2310. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ وَهَبْتُ لَكَ مِنْ نَفْسِي. فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا. قَالَ "" قَدْ زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம் : 9 ஒரு பெண் தனக்குத் திருமணம் செய்துவைக்கும் உரிமையைத் தலைவருக்கு வழங்குதல்
2310. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன் (மணக்கொடை இல்லாமல் என்னை மணந்துகொள்ளுங்கள்)” என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் ‘‘இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்!” என்று கேட்டார். ‘‘உம்மிடமிருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு இவரை நாம் மணமுடித்துவைத்தோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 40
2311. وَقَالَ عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ أَبُو عَمْرٍو حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ، فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ، وَقُلْتُ وَاللَّهِ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ إِنِّي مُحْتَاجٌ، وَعَلَىَّ عِيَالٌ، وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ. قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ "" أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ "". فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّهُ سَيَعُودُ. فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ، وَعَلَىَّ عِيَالٌ لاَ أَعُودُ، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا أَبَا هُرَيْرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً، فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ "" أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ "". فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَهَذَا آخِرُ ثَلاَثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لاَ تَعُودُ ثُمَّ تَعُودُ. قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا. قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الآيَةَ، فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ. فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ، يَنْفَعُنِي اللَّهُ بِهَا، فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ "" مَا هِيَ "". قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، وَكَانُوا أَحْرَصَ شَىْءٍ عَلَى الْخَيْرِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلاَثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ "". قَالَ لاَ. قَالَ "" ذَاكَ شَيْطَانٌ "".
பாடம் : 10 ஒருவர் மற்றொருவருக்குச் செயலுரிமை வழங்க, அந்த முகவர் ஒன்றைத் தவற விட்டுவிட்டால், செயலுரிமை வழங்கியவர் அதை அனுமதிக்கும்போது அது செல்லும்; குறிப்பிட்ட தவணைக்குக் கடனாக ஒன்றை முகவர் கொடுத்தாலும் (உரிமையாளர் சம்மதிக்கும்போது) செல்லும்.
2311. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் தர்மப் பொருட்களை (ஸதகத்துல் ஃபித்ர்) பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார்கள். அப்போது ஒருவன் (இரவில்) வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘நான் ஓர் ஏழை; எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, அவன்மீது இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; மீண்டும் அவன் வருவான்” என்றார்கள்.

‘மீண்டும் வருவான்’ என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காகக் காத்திருந்தேன். அவ்வாறே அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். ‘‘உன்னை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘என்னை விட்டுவிடு! நான் ஓர் ஏழை; எனக்குக் குடும்பம் இருக்கிறது; இனி நான் வர மாட்டேன்” என்றான். அவன்மேல் இரக்கப் பட்டு அவனை விட்டுவிட்டேன்.

விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்ட வன் என்ன செய்தான்?” என்று கேட்டார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். ‘‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்” என்றார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காக நான் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்; (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன் என்று நீ சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக இப்போது மீண்டும் வந்திருக்கிறாய்” என்று கூறினேன்.

அதற்கு அவன், ‘‘என்னை விட்டுவிடும்! உமக்கு அல்லாஹ் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருகிறேன்” என்றான். அதற்கு நான், ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். ‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்று தொடங்கும் ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; உம்மை ஷைத்தான் நெருங்கமாட்டான்” என்றான். அவனை நான் விட்டுவிட்டேன்.

விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்” என்றேன். ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு ஓதினால், விடியும்வரை அல்லாஹ்விவிடருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன்.

லிநபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக்கொண்டு செயல்படுத்துவ)தில் பேராவல் கொண்டவர்களாக இருந்தனர்லி அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும், உம்மிடம் அவன் உண்மையே சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசிவருகிறீர் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘தெரியாது” என்றேன். ‘‘அவன்தான் ஷைத்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 40
2312. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ ـ هُوَ ابْنُ سَلاَّمٍ ـ عَنْ يَحْيَى، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ بِلاَلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مِنْ أَيْنَ هَذَا "". قَالَ بِلاَلٌ كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيٌّ، فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ، لِنُطْعِمَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ "" أَوَّهْ أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا، لاَ تَفْعَلْ، وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ التَّمْرَ بِبَيْعٍ آخَرَ ثُمَّ اشْتَرِهِ "".
பாடம் : 11 முகவர் தவறான முறையில் ஒன்றை விற்றால், அந்த விற்பனை செல்லாது.
2312. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் ‘பர்னீ’ எனும் உயர்ரக பேரீச்சம்பழத்தைக் கொண்டுவந்தார்கள். அவர்களிடம் ‘‘இது எங்கிருந்து கிடைத் தது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார் கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ‘‘எம்மிடம் மட்டமான பேரீச்சம் பழம் இருந்தது; அதில் இரு ‘ஸாஉ’களைக் கொடுத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக ஒரு ஸாஉ வாங்கினேன்” என்றார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம்பழத்தை) வாங்க விரும்பினால், (உம்மிடம் இருக்கும்) பேரீச்சம்பழத்தைத் தனியாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக” என்றார்கள்.

அத்தியாயம் : 40
2313. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ فِي صَدَقَةِ عُمَرَ ـ رضى الله عنه ـ لَيْسَ عَلَى الْوَلِيِّ جُنَاحٌ أَنْ يَأْكُلَ وَيُؤْكِلَ صَدِيقًا {لَهُ} غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً، فَكَانَ ابْنُ عُمَرَ هُوَ يَلِي صَدَقَةَ عُمَرَ يُهْدِي لِلنَّاسِ مِنْ أَهْلِ مَكَّةَ، كَانَ يَنْزِلُ عَلَيْهِمْ.
பாடம் : 12 அறக்கொடை (வக்ஃப்) நிர்வாகத் திற்குச் செயலுரிமை வழங்குவதும் நிர்வாகி அதைச் செலவிடுவதும் அவர் முறையோடு தாமும் உண்டுதம் நண்பருக்கும் உணவளிப் பதும்
2313. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் செய்த அறக்கொடை தொடர்பாக அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘‘இதன் பொறுப்பாளர், செல்வத்தைக் கையாடல் செய்யாமல் தாம் உண்பதும் தம் தோழருக்கு உண்ணக்கொடுப்பதும் தவறில்லை” என்று (குறிப்பிடப்பட்டிருந்ததாகத்) தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் செய்த அறக் கொடைக்கு (அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்) இப்னு உமர் (ரலி) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். மக்காவில் அவர்கள் வழக்கமாக யாரிடம் தங்குவார்களோ அவர்களுக்கு அதிலிருந்து அன்பளிப்பு வழங்குவார்கள்.

அத்தியாயம் : 40
2314. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، وَأَبِي، هُرَيْرَةَ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَاغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ".
பாடம் : 13 குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்ற செயலுரிமை அளித்தல்
2314. 2315 ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உனைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றுவீராக” என்று கூறினார்கள்.7


அத்தியாயம் : 40
2316. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوِ ابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوا قَالَ فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ، فَضَرَبْنَاهُ بِالنِّعَالِ وَالْجَرِيدِ.
பாடம் : 13 குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்ற செயலுரிமை அளித்தல்
2316. உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

போதையில் இருந்த ‘நுஐமான்’ அல்லது ‘அவருடைய மகன்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். நாங்கள் காலணிகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்.

அத்தியாயம் : 40
2317. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ قَالَتْ، عَائِشَةُ ـ رضى الله عنها ـ أَنَا فَتَلْتُ، قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَىْءٌ أَحَلَّهُ اللَّهُ لَهُ حَتَّى نُحِرَ الْهَدْىُ.
பாடம் : 14 குர்பானி ஒட்டகங்களைக் கவனித் துக்கொள்ள செயலுரிமை வழங்குதல்
2317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி (பலி) கொடுப்பதற்காக அனுப்பிவைத்த ஒட்டகங்களின் அடையாள மாலைகளை என் கைகளா லேயே நான் திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) உடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (மக்காவில்) பலிப்பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் அவர்கள்மீது விலக்கப்படவில்லை.

அத்தியாயம் : 40
2318. حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بِيْرُ حَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ فَلَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بِيْرُ حَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ شِئْتَ، فَقَالَ "" بَخٍ، ذَلِكَ مَالٌ رَائِحٌ، ذَلِكَ مَالٌ رَائِحٌ. قَدْ سَمِعْتُ مَا قُلْتَ فِيهَا، وَأَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". قَالَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. تَابَعَهُ إِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ. وَقَالَ رَوْحٌ عَنْ مَالِكٍ رَابِحٌ.
பாடம் : 15 ஒருவர் தம் பகராளியிடம், உமக்கு அல்லாஹ் காட்டியபடி இ(ச் செல்வத்)தை வைத்து(ச் செலவிட்டு)க்கொள் என்று கூற, பகராளியும் நீங்கள் சொல்வதைச் செவியுற்றேன் என்று கூறி (அதன்படி செய லாற்றி)னால் (அது செல்லும்).
2318. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே செல்வராக இருந்தார்கள். அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு சென்று, அங்குள்ள சுவைநீரை அருந்துவது வழக்கம்.

இந்நிலையில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் தனது வேதத்தில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒரு போதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” என்று கூறுகின்றான்.

என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ எனும் இந்தத் தோட்டமேயாகும். (இனிமேல்,) இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பிய விதத்தில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது தொடர்பாக நீர் கூறியதை நான் செவியுற்றேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாக) கருதுகிறேன்” என்றார்கள்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (நன்மை கிடைத்துவிட்ட லிறராயிஹ்’ என்பதற்குப் பதிலாக) ‘இலாபம் தரும்’ (ராபிஹ்) என இடம்பெற்றுள்ளது.8

அத்தியாயம் : 40
2319. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَازِنُ الأَمِينُ الَّذِي يُنْفِقُ ـ وَرُبَّمَا قَالَ الَّذِي يُعْطِي ـ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا، طَيِّبٌ نَفْسُهُ، إِلَى الَّذِي أُمِرَ بِهِ، أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ "".
பாடம் : 16 கருவூலம் போன்றவற்றில் நம்பிக்கையாளருக்குச் செயலுரிமை வழங்கல்
2319. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்குச் செலவிடக்கூடிய லிஅல்லது அதற்காக வழங்கக்கூடியலி நேர்மையான காசாளர், அதை முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் செலவிடும்போது தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

அத்தியாயம் : 40

2320. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ "". وَقَالَ لَنَا مُسْلِمٌ حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1 பயிரிடல், மரம் நடல் ஆகியவற்றின் சிறப்பு; அவற்றிலிருந்து உயிரினங் கள் உண்பதால். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்த துண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டி ருப்போம். (56:63லி65)
2320. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 41
2321. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ،، قَالَ ـ وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الْحَرْثِ، فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَدْخُلُ هَذَا بَيْتَ قَوْمٍ إِلاَّ أُدْخِلَهُ الذُّلُّ "". قَالَ أَبُو عَبْد اللَّهِ وَاسْمُ أَبِي أُمَامَةَ صُدَيُّ بْنُ عَجْلَانَ
பாடம் : 2 வேளாண் கருவிகளை (தவறாக)ப் பயன்படுத்துவது, (தொழில்களுக்கு) விதிக்கப்பட்டுள்ள எல்லையை மீறுவது ஆகியவற்றால் விளையும் தீமைகளைத் தவிர்த்தல்
2321. முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், ‘ யிஇந்தக் கருவி ஒரு சமுதாயத்தாரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச்செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.2

அபூஉமாமா (ரலி) அவர்களின் இயற் பெயர் ஸுதை பின் அஜ்லான் என்ப தாகும்.

அத்தியாயம் : 41
2322. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ، إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ "". قَالَ ابْنُ سِيرِينَ وَأَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِلاَّ كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدٍ "". وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ "".
பாடம் : 3 விவசாயப் பண்ணையைப் பாதுகாத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்.)
2322. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவுக்கு (அவற்றின் நன்மை) குறைந்துபோய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய்விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.3

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:

‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடு வதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக, அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 41
2323. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ ـ رَجُلاً مِنْ أَزْدِ شَنُوءَةَ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ "". قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ.
பாடம் : 3 விவசாயப் பண்ணையைப் பாதுகாத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்.)
2323. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ யிவிவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ பாதுகாக்கும் தேவை எதுவும் இன்றி எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவுக்கு (நன்மை) குறைந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று சொன்னார்கள்.

நான், ‘‘இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?” என்று வினவினேன். சுஃப்யான் பின் அபீ ஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 41
2324. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ عَلَى بَقَرَةٍ الْتَفَتَتْ إِلَيْهِ. فَقَالَتْ لَمْ أُخْلَقْ لِهَذَا، خُلِقْتُ لِلْحِرَاثَةِ، قَالَ آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَخَذَ الذِّئْبُ شَاةً فَتَبِعَهَا الرَّاعِي، فَقَالَ الذِّئْبُ مَنْ لَهَا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لاَ رَاعِيَ لَهَا غَيْرِي. قَالَ آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ "". قَالَ أَبُو سَلَمَةَ مَا هُمَا يَوْمَئِذٍ فِي الْقَوْمِ.
பாடம் : 4 மாடுகளை உழுவதற்காகப் பயன் படுத்துதல்
2324. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்துகொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, யிநான் இதற்காக (சுமை சுமந்துசெல்வதற்காக) படைக்கப்படவில்லை; நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒருமுறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, யிகொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக்கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்கமாட்டாú” என்று கூறியது. நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று கூறினார்கள்.

பிறகு, (இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூசலமா (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 41
2325. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ. قَالَ "" لاَ "". فَقَالُوا تَكْفُونَا الْمَئُونَةَ وَنُشْرِكُكُمْ فِي الثَّمَرَةِ. قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا.
பாடம் : 5 ‘‘என் பேரீச்ச மரங்களை அல்லது மற்ற மரங்களைக் கவனித்துக் கொள்; அதன் விளைச்சலில் என்னுடன் பங்கு பெற்றுக்கொள்” என்று ஒருவர் கூறினால் (அது செல்லும்.)
2325. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவாசிகளான)  அன்சாரி தோழர் கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எங்களுக் கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்கும் இடையே எங்கள் பேரீச்சமரங்களைப் பங்கிட்டு விடுங்கள்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள்.



இதைக் கேட்ட அன்சாரி தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, ‘‘அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்குப் பதிலாக நீங்கள் பராமரித்துவாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக்கொள்கிறோம்” என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், ‘‘செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)” என்று கூறினார்கள்.4

அத்தியாயம் : 41
2326. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ، وَهْىَ الْبُوَيْرَةُ، وَلَهَا يَقُولُ حَسَّانُ وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرٌ.
பாடம் : 6 மரத்தையும் பேரீச்ச மரங்களையும் வெட்டுதல் அனஸ் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல் கட்டும்போது) பேரீச்ச மரங்களை வெட்டும்படி கட்டளையிட்டார்கள். அதன்படி அவை வெட்டப்பட்ட”’ என்று கூறினார்கள்.5
2326. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத் தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் (இன்னும் பல மரங்களை) வெட்டியும்விட்டார்கள். இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான் ‘அல்புவைரா’ என்று கூறுவர்.

இதைக் குறிப்பிட்டுத்தான் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘புவைராவின் நெருப்பு பரவிக்கொண்டிருக்க, அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல் (இயலாமையுடன்) பார்த்துக்கொண்டிருப்பது யிபனூ லுஅய்’ குலத்து (குறைஷி)த் தலைவர்களுக்கு எளிதாகிவிட்டது” என்று (பரிகாசம் செய்து) கவிதை பாடுகிறார்கள்.6

அத்தியாயம் : 41
2327. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ الأَنْصَارِيِّ، سَمِعَ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ كُنَّا أَكْثَرَ أَهْلِ الْمَدِينَةِ مُزْدَرَعًا، كُنَّا نُكْرِي الأَرْضَ بِالنَّاحِيَةِ مِنْهَا مُسَمًّى لِسَيِّدِ الأَرْضِ، قَالَ فَمِمَّا يُصَابُ ذَلِكَ وَتَسْلَمُ الأَرْضُ، وَمِمَّا يُصَابُ الأَرْضُ وَيَسْلَمُ ذَلِكَ، فَنُهِينَا، وَأَمَّا الذَّهَبُ وَالْوَرِقُ فَلَمْ يَكُنْ يَوْمَئِذٍ.
பாடம் : 7
2327. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) யிநிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் உரிமையாளருக்குரியது’ என்ற நிபந்தனை யுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (நோய்களாலும் பூச்சிகளாலும்) பாதிக்கப்பட்டுவிடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப் பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக்கொள்ளும்.

இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக்கொள்ளும். ஆகவே, நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டா மென்று தடை செய்யப்பட்டோம். அந் நாட்களில் தங்கமும் வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப் படும் வழக்கம்) இருக்கவில்லை.

அத்தியாயம் : 41
2328. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَامَلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ، فَكَانَ يُعْطِي أَزْوَاجَهُ مِائَةَ وَسْقٍ ثَمَانُونَ وَسْقَ تَمْرٍ وَعِشْرُونَ وَسْقَ شَعِيرٍ، فَقَسَمَ عُمَرُ خَيْبَرَ، فَخَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يُقْطِعَ لَهُنَّ مِنَ الْمَاءِ وَالأَرْضِ، أَوْ يُمْضِيَ لَهُنَّ، فَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الأَرْضَ وَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الْوَسْقَ، وَكَانَتْ عَائِشَةُ اخْتَارَتِ الأَرْضَ.
பாடம் : 8 விளைச்சலில் ஒரு பாதிக்கு, அல்லது அதைவிடக் கூடுதல் குறைவான பாகத்திற்கு குத்தகை ஒப்பந்தம் செய்வது அபூஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தாயகம் துறந்து வந்த முஹாஜிர்கள் (மக்காவாசிகள்) அனைவருமே விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கையோ நான்கில் ஒரு பங்கையோ நில உரிமையாளரிடமிருந்து (தம் உழைப்புக்கான ஊதியமாகப்) பெற்றுக்கொள்வது என்னும் நிபந்தனையின் பேரில் விவசாயம் செய்துவந்தார்கள். அலீ, சஅத் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோரும் உமர் பின் அப்தில் அஸீஸ், காசிம், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), அபூபக்ரின் குடும்பத்தார், உமரின் குடும்பத்தார், அலீயின் குடும்பத்தார் மற்றும் இப்னு சீரீன் (ரஹ்) ஆகியோரும்கூட (இப்படி யிவிளைச்சலின் ஒரு பங்கு ஊதியமாக வழங்கப்படும்’ என்னும் நிபந்தனையின் பேரில்தான்) குத்தகை முறையிலான விவசாயம் செய்துவந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (என் தந்தையின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் பின் யஸீத் அவர்களு டன் விவசாயத்தில் கூட்டாளியாக இருந்தேன். ‘‘தம் தரப்பிலிருந்து விதைகளைக் கொடுத்தால் விளைச்சலில் பாதியைத் தமக்குக் கொடுத்துவிட வேண்டும்; விவசாயியே விதைகளைக் கொண்டுவந்து விதைத்தால் அந்த விவசாயிக்கு விளைச்சலின் இன்ன பங்கு (பாதிக்கும் மேல்) கிடைக்கும்” என்னும் நிபந்தனையின் பேரில், உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தார்கள். ‘‘நிலம் ஒருவருக்குச் சொந்தமாய் இருந்து நில உரிமையாளர், குத்தகைக்கு எடுத்தவர் இருவருமே அதற்காகச்  செலவழித்து, கிடைக்கின்ற விளைச்சலில் இருவரும் பங்கு போட்டுக்கொள்வதில் தவறில்லை” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளார்கள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘பருத்தி விளைச்சலின்போது, ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொள்வது என்னும் நிபந்தனையின் பேரில் பருத்தி விவசாயத் திற்காக, குத்தகை ஒப்பந்தம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை” என்று கூறினார்கள். ‘‘நெய்த துணியின் மூன்றில் ஒரு பங்கையோ, நான்கில் ஒரு பங்கையோ அல்லது அது போன்று வேறெந்தப் பங்கையுமோ நெசவுக் கூலியாக நெசவாளிக்குக் கொடுப்பது என்ற அடிப்படையில் துணி நெய்வதற்கான பாவு இழைகளை நெசவாளிக்குக் கொடுப்பதில் தவறில்லை” என்று இப்ராஹீம், இப்னு சீரீன், அதாஉ, ஹகம், ஸுஹ்ரீ, கதாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். ‘‘(சுமை சுமக்கும்) கால்நடைகளை, அவை சுமக்கின்ற (உற்பத்திப்) பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை அல்லது நான்கில் ஒரு பங்கை அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிடுவது என்னும் நிபந்தனையின் பேரில், ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக் குக் குத்தகைக்கு எடுத்துக்கொள்வதில் தவறில்லை” என்று மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2328. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனை யின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற் காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி யளித்து) ஒப்பந்தம் செய்துகொண் டார்கள்.

இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிலிருந்து, நபி (ஸல்) அவர்கள், தம் துணைவியருக்கு எண்பது யிவஸ்க்’குகள் பேரீச்சம்பழமும் இருபது யிவஸ்க்’குகள் தொலிநீக்கப்படாத கோதுமையும் ஆக, நூறு யிவஸ்க்’குகள் கொடுத்துவந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக வந்தபோது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக்கொள்வது, அல்லது முன்பு நடைபெற்று வந்த வழக்கத்தின்படியே, நூறு யிவஸ்க்’குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக்கொள்வது என்று இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றுக் கொண்டனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) யிவஸ்க்’குகளையே தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

அத்தியாயம் : 41
2329. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ عَامَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ.
பாடம் : 9 நிலக் குத்தகை ஒப்பந்தத்தில் (இவ்வளவு காலத்திற்கு என வரையறுத்து) வருடங்களைக் குறிப்பிடவில்லையென்றாலும் (ஒப்பந்தம் செல்லும்.)
2329. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் ‘அவற்றில் விளையும் (பழங்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றின்) விளைச்சலில் பாதியை (இஸ்லாமிய அரசுக்குக்) கொடுத்து விட வேண்டும்’ என்னும் நிபந்தனையின் பேரில் கைபர் வாழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.7

அத்தியாயம் : 41