3636. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شِقَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْهَدُوا "".
பாடம் : 27 இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சான்று ஒன்றைக் காட்டும்படி கோரியதன் பேரில் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் பிளவுண்டதை அவர்களுக்குக் காட்டியது
3636. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.


அத்தியாயம் : 61
3637. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً، فَأَرَاهُمُ انْشِقَاقَ الْقَمَرِ.
பாடம் : 27 இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சான்று ஒன்றைக் காட்டும்படி கோரியதன் பேரில் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் பிளவுண்டதை அவர்களுக்குக் காட்டியது
3637. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் (அற்புதச்) சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 61
3638. حَدَّثَنِي خَلَفُ بْنُ خَالِدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ الْقَمَرَ، انْشَقَّ فِي زَمَانِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 27 இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சான்று ஒன்றைக் காட்டும்படி கோரியதன் பேரில் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் பிளவுண்டதை அவர்களுக்குக் காட்டியது
3638. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.154

அத்தியாயம் : 61
3639. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلَيْنِ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ، يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ.
பாடம் : 28
3639. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிச் சென்றன.

அவர்கள் (வழியில்) பிரிந்து சென்ற போது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும்வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.155


அத்தியாயம் : 61
3640. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزَالُ نَاسٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ "".
பாடம் : 28
3640. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) தம்மிடம் வரும்வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப் பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர் களாகவே இருப்பார்கள்.

இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3641. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، قَالَ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ، لاَ يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ وَلاَ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ "". قَالَ عُمَيْرٌ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ قَالَ مُعَاذٌ وَهُمْ بِالشَّأْمِ. فَقَالَ مُعَاوِيَةُ هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّامِ.
பாடம் : 28
3641. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடையூறு செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்.

இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்க, அவர்களிடம் மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், “(அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும்) அவர்கள் ஷாம் தேசத்திலிருப்பார்கள்' என முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த மாலிக், “ஷாம் தேசத்தில் அவர்கள் இருப்பார்கள்' என முஆத் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாகக் கருதுகிறார்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 61
3642. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا شَبِيبُ بْنُ غَرْقَدَةَ، قَالَ سَمِعْتُ الْحَىَّ، يُحَدِّثُونَ عَنْ عُرْوَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ دِينَارًا يَشْتَرِي بِهِ شَاةً، فَاشْتَرَى لَهُ بِهِ شَاتَيْنِ، فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ وَجَاءَهُ بِدِينَارٍ وَشَاةٍ، فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ، وَكَانَ لَوِ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيهِ. قَالَ سُفْيَانُ كَانَ الْحَسَنُ بْنُ عُمَارَةَ جَاءَنَا بِهَذَا الْحَدِيثِ عَنْهُ، قَالَ سَمِعَهُ شَبِيبٌ مِنْ عُرْوَةَ، فَأَتَيْتُهُ فَقَالَ شَبِيبٌ إِنِّي لَمْ أَسْمَعْهُ مِنْ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ الْحَىَّ يُخْبِرُونَهُ عَنْهُ.
பாடம் : 28
3642. ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் குலத்தார் உர்வா பின் அபில்ஜஅத் அல்பாரிகீ (ரலி) அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். உர்வா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அவர் ஓர் ஆட்டை வாங்குவதற் காக ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும் ஓர் ஆட்டையும் கொண்டுவந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு வளம் கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்துவிடுவார் என்ற நிலையில் இருந்தார்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஹசன் பின் உமாரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை, உர்வா பின் அபில் ஜஅத் (ரலி) அவர்களிடமிருந்து ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்று சொல்லி எம்மிடம் கொண்டுவந்தார். நான் அதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்களிடம் சென்றேன்.

அவர்கள் என்னிடம், “நான் இந்த ஹதீஸை உர்வா அல்பாரிகீ (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுறவில்லை. என் குலத்தார் உர்வா அவர்களிடமிருந்து அறிவிப்பதை மட்டுமே நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 61
3643. وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " الْخَيْرُ مَعْقُودٌ بِنَوَاصِي الْخَيْلِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ". قَالَ وَقَدْ رَأَيْتُ فِي دَارِهِ سَبْعِينَ فَرَسًا. قَالَ سُفْيَانُ يَشْتَرِي لَهُ شَاةً كَأَنَّهَا أُضْحِيَّةٌ.
பாடம் : 28
3643. “(மேற்சொன்ன ஹதீஸை நான் உர்வா அவர்களிடம் கேட்கவில்லை.) ஆனால், நபி  (ஸல்) அவர்கள், “குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரையிலும் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது' என்று கூறியதாக உர்வா அல்பாரிகீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.156

“அவர்களின் வீட்டில் நான் எழுபது குதிரைகளைப் பார்த்திருக்கிறேன்” என்று ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

மேலும், அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “உர்வா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் சார்பாக) ஓர் ஆட்டை வாங்கு வார்கள். அது குர்பானீ ஆடு போலும்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 61
3644. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம் : 28
3644. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டிருக் கிறது.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.157


அத்தியாயம் : 61
3645. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ "".
பாடம் : 28
3645. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரைகளின் நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.158


அத்தியாயம் : 61
3646. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ لِثَلاَثَةٍ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ وَعَلَى رَجُلٍ وِزْرٌ. فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ، فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، وَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا، فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ، كَانَتْ أَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهْرٍ فَشَرِبَتْ، وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا، كَانَ ذَلِكَ لَهُ حَسَنَاتٍ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَسِتْرًا وَتَعَفُّفًا، لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَظُهُورِهَا، فَهِيَ لَهُ كَذَلِكَ سِتْرٌ. وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً، وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ فَهْىَ وِزْرٌ. وَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ فَقَالَ "" مَا أُنْزِلَ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}
பாடம் : 28
3646. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவு களைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பளிக்கக்கூடிய தாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற் காக, அதனைப் பசுமையான ஒரு வெட்ட வெளியில்- அல்லது ஒரு தோட்டத்தில்- ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவுக்குப் பசும்புல் வெளியில் -அல்லது தோட்டத்தில்- மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அதன் கயிறு அறுந்து, அது ஓரிரண்டு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் (குளம்பின்) சுவடுகளின் அளவுக்கும் அதன் கெட்டிச் சாணத்தின் அளவுக்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதன் பிடரியின் (அதன் விற்பனையின் வருமானத்திற்கான ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு (அவருடைய) இந்தக் குதிரை (வறுமையி óருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்து பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவற்றைக் குறித்து எந்த இறை கட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; “யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்' (99:7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.159


அத்தியாயம் : 61
3647. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ صَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ بُكْرَةً وَقَدْ خَرَجُوا بِالْمَسَاحِي، فَلَمَّا رَأَوْهُ قَالُوا مُحَمَّدٌ وَالْخَمِيسُ. وَأَحَالُوا إِلَى الْحِصْنِ يَسْعَوْنَ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ "" اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "".
பாடம் : 28
3647. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போருக்காக) அதிகாலை நேரத்தில் கைபருக்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது (யூதர்களான) கைபர்வாசிகள் (வயல் வெளிகளை நோக்கி) மண்வெட்டிகளை எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும் அவர்கள், “முஹம்மதும் ஐந்து (பிரிவுகள் கொண்ட அவரது) படையினரும் வருகின்றனர்” என்று சொன்னார்கள்.160

உடனே கோட்டையை நோக்கி விரைந்தோடிச் சென்றார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி, “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்). கைபர்(வாசிகளின் நிலை) நாசமாகிவிடும். “நாம் ஒரு சமுதாயத் தாரின் முற்றத்தில் இறங்கிவிடுவோ மாயின் எச்சரிக்கை செய்யப்பட்டுவந்த அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலை நேரமாகிவிடும்' என்று (37:177ஆவது இறைவசனத்தின் கருத்தைச்) சொன் னார்கள்.161


அத்தியாயம் : 61
3648. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ أَبِي الْفُدَيْكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ مِنْكَ كَثِيرًا فَأَنْسَاهُ. قَالَ "" ابْسُطْ رِدَاءَكَ "". فَبَسَطْتُ فَغَرَفَ بِيَدِهِ فِيهِ، ثُمَّ قَالَ "" ضُمَّهُ "" فَضَمَمْتُهُ، فَمَا نَسِيتُ حَدِيثًا بَعْدُ.
பாடம் : 28
3648. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து நிறைய செய்திகளைச் செவியுற்றிருக்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்துவிடுகிறேன்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “உன் மேல் துண்டை விரி” என்று சொல்ல, நானும் அதை விரித்தேன். பிறகு அவர்கள் தம் இரு கைகளால் (எதையோ அள்ளுவதைப் போன்று சைகை செய்து) அதில் அள்ளி(க் கொட்டி)னார்கள்.

பிறகு “இதைச் சேர்த்து (நெஞ்சோடு) அணைத்துக்கொள்” என்று சொன்னார்கள். நானும் அவ்வாறே அதை (என் நெஞ்சோடு) சேர்த்து அணைத் துக்கொண்டேன். அதன் பிறகு எந்த ஹதீஸையும் நான் மறக்கவில்லை.162

அத்தியாயம் : 61

3649. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيَقُولُونَ فِيكُمْ مَنْ صَاحَبَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ. ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ. فَيُفْتَحُ لَهُمْ "".
பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், “முஸ்லிம்களில் யார் நபி (ஸல்) அவர் களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர்களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார்' என்பதும்
3649. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார்மீது படை யெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?” என்று கேட்பார்கள். “ஆம் (இருக்கிறார்கள்)” என்று அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் அறப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார் களா?” என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், “ஆம், இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம், இருக்கின்றார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2


அத்தியாயம் : 62
3650. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَيْرُ أُمَّتِي قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ "". قَالَ عِمْرَانُ فَلاَ أَدْرِي أَذَكَرَ بَعْدَ قَرْنِهِ قَرْنَيْنِ أَوْ ثَلاَثًا "" ثُمَّ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ "".
பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், “முஸ்லிம்களில் யார் நபி (ஸல்) அவர் களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர்களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார்' என்பதும்
3650. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர்.3

பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் கோரப் படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி ஏற்படும்) நிலை தோன்றும்.4

(இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது.5


அத்தியாயம் : 62
3651. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ "". قَالَ إِبْرَاهِيمُ وَكَانُوا يَضْرِبُونَا عَلَى الشَّهَادَةِ وَالْعَهْدِ وَنَحْنُ صِغَارٌ.
பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், “முஸ்லிம்களில் யார் நபி (ஸல்) அவர் களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர்களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார்' என்பதும்
3651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.6

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, “அஷ்ஹது பில்லாஹ்” (அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்) என்றோ, “அலய்ய அஹ்துல்லாஹ்” (அல்லாஹ்வுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ சொன்னால் பெரியவர்கள் எங்களை(க் கண்டித்து) அடிப்பார்கள்.7

அத்தியாயம் : 62
3652. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ اشْتَرَى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ مِنْ عَازِبٍ رَحْلاً بِثَلاَثَةَ عَشَرَ دِرْهَمًا فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ مُرِ الْبَرَاءَ فَلْيَحْمِلْ إِلَىَّ رَحْلِي. فَقَالَ عَازِبٌ لاَ حَتَّى تُحَدِّثَنَا كَيْفَ صَنَعْتَ أَنْتَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ خَرَجْتُمَا مِنْ مَكَّةَ وَالْمُشْرِكُونَ يَطْلُبُونَكُمْ قَالَ ارْتَحَلْنَا مِنْ مَكَّةَ، فَأَحْيَيْنَا أَوْ سَرَيْنَا لَيْلَتَنَا وَيَوْمَنَا حَتَّى أَظْهَرْنَا وَقَامَ قَائِمُ الظَّهِيرَةِ، فَرَمَيْتُ بِبَصَرِي هَلْ أَرَى مِنْ ظِلٍّ فَآوِيَ إِلَيْهِ، فَإِذَا صَخْرَةٌ أَتَيْتُهَا فَنَظَرْتُ بَقِيَّةَ ظِلٍّ لَهَا فَسَوَّيْتُهُ، ثُمَّ فَرَشْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فِيهِ، ثُمَّ قُلْتُ لَهُ اضْطَجِعْ يَا نَبِيَّ اللَّهِ. فَاضْطَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ انْطَلَقْتُ أَنْظُرُ مَا حَوْلِي، هَلْ أَرَى مِنَ الطَّلَبِ أَحَدًا فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ يَسُوقُ غَنَمَهُ إِلَى الصَّخْرَةِ يُرِيدُ مِنْهَا الَّذِي أَرَدْنَا، فَسَأَلْتُهُ فَقُلْتُ لَهُ لِمَنْ أَنْتَ يَا غُلاَمُ قَالَ لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ سَمَّاهُ فَعَرَفْتُهُ. فَقُلْتُ هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ قَالَ نَعَمْ. قُلْتُ فَهَلْ أَنْتَ حَالِبٌ لَبَنًا قَالَ نَعَمْ. فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْ غَنَمِهِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ كَفَّيْهِ، فَقَالَ هَكَذَا ضَرَبَ إِحْدَى كَفَّيْهِ بِالأُخْرَى فَحَلَبَ لِي كُثْبَةً مِنْ لَبَنٍ، وَقَدْ جَعَلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِدَاوَةً عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، فَانْطَلَقْتُ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَافَقْتُهُ قَدِ اسْتَيْقَظَ، فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ ثُمَّ قُلْتُ قَدْ آنَ الرَّحِيلُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" بَلَى "". فَارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا، فَلَمْ يُدْرِكْنَا أَحَدٌ مِنْهُمْ غَيْرُ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ عَلَى فَرَسٍ لَهُ. فَقُلْتُ هَذَا الطَّلَبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" لاَ تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا "".
பாடம் : 2 முஹாஜிர்களின் மாண்புகளும் அவர்களின் மேன்மையும்8 அபூபக்ர் அப்துல்லாஹ் பின் அபீ குஹாஃபா அத்தைமீ (ரலி) அவர்களும் முஹாஜிர்களில் ஒருவர்.9 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும், (ஃபய்உ10 எனும் அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களைவிட்டும் - சொத்துக்களைவிட்டும் வெளியேற்றப் பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியது மாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது அன்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக் கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (59:8) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன?), இருவரில் ஒருவராக இருந்த அவரை (ஏக இறையை) மறுத்தோர், வெளியேற்றியபோதும், அவ்விருவரும் அந்தக்குகையில் (ஒளிந்து) இருந்தபோதும், அவர் தம் தோழரிடம் “கவலைப்படாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவி புரிந்துள் ளான். (9:40) “அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்') குகையில் இருந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்களும், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறுகின்றனர்.11
3652. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிட மிருந்து பதின்மூன்று திர்ஹங்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிபி டம், “(உங்கள் மகன்) “பராஉ'வுக்குக் கட்டளையிடுங்கள். என் சேணத்தை என்னிடம் அவர் சுமந்து வரட்டும்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸிப் (ரலி) அவர்கள், “இணைவைப்போர் உங்களைத் தேடிக்கொண்டிருக்க, நீங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியபோது எப்படி செயல்பட்டீர்கள் என்று எனக்கு நீங்கள் அறிவிக்காத வரை நான் (“பராஉ'வுக்குச் சேணம் கொண்டுவரும்படி) கட்டளையிடமாட்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், பின்வருமாறு பதிலளித்தார்கள்: நாங்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு இரவு பகலாகக் கண்விழித்துப் பயணித்தோம்- அல்லது எங்கள் இரவிலும் பகலிலும் நாங்கள் நடந்தோம்- இறுதியில், நண்பகல் நேரத்தை அடைந்தோம். உச்சிப் பொழுதின் கடும் வெயில் அடிக்கலாயிற்று. ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா என்று நான் நோட்டமிட்டேன். அப்போது பாறையொன்று தென்பட்டது. அங்கு நான் சென்றேன். அப்போது அங்கிருந்த நிழலைக் கண்டு அந்த இடத்தைச் சமப்படுத்தினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்களுக்காக அந்த நிழலில் (ஒரு தோலை) விரித்தேன். பிறகு அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! படுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் படுத்துக்கொண்டார்கள். பிறகு நான் யாரேனும் எங்களைத் தேடி வந்திருக்கிறார் களா என்று என்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நடந்தேன். அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆட்டை (நாங்கள் தங்கியிருந்த) பாறையை நோக்கி ஓட்டிவருவதைக் கண்டேன். நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியதைப் போன்று அவனும் (ஓய்வெடுக்க) நாடி வந்துகொண்டிருந்தான். நான் அவனிடம், “நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், “குறைஷியரில் ஒருவரின் பணியாள்” என்று கூறி அவரது பெயரைக் குறிப்பிட்டான். நான் அவர் இன்னாரெனப் புரிந்துகொண்டேன்.

ஆகவே, “உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தான். நான், “நீ எங்களுக்காகப் பால் கறந்து தருவாயா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (கறந்து தருகிறேன்)” என்று பதிலளித்தான். நான் அவனது ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டைப் பிடிக்கும் படி உத்தரவிட அவ்வாறே அவன் பிடித்தான். பிறகு நான் அதன் மடியைப் புழுதி போக உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். பிறகு அவனது இரு கைகளையும் உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். - “இப்படி' என்று பராஉ (ரலி) அவர்கள் தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தட்டினார்கள் - என அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அவன் எனக்குச் சிறிது பாலைக் கறந்துதந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக தோல் குவளை ஒன்றை நான் வைத்திருந்தேன். அதன் வாய் ஒரு துண்டுத் துணியால் மூடப்பட்டி ருந்தது. நான் (அதிலிருந்த) நீரை அந்தப் பால் (குவளை)மீது, அதன் அடிப்பகுதி குளிர்ந்துவிடும்வரை ஊற்றினேன்.

பிறகு அதை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அப்போது அவர்களும் விழித்தெழுந்து விட்டிருந்தார் கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று சொன்னேன். நான் திருப்தியடையும்வரை அருந்தினார்கள். பிறகு “புறப்படும் நேரம் வந்துவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் சொல்ல அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். மக்கள் எங்களை (வலைவீசித்) தேடிக்கொண்டிருக்க, நாங்கள் புறப்பட்டோம். (அதுவரை இஸ்லாத்தை ஏற்றிராத) சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் என்பவர் தமது குதிரை மீதமர்ந்தபடி எங்களைக் கண்டுவிட்டதைத் தவிர எதிரிகளில் வேறுயாரும் எங்களைக் காணவில்லை.

(எதிரிகள் எங்களைத் தேடி வந்தபோது) நான், “இதோ நம்மைத் தேடி வந்தவர்கள் நம்மை வந்தடைந்துவிட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “கவலைப்படாதீர்கள், அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று சொன்னார்கள்.12

(16:6 ஆவது வசனத்தில் இடம்பெறும்) “துரீஹƒன' எனும் சொல்லுக்கு “மாலையில் ஓட்டிச்செல்வது' என்பது பொருள். “தஸ்ரஹƒன' என்பதற்கு “காலையில் ஓட்டிச்செல்வது' என்பது பொருள்.

(ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹிஜ்ரத் தொடர்பான ஹதீஸில் இச்சொற்கள் இடம்பெறுகின்றன.)


அத்தியாயம் : 62
3653. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا فِي الْغَارِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لأَبْصَرَنَا. فَقَالَ "" مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا "".
பாடம் : 2 முஹாஜிர்களின் மாண்புகளும் அவர்களின் மேன்மையும்8 அபூபக்ர் அப்துல்லாஹ் பின் அபீ குஹாஃபா அத்தைமீ (ரலி) அவர்களும் முஹாஜிர்களில் ஒருவர்.9 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும், (ஃபய்உ10 எனும் அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களைவிட்டும் - சொத்துக்களைவிட்டும் வெளியேற்றப் பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியது மாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது அன்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக் கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (59:8) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன?), இருவரில் ஒருவராக இருந்த அவரை (ஏக இறையை) மறுத்தோர், வெளியேற்றியபோதும், அவ்விருவரும் அந்தக்குகையில் (ஒளிந்து) இருந்தபோதும், அவர் தம் தோழரிடம் “கவலைப்படாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவி புரிந்துள் ளான். (9:40) “அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்') குகையில் இருந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்களும், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறுகின்றனர்.11
3653. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், “(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் (நம்) இருவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!” என்று கேட்டார்கள்.13

அத்தியாயம் : 62
3654. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ وَقَالَ "" إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ ذَلِكَ الْعَبْدُ مَا عِنْدَ اللَّهِ "". قَالَ فَبَكَى أَبُو بَكْرٍ، فَعَجِبْنَا لِبُكَائِهِ أَنْ يُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ عَبْدٍ خُيِّرَ. فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ الْمُخَيَّرُ وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَمَنِّ النَّاسِ عَلَىَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبَا بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً غَيْرَ رَبِّي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي الْمَسْجِد ِباب إِلاَّ سُدَّ، إِلاَّ باب أَبِي بَكْرٍ "".
பாடம் : 3 “அபூபக்ரின் வாயிலைத் தவிர (மஸ்ஜிதுந் நபவிக்கு வரும்) அனைத்து வாயில்களையும் அடைத்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14
3654. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கி விட்டதை உணர்ந்து) அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விருப்ப உரிமை அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் விருப்ப உரிமை அளிக்கப்பட்ட அந்த அடியார். (நபி (ஸல்) அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தமது நட்பிலும் தமது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கின்றன. (எனது இந்தப்) பள்ளிவாசலில் அபூபக்ர் அவர்களின் வாயிலைத் தவிர வேறெந்த வாயிலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.15

அத்தியாயம் : 62
3655. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نُخَيِّرُ بَيْنَ النَّاسِ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنُخَيِّرُ أَبَا بَكْرٍ، ثُمَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، ثُمَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رضى الله عنهم.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து அபூபக்ர் (ரலி) அவர்களே மேன்மை யானவர்.
3655. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூபக்ர் (ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களையும், பிறகு உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் சிறந்தவர் களாக மதிப்பிட்டுவந்தோம்.

அத்தியாயம் : 62