அடைமானம்
2508. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم دِرْعَهُ بِشَعِيرٍ، وَمَشَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ، وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ "" مَا أَصْبَحَ لآلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم إِلاَّ صَاعٌ، وَلاَ أَمْسَى "". وَإِنَّهُمْ لَتِسْعَةُ أَبْيَاتٍ.
பாடம் : 1
ஊரிலிருக்கும்போது அடைமானம் வைத்தல்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் பயணத்தில் இருந்து, (கடன் பத்திரம் எழுத) எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அடைமானப் பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும். (2:283)2
2508. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை தொலி நீக்கப் படாத கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். ‘‘முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டுக்காரர்களாக இருந்தும்கூட ஒரேயொரு ‘ஸாஉ’ (தானியம் அல்லது பேரீச்சம்பழம்) தவிர வேறெதுவும் காலையிலோ மாலையிலோ இருந்ததில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.3
அத்தியாயம் : 48

2509. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ، وَالْقَبِيلَ فِي السَّلَفِ، فَقَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى مِنْ يَهُودِيٍّ طَعَامًا إِلَى أَجَلٍ وَرَهَنَهُ دِرْعَهُ.
பாடம் : 2
கவசத்தை அடகுவைத்தல்
2509. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கடனுக்கு அடைமானம் வைப்பது மற்றும் பிணையேற்பது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு (பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கி னார்கள்; (அதற்காக) தமது (இரும்புக்) கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக எமக்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.

2510. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ فَإِنَّهُ آذَى اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم "". فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَنَا. فَأَتَاهُ فَقَالَ أَرَدْنَا أَنْ تُسْلِفَنَا وَسْقًا أَوْ وَسْقَيْنِ. فَقَالَ ارْهَنُونِي نِسَاءَكُمْ. قَالُوا كَيْفَ نَرْهَنُكَ نِسَاءَنَا، وَأَنْتَ أَجْمَلُ الْعَرَبِ قَالَ فَارْهَنُونِي أَبْنَاءَكُمْ. قَالُوا كَيْفَ نَرْهَنُ أَبْنَاءَنَا فَيُسَبُّ أَحَدُهُمْ، فَيُقَالُ رُهِنَ بِوَسْقٍ أَوْ وَسْقَيْنِ هَذَا عَارٌ عَلَيْنَا وَلَكِنَّا نَرْهَنُكَ اللأْمَةَ ـ قَالَ سُفْيَانُ يَعْنِي السِّلاَحَ ـ فَوَعَدَهُ أَنْ يَأْتِيَهُ فَقَتَلُوهُ، ثُمَّ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ.
பாடம் : 3
ஆயுதத்தை அடகுவைத்தல்
2510. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(கொடிய குற்றவாளியான) கஅப் பின் அல்அஷ்ரஃபைக் வீழ்த்து வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அவன் தொல்லை கொடுத்து விட்டான்” என்று கூறினார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்கள். (பிறகு) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, ‘‘ஒரு யிவஸ்க்’ அல்லது இரண்டு யிவஸ்க்’கள் (உணவுப் பொருளைக்) கடனாக எங்களுக்கு நீ தரவேண்டும் என்று விரும்புகிறோம்” எனக் கூறினார்.
அதற்கு அவன், ‘‘உங்கள் பெண்களை என்னிடம் அடகுவையுங்கள்” என்று கூறினான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நீயோ அரபியரிலேயே அழகு மிக்கவன். உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை நாங்கள் அடகுவைக்க முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘‘உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகுவையுங்கள்” என்று கேட்டான்.
அதற்கு அவர், ‘‘நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகுவைக்க முடியும்? (அப்படி அடகுவைத்தால்) யிஓரிரண்டு யிவஸ்க்’களுக்காக அடகுவைக்கப் பட்டவன்தானே இவன்’ என்று அவர்களை மற்றவர்கள் (இழிவாகப் பேசிப் பரிகாசமாக) ஏசுவார்களே! இது எங்களுக்கு அவமான மல்லவா? ஆயினும், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகுவைக்கி றோம்” என்று கூறினார்கள். (அவனும் அதற்குச் சம்மதிக்க) பின்னர் வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.
(பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகுவைக்கின்ற சாக்கில்) அவனைக் கொன்றுவிட்டார்கள்; பிறகு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து செய்தியைத் தெரிவித்தார்கள்.4

2511. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ "" الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ، وَيُشْرَبُ لَبَنُ الدَّرِّ إِذَا كَانَ مَرْهُونًا "".
பாடம் : 4
அடைமானம்வைக்கப்பட்ட கால் நடையை வாகனமாகப் பயன் படுத்துவதும் அதன் பாலைக் கறப்பதும்
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வழிதவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகின்ற தீனியின் அளவுக் கேற்ப) பயணம் செய்யலாம். அதற்குப் போடும் தீனியின் அளவுக்கேற்ப அதன் பாலைக் கறந்து (பயன்படுத்திக்)கொள்ளலாம். அடைமானப் பிராணியும் அதைப் போன்றதுதான்.
2511. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடைமானம் வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடைமானம் வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பால் தரும் பிராணி அடைமானம் வைக் கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடை மானம் வாங்கியவர்) அருந்தலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2512. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. "" الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَعَلَى الَّذِي يَرْكَبُ وَيَشْرَبُ النَّفَقَةُ "".
பாடம் : 4
அடைமானம்வைக்கப்பட்ட கால் நடையை வாகனமாகப் பயன் படுத்துவதும் அதன் பாலைக் கறப்பதும்
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வழிதவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகின்ற தீனியின் அளவுக் கேற்ப) பயணம் செய்யலாம். அதற்குப் போடும் தீனியின் அளவுக்கேற்ப அதன் பாலைக் கறந்து (பயன்படுத்திக்)கொள்ளலாம். அடைமானப் பிராணியும் அதைப் போன்றதுதான்.
2512. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடைமானம் வைக்கப்பட்ட பிராணிக் காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடைமானம் வாங்கிய வர்) பயணம் செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகுவைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடைமானம் வாங்கியவர்) அருந்தலாம். பயணம் செய்பவரும் பாலை அருந்துபவரும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.5
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
2512. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடைமானம் வைக்கப்பட்ட பிராணிக் காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடைமானம் வாங்கிய வர்) பயணம் செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகுவைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடைமானம் வாங்கியவர்) அருந்தலாம். பயணம் செய்பவரும் பாலை அருந்துபவரும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.5
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
2513. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ يَهُودِيٍّ طَعَامًا وَرَهَنَهُ دِرْعَهُ.
பாடம் : 5
யூதர்கள் உள்ளிட்டோரிடம் அடைமானம் வைத்தல்
2513. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப் பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) தமது கவசத்தை அந்த யூதரிடம் அடைமானம் வைத்தார்கள்.

2514. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَكَتَبَ إِلَىَّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى أَنَّ الْيَمِينَ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ.
பாடம் : 6
அடைமானம்வைத்தவர், அடை மானம் பெறுபவர் போன்றோரி டையே கருத்து வேறுபாடு எழுந் தால், வாதி ஆதாரம் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.
2514. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு) கடிதம் எழுதினேன். அவர்கள் எனக்கு, ‘‘நபி (ஸல்) அவர்கள் பிரதிவாதி (தன் மீதுள்ள வழக்கை மறுப்பதற்கு) சத்தியம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள்” எனப் பதில் எழுதினார்கள்.

2515. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، يَسْتَحِقُّ بِهَا مَالاً وَهْوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ، فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} فَقَرَأَ إِلَى {عَذَابٌ أَلِيمٌ}.ثُمَّ إِنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ خَرَجَ إِلَيْنَا فَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَالَ فَحَدَّثْنَاهُ قَالَ فَقَالَ صَدَقَ لَفِيَّ وَاللَّهِ أُنْزِلَتْ، كَانَتْ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ خُصُومَةٌ فِي بِئْرٍ فَاخْتَصَمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" شَاهِدُكَ أَوْ يَمِينُهُ "". قُلْتُ إِنَّهُ إِذًا يَحْلِفُ وَلاَ يُبَالِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالاً هُوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ، ثُمَّ اقْتَرَأَ هَذِهِ الآيَةَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى {وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ}.
பாடம் : 6
அடைமானம்வைத்தவர், அடை மானம் பெறுபவர் போன்றோரி டையே கருத்து வேறுபாடு எழுந் தால், வாதி ஆதாரம் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.
2515. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘யார் ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது ஒரு செல்வத்தை அடைவதற் காகத் திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர், (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டுள்ள நிலையில்தான் அவனைச் சந்திப்பார்” எனும் நபிமொழியைக் கூறினார்கள். பிறகு இதை உண்மைப்படுத்தும் வகையில் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று கூறினார்கள்: எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. அவர்களுடன் அல்லாஹ் பேசமாட்டான்; மறுமை நாளில் அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (3:77)
பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, ‘‘அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று கேட்டார்கள். நாங்கள் அவர் (இப்னு மஸ்ஊத் (ரலி)) சொன்னதை எடுத்துரைத்தோம். அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
அவர் சொன்னது உண்மைதான். என் விவகாரத்தில்தான் இவ்வசனம் (3:77) அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணறு தொடர் பாகத் தகராறு இருந்துவந்தது; ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எங்கள்) வழக்கைக் கொண்டுசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் இரண்டு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘‘அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே; (பொய்ச் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்படமாட்டாரே” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘எவர் ஒரு செல்வத்தை அடைந்துகொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம்கொண்டிருக் கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார்” என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை (3:77) ஓதிக் காட்டி னார்கள்.

அடிமையை விடுதலை செய்தல்
2517. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ، صَاحِبُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ قَالَ لِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ "". قَالَ سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ فَانْطَلَقْتُ إِلَى عَلِيِّ بْنِ حُسَيْنٍ فَعَمَدَ عَلِيُّ بْنُ حُسَيْنٍ ـ رضى الله عنهما ـ إِلَى عَبْدٍ لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَشَرَةَ آلاَفِ دِرْهَمٍ ـ أَوْ أَلْفَ دِينَارٍ ـ فَأَعْتَقَهُ.
பாடம் : 1
அடிமையை விடுதலை செய்வதும் அதன் சிறப்பும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப்பாதையை (நன்மையின் பாதையைக்) கடந்து செல்ல(த் துணிய)வில்லை. கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா? (அதுதான்) ஒருவரை அடிமைத் தளை’ லிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினி கிடக்கும் நாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதாகும். (90:10லி17)
2517. அலீ பின் ஹுசைன் (ரஹ்)2 அவர்களின் தோழரான சயீத் பின் மர் ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை யார் விடுதலை செய்கிறாரோ, (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ் வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்று வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என்னிடம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
உடனே நான், இந்த நபிமொழியை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றேன். இதைக் கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹங்களையோ ஆயிரம் தீனார்களையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும் (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையை அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 49

2518. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُرَاوِحٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الْعَمَلِ أَفْضَلُ، قَالَ "" إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ "". قُلْتُ فَأَىُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ "" أَغْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا "". قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ. قَالَ "" تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لأَخْرَقَ "". قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ. قَالَ "" تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ "".
பாடம் : 2
எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது?
2518. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதை யில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
நான், ‘‘எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் உரிமை யாளர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித் தார்கள்.
நான், ‘‘என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லை யென்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பலவீனருக்கு உதவி செய்; அல்லது வேலை இல்லாதவனுக்கு வேலை கொடு!” என்று கூறினார்கள். நான், ‘‘இதுவும் என்னால் இயலவில்லையென் றால்...?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்துகொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.

2519. حَدَّثَنَا مُوسَى بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْعَتَاقَةِ فِي كُسُوفِ الشَّمْسِ. تَابَعَهُ عَلِيٌّ عَنِ الدَّرَاوَرْدِيِّ عَنْ هِشَامٍ.
பாடம் : 3
சூரிய கிரகணமோ இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமை களை விடுதலை செய்வது விரும்பத் தக்கது.
2519. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2520. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا عَثَّامٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ كُنَّا نُؤْمَرُ عِنْدَ الْخُسُوفِ بِالْعَتَاقَةِ.
பாடம் : 3
சூரிய கிரகணமோ இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமை களை விடுதலை செய்வது விரும்பத் தக்கது.
2520. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப் பட்டிருந்தோம்.

2521. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ عَبْدًا بَيْنَ اثْنَيْنِ، فَإِنْ كَانَ مُوسِرًا قُوِّمَ عَلَيْهِ ثُمَّ يُعْتَقُ "".
பாடம் : 4
இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2521. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
இருவருக்குக் கூட்டான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால், அவர் வசதியானவராக இருக்கும்போது அந்த அடிமைக்கு (நியாயமான) விலை மதிப்பிடப்பட்டு (அதையும் அவரே செலுத்தி) பின்னர் அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

2522. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، فَكَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ الْعَبْدِ قُوِّمَ الْعَبْدُ قِيمَةَ عَدْلٍ، فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهُمْ وَعَتَقَ عَلَيْهِ، وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ "".
பாடம் : 4
இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும். பிறகு அவர் தம் பங்காளிக்கு, அவர்களுக்கான பங்குத் தொகைகளை கொடுத்துவிட்டு, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (பங்கின்) அளவிற்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2523. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، اخْتَصَرَهُ.
பாடம் : 4
இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவிற்குச் செல்வம் இருந் தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரது பொறுப்பாகும். அந்த அடிமைக்கு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் விலை(யைச் செலுத்தும்) அளவுக்கு அவரிடம் செல்வம் இல்லை யென்றால், அவர் விடுதலை செய்த அந்த (பங்கின்) அளவுக்கு மட்டுமே அவ்வடிமை விடுதலை செய்யப்படுவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
2523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவிற்குச் செல்வம் இருந் தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரது பொறுப்பாகும். அந்த அடிமைக்கு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் விலை(யைச் செலுத்தும்) அளவுக்கு அவரிடம் செல்வம் இல்லை யென்றால், அவர் விடுதலை செய்த அந்த (பங்கின்) அளவுக்கு மட்டுமே அவ்வடிமை விடுதலை செய்யப்படுவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
2524. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ فِي مَمْلُوكٍ أَوْ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، وَكَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ قِيمَتَهُ بِقِيمَةِ الْعَدْلِ، فَهْوَ عَتِيقٌ "". قَالَ نَافِعٌ وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ. قَالَ أَيُّوبُ لاَ أَدْرِي أَشَىْءٌ قَالَهُ نَافِعٌ، أَوْ شَىْءٌ فِي الْحَدِيثِ.
பாடம் : 4
இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2524. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ அவரிடம் அந்த அடிமையின் நியாய விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்படுவான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேலும், ‘‘அவ்வாறு (முழுவதுமாக விடுதலை) செய்ய இயலாவிட்டால், அவர் விடுதலை செய்த (பங்கின்) அளவுக்கே அந்த அடிமையை விடுதலை செய்தவர் ஆவார்” என்று இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
‘‘இது நாஃபிஉ (ரஹ்) அவர்களின் கூற்றா; அல்லது நபிமொழியின் ஒரு பகுதியா என்பது எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

2525. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مِقْدَامٍ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يُفْتِي فِي الْعَبْدِ أَوِ الأَمَةِ يَكُونُ بَيْنَ شُرَكَاءَ، فَيُعْتِقُ أَحَدُهُمْ نَصِيبَهُ مِنْهُ، يَقُولُ قَدْ وَجَبَ عَلَيْهِ عِتْقُهُ كُلِّهِ، إِذَا كَانَ لِلَّذِي أَعْتَقَ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ، يُقَوَّمُ مِنْ مَالِهِ قِيمَةَ الْعَدْلِ، وَيُدْفَعُ إِلَى الشُّرَكَاءِ أَنْصِبَاؤُهُمْ، وَيُخَلَّى سَبِيلُ الْمُعْتَقِ. يُخْبِرُ ذَلِكَ ابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ اللَّيْثُ وَابْنُ أَبِي ذِئْبٍ وَابْنُ إِسْحَاقَ وَجُوَيْرِيَةُ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَإِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُخْتَصَرًا.
பாடம் : 4
இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2525. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான ஓர் அடிமையில் அல்லது அடிமைப் பெண்ணில் தமது பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் தீர்ப்பு வழங்கிவந்தார்கள்.
அத்தீர்ப்பில், ‘‘(தமது பங்கை) விடுதலை செய்தவர்மீது அவ்வடிமையை முழுவது மாக விடுதலை செய்வது கடமையாகும். அவரிடம் அந்த அடிமையின் நியாயமான விலையை அடைகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், (மற்ற) பங்குதாரர்களின் பங்குத் தொகையைக் கொடுத்துவிட்டு, விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” என்று சொல்லிவந்தார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தே இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்தார்கள்.
இதே ஹதீஸ் சுருக்கமாக இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் ஆறு தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2526. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، سَمِعْتُ قَتَادَةَ، قَالَ حَدَّثَنِي النَّضْرُ بْنُ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {مَنْ أَعْتَقَ شَقِيصًا مِنْ عَبْدٍ }
பாடம் : 5
கூட்டு அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தவரிடம் (முழுமையாக விடுதலை செய்யத் தேவையான) செல்வம் இல்லாத போது விடுதலை ஆவண ஒப்பந்தப்படி (பாக்கித் தொகையைக் கட்ட) உழைப்பதற்கு அடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமம் தரப்படக் கூடாது.
2526. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையிலுள்ள (தமது) பங்கை விடுதலை செய்துவிட்டாரோ அவர்... (என்று ஹதீஸ் தொடங்கி அடுத்த ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம் பெறு கின்றன.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
2526. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையிலுள்ள (தமது) பங்கை விடுதலை செய்துவிட்டாரோ அவர்... (என்று ஹதீஸ் தொடங்கி அடுத்த ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம் பெறு கின்றன.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
2527. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ نَصِيبًا أَوْ شَقِيصًا فِي مَمْلُوكٍ، فَخَلاَصُهُ عَلَيْهِ فِي مَالِهِ إِنْ كَانَ لَهُ مَالٌ، وَإِلاَّ قُوِّمَ عَلَيْهِ، فَاسْتُسْعِيَ بِهِ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ "". تَابَعَهُ حَجَّاجُ بْنُ حَجَّاجٍ وَأَبَانُ وَمُوسَى بْنُ خَلَفٍ عَنْ قَتَادَةَ. اخْتَصَرَهُ شُعْبَةُ.
பாடம் : 5
கூட்டு அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தவரிடம் (முழுமையாக விடுதலை செய்யத் தேவையான) செல்வம் இல்லாத போது விடுதலை ஆவண ஒப்பந்தப்படி (பாக்கித் தொகையைக் கட்ட) உழைப்பதற்கு அடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமம் தரப்படக் கூடாது.
2527. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையில் (தமக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் (போதிய) செல்வம் இருக்கு மாயின், தமது செல்வத்திலிருந்தே அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். (அவரிடம் போதிய செல்வம்) இல்லை யெனில், அவ்வடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். (மீதித் தொகையைக் கட்டுவதற்கு வசதியாக) உழைப்பதற்கு அவ்வடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகமான சிரமத்தைத் தரக் கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.