2503. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي مَمْلُوكٍ وَجَبَ عَلَيْهِ أَنْ يُعْتِقَ كُلَّهُ، إِنْ كَانَ لَهُ مَالٌ قَدْرَ ثَمَنِهِ يُقَامُ قِيمَةَ عَدْلٍ وَيُعْطَى شُرَكَاؤُهُ حِصَّتَهُمْ وَيُخَلَّى سَبِيلُ الْمُعْتَقِ "".
பாடம் : 14
அடிமையில் கூட்டுச் சேர்வது
2503. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை யார் விடுதலை செய்கிறாரோ அவரிடம் அவ்வடிமையின் விலை அளவுக்கான செல்வம் இருக்குமாயின், அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அவருடைய பங்குதாரர்களுக்கு உரிய தொகை கொடுக்கப்பட வேண்டும். விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47

2504. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ شِقْصًا لَهُ فِي عَبْدٍ، أُعْتِقَ كُلُّهُ إِنْ كَانَ لَهُ مَالٌ، وَإِلاَّ يُسْتَسْعَ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ "".
பாடம் : 14
அடிமையில் கூட்டுச் சேர்வது
2504. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்துவிடுகிறாரோ அவரிடம் போதிய செல்வம் இருக்குமா யின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனில், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடு வித்துக்கொள்வதற்காக) அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமைக்கு (தாங்க முடியாத) சுமையைத் தரக் கூடாது.10
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2505. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ.وَعَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم صُبْحَ رَابِعَةٍ مِنْ ذِي الْحَجَّةِ مُهِلِّينَ بِالْحَجِّ، لاَ يَخْلِطُهُمْ شَىْءٌ، فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا فَجَعَلْنَاهَا عُمْرَةً، وَأَنْ نَحِلَّ إِلَى نِسَائِنَا، فَفَشَتْ فِي ذَلِكَ الْقَالَةُ. قَالَ عَطَاءٌ فَقَالَ جَابِرٌ فَيَرُوحُ أَحَدُنَا إِلَى مِنًى وَذَكَرُهُ يَقْطُرُ مَنِيًّا. فَقَالَ جَابِرٌ بِكَفِّهِ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَامَ خَطِيبًا فَقَالَ "" بَلَغَنِي أَنَّ أَقْوَامًا يَقُولُونَ كَذَا وَكَذَا، وَاللَّهِ لأَنَا أَبَرُّ وَأَتْقَى لِلَّهِ مِنْهُمْ، وَلَوْ أَنِّي اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ "". فَقَامَ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هِيَ لَنَا أَوْ لِلأَبَدِ فَقَالَ "" لاَ بَلْ لِلأَبَدِ "". قَالَ وَجَاءَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ـ فَقَالَ أَحَدُهُمَا يَقُولُ لَبَّيْكَ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ وَقَالَ الآخَرُ لَبَّيْكَ بِحَجَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ، وَأَشْرَكَهُ فِي الْهَدْىِ.
பாடம் : 15
ஒட்டகம் உள்ளிட்ட குர்பானி பிராணிகளில் கூட்டுச் சேர்வது
ஒருவர் (ஹஜ்ஜில் அறுப்பதற்காக) குர்பானி பிராணிகளைக் கொண்டுவந்த பிறகு அவற்றில் மற்றவரைக் கூட்டுச் சேர்க்கலாமா?
2505. ஜாபிர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல்ஹிஜ்ஜா நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தார்கள். (இஹ்ராம் கட்டியபோது உம்ரா) எதுவும் அவர்களி(ன் எண்ணத்தி)ல் கலந்திருக்கவில்லை. நாங்கள் வந்து சேர்ந்தபோது எங்கள் இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளும்படியும் எங்கள் மனைவியருடன் நாங்கள் சேர்ந்துகொள்ளும்படியும் நபியவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். (ஹஜ் மாதங்களில் உம்ரா கூடாது என்று கருதிவந்த) மக்களிடையே இது தொடர்பான பேச்சு (வேகமாகப்) பரவியது.
லிஅறிவிப்பாளர் அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘எங்களில் ஒருவர் தாம்பத்திய உறவை முடித்த கையோடு மினா செல்வதா?” என்று (மக்கள் பேசிக்கொண்டதை எடுத்துச்) சொன்னார் கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையால் சைகை செய்து காட்டி னார்கள்லி
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து உரை நிகழ்த்தினார்கள். அதில், ‘‘மக்கள் சிலர் இப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவனும் ஆவேன். ‘(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்யலாம் என்ற) என் கட்டளை தொடர்பாக நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருக்கமாட்டேன். என்னுடன் பலிப் பிராணி இல்லாமல் இருந்திருந்தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) இருப்பேன்.” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சலுகை எங்களுக்கு மட்டுமா? இல்லை, என்றைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(உங்களுக்கு மட்டும்) இல்லை; மாறாக, என்றைக்கும்தான்” என்று கூறினார்கள். அப்போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள்.
அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர் (ரலி) அவர்கள்), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள்ளார்களோ அதற்காகவே (ஹஜ்ஜுக்காகவே) நானும் இஹ்ராம் கட்டுகிறேன்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்.
மற்றொருவர் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் போன்றதற்கே நானும் இஹ்ராம் கட்டுகிறேன்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர் களை அவர்களின் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தமது குர்பானி பிராணியில் அலீ (ரலி) அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண் டார்கள்.11

2507. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ، فَأَصَبْنَا غَنَمًا وَإِبِلاً، فَعَجِلَ الْقَوْمُ، فَأَغْلَوْا بِهَا الْقُدُورَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ، ثُمَّ عَدَلَ عَشْرًا مِنَ الْغَنَمِ بِجَزُورٍ، ثُمَّ إِنَّ بَعِيرًا نَدَّ وَلَيْسَ فِي الْقَوْمِ إِلاَّ خَيْلٌ يَسِيرَةٌ فَرَمَاهُ رَجُلٌ فَحَبَسَهُ بِسَهْمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ، فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا "". قَالَ قَالَ جَدِّي يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْجُو ـ أَوْ نَخَافُ ـ أَنْ نَلْقَى الْعَدُوَّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى، فَنَذْبَحُ بِالْقَصَبِ فَقَالَ "" اعْجَلْ أَوْ أَرْنِي، مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلُوا، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ "".
பாடம் : 16
ஒரு ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிடல்
2507. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘திஹாமா’விலுள்ள ‘துல்ஹுலைஃபா’வில் இருந்தோம். அப்போது நாங்கள் (போர்ச் செல்வங்களாக) ஆடுகளை, அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்கவைத்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன.
பிறகு ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். பிறகு அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. ஆகவே,) ஒருவர் அம்பெய்து அதை ஓட விடாமல் தடுத்து நிறுத்தினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. ஆகவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்கின்றதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்திவிட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) பகைவர்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே என்று நாங்கள் அஞ்சுகின்றோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா?றற என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்பட்சத்தில் அதை உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி இதோ உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர் களின்) கத்திகளாகும்” என்று பதிலளித்தார்கள்.12

அடைமானம்
2508. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم دِرْعَهُ بِشَعِيرٍ، وَمَشَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ، وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ "" مَا أَصْبَحَ لآلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم إِلاَّ صَاعٌ، وَلاَ أَمْسَى "". وَإِنَّهُمْ لَتِسْعَةُ أَبْيَاتٍ.
பாடம் : 1
ஊரிலிருக்கும்போது அடைமானம் வைத்தல்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் பயணத்தில் இருந்து, (கடன் பத்திரம் எழுத) எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அடைமானப் பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும். (2:283)2
2508. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை தொலி நீக்கப் படாத கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். ‘‘முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டுக்காரர்களாக இருந்தும்கூட ஒரேயொரு ‘ஸாஉ’ (தானியம் அல்லது பேரீச்சம்பழம்) தவிர வேறெதுவும் காலையிலோ மாலையிலோ இருந்ததில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.3
அத்தியாயம் : 48

2509. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ، وَالْقَبِيلَ فِي السَّلَفِ، فَقَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى مِنْ يَهُودِيٍّ طَعَامًا إِلَى أَجَلٍ وَرَهَنَهُ دِرْعَهُ.
பாடம் : 2
கவசத்தை அடகுவைத்தல்
2509. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கடனுக்கு அடைமானம் வைப்பது மற்றும் பிணையேற்பது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு (பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கி னார்கள்; (அதற்காக) தமது (இரும்புக்) கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக எமக்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.

2510. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ فَإِنَّهُ آذَى اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم "". فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَنَا. فَأَتَاهُ فَقَالَ أَرَدْنَا أَنْ تُسْلِفَنَا وَسْقًا أَوْ وَسْقَيْنِ. فَقَالَ ارْهَنُونِي نِسَاءَكُمْ. قَالُوا كَيْفَ نَرْهَنُكَ نِسَاءَنَا، وَأَنْتَ أَجْمَلُ الْعَرَبِ قَالَ فَارْهَنُونِي أَبْنَاءَكُمْ. قَالُوا كَيْفَ نَرْهَنُ أَبْنَاءَنَا فَيُسَبُّ أَحَدُهُمْ، فَيُقَالُ رُهِنَ بِوَسْقٍ أَوْ وَسْقَيْنِ هَذَا عَارٌ عَلَيْنَا وَلَكِنَّا نَرْهَنُكَ اللأْمَةَ ـ قَالَ سُفْيَانُ يَعْنِي السِّلاَحَ ـ فَوَعَدَهُ أَنْ يَأْتِيَهُ فَقَتَلُوهُ، ثُمَّ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ.
பாடம் : 3
ஆயுதத்தை அடகுவைத்தல்
2510. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(கொடிய குற்றவாளியான) கஅப் பின் அல்அஷ்ரஃபைக் வீழ்த்து வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அவன் தொல்லை கொடுத்து விட்டான்” என்று கூறினார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்கள். (பிறகு) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, ‘‘ஒரு யிவஸ்க்’ அல்லது இரண்டு யிவஸ்க்’கள் (உணவுப் பொருளைக்) கடனாக எங்களுக்கு நீ தரவேண்டும் என்று விரும்புகிறோம்” எனக் கூறினார்.
அதற்கு அவன், ‘‘உங்கள் பெண்களை என்னிடம் அடகுவையுங்கள்” என்று கூறினான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நீயோ அரபியரிலேயே அழகு மிக்கவன். உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை நாங்கள் அடகுவைக்க முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘‘உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகுவையுங்கள்” என்று கேட்டான்.
அதற்கு அவர், ‘‘நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகுவைக்க முடியும்? (அப்படி அடகுவைத்தால்) யிஓரிரண்டு யிவஸ்க்’களுக்காக அடகுவைக்கப் பட்டவன்தானே இவன்’ என்று அவர்களை மற்றவர்கள் (இழிவாகப் பேசிப் பரிகாசமாக) ஏசுவார்களே! இது எங்களுக்கு அவமான மல்லவா? ஆயினும், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகுவைக்கி றோம்” என்று கூறினார்கள். (அவனும் அதற்குச் சம்மதிக்க) பின்னர் வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.
(பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகுவைக்கின்ற சாக்கில்) அவனைக் கொன்றுவிட்டார்கள்; பிறகு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து செய்தியைத் தெரிவித்தார்கள்.4

2511. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ "" الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ، وَيُشْرَبُ لَبَنُ الدَّرِّ إِذَا كَانَ مَرْهُونًا "".
பாடம் : 4
அடைமானம்வைக்கப்பட்ட கால் நடையை வாகனமாகப் பயன் படுத்துவதும் அதன் பாலைக் கறப்பதும்
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வழிதவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகின்ற தீனியின் அளவுக் கேற்ப) பயணம் செய்யலாம். அதற்குப் போடும் தீனியின் அளவுக்கேற்ப அதன் பாலைக் கறந்து (பயன்படுத்திக்)கொள்ளலாம். அடைமானப் பிராணியும் அதைப் போன்றதுதான்.
2511. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடைமானம் வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடைமானம் வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பால் தரும் பிராணி அடைமானம் வைக் கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடை மானம் வாங்கியவர்) அருந்தலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
2511. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடைமானம் வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடைமானம் வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பால் தரும் பிராணி அடைமானம் வைக் கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடை மானம் வாங்கியவர்) அருந்தலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
2512. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. "" الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَعَلَى الَّذِي يَرْكَبُ وَيَشْرَبُ النَّفَقَةُ "".
பாடம் : 4
அடைமானம்வைக்கப்பட்ட கால் நடையை வாகனமாகப் பயன் படுத்துவதும் அதன் பாலைக் கறப்பதும்
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வழிதவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகின்ற தீனியின் அளவுக் கேற்ப) பயணம் செய்யலாம். அதற்குப் போடும் தீனியின் அளவுக்கேற்ப அதன் பாலைக் கறந்து (பயன்படுத்திக்)கொள்ளலாம். அடைமானப் பிராணியும் அதைப் போன்றதுதான்.
2512. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடைமானம் வைக்கப்பட்ட பிராணிக் காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடைமானம் வாங்கிய வர்) பயணம் செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகுவைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடைமானம் வாங்கியவர்) அருந்தலாம். பயணம் செய்பவரும் பாலை அருந்துபவரும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.5
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
2512. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடைமானம் வைக்கப்பட்ட பிராணிக் காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடைமானம் வாங்கிய வர்) பயணம் செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகுவைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடைமானம் வாங்கியவர்) அருந்தலாம். பயணம் செய்பவரும் பாலை அருந்துபவரும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.5
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
2513. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ يَهُودِيٍّ طَعَامًا وَرَهَنَهُ دِرْعَهُ.
பாடம் : 5
யூதர்கள் உள்ளிட்டோரிடம் அடைமானம் வைத்தல்
2513. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப் பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) தமது கவசத்தை அந்த யூதரிடம் அடைமானம் வைத்தார்கள்.

2514. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَكَتَبَ إِلَىَّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى أَنَّ الْيَمِينَ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ.
பாடம் : 6
அடைமானம்வைத்தவர், அடை மானம் பெறுபவர் போன்றோரி டையே கருத்து வேறுபாடு எழுந் தால், வாதி ஆதாரம் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.
2514. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு) கடிதம் எழுதினேன். அவர்கள் எனக்கு, ‘‘நபி (ஸல்) அவர்கள் பிரதிவாதி (தன் மீதுள்ள வழக்கை மறுப்பதற்கு) சத்தியம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள்” எனப் பதில் எழுதினார்கள்.

2515. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، يَسْتَحِقُّ بِهَا مَالاً وَهْوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ، فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} فَقَرَأَ إِلَى {عَذَابٌ أَلِيمٌ}.ثُمَّ إِنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ خَرَجَ إِلَيْنَا فَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَالَ فَحَدَّثْنَاهُ قَالَ فَقَالَ صَدَقَ لَفِيَّ وَاللَّهِ أُنْزِلَتْ، كَانَتْ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ خُصُومَةٌ فِي بِئْرٍ فَاخْتَصَمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" شَاهِدُكَ أَوْ يَمِينُهُ "". قُلْتُ إِنَّهُ إِذًا يَحْلِفُ وَلاَ يُبَالِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالاً هُوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ، ثُمَّ اقْتَرَأَ هَذِهِ الآيَةَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى {وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ}.
பாடம் : 6
அடைமானம்வைத்தவர், அடை மானம் பெறுபவர் போன்றோரி டையே கருத்து வேறுபாடு எழுந் தால், வாதி ஆதாரம் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.
2515. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘யார் ஒரு பிரமாண (வாக்குமூல)த்தின்போது ஒரு செல்வத்தை அடைவதற் காகத் திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர், (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டுள்ள நிலையில்தான் அவனைச் சந்திப்பார்” எனும் நபிமொழியைக் கூறினார்கள். பிறகு இதை உண்மைப்படுத்தும் வகையில் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று கூறினார்கள்: எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. அவர்களுடன் அல்லாஹ் பேசமாட்டான்; மறுமை நாளில் அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (3:77)
பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, ‘‘அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று கேட்டார்கள். நாங்கள் அவர் (இப்னு மஸ்ஊத் (ரலி)) சொன்னதை எடுத்துரைத்தோம். அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
அவர் சொன்னது உண்மைதான். என் விவகாரத்தில்தான் இவ்வசனம் (3:77) அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணறு தொடர் பாகத் தகராறு இருந்துவந்தது; ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எங்கள்) வழக்கைக் கொண்டுசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் இரண்டு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘‘அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே; (பொய்ச் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்படமாட்டாரே” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘எவர் ஒரு செல்வத்தை அடைந்துகொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம்கொண்டிருக் கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார்” என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை (3:77) ஓதிக் காட்டி னார்கள்.

அடிமையை விடுதலை செய்தல்
2517. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ، صَاحِبُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ قَالَ لِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ "". قَالَ سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ فَانْطَلَقْتُ إِلَى عَلِيِّ بْنِ حُسَيْنٍ فَعَمَدَ عَلِيُّ بْنُ حُسَيْنٍ ـ رضى الله عنهما ـ إِلَى عَبْدٍ لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَشَرَةَ آلاَفِ دِرْهَمٍ ـ أَوْ أَلْفَ دِينَارٍ ـ فَأَعْتَقَهُ.
பாடம் : 1
அடிமையை விடுதலை செய்வதும் அதன் சிறப்பும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப்பாதையை (நன்மையின் பாதையைக்) கடந்து செல்ல(த் துணிய)வில்லை. கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா? (அதுதான்) ஒருவரை அடிமைத் தளை’ லிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினி கிடக்கும் நாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதாகும். (90:10லி17)
2517. அலீ பின் ஹுசைன் (ரஹ்)2 அவர்களின் தோழரான சயீத் பின் மர் ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை யார் விடுதலை செய்கிறாரோ, (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ் வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்று வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என்னிடம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
உடனே நான், இந்த நபிமொழியை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றேன். இதைக் கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹங்களையோ ஆயிரம் தீனார்களையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும் (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையை அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 49

2518. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُرَاوِحٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الْعَمَلِ أَفْضَلُ، قَالَ "" إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ "". قُلْتُ فَأَىُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ "" أَغْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا "". قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ. قَالَ "" تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لأَخْرَقَ "". قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ. قَالَ "" تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ "".
பாடம் : 2
எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது?
2518. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதை யில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
நான், ‘‘எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் உரிமை யாளர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித் தார்கள்.
நான், ‘‘என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லை யென்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பலவீனருக்கு உதவி செய்; அல்லது வேலை இல்லாதவனுக்கு வேலை கொடு!” என்று கூறினார்கள். நான், ‘‘இதுவும் என்னால் இயலவில்லையென் றால்...?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்துகொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.

2519. حَدَّثَنَا مُوسَى بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْعَتَاقَةِ فِي كُسُوفِ الشَّمْسِ. تَابَعَهُ عَلِيٌّ عَنِ الدَّرَاوَرْدِيِّ عَنْ هِشَامٍ.
பாடம் : 3
சூரிய கிரகணமோ இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமை களை விடுதலை செய்வது விரும்பத் தக்கது.
2519. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2520. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا عَثَّامٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ كُنَّا نُؤْمَرُ عِنْدَ الْخُسُوفِ بِالْعَتَاقَةِ.
பாடம் : 3
சூரிய கிரகணமோ இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமை களை விடுதலை செய்வது விரும்பத் தக்கது.
2520. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப் பட்டிருந்தோம்.

2521. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ عَبْدًا بَيْنَ اثْنَيْنِ، فَإِنْ كَانَ مُوسِرًا قُوِّمَ عَلَيْهِ ثُمَّ يُعْتَقُ "".
பாடம் : 4
இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2521. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
இருவருக்குக் கூட்டான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால், அவர் வசதியானவராக இருக்கும்போது அந்த அடிமைக்கு (நியாயமான) விலை மதிப்பிடப்பட்டு (அதையும் அவரே செலுத்தி) பின்னர் அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

2522. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، فَكَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ الْعَبْدِ قُوِّمَ الْعَبْدُ قِيمَةَ عَدْلٍ، فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهُمْ وَعَتَقَ عَلَيْهِ، وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ "".
பாடம் : 4
இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும். பிறகு அவர் தம் பங்காளிக்கு, அவர்களுக்கான பங்குத் தொகைகளை கொடுத்துவிட்டு, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (பங்கின்) அளவிற்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார்.