கேட்டார்கள். “ஆம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

“ அவனை அல்லாஹ் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத்தானே நான் உத்தரவிட்டேன்! (ஆனால், என்னையே அவன் கொன்றுவிட்டானே!) தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரது கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்துவிடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபியர் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபியர் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக்கூடியவர்களாக இருந்தீர்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர்களிடையே அப்பாஸ் (ரலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி), “நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபியரல்லாத தொழிற் கலைஞர்கள் அனைவரையும்) கொன்றுவிடுகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் (சொல்வது தவறு. உங்களது மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களது கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே “ஹஜ்' செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப் போகிறீர்கள்?)”என்று கேட்டார்கள்.

பிறகு (குற்றுயிராயிருந்த) உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராததைப் போன்று மக்கள் (கடுந்துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், “அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது” என்கிறார். மற்றொருவர், “அவருக்கு (மரணம் சம்பவித்துவிடும் என்று) நான் அஞ்சுகிறேன்” என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டுவரப்பட்டது. அதை உமர் (ரலி) அவர்கள் அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகுபடுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறிவிட்டது.

அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்துகொண்டனர். அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப்) பதவியேற்று (குடிமக்களிடையே) நீதியாக நடந்துகொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்யவிருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்” என்று கூறினார்.

(இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் “இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்குச்) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரது கீழங்கி பூமியைத் தொட்டுக்கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்தபோது), “எனது சகோதரரின் மகனே! உமது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டுவீராக! இது உமது ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உம்முடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள்.

(பிறகு தம் மகனை நோக்கி), “உமரின் மகன் அப்துல்லாஹ்வே! என்மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம்/தீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்துவிடு. அவ்வாறு போதுமானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத்தாரான) அதீ பின் கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்)கொள். அவர்களது செல்வமும் போதுமானதாக இல்லாவிட்டால் (நமது குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்)கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய)பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்துவிடு!.

(பிறகு) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீ சென்று, “உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று கூறு. “இறைநம்பிக்கையாளர் களின் தலைவர்' (அமீருல் முஃமினீன்) என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) இறைநம்பிக்கையாளர்களுக்கு (ஆட்சித்) தலைவன் அல்லன். மேலும், (அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்) “உமர் தம்முடைய இரு தோழர்கள் (நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களது அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்' என்று சொல்” எனக் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட செய்தி யறிந்து) அழுதுகொண்டு அமர்ந் திருப்பதைக் கண்டார். அப்போது, அவர் அவர்களைப் பார்த்து, “(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) தங்களுக்கு சலாம் கூறுகிறார். தம்முடைய இரு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்” என்று கூறினார்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னைவிட அவருக்கே முதலிடம் கொடுத்துவிட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக்கொள்ளுங்கள்)” என்று கூறினார்கள்.

பிறகு அவர் (உமர் (ரலி) அவர்களிடம்) திரும்பி வந்தபோது, “இதோ, உமர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர் (ரலி) அவர்கள், “என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்” என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தம்மோடு அவர்களை அணைத்துக்கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் மகனை நோக்கி), “உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?” என்று கேட்டார்கள். “நீங்கள் விரும்பியதுதான், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா (ரலி) அவர்கள்) அனுமதித்துவிட்டார்கள்” என்று அப்துல்லாஹ் கூறினார்கள்.

(அப்போது) “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்குக் கவலையளித்துக்கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டுசெல்லுங்கள்.

பிறகு ஆயிஷா அவர்களுக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடத்தில்) உமர் பின் அல் கத்தாப் (ரலி) (தம்முடைய இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில்) அனுமதி கேட்கிறார்' என்று (மீண்டும் ஒருமுறை) சொல். அவர்கள் அனுமதித்தால், என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (அடக்கத்தலங்கள் அமைந்திருக்கும் பொது) அடக்கத்தலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.

(உமர் (ரலி) அவர்கள் இருந்த அந்த இடத்திற்கு அவர்களின் மகள்) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் பல பெண்களும் வந்தனர். அவர்களை நாங்கள் கண்டபோது எழுந்துவிட்டோம். உமர் (ரலி) அவர்களிடத்தில் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்து, சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்கள் (சிலர்) உமர் (ரலி) அவர்களிடத்தில் வர அனுமதி கோரினர். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உடனே அவர்களுக்குள்ள நுழைவிடம் ஒன்றில் நுழைந்துகொண்டார்கள். உள்ளேயிருந்து அவர்கள் அழுகின்ற சப்தத்தை அப்போது நாங்கள் கேட்டோம்.

(அங்கிருந்த ஆண்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி), “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி விருப்பம் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர்தான் -அல்லது அந்தக் குழுவினர்தான்- இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரைவிடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்” என்று கூறிவிட்டு, அலீ (ரலி), உஸ்மான் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), தல்ஹா (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகி யோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள்.

மேலும் உமர் (ரலி) அவர்கள், “உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமில்லை - இதை மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆறுதல் போலக் கூறினார்கள்.- தலைமைப் பதவி சஅத் (ரலி) அவர்களுக்குக் கிடைத்தால் அதற்கு அவர் அருகதையானவர்தான். அவ்வாறு அவருக்குக் கிடைக்கவில்லை யாயின், உங்களில் எவர் ஆட்சித் தலைவராக ஆக்கப்படுகிறாரோ அவர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் (ஆலோசனை) உதவி பெற்றுக்கொள்ளட் டும். ஏனெனில், நான் சஅத் (ரலி) அவர் களை, அவர் இயலாதவர் என்பதாலோ அல்லது மோசடி செய்துவிட்டார் என்பதாலோ (கூஃபா நகரின் ஆளுநர் பதவியிலிருந்து) பதவி நீக்கம் செய்யவில்லை.

மேலும், “(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் (வரவிருக்கும்) ஆட்சித் தலைவருக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன்.

மேலும், (நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்கள் ஆகிய) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தமது இருப்பிடமாகக் கொண்டு, இறைநம்பிக்கையை (உறுதியாக)ப் பற்றிக்கொண்ட அன்சாரிகளுக்கு நன்மையை(ப் புரியும்படி)யும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரது நன்மை) ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்பட வேண்டும்.

(இதே போல) நகர்ப்புற மக்களுக்கும் நன்மையை(ச் செய்யும்படி)யும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணை ஆவர்; நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை (தங்களது வீரத்தாலும் பெரும் எண்ணிக்கையாலும்) ஆத்திரமடையச் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் (தேவை களுக்குப் போக) எஞ்சியதை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். அதையும் அவர் களின் சம்மதத்துடன்தான் எடுக்க வேண்டும்.

மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்வீக அரபியரும், இஸ்லாத் தின் அடிப்படையும் ஆவார்கள். அவர் களுடைய செல்வத்தில் மலிவானவை மட்டுமே பெறப்பட்டு அவர்களிடையே யுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களுடைய எதிரிகள் அவர்களைத் தாக்க வரும்போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும்போது) அவர்களது சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற் குள்ளாக்கப்படக் கூடாது எனவும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.66

(கத்திக்குத்துக்கு உள்ளாகி மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு அவர்களைத் தூக்கிக்கொண்டு (அவர்களது இல்லத்திலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். (ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கு) வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு) சலாம் சொன்னார்கள். பிறகு, “(உங்களுக்குரிய அறையில் தம் இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் (உங்களிடம்) அனுமதி கோருகிறார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அவர்களை உள்ளே கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் (உடைய உடல்) உள்ளே கொண்டுசெல்லப்பட்டு அந்த இடத்தில் அவர்களுடைய இரு தோழர்களுக்கு அருகில் வைக்கப்பட்டது.

அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறுபேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களது உரிமையை உங்களில் மூன்று பேரிடம் ஒப்படையுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை அலீ (ரலி) அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு தல்ஹா (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை நான் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை நான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களையும் உஸ்மான் (ரலி) அவர்களையும் நோக்கி), “உங்கள் இருவரில் யார் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக்கொள்(ள முன்வரு)கிறாரோ அவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும் இஸ்லாமும் அவர்மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது இரு மூத்தவர்(களான உஸ்மான் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்)களும் மௌனமாக இருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லையென்பதை அல்லாஹ் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறான்” என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் “ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)” என்றனர்.

அப்போது அவ்விருவரில் ஒருவருடைய (அலீ (ரலி) அவர்களுடைய) கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பிடித்துக்கொண்டு “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டே யிருக்கின்றான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்துகொள்வீர்கள். உஸ்மான் (ரலி) அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு இன்னொருவரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) தனியே வந்து அலீ (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) கூறினார்கள். (இரு மூத்தவர்களிடமும்) வாக்குறுதி வாங்கியபின், “உஸ்மான் அவர்களே! தங்களது கையைத் தாருங்கள்” என்று கூறி (உஸ்மான் (ரலி) அவர்களது கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்துகொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனாவாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்துகொடுத்தார்கள்.

அத்தியாயம் : 62
3701. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلاً يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ "" قَالَ فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا فَلَمَّا أَصْبَحَ النَّاسُ، غَدَوْا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَاهَا فَقَالَ "" أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ "". فَقَالُوا يَشْتَكِي عَيْنَيْهِ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَأَرْسِلُوا إِلَيْهِ فَأْتُونِي بِهِ "". فَلَمَّا جَاءَ بَصَقَ فِي عَيْنَيْهِ، وَدَعَا لَهُ، فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ الرَّايَةَ. فَقَالَ عَلِيٌّ يَا رَسُولَ اللَّهِ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ "" انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللَّهِ فِيهِ، فَوَاللَّهِ لأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ "".
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3701. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரின்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் அளிக்கப்போகிறேன். அவருடைய கரங்களில் அல்லாஹ் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னார்கள். ஆகவே, மக்கள் தம்மில் யாரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கி யிருந்தனர்.

காலையில் மக்களில் ஒவ்வொருவரும் தம்மிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், “அலீ பின் அபீதாலிப் எங்கே?” என்று கேட்டார்கள். மக்கள், “அவருக்குக் கண்வலி அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்குமுன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந் தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களின் களத்தில் இறங்கும்வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமையாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நல்வழியை அளிப்பது (அரபியரின் அருஞ்செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை)விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.70


அத்தியாயம் : 62
3702. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كَانَ عَلِيٌّ قَدْ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَيْبَرَ وَكَانَ بِهِ رَمَدٌ فَقَالَ أَنَا أَتَخَلَّفُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجَ عَلِيٌّ فَلَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمَّا كَانَ مَسَاءُ اللَّيْلَةِ الَّتِي فَتَحَهَا اللَّهُ فِي صَبَاحِهَا، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لأُعْطِيَنَّ الرَّايَةَ ـ أَوْ لَيَأْخُذَنَّ الرَّايَةَ ـ غَدًا رَجُلاً يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ ـ أَوْ قَالَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ـ يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ "". فَإِذَا نَحْنُ بِعَلِيٍّ وَمَا نَرْجُوهُ، فَقَالُوا هَذَا عَلِيٌّ. فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3702. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் புறப்பட்டு (வந்து) நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றி கொள்ளச் செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற- அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற- ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப்போகிறேன்- அல்லது அத்தகைய ஒரு மனிதர் இக்கொடியைப் பிடித்திருப்பார்- என்று சொல்லிவிட்டு, “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள்.

நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், “இதோ, அலீ அவர்கள்!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.71


அத்தியாயம் : 62
3703. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى سَهْلِ بْنِ سَعْدٍ فَقَالَ هَذَا فُلاَنٌ ـ لأَمِيرِ الْمَدِينَةِ ـ يَدْعُو عَلِيًّا عِنْدَ الْمِنْبَرِ. قَالَ فَيَقُولُ مَاذَا قَالَ يَقُولُ لَهُ أَبُو تُرَابٍ. فَضَحِكَ قَالَ وَاللَّهِ مَا سَمَّاهُ إِلاَّ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَمَا كَانَ لَهُ اسْمٌ أَحَبَّ إِلَيْهِ مِنْهُ. فَاسْتَطْعَمْتُ الْحَدِيثَ سَهْلاً، وَقُلْتُ يَا أَبَا عَبَّاسٍ كَيْفَ قَالَ دَخَلَ عَلِيٌّ عَلَى فَاطِمَةَ ثُمَّ خَرَجَ فَاضْطَجَعَ فِي الْمَسْجِدِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيْنَ ابْنُ عَمِّكِ "". قَالَتْ فِي الْمَسْجِدِ. فَخَرَجَ إِلَيْهِ فَوَجَدَ رِدَاءَهُ قَدْ سَقَطَ عَنْ ظَهْرِهِ، وَخَلَصَ التُّرَابُ إِلَى ظَهْرِهِ، فَجَعَلَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ فَيَقُولُ "" اجْلِسْ يَا أَبَا تُرَابٍ "". مَرَّتَيْنِ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3703. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் சஹ்ல் பின் சஅத் (ரó) அவர்களிடம் வந்து, “இன்னவர் - அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் பின் அல்ஹகம்) அலீ (ரலி) அவர்களைச் சொற்பொழிவு மேடைக்கருகில் (விரும்பத் தகாத பெயரால்) அழைக்கிறார்” என்று சொன்னார். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், “அவர் (அப்படி) என்ன சொன்னார்?” என்று கேட்க அம்மனிதர், “அபூதுராப் (மண்ணின் தந்தை) என்று அழைக்கிறார்” என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டு சஹ்ல் (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள்தான் அலீ (ரலி) அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கு அதைவிடப் பிரியமான ஒரு பெயர் எதுவும் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லும்படி நான் சஹ்ல் (ரலி) அவர்களிடம் கேட்டுக்கொண்டு, “அபுல் அப்பாஸ் (சஹ்ல் பின் சஅத்) அவர்களே! அது எப்படி?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்னார்கள்: (ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். பிறகு (அலீ - ஃபாத்திமா இடையே மனஸ்தாபம் ஏற்படவே) வெளியே வந்து பள்ளிவாசலில் படுத்துக்கொண்டார்கள். (அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்த) நபி (ஸல்) அவர்கள், உன் (தந்தையுடைய) பெரிய தந்தை மகன் (அலீ) எங்கே” என்று கேட்க அவர்கள், “பள்ளிவாசலில் இருக்கிறார்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களின் மேல்துண்டு அவர்களுடைய முதுகிலிருந்து (தரையில்) விழுந்துவிட்டிருப்பதையும் (தரையிலுள்ள) மண் அவர்களுடைய முதுகில் ஒட்டிக்கொண்டிருப்பதையும் கண்டு அவர்களுடைய முதுகிலிருந்து மண்ணைத் துடைக்கலானார்கள். அப்போது, “(எழுந்து) அமருங்கள், அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே!” என்று (நபி (ஸல்) அவர்கள்) இருமுறை சொன்னார்கள்.72


அத்தியாயம் : 62
3704. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ، فَسَأَلَهُ عَنْ عُثْمَانَ،، فَذَكَرَ عَنْ مَحَاسِنِ، عَمَلِهِ، قَالَ لَعَلَّ ذَاكَ يَسُوؤُكَ. قَالَ نَعَمْ. قَالَ فَأَرْغَمَ اللَّهُ بِأَنْفِكَ. ثُمَّ سَأَلَهُ عَنْ عَلِيٍّ، فَذَكَرَ مَحَاسِنَ عَمَلِهِ قَالَ هُوَ ذَاكَ، بَيْتُهُ أَوْسَطُ بُيُوتِ النَّبِيِّ صلى الله عليه وسلم. ثُمَّ قَالَ لَعَلَّ ذَاكَ يَسُوؤُكَ. قَالَ أَجَلْ. قَالَ فَأَرْغَمَ اللَّهُ بِأَنْفِكَ، انْطَلِقْ فَاجْهَدْ عَلَىَّ جَهْدَكَ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3704. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் நற்செயல்களை எடுத்துரைத்தார்கள். (பிறகு) அந்த மனிதரிடம், “நான் சொன்னவை உமக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று சொன்னார்கள். (ஏனெனில் அந்த மனிதர் குறை காணும் நோக்கத்துடன் வந்திருந்தார்.) அதற்கு அந்த மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண்படியச் செய்யட்டும்” என்று சொன்னார்கள்.

பிறகு அந்த மனிதர் அலீ (ரலி) அவர்களைப் பற்றிக் கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் நற்செயல்களைத் எடுத்துரைத்துவிட்டு, “அவர்கள் அவ்வாறுதான்; அவர்களது இல்லம் நபி (ஸல்) அவர்களுடைய (குடும்பத்தாரின்) வீடுகளுக்கு நடுவில் இருந்தது” என்று கூறினார்கள்.

பிறகு, “நான் சொன்னது உமக்கு எரிச்சலூட்டியிருக்குமே!” என்று கேட்டார் கள். அதற்கு அம்மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண்படியச் செய்யட்டும். போ! போய் (நான் இப்படி உண்மையைச் சொன்னதற்காக என்னை நீ தண்டிக்க விரும்பினால்) எனக்கெதிராக உன்னால் ஆனதைச் செய்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 62
3705. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، قَالَ حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ، عَلَيْهَا السَّلاَمُ شَكَتْ مَا تَلْقَى مِنْ أَثَرِ الرَّحَا، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم سَبْىٌ، فَانْطَلَقَتْ فَلَمْ تَجِدْهُ، فَوَجَدَتْ عَائِشَةَ، فَأَخْبَرَتْهَا، فَلَمَّا جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ عَائِشَةُ بِمَجِيءِ فَاطِمَةَ، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْنَا، وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْتُ لأَقُومَ فَقَالَ "" عَلَى مَكَانِكُمَا "". فَقَعَدَ بَيْنَنَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي وَقَالَ "" أَلاَ أُعَلِّمُكُمَا خَيْرًا مِمَّا سَأَلْتُمَانِي إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا تُكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، وَتُسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتَحْمَدَا ثَلاَثَةً وَثَلاَثِينَ، فَهْوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ "".
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3705. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டுவரப்பட்டனர். அப்போது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை; ஆயிஷா (ரலி) அவர்களைத்தான் அங்கே கண்டார். ஆகவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்துகொண்டார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களுடைய கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன்.

பிறகு, “நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி)தனைவிடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத்தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை “அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.73


அத்தியாயம் : 62
3706. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَلِيٍّ "" أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى "".
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3706. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “(நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர்-நபி) மூசா அவர்களிடம் எந்த இடம் இருந்ததோ அதே இடத்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.74


அத்தியாயம் : 62
3707. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ اقْضُوا كَمَا كُنْتُمْ تَقْضُونَ، فَإِنِّي أَكْرَهُ الاِخْتِلاَفَ حَتَّى يَكُونَ لِلنَّاسِ جَمَاعَةٌ، أَوْ أَمُوتَ كَمَا مَاتَ أَصْحَابِي. فَكَانَ ابْنُ سِيرِينَ يَرَى أَنَّ عَامَّةَ مَا يُرْوَى عَلَى عَلِيٍّ الْكَذِبُ.
பாடம் : 9 அபுல்ஹசன் அலீ பின் அபீதாலிப் அல்குறஷீ அல்ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்புகள்67 நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று சொன்னார்கள்.68 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைக் குறித்து திருப்தி யுடனிருந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.69
3707. அபீதா பின் அம்ர் அஸ்ஸல் மானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் (இராக் வந்திருந்தபோது இராக் அறிஞர்களிடம் “உம்முல் வலதை' விற்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க, அதை நான் விரும்பாதபோது), பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் முன்பு (உமர் (ரலி) அவர் களின் கருத்துப்படி உம்முல் வலதை விற்கக் கூடாது என்று) தீர்ப்பளித்துவந்ததைப் போன்றே இனிமேலும் தீர்ப்பளித்துவாருங்கள். ஏனெனில், (மக்களிடையே சச்சரவுகளுக்குக் காரணமாய் அமையும் வகையில் அறிஞர்களுக்கிடையிலான) கருத்து வேறுபாடுகளை (பகிரங்கமாக்குவதை) நான் விரும்பவில்லை.75

மக்கள் அனைவரும் (ஒத்த கருத்துடைய) ஒரே குழுவினராய் ஆகும்வரை, அல்லது என் தோழர்கள் இறந்துவிட்டதைப் போல் நானும் இறந்துவிடும்வரை நான் இவ்வாறே (கருத்து வேறுபாடுகளைப் பகிரங்கப்படுத்த விரும்பாதவனாக) இருப்பேன்.

“அலீ (ரலி) அவர்களிடமிருந்து (வந்த தாக ஷியாக்கள் மூலம்) அறிவிக்கப்படு கின்றவற்றில் பெரும்பாலானவை பொய்கள்தான்” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.76

அத்தியாயம் : 62
3708. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دِينَارٍ أَبُو عَبْدِ اللَّهِ الْجُهَنِيُّ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ. وَإِنِّي كُنْتُ أَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِشِبَعِ بَطْنِي، حَتَّى لاَ آكُلُ الْخَمِيرَ، وَلاَ أَلْبَسُ الْحَبِيرَ، وَلاَ يَخْدُمُنِي فُلاَنٌ وَلاَ فُلاَنَةُ، وَكُنْتُ أُلْصِقُ بَطْنِي بِالْحَصْبَاءِ مِنَ الْجُوعِ، وَإِنْ كُنْتُ لأَسْتَقْرِئُ الرَّجُلَ الآيَةَ هِيَ مَعِي كَىْ يَنْقَلِبَ بِي فَيُطْعِمَنِي، وَكَانَ أَخْيَرَ النَّاسِ لِلْمِسْكِينِ جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ، كَانَ يَنْقَلِبُ بِنَا فَيُطْعِمُنَا مَا كَانَ فِي بَيْتِهِ، حَتَّى إِنْ كَانَ لَيُخْرِجُ إِلَيْنَا الْعُكَّةَ الَّتِي لَيْسَ فِيهَا شَىْءٌ، فَنَشُقُّهَا فَنَلْعَقُ مَا فِيهَا.
பாடம் : 10 ஜஅஃபர் பின் அபீதாலிப் அல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்பு கள்77 இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என் குணத்திலும் என் தோற்றத்திலும் (என்னை) ஒத்திருக் கிறீர்கள்” என்று சொன்னார்கள்.78
3708. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபிமொழிகளை) அதிகமாக அபூஹுரைரா அறிவிக்கிறாரே” என்று மக்கள் (என்னைப் பற்றிக் குறை) கூறிக் கொண்டிருந்தார்கள். நான் என் பசி அடங்கினால் போதும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; கோடுபோட்ட அழகிய (உயர்ந்த) துணியை நான் அணிவதுமில்லை. இன்னின்னவர் எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன்.

என்னை ஒரு மனிதர் (தமது இல்லத் திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு அவர் உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (“எனக்கு விருந்தளி யுங்கள்' என்ற பொருள் கொண்ட “அக்ரினீ' என்னும் சொல்லை சற்று மாற்றி)” அக்ரிஃனீ' (எனக்கு ஓர் இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்) என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும்.79

—அஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏழைகளுக்கு மிகவும் உதவி செய்பவர்களாயிருந்தார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவுக்கென்றால் அவர் எதுவுமில்லாத (காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டுவந்து அதைப் பிளந்துவிடுவார். நாங்கள் அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நக்கி உண்போம்.


அத்தியாயம் : 62
3709. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ إِذَا سَلَّمَ عَلَى ابْنِ جَعْفَرٍ قَالَ السَّلاَمُ عَلَيْكَ يَا ابْنَ ذِي الْجَنَاحَيْنِ.
பாடம் : 10 ஜஅஃபர் பின் அபீதாலிப் அல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் சிறப்பு கள்77 இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என் குணத்திலும் என் தோற்றத்திலும் (என்னை) ஒத்திருக் கிறீர்கள்” என்று சொன்னார்கள்.78
3709. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் பின் ஜஅஃப)ருக்கு சலாம் சொன்னால், “இரு சிறகுகள் உடைய வரின் மகனே! உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்' என்று சொல்வார்கள்.80

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: “இரு சிறகுகள்' என்பது “இரு பக்க (பல)ங் களைக்' குறிக்கும்.

அத்தியாயம் : 62
3710. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا صلى الله عليه وسلم فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا. قَالَ فَيُسْقَوْنَ.
பாடம் : 11 அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு81
3710. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களை (அல்லாஹ் விடம்) மழைகோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள்.

(அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர் (ரலி) அவர்கள், “இறைவா! நாங்கள் எங்கள் நபி (ஸல்) அவர்கள் (உயிருடன் இருந்தபோது அவர்கள் உன்னிடம் பிரார்த்தித்ததன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழியச் செய்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ் (ரலி) அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக!” என்று கேட்பார்கள்.

அதன்படியே மக்களுக்கு மழை பொழிந்துவந்தது.82

அத்தியாயம் : 62
3711. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ. فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا فَهْوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ـ يَعْنِي مَالَ اللَّهِ ـ لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى الْمَأْكَلِ ". وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَلأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَتَشَهَّدَ عَلِيٌّ، ثُمَّ قَالَ إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ. وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَحَقَّهُمْ. فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3711. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த “ஃபய்உ' செல்வத்திலிருந்து தமக்கு நபி (ஸல்) அவர்களிடமிருந்து வர வேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆளனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற நிலத்தையும் “ஃபதக்' பிரதேசத்திலிருந்த நிலத்தையும் கைபரில் கிடைத்த “குமுஸ்' நிதியில் மீதியையும் அவர் கேட்டார்.86


அத்தியாயம் : 62
3712. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ. فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا فَهْوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ـ يَعْنِي مَالَ اللَّهِ ـ لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى الْمَأْكَلِ ". وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَلأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَتَشَهَّدَ عَلِيٌّ، ثُمَّ قَالَ إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ. وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَحَقَّهُمْ. فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3712. அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மம்தான்' என்று சொன்னார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இந்தச் செல்வத்திலிருந்துதான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்துதான். அதில் தங்கள் உணவுச் செலவைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் தர்மப் பொருட்கள், நபியவர்களின் காலத்தில் எந்த வழிமுறைப்படி கையாளப்பட்டு வந்தனவோ அதில் சிறிதையும் நான் மாற்றமாட்டேன். அவற்றின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அவ்வாறே நான் நடந்துகொள்வேன்” என்று சொன்னார்கள்.

உடனே, அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, “அபூபக்ர் அவர்களே! உங்கள் சிறப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். -மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தமக்கிருக்கும் உறவையும் அவர்களுடைய உரிமையையும் எடுத்துரைத்தார்கள்- உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தாம் பங்கு தர மறுப்பதற்குக் காரணம் கூறும் விதத்தில்) பேசினார்கள்.

“என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! என் உறவினர் களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்துகொள்வதைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.87


அத்தியாயம் : 62
3713. أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهم ـ قَالَ ارْقُبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فِي أَهْلِ بَيْتِهِ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3713. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3714. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي، فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي "".
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3714. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார்.

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.88


அத்தியாயம் : 62
3715. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاطِمَةَ ابْنَتَهُ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهَا، فَسَارَّهَا بِشَىْءٍ فَبَكَتْ، ثُمَّ دَعَاهَا فَسَارَّهَا فَضَحِكَتْ، قَالَتْ فَسَأَلْتُهَا عَنْ ذَلِكَ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3715. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார் கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஃபாத்திமாவை நபி (ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார்.

நான் அதைப் பற்றி (நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன்.89


அத்தியாயம் : 62