2420. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلاَةِ فَتُقَامَ ثُمَّ أُخَالِفَ إِلَى مَنَازِلِ قَوْمٍ لاَ يَشْهَدُونَ الصَّلاَةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ "".
பாடம் : 5 விவரம் அறிந்துகொண்ட பிறகு, பாவம் புரிவோரையும் வழக்காடு வோரையும் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றல் உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் சகோதரி (அபூபக்ரின் மரணத்திற்காக) ஒப்பாரி வைத்தபோது அவரை வீட்டைவிட்டு வெளியேற்றி னார்கள்.
2420. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தொழுகையை (நிறைவேற்றுமாறு) கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது (கூட்டுத்) தொழு கையில் கலந்துகொள்ளாத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 44
2421. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ عَبْدَ بْنَ زَمْعَةَ، وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ أَوْصَانِي أَخِي إِذَا قَدِمْتُ أَنْ أَنْظُرَ ابْنَ أَمَةِ زَمْعَةَ فَأَقْبِضَهُ، فَإِنَّهُ ابْنِي. وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي. فَرَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم شَبَهًا بَيِّنًا فَقَالَ "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ "".
பாடம் : 6 மரணசாசனம் யாருக்குச் செய்யப் பட்டதோ அவர் மரணசாசனம் செய்த (இறந்த)வருக்காக வாதிடு வது
2421. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களி டம் வழக்கொன்றைக் கொண்டுவந்தனர். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரர் (உத்பா பின் அபீவக்காஸ்), ‘நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்’ என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்” என்று சொன்னார்கள்.

அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் அதிகாரத்தில் அவள் இருந்தபோது பிறந்தவர்” என்று கூறினார்.5

அந்த அடிமைப் பெண்ணின் மகனி டம் (சஅதுடைய சகோதரர் உத்பாவின்) சாயலைத் தெளிவாகக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.6

பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக்கொள்.)” என்று கூறினார்கள்.7

அத்தியாயம் : 44
2422. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ "". قَالَ عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ. فَذَكَرَ الْحَدِيثَ قَالَ "" أَطْلِقُوا ثُمَامَةَ "".
பாடம் : 7 யாருடைய தீங்கு குறித்து அஞ்சப்படுமோ அவரைக் கட்டி வைத்தல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குர்ஆனைக் கற்றுக்கொடுப்பதற்காகவும் நபிவழிகளையும் பாகப்பிரிவினைச் சட்டங்களையும் கற்றுக்கொடுப்பதற்காகவும் இக்ரிமா (ரஹ்) அவர்களை (சங்கிலியால்) பிணைத்துவைத்தார்கள்.8
2422. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிநஜ்த்’ மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பிவைத் தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த யமாமாவாசிகளின் தலைவரான ‘ஸுமாமா பின் உஸால்’ எனப்படும் ஒரு மனிதரைப் பிடித்து வந்தார்கள். அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து, ‘‘ஸுமாமாவே, உம்மிடம் என்ன (செய்தி) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘முஹம்மதே! என்னிடம் நல்ல செய்திதான் உள்ளது” என்று கூறினார். தொடர்ந்து ஹதீஸைக் கூறினார்கள்.

இறுதியில் நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுமாமாவை அவிழ்த்து விட்டுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.9

அத்தியாயம் : 44
2423. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ.
பாடம் : 8 புனித (ஹரம்) எல்லையில் (குற்ற வாளிகளைக்) கட்டிவைப்பதும் சிறைப்படுத்துவதும் நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், மக்கா நகரில் குற்றவாளிகளைச் சிறைப்படுத்துவதற்காக ஸஃப்வான் பின் உமய்யா (ரலி) அவர்களிடமிருந்து ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார்கள். அப்போது, உமர் (ரலி) அவர்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டால் தாம் வாங்கியது உறுதிப்பட்டுவிடும் என்றும் உமர் (ரலி) அவர்கள் ஒப்புதல் கொடுக்காவிட்டால் அவருக்கு நானூறு திர்ஹங்கள் தரப்படும் என்றும் நிபந்தனையிட்டிருந்தார்கள். மேலும்,  அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர்  (ரலி) அவர்களும் மக்காவில் (குற்றவாளிகளைக்) கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
2423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்று அழைக்கப் படுபவரைப் பிடித்து வந்தார்கள். (மக்கள்) அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தார்கள்.

அத்தியாயம் : 44
2424. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ رَبِيعَةَ،. وَقَالَ غَيْرُهُ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الأَنْصَارِيِّ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ لَهُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَدْرَدٍ الأَسْلَمِيِّ دَيْنٌ، فَلَقِيَهُ فَلَزِمَهُ، فَتَكَلَّمَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَمَرَّ بِهِمَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَا كَعْبُ "". وَأَشَارَ بِيَدِهِ كَأَنَّهُ يَقُولُ النِّصْفَ، فَأَخَذَ نِصْفَ مَا عَلَيْهِ وَتَرَكَ نِصْفًا.
பாடம் : 9 கடனாளியைப் பிடித்துக் கொள்ளல்
2424. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் கொடுக்க வேண்டிய கடன் ஒன்று இருந்தது. நான் அவரை (பள்ளிவாசலில்) சந்தித் தேன். உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். (கடனைத் திருப்பிச் செலுத்தும்படி வற்புறுத்தலானேன்.) நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யவே எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன.

நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை, ‘‘கஅபே!” என்றழைத்து, ‘‘பாதியை (வாங்கிக்கொள்)” என்று கூறுவது போல் தமது கையால் சைகை செய்தார்கள்.

எனவே, நான் இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்த கடனில் பாதியை வாங்கிக் கொண்டு மீதியை (மன்னித்து) விட்டு விட்டேன்.

அத்தியாயம் : 44
2425. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كُنْتُ قَيْنًا فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ لِي عَلَى الْعَاصِ بْنِ وَائِلٍ دَرَاهِمُ، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ فَقَالَ لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ، فَقُلْتُ لاَ وَاللَّهِ لاَ أَكْفُرُ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم حَتَّى يُمِيتَكَ اللَّهُ ثُمَّ يَبْعَثَكَ. قَالَ فَدَعْنِي حَتَّى أَمُوتَ ثُمَّ أُبْعَثَ فَأُوتَى مَالاً وَوَلَدًا، ثُمَّ أَقْضِيَكَ. فَنَزَلَتْ {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا} الآيَةَ.
பாடம் : 10 கடனைத் திருப்பிக் கேட்பது
2425. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாமைக் காலத்தில் கொல்லராக இருந்தேன். எனக்கு ஆஸ் பின் வாயில் என்பவர் சில திர்ஹங்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அவற்றைக் கொடுத்துவிடும்படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனது கடனைத் தரமாட்டேன்” என்று கூறினார். நான், ‘‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும்வரை நான் முஹம்மதை நிராகரிக்கமாட்டேன்” என்று கூறினேன்.

அதற்கு அவர், ‘‘அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப் படும்வரை என்னை விட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்” என்று கூறினார்.

அப்போதுதான், ‘‘எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டேயிருக் கும்’ என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்துகொண்டானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக்கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்...” (19:77லி80) எனும் குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.10

அத்தியாயம் : 44

2426. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ،. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ لَقِيتُ أُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله عنه ـ فَقَالَ أَخَذْتُ صُرَّةً مِائَةَ دِينَارٍ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً"". فَعَرَّفْتُهَا حَوْلَهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً "" فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ، ثُمَّ أَتَيْتُهُ ثَلاَثًا فَقَالَ "" احْفَظْ وِعَاءَهَا وَعَدَدَهَا وَوِكَاءَهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا، وَإِلاَّ فَاسْتَمْتِعْ بِهَا "". فَاسْتَمْتَعْتُ فَلَقِيتُهُ بَعْدُ بِمَكَّةَ فَقَالَ لاَ أَدْرِي ثَلاَثَةَ أَحْوَالٍ أَوْ حَوْلاً وَاحِدًا.
பாடம் : 1 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் (சரியான) அடையா ளம் கூறினால் கண்டெடுத்தவர் அதை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
2426. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத் தேன். அதில் நூறு பொற்காசுகள் இருந்தன. (அதை எடுத்துக்கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீர் (பொது) அறிவிப்புச் செய்வீராக!” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடை யாளம் புரிந்துகொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ‘‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்க!” என்று கூறி னார்கள். நானும் அதைப் பற்றி அறி விப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்)கொள்பவர் எவரையும் நான் காணவில்லை.

பிறகு மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், ‘‘அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் நினைவில் வைத்திருப்பீராக! அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்துவிடுக!. இல்லையென்றால் நீரே அதைப் பயன்படுத்திக்கொள்க” என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக்கொண்டேன்.

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைப் பின்னர் மக்காவில் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘‘(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், யிமூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது யிஓராண்டுக் காலம்வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறியமாட்டேன்” (அதாவது ‘‘எனக்கு நினைவில்லை”) என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 45
2427. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ رَبِيعَةَ، حَدَّثَنِي يَزِيدُ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَمَّا يَلْتَقِطُهُ فَقَالَ "" عَرِّفْهَا سَنَةً، ثُمَّ احْفَظْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِهَا، وَإِلاَّ فَاسْتَنْفِقْهَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ "" لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "". قَالَ ضَالَّةُ الإِبِلِ فَتَمَعَّرَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم. فَقَالَ "" مَا لَكَ وَلَهَا، مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ "".
பாடம் : 2 தொலைந்த ஒட்டகம்
2427. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராம வாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச்செய். பிறகு, அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சை யும் அடையாளம் பார்த்து வைத்துக்கொள். அதைப் பற்றி (அடையாளம்) தெரிவிப்ப வர் எவராவது உன்னிடம் வந்தால் (அவரிடம் ஒப்படைத்துவிடு.) இல்லை யென்றால், அதை உன் செலவுக்கு எடுத்துக்கொள்” என்று கூறினார்கள்.

அந்தக் கிராமவாசி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து)விட்ட ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள்.2

அந்தக் கிராமவாசி, ‘‘வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்களின் முகம் (வெறுப்பால் மங்கலாகி) நிறம் மாறிவிட்டது. பிறகு, ‘‘உனக்கும் அதற்கும் என்ன  சம்பந்தம்?  அதனுடன் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப் பையும் உள்ளதே! நீர்நிலைகளுக்கு அது செல்கிறது; மரத்திலிருந்து தின்கிறது” என்று கூறினார்கள்.3

அத்தியாயம் : 45
2428. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ يَحْيَى، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ خَالِدٍ ـ رضى الله عنه ـ يَقُولُ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ فَزَعَمَ أَنَّهُ قَالَ "" اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً "". يَقُولُ يَزِيدُ إِنْ لَمْ تُعْتَرَفِ اسْتَنْفَقَ بِهَا صَاحِبُهَا وَكَانَتْ وَدِيعَةً، عِنْدَهُ. قَالَ يَحْيَى فَهَذَا الَّذِي لاَ أَدْرِي أَفِي حَدِيثِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ أَمْ شَىْءٌ مِنْ عِنْدِهِ ـ ثُمَّ قَالَ كَيْفَ تَرَى فِي ضَالَّةِ الْغَنَمِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "". قَالَ يَزِيدُ وَهْىَ تُعَرَّفُ أَيْضًا. ثُمَّ قَالَ كَيْفَ تَرَى فِي ضَالَّةِ الإِبِلِ قَالَ فَقَالَ "" دَعْهَا فَإِنَّ مَعَهَا حِذَاءَهَا وَسِقَاءَهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَجِدَهَا رَبُّهَا "".
பாடம் : 3 தொலைந்த ஆடு
2428. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப் பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் அறிந்துகொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு (அதை) அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள்.

பின்னர் அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்துகொள்வார். மேலும், அது அவரிடத் தில் அடைக்கலப் பொருளாக இருக்கும்.

‘‘இந்தப் பிந்திய வாக்கியம் மட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத் அவர்களின் சொல்லா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.4

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), ‘‘வழிதவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நீ எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள், ‘‘அதையும்கூட அறிவிப்புச் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்.

பிறகு அந்த நபர், ‘‘வழிதவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை (அப்படியே) விட்டுவிடுவீராக!. ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கிறது; அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கிறது; அதை அதன் உரிமையாளர் அடைந்துகொள்ளும்வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கிறது; (அங்கே நீரருந்தித் தாகம் தணித்துக்கொள்கிறது;) மரங்களிலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது” என்று பதில் கூறினார்கள்.

அத்தியாயம் : 45
2429. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ. فَقَالَ "" اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ صَاحِبُهَا، وَإِلاَّ فَشَأْنَكَ بِهَا "". قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ "" هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "". قَالَ فَضَالَّةُ الإِبِلِ قَالَ "" مَا لَكَ وَلَهَا، مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا "".
பாடம் : 4 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் ஓராண்டுக்குப் பிறகும் கிடைக்காவிட்டால், அது அதைக் கண்டெடுத்தவருக்கே உரியதாகும்.
2429. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, கண்டெடுக்கப் பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள்.

அந்த மனிதர், ‘‘வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது” என்று கூறினார்கள்.

அந்த மனிதர், ‘‘வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் உரிமையாளர் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கின்றது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 45
2430. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ ـ وَسَاقَ الْحَدِيثَ ـ ""فَخَرَجَ يَنْظُرُ لَعَلَّ مَرْكَبًا قَدْ جَاءَ بِمَالِهِ، فَإِذَا هُوَ بِالْخَشَبَةِ فَأَخَذَهَا لأَهْلِهِ حَطَبًا، فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ وَالصَّحِيفَةَ "".
பாடம் : 5 ஒருவருக்கு கடலில் மரக்கட் டையோ சாட்டையோ வேறு பொருளோ கிடைத்தால்...
2430. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் களில் ஒரு மனிதரை நினைவு கூர்ந்தார்கள். ‘‘...அந்த மனிதர் கடலில் தனது செல்வத்து டன் வாகனம் ஏதும் வருகின்றதா என்று கவனிப்பதற்காகப் புறப்பட்டார். அப்போது ஒரு மரக்கட்டை (கரையில் ஒதுங்கக்) கண்டார். தம் குடும்பத்தாருக்கு விறகாகப் பயன்படட்டும் என்று அதை எடுத்துக்கொண்டார். அதை அவர் பிளந்தபோது தமது செல்வத்தையும் (அதை வைத்து அனுப்பியவரின்) கடிதத்தையும் (அதனுள்) கண்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸ் முழுவதையும் கூறினார்கள்.5

அத்தியாயம் : 45
2431. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ قَالَ "" لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لأَكَلْتُهَا "". وَقَالَ يَحْيَى حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنِي مَنْصُورٌ وَقَالَ زَائِدَةُ عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ حَدَّثَنَا أَنَسٌ.
பாடம் : 6 பாதையில் ஒரு பேரீச்சம்பழத்தைக் கண்டால்...
2431. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம்பழத்தைக் கடந்து சென்றார் கள். ‘‘இது தர்மப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.6

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 45
2432. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنِّي لأَنْقَلِبُ إِلَى أَهْلِي، فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي فَأَرْفَعُهَا لآكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً فَأُلْفِيَهَا "".
பாடம் : 6 பாதையில் ஒரு பேரீச்சம்பழத்தைக் கண்டால்...
2432. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நான் என் வீட்டாரிடம் திரும்பி வரு வேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதை உண்பதற்காக எடுப்பேன். அதற்குள் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படும்; உடனே அதைப் போட்டுவிடுவேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 45
2433. وَقَالَ أَحْمَدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يُعْضَدُ عِضَاهُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ تَحِلُّ لُقَطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ، وَلاَ يُخْتَلَى خَلاَهَا "". فَقَالَ عَبَّاسٌ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ الإِذْخِرَ. فَقَالَ "" إِلاَّ الإِذْخِرَ "".
பாடம் : 7 மக்காவாசிகள் தவறவிட்ட பொருள் கண்டெடுக்கப்பட்டால் அதை எப்படி அறிவிப்புச் செய்வது? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘மக்காவில் கீழே விழுந்துகிடக்கும் பொருளை அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறெவரும் கண்டெடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது இரு வழிகளில் அறிவிக்கப் பட்டுள்ளது.
2433. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அதன் (மக்காவின்) மரங்களை வெட்டக் கூடாது. அதன் வேட்டைப் பிராணிகளை விரட்டியடிக்கக் கூடாது. அதில் கண்டெடுக்கப்படும் (கேட்பாரற்ற) பொருள் அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவருக்குத் தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்பட்டதன்று. அதன் புற்பூண்டு களைக் கிள்ளவும் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே  அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! யிஇத்கிரை’த் தவிரவா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், யிஇத்கிரைத் தவிர’ என்று பதிலளித்தார்கள்.7


அத்தியாயம் : 45
2434. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مَكَّةَ قَامَ فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ، وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، فَإِنَّهَا لاَ تَحِلُّ لأَحَدٍ كَانَ قَبْلِي، وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَإِنَّهَا لاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي، فَلاَ يُنَفَّرُ صَيْدُهَا وَلاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ تَحِلُّ سَاقِطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ، وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهْوَ بِخَيْرِ النَّظَرَيْنِ، إِمَّا أَنْ يُفْدَى، وَإِمَّا أَنْ يُقِيدَ "". فَقَالَ الْعَبَّاسُ إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّا نَجْعَلُهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِلاَّ الإِذْخِرَ "". فَقَامَ أَبُو شَاهٍ ـ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ ـ فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اكْتُبُوا لأَبِي شَاهٍ "". قُلْتُ لِلأَوْزَاعِيِّ مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 7 மக்காவாசிகள் தவறவிட்ட பொருள் கண்டெடுக்கப்பட்டால் அதை எப்படி அறிவிப்புச் செய்வது? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘மக்காவில் கீழே விழுந்துகிடக்கும் பொருளை அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறெவரும் கண்டெடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது இரு வழிகளில் அறிவிக்கப் பட்டுள்ளது.
2434. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய் வதை)விட்டு யானை(ப் படை)யைத் தடுத் தான். அதன்மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறைநம்பிக்கை யாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள் ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பு எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும்கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நகரின் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக்கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்குத் தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருடைய உறவினர் கொல்லப்பட்டாரோ அவர் இரண்டு விஷயங்களில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக்கொள்ளலாம்” என்று கூறி னார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் அடக்கத் தலங்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், யிஇத்கிர் புல்லைத் தவிர’ என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அபூஷாஹுக்கு எழுதிக்கொடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:) நான் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், ‘‘ ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எழுதிக்கொடுங்கள்’ என்னும் அபூஷாஹ் (ரலி) அவர்களுடைய சொல் எதைக் குறிக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத்தான் (எழுதிக்கொடுக்கச் சொன்னார்)” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 45
2435. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ امْرِئٍ بِغَيْرِ إِذْنِهِ، أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ تُؤْتَى مَشْرُبَتُهُ فَتُكْسَرَ خِزَانَتُهُ، فَيُنْتَقَلَ طَعَامُهُ فَإِنَّمَا تَخْزُنُ لَهُمْ ضُرُوعُ مَوَاشِيهِمْ أَطْعِمَاتِهِمْ، فَلاَ يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ أَحَدٍ إِلاَّ بِإِذْنِهِ "".
பாடம் : 8 ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி பால் கறப்பது கூடாது.
2435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரின் கால்நடையில் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்குப் பெட்டகத்திற்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? கால்நடைகளு டைய மடிகள், கால்நடை உரிமையாளர் களின் உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையில் அவரது அனுமதி யின்றிப் பால் கறக்க வேண்டாம்.8

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 45
2436. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ قَالَ "" عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، ثُمَّ اسْتَنْفِقْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ "" خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، فَضَالَّةُ الإِبِلِ قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ ـ أَوِ احْمَرَّ وَجْهُهُ ـ ثُمَّ قَالَ "" مَا لَكَ وَلَهَا، مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا "".
பாடம் : 9 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் ஒரு வருடம் கழித்து வந்தால் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண் டும். ஏனெனில், அந்தப் பொருள்கண்டெடுத்தவரின் பொறுப்பிலி ருந்த கையடைப் பொருளாகும்.
2436. ஸைத் பின் காலித் அல்ஜுஹனி (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைப் பற்றி ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. பிறகு, அதன் முடிச்சையும் பை(உறை)யையும் அடையாளம் தெரிந்து வைத்துக்கொள். பிறகு அதைச் செலவழித் துக் கொள். அதன் உரிமையாளர் வந்து (சரியான) அடையாளம் கூறிவிட்டால் அதை அவரிடம் திருப்பிச் செலுத்திவிடு” என்று கூறினார்கள்.

அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை  எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க் குரியது” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார்.

இதைச் செவியுற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கன்னங் கள் இரண்டும் சிவந்துவிட்டன; லிஅல்லது அவர்களின் முகம் சிவந்து விட்டது.லி பிறகு ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதன் உரிமையாளர் அதைச் சந்திக்கும்வரை (தன்னைப் பசியிலிருந்தும் தாகத்தி லிருந்தும் பாதுகாத்துக்கொள்ள) அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் இருக்கிறதே” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 45
2437. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ كُنْتُ مَعَ سَلْمَانَ بْنِ رَبِيعَةَ، وَزَيْدِ بْنِ صُوحَانَ فِي غَزَاةٍ، فَوَجَدْتُ سَوْطًا. فَقَالَ لِي أَلْقِهِ. قُلْتُ لاَ، وَلَكِنْ إِنْ وَجَدْتُ صَاحِبَهُ، وَإِلاَّ اسْتَمْتَعْتُ بِهِ. فَلَمَّا رَجَعْنَا حَجَجْنَا فَمَرَرْتُ بِالْمَدِينَةِ، فَسَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله عنه ـ فَقَالَ وَجَدْتُ صُرَّةً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا مِائَةُ دِينَارٍ، فَأَتَيْتُ بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً "". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُ، فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً "". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً "". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ الرَّابِعَةَ فَقَالَ "" اعْرِفْ عِدَّتَهَا وَوِكَاءَهَا وَوِعَاءَهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ اسْتَمْتِعْ بِهَا "". حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، بِهَذَا قَالَ فَلَقِيتُهُ بَعْدُ بِمَكَّةَ، فَقَالَ لاَ أَدْرِي أَثَلاَثَةَ أَحْوَالٍ أَوْ حَوْلاً وَاحِدًا.
பாடம் : 10 உரிமையில்லாதவர் கையில் சிக்கிவிடாமலும் வீணாகிவிடாமலும் இருப்பதற்காக, கீழேகிடக்கும் பொருளை எடுக்கலாமா?
2437. சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சல்மான் பின் ரபீஆ அல்பாஹிலீ (ரலி) அவர்களுடனும் ஸைத் பின் ஸூஹான் (ரஹ்) அவர்களுடனும் ஒரு போரில் கலந்துகொண்டபோது சாட்டை ஒன்றைக் கண்(டு எடுத்துக்கொண்)டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘‘அதைப் போட்டு விடு” என்று கூறினார்கள். நான், ‘‘இல்லை. இதன் உரிமையாளரைக் கண்டால் (இதைக் கொடுத்துவிடுவேன்.) இல்லையென்றால் இதைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்று கூறினேன். நான் போரிலிருந்து திரும்பியபோது ஹஜ் செய்தேன். அப்போது மதீனா வழியாக நான் சென்றேன். அங்கு உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன்.

அவர்கள் கூறினார்கள்: நான், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நூறு பொற்காசுகள் இருந்த ஒரு பையைக் கண்டேன். அதை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். ஒரு வருட காலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்தேன்.

பிறகு திரும்பவும் அவர்களிடம் வந்தேன். அப்போதும் அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே, நானும் ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். நான்காவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ‘‘அதன் (பையிலுள்ள பணத்தின்) எண்ணிக்கையையும், முடிச்சையும், பையையும் அடையாளம் அறிந்துகொள். அதன் உரிமையாளர் வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிடு. இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உஸ்மான் பின் ஜபலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப் படுகிறது:

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், ‘‘(இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைப் பின்னர் மக்காவில் சந்தித்தேன். அவர், யிமூன்றாண்டுகள் அறிவிக்க வேண்டுமா; ஓராண்டா’ எதை சுவைத் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்” என்றார்கள்.

அத்தியாயம் : 45
2438. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ رَبِيعَةَ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنه ـ أَنَّ أَعْرَابِيًّا، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ قَالَ "" عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِعِفَاصِهَا وَوِكَائِهَا، وَإِلاَّ فَاسْتَنْفِقْ بِهَا "". وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الإِبِلِ فَتَمَعَّرَ وَجْهُهُ، قَالَ "" مَا لَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ، دَعْهَا حَتَّى يَجِدَهَا رَبُّهَا "". وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الْغَنَمِ. فَقَالَ "" هِيَ لَكَ أَوْ لأَخِيكَ، أَوْ لِلذِّئْبِ "".
பாடம் : 11 கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்துவிட்டு ஆட்சியாளரிடம் அதை ஒப்படைக் காமல் இருத்தல்
2438. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய். அதன் பை(உறை)யையும் முடிச்சையும் பற்றி (அடையாளம்) தெரிவிக்கக் கூடியவர் எவரேனும் வந்தால் (அதை அவரிடம் ஒப்படைத்துவிடு). இல்லையென் றால் அதைச் செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். இதைக் கேட்டு நபியவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் அதன் குளம் பும் உள்ளது. அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கே தாகம் தணித்துக்கொள்கிறது.) மரத்திலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது. அதை அதன் உரிமையாளர் அடைந்துகொள்ளும்வரை அதை விட்டுவிடு” என்று கூறினார்கள்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஆட்டைப் பற்றிக் கேட்டார். அதற்கு, ‘‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.9

அத்தியாயம் : 45
2439. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ أَخْبَرَنِي الْبَرَاءُ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ انْطَلَقْتُ، فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ يَسُوقُ غَنَمَهُ فَقُلْتُ لِمَنْ أَنْتَ قَالَ لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ. فَسَمَّاهُ فَعَرَفْتُهُ. فَقُلْتُ هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ فَقَالَ نَعَمْ. فَقُلْتُ هَلْ أَنْتَ حَالِبٌ لِي قَالَ نَعَمْ. فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْ غَنَمِهِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ كَفَّيْهِ، فَقَالَ هَكَذَا ـ ضَرَبَ إِحْدَى كَفَّيْهِ بِالأُخْرَى ـ فَحَلَبَ كُثْبَةً مِنْ لَبَنٍ وَقَدْ جَعَلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِدَاوَةً عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ، حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ.
பாடம் : 12
2439. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், ‘‘நீ யாருடைய பணியாள்?” என்று கேட்டேன். அவன், ‘‘குறைஷியரில் இன்ன மனிதருடைய பணியாள்” என்று சொல்லி அவரது பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், ‘‘உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?” என்று கேட்டேன். அவன், ”ஆம்; (இருக்கிறது)” என்று பதிலளித்தான். எனக்காக நீ பால் கறந்து கொடுப்பாயா? என்று கேட்டேன். அவன் சரி என்றான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன்.

அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து அதன் தொடைகளுக்கிடையே காலை வைத்து அழுத்திக்கொண்டான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளையிட்டேன். பிறகு அவன் தன் இரு கைகளையும் (தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். ...றறஇப்படி உதறும்படி” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கையை மற்றொரு கைமீது அடித்துக் காட்டினார்கள்... (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண் டான்.) பிறகு சிறிதளவு பால் கறந்தான்.

நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு தோல் பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று கூறினேன். நான் திருப்தியடையும்வரை (அதை) அவர்கள் அருந்தி னார்கள்.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.



அத்தியாயம் : 45