3206. حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَأَى مَخِيلَةً فِي السَّمَاءِ أَقْبَلَ وَأَدْبَرَ وَدَخَلَ وَخَرَجَ وَتَغَيَّرَ وَجْهُهُ، فَإِذَا أَمْطَرَتِ السَّمَاءُ سُرِّيَ عَنْهُ، فَعَرَّفَتْهُ عَائِشَةُ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا أَدْرِي لَعَلَّهُ كَمَا قَالَ قَوْمٌ {فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ} "". الآيَةَ.
பாடம் : 5 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: அவன்தான் தனது அருளுக்கு (மழைக்கு) முன்னர் காற்றுகளைப் பரவ லாக (நுஷ்ரன்) அனுப்புகின்றான். (7:57)17 அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள்மீது புயல் காற்றை (காஸிஃப்) அனுப்புவான் (17:69). அதாவது அது ஒவ் வொரு பொருளையும் முறித்துப் போட்டு விடும். சூல் கொண்ட காற்றுகளை (லவாகிஹ்) நாம் அனுப்புகிறோம் (15:22). அதாவது மழைக்காற்றுகளை அனுப்புகிறோம். அதில் புயல் காற்று (இஃஸார்) வீசியது (2:266). கீழிருந்து மேல்நோக்கி தூண்போல வீசும் நெருப்புக் காற்று. குளிர்காற்று (ஸிர்ருன்). (3:117) பரவலான (ருஷ்ரன்). (7:57)
3206. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார் கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர் களின் முகம் மாறிவிடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். ஆகவே, (ஒருமுறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டுவந்தேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆத் சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்துகொண்டு), ‘‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேக மாகும்” (46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக்கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம். எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 59
3207. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ،. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَهِشَامٌ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بَيْنَا أَنَا عِنْدَ الْبَيْتِ بَيْنَ النَّائِمِ وَالْيَقْظَانِ ـ وَذَكَرَ بَيْنَ الرَّجُلَيْنِ ـ فَأُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُلِئَ حِكْمَةً وَإِيمَانًا، فَشُقَّ مِنَ النَّحْرِ إِلَى مَرَاقِّ الْبَطْنِ، ثُمَّ غُسِلَ الْبَطْنُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ مُلِئَ حِكْمَةً وَإِيمَانًا، وَأُتِيتُ بِدَابَّةٍ أَبْيَضَ دُونَ الْبَغْلِ وَفَوْقَ الْحِمَارِ الْبُرَاقُ، فَانْطَلَقْتُ مَعَ جِبْرِيلَ حَتَّى أَتَيْنَا السَّمَاءَ الدُّنْيَا قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ مَنْ مَعَكَ قِيلَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَأَتَيْتُ عَلَى آدَمَ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ مَرْحَبًا بِكَ مِنِ ابْنٍ وَنَبِيٍّ. فَأَتَيْنَا السَّمَاءَ الثَّانِيَةَ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ مَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم. قِيلَ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَأَتَيْتُ عَلَى عِيسَى وَيَحْيَى فَقَالاَ مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ. فَأَتَيْنَا السَّمَاءَ الثَّالِثَةَ، قِيلَ مَنْ هَذَا قِيلَ جِبْرِيلُ. قِيلَ مَنْ مَعَكَ قِيلَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَأَتَيْتُ يُوسُفَ فَسَلَّمْتُ عَلَيْهِ، قَالَ مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ فَأَتَيْنَا السَّمَاءَ الرَّابِعَةَ، قِيلَ مَنْ هَذَا قِيلَ جِبْرِيلُ. قِيلَ مَنْ مَعَكَ قِيلَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قِيلَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَأَتَيْتُ عَلَى إِدْرِيسَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ مَرْحَبًا مِنْ أَخٍ وَنَبِيٍّ. فَأَتَيْنَا السَّمَاءَ الْخَامِسَةَ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قِيلَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَأَتَيْنَا عَلَى هَارُونَ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ. فَأَتَيْنَا عَلَى السَّمَاءِ السَّادِسَةِ، قِيلَ مَنْ هَذَا قِيلَ جِبْرِيلُ. قِيلَ مَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ مَرْحَبًا بِهِ، وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَأَتَيْتُ عَلَى مُوسَى، فَسَلَّمْتُ {عَلَيْهِ} فَقَالَ مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ. فَلَمَّا جَاوَزْتُ بَكَى. فَقِيلَ مَا أَبْكَاكَ قَالَ يَا رَبِّ، هَذَا الْغُلاَمُ الَّذِي بُعِثَ بَعْدِي يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِهِ أَفْضَلُ مِمَّا يَدْخُلُ مِنْ أُمَّتِي. فَأَتَيْنَا السَّمَاءَ السَّابِعَةَ، قِيلَ مَنْ هَذَا قِيلَ جِبْرِيلُ. قِيلَ مَنْ مَعَكَ قِيلَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ مَرْحَبًا بِهِ، وَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَأَتَيْتُ عَلَى إِبْرَاهِيمَ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَرْحَبًا بِكَ مِنِ ابْنٍ وَنَبِيٍّ، فَرُفِعَ لِيَ الْبَيْتُ الْمَعْمُورُ، فَسَأَلْتُ جِبْرِيلَ فَقَالَ هَذَا الْبَيْتُ الْمَعْمُورُ يُصَلِّي فِيهِ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، إِذَا خَرَجُوا لَمْ يَعُودُوا إِلَيْهِ آخِرَ مَا عَلَيْهِمْ، وَرُفِعَتْ لِي سِدْرَةُ الْمُنْتَهَى فَإِذَا نَبِقُهَا كَأَنَّهُ قِلاَلُ هَجَرٍ، وَوَرَقُهَا كَأَنَّهُ آذَانُ الْفُيُولِ، فِي أَصْلِهَا أَرْبَعَةُ أَنْهَارٍ نَهْرَانِ بَاطِنَانِ وَنَهْرَانِ ظَاهِرَانِ، فَسَأَلْتُ جِبْرِيلَ فَقَالَ أَمَّا الْبَاطِنَانِ فَفِي الْجَنَّةِ، وَأَمَّا الظَّاهِرَانِ النِّيلُ وَالْفُرَاتُ، ثُمَّ فُرِضَتْ عَلَىَّ خَمْسُونَ صَلاَةً، فَأَقْبَلْتُ حَتَّى جِئْتُ مُوسَى، فَقَالَ مَا صَنَعْتَ قُلْتُ فُرِضَتْ عَلَىَّ خَمْسُونَ صَلاَةً. قَالَ أَنَا أَعْلَمُ بِالنَّاسِ مِنْكَ، عَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ، وَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَارْجِعْ إِلَى رَبِّكَ فَسَلْهُ. فَرَجَعْتُ فَسَأَلْتُهُ، فَجَعَلَهَا أَرْبَعِينَ، ثُمَّ مِثْلَهُ ثُمَّ ثَلاَثِينَ، ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عِشْرِينَ، ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عَشْرًا، فَأَتَيْتُ مُوسَى فَقَالَ مِثْلَهُ، فَجَعَلَهَا خَمْسًا، فَأَتَيْتُ مُوسَى فَقَالَ مَا صَنَعْتَ قُلْتُ جَعَلَهَا خَمْسًا، فَقَالَ مِثْلَهُ، قُلْتُ سَلَّمْتُ بِخَيْرٍ، فَنُودِيَ إِنِّي قَدْ أَمْضَيْتُ فَرِيضَتِي وَخَفَّفْتُ عَنْ عِبَادِي، وَأَجْزِي الْحَسَنَةَ عَشْرًا "". وَقَالَ هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" فِي الْبَيْتِ الْمَعْمُورِ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3207. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னி டம் கொண்டுவரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ‘ஸம்ஸம்’ நீரால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கை யாலும் நிரப்பப்பட்டது.20

மேலும், கோவேறுக் கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான யிபுராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் (அதில் ஏறி வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளித் தார். ‘‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘அவரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘ஆம்” என்றார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று சொன்னார்கள்.

பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘‘யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்க, ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘முஹம்மத் ‘‘ என்று பதிலளித்தார். ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

பிறகு நான், ஈசா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வர வாகட்டும்” என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற் குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. யிஜிப்ரீல்’ என்று பதிலளிக் கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட் டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத் தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற் குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஞீஜிப்ரீல்” என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஞீஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம்..’ஞீயார் அது?” என்று கேட்கப் பட்டது. ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப் பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘யிமுஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப் பப்பட்டதா? அவரது வரவு நல்வரவாகட் டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். ‘‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘‘இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தாரிலிருந்து சொர்க்கம் செல்வார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று வினவப்பட்டது. ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப் பட்டது.

நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன் னார்கள்.

பிறகு, ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் (வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘‘இதுதான் ‘அல்பைத்துல் மஅமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்” என்று சொன்னார்.

பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) யிசித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) யிஹஜ்ர்’ எனுமிடத்தின் (தயாரிக்கப்படும்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப்போல் இருந்தன. அதன் வேர்ப் பகுதியில் நான்கு ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. (சல்சபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே ஓடிக்கொண்டிருந்தன; மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே ஓடின.

நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘உள்ளே இருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு என்மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூசா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘‘என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ‘‘என்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ள”’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘எனக்கு மக்களைப் பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும். நான் இஸ்ரவேலர் களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள் ளேன். உங்கள் சமுதாயத்தார் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனி டம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள்.

நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூசா (அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.

பிறகு நான் மூசா (அலை) அவர்களி டம் சென்றேன். அவர்கள், ‘‘என்ன செய்தீர் கள்?” என்று கேட்க, ‘‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, ‘‘நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக்கொண்டுவிட்டேன்” என்று பதிலளித்தேன்.

அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), ‘‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை செயல்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) எளிதாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்” என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது ‘அல்பைத்துல் மஅமூர்’ தொடர்பாக அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 59
3208. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ "" إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا، فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ اكْتُبْ عَمَلَهُ وَرِزْقَهُ وَأَجَلَهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ. ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3208. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார்.21 பிறகு அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டைபோல் கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப்பிண்டமாக மாறுகிறது.22

பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வான வருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக் கப்படுகின்றன. (அவை:)

அதன் செயல்பாடு, வாழ்வாதாரம், வாழ்நாள், நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா என்று எழுதுமாறு அந்த வானவருக்குச் சொல்லப்படுகிறது.

பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால்தான், உங்களில் ஒருவர் (நற்)செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொண்டுவிடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்துவிடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்துவிடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரே யொரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக்கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசி களின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)

அத்தியாயம் : 59
3209. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَتَابَعَهُ أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَحَبَّ اللَّهُ الْعَبْدَ نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ. فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ. فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3209. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஓர் அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீரும் அவரை நேசிப்பீராக!” என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண் ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று அறிவிப்பார் கள். உடனே, விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமி யிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3210. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ الْمَلاَئِكَةَ تَنْزِلُ فِي الْعَنَانِ ـ وَهْوَ السَّحَابُ ـ فَتَذْكُرُ الأَمْرَ قُضِيَ فِي السَّمَاءِ، فَتَسْتَرِقُ الشَّيَاطِينُ السَّمْعَ، فَتَسْمَعُهُ فَتُوحِيهِ إِلَى الْكُهَّانِ، فَيَكْذِبُونَ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3210. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகத்தில் இறங்கி, விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். ஷைத்தான்கள் திருட்டுத்தனமாக (ஒளிந் திருந்து) அவற்றை ஒட்டுக்கேட்டு, சோதிடர்களுக்கு அவற்றை (உள்ளுதிப்பாக) அறிவித்துவிடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.23

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3211. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَالأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ باب مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ الْمَلاَئِكَةُ، يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3211. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடக் கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்துகொண்டு) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம், சொற்பொழிவு மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரது உபதேச) உரையைச் செவியுற்ற வண்ணம் வானவர்கள் (உள்ளே) வருவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3212. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ مَرَّ عُمَرُ فِي الْمَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ، فَقَالَ كُنْتُ أُنْشِدُ فِيهِ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ "". قَالَ نَعَمْ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3212. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) அவர்களை நோக்கி ™மைதியாக இருக்குமாறு சைகை செய்தார்கள்.)

அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், ‘‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக்கொண்டிருந் தேன்” என்று கூறிவிட்டு, அபூஹுரைரா (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி, ‘‘அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவி களுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்குத் தூய ஆன்மா(வான வானவர் ஜிப்ரீல்) மூலம் துணை புரிவாயாக!› என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.25

அத்தியாயம் : 59
3213. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِحَسَّانَ "" اهْجُهُمْ ـ أَوْ هَاجِهِمْ ـ وَجِبْرِيلُ مَعَكَ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3213. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், ‘‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக்கவி பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 59
3214. وَحَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ حُمَيْدَ بْنَ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى غُبَارٍ سَاطِعٍ فِي سِكَّةِ بَنِي غَنْمٍ. زَادَ مُوسَى مَوْكِبَ جِبْرِيلَ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3214. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் கிளம்புகின்ற புழுதியை (இன்றும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மூசா பின் இஸ்மாயில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(வானவர்) ஜிப்ரீல் அவர் களின் படைகள் கிளப்பிய’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.26

அத்தியாயம் : 59
3215. حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم كَيْفَ يَأْتِيكَ الْوَحْىُ قَالَ "" كُلُّ ذَاكَ يَأْتِي الْمَلَكُ أَحْيَانًا فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَهْوَ أَشَدُّهُ عَلَىَّ، وَيَتَمَثَّلُ لِي الْمَلَكُ أَحْيَانًا رَجُلاً، فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3215. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக்கொண்ட நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று என் முன் தோன்றி காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்” என்று பதிலளித்தார்கள்.27

அத்தியாயம் : 59
3216. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَتْهُ خَزَنَةُ الْجَنَّةِ أَىْ فُلُ هَلُمَّ "". فَقَالَ أَبُو بَكْرٍ ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3216. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு ஜோடி (பொருட்களை) அல்லாஹ் வின் பாதையில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் யிஇன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நான் எதிர் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.28

அத்தியாயம் : 59
3217. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" يَا عَائِشَةُ، هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ "". فَقَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. تَرَى مَا لاَ أَرَى. تُرِيدُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3217. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஆயிஷாவே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று கூறினார்கள். நான், ‘‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு” (அவர்மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள்வளங் களும் பொழியட்டும்.)

(அல்லாஹ்வின் தூதரே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கி றீர்கள்” என்று கூறினேன்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ‘நீங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.

அத்தியாயம் : 59
3218. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، ح قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِجِبْرِيلَ "" أَلاَ تَزُورُنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا "" قَالَ فَنَزَلَتْ {وَمَا نَتَنَزَّلُ إِلاَّ بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} الآيَةَ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3218. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதைவிட அதிகமாக (அடிக்கடி) சந்திக்கமாட்டீர்களா?” என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள்.

அப்போது, ‘‘(நபியே!) நாம் உங்கள் இறைவனின் உத்தரவின்றி இறங்கு வதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை” (19:64) எனும் இறைவசனம் அருளப்பட்டது.29

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3219. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3219. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி (வானவர்) ஜிப்ரீல் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகரித்துக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழிவழக்குகள் அளவுக்கு வந்து நின்றது.30

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அத்தியாயம் : 59
3220. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ. وَعَنْ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَعْمَرٌ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. وَرَوَى أَبُو هُرَيْرَةَ وَفَاطِمَةُ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ الْقُرْآنَ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3220. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தைவிட) அதிகமாக வாரி வழங்கு வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள்.31

ஜிப்ரீல் (அலை) அவர்கள், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது நபியவர்கள் (மழைக்)காற்றைவிட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ் வார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ‘‘எனக்கு குர்ஆன் முழுவதையும் (வானவர்) ஜிப்ரீல் ஓதிக் காட்டிவந்தார்” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.

அத்தியாயம் : 59
3221. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ. قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي، فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ "". يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ.
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3221. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அஸ்ர் தொழுகையைச் சிறிது தாமதப்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸ்ரை இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், ‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை அறிந்து சொல்லுங்கள், ‘‘உர்வா!” என்று சொன்னார்கள்.

அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுவிக்க, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழு தேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்” என்று தம் விரல்களால் ஐந்து தொழுகை களை எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டதாக பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்” என்றார்கள்.32

அத்தியாயம் : 59
3222. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَالَ لِي جِبْرِيلُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، أَوْ لَمْ يَدْخُلِ النَّارَ، قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3222. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாகக் கருதாமல் இறந்துவிடுபவர், சொர்க்கத்தில் நுழைவார் லிஅல்லது நரகம் செல்லமாட்டார்லி என்று (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!” என்று பதிலளித்தார்கள்.33

அத்தியாயம் : 59
3223. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْمَلاَئِكَةُ يَتَعَاقَبُونَ، مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَالْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ، فَيَقُولُ كَيْفَ تَرَكْتُمْ {عِبَادِي} فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ يُصَلُّونَ "".
பாடம் : 6 வானவர்கள் லி அவர்கள்மீது சாந்தி பொழியட்டும்!19 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘வானவர் களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர் களின் பகைவர் ஆவார்” என்று சொன் னார்கள். யிநிச்சயமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர்களாக இருக்கிறோம்’ (37:165) என்று சொல்வது வானவர்கள்தான்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன் னார்கள்.
3223. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் ஒருவர்பின் ஒருவராக அடுத்தடுத்து வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகை யிலும் அஸ்ருடைய தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றார்கள். பிறகு, அல்லாஹ் லிஅவனோ மிகவும் அறிந்தவன்லி அவர்களிடம், ‘‘(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான்.

அதற்கு அவ்வானவர்கள், ‘‘அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களி டம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப் பார்கள்.34

அத்தியாயம் : 59
3224. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ حَدَّثَهُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَشَوْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وِسَادَةً فِيهَا تَمَاثِيلُ كَأَنَّهَا نُمْرُقَةٌ، فَجَاءَ فَقَامَ بَيْنَ الْبَابَيْنِ وَجَعَلَ يَتَغَيَّرُ وَجْهُهُ، فَقُلْتُ مَا لَنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" مَا بَالُ هَذِهِ الْوِسَادَةِ "". قَالَتْ وِسَادَةٌ جَعَلْتُهَا لَكَ لِتَضْطَجِعَ عَلَيْهَا. قَالَ "" أَمَا عَلِمْتِ أَنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَأَنَّ مَنْ صَنَعَ الصُّورَةَ يُعَذَّبُ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ أَحْيُوا مَا خَلَقْتُمْ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3224. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது

நபி (ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரு கதவுகளுக்கிடையே நின்றுகொண்டார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத்தொடங்கியது. நான், ‘‘நாங்கள் என்ன (தவறு) செய்துவிட்டோம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்தத் தலையணையின் நிலை என்ன?” என்று (கோபமாகக்) கேட்டார்கள்.

நான், ‘‘இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக்கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘உருவப் படம் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்’ என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.37

அத்தியாயம் : 59
3225. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةُ تَمَاثِيلَ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3225. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59