3106. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ لَمَّا اسْتُخْلِفَ بَعَثَهُ إِلَى الْبَحْرَيْنِ، وَكَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ وَخَتَمَهُ، وَكَانَ نَقْشُ الْخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3106. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக (கலீஃபா) ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுந ராக) அனுப்பிவைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி (ஸல்) அவர்களுடைய மோதிரத்தால் முத்திரை யிட்டார்கள்.21

அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. யிமுஹம்மத்’ (எனும் சொல்) ஒரு வரியிலும் யிரசூல்’ (யிதூதர்’ எனும் சொல்) ஒரு வரியிலும் ‘அல்லாஹ்’ (‘அல்லாஹ்வின்’ எனும் சொல்) ஒரு வரியிலும் (யிமுஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ லி ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்’ என்று) பொறிக்கப்பட்டிருந்தது.

அத்தியாயம் : 57
3107. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ أَخْرَجَ إِلَيْنَا أَنَسٌ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ، فَحَدَّثَنِي ثَابِتٌ الْبُنَانِيُّ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا نَعْلاَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3107. ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்துபோன இரு காலணிகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘அவ்விரண் டும் நபி (ஸல்) அவர்களின் காலணிகள்” என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 57
3108. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ ـ رضى الله عنها ـ كِسَاءً مُلَبَّدًا وَقَالَتْ فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَزَادَ سُلَيْمَانُ عَنْ حُمَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ، وَكِسَاءً مِنْ هَذِهِ الَّتِي يَدْعُونَهَا الْمُلَبَّدَةَ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3108. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் ஒட்டுப்போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘இதை உடுத்திக்கொண்டி ருந்தபோதுதான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:

ஆயிஷா (ரலி) அவர்கள் யமன் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் ‘அல்முலப்பதா’ (ஒட்டுப்போட்டது) என்றழைக்கின்ற வகையிலிருந்து ஒரு போர்வையையும் (நபி (ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 57
3109. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ قَدَحَ، النَّبِيِّ صلى الله عليه وسلم انْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ. قَالَ عَاصِمٌ رَأَيْتُ الْقَدَحَ وَشَرِبْتُ فِيهِ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3109. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் ஆஸிம் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அந்தக் குவளையைக் கண்டேன். அதில் தண்ணீர் குடித்தேன்” என்று கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 57
3110. حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي أَنَّ الْوَلِيدَ بْنَ كَثِيرٍ، حَدَّثَهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ، حَدَّثَهُ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ أَنَّ عَلِيَّ بْنَ حُسَيْنٍ حَدَّثَهُ أَنَّهُمْ، حِينَ قَدِمُوا الْمَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ حُسَيْنِ بْنِ عَلِيٍّ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ لَقِيَهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَقَالَ لَهُ هَلْ لَكَ إِلَىَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا فَقُلْتُ لَهُ لاَ. فَقَالَ لَهُ فَهَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ الْقَوْمُ عَلَيْهِ، وَايْمُ اللَّهِ، لَئِنْ أَعْطَيْتَنِيهِ لاَ يُخْلَصُ إِلَيْهِمْ أَبَدًا حَتَّى تُبْلَغَ نَفْسِي، إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ ابْنَةَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ فَقَالَ "" إِنَّ فَاطِمَةَ مِنِّي، وَأَنَا أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا "". ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ، فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ قَالَ "" حَدَّثَنِي فَصَدَقَنِي، وَوَعَدَنِي فَوَفَى لِي، وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلاَلاً وَلاَ أُحِلُّ حَرَامًا، وَلَكِنْ وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِنْتُ عَدُوِّ اللَّهِ أَبَدًا "".
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3110. அலீ பின் ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்) (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் லிஅவர்கள்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!லி கொல்லப்பட்ட காலகட்டத்தில் யஸீத் பின் முஆவியா வைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தேன்.22

என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகி றீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கின்றேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாளை எனக்குக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தார் உங்களிடமிருந்து தமது அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக்கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணை யாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்றுசேராது” என்று கூறினார்.23

(பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூஜஹ்லுடைய மகளை (மணந்துகொள்ள)ப் பெண்பேசினார்கள். (அந்த நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தமது இந்தச் சொற்பொழிவு மேடையில் (நின்ற படி) உரையாற்றியதை நான் செவியுற் றேன்.

லிஅப்போது நான் பருவவயதை அடைந்துவிட்டிருந்தேன்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தமது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படு வார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை லி(அபுல்ஆஸ் பின் ரபீஉவை)லி அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைக் குறித்து (நினைவுகூர்ந்து) புகழ்ந்தார்கள்.

‘‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்கு றுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்.24 மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்றுசேர முடியாது” என்று கூறினார்கள்.25

அத்தியாயம் : 57
3111. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ مُنْذِرٍ، عَنِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ لَوْ كَانَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ ذَاكِرًا عُثْمَانَ ـ رضى الله عنه ـ ذَكَرَهُ يَوْمَ جَاءَهُ نَاسٌ فَشَكَوْا سُعَاةَ عُثْمَانَ، فَقَالَ لِي عَلِيٌّ اذْهَبْ إِلَى عُثْمَانَ فَأَخْبِرْهُ أَنَّهَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَمُرْ سُعَاتَكَ يَعْمَلُونَ فِيهَا. فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ أَغْنِهَا عَنَّا. فَأَتَيْتُ بِهَا عَلِيًّا فَأَخْبَرْتُهُ فَقَالَ ضَعْهَا حَيْثُ أَخَذْتَهَا.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3111. இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள்26 கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைக் குறை பேசுபவர்களாக இருந்திருப்பின் மக்கள் சிலர் அவர்களிடம் வந்து, உஸ்மான் (ரலி) அவர்களுடைய (அரசின்) ஸகாத் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து முறையிட்டபோதே குறை பேசியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அலீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘நீ உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று, யிஇந்த ஏடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்த ஸதகா (ஸகாத்தின் சட்டங்கள்) ஆகும். இந்த ஏட்டிலுள்ளபடி ஸகாத் வசூலிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று தெரிவி” என்று கூறினார்கள்.

நான் அதை எடுத்துக்கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘‘அது நமக்குத் தேவையில்லை. (அது ஏற்கெனவே நம்மிடம் உள்ளது)” என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நான் அதை அலீ (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விவரம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘‘அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 57
3112. قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، قَالَ سَمِعْتُ مُنْذِرًا الثَّوْرِيَّ، عَنِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ أَرْسَلَنِي أَبِي، خُذْ هَذَا الْكِتَابَ فَاذْهَبْ بِهِ إِلَى عُثْمَانَ، فَإِنَّ فِيهِ أَمْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّدَقَةِ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3112. முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்), ‘‘இந்த ஏட்டை எடுத்துக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் போ! ஏனெனில், இதில்தான் ஸகாத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் உள்ள”’ என்று சொல்லி என்னை அனுப்பினார்கள்.27

அத்தியாயம் : 57
3113. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي الْحَكَمُ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِسَبْىٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ فَقَالَ "" عَلَى مَكَانِكُمَا "" حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي فَقَالَ "" أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ "".
பாடம் : 6 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (அவசரத்) தேவை களுக்கும் ஏழைகளுக்கும் உரியது என்பதற்கான ஆதாரம் நபி (ஸல்) அவர்களிடம் (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் திருகையில் மாவரைத்துச் சிரமப்படுவது தொடர்பாக முறையிட்டு, போர்க் கைதிகளில் ஒருவரை பணிவிடைக்காகக் கோரியபோது திண்ணைத் தோழர்களுக்கும் விதவை களுக்கும் முன்னுரிமை அளித்துவிட்டு, ஃபாத்திமாவை இறைவன் பொறுப்பில் நபியவர்கள் ஒப்படைத்தது.
3113. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் (அவர் களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விவரமறிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இரு வரும் இருங்கள்” என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின்மீது உணர்ந் தேன். (அந்த அளவுக்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்கள்).

பின்னர், ‘‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்த ஒன்றை உங்க ளுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும், யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 57
3114. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، وَقَتَادَةَ، سَمِعُوا سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا مِنَ الأَنْصَارِ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا ـ قَالَ شُعْبَةُ فِي حَدِيثِ مَنْصُورٍ إِنَّ الأَنْصَارِيَّ قَالَ حَمَلْتُهُ عَلَى عُنُقِي فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَفِي حَدِيثِ سُلَيْمَانَ وُلِدَ لَهُ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا ـ قَالَ "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنِّي إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ "". وَقَالَ حُصَيْنٌ "" بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ "". قَالَ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ سَالِمًا عَنْ جَابِرٍ أَرَادَ أَنْ يُسَمِّيَهُ الْقَاسِمَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3114. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் லிஅன்சாரிகளில்லி ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு யிமுஹம்மத்’ என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் பின் ஃபுளாலா (ரலி) அவர்கள்) என்னிடம் கூறினார்:

நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள்.ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே (காசிம்) ஆக்கப்பட்டுள் ளேன்” என்று கூறினார்கள்.29

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘நான் பங்கிடுப வனாக அனுப்பப்பட்டுள்ளேன். உங்களி டையே நான் பங்கிடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அம்ர் பின் மர்ஸூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த அன்சாரித் தோழர் ‘காசிம்’ என்ற பெயரைத் தம் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 57
3115. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ، فَسَمَّيْتُهُ الْقَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَحْسَنَتِ الأَنْصَارُ، سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3115. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அக்குழந்தைக்கு அவர் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், ‘‘உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும்மாட்டோம்” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினேன். அன்சாரித் தோழர்கள், யிஉம்மை நாங்கள் ‘அபுல்காசிம்’ என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்” என்று சொன்னார்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். ஆகவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவú”’ என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 57
3116. حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَاللَّهُ الْمُعْطِي وَأَنَا الْقَاسِمُ، وَلاَ تَزَالُ هَذِهِ الأُمَّةُ ظَاهِرِينَ عَلَى مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகின்றான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; நான் பங்கிடுபவன் ஆவேன். இந்த (என்) சமுதாயத்தார், அவர்களை எதிர்ப்பவர்கள்மீது ஆதிக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இறுதி யில், அவர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலையிலேயே இறைக்கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.30

இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3117. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا أُعْطِيكُمْ وَلاَ أَمْنَعُكُمْ، أَنَا قَاسِمٌ أَضَعُ حَيْثُ أُمِرْتُ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக் குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவன்தான். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கின்றேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3118. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي عَيَّاشٍ ـ وَاسْمُهُ نُعْمَانُ ـ عَنْ خَوْلَةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ رِجَالاً يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3118. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள் கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே கிடைக்கும்.

இதை கவ்லா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3119. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ الأَجْرُ وَالْمَغْنَمُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3119. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரைகளின் நெற்றிகளில் நன்மையும் நற்பலனும் போர்ச் செல்வமும் மறுமை நாள்வரை பிணைக்கப்பட்டிருக்கின்றன.34

இதை உர்வா பின் அல்ஜஅத் அல் பாரிக்கீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 57
3120. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفِقُنَّ كُنُوزَهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாரசீகப் பேரரசர்) இப்போதைய கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப்பின் கிஸ்ரா எவரும் இருக்கமாட்டார். (கிழக்கு ரோமானியப் பேரரசரான இப்போதைய) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப்பின் சீசர் எவரும் இருக்கமாட்டார். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களை நீங்கள் அல்லாஹ் வின் பாதையில் செலவழிப்பீர்கள்.35

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3121. حَدَّثَنَا إِسْحَاقُ، سَمِعَ جَرِيرًا، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு கிஸ்ரா எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு சீசர் எவரும் இருக்கமாட்டார். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பீர்கள்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3122. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا سَيَّارٌ، حَدَّثَنَا يَزِيدُ الْفَقِيرُ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُحِلَّتْ لِي الْغَنَائِمُ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3122. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. (எனக்கு முந்தைய இறைத்தூதர்களுக்கு அனுமதிக் கப்படவில்லை).36

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3123. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلاَّ الْجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَاتِهِ، بِأَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ {مَعَ مَا نَالَ} مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் போரிடு வதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மை யுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத் துடன் அவரை அவரது வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப் பேற்றுக்கொண்டுள்ளான்.37

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3124. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لاَ يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهْوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا، وَلاَ أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا، وَلاَ أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهْوَ يَنْتَظِرُ وِلاَدَهَا. فَغَزَا فَدَنَا مِنَ الْقَرْيَةِ صَلاَةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ، اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا. فَحُبِسَتْ، حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ، فَجَمَعَ الْغَنَائِمَ، فَجَاءَتْ ـ يَعْنِي النَّارَ ـ لِتَأْكُلَهَا، فَلَمْ تَطْعَمْهَا، فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولاً، فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ. فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمُ الْغُلُولُ. فَلْتُبَايِعْنِي قَبِيلَتُكَ، فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلاَثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمُ الْغُلُولُ، فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنَ الذَّهَبِ فَوَضَعُوهَا، فَجَاءَتِ النَّارُ فَأَكَلَتْهَا، ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ، رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا "".
பாடம் : 8 ‘‘உங்களுக்கு (மட்டுமே) போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள் ள”' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக்கொள் வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.32 மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான். (48:20)33 போர்ச்செல்வம் (போரிட்ட) அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் (குமுஸ் பற்றி) விவரித்தார்கள்.
3124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் ஒருவர் அறப் போருக்குச் சென்றார்.38 அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ‘‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவர் அவளுடன் தாம்பத்தியம் தொடங்க விரும்பி இன்னும் தொடங்காமல் இருந்தால், அவர் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப் பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்” என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார்.

ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகையின் நேரத்தில், அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, ‘‘நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, ‘‘இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்துவிடுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.39

எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும்வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற)பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ண வில்லை.40

ஆகவே, அந்த இறைத்தூதர், ‘‘(இந்தப் பொருட்களிலிருந்து) திருடப்பட்ட பொருள் ஒன்று உங்களிடையே உள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார். (உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருந்தபோது) ஒரு மனிதனின் கை இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண் டது. அப்போது இறைத்தூதர், ‘‘உங்களி டையேதான் திருடப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன் குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்” என்று கூறினார்.41

(அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், ‘‘உங்களிடையேதான் திருடப்பட்ட பொருள் உள்ளது” என்றார். ஆகவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டுவந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது.

பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக்கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான்.42 நமது பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57
3125. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه لَوْلاَ آخِرُ الْمُسْلِمِينَ مَا فَتَحْتُ قَرْيَةً إِلاَّ قَسَمْتُهَا بَيْنَ أَهْلِهَا كَمَا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ.
பாடம் : 9 போரில் கலந்துகொண்டவருக்கே போர்ச் செல்வம் கிடைக்கும்.
3125. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்களின் வருங்காலத் தலை முறை இல்லாவிட்டால் நபி (ஸல்) அவர்கள் கைபர் பகுதியைப் பங்கிட்டதைப் போன்று நான் வெல்கின்ற ஒவ்வோர் ஊரையும் (அவ்வூரிலுள்ள நிலங்களையும்) அதை (வென்றவர்களான) உரியவர்களி டையே பங்கிட்டிருப்பேன்.

இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 57