3669. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ عَنِ الزُّبَيْدِيِّ، قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ أَخْبَرَنِي الْقَاسِمُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ شَخَصَ بَصَرُ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " فِي الرَّفِيقِ الأَعْلَى ". ثَلاَثًا، وَقَصَّ الْحَدِيثَ، قَالَتْ فَمَا كَانَتْ مِنْ خُطْبَتِهِمَا مِنْ خُطْبَةٍ إِلاَّ نَفَعَ اللَّهُ بِهَا، لَقَدْ خَوَّفَ عُمَرُ النَّاسَ وَإِنَّ فِيهِمْ لَنِفَاقًا، فَرَدَّهُمُ اللَّهُ بِذَلِكَ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3669. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் பார்வை (அவர்களின் மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள், “மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)” என்று (மூன்றுமுறை) சொன்னார்கள்.28
தொடர்ந்து அறிவிப்பாளர் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு சம்பவம் தொடர்பான) இந்த ஹதீஸை முழுமை யாக எடுத்துரைத்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அபூபக்ர், உமர் (ரலி) ஆகிய) அவ்விருவரின் உரைகளில் எந்தவோர் உரையைக் கொண்டும் அல்லாஹ் நன்மை புரியாமல் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள், (தவறாக நடந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று) மக்களை எச்சரித்தார்கள். ஏனெனில், மக்களிடேயே நயவஞ்சக குணமுடைய வர்களும் (அப்போது) இருந்தனர். (உமர் (ரலி) அவர்களின்) அந்த (அச்சமூட்டும்) உரையின் வாயிலாக அல்லாஹ் அ(ந்த நயவஞ்சக குணமுடைய)வர்களை (சத்தியத்தின் பக்கம்) திருப்பினான்.29
அத்தியாயம் : 62

3670. ثُمَّ لَقَدْ بَصَّرَ أَبُو بَكْرٍ النَّاسَ الْهُدَى وَعَرَّفَهُمُ الْحَقَّ الَّذِي عَلَيْهِمْ وَخَرَجُوا بِهِ يَتْلُونَ {وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ} إِلَى {الشَّاكِرِينَ}
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3670. அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு நல்வழியைக் காண்பித்தார்கள் அவர்களது உரையின் காரணத்தால், “முஹம்மத் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னரும்கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுவிடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) யார் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றியாளர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்” (3:144) எனும் வசனத்தை ஓதியபடி மக்கள் வெளியே சென்றார்கள்.

3671. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَامِعُ بْنُ أَبِي رَاشِدٍ، حَدَّثَنَا أَبُو يَعْلَى، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ قُلْتُ لأَبِي أَىُّ النَّاسِ خَيْرٌ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو بَكْرٍ. قُلْتُ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ عُمَرُ. وَخَشِيتُ أَنْ يَقُولَ عُثْمَانُ قُلْتُ ثُمَّ أَنْتَ قَالَ مَا أَنَا إِلاَّ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3671. முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:30
நான் என் தந்தை (அலீ (ரலி) அவர்கள்) இடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபூபக்ர் (ரலி) அவர்கள்” எனப் பதிலளித்தார்கள். நான், “(அவர்களுக்குப்) பிறகு யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு உமர் (ரலி) அவர்கள்(தான் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.
“பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான் (ரலி) அவர்கள்தான்” என்று (என் தந்தை) சொல்லிவிடுவார்களோ என நான் அஞ்சியவனாக, “பிறகு (மக்களில் சிறந்த வர்) நீங்கள்தானே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவுதான்” என்று பதிலளித்தார்கள்.

3672. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْتِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَأَتَى النَّاسُ أَبَا بَكْرٍ، فَقَالُوا أَلاَ تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِالنَّاسِ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ قَالَتْ فَعَاتَبَنِي، وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى فَخِذِي، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ، فَتَيَمَّمُوا، فَقَالَ أُسَيْدُ بْنُ الْحُضَيْرِ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. فَقَالَتْ عَائِشَةُ فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3672. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம்.31 நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' எனுமிடத்தை -அல்லது “தாத்துல் ஜைஷ்' எனுமிடத்தை- அடைந்தபோது, எனது கழுத்து மாலை ஒன்று (எங்கோ) அவிழ்ந்து விழுந்துவிட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். மக்களும் அவர்களுடன் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. எனவே, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “(உங்கள் மகள்) ஆயிஷா என்ன செய்தார் என்று நீங்கள் கவனிக்கமாட்டீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் தலை வைத்துத் தூங்கி விட்டிருந்த நிலையில் வருகை தந்தார்கள். “நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை. மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னைத் தமது கரத்தால் என் இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் படுத்துக்கொண்டிருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டி ருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கி, அதிகாலையில் விழித்தெழுந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது, அல்லாஹ் “தயம்மும்' உடைய (4:43) வசனத்தை அருளினான்.
(இது குறித்து) உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள் “அபூபக்ரின் குடும்பத்தாரே! (“தயம்மும்' என்ற சலுகையான) இது, உங்களால் (சமுதாயத்திற்குக் கிடைத்த) முதல் வளம் (பரக்கத்) அல்ல. (இதற்கு முன்பும் பல நன்மைகள் உங்கள் மூலம் கிடைத்துள்ளன)” என்று சொன்னார்கள். பிறகு, நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தை (அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து) நாங்கள் எழுப்பியபோது, அதற்குக் கீழே (நான் தொலைத்துவிட்ட) கழுத்து மாலையை நாங்கள் கண்டோம்.32

3673. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ "". تَابَعَهُ جَرِيرٌ وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3673. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது.33
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3674. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ أَبُو الْحَسَنِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ أَخْبَرَنِي أَبُو مُوسَى الأَشْعَرِيُّ، أَنَّهُ تَوَضَّأَ فِي بَيْتِهِ ثُمَّ خَرَجَ، فَقُلْتُ لأَلْزَمَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَلأَكُونَنَّ مَعَهُ يَوْمِي هَذَا. قَالَ فَجَاءَ الْمَسْجِدَ، فَسَأَلَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا خَرَجَ وَوَجَّهَ هَا هُنَا، فَخَرَجْتُ عَلَى إِثْرِهِ أَسْأَلُ عَنْهُ، حَتَّى دَخَلَ بِئْرَ أَرِيسٍ، فَجَلَسْتُ عِنْدَ الْبَابِ، وَبَابُهَا مِنْ جَرِيدٍ حَتَّى قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَاجَتَهُ، فَتَوَضَّأَ فَقُمْتُ إِلَيْهِ، فَإِذَا هُوَ جَالِسٌ عَلَى بِئْرِ أَرِيسٍ، وَتَوَسَّطَ قُفَّهَا، وَكَشَفَ عَنْ سَاقَيْهِ وَدَلاَّهُمَا فِي الْبِئْرِ، فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ انْصَرَفْتُ، فَجَلَسْتُ عِنْدَ الْبَابِ، فَقُلْتُ لأَكُونَنَّ بَوَّابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْيَوْمَ، فَجَاءَ أَبُو بَكْرٍ فَدَفَعَ الْبَابَ. فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ. فَقُلْتُ عَلَى رِسْلِكَ. ثُمَّ ذَهَبْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ. فَقَالَ "" ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَأَقْبَلْتُ حَتَّى قُلْتُ لأَبِي بَكْرٍ ادْخُلْ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُبَشِّرُكَ بِالْجَنَّةِ. فَدَخَلَ أَبُو بَكْرٍ فَجَلَسَ عَنْ يَمِينِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَعَهُ فِي الْقُفِّ، وَدَلَّى رِجْلَيْهِ فِي الْبِئْرِ، كَمَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَكَشَفَ عَنْ سَاقَيْهِ، ثُمَّ رَجَعْتُ فَجَلَسْتُ وَقَدْ تَرَكْتُ أَخِي يَتَوَضَّأُ وَيَلْحَقُنِي، فَقُلْتُ إِنْ يُرِدِ اللَّهُ بِفُلاَنٍ خَيْرًا ـ يُرِيدُ أَخَاهُ ـ يَأْتِ بِهِ. فَإِذَا إِنْسَانٌ يُحَرِّكُ الْبَابَ. فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ. فَقُلْتُ عَلَى رِسْلِكَ. ثُمَّ جِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقُلْتُ هَذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَسْتَأْذِنُ. فَقَالَ "" ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَجِئْتُ فَقُلْتُ ادْخُلْ وَبَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْجَنَّةِ. فَدَخَلَ، فَجَلَسَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْقُفِّ عَنْ يَسَارِهِ، وَدَلَّى رِجْلَيْهِ فِي الْبِئْرِ، ثُمَّ رَجَعْتُ فَجَلَسْتُ، فَقُلْتُ إِنْ يُرِدِ اللَّهُ بِفُلاَنٍ خَيْرًا يَأْتِ بِهِ. فَجَاءَ إِنْسَانٌ يُحَرِّكُ الْبَابَ، فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ عُثْمَانُ بْنُ عَفَّانَ. فَقُلْتُ عَلَى رِسْلِكَ. فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ. فَقَالَ "" ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تُصِيبُهُ "" فَجِئْتُهُ فَقُلْتُ لَهُ ادْخُلْ وَبَشَّرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تُصِيبُكَ. فَدَخَلَ فَوَجَدَ الْقُفَّ قَدْ مُلِئَ، فَجَلَسَ وُجَاهَهُ مِنَ الشِّقِّ الآخَرِ. قَالَ شَرِيكٌ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ فَأَوَّلْتُهَا قُبُورَهُمْ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3674. அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் வீட்டில் அங்கத் தூய்மை செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே எனது இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன். நான் பள்ளிவாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், “நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்” என்று கூறினர்.
நான் (நபி (ஸல்) அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (இயற்கைக்) கடனை நிறைவேற்றி விட்டு அங்கத் தூய்மை செய்தார்கள்.
உடனே நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்துகொண்டேன். நான் (எனக்குள்), “இன்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வாயிற் காவலனாக இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டேன்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான், “யார் அது?” என்று கேட்டேன். அவர்கள், “(நான்தான்) அபூபக்ர் (வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம், “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள்” என்று சொன்னேன்.
உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச்சுவரில் அமர்ந்துகொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்துக் கொண்டார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்துகொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை அங்கத் தூய்மை செய்துகொண்டு என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டுவிட்டு வந்திருந்தேன். ஆகவே (எனக்குள்), “அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்” என்று சொல்லிக்கொண்டேன்.
- “இன்னார்' என்று அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டுதான்” என்று அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.-
அப்போது ஒரு மனிதர் கதவை அசைத்தார். நான், “யார் அது?” என்று கேட்டேன். வந்தவர், “(நான்தான்) உமர் பின் அல்கத்தாப் (வந்துள்ளேன்)” என்று சொன்னார். நான், “கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, “இதோ, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் சென்று, “உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்” என்று சொன்னேன்.
அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச்சுவரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் அமர்ந்து கொண்டு தம் இரு கால்களையும் கிணற் றுக்குள் தொங்கவிட்டுக்கொண்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்துகொண்டேன். “அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்” என்று (முன் போலவே எனக்குள்) கூறிக்கொண்டேன். அப்போது ஒரு மனிதர் வந்து கதவை ஆட்டினார். நான், “யார் அது?” என்று கேட்டேன். அவர், “(நான்தான்) உஸ்மான் பின் அஃப்பான் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தார். உடனே, “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.34
அவ்வாறே நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று அவரிடம், “உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி சொன்னார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்தபோது) சுற்றுச்சுவர் (ஒரு பக்கம்) நிரம்பிவிட்டிருப்பதைக் கண்டார்கள். ஆகவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்துகொண்டார்கள்.
அறிவிப்பாளர் ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், “நான் (நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் அவர்களுக்கு எதிரே உஸ்மான் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த நிலையும் (தற்போது) அவர்களுடைய கப்றுகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” என்று சொன்னார்கள்.35

3675. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ "" اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ "".
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3675. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகி யோரும் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும் (வாய்மையாளரும்), இரு உயிர்த் தியாகிகளும் (ஷஹீத்களும்) உள்ளனர்” என்று சொன்னார்கள்.36

3676. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا صَخْرٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَيْنَمَا أَنَا عَلَى بِئْرٍ أَنْزِعُ مِنْهَا جَاءَنِي أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَأَخَذَ أَبُو بَكْرٍ الدَّلْوَ، فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ وَفِي نَزْعِهِ ضَعْفٌ، وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ أَخَذَهَا ابْنُ الْخَطَّابِ مِنْ يَدِ أَبِي بَكْرٍ، فَاسْتَحَالَتْ فِي يَدِهِ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَفْرِي فَرِيَّهُ، فَنَزَعَ حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ "". قَالَ وَهْبٌ الْعَطَنُ مَبْرَكُ الإِبِلِ، يَقُولُ حَتَّى رَوِيَتِ الإِبِلُ فَأَنَاخَتْ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3676. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கும்போது என்னிடம் அபூபக்ரும் உமரும் வந்தார்கள். அபூபக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்தபின்) வாளியை எடுத்து ஒரு வாளி நீரை- அல்லது இரு வாளிகள் நீரை- இறைத்தார்கள். அவர் இறைத்த போது (சற்று) சோர்வு தென்பட்டது. அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப் பானாக!
பிறகு அபூபக்ர் அவர்களின் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக்கொள்ள அது அவரது கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடியபுத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு அவர் நீர் இறைத்தார்.37
அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள “அத்தன்' என்னும் சொல், “ஒட்டகம் தாகம் தீர நீரருந்தி, மண்டியிட்டுப் படுத்து ஓய்வெடுக்கும் இடம்' எனப் பொருள்படும்” என்று கூறுகிறார்கள்.

3677. حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي الْحُسَيْنِ الْمَكِّيُّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنِّي لَوَاقِفٌ فِي قَوْمٍ، فَدَعَوُا اللَّهَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَقَدْ وُضِعَ عَلَى سَرِيرِهِ، إِذَا رَجُلٌ مِنْ خَلْفِي قَدْ وَضَعَ مِرْفَقَهُ عَلَى مَنْكِبِي، يَقُولُ رَحِمَكَ اللَّهُ، إِنْ كُنْتُ لأَرْجُو أَنْ يَجْعَلَكَ اللَّهُ مَعَ صَاحِبَيْكَ، لأَنِّي كَثِيرًا مِمَّا كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كُنْتُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَفَعَلْتُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَانْطَلَقْتُ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ. فَإِنْ كُنْتُ لأَرْجُو أَنْ يَجْعَلَكَ اللَّهُ مَعَهُمَا. فَالْتَفَتُّ فَإِذَا هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3677. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சில மக்களிடையே நின்றுகொண்டிருக்க, அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்காக துஆ செய்தார்கள். -அப்போது உமர் (ரலி) அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள்- அப்போது என் பின்னாலிருந்து ஒரு மனிதர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் (ரலி) அவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல் அடக்கம் செய்யப்படும்போது) உங்களை உங்களுடைய இரு தோழர் க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்க)ளுடன் (அவர் களின் மண்ணறைகளுக்கு அருகே) இருக்கச்செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக்கொண்டிருந்தேன்.
ஏனெனில், பெரும்பாலான நேரங் களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். ஆகவே, உங்களை அல்லாஹ் அவ்விரு வருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) இருக்குமாறு செய்திட வேண்டு மென்று நான் விரும்புகிறேன்” என்று சொன்னார்.
நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான்.

3678. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو عَنْ أَشَدِّ، مَا صَنَعَ الْمُشْرِكُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ رَأَيْتُ عُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي، فَوَضَعَ رِدَاءَهُ فِي عُنُقِهِ فَخَنَقَهُ بِهِ خَنْقًا شَدِيدًا، فَجَاءَ أَبُو بَكْرٍ حَتَّى دَفَعَهُ عَنْهُ فَقَالَ أَتَقْتُلُونَ رَجُلاً أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ. وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ.
பாடம் : 5
நான் (அல்லாஹ் அல்லாத ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால்... என்று தொடங்கும் நபிமொழி
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
3678. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?” என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள், “(ஒருமுறை மக்காவில்) உக்பா பின் அபீமுஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தமது கையால்) தள்ளினார்கள். அப்போது, “என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை) கிறீர்கள்? அவரோ தம் இறைவனிட மிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்திருக்கிறார் (40:28)”38 என்று சொன்னார்கள்.

3679. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الْمَاجِشُونُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُنِي دَخَلْتُ الْجَنَّةَ، فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ امْرَأَةِ أَبِي طَلْحَةَ وَسَمِعْتُ خَشَفَةً، فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ هَذَا بِلاَلٌ. وَرَأَيْتُ قَصْرًا بِفِنَائِهِ جَارِيَةٌ، فَقُلْتُ لِمَنْ هَذَا فَقَالَ لِعُمَرَ. فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ فَأَنْظُرَ إِلَيْهِ، فَذَكَرْتُ غَيْرَتَكَ "". فَقَالَ عُمَرُ بِأُمِّي وَأَبِي يَا رَسُولَ اللَّهِ أَعَلَيْكَ أَغَارُ
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3679. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “நான் (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூதல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.40 அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற் றேன். உடனே, “யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), “இவர் பிலால்' என்று பதிலளித்தார்.
நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், “இது யாருடையது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), “இது உமருடையது' என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள்.

3680. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ قَالَ "" بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ قَالُوا لِعُمَرَ فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا "". فَبَكَى وَقَالَ أَعَلَيْكَ أَغَارُ يَا رَسُولَ اللَّهِ
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), “இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், “உமர் அவர்களுக்குரியது' என்று பதிலளித்தார்.
அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.41

3681. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الصَّلْتِ أَبُو جَعْفَرٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي حَمْزَةُ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا أَنَا نَائِمٌ شَرِبْتُ ـ يَعْنِي اللَّبَنَ ـ حَتَّى أَنْظُرُ إِلَى الرِّيِّ يَجْرِي فِي ظُفُرِي أَوْ فِي أَظْفَارِي، ثُمَّ نَاوَلْتُ عُمَرَ "". فَقَالُوا فَمَا أَوَّلْتَهُ قَالَ "" الْعِلْمَ "".
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3681. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப்) பாலை நான் (தாகம் தீருமளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண்- அல்லது, நகக்கண்கள்- ஊடே (பால்) பொங்கி வருவதைக் கண்டேன். பிறகு (நான் அருந்தியதுபோக இருந்த மிச்சத்தை) உமர் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
மக்கள், “இதற்கு (இந்தப் பாலுக்கு) நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, அதற்கு அவர்கள், “அறிவு' என்று பதிலளித்தார்கள்.42

3682. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ سَالِمٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أُرِيتُ فِي الْمَنَامِ أَنِّي أَنْزِعُ بِدَلْوِ بَكْرَةٍ عَلَى قَلِيبٍ، فَجَاءَ أَبُو بَكْرٍ فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ نَزْعًا ضَعِيفًا، وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَاسْتَحَالَتْ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا يَفْرِي فَرِيَّهُ حَتَّى رَوِيَ النَّاسُ وَضَرَبُوا بِعَطَنٍ "". قَالَ ابْنُ جُبَيْرٍ الْعَبْقَرِيُّ عِتَاقُ الزَّرَابِيِّ. وَقَالَ يَحْيَى الزَّرَابِيُّ الطَّنَافِسُ لَهَا خَمْلٌ رَقِيقٌ {مَبْثُوثَةٌ} كَثِيرَةٌ.
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3682. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி- அல்லது இரு வாளிகள்- தண்ணீரை (சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அவரை அல்லாஹ் மன்னிப்பானாக!
பிறகு உமர் பின் அல்கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப்பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப்போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).43
அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸி(ன் மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள “அப்கரிய்யு' எனும் சொல், “உயர் தரமான விரிப்பு' என (அகராதியில்) பொருள்படும்” என்று கூறுகிறார்கள். மற்றோர் அறிவிப்பாளரான யஹ்யா பின் ஸியாத் (ரஹ்) அவர்கள், “மென்மையான குஞ்சம் வைத்த விரிப்பு' என்று (பொருள்) கூறுகிறார்.
“ஸராபிய்யு மப்ஸƒஸா' (88:16) என்ப தற்கு “விரிக்கப்பட்ட அதிகமான கம்பளங் கள்' என்பது பொருள்.

3683. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ، أَنَّ مُحَمَّدَ بْنَ سَعْدٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قَالَ ح حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَعِنْدَهُ نِسْوَةٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ عَلَى صَوْتِهِ فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الْخَطَّابِ قُمْنَ فَبَادَرْنَ الْحِجَابَ فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَخَلَ عُمَرُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ، فَقَالَ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللاَّتِي كُنَّ عِنْدِي فَلَمَّا سَمِعْنَ صَوْتَكَ ابْتَدَرْنَ الْحِجَابِ "". فَقَالَ عُمَرُ فَأَنْتَ أَحَقُّ أَنْ يَهَبْنَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ قَالَ عُمَرُ يَا عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ، أَتَهَبْنَنِي وَلاَ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَ نَعَمْ، أَنْتَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِيهًا يَا ابْنَ الْخَطَّابِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ سَالِكًا فَجًّا قَطُّ إِلاَّ سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ "".
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3683. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டும் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி கேட்டுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் குரல்கள் நபி (ஸல்) அவர்களின் குரலைவிட உயர்ந்திருந்தன. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டவுடன் அப்பெண்கள் எழுந்து அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். (தம் வீட்டுப் பெண்கள் உமர் அவர்களுக்கு அஞ்சு வதைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார் கள். “அல்லாஹ் உங்களை ஆயுள் முழுவதும் சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) வாழவைப்பானாக! அல்லாஹ்வின் தூதரே!” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண் களைக் குறித்து நான் வியப்படைகிறேன். உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இந்தப் பெண்கள் அஞ்சுவதற்கு நீங்களே மிகவும் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அப்பெண்களை நோக்கி), “தமக்குத்தாமே பகைவர்களாயிருப்பவர் களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட கடுமை காட்டுபவரும் கடின சித்தமுடையவரும் ஆவீர்கள்” என்று பதிலளித்தார்கள்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சரி! விடுங்கள், கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டுவிட்டு வேறொரு தெருவில்தான் செல்வான்” என்று சொன் னார்கள்.44
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3684. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ مَا زِلْنَا أَعِزَّةً مُنْذُ أَسْلَمَ عُمَرُ.
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3684. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.
இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3685. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ وُضِعَ عُمَرُ عَلَى سَرِيرِهِ، فَتَكَنَّفَهُ النَّاسُ يَدْعُونَ وَيُصَلُّونَ قَبْلَ أَنْ يُرْفَعَ، وَأَنَا فِيهِمْ، فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَجُلٌ آخِذٌ مَنْكِبِي، فَإِذَا عَلِيٌّ فَتَرَحَّمَ عَلَى عُمَرَ، وَقَالَ مَا خَلَّفْتَ أَحَدًا أَحَبَّ إِلَىَّ أَنْ أَلْقَى اللَّهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ، وَايْمُ اللَّهِ، إِنْ كُنْتُ لأَظُنُّ أَنْ يَجْعَلَكَ اللَّهُ مَعَ صَاحِبَيْكَ، وَحَسِبْتُ أَنِّي كُنْتُ كَثِيرًا أَسْمَعُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ذَهَبْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ.
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3685. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கலாயினர். அவரது ஜனாஸா (சடலம்) எடுக்கப்படு வதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்தான் என்னை திடுக்கிடச்செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்தபோது) அது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான்.
அவர்கள், “உமர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, “(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்)கள் இருவருடனும்தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில்தான்) இருக்கச்செய்வான் என்று எண்ணியிருந் தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்றும் “நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே சென்றோம்' என்றும் “நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற் றுள்ளேன் என்றார்கள்.45

3686. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَقَالَ، لِي خَلِيفَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، وَكَهْمَسُ بْنُ الْمِنْهَالِ، قَالاَ حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُحُدٍ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ، فَضَرَبَهُ بِرِجْلِهِ، قَالَ "" اثْبُتْ أُحُدُ فَمَا عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدَانِ "".
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3686. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முட னிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது காலால் உதைத்து, “ “உஹுதே! அசையாமல் இரு! உன்மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும்தான் உள்ளனர்” என்று சொன்னார்கள்.46
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3687. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، هُوَ ابْنُ مُحَمَّدٍ أَنَّ زَيْدَ بْنَ أَسْلَمَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، قَالَ سَأَلَنِي ابْنُ عُمَرَ عَنْ بَعْضِ، شَأْنِهِ ـ يَعْنِي عُمَرَ ـ فَأَخْبَرْتُهُ. فَقَالَ، مَا رَأَيْتُ أَحَدًا قَطُّ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ حِينَ قُبِضَ كَانَ أَجَدَّ وَأَجْوَدَ حَتَّى انْتَهَى مِنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ.
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3687. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:47
இப்னு உமர் (ரலி) அவர்கள் என்னிடம் உமர் (ரலி) அவர்களின் பண்புகள் சிலவற்றைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு அவற்றைத் தெரிவித்தேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த நேரத்திலிருந்து உமர் (ரலி) அவர்களைவிட அதிகம் உழைக்கக் கூடியவர்களாகவும் அதிகம் வாரி வழங்குபவர்களாகவும் வேறெவரையும் நான் காணவில்லை. அவர்கள் தமது வாழ்நாளின் இறுதிவரை அவ்வாறே இருந்தார்கள்” என்று கூறினார்கள்.

3688. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ السَّاعَةِ، فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ "" وَمَاذَا أَعْدَدْتَ لَهَا "". قَالَ لاَ شَىْءَ إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم. فَقَالَ "" أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ "". قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَىْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ "". قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ.
பாடம் : 6
அதவீயும் குறைஷிக் குலத்தாரு மான அபூஹஃப்ஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்39
3688. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், “எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர” என்று பதிலளித்தார்.48
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!49