2898. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَسْكَرِهِ، وَمَالَ الآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ لاَ يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلاَ فَاذَّةً إِلاَّ اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقَالَ مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ "". فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَنَا صَاحِبُهُ. قَالَ فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ قَالَ فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ، فَقَتَلَ نَفْسَهُ، فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. قَالَ "" وَمَا ذَاكَ "". قَالَ الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ. فَقُلْتُ أَنَا لَكُمْ بِهِ. فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ، فَقَتَلَ نَفْسَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ "" إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهْوَ مِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம் : 77
யாரைப் பற்றியும் ‘‘இன்னார் உயிர்த் தியாகி (ஷஹீத்)” என்று (அறுதியிட்டுச்) சொல்லலாகாது.
‘‘தன் பாதையில் அறப்போர் புரிபவர் யார் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். தன் பாதையில் காயமடைபவர் யார் என்பதையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54
2898. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்போரும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டுக்கொண்ட னர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் படையினரிடமும் எதிரிகள் தம் படை ‘னரிடமும் திரும்பிச் சென்றுவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிகளில்) போரில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப்போய் தனியே சென்றவர் என எவரையும் நபித்தோழர் களுக்கு விட்டுவைக்காமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார்.
(அவரது வீரத்தைக் கண்ட) நபித் தோழர்கள், ‘‘இந்த மனிதர் போரிட்டதைப் போன்று இன்று நம்மில் வேறு யாரும் தேவையான அளவுக்குப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள். அப்போது கூட்டத்தி லிருந்த ஒரு மனிதர், ‘‘நான் அவருடன் இருக்கப்போகிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)” என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார்.
அவர் நின்றபோதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அந்த வீரர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தம் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தமது உடலை சாய்த்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், ‘‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘‘உங்களுக்காக (அவருடைய நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன்.
அவர் கடுமையாக காயப்படுத்தப் பட்டார். உடனே அவர் அவசரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடி முனையை பூமியில் நட்டு, அதன் கூர் முனையைத் தம் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன்மீது தன்னை சாய்த்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசி களின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசி யாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 56

2899. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا ارْمُوا وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ "". قَالَ فَأَمْسَكَ أَحَدُ الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا لَكُمْ لاَ تَرْمُونَ "". قَالُوا كَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْمُوا فَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ "".
பாடம் : 78
அம்பெய்தலைக் கற்குமாறு வந்துள்ள தூண்டல்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள். அதன்மூலம், அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்களின் பகைவர்களையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். (8:60)
2899. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம் பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அப்போது இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக்கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.

2900. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ، عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ حِينَ صَفَفْنَا لِقُرَيْشٍ وَصَفُّوا لَنَا "" إِذَا أَكْثَبُوكُمْ فَعَلَيْكُمْ بِالنَّبْلِ "".
பாடம் : 78
அம்பெய்தலைக் கற்குமாறு வந்துள்ள தூண்டல்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள். அதன்மூலம், அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்களின் பகைவர்களையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். (8:60)
2900. அபூஉசைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரின்போது நாங்கள் குறைஷியருக்கெதிராகவும் குறைஷியர் எங்களுக் கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘(குறைஷியர்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

2901. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِحِرَابِهِمْ دَخَلَ عُمَرُ، فَأَهْوَى إِلَى الْحَصَى فَحَصَبَهُمْ بِهَا. فَقَالَ "" دَعْهُمْ يَا عُمَرُ "". وَزَادَ عَلِيٌّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ فِي الْمَسْجِدِ.
பாடம் : 79
ஈட்டி போன்றவற்றால் (வீர விளையாட்டுகள்) விளையாடுவது
2901. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அபிசீனியர்கள் (எத்தி யோப்பியர்கள்) நபி (ஸல்) அவர்கள் அருகில் தங்கள் ஈட்டிகளை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவர்கள்மீது எறிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமரே! அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. இரண்டாவது தொடர்களில், யிஇந்த விளையாட்டு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

2902. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَبُو طَلْحَةَ يَتَتَرَّسُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِتُرْسٍ وَاحِدٍ، وَكَانَ أَبُو طَلْحَةَ حَسَنَ الرَّمْىِ، فَكَانَ إِذَا رَمَى تَشَرَّفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْظُرُ إِلَى مَوْضِعِ نَبْلِهِ.
பாடம் : 80
கேடயமும் மற்றவரின் கேடயத் தால் தம்மைத் தற்காத்துக்கொள் வதும்
2902. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தம்மை ஒரே கேடயத்தைக் கொண்டே தற்காத்துக் கொள்வார்கள்.55 அபூதல்ஹா (ரலி) அவர்கள் நன்கு அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அம்பெய்தால் நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, அவர்களது அம்பின் இலக்கைப் பார்ப்பார்கள்.

2903. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا كُسِرَتْ بَيْضَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى رَأْسِهِ وَأُدْمِيَ وَجْهُهُ، وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ، وَكَانَ عَلِيٌّ يَخْتَلِفُ بِالْمَاءِ فِي الْمِجَنِّ، وَكَانَتْ فَاطِمَةُ تَغْسِلُهُ، فَلَمَّا رَأَتِ الدَّمَ يَزِيدُ عَلَى الْمَاءِ كَثْرَةً عَمَدَتْ إِلَى حَصِيرٍ، فَأَحْرَقَتْهَا وَأَلْصَقَتْهَا عَلَى جُرْحِهِ، فَرَقَأَ الدَّمُ.
பாடம் : 80
கேடயமும் மற்றவரின் கேடயத் தால் தம்மைத் தற்காத்துக்கொள் வதும்
2903. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் முன்வாய்ப் பற்களில் (கீழ்வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்துகொண்டிருந் தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் காயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள்.
இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின்மேல் வைத்து அழுத்திவிட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.

2904. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِمَّا لَمْ يُوجِفِ الْمُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ وَلاَ رِكَابٍ، فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاصَّةً، وَكَانَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِ، ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي السِّلاَحِ وَالْكُرَاعِ، عُدَّةً فِي سَبِيلِ اللَّهِ.
பாடம் : 80
கேடயமும் மற்றவரின் கேடயத் தால் தம்மைத் தற்காத்துக்கொள் வதும்
2904. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனுந் நளீர் (யூதக்) குலத்தாரின் செல்வங்கள், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அளித்தவையாகும். அதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ செலுத்திப் போர் செய்திருக்கவில்லை.56 ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தம் வீட்டாருக்கு ஆண்டுச் செலவுக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு மீதியை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக் காகவும் செலவிட்டுவந்தார்கள்.

2905. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ، حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُفَدِّي رَجُلاً بَعْدَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ "" ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 80
கேடயமும் மற்றவரின் கேடயத் தால் தம்மைத் தற்காத்துக்கொள் வதும்
2905. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்காகவும் தம் தாய் தந்தையை(ச் சேர்த்து) அர்ப்பணிப்ப தாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. சஅத் (ரலி) அவர்களிடம் (உஹுத் போரின்போது) நபி (ஸல்) அவர்கள், ‘‘அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறியதை நான் கேட்டேன்.57
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2906. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ عَمْرٌو حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثَ، فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ، فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي وَقَالَ مِزْمَارَةُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " دَعْهُمَا ". فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا
பாடம் : 81
தோல் கேடயம்
2906. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் முன்னால் (அன்சாரி) சிறுமிகள் இருவர் புஆஸ்58 போரைப் பற்றிய பாடலைப் பாடிக்காட்டிக்கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கை யில் சாய்ந்து தமது முகத்தை (வேறு திசையில்) திருப்பிக்கொண்டார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்க வில்லை.) அப்போது, (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் ஷைத்தானின் இசைக் கருவியா?” என்று கடிந்துகொண் டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘அவர்களை (பாட) விடுங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பியபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் சாடை காட்டி னேன். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள்.59

2907. . قَالَتْ وَكَانَ يَوْمُ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ " تَشْتَهِينَ تَنْظُرِينَ ". فَقَالَتْ نَعَمْ. فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَيَقُولُ " دُونَكُمْ بَنِي أَرْفِدَةَ ". حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ " حَسْبُكِ ". قُلْتُ نَعَمْ. قَالَ " فَاذْهَبِي ". قَالَ أَحْمَدُ عَنِ ابْنِ وَهْبٍ، فَلَمَّا غَفَلَ.
பாடம் : 81
தோல் கேடயம்
2907. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்று (பெருநாள்) ஈத் தினமாக இருந்தது. (ஆப்பிரிக்க) கறுப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டி ருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், ‘‘நீ (இவர்களுடைய வீர விளையாட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். நான், ‘‘ஆம்” என்று பதிலளித்தேன்.
அப்போது அவர்கள் என் கன்னம் அவர்களுடைய கன்னத்தோடு (ஒட்டியபடி) இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்துக்கொண்டார்கள். ‘‘அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, ‘‘போதுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், ‘‘ஆம், போதும்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் நீ போ!” என்று கூறி னார்கள்.60

2908. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً فَخَرَجُوا نَحْوَ الصَّوْتِ فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدِ اسْتَبْرَأَ الْخَبَرَ، وَهْوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ وَفِي عُنُقِهِ السَّيْفُ وَهْوَ يَقُولُ "" لَمْ تُرَاعُوا لَمْ تُرَاعُوا "". ثُمَّ قَالَ "" وَجَدْنَاهُ بَحْرًا "". أَوْ قَالَ "" إِنَّهُ لَبَحْرٌ "".
பாடம் : 82
வாட்களைத் தொங்கவிடும் தோல் வார்களும் கழுத்தில் வாளைத் தொங்கவிடுவதும்
2908. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாகவும் வீரமிக்கவர்களாக வும் இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சப்தம் வந்த திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்துவிட்டு அபூதல்ஹா (ரலி) அவர் களின் சேணம் பூட்டப்படாத குதிரைமீது அமர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக்கொண்டி ருந்தது.
அவர்கள், ‘‘பயப்படாதீர்கள். பயப்படா தீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பிறகு, ‘‘நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகக் கண்டோம்” என்று கூறினார்கள். அல்லது, ‘‘இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியது” என்று கூறினார்கள்.

2909. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ حَبِيبٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ لَقَدْ فَتَحَ الْفُتُوحَ قَوْمٌ مَا كَانَتْ حِلْيَةُ سُيُوفِهِمِ الذَّهَبَ وَلاَ الْفِضَّةَ، إِنَّمَا كَانَتْ حِلْيَتُهُمُ الْعَلاَبِيَّ وَالآنُكَ وَالْحَدِيدَ.
பாடம் : 83
வாட்களின் ஆபரணம் தொடர்பாக வந்துள்ளவை
2909. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு சமுதாயத்தார் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர்களுடைய வாட்களின் ஆபரணம் பொன்னாகவோ வெள்ளியாகவோ இருக்கவில்லை; அவர் களுடைய (வாட்களின்) ஆபரணங்களெல் லாம் (வாளுறையின் அடிமுனை அல்லது மேல்முனையில் சுற்றிவைக்கப்படும்) ஒட்டகத்தின் கழுத்து நரம்பு (அல்லது பதனிடப்படாத தோல்), ஈயம், இரும்பு ஆகியவைதான்.

2910. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ الدُّؤَلِيُّ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَ أَنَّهُ، غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَحْتَ سَمُرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُونَا وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ فَقَالَ "" إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَىَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهْوَ فِي يَدِهِ صَلْتًا "". فَقَالَ مَنْ يَمْنَعُكَ مِنِّي فَقُلْتُ "" اللَّهُ "". ثَلاَثًا وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ.
பாடம் : 84
பயணத்தில் மதிய ஓய்வின்போது வாளை மரத்தில் தொங்கவிடு வது
2910. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் யிநஜ்த்’ நாட்டை நோக்கி அறப்போருக்காகச் சென்றேன்.61 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர் களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்துகொண்டிருந்தபோது மதிய ஓய்வுகொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கி னார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத் தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த் தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றுகொண்டிருந்தார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக்கொண்டார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறை’லிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், யிஎன்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?› என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்” என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்குதான்) அமர்ந் திருந்தார். அவரை நபியவர்கள் தண்டிக்க வில்லை.

2911. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سُئِلَ عَنْ جُرْحِ النَّبِيِّ، صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ. فَقَالَ جُرِحَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ وَهُشِمَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ، فَكَانَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ تَغْسِلُ الدَّمَ وَعَلِيٌّ يُمْسِكُ، فَلَمَّا رَأَتْ أَنَّ الدَّمَ لاَ يَزِيدُ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ حَصِيرًا فَأَحْرَقَتْهُ حَتَّى صَارَ رَمَادًا ثُمَّ أَلْزَقَتْهُ، فَاسْتَمْسَكَ الدَّمُ.
பாடம் : 85
தலைக் கவசம் அணிவது
2911. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு உஹுத் போர் நாளில் ஏற்பட்ட காயம் பற்றி என்னி டம் கேட்கப்பட்டது. நான், ‘‘நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. (அவர்களின்) தலைக் கவசம் அவர்களின் தலைமீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டி ருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் (தண்ணீரை) ஏந்திக்கொண்டிருந்தார்கள்.
இரத்தம் இன்னும் அதிகமாகிக்கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதை ஃபாத்திமா (ரலி) அவர்கள் பார்த்தபோது, ஒரு பாயை எடுத்து, அது சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு அதைக் காயத்தில் வைத்து அழுத்தி னார்கள். உடனே இரத்தம் (வெளியேறுவது) நின்றுவிட்டது” என்று கூறினேன்.62

2912. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ سِلاَحَهُ وَبَغْلَةً بَيْضَاءَ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً.
பாடம் : 86
(தலைவர்களின்) மரணத்தின்போது ஆயுதங்களை உடைக்கலாகாது என்ற கருத்து63
2912. அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறக்கும்போது தமது ஆயுதத்தையும், வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், கைபரில் அவர்களுக்கிருந்த ஒரு நிலத்தையும் தவிர. வேறெதையும் அவர்கள் விட்டுச்செல்லவில்லை; அந்த நிலத்தையும் அவர்கள் தர்மமாக ஆக்கிவிட்டிருந்தார்கள்.64

2913. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ، وَأَبُو سَلَمَةَ أَنَّ جَابِرًا، أَخْبَرَهُ. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ الدُّؤَلِيِّ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ، فَتَفَرَّقَ النَّاسُ فِي الْعِضَاهِ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَحْتَ شَجَرَةٍ فَعَلَّقَ بِهَا سَيْفَهُ ثُمَّ نَامَ، فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَجُلٌ وَهْوَ لاَ يَشْعُرُ بِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ هَذَا اخْتَرَطَ سَيْفِي "". فَقَالَ مَنْ يَمْنَعُكَ قُلْتُ "" اللَّهُ "". فَشَامَ السَّيْفَ، فَهَا هُوَ ذَا جَالِسٌ، ثُمَّ لَمْ يُعَاقِبْهُ.
பாடம் : 87
மதிய ஓய்வின்போது தலைவரைப் பிரிந்து மரத்தின் நிழலில் மக்கள் தங்குவது
2913. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். (திரும்பி வரும் வேளையில்) முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள் ளும் நேரம் வந்தது. மக்கள் அங்கிருந்த மரங்களிடையே பிரிந்து சென்று அவற்றின் நிழல்களில் (ஓய்வுக்காக) ஒதுங்கலானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்கவிட்டார்கள்; பிறகு தூங்கிவிட்டார் கள். பிறகு கண்விழித்தபோது நபியவர் களுக்கே தெரியாமல் அங்கே ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். (அவரைப் பற்றி) நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் என் வாளை உருவிக்கொண்டு, யிஉன்னை (என்னிடமிருந்து) காப்பவர் யார்?› என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். உடனே வாளை உறையில் போட்டுக்கொண்டார். அவர் இதோ அமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்கவில்லை.65
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2914. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهْوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ، فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا، فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا، فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ، فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَأَبَى بَعْضٌ، فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلُوهُ عَنْ ذَلِكَ قَالَ "" إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ "". وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي قَتَادَةَ فِي الْحِمَارِ الْوَحْشِيِّ مِثْلُ حَدِيثِ أَبِي النَّضْرِ قَالَ "" هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَىْءٌ "".
பாடம் : 88
ஈட்டிகள் தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது (போர்ச்) செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. என் கட்ட ளைக்கு யார் மாறுசெய்கிறாரோ, அவர்மீது இழிவும் (காப்புவரி கட்டவேண்டிய) சிறுமையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2914. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில்) இருந்தேன். நான் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்தபோது இஹ்ராம் கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்க வில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன்.
குதிரைமீதேறி அமர்ந்துகொண்டு என் சகாக்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் எடுத்துத் தர மறுத்துவிட்டார்கள். எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி அவர்களிடம் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
பிறகு நானே அதை எடுத்துக்கொண்டு கழுதையின் மீது பாய்ச்சி அதைக் கொன்றுவிட்டேன். நபித்தோழர்களில் சிலர் அந்தக் கழுதையின் (சமைக்கப்பட்ட) இறைச்சியை உண்டார்கள். வேறுசிலர் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்தபொழுது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவுதான்” என்று பதிலளித் தார்கள்.66
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில், ‘‘அதன் இறைச்சி யில் மீதி ஏதும் உங்களிடம் உண்டா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று காணப்படுகிறது.

2915. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ فِي قُبَّةٍ "" اللَّهُمَّ إِنِّي أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ "". فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ فَقَالَ حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَدْ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ، وَهْوَ فِي الدِّرْعِ، فَخَرَجَ وَهْوَ يَقُولُ {سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ * بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ }. وَقَالَ وُهَيْبٌ حَدَّثَنَا خَالِدٌ يَوْمَ بَدْرٍ.
பாடம் : 89
நபி (ஸல்) அவர்களின் கவச உடை மற்றும் போரில் அவர்கள் அணிந்த மேலங்கி தொடர்பாகக் கூறப்பட்டவை
‘‘காலித், தம் கவச உடைகளை இறை வழியில் அர்ப்பணித்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.67
2915. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, ‘‘இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகின்றேன். இறைவா! உனது நாட்டம் (முஸ்லிம்களாகிய நாங்கள் தோற்றுப்போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வழிபடுவது நின்றுபோய்விடும். (மக்கள் பொய்த் தெய்வங்களையே வழிபட்டுக்கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி மன்றாடிப்) பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘போதும், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு ‘‘இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்க ளிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” (54:45,46) எனும் குர்ஆன் வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில் பத்ர் போரின்போது என்னும் வாசகம் (அதிகப்படியாக) இடம் பெற்றுள்ளது.

2916. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ. وَقَالَ يَعْلَى حَدَّثَنَا الأَعْمَشُ دِرْعٌ مِنْ حَدِيدٍ. وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ وَقَالَ رَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.
பாடம் : 89
நபி (ஸல்) அவர்களின் கவச உடை மற்றும் போரில் அவர்கள் அணிந்த மேலங்கி தொடர்பாகக் கூறப்பட்டவை
‘‘காலித், தம் கவச உடைகளை இறை வழியில் அர்ப்பணித்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.67
2916. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தமது போர்க் கவசம் முப்பது ‘ஸாஉ’கள் தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகர மாக ஒரு யூதரிடம் அடகுவைக்கப்பட்டி ருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், யிஇரும்புக் கவசம்’ என்றும் மற்றொன்றில், ‘‘இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகுவைத்தார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

2917. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ مَثَلُ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطَرَّتْ أَيْدِيَهُمَا إِلَى تَرَاقِيهِمَا، فَكُلَّمَا هَمَّ الْمُتَصَدِّقُ بِصَدَقَتِهِ اتَّسَعَتْ عَلَيْهِ حَتَّى تُعَفِّيَ أَثَرَهُ، وَكُلَّمَا هَمَّ الْبَخِيلُ بِالصَّدَقَةِ انْقَبَضَتْ كُلُّ حَلْقَةٍ إِلَى صَاحِبَتِهَا وَتَقَلَّصَتْ عَلَيْهِ وَانْضَمَّتْ يَدَاهُ إِلَى تَرَاقِيهِ "". فَسَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" فَيَجْتَهِدُ أَنْ يُوَسِّعَهَا فَلاَ تَتَّسِعُ "".
பாடம் : 89
நபி (ஸல்) அவர்களின் கவச உடை மற்றும் போரில் அவர்கள் அணிந்த மேலங்கி தொடர்பாகக் கூறப்பட்டவை
‘‘காலித், தம் கவச உடைகளை இறை வழியில் அர்ப்பணித்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.67
2917. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
(தர்மம் செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவருக்கும் உவமை, இரும்பு நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்கள் ஆவர். அவர்களின் கைகள் அவர்களின் கழுத்தெலும்புகளோடு பிணைந்துள்ளன. (அந்த அளவுக்கு அவை இறுக்க மானவை.) தர்மம் செய்பவர் தர்மம் செய்ய நாடும்போது (அவர் அணிந்திருக்கும் அந்த) அங்கி அவருக்கு விரிந்துகொடுத்து, அவரது பாதச் சுவட்டைக்கூட அழித்து விடுகிறது.
கஞ்சன் தர்மம் செய்ய நாடும் போதெல்லாம் (அவனது இரும்பு அங்கி யின்) ஒவ்வொரு வளையமும் அடுத்த வளையத்தை நெருக்குகிறது; அவனைப் பிடித்து அழுத்துகிறது. அவனுடைய கைகள் கழுத்தெலும்புகளுடன் ஒட்டிக் கொள்கின்றன.68
(இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை அறிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘கஞ்சன் அந்த அங்கியை விரிவுபடுத்த முயல்வான். ஆனால், அது விரியாது” என்று (பலமுறை) சொன்னார்கள்.