3116. حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَاللَّهُ الْمُعْطِي وَأَنَا الْقَاسِمُ، وَلاَ تَزَالُ هَذِهِ الأُمَّةُ ظَاهِرِينَ عَلَى مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகின்றான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; நான் பங்கிடுபவன் ஆவேன். இந்த (என்) சமுதாயத்தார், அவர்களை எதிர்ப்பவர்கள்மீது ஆதிக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இறுதி யில், அவர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலையிலேயே இறைக்கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.30

இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 57
3117. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا أُعْطِيكُمْ وَلاَ أَمْنَعُكُمْ، أَنَا قَاسِمٌ أَضَعُ حَيْثُ أُمِرْتُ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக் குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவன்தான். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கின்றேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 57
3118. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي عَيَّاشٍ ـ وَاسْمُهُ نُعْمَانُ ـ عَنْ خَوْلَةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ رِجَالاً يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3118. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள் கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே கிடைக்கும்.

இதை கவ்லா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3119. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ الأَجْرُ وَالْمَغْنَمُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3119. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரைகளின் நெற்றிகளில் நன்மையும் நற்பலனும் போர்ச் செல்வமும் மறுமை நாள்வரை பிணைக்கப்பட்டிருக்கின்றன.34

இதை உர்வா பின் அல்ஜஅத் அல் பாரிக்கீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.


அத்தியாயம் : 57
3120. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفِقُنَّ كُنُوزَهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாரசீகப் பேரரசர்) இப்போதைய கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப்பின் கிஸ்ரா எவரும் இருக்கமாட்டார். (கிழக்கு ரோமானியப் பேரரசரான இப்போதைய) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப்பின் சீசர் எவரும் இருக்கமாட்டார். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களை நீங்கள் அல்லாஹ் வின் பாதையில் செலவழிப்பீர்கள்.35

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 57
3121. حَدَّثَنَا إِسْحَاقُ، سَمِعَ جَرِيرًا، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு கிஸ்ரா எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு சீசர் எவரும் இருக்கமாட்டார். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பீர்கள்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 57
3122. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا سَيَّارٌ، حَدَّثَنَا يَزِيدُ الْفَقِيرُ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُحِلَّتْ لِي الْغَنَائِمُ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3122. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. (எனக்கு முந்தைய இறைத்தூதர்களுக்கு அனுமதிக் கப்படவில்லை).36

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 57
3123. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلاَّ الْجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَاتِهِ، بِأَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ {مَعَ مَا نَالَ} مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் போரிடு வதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மை யுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத் துடன் அவரை அவரது வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப் பேற்றுக்கொண்டுள்ளான்.37

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 57
3124. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لاَ يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهْوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا، وَلاَ أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا، وَلاَ أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهْوَ يَنْتَظِرُ وِلاَدَهَا. فَغَزَا فَدَنَا مِنَ الْقَرْيَةِ صَلاَةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ، اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا. فَحُبِسَتْ، حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ، فَجَمَعَ الْغَنَائِمَ، فَجَاءَتْ ـ يَعْنِي النَّارَ ـ لِتَأْكُلَهَا، فَلَمْ تَطْعَمْهَا، فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولاً، فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ. فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمُ الْغُلُولُ. فَلْتُبَايِعْنِي قَبِيلَتُكَ، فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلاَثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمُ الْغُلُولُ، فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنَ الذَّهَبِ فَوَضَعُوهَا، فَجَاءَتِ النَّارُ فَأَكَلَتْهَا، ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ، رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் ஒருவர் அறப் போருக்குச் சென்றார்.38 அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ‘‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவர் அவளுடன் தாம்பத்தியம் தொடங்க விரும்பி இன்னும் தொடங்காமல் இருந்தால், அவர் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப் பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்” என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார்.

ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகையின் நேரத்தில், அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, ‘‘நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, ‘‘இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்துவிடுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.39

எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும்வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற)பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ண வில்லை.40

ஆகவே, அந்த இறைத்தூதர், ‘‘(இந்தப் பொருட்களிலிருந்து) திருடப்பட்ட பொருள் ஒன்று உங்களிடையே உள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார். (உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருந்தபோது) ஒரு மனிதனின் கை இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண் டது. அப்போது இறைத்தூதர், ‘‘உங்களி டையேதான் திருடப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன் குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார்.41

(அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், ‘‘உங்களிடையேதான் திருடப்பட்ட பொருள் உள்ளது” என்றார். ஆகவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டுவந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது.

பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக்கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான்.42 நமது பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3125. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه لَوْلاَ آخِرُ الْمُسْلِمِينَ مَا فَتَحْتُ قَرْيَةً إِلاَّ قَسَمْتُهَا بَيْنَ أَهْلِهَا كَمَا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ.
பாடம் : 9 போரில் கலந்துகொண்டவருக்கே போர்ச் செல்வம் கிடைக்கும்.
3125. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்களின் வருங்காலத் தலை முறை இல்லாவிட்டால் நபி (ஸல்) அவர்கள் கைபர் பகுதியைப் பங்கிட்டதைப் போன்று நான் வெல்கின்ற ஒவ்வோர் ஊரையும் (அவ்வூரிலுள்ள நிலங்களையும்) அதை (வென்றவர்களான) உரியவர்களி டையே பங்கிட்டிருப்பேன்.

இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3126. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ حَدَّثَنَا أَبُو مُوسَى الأَشْعَرِيُّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ أَعْرَابِيٌّ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم الرَّجُلُ يُقَاتِلُ لِلْمَغْنَمِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِيُذْكَرَ، وَيُقَاتِلُ لِيُرَى مَكَانُهُ، مَنْ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ "" مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا فَهْوَ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 10 போர்ச் செல்வங்களுக்காக (மட்டும்) போரிட்டவரின் நன்மை குறையுமா?
3126. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘யிஒரு மனிதர் போரில் கிடைக்கும் பொருட்களுக்காகப் போரிடுகிறார். மற்றொரு மனிதர் தாம் (புகழ்ந்து) பேசப் பட வேண்டும் என்பதற்காகப் போர் புரிகிறார். (இன்னொருவர்) தமது (வீரமிக்க) அந்தஸ்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகப் போர் புரிகிறார். (இவர்களில்) யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர் ஆவார்?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறாரோ அவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.43

அத்தியாயம் : 57
3127. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُهْدِيَتْ لَهُ أَقْبِيَةٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرَةٌ بِالذَّهَبِ، فَقَسَمَهَا فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، وَعَزَلَ مِنْهَا وَاحِدًا لِمَخْرَمَةَ بْنِ نَوْفَلٍ، فَجَاءَ وَمَعَهُ ابْنُهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَقَامَ عَلَى الْبَابِ فَقَالَ ادْعُهُ لِي. فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَوْتَهُ فَأَخَذَ قَبَاءً فَتَلَقَّاهُ بِهِ وَاسْتَقْبَلَهُ بِأَزْرَارِهِ فَقَالَ "" يَا أَبَا الْمِسْوَرِ، خَبَأْتُ هَذَا لَكَ، يَا أَبَا الْمِسْوَرِ، خَبَأْتُ هَذَا لَكَ "". وَكَانَ فِي خُلُقِهِ شِدَّةٌ. وَرَوَاهُ ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ. قَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ حَدَّثَنَا أَيُّوبُ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ الْمِسْوَرِ قَدِمَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقْبِيَةٌ. تَابَعَهُ اللَّيْثُ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ.
பாடம் : 11 (பிற நாடுகளிலிருந்து) தமக்கு வருகின்ற அன்பளிப்புகளை (தம் தோழர்களிடையே) தலைவர் பங்கிடுவதும் பங்கிடும்போது வருகை தராதவர் அல்லது வெளியே சென்றிருப்பவருக்காக (அவரது பங்கைத் தலைவர்) தனியே எடுத்துவைப்பதும்
3127. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து (ஒன்றை) மக்ரமா பின் நவ்ஃபல் (ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள்.

மக்ரமா (ரலி) அவர்கள், தம் மகன் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களுடன் வந்து வாசலருகே நின்று, ‘‘நபி (ஸல்) அவர்களை எனக்காகக் கூப்பிடு” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், மக்ரமா (ரலி) அவர்களின் குரலைக் கேட்டு, அங்கியை எடுத்துக்கொண்டு வந்து மக்ரமாவைச் சந்தித்து, தங்கப் பித்தான்களுடன் அவரை வரவேற்று, ‘‘மிஸ்வரின் தந்தையே! உமக்காக நான் இதை எடுத்து வைத்தேன். மிஸ்வரின் தந்தையே! உமக்காக நான் இதை எடுத்து வைத்தேன்” என்று சொன்னார்கள். (ஏனெனில்,) மக்ரமா (ரலி) அவர்களின் இயல்பில் சிறிது (கடுமை) இருந்தது.44

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 57
3128. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، فَكَانَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِمْ.
பாடம் : 12 பனூ குறைழா, பனுந் நளீர் ஆகிய குலத்தாரின் நிலங்களை நபி (ஸல்) அவர்கள் எப்படிப் பங்கிட்டார்கள் என்பதும் அவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் தம் அவசரத் தேவை களுக்காகக் கொடுத்ததும்
3128. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா, பனூ நளீர் ஆகிய குலத்தாரை வெற்றி கொள்ளும்வரை, (இலவசமாகப் பயன் படுத்திக்கொள்ளும்படி தம்) பேரீச்ச மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் கொடுத்துவைத்திருந்தார்கள். அதன் (பனூ குறைழாவையும் பனூ நளீரையும் வெற்றி கொண்ட) பிறகு அவற்றை அவர்களிடமே நபி (ஸல்) அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார் கள்.45

அத்தியாயம் : 57
3129. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ أَحَدَّثَكُمْ هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ قَالَ لَمَّا وَقَفَ الزُّبَيْرُ يَوْمَ الْجَمَلِ دَعَانِي، فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَقَالَ يَا بُنَىِّ، إِنَّهُ لاَ يُقْتَلُ الْيَوْمَ إِلاَّ ظَالِمٌ أَوْ مَظْلُومٌ، وَإِنِّي لاَ أُرَانِي إِلاَّ سَأُقْتَلُ الْيَوْمَ مَظْلُومًا، وَإِنَّ مِنْ أَكْبَرِ هَمِّي لَدَيْنِي، أَفَتُرَى يُبْقِي دَيْنُنَا مِنْ مَالِنَا شَيْئًا فَقَالَ يَا بُنَىِّ بِعْ مَالَنَا فَاقْضِ دَيْنِي. وَأَوْصَى بِالثُّلُثِ، وَثُلُثِهِ لِبَنِيهِ، يَعْنِي عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُ ثُلُثُ الثُّلُثِ، فَإِنْ فَضَلَ مِنْ مَالِنَا فَضْلٌ بَعْدَ قَضَاءِ الدَّيْنِ شَىْءٌ فَثُلُثُهُ لِوَلَدِكَ. قَالَ هِشَامٌ وَكَانَ بَعْضُ وَلَدِ عَبْدِ اللَّهِ قَدْ وَازَى بَعْضَ بَنِي الزُّبَيْرِ خُبَيْبٌ وَعَبَّادٌ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعَةُ بَنِينَ وَتِسْعُ بَنَاتٍ. قَالَ عَبْدُ اللَّهِ فَجَعَلَ يُوصِينِي بِدَيْنِهِ وَيَقُولُ يَا بُنَىِّ، إِنْ عَجَزْتَ عَنْهُ فِي شَىْءٍ فَاسْتَعِنْ عَلَيْهِ مَوْلاَىَ. قَالَ فَوَاللَّهِ مَا دَرَيْتُ مَا أَرَادَ حَتَّى قُلْتُ يَا أَبَتِ مَنْ مَوْلاَكَ قَالَ اللَّهُ. قَالَ فَوَاللَّهِ مَا وَقَعْتُ فِي كُرْبَةٍ مِنْ دَيْنِهِ إِلاَّ قُلْتُ يَا مَوْلَى الزُّبَيْرِ، اقْضِ عَنْهُ دَيْنَهُ. فَيَقْضِيهِ، فَقُتِلَ الزُّبَيْرُ ـ رضى الله عنه ـ وَلَمْ يَدَعْ دِينَارًا وَلاَ دِرْهَمًا، إِلاَّ أَرَضِينَ مِنْهَا الْغَابَةُ، وَإِحْدَى عَشْرَةَ دَارًا بِالْمَدِينَةِ، وَدَارَيْنِ بِالْبَصْرَةِ، وَدَارًا بِالْكُوفَةِ، وَدَارًا بِمِصْرَ. قَالَ وَإِنَّمَا كَانَ دَيْنُهُ الَّذِي عَلَيْهِ أَنَّ الرَّجُلَ كَانَ يَأْتِيهِ بِالْمَالِ فَيَسْتَوْدِعُهُ إِيَّاهُ فَيَقُولُ الزُّبَيْرُ لاَ وَلَكِنَّهُ سَلَفٌ، فَإِنِّي أَخْشَى عَلَيْهِ الضَّيْعَةَ، وَمَا وَلِيَ إِمَارَةً قَطُّ وَلاَ جِبَايَةَ خَرَاجٍ وَلاَ شَيْئًا، إِلاَّ أَنْ يَكُونَ فِي غَزْوَةٍ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ مَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ـ رضى الله عنهم ـ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ فَحَسَبْتُ مَا عَلَيْهِ مِنَ الدَّيْنِ فَوَجَدْتُهُ أَلْفَىْ أَلْفٍ وَمِائَتَىْ أَلْفٍ قَالَ فَلَقِيَ حَكِيمُ بْنُ حِزَامٍ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ فَقَالَ يَا ابْنَ أَخِي، كَمْ عَلَى أَخِي مِنَ الدَّيْنِ فَكَتَمَهُ. فَقَالَ مِائَةُ أَلْفٍ. فَقَالَ حَكِيمٌ وَاللَّهِ مَا أُرَى أَمْوَالَكُمْ تَسَعُ لِهَذِهِ. فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ أَفَرَأَيْتَكَ إِنْ كَانَتْ أَلْفَىْ أَلْفٍ وَمِائَتَىْ أَلْفٍ قَالَ مَا أُرَاكُمْ تُطِيقُونَ هَذَا، فَإِنْ عَجَزْتُمْ عَنْ شَىْءٍ مِنْهُ فَاسْتَعِينُوا بِي. قَالَ وَكَانَ الزُّبَيْرُ اشْتَرَى الْغَابَةَ بِسَبْعِينَ وَمِائَةِ أَلْفٍ، فَبَاعَهَا عَبْدُ اللَّهِ بِأَلْفِ أَلْفٍ وَسِتِّمِائَةِ أَلْفٍ ثُمَّ قَامَ فَقَالَ مَنْ كَانَ لَهُ عَلَى الزُّبَيْرِ حَقٌّ فَلْيُوَافِنَا بِالْغَابَةِ، فَأَتَاهُ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، وَكَانَ لَهُ عَلَى الزُّبَيْرِ أَرْبَعُمِائَةِ أَلْفٍ فَقَالَ لِعَبْدِ اللَّهِ إِنْ شِئْتُمْ تَرَكْتُهَا لَكُمْ. قَالَ عَبْدُ اللَّهِ لاَ. قَالَ فَإِنْ شِئْتُمْ جَعَلْتُمُوهَا فِيمَا تُؤَخِّرُونَ إِنْ أَخَّرْتُمْ. فَقَالَ عَبْدُ اللَّهِ لاَ. قَالَ قَالَ فَاقْطَعُوا لِي قِطْعَةً. فَقَالَ عَبْدُ اللَّهِ لَكَ مِنْ هَا هُنَا إِلَى هَا هُنَا. قَالَ فَبَاعَ مِنْهَا فَقَضَى دَيْنَهُ فَأَوْفَاهُ، وَبَقِيَ مِنْهَا أَرْبَعَةُ أَسْهُمٍ وَنِصْفٌ، فَقَدِمَ عَلَى مُعَاوِيَةَ وَعِنْدَهُ عَمْرُو بْنُ عُثْمَانَ وَالْمُنْذِرُ بْنُ الزُّبَيْرِ وَابْنُ زَمْعَةَ فَقَالَ لَهُ مُعَاوِيَةُ كَمْ قُوِّمَتِ الْغَابَةُ قَالَ كُلُّ سَهْمٍ مِائَةَ أَلْفٍ. قَالَ كَمْ بَقِيَ قَالَ أَرْبَعَةُ أَسْهُمٍ وَنِصْفٌ. قَالَ الْمُنْذِرُ بْنُ الزُّبَيْرِ قَدْ أَخَذْتُ سَهْمًا بِمِائَةِ أَلْفٍ. قَالَ عَمْرُو بْنُ عُثْمَانَ قَدْ أَخَذْتُ سَهْمًا بِمِائَةِ أَلْفٍ. وَقَالَ ابْنُ زَمْعَةَ قَدْ أَخَذْتُ سَهْمًا بِمِائَةِ أَلْفٍ. فَقَالَ مُعَاوِيَةُ كَمْ بَقِيَ فَقَالَ سَهْمٌ وَنِصْفٌ. قَالَ أَخَذْتُهُ بِخَمْسِينَ وَمِائَةِ أَلْفٍ. قَالَ وَبَاعَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ نَصِيبَهُ مِنْ مُعَاوِيَةَ بِسِتِّمِائَةِ أَلْفٍ، فَلَمَّا فَرَغَ ابْنُ الزُّبَيْرِ مِنْ قَضَاءِ دَيْنِهِ قَالَ بَنُو الزُّبَيْرِ اقْسِمْ بَيْنَنَا مِيرَاثَنَا. قَالَ لاَ، وَاللَّهِ لاَ أَقْسِمُ بَيْنَكُمْ حَتَّى أُنَادِيَ بِالْمَوْسِمِ أَرْبَعَ سِنِينَ أَلاَ مَنْ كَانَ لَهُ عَلَى الزُّبَيْرِ دَيْنٌ فَلْيَأْتِنَا فَلْنَقْضِهِ. قَالَ فَجَعَلَ كَلَّ سَنَةٍ يُنَادِي بِالْمَوْسِمِ، فَلَمَّا مَضَى أَرْبَعُ سِنِينَ قَسَمَ بَيْنَهُمْ قَالَ فَكَانَ لِلزُّبَيْرِ أَرْبَعُ نِسْوَةٍ، وَرَفَعَ الثُّلُثَ، فَأَصَابَ كُلَّ امْرَأَةٍ أَلْفُ أَلْفٍ وَمِائَتَا أَلْفٍ، فَجَمِيعُ مَالِهِ خَمْسُونَ أَلْفَ أَلْفٍ وَمِائَتَا أَلْفٍ.
பாடம் : 13 நபி (ஸல்) அவர்களுடனோ, ஆட்சித் தலைவருடனோ சேர்ந்து அறப்போர் புரிந்த, உயிருள்ள அல்லது இறந்துவிட்ட அறப்போர் வீரரின் செல்வத்தில் உள்ள வளம் (பரக்கத்)
3129. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி) அவர்கள் யிஜமல்’ போரின் போது நின்றபடி என்னை அழைத்தார்கள்.46 நான் அவர்களின் பக்கத்தில் சென்று நின்றேன்.

அவர்கள், ‘‘என் அன்பு மகனே! இன்று (தமக்கு எதிரானவரின் பார்வையில்) அக்கிரமக்காரராகவோ (தமது பார்வையில்) அநீதி இழைக்கப்பட்டவராகவோ இருப்பவரைத் தவிர வேறெவரும் கொல்லப்படமாட்டார்கள். நான் இன்று அநீதியிழைக்கப்பட்ட நிலையில் (நிரபராதி யாகக்) கொல்லப்பட்டுவிடுவேன் என்றே கருதுகிறேன். (அதைவிட) எனது கடன் தான் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. நமது கடன் நமது செல்வத்தில் எதையாவது மீதிவைக்கும் என்று நீ கருதுகிறாயா? மகனே! நம் சொத்தை விற்றுவிட்டு என் கடனை அடைத்துவிடு” என்று சொன்னார்கள்.

பிறகு தமது சொத்தில் மூன்றிலொரு பங்கை (இன்ன நற்பணிகளுக்காகச் செலவிட வேண்டுமென்று இறுதி விருப்பம் தெரிவித்து) சாசனம் செய்தார்கள். அந்த மூன்றிலொரு பங்கில் மூன்றிலொரு பங்கைத் தம் மக்களுக்கு லி அப்துல்லாஹ்வின் மக்களுக்கு லி கொடுக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். அதாவது ‘‘ஒன்பதில் ஒரு பங்கைலி அதுவும் நம் சொத்திலிருந்து கடனை அடைத்த பின்பு மீதியிருந்தால் லி உன் மக்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்தார்கள்.

லிஏனெனில், அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் பிள்ளைகள் சிலர், ஸுபைர் (ரலி) அவர் களின் பிள்ளைகளான குபைப், அப்பாத் ஆகியோருக்கு ஈடான வயதுடையவர் களாய் இருந்தனர். அப்போது ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஒன்பது ஆண் பிள்ளைகளும் ஒன்பது பெண் பிள்ளை களும் இருந்தனர்லி

(தொடர்ந்து) அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

தமது கடனை அடைத்துவிடும்படி என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள். பிறகு, ‘‘என் அன்பு மகனே! அதில் சிறிது உன்னால் அடைக்க முடியவில்லையென் றால் என் எஜமானிடம் உதவி கேள்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள், யிஎன் எஜமான்’ என்று யாரைக் குறிப்பிட்டார்கள் என்று (முதலில்) எனக்குத் தெரியவில்லை. அதனால் நான், ‘‘என் தந்தையே! தங்கள் எஜமான் யார்?” என்று கேட்டேன்.

அவர்கள், ‘‘அல்லாஹ்தான்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களின் கடனை அடைப்பதில் எனக்குச் சிரமம் ஏற்பட்ட போதெல்லாம், ‘‘(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களின் எஜமானனே! அவர் சார்பாக அவரது கடனை நீ அடைப்பாயாக!” என்று பிரார்த்தித்துவந்தேன்.

அந்த (எஜமான்) அல்லாஹ்வும் அதை அடைத்துவந்தான். ஸுபைர் (ரலி) அவர்கள் போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால், அவர்கள் ஒரு பொற்காசையோ வெள்ளிக்காசையோகூட (ரொக்கமாக) விட்டுச்செல்லவில்லை; இரண்டு நிலங்களைத் தவிர. அவற்றில் ஒன்று ‘அல்ஃகாபா’வில் இருந்த நிலமாகும்.47 மற்றும் மதீனாவில் பதினொரு வீடுகளையும் பஸ்ராவில் இரண்டு வீடுகளையும் கூஃபாவில் ஒரு வீட்டையும் எகிப்தில் ஒரு வீட்டையும் அவர்கள் விட்டுச்சென்றார்கள்.

அவர்கள் மீதிருந்த கடன் ஏற்பட்ட விதம் இதுதான்: ஒரு மனிதர் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சில பொருட்களைக் கொண்டுவந்து அடைக்கலமாகத் தந்து விட்டுச் செல்வது வழக்கம். ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘வேண்டாம். இதை நான் அடைக்கலப் பொருளாக ஏற்கமாட்டேன். மாறாக, இது என் பொறுப்பில் கடனாகும். அது அழிந்துபோய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

ஸுபைர் (ரலி) அவர்கள் எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஒருபோதும் விரும்பியதில்லை. யிகராஜ்’ (எனும் காப்பு) வரி வசூலிக்கும் பொறுப்பையோ வேறெந்தப் பணப் பொறுப்பையுமோ ஏற்றுக்கொண்டதில்லை; நபி (ஸல்) அவர்களுடன், அல்லது அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடன் அறப் போரில் பங்கெடுத்து (அதனால் கிடைத்த போர்ச் செல்வங்களில் பங்குபெற்றுக்) கொண்டதைத் தவிர (வேறெந்த வழியிலும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பொருளீட் டியதில்லை).

நான் அவர்கள் மீதிருந்த கடனை எண்ணிப்பார்த்தேன். மொத்தம் இருபத்திரண்டு லட்சம் கடன் இருக்கக் கண்டேன். அப்போது ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘என் சகோதரர் மகனே! என் சகோதரர்மீது எவ்வளவு கடன் இருக்கின்றது?” என்று கேட்டார்கள்.48 நான் அதை மறைத்து, ‘‘ஒரு லட்சம்தான்” என்று சொன்னேன். ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் சொத்துகள் அவ்வளவு கடனையும் அடைக்கப் போதாதே” என்று சொன்னார்கள். நான், ‘‘என் தந்தையின் கடன் இருபத்திரண்டு லட்சமாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இவ்வளவு (பெருந்தொகையை அடைக்க) உங்களால் முடியாது என்றே நான் கருதுகிறேன். உங்களால் அதில் ஓரளவு அடைக்க முடியாமல்போனால் என்னிடம் உதவி கேளுங்கள்” என்று சொன்னார்கள்.

ஸுபைர் (ரலி) அவர்கள் ‘அல்ஃகாபா’ வில் ஒரு லட்சத்து எழுபதாயிரத்திற்கு ஒரு சொத்தை வாங்கியிருந்தார்கள். அதை நான் பதினாறு லட்சத்திற்கு விலை மதிப்பிட்டிருந்தேன். பிறகு (மக்களிடையே), எழுந்து நின்று, ‘‘எவருக்கு ஸுபைர் (ரலி) அவர்கள் கடன் தர வேண்டியுள்ளதோ அவர் நம்மிடம் அல்ஃகாபாவுக்கு வரட்டும்” என்று அறிவித்தேன். உடனே அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், என்னிடம் வந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஸுபைர் (ரலி) அவர்கள் நான்கு லட்சம் தர வேண்டி யிருந்தது.

ஆகவே, அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் விரும்பினால் என் கடனை உங்களுக்கே விட்டுக்கொடுத்து விடுகி றேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘வேண்டாம்” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘‘சரி, நீங்கள் (சில கடன்களை) சற்றுத் தாமதமாக அடைப்பதாயிருந்தால் என் கடனையும் அப்படிப்பட்ட கடன்களில் ஒன்றாக நீங்கள் விரும்பினால் ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அதுவும் வேண்டாம் (உடனே உங்கள் கடனை வாங்கிக் கொள்ளுங்கள்)” என்று சொல்லிவிட்டேன்.

அவர்கள், ‘‘அப்படியென்றால் (உங்கள் நிலத்திலிருந்து என் கடனுக்குச் சமமான) ஒரு பகுதியை எனக்குத் தந்துவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘இங்கிருந்து இதுவரை உங்களுக்கு உரியது” என்று (அவருக்குச் சேரும் நிலத்தின் அளவை வரையறுத்துச்) சொன்னேன்.

நான் அந்த ‘அல்ஃகாபா’ (மற்றும் வீடுகளில்) சிலவற்றை விற்று என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களின் கடனை (முழுவதுமாக) அடைத்துவிட்டேன். அல்ஃகாபாவின் நிலத்தில் நாலரைப் பங்குகள் மட்டும் விற்கப்படாமல் மீதமாயிருந்தன. முஆவியா (ரலி) அவர்களிடம் அம்ர் பின் உஸ்மான், முன்திர் பின் ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) ஆகியோர் இருக்க, நான் அங்கு சென்றேன். முஆவியா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்ஃகாபாவிலிருக்கும் (உங்கள் தந்தை ஸுபைர் (ரலி) அவர் களின்) சொத்திற்கு எவ்வளவு விலைமதிப்பு சொல்லப்பட்டது?” என்று என்னிடம் கேட்க, நான், ‘‘ஒவ்வொரு பங்கும் ஒரு லட்சம்” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அதில் எவ்வளவு (விற்காமல்) எஞ்சி யுள்ளது?” என்று கேட்டார்கள். நான், ‘‘நாலரைப் பங்குகள் எஞ்சியுள்ள”’ என்று பதில் சொன்னேன்.

முன்திர் பின் ஸுபைர் அவர்கள், ‘‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார். அம்ர் பின் உஸ்மான் அவர்கள், ‘‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் கள். இப்னு ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் கள். முஆவியா (ரலி) அவர்கள், ‘‘இப்போது எவ்வளவு மீதியுள்ளது?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஒன்றரைப் பங்கு (மட்டும்தான்) மீதியுள்ளது” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நான் அதை ஒன்றரை லட்சம் கொடுத்து எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் (தமக்கு வர வேண்டிய நான்கு லட்சத்திற்குப் பதிலாக தமக்குத் தரப்பட்ட நிலத்தை) முஆவியா (ரலி) அவர்களிடம் ஆறு லட்சத்திற்கு விற்று (இரண்டு லட்சம் இலாபம் அடைந்து)விட்டார்கள். நான் என் தந்தையின் கடன்களையெல்லாம் அடைத்து முடித்தபிறகு (என் சகோதரர்களான) ஸுபைர் (ரலி) அவர்களின் மக்கள், ‘‘நமக்கிடையே நமது வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுவிடுங்கள்” என்று என்னிடம் கோரினர்.

நான், ‘‘முடியாது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (ஹஜ்) பருவத்தில் நான்காண்டுகளுக்கு, ‘‘ஸுபைர் (ரலி) அவர்கள் எவருக்குக் கடன் தர வேண்டி யுள்ளதோ, அவர் நம்மிடம் வரட்டும். நாம் அவர் கடனை அடைப்போம்” என்று அறிவிக்காமல் உங்களிடையே அவருடைய சொத்துகளைப் பங்கிடவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டேன். பிறகு ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுப் பருவத்தில் அறிவிப்புக் கொடுக்கத் தொடங்கினேன். நான்காண்டுகள் கழிந்து விட்டபின் (யாரும் ஸுபைர் (ரலி) அவர்கள் கடன் தர வேண்டியிருப்பதாகக் கேட்டு வராததால் என் சகோதர சகோதரி களான) ஸுபைர் (ரலி) அவர்களின் மக்களுக்கிடையே மீதிச் சொத்துகளைப் பங்கிட்டுவிட்டேன்.

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நான்கு துணைவியர் இருந்தனர். ஸுபைர் (ரலி) அவர்கள் தமது இறுதி விருப்பமாகத் தெரிவித்த (மரண சாசனப் பங்கான) மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தது போக, மீதியை அவர்களின் துணைவியருக்குக் கொடுத்தேன். ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு லட்சம் கிடைத்தது.

ஆக, ஸுபைர் (ரலி) அவர்களின் சொத்துகளின் மொத்த மதிப்பு (கடனுக்காகக் கொடுத்தது, நல்லறங்களுக்காகச் செய்த மரண சாசனத் தொகை, வாரிசுகளுக்குக் கிடைத்தது ஆகிய அனைத்தும் சேர்ந்து) ஐந்து கோடியே இரண்டு இலட்சமாகும் (என மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது).49

அத்தியாயம் : 57
3130. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَوْهَبٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّمَا تَغَيَّبَ عُثْمَانُ عَنْ بَدْرٍ، فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَتْ مَرِيضَةً. فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ "".
பாடம் : 14 ஒரு பணிக்காக ஒருவரைத் தலைவர் தூதுவராக அனுப்பியிருந்தாலோ, உள்ளூரில் தங்கியிருக்கும்படி உத்தரவிட்டிருந்தாலோ அவருக்குப் போர்ச் செல்வங்களில் பங்கு வழங்கப்படுமா?
3130. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் போனதற்குக் காரணம், அவர்களின் துணைவியார் நோயாளியாக இருந்ததுதான். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியாவார்.50

அப்போது நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், ‘‘பத்ர் போரில் கலந்துகொண்டவருக்குரிய நன்மையும் (போர்ச் செல்வத்தில்) அவருக் குரிய பங்கும் உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 57
3131. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ وَزَعَمَ عُرْوَةُ أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِهِمْ ". وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْتَظَرَ آخِرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً، حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ. قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمُسْلِمِينَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ قَدْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي قَدْ رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، مَنْ أَحَبَّ أَنْ يُطَيِّبَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ ". فَقَالَ النَّاسُ قَدْ طَيَّبْنَا ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ لَهُمْ. فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِي ذَلِكَ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ " فَرَجَعَ النَّاسُ، فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ قَدْ طَيَّبُوا فَأَذِنُوا. فَهَذَا الَّذِي بَلَغَنَا عَنْ سَبْىِ هَوَازِنَ.
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3131. மர்வான் பின் அல் ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

ஹவாஸின் குலத்தின் தூதுக் குழு வினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களாக வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் தம் செல்வங்களை யும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்(துக் காத்)திருந்தேன்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியபோது பத்துக் கும் மேற்பட்ட நாட்கள் ஹவாஸின் குலத் தாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் எங்கள் கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்துவிட்டு, ‘‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறாரோ அவர் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லாஹ் (இனிவரும் நாட்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகிறாரோ அவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், ‘‘நாங்கள் மனப் பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கின்றோம், அல்லாஹ் வின் தூதரே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் இதற்கு (உண்மையிலேயே) யார் சம்மதிக்கிறார்; யார் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களிடம் அவர்களின் தலைவர்கள் பேசினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:)

இதுதான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.53


அத்தியாயம் : 57
3133. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ عَاصِمٍ الْكُلَيْبِيُّ ـ وَأَنَا لِحَدِيثِ الْقَاسِمِ، أَحْفَظُ ـ عَنْ زَهْدَمٍ، قَالَ كُنَّا عِنْدَ أَبِي مُوسَى، فَأُتِيَ ذَكَرَ دَجَاجَةً وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ كَأَنَّهُ مِنَ الْمَوَالِي، فَدَعَاهُ لِلطَّعَامِ فَقَالَ إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا، فَقَذِرْتُهُ، فَحَلَفْتُ لاَ آكُلُ. فَقَالَ هَلُمَّ فَلأُحَدِّثْكُمْ عَنْ ذَاكَ، إِنِّي أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ فَقَالَ "" وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ "". وَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَهْبِ إِبِلٍ، فَسَأَلَ عَنَّا فَقَالَ "" أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ "". فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا مَا صَنَعْنَا لاَ يُبَارَكُ لَنَا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا إِنَّا سَأَلْنَاكَ أَنْ تَحْمِلَنَا، فَحَلَفْتَ أَنْ لاَ تَحْمِلَنَا أَفَنَسِيتَ قَالَ "" لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا "".
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3133. ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறி உணவு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப் பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (கிழக்கு ரோமானியரிடையேயிருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போன்று காணப் பட்டார். அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், ‘‘இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார்.

இதைக் கேட்ட அபூமூசா (ரலி) அவர்கள், ‘‘இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கி றேன்” என்று சொல்லிவிட்டுக் கூற லானார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான ஊர்தி ஒட்டகங்கள் என்னிடம் இல்லை” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, ‘‘அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, எங்களுக்கு (ஒட்டக மந்தைகளில்) வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து மந்தைகளைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்று) சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் எங்களுக்குள், ‘‘நாம் என்ன காரியம் செய்துவிட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு வளம் வழங்கப்படாதே” என்று பேசிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம்.

‘‘நாங்கள் தங்களிடம், யிநாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள்’ என்று கேட்டோம். யிநாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது’ என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், ‘‘நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்த தாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற் காகப் பரிகாரம் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.

இது இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 56
3134. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ سَرِيَّةً فِيهَا عَبْدُ اللَّهِ قِبَلَ نَجْدٍ، فَغَنِمُوا إِبِلاً كَثِيرًا، فَكَانَتْ سِهَامُهُمُ اثْنَىْ عَشَرَ بَعِيرًا أَوْ أَحَدَ عَشَرَ بَعِيرًا، وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا.
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3134. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக் குழுவை யிநஜ்த்’ பகுதியை நோக்கி அனுப்பிவைத்தார்கள். அதில் நானும் (ஒருவனாக) இருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச்செல்வமாகப் பெற்றோம். எங்கள் பங்குகள் (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினொன்று ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகத் தரப்பட்டது.


அத்தியாயம் : 57
3135. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُنَفِّلُ بَعْضَ مَنْ يَبْعَثُ مِنَ السَّرَايَا لأَنْفُسِهِمْ خَاصَّةً سِوَى قِسْمِ عَامَّةِ الْجَيْشِ.
பாடம் : 15 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) முஸ்லிம் களின் அவசியத் தேவைகளுக்கு உரியதாகும் என்பதற்கான ஆதாரம் தம் குலத்துப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பால்குடித்து வளர்ந்ததை ஹவாஸின் குலத்தார் எடுத்துச்சொல்லி,51 போரில் தாங்கள் இழந்த பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்க, முஸ்லிம்களிடமிருந்து ஹவாஸின் போர்க் கைதிகளை நபியவர்கள் விடுவித்தார்கள்.52 போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) செல்வத்திலிருந்தும் போர்ச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பாகத்திலிருந்தும் தருவதாக மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துவந்தார்கள். கைபர் நிலத்திலிருந்து கிடைத்த பேரீச்சம் பழங்களை அன்சாரிகளுக்கும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் வழங்கி னார்கள்.
3135. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அறப்போருக்காகப்) படைக் குழுக்களில் தாம் அனுப்பிவைக்கும் சிலருக்கு மட்டும் குறிப்பாகக் கொடுத்துவந்தார்கள். அவர்கள் பொதுவாகப் படையினருடன் சேர்ந்து பெறுகின்ற பங்குக்குமேல் (சற்று) அதிகப் படியாகக் கொடுத்துவந்தார்கள்.54


அத்தியாயம் : 57