2631. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَرْبَعُونَ خَصْلَةً أَعْلاَهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ "". قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ وَنَحْوِهِ، فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً.
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2631. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நற்செயல்கள் நாற்பது உள்ளன. அவற் றில் ஒன்றை, அதன் நன்மையை எதிர் பார்த்தும், அதற்கென வாக்களிக்கப் பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் செய்துவந்தால், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிக்காமல் இருப்பதில்லை. அவற்றில் மிக உயர்ந்தது, பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் ஹஸ்ஸான் பின் அ(த்)திய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவது நீங்கலாக (மற்ற நற்செயல்களை) நாங்கள் கணக்கெடுத்துப் பார்த்ததில், முகமனுக்கு (சலாமுக்கு) பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாங்கள் கண்டோம். ஆனால், இவ்வாறு பதினைந்து நற்செயல்களைக் கூட எங்களால் கணக்கில் காட்ட முடியவில்லை.


அத்தியாயம் : 51
2632. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ لِرِجَالٍ مِنَّا فُضُولُ أَرَضِينَ فَقَالُوا نُؤَاجِرُهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالنِّصْفِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ، فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ "".
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2632. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘‘நாம் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள்.

(இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘யிவிளைச்சல் நிலம் வைத்திருப்பவர், அதில் தாமே பயிரிடட்டும்; அல்லது தம் சகோதரருக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தமது நிலத்தைத் தம்மிடமே (பயிரிடாமல்) வைத்துக்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.31


அத்தியாயம் : 51
2633. وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ الْهِجْرَةِ، فَقَالَ "" وَيْحَكَ إِنَّ الْهِجْرَةَ شَأْنُهَا شَدِيدٌ فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ "" قَالَ نَعَمْ. قَالَ "" فَتُعْطِي صَدَقَتَهَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَهَلْ تَمْنَحُ مِنْهَا شَيْئًا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَتَحْلُبُهَا يَوْمَ وِرْدِهَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا "".
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2633. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் கிராமவாசி ஒருவர் வந்து புலம் பெயர்தல் (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘யிஉனக்குக் கேடுதான்! ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்” என்று கூறினார்.

‘‘அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம், (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். ‘‘(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக்கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கற(ந்து ஏழைகளுக்குக் கொடு)க்கின்றாயா?” என்று கேட்க அவர், ‘யிஆம்” என்று பதிலளித்தார். ‘‘அப்படி யாயின், ஊர்களுக்கு அப்பால் சென்று (கூட) நீ நற்செயல் புரியலாம். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்” என்று கூறினார்கள்.32


அத்தியாயம் : 51
2634. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، قَالَ حَدَّثَنِي أَعْلَمُهُمْ، بِذَاكَ ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى أَرْضٍ تَهْتَزُّ زَرْعًا فَقَالَ "" لِمَنْ هَذِهِ "". فَقَالُوا اكْتَرَاهَا فُلاَنٌ. فَقَالَ "" أَمَا إِنَّهُ لَوْ مَنَحَهَا إِيَّاهُ كَانَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا أَجْرًا مَعْلُومًا "".
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடையின் சிறப்பு30
2634. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக்கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். ‘‘இது யாருடைய நிலம்?” என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், ‘‘இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாட கையை (குத்தகையை) அவர் பெற்றுக் கொள்வதைவிட குத்தகைக்கு எடுத்த வருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) இரவலாக (மனீஹா) கொடுத்துவிட்டிருந்தால், அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51
2635. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" هَاجَرَ إِبْرَاهِيمُ بِسَارَةَ، فَأَعْطَوْهَا آجَرَ، فَرَجَعَتْ فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً "". وَقَالَ ابْنُ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" فَأَخْدَمَهَا هَاجَرَ "".
பாடம் : 36 ஒருவர் (மற்றவரிடம்) ‘‘இந்த அடிமைப் பெண்ணை உன் பணிவிடைக்காக வழங்குகிறேன்” என்று மக்களின் வழக்கப்படி கூறினால், அது செல்லும். சிலர், இது இரவலாகும் என்பர். ‘‘இந்த ஆடையை உனக்கு அணிவிக்கிறேன்” என்று ஒருவர் சொன்னால் அது அன் பளிப்பாகும்.33
2635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். (எகிப்து நாட்டு மன்னனின்) ஆட்கள், சாராவுக்கு ஆஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். சாரா திரும்பிவந்து, ‘‘அல்லாஹ், அந்த இறைமறுப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘எகிப்து நாட்டு மன்னன், சாராவுக்கு ஆஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம் : 51
2636. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ مَالِكًا، يَسْأَلُ زَيْدَ بْنَ أَسْلَمَ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَشْتَرِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ "".
பாடம் : 37 ஒருவர் (மற்றவரை) குதிரைமீது ஏற்றி அனுப்பினால், அது ஆயுட்கால அன்பளிப்பு மற்றும் தர்மத்தைப் போன்றதாகும்.34 ‘‘அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அவருக்கு உரிமையுண்டு” என்று சிலர் கூறுகின்றனர்.
2636. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவதற்காக எனக்குச் சொந்தமான) ஒரு குதிரையின் மீது ஒருவரை ஏற்றி அனுப்பினேன். அந்தக் குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (‘‘அதை வாங்கலாமா?” என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51

2637. حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، وَابْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ، فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيًّا وَأُسَامَةَ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ يَسْتَأْمِرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَقَالَ أَهْلُكَ وَلاَ نَعْلَمُ إِلاَّ خَيْرًا. وَقَالَتْ بَرِيرَةُ إِنْ رَأَيْتُ عَلَيْهَا أَمْرًا أَغْمِصُهُ أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ يَعْذِرُنَا مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِ بَيْتِي فَوَاللَّهِ مَا عَلِمْتُ مِنْ أَهْلِي إِلاَّ خَيْرًا، وَلَقَدْ ذَكَرُوا رَجُلاً مَا عَلِمْتُ عَلَيْهِ إِلاَّ خَيْرًا "".
பாடம் : 1 ஆதாரத்தைச் சமர்ப்பிப்பது வாதி யின் கடமையாகும் என்பது தொடர் பாக வந்துள்ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணைக்குக் கடன் கொடுக்கல் வாங்கல் செய்தால், அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். எழுத்தர், எழுத மறுக்காமல் தமக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததைப் போன்று எழுதிக்கொடுக்கட்டும். கடன் வாங்கியவர், (கடன் பத்திரத்தின்) வாசகம் சொல்ல வேண்டும். அவர் தம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் அவர் குறைத்துவிட வேண்டாம். கடன் வாங்கி யவர் விவரமற்றவராக, அல்லது பலவீன ராக, அல்லது தாமாக வாசகம் சொல்ல இயலாதவராக இருந்தால் அவருடைய பொறுப்பாளர் நேர்மையாக வாசகம் சொல்லட்டும். (இவ்வாறு எழுதும்போது) உங்கள் ஆண்களில் இருவரைச் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லை யென்றால், நீங்கள் திருப்தி அடையும் ஓர் ஆணும் இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்கட்டும். அவ்விரு பெண்களில் ஒருவர் மறந்துவிட்டால் மற்றொருவர் நினைவூட்டுவார். அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் அதன் தவணையைக் குறிப்பிட்டு எழுதுவதில் நீங்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நேர்மையானதாகும்; சாட்சியத்திற்கு வலுவூட்டக்கூடியதாகும்; நீங்கள் சந்தேகம் கொள்ளாமல் இருக்க ஏற்றதாகும். எனினும், உங்களிடையே அப்போதே நடக்கும் (நேரடி) வியாபாரமாக இருப்பின், அதை எழுதிவைக்காமல் இருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. வியாபார ஒப்பந்தம் செய்யும்போது நீங்கள் சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எழுத்தருக்கும் சாட்சிக்கும் எவ்வித இடையூறும் அளிக்கப்படக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் செய்தால் அது உங்களது குற்றமே. (எனவே,) அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் உங்களுக்கு (சிறந்த வழிமுறைகளை)க் கற்றுத்தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் அறிபவன் ஆவான். (2:282) மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும் அல்லாஹ்வுக்காகச் சாட்சியம் பகர்வோராக வும் ஆகிவிடுங்கள். அது உங்களுக்கோ (உங்கள்) பெற்றோர் மற்றும் உறவினர் களுக்கோ எதிராக அமைந்தாலும் சரியே. (யாருக்கு எதிராகச் சாட்சியம் சொல் லப்படுகிறதோ) அவர் செல்வராயினும் ஏழையாயினும் (சாட்சியம் அளிக்கத் தயங்காதீர்கள். ஏனெனில்,) அவ்விரு வருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான். எனவே, நீதி வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றிவிடாதீர்கள். நீங்கள் பிறழ்ந்(து சாட்சியமளித்)தாலோ, அல்லது புறக்கணித்தாலோ நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக உள்ளான். (4:135) பாடம் : 2 ஒருவரின் நேர்மையை அறிவிக்கும் வகையில் ‘(அவரைப் பற்றி) நல்லதையே நான் அறிந்துள்ளேன்' என்று ஒருவர் சொன்னால்... ...அது (சாட்சியாக) ஏற்கப்படும் என்று கூறியவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் மீதான அவதூறு குறித்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அதில், நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களிடம், ஆயிஷாமீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டையடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்டபோது, ‘‘அவர் தங்களின் துணைவியார். (அவரைப் பற்றி) நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை” என்று உசாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
2637. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் எனக்கு, ஆயிஷா (ரலி) அவர்களை (சிலர் அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

அவதூறு சொன்னவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்ன போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாரை (ஆயிஷா வை)ப் பிரிந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை கலப்பதற்காக வேண்டி அலீ (ரலி) அவர்களையும் உசாமா (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாற்காலிகமாக நின்றுபோயிருந்தது.

உசாமா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தங்கள் துணைவியார். (அவரைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.

மேலும், (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்த மாவை வளர்ப்பு ஆடு வந்து தின்கின்ற அளவுக்கு (அப்படியே) விட்டுவிட்டு உறங்கிவிடுகின்ற இள வயதுச் சிறுமி என்பதற்கு அதிகமாகக் குறைசொல்வதற்கு அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை” என்று கூறினார்கள்.

(அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் வீட்டாரின் விஷயத் தில் எனக்கு (மன) வேதனை அளித்துவிட்ட ஒரு மனிதனுக்கு (அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சகனுக்கு) எதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேனோ அவரை (இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 52
2638. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهْوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ ـ أَوْ زَمْزَمَةٌ ـ فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادِ أَىْ صَافِ، هَذَا مُحَمَّدٌ. فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ تَرَكَتْهُ بَيَّنَ "".
பாடம் : 3 மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் (சாட்சியத்திற்காக) மறைந்திருந்து கேட்பதை அனுமதித்துள்ளார்கள். மேலும் அவர்கள், ‘‘தீயவனான பொய்யனிடம் இப்படித்தான் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), இப்னு சீரீன் (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர், ‘‘(கண் ணால் பார்க்காமல் காதால்) கேட்டதை (மட்டும்) வைத்து சாட்சியம் சொல்லலாம். (அதுவும் ஏற்கத் தக்கதே.)” என்று கூறினர். ‘‘ஒருவரைப் பார்க்காமலேயே அவரது வாக்குமூலத்தை மட்டும் கேட்டுவிட்டு, நீதிபதியிடம் அதைப் பற்றி சாட்சியமளிக்க வருபவர், யிநான் பார்க்க அவர்கள் எதையும் செய்யவில்லை. இருப்பினும், நான் இன்னின்ன விதமாகச் செவியுற்றேன்’ என்று கூற வேண்டும் (அப்படிக் கூறி னால் அது செல்லும்)” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2638. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் (குழப்பவாதியான யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பே, அவனிடமிருந்து எதையேனும் கேட்டுவிட வேண்டும் எனத் திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக் குள் (குறிகாரர்கள் முணுமுணுப்பதைப் போல்) எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான்.

நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்து விட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)” என்று கூறிவிட்டாள். உடனே இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்) விட்டு விட்டிருந்தால், (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்திவிட்டிருப்பான்” என்று கூறினார்கள்.2


அத்தியாயம் : 52
2639. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَأَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، إِنَّمَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ. فَقَالَ "" أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ "". وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَهُ وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ، فَقَالَ يَا أَبَا بَكْرٍ، أَلاَ تَسْمَعُ إِلَى هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 3 மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம் அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் (சாட்சியத்திற்காக) மறைந்திருந்து கேட்பதை அனுமதித்துள்ளார்கள். மேலும் அவர்கள், ‘‘தீயவனான பொய்யனிடம் இப்படித்தான் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), இப்னு சீரீன் (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர், ‘‘(கண் ணால் பார்க்காமல் காதால்) கேட்டதை (மட்டும்) வைத்து சாட்சியம் சொல்லலாம். (அதுவும் ஏற்கத் தக்கதே.)” என்று கூறினர். ‘‘ஒருவரைப் பார்க்காமலேயே அவரது வாக்குமூலத்தை மட்டும் கேட்டுவிட்டு, நீதிபதியிடம் அதைப் பற்றி சாட்சியமளிக்க வருபவர், யிநான் பார்க்க அவர்கள் எதையும் செய்யவில்லை. இருப்பினும், நான் இன்னின்ன விதமாகச் செவியுற்றேன்’ என்று கூற வேண்டும் (அப்படிக் கூறி னால் அது செல்லும்)” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2639. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மணபந்தத்தில்) இருந்தேன். பிறகு அவர் என்னை மணவிலக்குச் செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் (இந்த முகத்திரைத்) துணியின் குஞ்சத்தைப் போன்றதுதான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காதவரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது” என்று கூறி னார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந் தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றுகொண்டிருந் தார்கள். அவர்கள், ‘‘அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் பகிரங்க மாகச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று (வாசலில் நின்றபடியே) கேட்டார்கள்.3

அத்தியாயம் : 52
2640. حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ، فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ. فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلاَ أَخْبَرْتِنِي. فَأَرْسَلَ إِلَى آلِ أَبِي إِهَابٍ يَسْأَلُهُمْ فَقَالُوا مَا عَلِمْنَا أَرْضَعَتْ صَاحِبَتَنَا. فَرَكِبَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَيْفَ وَقَدْ قِيلَ "". فَفَارَقَهَا، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ.
பாடம் : 4 ஒருவரோ பலரோ ஒரு விஷயத்திற்குச் சாட்சியம் அளித்திருக்க, வேறுசிலர் வந்து, ‘‘இதை நாங்கள் அறியமாட்டோம்” என்று கூறினால் (முதலில்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக் கப்படும். ‘‘இது (எப்படியென்றால்) பிலால் (ரலி) அவர்கள், யிநபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது) கஅபாவினுள் தொழுதார்கள்’ என்று தெரிவிக்க, ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், யிநபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை’ என்று கூறியபோது, பிலால் (ரலி) அவர்களின் சாட்சியத்தையே மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போன்றதாகும்” என்று ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே, ‘‘இன்னாருக்கு இன்னாரிட மிருந்து ஆயிரம் திர்ஹங்கள் (கடன் தொகை) வரவேண்டியள்ளது” என்று இருவர் சாட்சியமளிக்க, வேறு இருவர், ‘‘ஆயிரத்து ஐநூறு திர்ஹங்கள் வர வேண்டியுள்ளது” என்று சாட்சியம் அளித்தால் (இரு தொகைகளில்) அதிக மான தொகை எதுவோ அதைச் செலுத்தும் படியே தீர்ப்பு வழங்கப்படும்.
2640. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் (ரலி) அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, ‘‘உங்களுக் கும் நீங்கள் மணந்துகொண்ட பெண்ணுக் கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். நான், ‘‘நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணம் புரிந்துகொண்டபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே” என்று கூறிவிட்டு, அபூஇஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மைதானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், ‘‘எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினர்.

உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.4

அத்தியாயம் : 52
2641. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُتْبَةَ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنَّ أُنَاسًا كَانُوا يُؤْخَذُونَ بِالْوَحْىِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَإِنَّ الْوَحْىَ قَدِ انْقَطَعَ، وَإِنَّمَا نَأْخُذُكُمُ الآنَ بِمَا ظَهَرَ لَنَا مِنْ أَعْمَالِكُمْ، فَمَنْ أَظْهَرَ لَنَا خَيْرًا أَمِنَّاهُ وَقَرَّبْنَاهُ، وَلَيْسَ إِلَيْنَا مِنْ سَرِيرَتِهِ شَىْءٌ، اللَّهُ يُحَاسِبُهُ فِي سَرِيرَتِهِ، وَمَنْ أَظْهَرَ لَنَا سُوءًا لَمْ نَأْمَنْهُ وَلَمْ نُصَدِّقْهُ، وَإِنْ قَالَ إِنَّ سَرِيرَتَهُ حَسَنَةٌ.
பாடம் : 5 நேர்மையான சாட்சிகள் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும், உங்களில் நேர்மையான இருவரைச் சாட்சிகளாக்கிக்கொள்ளுங்கள். (65:2) இந்த சாட்சிகள் நீங்கள் திருப்தி அடைபவர்களாய் இருக்க வேண்டும். (2:282)
2641. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் வேத அறிவிப்பு (வஹீ) வாயிலாக (இரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக் கப்பட்டுவந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின்) வேத அறிவிப்பு நின்றுபோய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்ப தெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டுதான்.

ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவமாக நடத்துவோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்கமாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறாரோ அவரை நாம் நம்பவோ (அவர் சொல்லும் சமாதானத்தை) உண்மைப்படுத்தவோமாட்டோம்; அவர் தமது அந்தரங்கம் அழகானது என்று வாதிட்டாலும் சரியே.5

அத்தியாயம் : 52
2642. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ "" وَجَبَتْ "". ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا ـ أَوْ قَالَ غَيْرَ ذَلِكَ ـ فَقَالَ "" وَجَبَتْ "". فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ لِهَذَا وَجَبَتْ، وَلِهَذَا وَجَبَتْ، قَالَ "" شَهَادَةُ الْقَوْمِ، الْمُؤْمِنُونَ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ "".
பாடம் : 6 ஒருவர் நேர்மையானவர் என்பதற்கு எத்தனை பேர் சாட்சியம் சொல்ல வேண்டும்?
2642. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் நற்பண்புகள் குறித்து மக்கள் புகழ்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டது. மக்கள் அதன் தீய பண்புகள் குறித்து இகழ்ந்தனர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதி யாகிவிட்டது” என்று கூறினார்கள்.

அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள்; இதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இது சமூகத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கை யாளர்கள் பூமியில் இறைவனின் சாட்சிகள் ஆவர்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 52
2643. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، قَالَ أَتَيْتُ الْمَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ، وَهُمْ يَمُوتُونَ مَوْتًا ذَرِيعًا، فَجَلَسْتُ إِلَى عُمَرَ ـ رضى الله عنه ـ فَمَرَّتْ جِنَازَةٌ فَأُثْنِيَ خَيْرٌ فَقَالَ عُمَرُ وَجَبَتْ. ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ خَيْرًا فَقَالَ وَجَبَتْ. ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ فَأُثْنِيَ شَرًّا، فَقَالَ وَجَبَتْ. فَقُلْتُ مَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ "". قُلْنَا وَثَلاَثَةٌ قَالَ "" وَثَلاَثَةٌ "". قُلْتُ وَاثْنَانِ قَالَ "" وَاثْنَانِ "". ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ.
பாடம் : 6 ஒருவர் நேர்மையானவர் என்பதற்கு எத்தனை பேர் சாட்சியம் சொல்ல வேண்டும்?
2643. அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனா நகரில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்துகொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) சென்றது. அதைக் குறித்து புகழ்ந்துரைக்கப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் புகழ்ந்துரைக் கப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. அதைக் குறித்து இகழ்ந்து பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள்.

நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! என்ன உறுதியாகிவிட்டது?” என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், ‘அவர் நல்லவர்’ என்று சாட்சியம் சொல்கின்றார் களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்” என்று கூறினார்கள்.

நாங்கள், ‘‘மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; மூன்று பேர் சாட்சியம் சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்)” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலுமா?” என்று கேட்டோம். அவர்கள், ‘‘ஆம்; இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலும் சரியே” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (‘‘ஒருவர் சாட்சி சொன்னாலுமா?” என்று) கேட்கவில்லை.

அத்தியாயம் : 52
2644. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا الْحَكَمُ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ عَلَىَّ أَفْلَحُ فَلَمْ آذَنْ لَهُ، فَقَالَ أَتَحْتَجِبِينَ مِنِّي وَأَنَا عَمُّكِ فَقُلْتُ وَكَيْفَ ذَلِكَ قَالَ أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي بِلَبَنِ أَخِي. فَقَالَتْ سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" صَدَقَ أَفْلَحُ، ائْذَنِي لَهُ "".
பாடம் : 7 இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்குமுன் நடந்த மரணம் ஆகியவை குறித்த பரவலான சட்சியம்6 நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள்” என்று கூறியதும் (செவிலித் தாயிடம்) பால் அருந்தியதை (சாட்சிகள் வாயிலாக) உறுதிப்படுத்திக் கொள்வதும்.
2644. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் வீட்டில் நுழைவதற்கு ‘அஃப்லஹ்’ (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள், ‘‘நான் உன் தந்தையின் சகோதர ராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க்கொள்கிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்” என்று கூறினார்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘‘அஃப்லஹ் சொன்னது உண்மையே. (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடுக்கலாம்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 52
2645. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بِنْتِ حَمْزَةَ "" لاَ تَحِلُّ لِي، يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ، هِيَ بِنْتُ أَخِي مِنَ الرَّضَاعَةِ "".
பாடம் : 7 இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்குமுன் நடந்த மரணம் ஆகியவை குறித்த பரவலான சட்சியம்6 நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள்” என்று கூறியதும் (செவிலித் தாயிடம்) பால் அருந்தியதை (சாட்சிகள் வாயிலாக) உறுதிப்படுத்திக் கொள்வதும்.
2645. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் தொடர்பாக, ‘‘அவரை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று. (ஏனெனில்) இரத்த உறவால் எவையெல் லாம் தடை செய்யப்படுமோ அவை யெல்லாம் (செவிலித் தாயிடம்) பால் குடிப்பதாலும் தடை செய்யப்படும். அவள் என் பால்குடிச் சகோதரரின் (ஹம்ஸாவின்) மகள் ஆவாள்” என்று கூறினார்கள்.7


அத்தியாயம் : 52
2646. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ. قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُرَاهُ فُلاَنًا. لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ. فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ. قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُرَاهُ فُلاَنًا "". لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ. فَقَالَتْ عَائِشَةُ لَوْ كَانَ فُلاَنٌ حَيًّا ـ لِعَمِّهَا مِنَ الرَّضَاعَةِ ـ دَخَلَ عَلَىَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نَعَمْ، إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا يَحْرُمُ مِنَ الْوِلاَدَةِ "".
பாடம் : 7 இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்குமுன் நடந்த மரணம் ஆகியவை குறித்த பரவலான சட்சியம்6 நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள்” என்று கூறியதும் (செவிலித் தாயிடம்) பால் அருந்தியதை (சாட்சிகள் வாயிலாக) உறுதிப்படுத்திக் கொள்வதும்.
2646. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். எனவே, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என நான் நினைக்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே! இதோ தங்கள் (துணைவியார்) இல்லத் திற்குள் செல்ல இந்த மனிதர் அனுமதி கேட்கிறார்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்களும், ‘‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘‘இன்னார் உயிருடன் இருந்தால் அவர் திரையின்றி என்னைச் சந்திக்க முடியும்தானே!” என்று என் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம். (சந்திக்கலாம்.) பிறப்பு எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 52
2647. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعِنْدِي رَجُلٌ، قَالَ "" يَا عَائِشَةُ مَنْ هَذَا "". قُلْتُ أَخِي مِنَ الرَّضَاعَةِ. قَالَ "" يَا عَائِشَةُ، انْظُرْنَ مَنْ إِخْوَانُكُنَّ، فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنَ الْمَجَاعَةِ "". تَابَعَهُ ابْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ.
பாடம் : 7 இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்குமுன் நடந்த மரணம் ஆகியவை குறித்த பரவலான சட்சியம்6 நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள்” என்று கூறியதும் (செவிலித் தாயிடம்) பால் அருந்தியதை (சாட்சிகள் வாயிலாக) உறுதிப்படுத்திக் கொள்வதும்.
2647. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஒரு மனிதர் அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ‘‘ஆயிஷாவே! இவர் யார்?” என்று நபி  (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘‘என் பால்குடிச் சகோதரர்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பசியால் (பால் அருந்தினால்)தான் பால்குடி உறவு ஏற்படும்” என்று கூறினார்கள்.8

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 52
2648. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ امْرَأَةً، سَرَقَتْ فِي غَزْوَةِ الْفَتْحِ، فَأُتِيَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ أَمَرَ فَقُطِعَتْ يَدُهَا. قَالَتْ عَائِشَةُ فَحَسُنَتْ تَوْبَتُهَا وَتَزَوَّجَتْ، وَكَانَتْ تَأْتِي بَعْدَ ذَلِكَ فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 8 அவதூறு கூறியவன், திருடன், விபசாரி ஆகியோரின் சாட்சியம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: கற்புள்ள பெண்கள்மீது அவதூறு சொல்லிவிட்டுப் பின்னர் நான்கு சாட்சி களைக் கொண்டுவராதவர்களுக்கு எண்பது சாட்டையடிகளைக் கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவர்களே தீயவர்கள்; இந்தக் குற்றத்திற்குப் பிறகு பாவமன்னிப்புக் கோரி தங்களைச் சீர்திருத்திக்கொண்டவர்களைத் தவிர. ஏனெனில், அல்லாஹ் மிகவும் மன்னிப்ப வனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். (24:4,5) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியதற்காக அபூபக்ரா (ரலி), ஷிப்ல் பின் மஅபத் (ரலி), நாஃபிஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோருக்கு உமர் (ரலி) அவர்கள் சாட்டையடி வழங்கி னார்கள். பிறகு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரும்படி அவர்களிடம் சொன்னார்கள். மேலும், ‘‘எவர் பாவ மன்னிப்புக் கோரி திருந்திவிடுகிறாரோ அவரது சாட்சியத்தை நான் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறினார்கள்.9 அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), சயீத் பின் ஜுபைர் (ரஹ்), தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்), முஜாஹித் (ரஹ்), ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), இக்ரிமா (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்), முஹாரிப் பின் திஸார் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்), முஆவியா பின் குர்ரா (ரஹ்) ஆகியோர், ‘‘அவதூறு குற்றத்தில் சாட்டையடி தண்டனை பெற்றவர் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்வது செல்லும்” என்று கூறியுள்ளனர். அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள், ‘‘மதீனா நகரில் எங்கள் நடைமுறை எப்படி இருந்ததென்றால், அவதூறு கற்பித்தவர் தமது சொல்லைத் திரும்பப் பெற்று, தம் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரிவிட்டால் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறினார்கள். ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும், ‘‘அவதூறு கற்பித்தவன், தான் சொன்னது பொய் என்று கூறினால், அவனுக்குச் சாட்டையடி வழங்கப்படும். அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறுகின்றனர். ‘‘ஓர் அடிமை (அவதூறு கற்பித்த குற்றத்திற்காக) கசையடி கொடுக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுவிட்டால் அவனது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவனிடம் தீர்ப்புக் கேட்கப்பட்டு அவன் தீர்ப்பு வழங்கினால் அவனுடைய தீர்ப்பு கள் செல்லும்” என்று சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சிலர், ‘‘அவதூறு கூறியவனின் சாட்சியம், அவன் பாவமன்னிப்புக் கோரி விட்டாலும்கூட ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது” என்று கூறிவிட்டு, பிறகு ‘‘திருமணம் இரண்டு சாட்சிகள் இல்லாமல் செல்லுபடியாகாது. (அவதூறு வழக்கில்) கசையடி தண்டனை பெற்ற இருவரின் சாட்சியைக் கொண்டு ஒருவன் மண முடித்தால், அந்தத் திருமணம் செல்லும்; அதே நேரத்தில், இரண்டு அடிமைகளின் சாட்சியத்தைக் கொண்டு மணமுடித்தால், அந்தத் திருமணம் செல்லாது” என்று கூறுகின்றனர். ‘‘சாட்டையடி தண்டனை பெற்றவன், அடிமை, அடிமைப் பெண் ஆகியோர் ரமளான் மாதப் பிறையைப் பார்த்ததாகச் சாட்சியம் அளித்தால் அது செல்லும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவதூறு கற்பித்தவன் பாவமன்னிப்புக் கோரிவிட்டதை எப்படி அறிந்து கொள்வது?10 நபி (ஸல்) அவர்களோ, விபசாரியை ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள், யிகஅப் பின் மாலிக் (ரலி) மற்றும் அவர்களுடைய இரு தோழர்களுடன் பேசக் கூடாது’ என்று (மக்களைத்) தடை செய்தார்கள்; ஐம்பது நாட்கள் கழியும்வரை இவ்வாறு தடை செய்துவைத்திருந்தார்கள்.11
2648. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்னும் பெயருடைய) பெண்ணொருவர்  திருடிவிட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரது கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரது கை துண்டிக்கப்பட்டது.

(அவரைப் பற்றி) ‘‘அவர் அழகிய முறையில் பாவமீட்பு பெற்றார்; திருமண மும் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் (எங்களிடம்) வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை (அறிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.12

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 52
2649. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ أَمَرَ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصِنْ بِجَلْدِ مِائَةٍ وَتَغْرِيبِ عَامٍ.
பாடம் : 8 அவதூறு கூறியவன், திருடன், விபசாரி ஆகியோரின் சாட்சியம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: கற்புள்ள பெண்கள்மீது அவதூறு சொல்லிவிட்டுப் பின்னர் நான்கு சாட்சி களைக் கொண்டுவராதவர்களுக்கு எண்பது சாட்டையடிகளைக் கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவர்களே தீயவர்கள்; இந்தக் குற்றத்திற்குப் பிறகு பாவமன்னிப்புக் கோரி தங்களைச் சீர்திருத்திக்கொண்டவர்களைத் தவிர. ஏனெனில், அல்லாஹ் மிகவும் மன்னிப்ப வனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். (24:4,5) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியதற்காக அபூபக்ரா (ரலி), ஷிப்ல் பின் மஅபத் (ரலி), நாஃபிஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோருக்கு உமர் (ரலி) அவர்கள் சாட்டையடி வழங்கி னார்கள். பிறகு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரும்படி அவர்களிடம் சொன்னார்கள். மேலும், ‘‘எவர் பாவ மன்னிப்புக் கோரி திருந்திவிடுகிறாரோ அவரது சாட்சியத்தை நான் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறினார்கள்.9 அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), சயீத் பின் ஜுபைர் (ரஹ்), தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்), முஜாஹித் (ரஹ்), ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), இக்ரிமா (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்), முஹாரிப் பின் திஸார் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்), முஆவியா பின் குர்ரா (ரஹ்) ஆகியோர், ‘‘அவதூறு குற்றத்தில் சாட்டையடி தண்டனை பெற்றவர் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்வது செல்லும்” என்று கூறியுள்ளனர். அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள், ‘‘மதீனா நகரில் எங்கள் நடைமுறை எப்படி இருந்ததென்றால், அவதூறு கற்பித்தவர் தமது சொல்லைத் திரும்பப் பெற்று, தம் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரிவிட்டால் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறினார்கள். ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும், ‘‘அவதூறு கற்பித்தவன், தான் சொன்னது பொய் என்று கூறினால், அவனுக்குச் சாட்டையடி வழங்கப்படும். அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறுகின்றனர். ‘‘ஓர் அடிமை (அவதூறு கற்பித்த குற்றத்திற்காக) கசையடி கொடுக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுவிட்டால் அவனது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவனிடம் தீர்ப்புக் கேட்கப்பட்டு அவன் தீர்ப்பு வழங்கினால் அவனுடைய தீர்ப்பு கள் செல்லும்” என்று சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சிலர், ‘‘அவதூறு கூறியவனின் சாட்சியம், அவன் பாவமன்னிப்புக் கோரி விட்டாலும்கூட ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது” என்று கூறிவிட்டு, பிறகு ‘‘திருமணம் இரண்டு சாட்சிகள் இல்லாமல் செல்லுபடியாகாது. (அவதூறு வழக்கில்) கசையடி தண்டனை பெற்ற இருவரின் சாட்சியைக் கொண்டு ஒருவன் மண முடித்தால், அந்தத் திருமணம் செல்லும்; அதே நேரத்தில், இரண்டு அடிமைகளின் சாட்சியத்தைக் கொண்டு மணமுடித்தால், அந்தத் திருமணம் செல்லாது” என்று கூறுகின்றனர். ‘‘சாட்டையடி தண்டனை பெற்றவன், அடிமை, அடிமைப் பெண் ஆகியோர் ரமளான் மாதப் பிறையைப் பார்த்ததாகச் சாட்சியம் அளித்தால் அது செல்லும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவதூறு கற்பித்தவன் பாவமன்னிப்புக் கோரிவிட்டதை எப்படி அறிந்து கொள்வது?10 நபி (ஸல்) அவர்களோ, விபசாரியை ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள், யிகஅப் பின் மாலிக் (ரலி) மற்றும் அவர்களுடைய இரு தோழர்களுடன் பேசக் கூடாது’ என்று (மக்களைத்) தடை செய்தார்கள்; ஐம்பது நாட்கள் கழியும்வரை இவ்வாறு தடை செய்துவைத்திருந்தார்கள்.11
2649. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விபசாரம் புரிந்துவிட்ட திருமணமாகாத ஒருவருக்கு நூறு சாட்டையடிகள் வழங்க வேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.13

அத்தியாயம் : 52
2650. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ قَالَ سَأَلَتْ أُمِّي أَبِي بَعْضَ الْمَوْهِبَةِ لِي مِنْ مَالِهِ، ثُمَّ بَدَا لَهُ فَوَهَبَهَا لِي فَقَالَتْ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم. فَأَخَذَ بِيَدِي وَأَنَا غُلاَمٌ، فَأَتَى بِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أُمَّهُ بِنْتَ رَوَاحَةَ سَأَلَتْنِي بَعْضَ الْمَوْهِبَةِ لِهَذَا، قَالَ "" أَلَكَ وَلَدٌ سِوَاهُ "". قَالَ نَعَمْ. قَالَ فَأُرَاهُ قَالَ "" لاَ تُشْهِدْنِي عَلَى جَوْرٍ "". وَقَالَ أَبُو حَرِيزٍ عَنِ الشَّعْبِيِّ "" لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ "".
பாடம் : 9 கோரப்பட்டாலும், அநியாயத்திற்கு (ஆதரவாக) சாட்சி சொல்லக் கூடாது.
2650. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்குச் சிறிதளவு அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். (முதலில் மறுத்த) என் தந்தைக்கு ஏதோ தோன்ற பிறகு அந்த அன்பளிப்பை எனக்கு வழங்கினார்.

என் தாயார், ‘‘நீங்கள் நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்காத வரை நான் திருப்தி அடையமாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, என் தந்தை சிறுவனாக இருந்த என் கையைப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, ‘‘இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா இவனுக்குச் சிறிதளவு அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை, ‘‘ஆம் (உண்டு)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை அநீதிக்கு சாட்சியாக் காதீர்கள்” என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

மற்றோர் அறிவிப்பில், ‘‘நான் அநீதிக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.14


அத்தியாயம் : 52