3446. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا صَالِحُ بْنُ حَىٍّ، أَنَّ رَجُلاً، مِنْ أَهْلِ خُرَاسَانَ قَالَ لِلشَّعْبِيِّ. فَقَالَ الشَّعْبِيُّ أَخْبَرَنِي أَبُو بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَدَّبَ الرَّجُلُ أَمَتَهُ فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا، كَانَ لَهُ أَجْرَانِ، وَإِذَا آمَنَ بِعِيسَى ثُمَّ آمَنَ بِي، فَلَهُ أَجْرَانِ، وَالْعَبْدُ إِذَا اتَّقَى رَبَّهُ وَأَطَاعَ مَوَالِيَهُ، فَلَهُ أَجْرَانِ "".
பாடம் : 48 (அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத்துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யமின் முன் னிலையில் முழு மனித உருவில் தோன்றி னார். உடனே மர்யம் கூறினார்: ‘‘உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்” அதற்கு அவர் கூறினார்: ‘‘நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” மர்யம் கூறினார்: ‘‘எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: ‘‘அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற் காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்” (19:16லி21) யிவிலகியிருந்தோர்’ (இஅதஸலத்) லிஒதுங்கி தனிமையில் இருந்தார்; கிழக்குப் பக்கம் (ஷர்கீ)லி கிழக்கை ஒட்டிய ஓரிடத்தில். (19:16) ‘அவரைக் கொண்டுசென்றது’ (அஜாஅஹா) லி அவரை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்றது (19:23). இது யிஜாஅ’ என்பதன் ‘அஃப்அல’ வாய்பாட்டில் வந்தது. துசாகித் (அல்லது தஸ்ஸாகத்) விழும்; சொரியும். யிகஸிய்யு லி தொலைவான (காஸியன்) இடத்தில் (19:22). யிஃபரிய்யு’ (பயங்கரமான) லி மிகப்பெரிய காரியம். 19:27) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யிநஸ்யன்’ (மறக்கப்பட்ட) லி எப்பொரு ளாகவும் இல்லாமல் (19:23). மற்றவர்கள், ‘அற்பமான பொருளாக’ என்று இதற்கு அர்த்தம் கூறுகிறார்கள். அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘நீர் இறையச்சமுடையவராக இருந்தால்’ (19:18) என்று மர்யம் (அலை) அவர்கள் சொல்லக் காரணம், இறையச்சம் உள்ளவர் சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார் என அவர் அறிந்திருந்ததுதான். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யிசரிய்யு’ (ஊற்று) என்பது யிசிரியாக்’ மொழியில் சிற்றாற்றைக் குறிக்கும்.
3446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் அடிமைப் பெண் ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மை யான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தாமே) மணமும் முடித்துக்கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசா (அலை) அவர்களின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும். ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர் களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக் கும்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3447. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلاً، ثُمَّ قَرَأَ {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} فَأَوَّلُ مَنْ يُكْسَى إِبْرَاهِيمُ، ثُمَّ يُؤْخَذُ بِرِجَالٍ مِنْ أَصْحَابِي ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ فَأَقُولُ أَصْحَابِي فَيُقَالُ إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ عِيسَى ابْنُ مَرْيَمَ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَىْءٍ شَهِيدٌ} إِلَى قَوْلِهِ {الْعَزِيزُ الْحَكِيمُ}"". قَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ ذُكِرَ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ عَنْ قَبِيصَةَ قَالَ هُمُ الْمُرْتَدُّونَ الَّذِينَ ارْتَدُّوا عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ، فَقَاتَلَهُمْ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه.
பாடம் : 48 (அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத்துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யமின் முன் னிலையில் முழு மனித உருவில் தோன்றி னார். உடனே மர்யம் கூறினார்: ‘‘உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்” அதற்கு அவர் கூறினார்: ‘‘நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” மர்யம் கூறினார்: ‘‘எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: ‘‘அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற் காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்” (19:16லி21) யிவிலகியிருந்தோர்’ (இஅதஸலத்) லிஒதுங்கி தனிமையில் இருந்தார்; கிழக்குப் பக்கம் (ஷர்கீ)லி கிழக்கை ஒட்டிய ஓரிடத்தில். (19:16) ‘அவரைக் கொண்டுசென்றது’ (அஜாஅஹா) லி அவரை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்றது (19:23). இது யிஜாஅ’ என்பதன் ‘அஃப்அல’ வாய்பாட்டில் வந்தது. துசாகித் (அல்லது தஸ்ஸாகத்) விழும்; சொரியும். யிகஸிய்யு லி தொலைவான (காஸியன்) இடத்தில் (19:22). யிஃபரிய்யு’ (பயங்கரமான) லி மிகப்பெரிய காரியம். 19:27) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யிநஸ்யன்’ (மறக்கப்பட்ட) லி எப்பொரு ளாகவும் இல்லாமல் (19:23). மற்றவர்கள், ‘அற்பமான பொருளாக’ என்று இதற்கு அர்த்தம் கூறுகிறார்கள். அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘நீர் இறையச்சமுடையவராக இருந்தால்’ (19:18) என்று மர்யம் (அலை) அவர்கள் சொல்லக் காரணம், இறையச்சம் உள்ளவர் சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார் என அவர் அறிந்திருந்ததுதான். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யிசரிய்யு’ (ஊற்று) என்பது யிசிரியாக்’ மொழியில் சிற்றாற்றைக் குறிக்கும்.
3447. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப் பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும் விருத்த சேதனம் செய்யப் படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு ‘‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படு வதைப்போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்” (21:104) எனும் இறைவசனத்தை ஓதினார்கள்.

முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப் பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப் பக்கமும் கொண்டுசெல்லப்படுவார்கள். நான், ‘‘இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். ‘‘இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்கள்” என்று சொல்லப்படும்.

அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்துவந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிக்கொண்டபோது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாகி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக்கொண்டிருக்கின்றாய். நீ அவர் களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடியார்களே! (அதற்கும் உனக்கு முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்து விட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லமை மிக்கவனும் ஞானம் நிறைந்தவனும் ஆவாய்” (5:117,118) என்று சொல்வேன்.

கபீஸா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் மதம் மாறியவர்கள்தான்! அபூபக்ர் (ரலி) அவர்கள் (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.

அத்தியாயம் : 60
3448. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلاً، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلاَّ لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا}.
பாடம் : 49 மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது
3448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) வாங்கிக்கொள்வதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (சிரவணக்கம்) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (ஈசாவின்)மீது நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிரான சாட்சியாக அவர் இருப்பார்’ (4:159) எனும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.125


அத்தியாயம் : 60
3449. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ "". تَابَعَهُ عُقَيْلٌ وَالأَوْزَاعِيُّ.
பாடம் : 49 மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது
3449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்க ளுக்கு(த் தொழுவிக்கும்) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்கு வாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 60
3450. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، قَالَ قَالَ عُقْبَةُ بْنُ عَمْرٍو لِحُذَيْفَةَ أَلاَ تُحَدِّثُنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنِّي سَمِعْتُهُ يَقُولُ " إِنَّ مَعَ الدَّجَّالِ إِذَا خَرَجَ مَاءً وَنَارًا، فَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهَا النَّارُ فَمَاءٌ بَارِدٌ، وَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهُ مَاءٌ بَارِدٌ فَنَارٌ تُحْرِقُ، فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ فَلْيَقَعْ فِي الَّذِي يَرَى أَنَّهَا نَارٌ، فَإِنَّهُ عَذْبٌ بَارِدٌ ".
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3450. ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை யிஇது நெருப்பு’ என்று கருதுகிறார் களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை யிஇது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் எவர் சந்திக்கிறாரோ அவர், தாம் நெருப் பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டி ருக்கிறேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 60
3451. قَالَ حُذَيْفَةُ وَسَمِعْتُهُ يَقُولُ " إِنَّ رَجُلاً كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ أَتَاهُ الْمَلَكُ لِيَقْبِضَ رُوحَهُ فَقِيلَ لَهُ هَلْ عَمِلْتَ مِنْ خَيْرٍ قَالَ مَا أَعْلَمُ، قِيلَ لَهُ انْظُرْ. قَالَ مَا أَعْلَمُ شَيْئًا غَيْرَ أَنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فِي الدُّنْيَا وَأُجَازِيهِمْ، فَأُنْظِرُ الْمُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ. فَأَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ "
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3451. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் (உயிரைக் கைப்பற்றும்) வானவர், அவரது உயிரைக் கைப்பற்றிச் செல்ல வந்தார். அந்த மனிதரிடம், ‘‘(உமது வாழ்நாளில்) நீர் ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக் கிறீரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘(அப்படி எதுவும்) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார். ‘‘(நன்மை ஏதாவது செய்திருக்கிறாயா என்று) சிந்தித்துப்பார்ப்பீராக!” என்று கூறப்பட்டது.

அவர், ‘‘அப்படி எதுவும் (நன்மை) செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது, அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது, வசதியுள்ளவருக்கு (கடனை அடைக்க) அவகாசம் தருவேன். வசதியில்லாதவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) விடுவேன்” என்று பதிலளித்தார். அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதித்தான்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.127


அத்தியாயம் : 60
3452. . فَقَالَ وَسَمِعْتُهُ يَقُولُ " إِنَّ رَجُلاً حَضَرَهُ الْمَوْتُ، فَلَمَّا يَئِسَ مِنَ الْحَيَاةِ أَوْصَى أَهْلَهُ إِذَا أَنَا مُتُّ فَاجْمَعُوا لِي حَطَبًا كَثِيرًا وَأَوْقِدُوا فِيهِ نَارًا حَتَّى إِذَا أَكَلَتْ لَحْمِي، وَخَلَصَتْ إِلَى عَظْمِي، فَامْتَحَشْتُ، فَخُذُوهَا فَاطْحَنُوهَا، ثُمَّ انْظُرُوا يَوْمًا رَاحًا فَاذْرُوهُ فِي الْيَمِّ. فَفَعَلُوا، فَجَمَعَهُ فَقَالَ لَهُ لِمَ فَعَلْتَ ذَلِكَ قَالَ مِنْ خَشْيَتِكَ. فَغَفَرَ اللَّهُ لَهُ ". قَالَ عُقْبَةُ بْنُ عَمْرٍو، وَأَنَا سَمِعْتُهُ يَقُولُ ذَاكَ، وَكَانَ نَبَّاشًا.
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3452. மேலும், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கிறேன்:

ஒரு மனிதருக்கு மரணம் வந்தது. அவருக்கு வாழ்வைப் பற்றிய அவ நம்பிக்கை ஏற்பட்டவுடன் தம் குடும்பத் தாருக்கு இறுதி உபதேசம் செய்தார். ‘‘நான் இறந்துவிட்டால், எனக்காக நிறைய விறகுகளைச் சேகரித்து அதில் நெருப்பை மூட்டிவிடுங்கள். நெருப்பு என் சதையைத் தின்று என் எலும்புவரை சென்றுவிடும் போது நான் கருகிப்போவேன். உடனே, என் கருகிய எலும்புகளை எடுத்துத் தூளாக்கி, பிறகு காற்று அதிகமாக வீசும் ஒருநாளை எதிர்பார்த்திருந்து (அந்நாள் வந்தவுடன்) கடலில் அதை எறிந்து விடுங்கள்” என்று அவர் சொன்னார்.

(அவர் இறந்தவுடன்) அவ்வாறே மக்கள் செய்தனர். அவரது எலும்புத் துகள் களை அல்லாஹ் ஒன்று திரட்டி, ‘‘நீ ஏன் அப்படிச் செய்தாய்?” என்று அவரிடம் கேட்டான். அவர், ‘‘உன் அச்சத்தின் காரணத்தால்தான் (அப்படிச் செய்தேன்)” என்று பதிலளித்தார். ஆகவே, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொல்லி முடித்தவுடன் அவர்களிடம் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், ‘‘நானும் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மனிதர் மண்ணறை(களில் கஃபன் துணிகளைத் திருடும்) திருடனாக இருந்தார்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 60
3453. حَدَّثَنِي بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنِي مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَائِشَةَ، وَابْنَ، عَبَّاسٍ رضى الله عنهم قَالاَ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهْوَ كَذَلِكَ " لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ". يُحَذِّرُ مَا صَنَعُوا.
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3453. ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது, தமது முகத்தின் மீது கறுப்புக் கம்பளி துணி ஒன்றைப் போட்டுக்கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தமது முகத்திலிருந்து அகற்றிவிடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘‘யூதர்களின் மீதும் கிறித்த வர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை அவர்கள் வழிபாட் டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.128

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3455. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي، وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ. قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ، أَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ "".
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3455. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு) அமர்ந்திருந்தேன். (ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘‘இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் உத்திர விடுகிறீர்கள்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘அவர்களில் முதலாவ தாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருப வரிடம் (அந்தக் கடமையை நிறை வேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் அல்லாஹ் கேட்கவிருக் கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.


அத்தியாயம் : 60
3456. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ "". قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ "" فَمَنْ "".
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3456. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.129 எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஓர் உடும் பின் பொந்துக்குள் புகுந்திருந்தால்கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேறு யாரை?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 60
3457. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا الْيَهُودَ وَالنَّصَارَى، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ.
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3457. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதியபோது) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களைப் போல்) தீ மூட்ட லாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் சொன்னார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறித்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள்.

அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு ‘அதான்’ எனும் தொழுகை அறிவிப்புக் குரிய வாசகங்களை (கற்றுத்தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (எனும் கூட்டுத் தொழுகைக்காக நிற்கும்போது சொல்லும்) வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது.130


அத்தியாயம் : 60
3458. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها كَانَتْ تَكْرَهُ أَنْ يَجْعَلَ {الْمُصَلِّي} يَدَهُ فِي خَاصِرَتِهِ وَتَقُولُ إِنَّ الْيَهُودَ تَفْعَلُهُ. تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3458. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுபவர் தமது கையைத் தமது பக்கவாட்டில் (இடுப்புக்குமேல்) வைத்திருப் பதை ஆயிஷா (ரலி) அவர்கள் வெறுத்து வந்தார்கள். ‘‘யூதர்கள்தான் அப்படிச் செய்வார்கள்” என்று சொல்வார்கள்.131

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3459. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا أَجَلُكُمْ فِي أَجَلِ مَنْ خَلاَ مِنَ الأُمَمِ مَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ، وَإِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُ الْيَهُودِ وَالنَّصَارَى كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالاً فَقَالَ مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ النَّصَارَى مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ الْعَصْرِ، عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ أَلاَ فَأَنْتُمُ الَّذِينَ يَعْمَلُونَ مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، أَلاَ لَكُمُ الأَجْرُ مَرَّتَيْنِ، فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالُوا نَحْنُ أَكْثَرُ عَمَلاً وَأَقَلُّ عَطَاءً، قَالَ اللَّهُ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ. قَالَ فَإِنَّهُ فَضْلِي أُعْطِيهِ مَنْ شِئْتُ "".
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இதற்குமுன் சென்ற சமுதாயங்களின் (ஆயுட்)காலத் தவணைகளிடையே உங்கள் ஆயுள் தவணை, அஸ்ருக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவாகும். உங்கள் நிலையும் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் நிலையும் தொழிலாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதரைப் போன்றதாகும்.

அவர் (தொழிலாளர்களிடம்), ‘‘எனக்காக நடுப்பகல் நேரம்வரை ஒவ்வொரு யிகீராத்’ (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு யிகீராத்’துக்காக நடுப்பகல்வரை வேலை செய்தார்கள்.

பிறகு அவர், ‘‘நடுப்பகல் நேரத்திலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒவ்வொரு யிகீராத்’ (ஊதியத்)திற்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார். கிறித்த வர்கள் நடுப்பகல் நேரத்திலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒவ்வொரு யிகீராத்’துக்காக வேலை செய்தார்கள்.

பிறகு அவர், ‘‘அஸ்ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும்வரை இரண்டி ரண்டு யிகீராத்’துகளுக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று கேட்டார்.

தெரிந்துகொள்ளுங்கள்: அஸ்ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு யிகீராத்’துகளுக்காக வேலை செய்தவர்கள் (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான். தெரிந்துகொள்ளுங்கள்: உங்களுக்குத்தான் இருமுறை ஊதியம் கிடைத்துள்ளது.

இதைக் கண்ட யூதர்களும் கிறித்தவர்களும் கோபமடைந்து, ‘‘நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, கூலி (எங்களுக்குக்) குறைவாகக் கிடைப்பதா?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், ‘‘நான் உங்கள் உரிமையிலிருந்து எதையாவது குறைத்(து அநீதியிழைத்)திருக்கிறேனா?” என்று கேட்டான். அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், ‘‘அ(ப்படிச் சிலருக்கு மட்டும் அதிகமாகக் கொடுப்ப)து என் அருளாகும். அதை நான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.132

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3460. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لَعَنَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَّلُوهَا فَبَاعُوهَا "". تَابَعَهُ جَابِرٌ وَأَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3460. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) ‘‘அல்லாஹ் இன்னாரை அழிப் பானாக! நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் வின் சாபம் யூதர்கள்மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை உருக்கி விற்றார்கள்’ என்று கூறியுள்ளார்கள் என்பதை அவர் அறியமாட்டாரா?” என்று உமர் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.

இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.133


அத்தியாயம் : 60
3461. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3461. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். இஸ்ரவேலர் களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை யும் அறிவியுங்கள். அதனால் குற்ற மில்லை. யார் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3462. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ "".
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3462. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறித்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றுக்குக் கறுப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3463. حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنِي حَجَّاجٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدُبُ بْنُ عَبْدِ اللَّهِ، فِي هَذَا الْمَسْجِدِ، وَمَا نَسِينَا مُنْذُ حَدَّثَنَا، وَمَا نَخْشَى أَنْ يَكُونَ جُنْدُبٌ كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ، فَجَزِعَ فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ، فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ، قَالَ اللَّهُ تَعَالَى بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ، حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ "".
பாடம் : 50 இஸ்ராயீலின் சந்ததிகள் (இஸ்ரவேலர்கள்) பற்றிய குறிப்பு126
3463. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (இந்த நபிமொழியை பஸ்ரா விலுள்ள) இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததிலிருந்து நாம் மறக்கவில்லை. ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (அவர்கள் சொல்லா தைச் சொன்னதாக) பொய்யுரைத்திருப் பார்கள் என்று நாம் அஞ்சவில்லை.

(ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவித்த தாவது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்துவந்தார். (ஒருமுறை) அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தமது கையைத் துண்டித்துக்கொண்டார். அவர் இறக்கும்வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக்கொண்டேயிருந்தது. அல்லாஹ், ‘‘என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திக்கொண்டான். அவன்மீது நான் சொர்க்கத்தைத் தடுத்துவிட்டேன்” என்று கூறினான்.134

அத்தியாயம் : 60
3464. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ ثَلاَثَةً فِي بَنِي إِسْرَائِيلَ أَبْرَصَ وَأَقْرَعَ وَأَعْمَى بَدَا لِلَّهِ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ إِلَيْهِمْ مَلَكًا، فَأَتَى الأَبْرَصَ. فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ لَوْنٌ حَسَنٌ وَجِلْدٌ حَسَنٌ، قَدْ قَذِرَنِي النَّاسُ. قَالَ فَمَسَحَهُ، فَذَهَبَ عَنْهُ، فَأُعْطِيَ لَوْنًا حَسَنًا وَجِلْدًا حَسَنًا. فَقَالَ أَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الإِبِلُ ـ أَوْ قَالَ الْبَقَرُ هُوَ شَكَّ فِي ذَلِكَ، إِنَّ الأَبْرَصَ وَالأَقْرَعَ، قَالَ أَحَدُهُمَا الإِبِلُ، وَقَالَ الآخَرُ الْبَقَرُ ـ فَأُعْطِيَ نَاقَةً عُشَرَاءَ. فَقَالَ يُبَارَكُ لَكَ فِيهَا. وَأَتَى الأَقْرَعَ فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ شَعَرٌ حَسَنٌ، وَيَذْهَبُ عَنِّي هَذَا، قَدْ قَذِرَنِي النَّاسُ. قَالَ فَمَسَحَهُ فَذَهَبَ، وَأُعْطِيَ شَعَرًا حَسَنًا. قَالَ فَأَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الْبَقَرُ. قَالَ فَأَعْطَاهُ بَقَرَةً حَامِلاً، وَقَالَ يُبَارَكُ لَكَ فِيهَا. وَأَتَى الأَعْمَى فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ يَرُدُّ اللَّهُ إِلَىَّ بَصَرِي، فَأُبْصِرُ بِهِ النَّاسَ. قَالَ فَمَسَحَهُ، فَرَدَّ اللَّهُ إِلَيْهِ بَصَرَهُ. قَالَ فَأَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الْغَنَمُ. فَأَعْطَاهُ شَاةً وَالِدًا، فَأُنْتِجَ هَذَانِ، وَوَلَّدَ هَذَا، فَكَانَ لِهَذَا وَادٍ مِنْ إِبِلٍ، وَلِهَذَا وَادٍ مِنْ بَقَرٍ، وَلِهَذَا وَادٍ مِنَ الْغَنَمِ. ثُمَّ إِنَّهُ أَتَى الأَبْرَصَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ فَقَالَ رَجُلٌ مِسْكِينٌ، تَقَطَّعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلاَ بَلاَغَ الْيَوْمَ إِلاَّ بِاللَّهِ ثُمَّ بِكَ، أَسْأَلُكَ بِالَّذِي أَعْطَاكَ اللَّوْنَ الْحَسَنَ وَالْجِلْدَ الْحَسَنَ وَالْمَالَ بَعِيرًا أَتَبَلَّغُ عَلَيْهِ فِي سَفَرِي. فَقَالَ لَهُ إِنَّ الْحُقُوقَ كَثِيرَةٌ. فَقَالَ لَهُ كَأَنِّي أَعْرِفُكَ، أَلَمْ تَكُنْ أَبْرَصَ يَقْذَرُكَ النَّاسُ فَقِيرًا فَأَعْطَاكَ اللَّهُ فَقَالَ لَقَدْ وَرِثْتُ لِكَابِرٍ عَنْ كَابِرٍ. فَقَالَ إِنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ، وَأَتَى الأَقْرَعَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ، فَقَالَ لَهُ مِثْلَ مَا قَالَ لِهَذَا، فَرَدَّ عَلَيْهِ مِثْلَ مَا رَدَّ عَلَيْهِ هَذَا فَقَالَ إِنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ. وَأَتَى الأَعْمَى فِي صُورَتِهِ فَقَالَ رَجُلٌ مِسْكِينٌ وَابْنُ سَبِيلٍ وَتَقَطَّعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلاَ بَلاَغَ الْيَوْمَ إِلاَّ بِاللَّهِ، ثُمَّ بِكَ أَسْأَلُكَ بِالَّذِي رَدَّ عَلَيْكَ بَصَرَكَ شَاةً أَتَبَلَّغُ بِهَا فِي سَفَرِي. فَقَالَ قَدْ كُنْتُ أَعْمَى فَرَدَّ اللَّهُ بَصَرِي، وَفَقِيرًا فَقَدْ أَغْنَانِي، فَخُذْ مَا شِئْتَ، فَوَاللَّهِ لاَ أَجْهَدُكَ الْيَوْمَ بِشَىْءٍ أَخَذْتَهُ لِلَّهِ. فَقَالَ أَمْسِكْ مَالَكَ، فَإِنَّمَا ابْتُلِيتُمْ، فَقَدْ رَضِيَ اللَّهُ عَنْكَ وَسَخِطَ عَلَى صَاحِبَيْكَ "".
பாடம் : 51 இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த தொழுநோயாளி, கண்பார்வை அற்றவர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி
3464. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் மூன்று பேர் இருந் தனர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவ ராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலை யராகவும் (இன்னொருவர்) கண்பார்வை யற்றராகவும் இருந்தனர். அவர்களை அல்லாஹ் சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, ‘‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், ‘‘நல்ல நிறம், நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்ப மானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவரு(ப்பாகப் பார்)க்கிறார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன.

பிறகு அவ்வானவர், ‘‘எந்தச் செல்வம் உனக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், ‘‘ஒட்டகம்தான் லிஅல்லது மாடுதான்லி (எனக்கு மிகவும் விருப்பமான தாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘‘இதில் உனக்கு வளம் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன் னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், ‘‘அழகான முடி வேண்டும்; இந்த வழுக்கை என்னைவிட்டுப் போக வேண்டும்; மக்கள் அருவருப்படைந்து என்னை (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக்கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், ‘‘எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், ‘‘மாடுதான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு சூல் கொண்ட மாடு ஒன்றைக் கொடுத்து, ‘‘இதில் உனக்கு வளம் வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், ‘‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவினார். அவருக்கு அல்லாஹ் அவரது பார்வை யைத் திருப்பித்தந்தான். அவ்வானவர், ‘‘உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், ‘‘ஆடுதான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈன்றிடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெரு மளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் அவரது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்துபோய்விட்டது.) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உம்மிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத் தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார்.

அதற்கு அந்த மனிதர், ‘‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், ‘‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழுநோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்க வில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத் தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழை யாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தார்.

உடனே அவ்வானவர், ‘‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்” என்று சொன்னார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் அவரது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழுநோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவரும் முதலாமவர் அவருக்குப் பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தார். வானவரும், ‘‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்” என்று சொன்னார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் அவரது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக் கான பணம்) தீர்ந்துபோய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத் தில் என் தேவையை நிறைவேற்றிக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும் படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘‘நான் குருடனாகத்தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித்தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீர் விரும்புவதை எடுத்துக்கொள்வீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீர் எடுக்கின்ற எந்தப் பொருளை யும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற் காகச் சிரமப்படுத்தமாட்டேன்” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர், ‘‘உன் செல்வத்தை நீயே வைத்துக்கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத்தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந் தான். உன் இரு தோழர்கள் (தொழுநோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்)மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 60
3465. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ يَمْشُونَ إِذْ أَصَابَهُمْ مَطَرٌ، فَأَوَوْا إِلَى غَارٍ، فَانْطَبَقَ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ إِنَّهُ وَاللَّهِ يَا هَؤُلاَءِ لاَ يُنْجِيكُمْ إِلاَّ الصِّدْقُ، فَلْيَدْعُ كُلُّ رَجُلٍ مِنْكُمْ بِمَا يَعْلَمُ أَنَّهُ قَدْ صَدَقَ فِيهِ. فَقَالَ وَاحِدٌ مِنْهُمُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَجِيرٌ عَمِلَ لِي عَلَى فَرَقٍ مِنْ أَرُزٍّ، فَذَهَبَ وَتَرَكَهُ، وَأَنِّي عَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ، فَصَارَ مِنْ أَمْرِهِ أَنِّي اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا، وَأَنَّهُ أَتَانِي يَطْلُبُ أَجْرَهُ فَقُلْتُ اعْمِدْ إِلَى تِلْكَ الْبَقَرِ. فَسُقْهَا، فَقَالَ لِي إِنَّمَا لِي عِنْدَكَ فَرَقٌ مِنْ أَرُزٍّ. فَقُلْتُ لَهُ اعْمِدْ إِلَى تِلْكَ الْبَقَرِ فَإِنَّهَا مِنْ ذَلِكَ الْفَرَقِ، فَسَاقَهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ، فَفَرِّجْ عَنَّا. فَانْسَاحَتْ عَنْهُمُ الصَّخْرَةُ. فَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ آتِيهِمَا كُلَّ لَيْلَةٍ بِلَبَنِ غَنَمٍ لِي، فَأَبْطَأْتُ عَلَيْهِمَا لَيْلَةً فَجِئْتُ وَقَدْ رَقَدَا وَأَهْلِي وَعِيَالِي يَتَضَاغَوْنَ مِنَ الْجُوعِ، فَكُنْتُ لاَ أَسْقِيهِمْ حَتَّى يَشْرَبَ أَبَوَاىَ، فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَكَرِهْتُ أَنْ أَدَعَهُمَا، فَيَسْتَكِنَّا لِشَرْبَتِهِمَا، فَلَمْ أَزَلْ أَنْتَظِرُ حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ، فَفَرِّجْ عَنَّا. فَانْسَاحَتْ عَنْهُمُ الصَّخْرَةُ، حَتَّى نَظَرُوا إِلَى السَّمَاءِ. فَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي ابْنَةُ عَمٍّ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ، وَأَنِّي رَاوَدْتُهَا عَنْ نَفْسِهَا فَأَبَتْ إِلاَّ أَنْ آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ، فَطَلَبْتُهَا حَتَّى قَدَرْتُ، فَأَتَيْتُهَا بِهَا فَدَفَعْتُهَا إِلَيْهَا، فَأَمْكَنَتْنِي مِنْ نَفْسِهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا، فَقَالَتِ اتَّقِ اللَّهَ وَلاَ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ. فَقُمْتُ وَتَرَكْتُ الْمِائَةَ دِينَارٍ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ مِنْ خَشْيَتِكَ فَفَرِّجْ عَنَّا. فَفَرَّجَ اللَّهُ عَنْهُمْ فَخَرَجُوا "".
பாடம் : 52 (அல்லாஹ் கூறுகின்றான்:) அந்தக் குகை மற்றும் ஏட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீர் கருதுகின்றீரா?135 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது பிரார்த்தித்தார்கள்: எங்கள் இறைவனே! உன்னுடைய பிரத்யேக அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்கு வாயாக! அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக் கத்தில் ஆழ்த்தினோம்; பிறகு அவர்களை எழச்செய்தோம்.....(18:9லி21) யிகுகை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்கஹ்ஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. இது மலையில் உள்ள திறப்பைக் குறிக்கும். அர்ரகீம்:ஏடு. யிமர்கூம்’ (83:9; 83:20): எழுதப்பட்ட ஏடு. இது யிரக்ம்’ (எழுதுதல்:பதித்தல்) என்பதிலிருந்து வந்தது. அவர்களின் உள்ளங்களை உறுதிப் படுத்தினோம் (18:14). அதாவது அவர்களுக்குப் பொறுமையை அருளினோம். ஷத(த்)தன் : எல்லை மீறல். அல்வஸீத் (18:18) : முற்றம். இதன் பன்மை : வஸாயித்; வுஸ்த். கதவுக்கும் யிவஸீத்’ என்பர். முஃஸதா (90:20) : மூடப்பட்டது; அடைக்கப்பட்டது. வாசலை மூடினான் என்பதைக் குறிக்க, யிஆஸத’ என்றும், ‘அவ்ஸத’ என்றும் கூறுவர். அவர்களை எழுப்பினோம் (பஅஸ்னாஹும்) (18:19) லிஅதாவது அவர்களுக்கு உயிர் கொடுத்தோம். அஸ்கா தஆமன் (தூய உணவு). (18:19) லிஅதாவது அதிக வளர்ச்சி தரக்கூடியது. அவர்களின் காதுகளில் அடித்தோம் (ளரப்னா அலா ஆதானிஹிம்) (18:11) லிஅதாவது அவர்களை (நன்கு) உறங்கவைத்தோம்; அவர்கள் உறங்கினார்கள். மறைவானதைப் பற்றி யூகமாக (ரஜ்மம் பில்ஃகைப்) (18:22) லிதெளிவாகத் தெரியாமல். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: தக்ரி(ளுஹும் (18:17) : அவர்களை விட்டுவிடும். பாடம் : 53 (மூவர் சிக்கிக்கொண்ட) குகை பற்றிய செய்தி
3465. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்துக் கொண்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம்மை (நமது) வாய்மையான செயல்தான் காப்பாற்ற முடியும். ஆகவே, நம்மில் ஒவ்வொருவரும், தாம் எந்த விஷயத்தில் வாய்மையாக நடந்துகொண்டதாக நம்புகிறாரோ அதைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

ஆகவே, அவர்களில் ஒருவர் பின்வருமாறு பிரார்த்தித்தார்:

‘‘இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் எனக்காக ஒரு யிஃபரக்’ (அளவு) நெல்(லை) கூலிக்கு(ப் பேசி) வேலை செய்தார். பிறகு கூலியை (வாங்கிக்கொள்ளாமல்) விட்டு விட்டுச் சென்றுவிட்டார். நான் அந்த யிஃபரக்’ அளவு நெல்லை எடுத்து வேளாண்மை செய்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளை வாங்கினேன். பிறகு (ஒருநாள்) அவர் என்னிடம் தமது கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம், ‘‘அங்கு சென்று, அந்த மாடுகளை ஓட்டிச்செல்” என்றேன். அதற்கு அவர், ‘‘உங்களிடம் எனக்குரியது ஒரு யிஃபரக்’ அளவு நெல்தானே!” என்று கேட்டார்.

நான் அவரிடம், ‘‘அந்த மாடுகளை எடுத்துக்கொள். ஏனெனில் அவை (நீ விட்டுச்சென்ற) அந்த ஒரு யிஃபரக்’ நெல்லிலிருந்து கிடைத்தவைதான்” என்று சொன்னேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்.) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களை விட்டு (இந்தப் பாறையை) நீக்குவாயாக!” அந்தப் பாறை அவர்களைவிட்டு சற்றே விலகியது.

மற்றொருவர் பின்வருமாறு பிரார்த் தித்தார்:

‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாகிவிட்டது. அவர்கள் தூங்கிய பின்பு சென்றேன். என் மனைவி யும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக்கொண்டிருந்தனர். என் தாய் தந்தையர் பருகுகின்ற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்) விட்டுவிட, அவர்கள் (எழுந்தவுடன்) அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை.

ஆகவே, அதிகாலை நேரம் உதயமாகும்வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால்தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!” அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவுக்கு (இன்னும் சற்று) விலகியது.

மற்றொருவர் இப்படிப் பிரார்த்தித்தார்: ‘‘இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமான வளாக இருந்தாள். நான் அவளை எனக்கு யிஇணங்குமாறு’ அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டுவந்தால் தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம் ஒப்படைத்தாள்.

நான் அவளிடம் (உடலுறவுக்காக) அமர்ந்தபொழுது அவள், ‘‘அல்லாஹ்வை அஞ்சு. முத்திரையை அதற்குரிய (சட்டப் பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே” என்று சொன் னாள். உடனே நான் (உடலுறவு கொள் ளாமல்) எழுந்துவிட்டேன். நூறு தீனார் களை (அவளிடமே) விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால் (மீதமிருக்கும் அடைப்பையும்) எங்களைவிட்டு நீக்கு வாயாக!”

எனவே, அவர்களைவிட்டு அல்லாஹ் (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136

அத்தியாயம் : 60