2926. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ "".
பாடம் : 94 யூதர்களுடன் போரிடுதல்
2926. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் யூதர்களுடன் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் வராது. எந்த அளவுக்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்துகொண்டு) இருப் பான். அந்தக் கல், ‘‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்துகொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்றுவிடு” என்று கூறும்.74

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2927. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يَنْتَعِلُونَ نِعَالَ الشَّعَرِ، وَإِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عِرَاضَ الْوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ "".
பாடம் : 95 துருக்கியர்களுடன் போர் புரிதல்
2927. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

முடியாலான காலணிகளை அணிகின்ற ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போரிடுவது, யுகமுடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரிவது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.75

இதை அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2928. حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الْوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ "".
பாடம் : 95 துருக்கியர்களுடன் போர் புரிதல்
2928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் உள்ள துருக்கியர் களுடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங் களைப் போன்று இருக்கும். முடியாலான காலணிகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2929. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ "". قَالَ سُفْيَانُ وَزَادَ فِيهِ أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً "" صِغَارَ الأَعْيُنِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ "".
பாடம் : 96 முடியாலான காலணி அணிபவர் களுடன் போர் புரிவது
2929. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(யிதோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன்’ என்பதற்கு முன்னால்)லி யிசிறிய கண்களும் சப்பை மூக்குகளும் உள்ளன என்னும் சொற்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம் : 56
2931. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَلأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلاَةِ الْوُسْطَى حِينَ غَابَتِ الشَّمْسُ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2931. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ் (அஹ்ஸாப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ், (எதிரிகளான) அவர்களின் வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை) ‘லிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2932. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ ذَكْوَانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو فِي الْقُنُوتِ "" اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ سِنِينَ كَسِنِي يُوسُفَ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2932. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹ் தொழுகை யில்) குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதும்போது, ‘‘இறைவா! சலமா பின் ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆ வைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக!77

இறைவா! யிமுளர்’ குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக!78 இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 56
2933. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ "" اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ، اللَّهُمَّ اهْزِمِ الأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2933. அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் நாளில் இணைவைப்பாளர் களுக்கு எதிராகப் பிரார்த்தனை புரிந்தார் கள். அப்போது, ‘‘இறைவா! குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்ப வனே! இறைவா! இக்கூட்டுப் படையின ரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர் களைத் தோல்வியுறச்செய்து நடுக்கத்திற் குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.

அத்தியாயம் : 56
2934. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ظِلِّ الْكَعْبَةِ، فَقَالَ أَبُو جَهْلٍ وَنَاسٌ مِنْ قُرَيْشٍ، وَنُحِرَتْ جَزُورٌ بِنَاحِيَةِ مَكَّةَ، فَأَرْسَلُوا فَجَاءُوا مِنْ سَلاَهَا، وَطَرَحُوهُ عَلَيْهِ، فَجَاءَتْ فَاطِمَةُ فَأَلْقَتْهُ عَنْهُ، فَقَالَ "" اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ "". لأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُبَىِّ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ. قَالَ عَبْدُ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُهُمْ فِي قَلِيبِ بَدْرٍ قَتْلَى. قَالَ أَبُو إِسْحَاقَ وَنَسِيتُ السَّابِعَ. وَقَالَ يُوسُفُ بْنُ إِسْحَاقَ عَنْ أَبِي إِسْحَاقَ أُمَيَّةُ بْنُ خَلَفٍ. وَقَالَ شُعْبَةُ أُمَيَّةُ أَوْ أُبَىٌّ. وَالصَّحِيحُ أُمَيَّةُ.
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2934. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுதுகொண்டி ருந்தார்கள். அப்போது அபூஜஹ்லும் குறைஷியரில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பையின் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்துவர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர் அதன் கருப்பைச் சவ்வை கொண்டுவந்து, நபி (ஸல்) அவர்களின் (தோள்)மீது போட்டார்கள்.

அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷியரை நீ கவனித் துக்கொள். இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள். ஹிஷாமின் மகன் அபூஜஹ்லையும் உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உபை பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரையும் (நீ கவனித்துக்கொள் வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள்.

இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங்கிணற்றில் கொல்லப்பட்டவர் களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன்.79

அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்” என்று கூறுகிறார்கள்.80

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில், (யிஉபை பின் கலஃப்’ என்பதற்குப் பதிலாக) யிஉமய்யா பின் கலஃப்’ என இடம்பெற்றுள்ளது. மூன்றாவது தொடரில் யிஉமய்யா அல்லது உபை’ என்று காணப்படுகிறது. யிஉமய்யா’ என்பதே சரியானதாகும்81

அத்தியாயம் : 56
2935. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ الْيَهُودَ، دَخَلُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَلَعَنْتُهُمْ. فَقَالَ "" مَا لَكِ "". قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ "" فَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ وَعَلَيْكُمْ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2935. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) ‘‘அஸ்ஸாமு அலைக்க” (‘‘உங்கள்மீது மரணம் உண்டாகட்டும்”) என்று கூறினார்கள்.

நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)” என்று கேட்டார்கள்.

நான், ‘‘அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (அவர்களுக்குப் பதிலளித்தபோது) அவர்களிடம்,யிவ அலைக்கும்லி (உங்கள்மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)› என்று கூறியதை நீ கேட்கவில்லையா?” என்று சொன்னார் கள்.

அத்தியாயம் : 56
2936. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَتَبَ إِلَى قَيْصَرَ، وَقَالَ "" فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ "".
பாடம் : 99 வேதக்காரர்களுக்கு முஸ்லிம் (இஸ்லாத்துக்கு) வழிகாட்டலாமா? வேதத்தைக் கற்பிக்கலாமா?
2936. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசருக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்) ‘‘நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீ ராயின், உம் (பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல்போவதன்) பாவமும் உம்மைச் சேரும்” என்று கூறி யிருந்தார்கள்.82

அத்தியாயம் : 56
2937. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ، فَادْعُ اللَّهَ عَلَيْهَا. فَقِيلَ هَلَكَتْ دَوْسٌ. قَالَ "" اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ "".
பாடம் : 100 இணைவைப்பாளர்களிடம் இணக்கம் தெரிவதால் அவர்கள் நல்வழிபெறப் பிரார்த்தித்தல்
2937. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

துûஃபல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) யிதவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண் டனர்.

அப்போது, ‘‘தவ்ஸ் குலத்தார் அழியட் டும்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டுவருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 56
2938. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ، قِيلَ لَهُ إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ أَنْ يَكُونَ مَخْتُومًا. فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
பாடம் : 101 யூதர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு அழைப்புக் கொடுப்பதும், ‘அவர் களுக்கெதிராக எந்த அடிப்படையில் போர் புரியப்படும்?' என்பதும் நபி (ஸல்) அவர்கள், (பாரசீக மன்னன்) கிஸ்ராவுக்கும் (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசருக்கும் கடிதம் எழுதியதும், போருக்கு முன் இஸ்லாமிய அழைப்புக் கொடுப் பதும்.
2938. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு) ரோமானி யருக்கு (அழைப்புக்) கடிதம் எழுத விரும்பியபொழுது, ‘‘அவர்கள் முத்திரை யிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதை யும் படிக்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டது.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் (இலச்சினை) ஒன்றைத் தயாரித்துக்கொண்டார்கள். லி(இப்போதும்) நான் அவர்களின் கரத்தில் அதன் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளதுலி அதில், யிமுஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ லி ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்’ என்று நபி (ஸல்) அவர்கள் (இலச்சினை) பொறித்திருந்தார்கள்.

அத்தியாயம் : 56
2939. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى، فَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ، يَدْفَعُهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ كِسْرَى خَرَّقَهُ، فَحَسِبْتُ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ قَالَ فَدَعَا عَلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ.
பாடம் : 101 யூதர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு அழைப்புக் கொடுப்பதும், ‘அவர் களுக்கெதிராக எந்த அடிப்படையில் போர் புரியப்படும்?' என்பதும் நபி (ஸல்) அவர்கள், (பாரசீக மன்னன்) கிஸ்ராவுக்கும் (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசருக்கும் கடிதம் எழுதியதும், போருக்கு முன் இஸ்லாமிய அழைப்புக் கொடுப் பதும்.
2939. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கடிதத்தை (பாரசீக மன்னர்) கிஸ்ரா வுக்கு (அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் வாயிலாக) அனுப்பிவைத்தார்கள். அதை பஹ்ரைனின் ஆட்சியாளரிடம் கொடுத்து, அதை அவர் கிஸ்ராவிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும்படி (அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களுக்கு) உத்தர விட்டார்கள்.

(அவ்வாறே அவர் அதைக் கொண்டு சென்று ஒப்படைக்க,) அதை(ப் பாரசீக மன்னன்) கிஸ்ரா (குஸ்ரூ) படித்தபோது, (கோபப்பட்டு) அதைக் கிழித்துவிட்டான்.

(ஆகவே,) ‘‘அவர்கள் முற்றாகச் சிதற டிக்கப்பட வேண்டும்” என்று அவர்களுக் கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தித்தார்கள் என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.83

அத்தியாயம் : 56
2940. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَتَبَ إِلَى قَيْصَرَ يَدْعُوهُ إِلَى الإِسْلاَمِ، وَبَعَثَ بِكِتَابِهِ إِلَيْهِ مَعَ دِحْيَةَ الْكَلْبِيِّ، وَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ بُصْرَى لِيَدْفَعَهُ إِلَى قَيْصَرَ، وَكَانَ قَيْصَرُ لَمَّا كَشَفَ اللَّهُ عَنْهُ جُنُودَ فَارِسَ مَشَى مِنْ حِمْصَ إِلَى إِيلِيَاءَ، شُكْرًا لِمَا أَبْلاَهُ اللَّهُ، فَلَمَّا جَاءَ قَيْصَرَ كِتَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ حِينَ قَرَأَهُ الْتَمِسُوا لِي هَا هُنَا أَحَدًا مِنْ قَوْمِهِ لأَسْأَلَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2940. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசருக்கு இஸ்லாத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார்கள்; திஹ்யா அல்கல்பீ (ரலி) எனும் நபித்தோழரிடம் தமது கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசரிடம் கொடுப்பதற்காக புஸ்ரா (ஹூரான்) அரசனிடம் அதைக் கொடுத்துவிடும்படி அத்தோழருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாரசீகப் படைகளின் மீது சீசருக்கு இறைவன் வெற்றியை அளித்தபோது, அவர் யிஹிம்ஸ்’ பகுதியிலிருந்து யிஈலியா’வை (புனித நகரமான ஜெரூ சலத்தை) நோக்கி, இறைவன் அளித்த வெற்றிக்கு நன்றி செலுத்தும் வகையில் சென்றார். சீசரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதம் வந்தபோது அவர் அதைப் படித்துவிட்டு, ‘‘எனக்காக இங்கு இந்த மனிதரின் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையேனும் தேடிக் (கண்டு பிடித்துக்)கொண்டு வாருங்கள். அல்லாஹ் வின் தூதரைப் பற்றி அவர்களிடம் நான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

அத்தியாயம் : 56
2941. قَالَ ابْنُ عَبَّاسٍ فَأَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّهُ كَانَ بِالشَّأْمِ فِي رِجَالٍ مِنْ قُرَيْشٍ، قَدِمُوا تِجَارًا فِي الْمُدَّةِ الَّتِي كَانَتْ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ كُفَّارِ قُرَيْشٍ، قَالَ أَبُو سُفْيَانَ فَوَجَدَنَا رَسُولُ قَيْصَرَ بِبَعْضِ الشَّأْمِ فَانْطَلَقَ بِي وَبِأَصْحَابِي حَتَّى قَدِمْنَا إِيلِيَاءَ، فَأُدْخِلْنَا عَلَيْهِ، فَإِذَا هُوَ جَالِسٌ فِي مَجْلِسِ مُلْكِهِ وَعَلَيْهِ التَّاجُ، وَإِذَا حَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ فَقَالَ لِتُرْجُمَانِهِ سَلْهُمْ أَيُّهُمْ أَقْرَبُ نَسَبًا إِلَى هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ قَالَ أَبُو سُفْيَانَ فَقُلْتُ أَنَا أَقْرَبُهُمْ نَسَبًا. قَالَ مَا قَرَابَةُ مَا بَيْنَكَ وَبَيْنَهُ فَقُلْتُ هُوَ ابْنُ عَمِّي، وَلَيْسَ فِي الرَّكْبِ يَوْمَئِذٍ أَحَدٌ مِنْ بَنِي عَبْدِ مَنَافٍ غَيْرِي. فَقَالَ قَيْصَرُ أَدْنُوهُ. وَأَمَرَ بِأَصْحَابِي فَجُعِلُوا خَلْفَ ظَهْرِي عِنْدَ كَتِفِي، ثُمَّ قَالَ لِتُرْجُمَانِهِ قُلْ لأَصْحَابِهِ إِنِّي سَائِلٌ هَذَا الرَّجُلَ عَنِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَإِنْ كَذَبَ فَكَذِّبُوهُ. قَالَ أَبُو سُفْيَانَ وَاللَّهِ لَوْلاَ الْحَيَاءُ يَوْمَئِذٍ مِنْ أَنْ يَأْثُرَ أَصْحَابِي عَنِّي الْكَذِبَ لَكَذَبْتُهُ حِينَ سَأَلَنِي عَنْهُ، وَلَكِنِّي اسْتَحْيَيْتُ أَنْ يَأْثُرُوا الْكَذِبَ عَنِّي فَصَدَقْتُهُ، ثُمَّ قَالَ لِتُرْجُمَانِهِ قُلْ لَهُ كَيْفَ نَسَبُ هَذَا الرَّجُلِ فِيكُمْ قُلْتُ هُوَ فِينَا ذُو نَسَبٍ. قَالَ فَهَلْ قَالَ هَذَا الْقَوْلَ أَحَدٌ مِنْكُمْ قَبْلَهُ قُلْتُ لاَ. فَقَالَ كُنْتُمْ تَتَّهِمُونَهُ عَلَى الْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ قُلْتُ لاَ. قَالَ فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ لاَ. قَالَ فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ قُلْتُ بَلْ ضُعَفَاؤُهُمْ. قَالَ فَيَزِيدُونَ أَوْ يَنْقُصُونَ قُلْتُ بَلْ يَزِيدُونَ. قَالَ فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ قُلْتُ لاَ. قَالَ فَهَلْ يَغْدِرُ قُلْتُ لاَ، وَنَحْنُ الآنَ مِنْهُ فِي مُدَّةٍ، نَحْنُ نَخَافُ أَنْ يَغْدِرَ. قَالَ أَبُو سُفْيَانَ وَلَمْ يُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا أَنْتَقِصُهُ بِهِ لاَ أَخَافُ أَنْ تُؤْثَرَ عَنِّي غَيْرُهَا. قَالَ فَهَلْ قَاتَلْتُمُوهُ أَوْ قَاتَلَكُمْ قُلْتُ نَعَمْ. قَالَ فَكَيْفَ كَانَتْ حَرْبُهُ وَحَرْبُكُمْ قُلْتُ كَانَتْ دُوَلاً وَسِجَالاً، يُدَالُ عَلَيْنَا الْمَرَّةَ وَنُدَالُ عَلَيْهِ الأُخْرَى. قَالَ فَمَاذَا يَأْمُرُكُمْ قَالَ يَأْمُرُنَا أَنْ نَعْبُدَ اللَّهَ وَحْدَهُ لاَ نُشْرِكُ بِهِ شَيْئًا، وَيَنْهَانَا عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا، وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالصَّدَقَةِ وَالْعَفَافِ وَالْوَفَاءِ بِالْعَهْدِ وَأَدَاءِ الأَمَانَةِ. فَقَالَ لِتُرْجُمَانِهِ حِينَ قُلْتُ ذَلِكَ لَهُ قُلْ لَهُ إِنِّي سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ فِيكُمْ، فَزَعَمْتَ أَنَّهُ ذُو نَسَبٍ، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا، وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا الْقَوْلَ قَبْلَهُ فَزَعَمْتَ أَنْ لاَ، فَقُلْتُ لَوْ كَانَ أَحَدٌ مِنْكُمْ قَالَ هَذَا الْقَوْلَ قَبْلَهُ قُلْتُ رَجُلٌ يَأْتَمُّ بِقَوْلٍ قَدْ قِيلَ قَبْلَهُ. وَسَأَلْتُكَ هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ فَزَعَمْتَ أَنْ لاَ، فَعَرَفْتُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَدَعَ الْكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللَّهِ، وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ فَزَعَمْتَ أَنْ لاَ، فَقُلْتُ لَوْ كَانَ مِنْ آبَائِهِ مَلِكٌ قُلْتُ يَطْلُبُ مُلْكَ آبَائِهِ. وَسَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَزَعَمْتَ أَنَّ ضُعَفَاءَهُمُ اتَّبَعُوهُ، وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ، وَسَأَلْتُكَ هَلْ يَزِيدُونَ أَوْ يَنْقُصُونَ فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ الإِيمَانُ حَتَّى يَتِمَّ، وَسَأَلْتُكَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ فَزَعَمْتَ أَنْ لاَ، فَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تَخْلِطُ بَشَاشَتُهُ الْقُلُوبَ لاَ يَسْخَطُهُ أَحَدٌ، وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ فَزَعَمْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الرُّسُلُ لاَ يَغْدِرُونَ. وَسَأَلْتُكَ هَلْ قَاتَلْتُمُوهُ وَقَاتَلَكُمْ فَزَعَمْتَ أَنْ قَدْ فَعَلَ، وَأَنَّ حَرْبَكُمْ وَحَرْبَهُ تَكُونُ دُوَلاً، وَيُدَالُ عَلَيْكُمُ الْمَرَّةَ وَتُدَالُونَ عَلَيْهِ الأُخْرَى، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْتَلَى، وَتَكُونُ لَهَا الْعَاقِبَةُ، وَسَأَلْتُكَ بِمَاذَا يَأْمُرُكُمْ فَزَعَمْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَيَنْهَاكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُكُمْ، وَيَأْمُرُكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالْوَفَاءِ بِالْعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ، قَالَ وَهَذِهِ صِفَةُ النَّبِيِّ، قَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ، وَلَكِنْ لَمْ أَظُنَّ أَنَّهُ مِنْكُمْ، وَإِنْ يَكُ مَا قُلْتَ حَقًّا، فَيُوشِكُ أَنْ يَمْلِكَ مَوْضِعَ قَدَمَىَّ هَاتَيْنِ، وَلَوْ أَرْجُو أَنْ أَخْلُصَ إِلَيْهِ لَتَجَشَّمْتُ لُقِيَّهُ، وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ قَدَمَيْهِ. قَالَ أَبُو سُفْيَانَ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُرِئَ فَإِذَا فِيهِ " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ، إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، وَأَسْلِمْ يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَعَلَيْكَ إِثْمُ الأَرِيسِيِّينَ وَ{يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لاَ نَعْبُدَ إِلاَّ اللَّهَ وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئًا وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ}". قَالَ أَبُو سُفْيَانَ فَلَمَّا أَنْ قَضَى مَقَالَتَهُ، عَلَتْ أَصْوَاتُ الَّذِينَ حَوْلَهُ مِنْ عُظَمَاءِ الرُّومِ، وَكَثُرَ لَغَطُهُمْ، فَلاَ أَدْرِي مَاذَا قَالُوا، وَأُمِرَ بِنَا فَأُخْرِجْنَا، فَلَمَّا أَنْ خَرَجْتُ مَعَ أَصْحَابِي وَخَلَوْتُ بِهِمْ قُلْتُ لَهُمْ لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، هَذَا مَلِكُ بَنِي الأَصْفَرِ يَخَافُهُ، قَالَ أَبُو سُفْيَانَ وَاللَّهِ مَا زِلْتُ ذَلِيلاً مُسْتَيْقِنًا بِأَنَّ أَمْرَهُ سَيَظْهَرُ، حَتَّى أَدْخَلَ اللَّهُ قَلْبِي الإِسْلاَمَ وَأَنَا كَارِهٌ.
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2941. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் எனக்குப் பின்வருமாறு அறிவித் தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் குறைஷிக்குல இறைமறுப்பாளர் களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் வணிகர்களாக வந்த குறைஷியர் சிலருடன் நானும் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தேன். (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசருடைய தூதர் எங்களை ஷாமின் ஒரு பகுதியில் கண்டார். என்னையும் என் தோழர்களையும் அழைத்துச் சென்றார். நாங்கள் யிஈலியா’வை அடைந்தோம். அங்கு நாங்கள் சீசரிடம் கொண்டுசெல்லப்பட்டோம். அவர் தமது அரசவையில் கிரீடம் அணிந்து அமர்ந் திருந்தார். அப்போது அவரைச் சுற்றிலும் (கிழக்கு) ரோமானிய ஆட்சியாளர்கள் பலரும் அமர்ந்திருந்தனர்.

மன்னர் தம் மொழிபெயர்ப்பாளரிடம், ‘‘தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) இவர்களில் நெருங்கிய உறவினர் யார்’ என நீ அவர்களிடம் கேள்” என்று கூறினார். (அவ்வாறே அவர் கேட்டபோது,) நான், ‘‘இவர்களில் அவருக்கு நான்தான் நெருங்கிய உறவினன்” என்று சொன்னேன்.

அப்போது அவர், ‘‘உமக்கும் அவருக்குமிடையில் என்ன உறவு?” என்று கேட்டார். நான், ‘‘அவர் என் தந்தையின் சகோதரர் மகன்” என்று கூறினேன். அந்த நேரத்தில் (எங்கள்) பயணக் குழுவில் (நபியவர்களின் முப்பாட்டனார்) அப்து மனாஃபின் மக்களில் என்னைத் தவிர வேறெவரும் இருக்கவில்லை. உடனே சீசர், ‘‘அவரை என்னருகில் கொண்டுவாருங்கள்” என்று கூறிவிட்டு, என் தோழர்களை என் முதுகுக்குப் பின்னே தோளுக்கு அருகில் இருக்க வைக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் அவ்வாறே இருக்க வைக்கப்பட்டார்கள்.

பிறகு சீசர், தம் மொழிபெயர்ப்பாளரிடம், ‘‘தம்மை நபி (இறைத்தூதர்) என்று சொல்லிக்கொள்ளும் இந்த மனிதரைக் குறித்து இவரிடம் நான் (விவரங்கள்) கேட்கப்போகிறேன்; இவர் பொய் சொன் னால் அதைப் பொய் என்று (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! என் தோழர்கள் என்னைக் குறித்து நான் பொய் சொன்னதாகக் காட்டிக்கொடுத்துவிடுவார்களே என்னும் வெட்கம் மட்டும் எனக்கில்லாதிருந்தால் நான் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி சீசர் என்னிடம் கேட்டபோது, அவரிடம் (அவர்களைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் தந்து) பொய் சொல்லியிருப்பேன். ஆனால், என்னைப் பற்றி நான் பொய் கூறியதாக அவர்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்களே என்று நான் வெட்கப்பட்டேன். ஆகவேதான், (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) அவரிடம் உண்மையைச் சொன்னேன்.

பிறகு சீசர் தம் மொழிபெயர்ப்பாளரிடம், ‘‘அந்த மனிதரின் குலம் உங்களில் எப்படிப்பட்டது என்று இவரிடம் கேள்” என்று சொன்னார். நான், ‘‘அவர் எங்களிடையே உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவராவார்” என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘உங்களில் எவரேனும் இதற்குமுன் (தம்மை யிநபி’ எனும்) இந்த வாதத்தை முன்வைத்திருக்கிறாரா?” என்று கேட்டார். நான், ‘‘இல்லை” என்று பதிலளித்தேன்.

சீசர், ‘‘(முஹம்மத்) இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்குமுன் பொய்யேதும் சொன்னார் என்று நீங்கள் அவரைக் குற்றம்சாட்டியது உண்டா?” என்று கேட்டார். நான், ‘‘இல்லை” என்றேன். சீசர், ‘‘அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?” என்று கேட்டார். நான், ‘‘இல்லை” என்றேன்.

‘‘அவரை மக்களில் மேட்டுக் குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?” என்று கேட்டார். நான், ‘‘அவர்களில் பலவீனர்கள்தான் அவரைப் பின்பற்றுகின்றனர்” என்று கூறினேன். அவர், ‘‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா?” என்று கேட்டார். நான், ‘‘அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்” என்று கூறினேன். பிறகு, ‘‘அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அதன்மீது அதிருப்தியடைந்து எவரேனும் மதம் மாறிச் செல்வதுண்டா?” என்று கேட்டார். நான், ‘‘இல்லை” என்றேன்.

அவர், ‘‘அந்த மனிதர் ஒப்பந்த மீறல் செய்கிறாரா?” என்று கேட்க, நான், ‘‘இல்லை. ஆனால், நாங்கள் இப்போது அவருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட காலத்தில் உள்ளோம். அவர் வாக்கு மீறிவிடுவாரென்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று பதிலளித்தேன்.

லிஇதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய வேறு வார்த்தை எதையும் திணிக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை; என் தோழர்கள் என்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சமின்றி (அவ்வாறு செய்ய இயலவில்லை)லி

பிறகு அவர், ‘‘நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டார். நான், ‘‘உண்டு” என்றேன். அதற்கு அவர், ‘‘உங்களுக்கிடையிலான போர்(களின் முடிவு)கள் எவ்வாறிருந்தன?” என்று கேட்டார். நான், ‘‘(வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் வரும்) கிணற்று வாளியாக உள்ளது. ஒருமுறை அவர் எங்களை வெற்றி கொள்வார்; மறுமுறை அவரை நாங்கள் வெற்றி கொள்வோம்” என்று பதிலளித்தேன்.

சீசர், ‘‘என்ன செய்யும்படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்?” என்று கேட்டார். நான், ‘‘அல்லாஹ்வை மட்டுமே நாங்கள் வழிபட வேண்டுமென்றும் அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது என்றும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகின்றார். எங்கள் முன்னோர்கள் வழிபட்டுவந்த தெய்வங்களை நாங்கள் வழிபடக் கூடாது என்று எங்களைத் தடுக்கின்றார். தொழுகையை நிறைவேற்றும்படியும் தான தர்மம் செய்யுமாறும் சுயக்கட்டுப்பாட்டைப் பேணிவருமாறும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைப் பாதுகாப்பாகத் திருப்பித் தருமாறும் எங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று கூறினேன்.

நான் இதை சீசரிடம் சொன்னபோது அவர் தம் மொழிபெயர்ப்பாளரிடம் கூறினார்: அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம், ‘‘உங்களிடையே அவரது குலம் எப்படிப்பட்டது?” என்று கேட்டேன். ‘‘அவர் உயர்குலத்தைச் சேர்ந்தவர்” என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே, இறைத் தூதர்கள் தம் சமுதாயத்தின் நற்குடியில்தான் அனுப்பப்படுவர். நான், ‘‘இவருக்கு முன்னர் உங்களில் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்ததுண்டா?” என்று கேட்டேன். ‘‘இல்லை” என்று நீர் பதில ளித்தீர்.

இவருக்கு முன்னர் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்தால், ‘‘தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் சொல்கின்ற ஒரு மனிதர் இவர்” என்று நான் சொல்லியிருப்பேன். ‘‘அவர் இந்த வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு, அவர் பொய் சொன்னதாக நீங்கள் குற்றம்சாட்டிய துண்டா?” என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘‘இல்லை” என்று பதிலளித்தீர்.

(அதிலிருந்து) மக்களிடம் பொய் சொல்ல(த் துணிய)ôத அவர், அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல(த் துணிய)மாட்டார் என்று புரிந்துகொண்டேன். ‘‘அவருடைய முன்னோர்களிடையே அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா?” என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘‘இல்லை” என்றீர். அவருடைய முன்னோர்களி டையே அரசர் எவரும் இருந்திருப்பாராயின், ‘‘தம் முன்னோர்களின் ஆட்சியதி காரத்தை (தாமும்) அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர்” என்று நான் கூறியிருப்பேன்.

‘‘மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகின்றார்களா? மக்களிடையே யுள்ள பலவீனர்கள் பின்பற்றுகிறார்களா?” என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘‘ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர்” என்று பதிலளித்தீர். அவர்கள்தான் (எப்போதும்) இறைத்தூதர் களைப் பின்பற்றுவோர் ஆவர். அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? குறைந்துகொண்டே வருகின்றனரா?” என்று நான் கேட்டேன். அதற்கு நீர், ‘‘அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்” என்று பதிலளித்தீர்.

இறைநம்பிக்கை இத்தகையதுதான். அது முழுமையடையும்வரை (அதிகரித்துக் கொண்டே செல்லும்.) ‘‘அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோரில் எவரேனும் அதிருப்தியடைந்து அதிலிருந்து வெளி யேறிச் செல்வதுண்டா?” என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘‘இல்லை” என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை இத்தகையதே. அதன் எழில், இதயங்களில் கலக்கும்போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.

‘‘அவர் ஒப்பந்த மீறல் செய்கிறாரா?” என்று நான் உம்மைக் கேட்டதற்கு நீர், ‘‘இல்லை” என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே. அவர்கள் ஒப்பந்தங்களை மீறமாட்டார்கள். மேலும், நான், ‘‘நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர், யிபோர் புரிந்ததுண்டு’ என்றும், ‘‘உங்களுக்கும் அவருக்குமிடையே போர் (முடிவுகளான வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் வரும்) கிணற்று வாளியாக உள்ளது என்றும், ஒருமுறை உங்களுக்கு வெற்றி கிடைத்தால் மறுமுறை அவருக்கு வெற்றி கிடைக்கும்” என்றும் பதிலளித்தீர். இப்படித்தான் இறைத்தூதர்கள் சோதிக்கப் படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும்.

‘‘உங்களுக்கு அவர் என்ன கட்டளையிடுகின்றார்?” என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘‘அல்லாஹ்வை வழிபடுமாறும் அவனுக்கு எதனையும் இணையாக்காமல் இருக்குமாறும் கட்டளையிடுகிறார்; உங்கள் முன்னோர்கள் வழிபட்டுவந்தவற்றை நீங்கள் வழிபட வேண்டாமென்று உங்களைத் தடுக்கிறார்; தொழுகையை (நிலைநாட்டும்படி)யும் வாய்மையையும் சுயக்கட்டுப்பாட்டையும் மேற்கொள்ளும் படியும் ஒப்பந்தங்களைச் சரிவர நிறைவேற்றும்படியும் அடைக்கலப் பொருளைப் பாதுகாப்பாகத் திருப்பித் தரும்படியும் அவர் உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று பதிலளித்தீர். எந்த இறைத்தூதர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேனோ அவருடைய பண்புகள் இவைதான்.

ஆனால், அவர் உங்களிலிருந்து வருவார் என்று நான் அறிந்திருக்கவில்லை. நீர் சொல்வது உண்மையாயிருப்பின், இவ்விரு பாதங்கள் பதிந்துள்ள இந்த இடத்திற்கு விரைவில் அவர் அதிபதி யாவார். நான் அவரைச் சென்றடைய முடிந்தால் நிச்சயம் நானே வலியச் சென்று அவரைச் சந்திப்பேன். அவரிடத்தில் நான் இருந்திருப்பேனாயின் அவருடைய கால்களைக் கழுவியிருப்பேன்” என்று கூறினார்.

பிறகு, சீசர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டுவரப்பட்டதும்) அது அவருக்குப் படித்துக்காட்டப்பட்டது.

அதில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து (கிழக்கு) ரோமின் அதிபர் ஹிரக்ளீயஸுக்கு (எழுதப்படும் கடிதம்.)

நல்வழியைப் பின்பற்றியவர்மீது (இறைவனின்) சாந்தி பொழியட்டும். நிற்க, நான் உங்களை இஸ்லாத்தை ஏற்கும்படி அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால்) நீங் கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் (நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக) உங்களுக்கு இரு மடங்கு நன்மை தருவான். நீங்கள் புறக்கணித்தால், உங்கள் குடிமக்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல்போவதன் குற்றமும்) உங்க ளையே சேரும்.

‘‘வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவானதொரு கொள்கையின்பால் நீங்கள் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் வேறுசிலரைக் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது” என்று (நபியே) நீர் கூறுவீராக.

(இதற்குப் பிறகும்) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிந்த) முஸ்லிம்கள்தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று சொல்லிவிடுங்கள். (3:64)

சீசர் தமது பேச்சை முடித்தவுடன் அவரைச் சுற்றிலுமிருந்த (கிழக்கு) ரோம் நாட்டு ஆட்சியாளர்களின் குரல்கள் உயர்ந்து, அவர்களின் கூச்சல் அதிகரித்தது. அதனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நான் அறிய முடியாமல் போய்விட்டது. எங்களை வெளியே கொண்டுசெல்லும்படி உத்தரவிடப்பட்டது. நாங்கள் (சீசரின் அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். என் தோழர்களுடன் வெளியே வந்து அவர்களுடன் தனிமையில் இருந்தபோது நான், ‘‘இப்னு அபீகப்ஷா84 (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் மன்னரான இவரே அவருக்கு அஞ்சுகிறாரே” என்று கூறினேன். (அன்றிலிருந்து) இறைவன் மீதாணையாக! நான் அடங்கிப்போனேன். இவரது மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதியாக எண்ணியவனாகவே இருந்துவந்தேன். இறுதியாக, இஸ்லாத்தை நான் வெறுத்தபோதிலும் அல்லாஹ் என் உள்ளத்தில் அதைப் புகுத்திவிட்டான்.85

அத்தியாயம் : 56
2942. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْد ٍ ـ رضى الله عنه ـ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ يَوْمَ خَيْبَرَ "" لأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلاً يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ "". فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ "" أَيْنَ عَلِيٌّ "". فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ، فَأَمَرَ فَدُعِيَ لَهُ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ، فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ شَىْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا. فَقَالَ "" عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ "".
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2942. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, ‘‘நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப் போகிறேன்; அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறக் கேட்டேன். உடனே நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்ற ஆசையோடு மறுநாள் வந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அலீ எங்கே?” என்று கேட்டார்கள். ‘‘அவருக்குக் கண் வலி” என்று கூறப்பட்டது.

உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தமது) உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போன்று குணமாகிவிட்டது. உடனே அலீ (ரலி) அவர்கள், ‘‘நம்மைப் போன்று அவர்களும் (ஏக இறையை ஏற்போராக) ஆகும்வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதான மாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குவீராக! பிறகு அவர்களை இஸ்லாத் திற்கு அழைத்து (அதை அவர்கள் ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற வற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நல்வழி யளிக்கப்படுவது (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உமக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 56
2943. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا غَزَا قَوْمًا لَمْ يُغِرْ حَتَّى يُصْبِحَ، فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ بَعْدَ مَا يُصْبِحُ، فَنَزَلْنَا خَيْبَرَ لَيْلاً.
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2943. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார்மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும்வரை தாக்குதலைத் தொடங்கமாட்டார்கள். (அந்த மக்களிடையே) தொழுகை அறிவிப் பின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்தமாட்டார்கள். தொழுகை அறிவிப்பின் ஓசையைக் கேட்காவிட்டால், காலை நேரம் வந்தபின் தாக்குதல் நடத்துவார்கள். கைபருக்கு நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.

அத்தியாயம் : 56
2944. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا غَزَا بِنَا.
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2944. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அறப்போருக்குச் சென்றால்.... (என்று ஹதீஸ் தொடங்குகிறது)86

அத்தியாயம் : 56
2945. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى خَيْبَرَ فَجَاءَهَا لَيْلاً، وَكَانَ إِذَا جَاءَ قَوْمًا بِلَيْلٍ لاَ يُغِيرُ عَلَيْهِمْ حَتَّى يُصْبِحَ، فَلَمَّا أَصْبَحَ، خَرَجَتْ يَهُودُ بِمَسَاحِيهِمْ وَمَكَاتِلِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "".
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2945. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். லிஅவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் இரவு நேரத்தில் சென்றால், காலை நேரம் வரும்வரை அவர்கள்மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். அவ்வாறே காலையான தும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது, ‘‘முஹம்மதும் (அவரது) ஐம் படையும் (வந்துள்ளனர்)” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் முற்றத்தில் (அவர் களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56