2858. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ "".
பாடம் : 47 குதிரையின் அபசகுனம் பற்றிக் கூறப்படுபவை
2858. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்றில் மட்டுமே (இருக்க முடியும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.


அத்தியாயம் : 56
2859. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنْ كَانَ فِي شَىْءٍ فَفِي الْمَرْأَةِ وَالْفَرَسِ وَالْمَسْكَنِ "".
பாடம் : 47 குதிரையின் அபசகுனம் பற்றிக் கூறப்படுபவை
2859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும் வீட்டிலும் தான் இருக்கும்.

இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

அத்தியாயம் : 56
2860. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ لِثَلاَثَةٍ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ أَرْوَاثُهَا وَآثَارُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ فَهْىَ وِزْرٌ عَلَى ذَلِكَ "". وَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ، فَقَالَ "" مَا أُنْزِلَ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ }"".
பாடம் : 48 மூவருக்குரிய குதிரைகள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் குதிரைகளையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் அவற் றின் மீது நீங்கள் பயணம் செய்வதற்காகவும் (உங்கள் வாழ்வின்) அலங்காரமாகவும் அவன் படைத்தான். (16:8)
2860. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை மூவருக்கு (மூன்று வகை விளைவுகளைத் தரும்). ஒருவருக்கு நற்கூலி ஆகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளா தாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான புல்வெளியில், அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற் பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்னைக் கட்டிவைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவுக்குப் பசும்புல் வெளிகளில், அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு, ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடு கள் அளவுக்கும் அதன் விட்டைகளின் அளவுக்கும் அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருடைய நன்மைகளாக அமையும்.

குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் இஸ்லாமியர்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் (ஸகாத்) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. யியார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அதனை (அதற்கான தண்டனை யைக்) கண்டுகொள்வார்’ (99:7,8) எனும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த (குர்ஆன்) வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34

அத்தியாயம் : 56
2861. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ النَّاجِيُّ، قَالَ أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، فَقُلْتُ لَهُ حَدِّثْنِي بِمَا، سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَافَرْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ ـ قَالَ أَبُو عَقِيلٍ لاَ أَدْرِي غَزْوَةً أَوْ عُمْرَةً ـ فَلَمَّا أَنْ أَقْبَلْنَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَحَبَّ أَنْ يَتَعَجَّلَ إِلَى أَهْلِهِ فَلْيُعَجِّلْ "". قَالَ جَابِرٌ فَأَقْبَلْنَا وَأَنَا عَلَى جَمَلٍ لِي أَرْمَكَ لَيْسَ فِيهِ شِيَةٌ، وَالنَّاسُ خَلْفِي، فَبَيْنَا أَنَا كَذَلِكَ إِذْ قَامَ عَلَىَّ، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا جَابِرُ اسْتَمْسِكْ "". فَضَرَبَهُ بِسَوْطِهِ ضَرْبَةً، فَوَثَبَ الْبَعِيرُ مَكَانَهُ. فَقَالَ "" أَتَبِيعُ الْجَمَلَ "". قُلْتُ نَعَمْ. فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ فِي طَوَائِفِ أَصْحَابِهِ، فَدَخَلْتُ إِلَيْهِ، وَعَقَلْتُ الْجَمَلَ فِي نَاحِيَةِ الْبَلاَطِ. فَقُلْتُ لَهُ هَذَا جَمَلُكَ. فَخَرَجَ، فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ وَيَقُولُ "" الْجَمَلُ جَمَلُنَا "". فَبَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَاقٍ مِنْ ذَهَبٍ فَقَالَ "" أَعْطُوهَا جَابِرًا "". ثُمَّ قَالَ "" اسْتَوْفَيْتَ الثَّمَنَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" الثَّمَنُ وَالْجَمَلُ لَكَ "".
பாடம் : 49 அறப்போரில் (கலந்துகொண்ட) அடுத்தவரின் ஊர்திப் பிராணியை அடி(த்து இயங்கவை)ப்பது
2861. அபுல்முத்தவக்கில் அலீ பின் தாவூத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றேன். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸ் ஒன்றை எனக்கு அறி வியுங்கள்” என அவர்களிடம் சொன் னேன். அப்போது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள்:

நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன் லிஅறிவிப்பாளர் அபூஅகீல் (ரஹ்) அவர்கள், ‘‘அது போருக்கான பயணமா, உம்ராவுக்கான பயணமா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்லி நாங்கள் திரும்பி வந்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘தன் வீட்டாரிடம் விரைவாகச் செல்ல விரும்புபவர் விரைவாகச் செல்லட்டும்” என்று கூறினார்கள். நான் எனக்குச் சொந்தமான, குறை ஏதுமற்ற, கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து செல்ல, நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தோம். (மற்ற) மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருந்தனர்.

நான் அவ்வாறு சென்றுகொண்டிருக்கையில், திடீரென என் ஒட்டகம் (களைப்படைந்து) நின்றுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘‘ஜாபிரே! சற்றுப்பொறு!” என்று கூறிவிட்டு, தமது சாட்டையால் அதை ஒருமுறை அடித் தார்கள். உடனே ஒட்டகம் தன் இடத்தி லிருந்து வேகமாக ஓடியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒட்டகத்தை நீ விற்கிறாயா?” என்று கேட்க, நான், ‘‘ஆம் (விற்கிறேன்)” என்று பதிலளித்தேன்.

நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். ஒட்டகத்தை (கற்கள் பரப்பப்பட்ட) பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு, ‘‘இது தங்களின் ஒட்டகம்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தை (ஆராயும் வகையில்) சுற்றி வரத் தொடங்கினார்கள். (பிறகு) ‘‘இந்த ஒட்டகம் நமது ஒட்டகம்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஐந்து) யிஊக்கியா’க்கள் தங்கத்தைக் கொடுத்து அனுப்பிவைத்து, ‘‘இதை ஜாபிரிடம் கொடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘(ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக்கொண்டாயா?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், ‘‘ஆம் (பெற்றுக்கொண்டேன்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘விலையும் ஒட்டகமும் உமக்கே உரியவை (இரண்டையும் நீரே வைத்துக்கொள்வீராக!)” என்று கூறினார்கள்.35

அத்தியாயம் : 56
2862. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ، يُقَالُ لَهُ مَنْدُوبٌ فَرَكِبَهُ، وَقَالَ "" مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا "".
பாடம் : 50 முரட்டு ஊர்திப் பிராணியின் மீதும் ஆண் குதிரையின் மீதும் பயணம் செய்தல் ராஷித் பின் சஅத் (ரஹ்) அவர்கள், ‘‘முன்னோர்கள், (பயணம் செய்வதற்கு) ஆண் குதிரையையே விரும்பினார்கள். ஏனெனில், அதுதான் மிக வேகமாக ஓடக் கூடியதும், துணிச்சல் மிக்கதும் ஆகும்” என்று கூறினார்கள்.
2862. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவில் (பகைவர்கள் படை யெடுத்து வருவதாகப்) பீதி ஏற்பட்டிருந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யிமன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி அதில் ஏறிச் சென்றார்கள். பிறகு (எல்லைகளைப் பார்த்துவிட்டு வந்து), ‘‘பீதி எதையும் நாம் பார்க்கவில்லை. இந்தக் குதிரையை, தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.36

அத்தியாயம் : 56
2863. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَعَلَ لِلْفَرَسِ سَهْمَيْنِ وَلِصَاحِبِهِ سَهْمًا. وَقَالَ مَالِكٌ يُسْهَمُ لِلْخَيْلِ وَالْبَرَاذِينِ مِنْهَا لِقَوْلِهِ {وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا} وَلاَ يُسْهَمُ لأَكْثَرَ مِنْ فَرَسٍ.
பாடம் : 51 (போர்ச் செல்வத்தில்) குதிரைக்கான பங்கு
2863. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரில் கிடைத்த செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் (அதல்லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.

மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அரபுக் குதிரைகளுக்கும் மற்றக் குதிரைகளுக்கும் போரில் கிடைக்கும் செல்வங்களிலிருந்து பங்கு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், யிகுதிரைகளையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் பயணம் செய்வதற்காக(வும் அலங்காரமாகவும்) அவன் படைத்தான்’ (16:8) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒரு குதிரையைவிட அதிகமானவற்றுக்குப் பங்கு அளிக்கப்படாது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2864. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ،. قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ قَالَ لَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَفِرَّ، إِنَّ هَوَازِنَ كَانُوا قَوْمًا رُمَاةً، وَإِنَّا لَمَّا لَقِينَاهُمْ حَمَلْنَا عَلَيْهِمْ فَانْهَزَمُوا، فَأَقْبَلَ الْمُسْلِمُونَ عَلَى الْغَنَائِمِ وَاسْتَقْبَلُونَا بِالسِّهَامِ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَفِرَّ، فَلَقَدْ رَأَيْتُهُ وَإِنَّهُ لَعَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَإِنَّ أَبَا سُفْيَانَ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ "".
பாடம் : 52 போரில் அடுத்தவரின் ஊர்திப் பிராணியை ஓட்டுவது
2864. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று வெருண்டு ஓடிவிட்டீர்களா(மே, உண்மைதானா)?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ‘‘(ஆம், உண்மை தான்.) ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெருண்டோடவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சிபெற்ற சமூகத்தாராய் இருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்த போது அவர்கள்மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள்.

ஆகவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுக்க முனைந்தார்கள். அப்போது எதிரிகள் அம்புகளால் எங்களை எதிர் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள்தான் பின்வாங்கி ஓடிவந்துவிட்டோம்.) நான் நபி (ஸல்) அவர்களைத் தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருக்கக் கண்டேன். அபூசுப்யான் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,

‘‘நான்நபிதான்பொய்யில்லை!

நான்அப்துல் முத்தலிபின்மகன் ஆவேன்”

என்று (பாடியபடி) கூறிக்கொண்டி ருந்தார்கள்.

அத்தியாயம் : 56
2865. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ إِذَا أَدْخَلَ رِجْلَهُ فِي الْغَرْزِ وَاسْتَوَتْ بِهِ نَاقَتُهُ قَائِمَةً، أَهَلَّ مِنْ عِنْدِ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ.
பாடம் : 53 ஊர்திப் பிராணியின் இரும்பு மற்றும் தோல் வளையம்37
2865. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது காலை, ஏறும் வளையத்தில் நுழைத்து, தமது ஒட்டகம் நிலைக்கு வந்துவிடும்போது துல் ஹுலைஃபா பள்ளிவாசலிலிருந்து (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி) யிதல்பியா’ கூறுவார்கள்.

அத்தியாயம் : 56
2866. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه اسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ عُرْىٍ، مَا عَلَيْهِ سَرْجٌ، فِي عُنُقِهِ سَيْفٌ.
பாடம் : 54 சேணம் பூட்டப்படாத குதிரையில் பயணித்தல்
2866. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சேணம் பூட்டப் படாத, திறந்தமேனி கொண்ட ஒரு குதிரையின் மீது அமர்ந்து, கழுத்தில் வாளொன்று தொங்கிக்கொண்டிருக்க, மதீனாவாசிகளை நோக்கி வந்தார்கள்.38

அத்தியாயம் : 56
2867. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، الْمَدِينَةِ فَزِعُوا مَرَّةً، فَرَكِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ كَانَ يَقْطِفُ ـ أَوْ كَانَ فِيهِ قِطَافٌ ـ فَلَمَّا رَجَعَ قَالَ "" وَجَدْنَا فَرَسَكُمْ هَذَا بَحْرًا "". فَكَانَ بَعْدَ ذَلِكَ لاَ يُجَارَى.
பாடம் : 55 மந்தமாக நடக்கும் குதிரை
2867. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் ஒருமுறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப் பட்டு) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் தன்மையுடைய ஒரு குதிரையின் மீது ஏறிச் சென்றார்கள். திரும்பி வந்தபோது, ‘‘உங்களின் இந்தக் குதிரையை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.

அதற்குப் பிறகு அந்தக் குதிரை வேறெந்த குதிரையாலும் முந்த முடியாத தாக மாறிவிட்டது.

அத்தியாயம் : 56
2868. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَجْرَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَا ضُمِّرَ مِنَ الْخَيْلِ مِنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ. قَالَ ابْنُ عُمَرَ وَكُنْتُ فِيمَنْ أَجْرَى. قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ. قَالَ سُفْيَانُ بَيْنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ.
பாடம் : 56 குதிரைப் பந்தயம்
2868. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மெலியவைக்கப் பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை யிஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத் துல் வதா’ எனும் மலைக் குன்றுவரை (ஓட்டப் பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள். மெலியவைக்கப்படாத (பயிற்சியளிக் கப்படாத) குதிரைகளை ‘ஸனிய்யத்துல் வதா’விலிருந்து யிபனூ ஸுரைக்’ பள்ளிவாசல்வரை (பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்துகொண்டேன்.39

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் பின்வரும் தகவலும் காணப்படு கிறது. யிஹஃப்யா’வுக்கும் ஸனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். ஸனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும்.

அத்தியாயம் : 56
2869. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، وَكَانَ أَمَدُهَا مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ سَابَقَ بِهَا. قَالَ أَبُو عَبْد اللَّهِ أَمَدًا غَايَةً فَطَالَ عَلَيْهِمْ الْأَمَدُ
பாடம் : 57 பந்தயத்திற்காகக் குதிரையை மெலியவைப்பது
2869. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார் கள். அவற்றின் பந்தய எல்லை, ‘ஸனிய்யத் துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல்வரை இருந்தது.

நானும் இத்தகைய குதிரைகளுக் கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

(இங்கு யிஎல்லை’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘அமத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிமுடிவு’ என்பது பொருள். ‘‘அவர்கள்மீது காலம் (‘அமத்’) நீண்டுவிட்டது” (57:16) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தியாயம் : 56
2870. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَابَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الْخَيْلِ الَّتِي قَدْ أُضْمِرَتْ فَأَرْسَلَهَا مِنَ الْحَفْيَاءِ، وَكَانَ أَمَدُهَا ثَنِيَّةَ الْوَدَاعِ. فَقُلْتُ لِمُوسَى فَكَمْ كَانَ بَيْنَ ذَلِكَ قَالَ سِتَّةُ أَمْيَالٍ أَوْ سَبْعَةٌ. وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضَمَّرْ، فَأَرْسَلَهَا مِنْ ثَنِيَّةِ الْوَدَاعِ، وَكَانَ أَمَدُهَا مَسْجِدَ بَنِي زُرَيْقٍ، قُلْتُ فَكَمْ بَيْنَ ذَلِكَ قَالَ مِيلٌ أَوْ نَحْوُهُ. وَكَانَ ابْنُ عُمَرَ مِمَّنْ سَابَقَ فِيهَا.
பாடம் : 58 மெலியவைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய எல்லை
2870. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப் பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை யிஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘ஸனிய்யத்துல் வதா’வாக இருந்தது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் (அறிவிப்பாளர்) மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவ்விரண்டுக் குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?” என்று கேட்டேன். அவர், ‘‘ஆறு அல்லது ஏழு மைல்கள்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

‘‘நபி (ஸல்) அவர்கள் மெலியவைக்கப் படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக் கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை ஸனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசலாக இருந்தது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உமர் (ரலி) அவர்களும் (தமது குதிரையுடன்) பந்தயத்தில் கலந்துகொண்டார்கள்.

‘‘நான் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?” என்று கேட்க, யிசுமார் ஒரு மைல்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்” என அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 56
2871. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم يُقَالُ لَهَا الْعَضْبَاءُ.
பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘‘நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை (தமது ஒட்டகமான) யிகஸ்வா’ வின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக்கொண்டார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள், யிகஸ்வா சிரமப் படுத்தவில்லை’ என்று சொன்னார்கள்” என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.40
2871. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.41


அத்தியாயம் : 56
2872. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ تُسَمَّى الْعَضْبَاءَ لاَ تُسْبَقُ ـ قَالَ حُمَيْدٌ أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ ـ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، حَتَّى عَرَفَهُ فَقَالَ "" حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَىْءٌ مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ "". طَوَّلَهُ مُوسَى عَنْ حَمَّادٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘‘நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை (தமது ஒட்டகமான) யிகஸ்வா’ வின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக்கொண்டார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள், யிகஸ்வா சிரமப் படுத்தவில்லை’ என்று சொன்னார்கள்” என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.40
2872. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. இந்நிலையில், கிராமவாசி ஒருவர் பயணத்திற்கும் சுமை ஏற்றுவதற்கும் ஏற்ற ஒட்டகம் ஒன்றின்மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தி விட்டது.

இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதை அறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘உலகில் உயர்ந்துவிடுகின்ற எந்தப் பொருளையும் (ஒருநாள்) கீழே இறக்குவதுதான் அல்லாஹ்வின் நியதி யாகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் இந்த ஹதீஸ் இன்னும் நீளமாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 56
2873. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ بَغْلَتَهُ الْبَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً.
பாடம் : 60 கழுதையில் பயணித்துப் போருக்குச் செல்வது42 பாடம் : 61 நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை இதை அனஸ் (ரலி) அவர்கள் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.43 ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு ‘அய்லா’ வின் அரசர் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையொன்றை அன்பளிப்பாக வழங்கினார்” என்று அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.44
2873. அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறந்தபோது) தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தமது ஆயுதத்தையும், தர்மமாக விட்டுச்சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் விட்டுச்செல்ல வில்லை.45


அத்தியாயம் : 56
2874. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عُمَارَةَ وَلَّيْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ لاَ، وَاللَّهِ مَا وَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَكِنْ وَلَّى سَرَعَانُ النَّاسِ، فَلَقِيَهُمْ هَوَازِنُ بِالنَّبْلِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ، وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ""
பாடம் : 60 கழுதையில் பயணித்துப் போருக்குச் செல்வது42 பாடம் : 61 நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை இதை அனஸ் (ரலி) அவர்கள் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.43 ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு ‘அய்லா’ வின் அரசர் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையொன்றை அன்பளிப்பாக வழங்கினார்” என்று அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.44
2874. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களே!” என்று கேட்டார். நான், ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டு ஓடவில்லை. ஆனால், மக்களில் அவசரக்காரர்கள்தான் புறமுது கிட்டுச் சென்றார்கள். ஆகவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை அம்புகளால் தாக்கினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார் கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் நபிதான்; பொய்யில்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள் என்று பதிலளித் தார்கள்.

அத்தியாயம் : 56
2875. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ إِسْحَاقَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْجِهَادِ. فَقَالَ "" جِهَادُكُنَّ الْحَجُّ "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُعَاوِيَةَ بِهَذَا.
பாடம் : 62 பெண்களின் அறப்போர்
2875. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப் போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(பெண்களாகிய) உங்கள் அறப்போர் ஹஜ் செய்வதுதான்” என்று கூறினார்கள்.46


அத்தியாயம் : 56
2876. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُعَاوِيَةَ، بِهَذَا. وَعَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم سَأَلَهُ نِسَاؤُهُ عَنِ الْجِهَادِ فَقَالَ "" نِعْمَ الْجِهَادُ الْحَجُّ "".
பாடம் : 62 பெண்களின் அறப்போர்
2876. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய துணைவியர் அறப்போர் குறித்து (அதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த அறப்போர் ஆகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2877. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى ابْنَةِ مِلْحَانَ فَاتَّكَأَ عِنْدَهَا، ثُمَّ ضَحِكَ فَقَالَتْ لِمَ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ "" نَاسٌ مِنْ أُمَّتِي يَرْكَبُونَ الْبَحْرَ الأَخْضَرَ فِي سَبِيلِ اللَّهِ، مَثَلُهُمْ مَثَلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ "". فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" اللَّهُمَّ اجْعَلْهَا مِنْهُمْ "". ثُمَّ عَادَ فَضَحِكَ، فَقَالَتْ لَهُ مِثْلَ أَوْ مِمَّ ذَلِكَ فَقَالَ لَهَا مِثْلَ ذَلِكَ، فَقَالَتِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" أَنْتِ مِنَ الأَوَّلِينَ، وَلَسْتِ مِنَ الآخِرِينَ "". قَالَ قَالَ أَنَسٌ فَتَزَوَّجَتْ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، فَرَكِبَتِ الْبَحْرَ مَعَ بِنْتِ قَرَظَةَ، فَلَمَّا قَفَلَتْ رَكِبَتْ دَابَّتَهَا فَوَقَصَتْ بِهَا، فَسَقَطَتْ عَنْهَا فَمَاتَتْ.
பாடம் : 63 கடலில் (பயணம் செய்து) பெண் அறப்போரில் ஈடுபடுவது
2877. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்துவிட்டு, பிறகு (விழித் தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் (போர் புரிவதற்காகப்) பசுங்கடலில் பயணம் செய்வார்கள். அவர்களின் நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களின் நிலையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

அதற்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போன்றே, ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போன்றே பதிலளித்தார்கள்.

அதைக் கேட்டு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்; ஆனால், அடுத்து (திரும்பி) வருவோரில் ஒருவராக இருக்கமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு, உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர் களை மணமுடித்துக்கொண்டார்கள். பிறகு கரழா பின் அப்தி அம்ர் என்பவரின் மகளுடன் (அறப்போருக்காகக்) கடல் பயணம் செய்தார்கள். அவர்கள் (போர் முடிந்து) புறப்பட்டபோது தமது ஊர்திப் பிராணியின் மீது ஏற, அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. அவர்கள் அதிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.47

அத்தியாயம் : 56