2277. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ حَجَمَ أَبُو طَيْبَةَ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَأَمَرَ لَهُ بِصَاعٍ أَوْ صَاعَيْنِ مِنْ طَعَامٍ، وَكَلَّمَ مَوَالِيَهُ فَخَفَّفَ عَنْ غَلَّتِهِ أَوْ ضَرِيبَتِهِ.
பாடம் : 17 ஆண் அடிமையின் வரி(யைக் குறைப்பது) மற்றும் அடிமைப் பெண்களின் வரி (எவ்வழியில் வந்தது என்பது) குறித்துத் தெரிந்துகொள்வது12
2277. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார்கள்; அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ அல்லது இரண்டு ‘ஸாஉ’கள் உணவு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவருடைய உரிமையாளர்களிடம் பேசி, அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத் தார்கள்.

அத்தியாயம் : 37
2278. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ.
பாடம் : 18 குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி
2278. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கு, அவருக்கான கூலியைக் கொடுத்தார்கள்.


அத்தியாயம் : 37
2279. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ، وَلَوْ عَلِمَ كَرَاهِيَةً لَمْ يُعْطِهِ.
பாடம் : 18 குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி
2279. இப்னு அப்பாஸ் அவர்கள் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கான கூலியை அவரிடம் கொடுத்தார்கள். அ(வ்வாறு குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவ)தை வெறுக்கத் தக்கதாகக் கருதியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் (கூலி) கொடுத்திருக்கமாட்டார்கள்.13


அத்தியாயம் : 37
2280. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْتَجِمُ، وَلَمْ يَكُنْ يَظْلِمُ أَحَدًا أَجْرَهُ.
பாடம் : 18 குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி
2280. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்; எவரது கூலியிலும் நபி (ஸல்) அவர்கள் அநீதி இழைக்கவில்லை.

அத்தியாயம் : 37
2281. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم غُلاَمًا حَجَّامًا فَحَجَمَهُ، وَأَمَرَ لَهُ بِصَاعٍ أَوْ صَاعَيْنِ، أَوْ مُدٍّ أَوْ مُدَّيْنِ، وَكَلَّمَ فِيهِ فَخُفِّفَ مِنْ ضَرِيبَتِهِ.
பாடம் : 19 அடிமைகளின் உரிமையாளர்களி டம் பேசி, அடிமைகள் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தல்
2281. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுக்கும் ஓர் அடிமையை அழைத்துவரச் செய்து குருதி உறிஞ்சி எடுத்துக்கொண் டார்கள். அவருக்காக ஒரு ‘ஸாஉ’ அல்லது இரண்டு ‘ஸாஉ’கள், ஒரு ‘முத்’ அல்லது இரண்டு ‘முத்’துகள் (அளவுக்கு உணவு) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர் தொடர்பாகப் பேசி அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்.

அத்தியாயம் : 37
2282. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ.
பாடம் : 20 விபசாரிகள் மற்றும் (விபசாரம் செய்யும்) அடிமைப் பெண்களின் வருமானம் ஒப்பாரி வைப்பவளுக்கும் பாடகி களுக்கும் கூலி கொடுப்பதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தங்கள் கற்பைப் பேணிக்கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, லிஅற்பமான உலக வாழ்க்கையைத் தேடிக் கொள்வதற்காகலி விபசாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள்! அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னரும், (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். (24:33)
2282. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாய்விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனுக்குரிய தட்சிணை ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.14


அத்தியாயம் : 37
2283. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ كَسْبِ الإِمَاءِ.
பாடம் : 20 விபசாரிகள் மற்றும் (விபசாரம் செய்யும்) அடிமைப் பெண்களின் வருமானம் ஒப்பாரி வைப்பவளுக்கும் பாடகி களுக்கும் கூலி கொடுப்பதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தங்கள் கற்பைப் பேணிக்கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, லிஅற்பமான உலக வாழ்க்கையைத் தேடிக் கொள்வதற்காகலி விபசாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள்! அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னரும், (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். (24:33)
2283. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடிமைப் பெண்கள் (தவறான வழியில்) பொருளீட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 37
2284. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ عَسْبِ الْفَحْلِ.
பாடம் : 21 பொலிகாளை புணர்ச்சிக்குக் கட்டணம் பெறுதல்
2284. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பொலிகாளை புணர்ச்சிக்குக் கட்டணம் பெறுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.15

அத்தியாயம் : 37
2285. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا، وَأَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ الْمَزَارِعَ كَانَتْ تُكْرَى عَلَى شَىْءٍ سَمَّاهُ نَافِعٌ لاَ أَحْفَظُهُ.
பாடம் : 22 ஒருவர் ஒரு நிலத்தை வாடகைக்கு வாங்கியபின், வாடகைக்கு விட்ட வரோ பெற்றவரோ இறந்து விட்டால்...? ‘‘தவணை முடியும்வரை வாடகைக்குப் பெற்றவரை வெளியேற்றும் உரிமை வாடகைக்கு விட்(டுவிட்டு, இறந்துவிட்)டவரின் குடும்பத்தாருக்கு இல்லை” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ‘‘வாடகை ஒப்பந்தம், அதற்குரிய தவணை முடியும்வரை நீடிக்கும்” என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), இயாஸ் பின் முஆவியா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: விளைச்சலில் பாதி உழுபவருக்கு என்ற ஒப்பந்தப்படி, நபி (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை (யூதர்களுக்கு)க் கொடுத்தார்கள். இந்த ஒப்பந்தம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் தொடக் கத்திலும் நடைமுறையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்களோ, உமர் (ரலி) அவர்களோ வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படவில்லை.
2285. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விளைச்சலில் பாதி தரப்படும் என்ற அடிப்படையில், கைபரின் நிலங்களில் உழுது பயிரிட்டுக்கொள்வதற்காக, யூதர்களுக்கு அந்நிலங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

‘‘(நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) விளைநிலங்கள், அவற்றின் விளைச்சலில் ஒரு பாகத்தைப் பெற்றுக்கொண்டு வாடகைக்கு (குத்தகைக்கு) கொடுக்கப்பட்டுவந்த”’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள். அந்தப் பாகம் இவ்வளவு என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள்; நான்தான் அதை நினைவில் வைத்திருக் கவில்லை என்று (அறிவிப்பாளர்) ஜுவைரியா பின் அஸ்மா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 37
2286. وَأَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ حَدَّثَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ. وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ.
பாடம் : 22 ஒருவர் ஒரு நிலத்தை வாடகைக்கு வாங்கியபின், வாடகைக்கு விட்ட வரோ பெற்றவரோ இறந்து விட்டால்...? ‘‘தவணை முடியும்வரை வாடகைக்குப் பெற்றவரை வெளியேற்றும் உரிமை வாடகைக்கு விட்(டுவிட்டு, இறந்துவிட்)டவரின் குடும்பத்தாருக்கு இல்லை” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ‘‘வாடகை ஒப்பந்தம், அதற்குரிய தவணை முடியும்வரை நீடிக்கும்” என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), இயாஸ் பின் முஆவியா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: விளைச்சலில் பாதி உழுபவருக்கு என்ற ஒப்பந்தப்படி, நபி (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை (யூதர்களுக்கு)க் கொடுத்தார்கள். இந்த ஒப்பந்தம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் தொடக் கத்திலும் நடைமுறையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்களோ, உமர் (ரலி) அவர்களோ வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படவில்லை.
2286. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.16

‘‘முடிவில் கைபரிலிருந்து யூதர்களை உமர் (ரலி) அவர்கள் வெளியேற்றினார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 37

2287. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ "".
பாடம் : 1 கடன் மாற்றிவிடப்பட்ட பின், கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரிடம் சென்று கேட்கலாமா?2 ‘‘கடன் பொறுப்பை ஏற்றவர் கடன் மாற்றப்பட்ட நாளில் செல்வராக இருந் திருந்தால், கடன் மாற்றல் செல்லுபடியாகி விடும் (இனி, கடன் வாங்கியவரிடம் கேட்கலாகாது)” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறு கின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இரு பங்காளிகள், அல்லது வாரிசு காரர்கள் ஒவ்வொருவரும் (தத்தமது பங்கைப் பெற்றுக்கொண்டு அடுத்தவரின் பங்கிலிருந்து) விலகிக்கொள்ள வேண்டும். ஒருவர் இருப்பை எடுத்துக்கொண்டார்; மற்றொருவர் வரவேண்டிய கடனை எடுத்துக்கொண்டார். (சம்மதத்தின்பேரில் இது நடந்தபின்) இருவரில் ஒருவருக்கு இழப்பு நேர்ந்தால், மற்றவரிடம் சென்று எதையும் கேட்கக் கூடாது.3
2287. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தர் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால், அதை அவர் ஏற்கட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 38
2288. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ ذَكْوَانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، وَمَنْ أُتْبِعَ عَلَى مَلِيٍّ فَلْيَتَّبِعْ "".
பாடம் : 2 ஒருவர் தாம் செலுத்த வேண்டிய கடனை (தமக்குக் கடன் கொடுக்க வேண்டிய) வசதியானவர்மீது மாற்றிவிட்டால், அதை அவர் மறுக் கக் கூடாது.
2288. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

செல்வந்தர் (தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால் அவர் ஒப்புக் கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 38
2289. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أُتِيَ بِجَنَازَةٍ، فَقَالُوا صَلِّ عَلَيْهَا. فَقَالَ "" هَلْ عَلَيْهِ دَيْنٌ "". قَالُوا لاَ. قَالَ "" فَهَلْ تَرَكَ شَيْئًا "". قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيْهَا. قَالَ "" هَلْ عَلَيْهِ دَيْنٌ "". قِيلَ نَعَمْ. قَالَ "" فَهَلْ تَرَكَ شَيْئًا "". قَالُوا ثَلاَثَةَ دَنَانِيرَ. فَصَلَّى عَلَيْهَا، ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ، فَقَالُوا صَلِّ عَلَيْهَا. قَالَ "" هَلْ تَرَكَ شَيْئًا "". قَالُوا لاَ. قَالَ "" فَهَلْ عَلَيْهِ دَيْنٌ "". قَالُوا ثَلاَثَةُ دَنَانِيرَ. قَالَ "" صَلُّوا عَلَى صَاحِبِكُمْ "". قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ، وَعَلَىَّ دَيْنُهُ. فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 3 இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப் பேற்றால் அது செல்லும்.
2289. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள், ‘‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் கடனாளியா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், யிஇல்லை’ என்றனர். ‘‘ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, யிஇல்லை’ என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இவர் கடனாளியா?” என்று கேட்டபோது யிஆம்’ எனக் கூறப்பட்டது. ‘‘இவர் ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது யிமூன்று பொற்காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்’ என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘‘நீங்கள் தொழுகை நடத்துங் கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். ‘‘இவர் எதையேனும் விட்டுச்சென்றிருக்கி றாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது யிஇல்லை’ என்றனர். ‘‘இவர் கடனாளியா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, ‘‘மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று நபித்தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்று கூறிவிட்டார்கள்.

அப்போது அபூக(த்)தாதா (ரலி) அவர்கள் ‘‘இவரது கடனுக்கு நான் பொறுப்பு; அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

அத்தியாயம் : 38

2290. وَقَالَ أَبُو الزِّنَادِ عَنْ مُحَمَّدِ بْنِ حَمْزَةَ بْنِ عَمْرٍو الأَسْلَمِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ مُصَدِّقًا، فَوَقَعَ رَجُلٌ عَلَى جَارِيَةِ امْرَأَتِهِ، فَأَخَذَ حَمْزَةُ مِنَ الرَّجُلِ كَفِيلاً حَتَّى قَدِمَ عَلَى عُمَرَ، وَكَانَ عُمَرُ قَدْ جَلَدَهُ مِائَةَ جَلْدَةٍ، فَصَدَّقَهُمْ، وَعَذَرَهُ بِالْجَهَالَةِ. وَقَالَ جَرِيرٌ وَالأَشْعَثُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فِي الْمُرْتَدِّينَ اسْتَتِبْهُمْ، وَكَفِّلْهُمْ. فَتَابُوا وَكَفَلَهُمْ عَشَائِرُهُمْ. وَقَالَ حَمَّادٌ إِذَا تَكَفَّلَ بِنَفْسٍ فَمَاتَ فَلاَ شَىْءَ عَلَيْهِ. وَقَالَ الْحَكَمُ يَضْمَنُ.
பாடம் : 1 பணக் கடன் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் கடன்களில் மனிதர் களையோ பொருட்களையோ கொணர்வதாகப் பிணையேற்றல்2
2290. ஹம்ஸா பின் அம்ர் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலகராக அனுப்பினார்கள். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபசாரம் செய்து விட்டார். உடனே நான் அந்த மனிதருக் காகச் சில பிணையாட்களைப் பிடித்து வைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன்.

பிணையாட்கள் கூறியதை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவருக்கு (குற்றவாளிக்கு) உமர் (ரலி) அவர்கள் அதற்கு முன்பே நூறு சாட்டையடி வழங்கியிருந்தார்கள். (மனைவியின் அடிமைப் பெண்ணை கணவன் உடலுறவு கொள்ளலாகாது என்ற சட்டத்தை) அறியாமல் அவர் குற்றம் செய்த காரணத்தை ஏற்று, (கல்லெறியும் தண்டனை வழங்காமல்) அவரை விட்டுவிட்டார்கள்.3

(முசைலிமா என்பவனை இறைத்தூதராக ஏற்று) இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள் தொடர்பாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) ஆகிய இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ‘‘இஸ்லாத்தை விட்டுச் சென்றவர் களை பாவமன்னிப்புக் கோரச் சொல்லுங் கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள்” என்று கூறினர். அவ்வாறே அவர்கள், பாவமன்னிப்புக் கோரினர். அவர்களின் உறவினர்கள் அவர்களுக்குப் பிணையேற்றனர்.

‘‘ஓர் ஆளுக்குப் பிணையேற்ற ஒருவர் இறந்துவிட்டால், அவர்மீது பொறுப்பில்லை (அவருடைய வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது)” என்று ஹம்மாத் பின் அபீ சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.

பிணையேற்றவர் இறந்துவிட்டாலும் அவரது பொறுப்பு நீங்காது என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 39
2291. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَقَالَ ائْتِنِي بِالشُّهَدَاءِ أُشْهِدُهُمْ. فَقَالَ كَفَى بِاللَّهِ شَهِيدًا. قَالَ فَأْتِنِي بِالْكَفِيلِ. قَالَ كَفَى بِاللَّهِ كَفِيلاً. قَالَ صَدَقْتَ. فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى، فَخَرَجَ فِي الْبَحْرِ، فَقَضَى حَاجَتَهُ، ثُمَّ الْتَمَسَ مَرْكَبًا يَرْكَبُهَا، يَقْدَمُ عَلَيْهِ لِلأَجَلِ الَّذِي أَجَّلَهُ، فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةً، فَنَقَرَهَا فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، وَصَحِيفَةً مِنْهُ إِلَى صَاحِبِهِ، ثُمَّ زَجَّجَ مَوْضِعَهَا، ثُمَّ أَتَى بِهَا إِلَى الْبَحْرِ، فَقَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنِّي كُنْتُ تَسَلَّفْتُ فُلاَنًا أَلْفَ دِينَارٍ، فَسَأَلَنِي كَفِيلاً، فَقُلْتُ كَفَى بِاللَّهِ كَفِيلاً، فَرَضِيَ بِكَ، وَسَأَلَنِي شَهِيدًا، فَقُلْتُ كَفَى بِاللَّهِ شَهِيدًا، فَرَضِيَ بِكَ، وَأَنِّي جَهَدْتُ أَنْ أَجِدَ مَرْكَبًا، أَبْعَثُ إِلَيْهِ الَّذِي لَهُ فَلَمْ أَقْدِرْ، وَإِنِّي أَسْتَوْدِعُكَهَا. فَرَمَى بِهَا فِي الْبَحْرِ حَتَّى وَلَجَتْ فِيهِ، ثُمَّ انْصَرَفَ، وَهْوَ فِي ذَلِكَ يَلْتَمِسُ مَرْكَبًا، يَخْرُجُ إِلَى بَلَدِهِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، يَنْظُرُ لَعَلَّ مَرْكَبًا قَدْ جَاءَ بِمَالِهِ، فَإِذَا بِالْخَشَبَةِ الَّتِي فِيهَا الْمَالُ، فَأَخَذَهَا لأَهْلِهِ حَطَبًا، فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ وَالصَّحِيفَةَ، ثُمَّ قَدِمَ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَأَتَى بِالأَلْفِ دِينَارٍ، فَقَالَ وَاللَّهِ مَا زِلْتُ جَاهِدًا فِي طَلَبِ مَرْكَبٍ لآتِيَكَ بِمَالِكَ، فَمَا وَجَدْتُ مَرْكَبًا قَبْلَ الَّذِي أَتَيْتُ فِيهِ. قَالَ هَلْ كُنْتَ بَعَثْتَ إِلَىَّ بِشَىْءٍ قَالَ أُخْبِرُكَ أَنِّي لَمْ أَجِدْ مَرْكَبًا قَبْلَ الَّذِي جِئْتُ فِيهِ. قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ أَدَّى عَنْكَ الَّذِي بَعَثْتَ فِي الْخَشَبَةِ فَانْصَرِفْ بِالأَلْفِ الدِّينَارِ رَاشِدًا "".
பாடம் : 1 பணக் கடன் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் கடன்களில் மனிதர் களையோ பொருட்களையோ கொணர்வதாகப் பிணையேற்றல்2
2291. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், ‘‘சாட்சிகளை என்னிடம் கொண்டுவா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்”என்றார். கடன் கேட்டவர், யிசாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்றார். ‘‘அப்படியானால் பிணையேற்கும் ஒருவரை என்னிடம் கொண்டுவா” என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்கு கடன் கேட்டவர், யிபிணையேற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர், ‘நீர் கூறுவதும் உண்மைதான்’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்தார்.

கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும் அவருக்குக் கிடைக்க வில்லை. உடனே ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.

பிறகு கடலுக்கு வந்து, ‘‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் என்னிடம் பிணையேற்பவர் வேண்டும் என்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணையேற்கப் போதுமானவன்’ என்றேன்; அவர் உன்னை(ப் பிணையாளியாக) ஏற்றுக்கொண்டார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; யிசாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினேன்; அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக்கொண்டார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பிவிடு வதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதை யெல்லாம் நீ அறிவாய். எனவே, இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்” என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றது.

பிறகு அவர் திரும்பிவிட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக்கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தமது செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்டவாறு புறப்பட்டார். அப்போது, பணம் உள்ள அந்த மரக்கட்டையைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, (ஒரு நாள்) கடன் வாங்கியவர் ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமது பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன்; சற்று முன்புதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

அதற்கு கடன் கொடுத்தவர், ‘‘எனக்கு எதையேனும் அனுப்பிவைத்தீரா?” என்று கேட்டார். கடன் வாங்கியவர், ‘‘வாகனம் கிடைக்காமல் சற்று முன்புதான் வந்திருக்கி றேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!” என்று கூறினார். கடன் கொடுத்தவர், ‘‘நீர் மரக் கட்டையில் வைத்து அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்துவிட்டான்; எனவே, இந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக!” என்று கூறினார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 39
2292. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِدْرِيسَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما – {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} قَالَ وَرَثَةً {وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ} قَالَ كَانَ الْمُهَاجِرُونَ لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ يَرِثُ الْمُهَاجِرُ الأَنْصَارِيَّ دُونَ ذَوِي رَحِمِهِ لِلأُخُوَّةِ الَّتِي آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمْ، فَلَمَّا نَزَلَتْ {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} نَسَخَتْ، ثُمَّ قَالَ {وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ } إِلاَّ النَّصْرَ وَالرِّفَادَةَ وَالنَّصِيحَةَ، وَقَدْ ذَهَبَ الْمِيرَاثُ وَيُوصِي لَهُ.
பாடம் : 2 ‘‘உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனவோ அவர்களுக்கு, அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம்
2292. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு, அவருடைய இரத்த உறவினர்கள் அன்றி முஹாஜிர் (நண்பரே) வாரிசாகிவந்தார். முஹாஜிர்லிஅன்சாரிக்கிடையே நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய (இஸ்லாமிய) சகோதரத்துவமே இதற்குக் காரணம்.

பிறகு ‘‘பெற்றோரும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)துக்கு (உரிய) வாரிசுகளை ஒவ்வொருவருக்கும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனவோ அவர்களுக்கு, அவர் களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது இது மாற்றப்பட்டது.

உடன்படிக்கை செய்துகொண்டவர் களுக்கிடையே வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்கல், அறிவுரை கூறல் ஆகியவைதான் எஞ்சியுள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக மரண சாசனம் (வேண்டுமானால்) செய்யலாம்.


அத்தியாயம் : 39
2293. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَآخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ.
பாடம் : 2 ‘‘உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனவோ அவர்களுக்கு, அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம்
2293. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (புலம்பெயர்ந்து மக்காவிலிருந்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தபோது, அவருக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி னார்கள்.4


அத்தியாயம் : 39
2294. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسٍ رضى الله عنه أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ "". فَقَالَ قَدْ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي.
பாடம் : 2 ‘‘உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனவோ அவர்களுக்கு, அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம்
2294. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களி டம், ‘‘இஸ்லாத்தில் (மனிதர்களாக எற்படுத்திக்கொள்கிற வாரிசாகிக்கொள்ளும் ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி உங்களுக்குச் கிடைத்ததா?” என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘எனது வீட்டில்வைத்து முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் நட்புறவு முறையை ஏற்படுத்தி னார்களே!” என்று பதிலளித்தார்கள்.5

அத்தியாயம் : 39
2295. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِجَنَازَةٍ، لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ "" هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ "". قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ "" هَلْ عَلَيْهِ مَنْ دَيْنٍ "". قَالُوا نَعَمْ. قَالَ "" صَلُّوا عَلَى صَاحِبِكُمْ "". قَالَ أَبُو قَتَادَةَ عَلَىَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ. فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 3 இறந்தவரின் கடனுக்குப் பொறுப் பேற்றுக்கொண்டவர் அந்தப் பொறுப்பில் இருந்து பிறழக் கூடாது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
2295. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறுதித்தொழுகை நடத்துவதற்காக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு வரப்பட்டது. ‘‘இவருக்குக் கடன் உண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யிஇல்லை’ என்ற னர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அப்போது ‘‘இவருக்குக் கடன் உண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் யிஆம்!› என்றனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்!” என்றார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு” என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி னார்கள்.6


அத்தியாயம் : 39
2296. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، سَمِعَ مُحَمَّدَ بْنَ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهم ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ، قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "". فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا. فَأَتَيْتُهُ، فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِي كَذَا وَكَذَا، فَحَثَى لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ، وَقَالَ خُذْ مِثْلَيْهَا.
பாடம் : 3 இறந்தவரின் கடனுக்குப் பொறுப் பேற்றுக்கொண்டவர் அந்தப் பொறுப்பில் இருந்து பிறழக் கூடாது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
2296. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார் கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைன் நிதி வரவில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைன் நிதி வந்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால், அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

நான் அவர்களிடம் சென்று, ‘‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறியிருந்தார்கள்” என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு இரு கை நிறைய (நாணயங்களை) ஒரு தடவை அள்ளிக்கொடுத்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு (நாணயங்கள்) இருந்தன.

‘‘இதைப் போன்று இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 39