3596. حَدَّثَنِي سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ، فَقَالَ "" إِنِّي فَرَطُكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، إِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي قَدْ أُعْطِيتُ خَزَائِنَ مَفَاتِيحِ الأَرْضِ، وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ بَعْدِي أَنْ تُشْرِكُوا، وَلَكِنْ أَخَافُ أَنْ تَنَافَسُوا فِيهَا "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3596. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (இறுதித் தொழுகை) தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காக (இறுதித் தொழுகை) தொழுவித்தார்கள்.114
பிறகு, சொற்பொழிவு மேடைக்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடு களைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே (ஹவ்ளுல் கவ்ஸர் எனும் சொர்க்கத் தடாகத்திற்குச்) செல்கின்றேன். நான் (அப்போது) உங்களுக்குச் சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத் தைக் காண்கிறேன். மேலும், எனக்குப் பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும், நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டிபோடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.115
அத்தியாயம் : 61

3597. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أُطُمٍ مِنَ الآطَامِ، فَقَالَ "" هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّي أَرَى الْفِتَنَ تَقَعُ خِلاَلَ بُيُوتِكُمْ مَوَاقِعَ الْقَطْرِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3597. உசாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மதீனாவின்) கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி) கூறினார்கள்: “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் வீடுகள் நெடுகிலும் மழைத்துளிகள் விழுமிடங்களில் குழப்பங்கள் விளையப்போவதை நான் பார்க்கின்றேன்” என்று சொன்னார்கள்.116

3598. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ حَدَّثَتْهَا عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذَا "". وَحَلَّقَ بِإِصْبَعِهِ وَبِالَّتِي تَلِيهَا، فَقَالَتْ زَيْنَبُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ "" نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3598. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, “அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத் தால் அரபியருக்குப் பேரழிவு நேரவிருக் கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிóருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்துகொண்டு) இருக்க (இறை தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! பாவங்கள் அதிகரித்து விட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)” என்று பதில் கூறினார்கள்.117

3599. وَعَنِ الزُّهْرِيِّ، حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" سُبْحَانَ اللَّهِ، مَاذَا أُنْزِلَ مِنَ الْخَزَائِنِ وَمَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3599. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தெழுந்து, “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்!) எவ்வளவு பெரும் கருவூலங்களெல்லாம் (வானிலிருந்து பூமிக்கு) இறக்கியருளப்பட்டிருக்கின்றன! எவ்வளவு பெரிய குழப்பங்கள் எல்லாம் (பூமிக்கு) அனுப்பப்பட்டிருக்கின்றன!” என்று சொன் னார்கள்.118

3600. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ بْنِ الْمَاجِشُونِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لِي إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ، وَتَتَّخِذُهَا، فَأَصْلِحْهَا وَأَصْلِحْ رُعَامَهَا، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ تَكُونُ الْغَنَمُ فِيهِ خَيْرَ مَالِ الْمُسْلِمِ، يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ ـ أَوْ سَعَفَ الْجِبَالِ ـ فِي مَوَاقِعِ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3600. அப்துல்லாஹ் பின் அபீ ஸஅஸஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “நான் உங்களை ஆடுகளை விரும்பக்கூடியவராகவும் அதை வைத்துப் பராமரிப்பவராகவும் பார்க்கிறேன். ஆகவே, அவற்றைச் சரிவரப் பராமரித்துச் சீராக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை மேய்ப்பவர்களையும் சரிவரப் பராமரியுங் கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள்மீது ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக ஆடுகள்தான் இருக்கும். குழப்பங்கள் விளையும் நேரங்களில் அவற்றிலிருந்து தமது மார்க்கத்தைப் பாதுகாத்துக்கொள்ள வெருண்டோடியபடி அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு அவர் மழை பொழியும் இடங்களில் ஒன்றான மலையுச்சிக்குச் சென்றுவிடுவார்' என்று சொன்னதை நான் கேட்டேன்” என்று கூறினார்கள்.119

3601. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سَتَكُونُ فِتَنٌ، الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ، وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ الْمَاشِي، وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي، وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ، وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ ".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3601. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக் கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்றுவிடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்றுவிடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். எவர் அதை அடைகிறாரோ அது அவரை வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது எவர் புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறாரோ அவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெற்றுக்கொள் ளட்டும்.120
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3602. وَعَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُطِيعِ بْنِ الأَسْوَدِ، عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ،، مِثْلَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ هَذَا، إِلاَّ أَنَّ أَبَا بَكْرٍ، يَزِيدُ " مِنَ الصَّلاَةِ صَلاَةٌ مَنْ فَاتَتْهُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ ".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3602. இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறி வித்த (மேற்கண்ட) இந்த நபிமொழியைப் போன்று நவ்ஃபல் பின் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் பின் முதீஉ பின் அஸ்வத் (ரஹ்) அவர்களும் அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
எனினும், இந்த அறிவிப்பில் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள், “தொழுகையில் ஒரு தொழுகை (அஸ்ர்) உண்டு; ஒருவருக்கு அது தவறிவிடுமாயின் அது அவருடைய மனைவி மக்களும் அவரது செல்வமும் பறிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதாகும்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.121

3603. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَتَكُونُ أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا قَالَ "" تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكُمْ، وَتَسْأَلُونَ اللَّهَ الَّذِي لَكُمْ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3603. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை,) “விரைவில் (அன்சாரிகளான) உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். மேலும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்கள் நடக்கும்.” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள்மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக் குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

3604. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُهْلِكُ النَّاسَ هَذَا الْحَىُّ مِنْ قُرَيْشٍ "". قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ "" لَوْ أَنَّ النَّاسَ اعْتَزَلُوهُمْ "". قَالَ مَحْمُودٌ حَدَّثَنَا أَبُو دَاوُدَ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ سَمِعْتُ أَبَا زُرْعَةَ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3604. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குறைஷி குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களிட மிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.122
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 61
3604. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குறைஷி குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களிட மிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.122
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 61
3605. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنْ جَدِّهِ، قَالَ كُنْتُ مَعَ مَرْوَانَ وَأَبِي هُرَيْرَةَ فَسَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ الصَّادِقَ الْمَصْدُوقَ، يَقُولُ "" هَلاَكُ أُمَّتِي عَلَى يَدَىْ غِلْمَةٍ مِنْ قُرَيْشٍ "". فَقَالَ مَرْوَانُ غِلْمَةٌ. قَالَ أَبُو هُرَيْرَةَ إِنْ شِئْتَ أَنْ أُسَمِّيَهُمْ بَنِي فُلاَنٍ وَبَنِي فُلاَنٍ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3605. சயீத் அல்உமவி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் அவர்களுடனும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், உண்மையாளரும் உண்மையே உரைக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள் “குறைஷியரில் சில இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால்தான் எனது (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு” எனக் கூறக் கேட்டேன் என்றார்கள்.
உடனே மர்வான், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “இளைஞர்களா?” என்று கேட்க, அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் நான் அவர்களை, “இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள்' என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்” என்று பதிலளித்தார்கள்.123

3606. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ "". قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ "" نَعَمْ، وَفِيهِ دَخَنٌ "". قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ "" قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ "". قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ "" نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا فَقَالَ "" هُمْ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا "" قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ "" تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ "". قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ قَالَ "" فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3606. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால்தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள்.124
நான், “இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.125
நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு சமுதாயத்தார் எனது நல்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள்.126
நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.127
நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். “நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக்கொள்” என்று பதில் சொன்னார்கள்.
அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேரைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.

3607. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنِي قَيْسٌ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ تَعَلَّمَ أَصْحَابِي الْخَيْرَ وَتَعَلَّمْتُ الشَّرَّ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3607. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தோழர்கள் (நன்மை தரும் செயல் களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக்கொண்டார்கள். நான் (தவிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

3608. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரே வாதத்தை முன்வைக்கின்ற இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை யுகமுடிவு நாள் வராது.128
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரே வாதத்தை முன்வைக்கின்ற இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை யுகமுடிவு நாள் வராது.128
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3609. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ، فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3609. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக் களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை யுகமுடிவு நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.129
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3609. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக் களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை யுகமுடிவு நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.129
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 61
3610. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يَقْسِمُ قَسْمًا أَتَاهُ ذُو الْخُوَيْصِرَةِ ـ وَهْوَ رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اعْدِلْ. فَقَالَ "" وَيْلَكَ، وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ قَدْ خِبْتَ وَخَسِرْتَ إِنْ لَمْ أَكُنْ أَعْدِلُ "". فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِيهِ، فَأَضْرِبَ عُنُقَهُ. فَقَالَ "" دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا، يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ، يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، يُنْظَرُ إِلَى نَصْلِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ إِلَى رِصَافِهِ فَمَا يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ إِلَى نَضِيِّهِ ـ وَهْوَ قِدْحُهُ ـ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ إِلَى قُذَذِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، قَدْ سَبَقَ الْفَرْثَ وَالدَّمَ، آيَتُهُمْ رَجُلٌ أَسْوَدُ إِحْدَى عَضُدَيْهِ مِثْلُ ثَدْىِ الْمَرْأَةِ، أَوْ مِثْلُ الْبَضْعَةِ تَدَرْدَرُ وَيَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ "". قَالَ أَبُو سَعِيدٍ فَأَشْهَدُ أَنِّي سَمِعْتُ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَشْهَدُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَاتَلَهُمْ وَأَنَا مَعَهُ، فَأَمَرَ بِذَلِكَ الرَّجُلِ، فَالْتُمِسَ فَأُتِيَ بِهِ حَتَّى نَظَرْتُ إِلَيْهِ عَلَى نَعْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِي نَعَتَهُ.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3610. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்த போது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது “பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த “துல்குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான்! நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லை யென்றால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடு வாய்” என்று பதிலளித்தார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள்.130
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப்பார்த்து உங்களின் தொழுகையையும் உங்களின் நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது.
பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக் கொண்டிருக்கும்.131
அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவருடைய இரு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்- அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக் கும்- அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று சொன்னார்கள்.
நான் இந்த நபிமொழியை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்களின் வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன்.132

3611. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ قَالَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلأَنْ أَخِرَّ مِنَ السَّمَاءِ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَكْذِبَ عَلَيْهِ، وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ، فَإِنَّ الْحَرْبَ خَدْعَةٌ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ حُدَثَاءُ الأَسْنَانِ، سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3611. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக் கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, நபி அவர்கள்மீது புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்).133
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர் களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.134

3612. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، عَنْ خَبَّابِ بْنِ الأَرَتِّ، قَالَ شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ فِي ظِلِّ الْكَعْبَةِ، قُلْنَا لَهُ أَلاَ تَسْتَنْصِرُ لَنَا أَلاَ تَدْعُو اللَّهَ لَنَا قَالَ "" كَانَ الرَّجُلُ فِيمَنْ قَبْلَكُمْ يُحْفَرُ لَهُ فِي الأَرْضِ فَيُجْعَلُ فِيهِ، فَيُجَاءُ بِالْمِنْشَارِ، فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَتَيْنِ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الْحَدِيدِ، مَا دُونَ لَحْمِهِ مِنْ عَظْمٍ أَوْ عَصَبٍ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَاللَّهِ لَيُتِمَّنَّ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ، لاَ يَخَافُ إِلاَّ اللَّهَ أَوِ الذِّئْبَ عَلَى غَنَمِهِ، وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3612. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக் கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, இரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது சதையையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும்.
அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும்கூட அவரை அவரது மார்க்கத் திóருந்து பிறழச்செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத் தப்படும். எந்த அளவுக்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ'விலிருந்து “ஹளரமவ்த்'வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தான் (கொடுமை தாளாமல் பொறுமை இழந்து) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன் னார்கள்.

3613. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَنْبَأَنِي مُوسَى بْنُ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم افْتَقَدَ ثَابِتَ بْنَ قَيْسٍ، فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، أَنَا أَعْلَمُ لَكَ عِلْمَهُ. فَأَتَاهُ فَوَجَدَهُ جَالِسًا فِي بَيْتِهِ مُنَكِّسًا رَأْسَهُ، فَقَالَ مَا شَأْنُكَ فَقَالَ شَرٌّ، كَانَ يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَدْ حَبِطَ عَمَلُهُ، وَهْوَ مِنْ أَهْلِ النَّارِ. فَأَتَى الرَّجُلُ فَأَخْبَرَهُ أَنَّهُ قَالَ كَذَا وَكَذَا. فَقَالَ مُوسَى بْنُ أَنَسٍ فَرَجَعَ الْمَرَّةَ الآخِرَةَ بِبِشَارَةٍ عَظِيمَةٍ، فَقَالَ "" اذْهَبْ إِلَيْهِ فَقُلْ لَهُ إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِ النَّارِ، وَلَكِنْ مِنْ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3613. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள்.135 அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்துகொண்டு தங்களிடம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றார். ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம் வீட்டில் தலையை (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று அவரிடம் கேட்டார்.
அதற்கு அவர், “(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி (ஸல்) அவர்களின் குரலைவிட எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். ஆகவே, என் நற்செயல்கள் வீணாகிவிட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகிவிட்டேன்” என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் சொன்னார் என்று தெரிவித்தார்.
அறிவிப்பாளர் மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் (தம் தந்தை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக் கிறார்கள்:
அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரி டம்) நபி (ஸல்) அவர்கள் “நீ ஸாபித் பின் கைஸிடம் சென்று, “நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்கவாசிகளில் ஒருவரே' என்று சொல்” எனக் கூறி னார்கள்.136

3614. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَرَأَ رَجُلٌ الْكَهْفَ وَفِي الدَّارِ الدَّابَّةُ فَجَعَلَتْ تَنْفِرُ فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ ـ أَوْ سَحَابَةٌ ـ غَشِيَتْهُ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" اقْرَأْ فُلاَنُ، فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ "".
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3614. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள்) தமது வீட்டில் ஊர்திப் பிராணி (குதிரை) இருக்க, (திருக்குர்ஆனின்) “அல்கஹ்ஃப்' (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து)விட்டார். உடனே மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது.
இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும்நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்கள்மீது) இறங்கிய அமைதி(யின் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்.

3615. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ أَبُو الْحَسَنِ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ جَاءَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ إِلَى أَبِي فِي مَنْزِلِهِ، فَاشْتَرَى مِنْهُ رَحْلاً فَقَالَ لِعَازِبٍ ابْعَثِ ابْنَكَ يَحْمِلْهُ مَعِي. قَالَ فَحَمَلْتُهُ مَعَهُ، وَخَرَجَ أَبِي يَنْتَقِدُ ثَمَنَهُ، فَقَالَ لَهُ أَبِي يَا أَبَا بَكْرٍ حَدِّثْنِي كَيْفَ صَنَعْتُمَا حِينَ سَرَيْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ أَسْرَيْنَا لَيْلَتَنَا، وَمِنَ الْغَدِ حَتَّى قَامَ قَائِمُ الظَّهِيرَةِ، وَخَلاَ الطَّرِيقُ لاَ يَمُرُّ فِيهِ أَحَدٌ، فَرُفِعَتْ لَنَا صَخْرَةٌ طَوِيلَةٌ، لَهَا ظِلٌّ لَمْ تَأْتِ عَلَيْهِ الشَّمْسُ فَنَزَلْنَا عِنْدَهُ، وَسَوَّيْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَكَانًا بِيَدِي يَنَامُ عَلَيْهِ، وَبَسَطْتُ فِيهِ فَرْوَةً، وَقُلْتُ نَمْ يَا رَسُولَ اللَّهِ، وَأَنَا أَنْفُضُ لَكَ مَا حَوْلَكَ. فَنَامَ وَخَرَجْتُ أَنْفُضُ مَا حَوْلَهُ، فَإِذَا أَنَا بِرَاعٍ مُقْبِلٍ بِغَنَمِهِ إِلَى الصَّخْرَةِ يُرِيدُ مِنْهَا مِثْلَ الَّذِي أَرَدْنَا فَقُلْتُ لِمَنْ أَنْتَ يَا غُلاَمُ فَقَالَ لِرَجُلٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ. قُلْتُ أَفِي غَنَمِكَ لَبَنٌ قَالَ نَعَمُ. قُلْتُ أَفَتَحْلُبُ قَالَ نَعَمْ. فَأَخَذَ شَاةً. فَقُلْتُ انْفُضِ الضَّرْعَ مِنَ التُّرَابِ وَالشَّعَرِ وَالْقَذَى. قَالَ فَرَأَيْتُ الْبَرَاءَ يَضْرِبُ إِحْدَى يَدَيْهِ عَلَى الأُخْرَى يَنْفُضُ، فَحَلَبَ فِي قَعْبٍ كُثْبَةً مِنْ لَبَنٍ، وَمَعِي إِدَاوَةٌ حَمَلْتُهَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَرْتَوِي مِنْهَا، يَشْرَبُ وَيَتَوَضَّأُ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُ، فَوَافَقْتُهُ حِينَ اسْتَيْقَظَ، فَصَبَبْتُ مِنَ الْمَاءِ عَلَى اللَّبَنِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ ـ قَالَ ـ فَشَرِبَ، حَتَّى رَضِيتُ ثُمَّ قَالَ "" أَلَمْ يَأْنِ لِلرَّحِيلِ "". قُلْتُ بَلَى ـ قَالَ ـ فَارْتَحَلْنَا بَعْدَ مَا مَالَتِ الشَّمْشُ، وَاتَّبَعَنَا سُرَاقَةُ بْنُ مَالِكٍ، فَقُلْتُ أُتِينَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" لاَ تَحْزَنْ، إِنَّ اللَّهَ مَعَنَا "". فَدَعَا عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَارْتَطَمَتْ بِهِ فَرَسُهُ إِلَى بَطْنِهَا ـ أُرَى فِي جَلَدٍ مِنَ الأَرْضِ، شَكَّ زُهَيْرٌ ـ فَقَالَ إِنِّي أُرَاكُمَا قَدْ دَعَوْتُمَا عَلَىَّ فَادْعُوَا لِي، فَاللَّهُ لَكُمَا أَنْ أَرُدَّ عَنْكُمَا الطَّلَبَ. فَدَعَا لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَنَجَا فَجَعَلَ لاَ يَلْقَى أَحَدًا إِلاَّ قَالَ كَفَيْتُكُمْ مَا هُنَا. فَلاَ يَلْقَى أَحَدًا إِلاَّ رَدَّهُ. قَالَ وَوَفَى لَنَا.
பாடம் : 25
இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3615. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அபூபக்ர் (ரலி) அவர்கள் என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள்) இடம் அவர்களது வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், “இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.
ஆகவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சென்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக்கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, “அபூபக்ரே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார்கள்.
(அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவும் அடுத்த நாளின் சிறிது நேரமும் பயணம் சென்றோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகிவிட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. ஆகவே, நாங்கள் அங்கு தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன்மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன்.
அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்” என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலு முள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியதைப் போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியவனாக வந்துகொண்டிருப்பதைக் கண்டேன்.
அப்போது “நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், “மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)” என்று- அல்லது மக்காவாசி களில் ஒருவருடைய (பணியாள்) என்று- பதிலளித்தான். நான், “உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (இருக்கின்றது)” என்று சொன்னான். நான், “நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?” என்று கேட்டேன். அவன், “சரி (கறந்து தருகிறேன்)” என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், “(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக்கொள்” என்று சொன்னேன்.
-அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை நான் கண்டேன்.-
அவன், உட்புறம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகம் தணித்துக்கொண்டு, அங்கத் தூய்மை செய்துகொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை.
(எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும் அவர்கள் (தூக்கத்திலிருந்து) எழுந்த நேரமும் ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப்பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், “பருகுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும்வரை பருகி னார்கள்.137
பிறகு, “(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (வந்துவிட்டது)” என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்தபிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா பின் மாலிக் பின்தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை.) நான், “(எதிரிகள்) நம்மிடம் வந்துவிட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே சுராக்காவுடன் அவரது குதிரை தன் வயிறுவரை பூமியில் புதைந்துவிட்டது.
அறிவிப்பாளர் ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: “பூமியின் ஓர் இறுகிய பகுதியில்” என்று (அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாக) நான் கருதுகிறேன்.
உடனே சுராக்கா, “நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களைவிட்டுத் திசை திருப்பிவிடுவேன்” என்று சொன்னார்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சுராக் காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தம்மைச் சந்திப்பவர் எவராயினும் அவரி டம், “உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை” என்று கூறலானார். மேலும் (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித் தாலும் திருப்பியனுப்பிக்கொண்டேயிருந் தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறு தியை நிறைவேற்றிவிட்டார்.