2830. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ "".
பாடம் : 30 இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகையான உயிர்த் தியாகங்கள் உண்டு.25
2830. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

கொள்ளை நோயால் இறக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அது வீர மரணமாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2831. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ لَمَّا نَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا، فَجَاءَ بِكَتِفٍ فَكَتَبَهَا، وَشَكَا ابْنُ أُمِّ مَكْتُومٍ ضَرَارَتَهُ فَنَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ }.
பாடம் : 31 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் தக்க காரணமின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர். (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிடத் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரைத் தகுதியில் அல்லாஹ் சிறப்பாக்கியுள்ளான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்துள்ளான். (எனினும்,) அறப்போர் புரிவோருக்கு மகத்தான பிரதிபலனை வழங்கி அவர் களை, (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிட அவன் சிறப்பித் துள்ளான். (மேலும்) தன்னிடமிருந்து பதவிகளை யும் மன்னிப்பையும் கருணையையும் (அவர்களுக்கு வழங்குகின்றான்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (4:95,96)
2831. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இறைநம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் வசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார்.

(அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் தமது (கண்பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, யிதக்க காரணமின்றி’ என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (4:95) அருளப்பட்டது.


அத்தியாயம் : 56
2832. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ قَالَ رَأَيْتُ مَرْوَانَ بْنَ الْحَكَمِ جَالِسًا فِي الْمَسْجِدِ، فَأَقْبَلْتُ حَتَّى جَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَأَخْبَرَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمْلَى عَلَيْهِ لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ قَالَ فَجَاءَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهُوَ يُمِلُّهَا عَلَىَّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ. وَكَانَ رَجُلاً أَعْمَى، فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم وَفَخِذُهُ عَلَى فَخِذِي، فَثَقُلَتْ عَلَىَّ حَتَّى خِفْتُ أَنْ تَرُضَّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {غَيْرُ أُولِي الضَّرَرِ}.
பாடம் : 31 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் தக்க காரணமின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் இறைவழியில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர். (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிடத் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரைத் தகுதியில் அல்லாஹ் சிறப்பாக்கியுள்ளான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்துள்ளான். (எனினும்,) அறப்போர் புரிவோருக்கு மகத்தான பிரதிபலனை வழங்கி அவர் களை, (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரைவிட அவன் சிறப்பித் துள்ளான். (மேலும்) தன்னிடமிருந்து பதவிகளை யும் மன்னிப்பையும் கருணையையும் (அவர்களுக்கு வழங்குகின்றான்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (4:95,96)
2832. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார்: ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘இறை நம்பிக்கையாளர்களில் (தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும் இறைவழியில் தம் செல்வங் களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” (4:95) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உம்மி மக்த் தூம் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப் போரில் பங்கெடுத்திருப்பேன்” என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். ஆகவே, அப்போது உயர்ந்தோனும் வளமிக்கோனுமான அல்லாஹ் தன் தூதருக்கு (வேத அறிவிப்பை) அருளினான்.

நபி (ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத அறிவிப்பு வரத்தொடங்கிய காரணத் தால்) அது என்மீது (கனத்துப்போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவுக்கென்றால் என் தொடை நசுங்கிவிடும் என்று அஞ்சினேன். பிறகு நபியவர்களைவிட்டு அந்நிலை அகற்றப்பட்டது. அப்போது அல்லாஹ், யிதகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)› எனும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

அத்தியாயம் : 56
2833. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، كَتَبَ فَقَرَأْتُهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا "".
பாடம் : 32 போரில் பொறுமை
2833. சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் (உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக்) கடிதம் எழுதினார் கள். நான் அதைப் படித்தேன். அதில் அவர், ‘‘பகைவர்களை நீங்கள் சந்தித்தால் பொறுமையுடன் (நிலைகுலையாமல்) இருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எழுதியிருந் தார்கள்.

அத்தியாயம் : 56
2834. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْخَنْدَقِ فَإِذَا الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ فِي غَدَاةٍ بَارِدَةٍ، فَلَمْ يَكُنْ لَهُمْ عَبِيدٌ يَعْمَلُونَ ذَلِكَ لَهُمْ، فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ النَّصَبِ وَالْجُوعِ قَالَ اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ. فَقَالُوا مُجِيبِينَ لَهُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدًا
பாடம் : 33 போர் புரியும்படி ஆர்வமூட்டல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! இறைநம்பிக்கையாளர்களுக் குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! (8:65)
2834. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப் பட்டார்கள்.27 அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக்கொண்டி ருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக் காகச் செய்திட அவர்களிடம் அப்போது அடிமை (ஊழியர்)கள் இல்லை.

அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

‘‘இறைவாமறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்மன்னிப்பருள்வாயாக!”

என்று (பாடலில்) கூறினார்கள்.

இதைக் கேட்ட நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,

‘‘நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்உயிரோடு இருக்கும்வரைஇஸ்லாத்தில் நிலைப்போம்”

என்று (பாடியபடி) கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2835. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ جَعَلَ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ الْخَنْدَقَ حَوْلَ الْمَدِينَةِ، وَيَنْقُلُونَ التُّرَابَ عَلَى مُتُونِهِمْ وَيَقُولُونَ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الإِسْلاَمِ مَا بَقِينَا أَبَدًا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُجِيبُهُمْ وَيَقُولُ اللَّهُمَّ إِنَّهُ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ فَبَارِكْ فِي الأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ.
பாடம் : 34 அகழ் தோண்டுதல்
2835. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள்மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டுசெல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள்,

‘‘நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்துள்ளோம்உயிரோடு இருக்கும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்”

என்று பாடலானார்கள்.

அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்,

‘‘இறைவா!மறுமையின் நன்மை தவிரவேறு நன்மை கிடையாது!அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்வளம் வழங்குவாயாக!”

என்று (பாடலிலேயே) பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 56
2836. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْقُلُ وَيَقُولُ "" لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا "".
பாடம் : 34 அகழ் தோண்டுதல்
2836. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அகழ்ப் போருக் காக அகழ் தோண்டியபோது) மண்ணைச் சுமந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது,

‘‘(இறைவா!)நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்”

என்று (பாடலில்) கூறிக்கொண்டிருந் தார்கள்.


அத்தியாயம் : 56
2837. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ يَنْقُلُ التُّرَابَ وَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ، وَهُوَ يَقُولُ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا. فَأَنْزِلِ السَّكِينَةَ عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا. إِنَّ الأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا.
பாடம் : 34 அகழ் தோண்டுதல்
2837. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்துகொண்டு செல்வதை நான் பார்த்தேன். மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்:

(இறைவா!)நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!தர்மம் செய்திருக்கமாட்டோம்!தொழுதும் இருக்கமாட்டோம்!

எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!

இவர்கள் (எதிரிகள்)எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள்விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!

அத்தியாயம் : 56
2838. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ رَجَعْنَا مِنْ غَزْوَةِ تَبُوكَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 35 ஒருவருக்குத் தகுந்த காரணம் எதுவும் இருந்து, அதனால் அவர் அறப்போரில் பங்குபெற முடியாமல் போவது
2838. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் தபூக் போரிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் திரும்பிவந்தோம்...


அத்தியாயம் : 56
2839. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي غَزَاةٍ فَقَالَ "" إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلاَّ وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ الْعُذْرُ "". وَقَالَ مُوسَى حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الأَوَّلُ أَصَحُّ.
பாடம் : 35 ஒருவருக்குத் தகுந்த காரணம் எதுவும் இருந்து, அதனால் அவர் அறப்போரில் பங்குபெற முடியாமல் போவது
2839. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஓர் அறப்போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘(நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் மதீனாவில் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயையும் பள்ளத்தாக்கையும் கடந்து சென்றாலும், அவர்களும் நம்முடன் அதில் இல்லாமல் இருப்பதில்லை. தகுந்த காரணமே (அறப்போரில் கலந்துகொள்ள விடாமல்) அவர்களைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. முதலாவது தொடரே மிகவும சரியானது ஆகும்.

அத்தியாயம் : 56
2840. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، أَنَّهُمَا سَمِعَا النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا "".
பாடம் : 36 இறைவழியில் (போரிடும்போது) நோன்பு நோற்பதன் சிறப்பு
2840. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
2841. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَاهُ خَزَنَةُ الْجَنَّةِ، كُلُّ خَزَنَةِ باب أَىْ فُلُ هَلُمَّ "". قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ، ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ "".
பாடம் : 37 இறைவழியில் (அறப்போருக்காகச்) செலவிடுவதன் சிறப்பு
2841. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘யார் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், யிஇன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 56
2842. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنَّمَا أَخْشَى عَلَيْكُمْ مِنْ بَعْدِي مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ بَرَكَاتِ الأَرْضِ "". ثُمَّ ذَكَرَ زَهْرَةَ الدُّنْيَا، فَبَدَأَ بِإِحْدَاهُمَا وَثَنَّى بِالأُخْرَى، فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قُلْنَا يُوحَى إِلَيْهِ. وَسَكَتَ النَّاسُ كَأَنَّ عَلَى رُءُوسِهِمِ الطَّيْرَ، ثُمَّ إِنَّهُ مَسَحَ عَنْ وَجْهِهِ الرُّحَضَاءَ، فَقَالَ "" أَيْنَ السَّائِلُ آنِفًا أَوَخَيْرٌ هُوَ ـ ثَلاَثًا ـ إِنَّ الْخَيْرَ لاَ يَأْتِي إِلاَّ بِالْخَيْرِ، وَإِنَّهُ كُلُّ مَا يُنْبِتُ الرَّبِيعُ مَا يَقْتُلُ حَبَطًا أَوْ يُلِمُّ كُلَّمَا أَكَلَتْ، حَتَّى إِذَا امْتَلأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتِ الشَّمْسَ، فَثَلَطَتْ وَبَالَتْ ثُمَّ رَتَعَتْ، وَإِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، وَنِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ لِمَنْ أَخَذَهُ بِحَقِّهِ، فَجَعَلَهُ فِي سَبِيلِ اللَّهِ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ، وَمَنْ لَمْ يَأْخُذْهُ بِحَقِّهِ فَهْوَ كَالآكِلِ الَّذِي لاَ يَشْبَعُ، وَيَكُونُ عَلَيْهِ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 37 இறைவழியில் (அறப்போருக்காகச்) செலவிடுவதன் சிறப்பு
2842. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று, ‘‘எனக் குப்பின், உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள் வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்தான்” என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள். (அவற்றில்) முதலில் ஒன்றை (அருள் வளங்கள்) பற்றிக் கூறி, பிறகு மற்றொன்றை (உலகின் கவர்ச்சி) பற்றி இரண்டாவதாகக் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டுவருமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார்கள்.

இதைக் கண்ட நாங்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு அருளப்படுகிறது” என்று கூறிக்கொண்டோம். மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பதைப் போன்று (ஆடாமல் அசையாமல்) மௌனமாக இருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘‘சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?” என்று மூன்று முறை கூறினார்கள்.

பிறகு, ‘‘(உண்மையிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்)நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டுவராதுதான். ஆனால், வாய்க்கால் (தாவரங்களை) விளைவிக்கும்போதெல்லாம், (அவற்றைத் தின்னும்கால்நடைகளை) வயிறு புடைக்கவைத்து கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. (அப்போதுதான் துளிர்விட்ட பசும்புற் களைத் தின்னும் கால்நடைகளைத் தவிர!) அவை (அதைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற் காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்துக்)கொள்கிறது. (இதனால், நன்கு சீரணமாகி குழைந்த) சாணமிடுகிறது; சிறுநீர் கழிக்கி றது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் மேய்கிறது.

(இவ்வாறே) இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதை களுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். அச்செல்வம் மறுமை நாளில் அவருக்கெதிரான சாட்சி யாக அமையும்” என்று கூறினார்கள்.28

அத்தியாயம் : 56
2843. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ خَالِدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا "".
பாடம் : 38 அறப்போர் வீரருக்குப் பயண வசதி செய்துகொடுப்பவர், அல்லது வீரர் சென்றபின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்பவரின் சிறப்பு
2843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைவழியில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்துகொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவராவார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்றபின் அவரது வீட்டாரின் நலன் காக்கின்றாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவ ராவார்.

இதை ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2844. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَدْخُلُ بَيْتًا بِالْمَدِينَةِ غَيْرَ بَيْتِ أُمِّ سُلَيْمٍ، إِلاَّ عَلَى أَزْوَاجِهِ فَقِيلَ لَهُ، فَقَالَ "" إِنِّي أَرْحَمُهَا، قُتِلَ أَخُوهَا مَعِي "".
பாடம் : 38 அறப்போர் வீரருக்குப் பயண வசதி செய்துகொடுப்பவர், அல்லது வீரர் சென்றபின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்பவரின் சிறப்பு
2844. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் துணைவியரின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற் கும் (அதிகமாகச்) செல்வதில்லை.29 அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்ட போது, ‘‘நான் அவர் (உம்மு சுலைம்)மீது, இரக்கம் காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள்) என்னோடு இருந்தபோது (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொல்லப் பட்டார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 56
2845. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، قَالَ وَذَكَرَ يَوْمَ الْيَمَامَةِ قَالَ أَتَى أَنَسٌ ثَابِتَ بْنَ قَيْسٍ وَقَدْ حَسَرَ عَنْ فَخِذَيْهِ وَهْوَ يَتَحَنَّطُ فَقَالَ يَا عَمِّ مَا يَحْبِسُكَ أَنْ لاَ تَجِيءَ قَالَ الآنَ يَا ابْنَ أَخِي. وَجَعَلَ يَتَحَنَّطُ، يَعْنِي مِنَ الْحَنُوطِ، ثُمَّ جَاءَ فَجَلَسَ، فَذَكَرَ فِي الْحَدِيثِ انْكِشَافًا مِنَ النَّاسِ، فَقَالَ هَكَذَا عَنْ وُجُوهِنَا حَتَّى نُضَارِبَ الْقَوْمَ، مَا هَكَذَا كُنَّا نَفْعَلُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، بِئْسَ مَا عَوَّدْتُمْ أَقْرَانَكُمْ. رَوَاهُ حَمَّادٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ.
பாடம் : 39 அறப்போரின்போது நறுமணம் பூசிக்கொள்வது
2845. மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் யமாமா போரை நினைவு கூர்ந்து கூறியதாவது:30

(என் தந்தை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக்கொண்டிருந்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (அறப்போருக்கு) ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இதோ! இப்போது வருகின் றேன்; என் சகோதரர் மகனே!” என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கி விட்டார்கள்.

பிறகு வந்து (அறப்போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள். லிஅப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள்லி (மக்கள் தோற்றுப் பின் வாங்குவதைக் கண்ட) ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘எமக்கு விலகி வழிவிடுங்கள். நாம் எதிரிகளுடன் போரிடுவோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் (நீங்கள் பின்வாங்கியோட, அவர்கள் உங்களை விரட்டி வரும் இந்த குணம்) மிக மோச மானது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
2846. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ يَوْمَ الأَحْزَابِ "". قَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ "". قَالَ الزُّبَيْرُ أَنَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَحَوَارِيَّ الزُّبَيْرُ "".
பாடம் : 40 ஒற்றர் படையின் சிறப்பு
2846. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ் (அஹ்ஸாப்) போர் நாளில், எதிரிகளின் செய்தியை உளவறிந்து என்னிடம் கொண்டுவருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘நான் (உளவறிந்து வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘எதிரிகளின் செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்?” என்று கேட்க, ஸுபைர் (ரலி) அவர்களே, யிநான்’ என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2847. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ نَدَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّاسَ ـ قَالَ صَدَقَةُ أَظُنُّهُ ـ يَوْمَ الْخَنْدَقِ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ النَّاسَ فَانْتَدَبَ الزُّبَيْرُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ "".
பாடம் : 41 ஒற்றராக ஒருவரை மட்டும் தனியாக அனுப்பலாமா?
2847. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது;

(உளவுப் பணிக்காக) நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள்.லி ‘‘அது அகழ்ப் போரின்போது என்றே நினைக்கி றேன்” என அறிவிப்பாளர் ஸதகா பின் அல்ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். லி ஸுபைர் (ரலி) அவர்கள் (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத் தார்கள்; அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் நிச்சயம் உண்டு. என் (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2848. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ انْصَرَفْتُ مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ لَنَا أَنَا وَصَاحِبٌ لِي "" أَذِّنَا وَأَقِيمَا، وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا "".
பாடம் : 42 இருவர் பயணம் செய்வது
2848. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் தோழர் ஒருவருக்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும் இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2849. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْخَيْلُ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம் : 43 குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக் கப்பட்டிருக்கிறது.
2849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை உள்ளது.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56