2265. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ ـ رضى الله عنه ـ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم جَيْشَ الْعُسْرَةِ فَكَانَ مِنْ أَوْثَقِ أَعْمَالِي فِي نَفْسِي، فَكَانَ لِي أَجِيرٌ، فَقَاتَلَ إِنْسَانًا، فَعَضَّ أَحَدُهُمَا إِصْبَعَ صَاحِبِهِ، فَانْتَزَعَ إِصْبَعَهُ، فَأَنْدَرَ ثَنِيَّتَهُ فَسَقَطَتْ، فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَهْدَرَ ثَنِيَّتَهُ وَقَالَ " أَفَيَدَعُ إِصْبَعَهُ فِي فِيكَ تَقْضَمُهَا ـ قَالَ أَحْسِبُهُ قَالَ ـ كَمَا يَقْضَمُ الْفَحْلُ ".
பாடம் : 5 அறப்போரில் (பணியாற்றுவதற் காகக்) கூலியாளை நியமிப்பது5
2265. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் சிரமப் (போர் எனும் தபூக்) போரில் கலந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை அந்தப் போர்தான் என் அறங்களிலேயே மிகவும் வலுவானதாகும். என்னிடம் கூலியாள் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதருடன் சண்டையிட்டார். அப்போது (அவர்களில்) ஒருவர், மற்றவரின் விரலைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் விரலை இழுத்தபோது, கடித்தவரின் முன்பல்லை உடைத்துவிட்டார். பல் கீழே விழுந்தது.

பல்லுடைக்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் ‘‘அதற்கு எந்த நஷ்டஈடும் இல்லை” என்று தீர்ப்பளித்துவிட்டு, அவரிடம், ‘‘கடா ஒட்டகம் மெல்லுவதைப் போன்று, நீர் மெல்லுவதற்காக அவர் உமது வாயில் தமது விரலைக் கொடுத்துக் கொண்டு இருப்பாரா?” என்று கேட் டார்கள்.


அத்தியாயம் : 37
2266. قَالَ ابْنُ جُرَيْجٍ وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ جَدِّهِ، بِمِثْلِ هَذِهِ الصِّفَةِ أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ، فَأَنْدَرَ ثَنِيَّتَهُ، فَأَهْدَرَهَا أَبُو بَكْرٍ رضى الله عنه.
பாடம் : 5 அறப்போரில் (பணியாற்றுவதற் காகக்) கூலியாளை நியமிப்பது5
2266. ஸுஹைர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இன்னொருவரின் கையைக் கடித்துவிட்டார்; கடிபட்டவர் (கையை உருவியபோது) கடித்தவரின் முன்பல்லை உடைத்துவிட்டார். அதற்கு எந்த நஷ்ட ஈடும் தரத் தேவையில்லை என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அத்தியாயம் : 37
2267. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي يَعْلَى بْنُ مُسْلِمٍ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ، وَغَيْرُهُمَا قَالَ قَدْ سَمِعْتُهُ يُحَدِّثُهُ عَنْ سَعِيدٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ حَدَّثَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَانْطَلَقَا فَوَجَدَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ "". قَالَ سَعِيدٌ بِيَدِهِ هَكَذَا، وَرَفَعَ يَدَيْهِ فَاسْتَقَامَ، قَالَ يَعْلَى حَسِبْتُ أَنَّ سَعِيدًا قَالَ. فَمَسَحَهُ بِيَدِهِ فَاسْتَقَامَ {قَالَ} ""لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا "". قَالَ سَعِيدٌ أَجْرًا نَأْكُلُهُ.
பாடம் : 6 ஒருவரைக் கூலிக்கு அமர்த்திய போது (வேலை செய்யும்) காலத் தைக் குறிப்பிட்டு, வேலையைக் குறிப்பிடாமல் இருத்தல் அல்லாஹ் கூறுகின்றான் : (அப்போது அப்பெண்களின் தந்தை மூசா (அலை) அவர்களிடம்) கூறினார்: நீர் என்னிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், என்னுடைய இவ்விரு புதல்வியரில் ஒருவரை உமக்கு மணமுடித்துக்கொடுக்க நான் விரும்புகிறேன். ஆயினும், நீர் பத்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால், அது உம்மைப் பொறுத்தது. நான் உமக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர். அதற்கு மூசா கூறினார்: இதுவே எனக்கும் உங்களுக்கும் இடையிலான (உடன்பாடு) அம்சமாகும். இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என்மீது குற்றமில்லை. நாம் பேசிக்கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். (28:27,28)6 (இங்கு ‘வேலை செய்ய வேண்டும்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘தஃஜுர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(உன்னைக்) கூலியாகத் தர வேண்டும்’ என்பது பொருளாகும். ஆறுதல் கூறும்போது ‘‘உனக்கு அல்லாஹ் பிரதிபலன் தருவானாக!” (ஆஜரக்க) என்று சொல்வதுண்டு. பாடம் : 7 கீழே விழும் நிலையிலுள்ள சுவரை (செப்பனிட்டுத் தூக்கி) நிறுத்து வதற்காகப் பணியாளைக் கூலிக்கு அமர்த்தலாம்.
2267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மூசா (அலை), களிர் (அலை) ஆகிய) இருவரும் (ஒரு கிராமத்திற்குச்) சென்றார் கள். (அவர்களுக்கு அவ்வூரார் உணவளிக்க மறுத்துவிட்டனர்.) அங்கு ஒரு சுவர் கீழே விழலாமா என யோசித் துக்கொண்டிருந்தது. உடனே (களிர்) தமது கையை உயர்த்தினார். அது நேராக நின்று விட்டது. அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கி யிருக்கலாமே!” என்று கூறினார்கள்.

இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

‘‘களிர் (அலை) அவர்கள் தமது கையை உயர்த்தினார்கள்” என்று சொன்ன போது, அறிவிப்பாளர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (களிர் (அலை) அவர்களைப் போல) கையை உயர்த்திக் காட்டி, ‘இப்படி’ என்று கூறினார்கள்.

‘‘சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ‘களிர் (அலை) அவர்கள் சுவரைத் தமது கரத்தால் தடவ, அதுநேராக நின்றுவிட்டது’ என்று கூறியதாகவே நான் நினைக்கிறேன்” என்று அறிவிப்பாளர் யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேலும், சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(நீர் விரும்பியிருந்தால் இதற்குக்) கூலி பெற்றிருக்கலாம்; அதை நாம் (நமது உணவுக்குப்) பயன்படுத்தியிருக்கலாம் (என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்).

அத்தியாயம் : 37
2268. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ الْكِتَابَيْنِ كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ أُجَرَاءَ فَقَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ غُدْوَةَ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ، ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتِ النَّصَارَى ثُمَّ، قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنَ الْعَصْرِ إِلَى أَنْ تَغِيبَ الشَّمْسُ عَلَى قِيرَاطَيْنِ فَأَنْتُمْ هُمْ، فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالُوا مَا لَنَا أَكْثَرَ عَمَلاً، وَأَقَلَّ عَطَاءً قَالَ هَلْ نَقَصْتُكُمْ مِنْ حَقِّكُمْ قَالُوا لاَ. قَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம் : 8 நண்பகல்வரை கூலிக்கு அமர்த்துதல்
2268. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களுக்கும் (உங்களுக்குமுன்) வேதம் வழங்கப்பட்ட இரண்டு சமுதாயத் தாருக்கும் உவமையானது, ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களின் நிலையாகும். ‘‘ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து நண்பகல்வரை எனக்கு வேலை செய்பவர் யார்?” என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் (அவ்வாறு) வேலை செய்தார்கள்.

பிறகு, ‘‘நண்பகலிலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார். கிறித்தவர்கள் (அவ்வாறு) வேலை செய்தார்கள்.

பிறகு, ‘‘அஸ்ரிலிருந்து சூரியன் மறையும்வரை இரண்டு ‘கீராத்’கள் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார். (முஸ்லிம்களான) நீங்கள்தான் அ(ப்படி வேலை செய்த)வர்கள். இதனால் யூதர்களும் கிறித்தவர் களும் கோபமுற்று, ‘‘நாங்கள் செய்த வேலை அதிகம்; கூலியோ குறைவு; ஏன்?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?” என்று கேட்டார். அவர்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது (தனிப்பட்ட) அருளாகும்; நான் விரும்பியவருக்கு அதைக் கொடுப்பேன்” என்று அவர் கூறினார்.7

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 37
2269. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا مَثَلُكُمْ وَالْيَهُودُ وَالنَّصَارَى كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالاً فَقَالَ مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ عَمِلَتِ النَّصَارَى عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ أَنْتُمُ الَّذِينَ تَعْمَلُونَ مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَى مَغَارِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى وَقَالُوا نَحْنُ أَكْثَرُ عَمَلاً وَأَقَلُّ عَطَاءً، قَالَ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ. فَقَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம் : 9 அஸ்ர் (மாலை) தொழுகைவரை கூலிக்கு அமர்த்துதல்
2269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கும் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கும் உவமையானது, ஒரு மனிதர் வேலை வாங்கிய பணியாளர்களின் நிலையாகும். ‘‘ஒவ்வொரு கீராத் கூலிக்கு (காலையிலிருந்து) நண்பகல்வரை எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அம் மனிதர் கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்; பிறகு கிறித்தவர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள். பிறகு அஸ்ரிலிருந்து சூரியன் மறையும்வரை, இரண்டிரண்டு கீராத்கள் கூலிக்கு (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான் வேலை செய்கிறீர்கள்.

எனவே, யூதர்களும் கிறித்தவர்களும் கோபமுற்று, ‘‘நாங்கள் வேலை செய்தது அதிகம்; கூலியோ குறைவு” என்றனர். அதற்கு அவர், ‘‘உங்கள் உரிமையில் எதையேனும் குறைத்து உங்களுக்கு நான் அநீதியிழைத்தேனா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘இல்லை” என்றனர். ‘‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது தனிப்பட்ட அருளாகும்; நான் விரும்பியவருக்கு அதைக் கொடுப்பேன்” என்று அம்மனிதர் கூறினார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 37
2270. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ اللَّهُ تَعَالَى ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ "".
பாடம் : 10 கூலிக்காரரின் கூலியைத் தர மறுப்பவரின் குற்றம்
2270. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

‘‘மூவருக்கெதிராக மறுமை நாளில் நான் வழக்குரைப்பேன்” என்று உயர்ந் தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒருவர் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டுப் பிறகு மோசடி செய்தவர். மற்றொருவர், சுதந்திரமான மனிதனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவர்; அடுத்தவர், கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் (நன்கு) வேலை வாங்கிக் கொண்டு, கூலி கொடுக்காமல் இருந்தவர் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 37
2271. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُ الْمُسْلِمِينَ وَالْيَهُودِ وَالنَّصَارَى كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ قَوْمًا يَعْمَلُونَ لَهُ عَمَلاً يَوْمًا إِلَى اللَّيْلِ عَلَى أَجْرٍ مَعْلُومٍ، فَعَمِلُوا لَهُ إِلَى نِصْفِ النَّهَارِ فَقَالُوا لاَ حَاجَةَ لَنَا إِلَى أَجْرِكَ الَّذِي شَرَطْتَ لَنَا، وَمَا عَمِلْنَا بَاطِلٌ، فَقَالَ لَهُمْ لاَ تَفْعَلُوا أَكْمِلُوا بَقِيَّةَ عَمَلِكُمْ، وَخُذُوا أَجْرَكُمْ كَامِلاً، فَأَبَوْا وَتَرَكُوا، وَاسْتَأْجَرَ أَجِيرَيْنِ بَعْدَهُمْ فَقَالَ لَهُمَا أَكْمِلاَ بَقِيَّةَ يَوْمِكُمَا هَذَا، وَلَكُمَا الَّذِي شَرَطْتُ لَهُمْ مِنَ الأَجْرِ. فَعَمِلُوا حَتَّى إِذَا كَانَ حِينُ صَلاَةِ الْعَصْرِ قَالاَ لَكَ مَا عَمِلْنَا بَاطِلٌ، وَلَكَ الأَجْرُ الَّذِي جَعَلْتَ لَنَا فِيهِ. فَقَالَ لَهُمَا أَكْمِلاَ بَقِيَّةَ عَمَلِكُمَا، فَإِنَّ مَا بَقِيَ مِنَ النَّهَارِ شَىْءٌ يَسِيرٌ. فَأَبَيَا، وَاسْتَأْجَرَ قَوْمًا أَنْ يَعْمَلُوا لَهُ بَقِيَّةَ يَوْمِهِمْ، فَعَمِلُوا بَقِيَّةَ يَوْمِهِمْ حَتَّى غَابَتِ الشَّمْسُ، وَاسْتَكْمَلُوا أَجْرَ الْفَرِيقَيْنِ كِلَيْهِمَا، فَذَلِكَ مَثَلُهُمْ وَمَثَلُ مَا قَبِلُوا مِنْ هَذَا النُّورِ "".
பாடம் : 11 மாலையிலிருந்து இரவுவரை கூலிக்கு அமர்த்துவது
2271. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் நிலையானது, குறிப்பிட்ட கூலிக்கு, ஒருநாள் முழுக்க இரவுவரை தனக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலையை ஒத்திருக்கிறது. (அவர் முதலில் ஒரு கூட்டத்தாரை கூலிக்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல்வரை வேலை செய்துவிட்டு, ‘‘நீர் எங்களுக்குத் தருவதாகக் கூறிய கூலி எங்களுக்குத் தேவையில்லை; (இதுவரை) நாங்கள் செய்த வேலை வீண்தான்” எனக் கூறினார்கள். அப்போது கூலிக்கு அமர்த்தியவர் அவர்களிடம், ‘‘இவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் எஞ்சிய வேலைகளையும் பூர்த்தி செய்யுங்கள்! கூலியையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார். அவர்கள் (ஏற்க) மறுத்து (வேலையை) விட்டுவிட்டனர்.

அவர்களுக்குப்பின், வேறுசிலரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம் அவர், ‘‘இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தி செய்யுங்கள்; அவர்களுக்குத் தருவதாகக் கூறிய கூலியை உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.

அவர்கள் அஸ்ர் (மாலை) தொழுகை வரை வேலை செய்துவிட்டு, ‘‘உமக்காக நாங்கள் செய்த வேலை வீண்தான். எங்களுக்காக நீர் நிர்ணயித்த கூலியையும் நீரே வைத்துக்கொள்ளும்!’ என்றனர். அவர் ‘‘உங்கள் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்! பகலில் இன்னும் சிறிது நேரமே மிச்சமுள்ளது” என அவர்களிடம் கூறினார். அவர்கள் (வேலை செய்ய) மறுத்துவிட்டனர்.

பிறகு அன்றைய பொழுதில் எஞ்சிய நேரத்தில் வேலை செய்வதற்காக மற்றொரு கூட்டத்தாரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும்வரை எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால், அவர்கள் முதலிரண்டு கூட்டத்தாரின் கூலியையும் சேர்த்து முழுமையாகப் பெற்றுக் கொண்டனர். இதுதான் (முஸ்லிம்களாகிய) இவர்களுக்கும் இவர்கள் ஏற்றுக்கொண்ட (இஸ்லாம் என்ற) ஒளிக்கும் உவமையாகும்.8

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 37
2272. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوَوُا الْمَبِيتَ إِلَى غَارٍ فَدَخَلُوهُ، فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهِمُ الْغَارَ فَقَالُوا إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلاَّ أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ. فَقَالَ رَجُلٌ مِنْهُمُ اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَكُنْتُ لاَ أَغْبِقُ قَبْلَهُمَا أَهْلاً وَلاَ مَالاً، فَنَأَى بِي فِي طَلَبِ شَىْءٍ يَوْمًا، فَلَمْ أُرِحْ عَلَيْهِمَا حَتَّى نَامَا، فَحَلَبْتُ لَهُمَا غَبُوقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ وَكَرِهْتُ أَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلاً أَوْ مَالاً، فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلَى يَدَىَّ أَنْتَظِرُ اسْتِيقَاظَهُمَا حَتَّى بَرَقَ الْفَجْرُ، فَاسْتَيْقَظَا فَشَرِبَا غَبُوقَهُمَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيعُونَ الْخُرُوجَ "". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَقَالَ الآخَرُ اللَّهُمَّ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلَىَّ، فَأَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّي حَتَّى أَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِينَ، فَجَاءَتْنِي فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِائَةَ دِينَارٍ عَلَى أَنْ تُخَلِّيَ بَيْنِي وَبَيْنَ نَفْسِهَا، فَفَعَلَتْ حَتَّى إِذَا قَدَرْتُ عَلَيْهَا قَالَتْ لاَ أُحِلُّ لَكَ أَنْ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ. فَتَحَرَّجْتُ مِنَ الْوُقُوعِ عَلَيْهَا، فَانْصَرَفْتُ عَنْهَا وَهْىَ أَحَبُّ النَّاسِ إِلَىَّ وَتَرَكْتُ الذَّهَبَ الَّذِي أَعْطَيْتُهَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ. فَانْفَرَجَتِ الصَّخْرَةُ، غَيْرَ أَنَّهُمْ لاَ يَسْتَطِيعُونَ الْخُرُوجَ مِنْهَا. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ الثَّالِثُ اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أُجَرَاءَ فَأَعْطَيْتُهُمْ أَجْرَهُمْ، غَيْرَ رَجُلٍ وَاحِدٍ تَرَكَ الَّذِي لَهُ وَذَهَبَ فَثَمَّرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الأَمْوَالُ، فَجَاءَنِي بَعْدَ حِينٍ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَدِّ إِلَىَّ أَجْرِي. فَقُلْتُ لَهُ كُلُّ مَا تَرَى مِنْ أَجْرِكَ مِنَ الإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ وَالرَّقِيقِ. فَقَالَ يَا عَبْدَ اللَّهِ لاَ تَسْتَهْزِئْ بِي. فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ. فَأَخَذَهُ كُلَّهُ فَاسْتَاقَهُ فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اللَّهُمَّ فَإِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ. فَانْفَرَجَتِ الصَّخْرَةُ فَخَرَجُوا يَمْشُونَ "".
பாடம் : 12 கூலிக்கு அமர்த்தப்பட்டவர் கூலியை வாங்காமல் சென்ற பிறகு, கூலிக்கு அமர்த்தியவர் அதை முதலீடு செய்து பெருகச் செய்தால், அல்லது ஒருவர் பிறரது செல்வத்தைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டினால்...
2272. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர்; இறுதியில் (மலையில் இருந்த) குகையொன் றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர்; அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டுவந்து குகையை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள், ‘‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் உங்களை இந்தப் பாறை’லிருந்து காப்பாற்றாது” என்று தமக்குள் கூறிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்குமுன் என் குடும்பத்தாருக்கோ பணியாளர்களுக்கோ பால் கொடுப்பதில்லை. ஒரு நாள் ஒன்றைத் தேடி தொலை தூரத்துக்குச் சென்றதால், என் தாயும் தந்தையும் உறங்கிய பிறகே நான் திரும்ப முடிந்தது. அவர்களுக்காக நான் பால் கறந்து வந்தபோது, அவ்விரு வரும் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்குமுன், என் குடும்பத்தாருக்கோ என் அடிமை களுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பவில்லை. எனவே, அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து கைகளில் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு காத்திருந் தேன். வைகறை நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் அவர்கள் விழித்தார்கள்; பின்னர் தமக்குரிய பாலை (வாங்கி) அருந்தினர்.

இறைவா! நான் இதை உனது அன்பை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” எனப் பிரார்த்தித்தார். உடனே பாறை சற்று விலகியது. ஆனால், அவர்களால் வெளியேற இயலவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மற்றொருவர், ‘‘இறைவா! என் தந்தை யின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மனிதர்களிலேயே மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது, (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைய அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நூற்று இருபது பொற்காசுகளை அவளுக்கு நான் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்” என்று அவள் கூறி விட்டாள்.

உடனே அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மனிதர்களிலேயே மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளை விட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாயணத்தை (அவளிடமே) விட்டு விட்டேன். இறைவா! உனது அன்பை நாடி இதை நான் செய்திருந்தால், நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார். உடனே பாறை (சற்று) விலகியது; ஆயினும், அவர்களால் வெளியேற முடியவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்றாமவர், ‘‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி, அவர்களது கூலியையும் கொடுத்தேன். ஆனால், (அவர்களில்) ஒரே ஒருவர் மட்டும் தமது கூலியை (வாங்காமல்) விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரது கூலியை நான் முதலீடு செய்து, அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப்பின் அவர் என்னிடம் வந்தார்.

‘‘அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை எனக்குக் கொடுப்பீராக!” என்று அவர் கூறினார். ‘‘நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உமது கூலியிலிருந்து கிடைத்தவைதான்” என்று நான் கூறினேன். அதற்கு அவர் ‘‘அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்!” என்றார். ‘‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை” என்று நான் கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்துக்கொண்டு ஓட்டிச் சென்றுவிட்டார். இறைவா! இதை நான் உனது அன்பை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” எனப் பிரார்த்தித்தார். உடனே பாறை முழுமையாக விலகியது. அவர்கள் வெளியேறிச் சென்றனர்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 37
2273. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَ بِالصَّدَقَةِ انْطَلَقَ أَحَدُنَا إِلَى السُّوقِ فَيُحَامِلُ فَيُصِيبُ الْمُدَّ، وَإِنَّ لِبَعْضِهِمْ لَمِائَةَ أَلْفٍ، قَالَ مَا نُرَاهُ إِلاَّ نَفْسَهُ.
பாடம் : 13 முதுகில் சுமை சுமந்து கிடைத்த கூலியைத் தர்மம் செய்வதும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கூலியும்
2273. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை யிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி இரு கையளவு (ஒரு ‘முத்’) தானியம் கூலியாகப் பெற்று அதைத் தர்மம் செய்வார். ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு நிச்சயமாக ஓர் இலட்சம் பொற்காசுகள் உள்ளன.

‘‘அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் தம் மையே இவ்வாறு (‘அவர்களில் சிலருக்கு’ என்று) குறிப்பிட்டதாக நாம் கருதுகிறோம்” என அறிவிப்பாளர் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 37
2274. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُتَلَقَّى الرُّكْبَانُ، وَلاَ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ. قُلْتُ يَا ابْنَ عَبَّاسٍ مَا قَوْلُهُ لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ قَالَ لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا.
பாடம் : 14 தரகுக் கூலி ‘‘தரகர் கூலி பெறுவதில் தவறில்லை” என்று இப்னு சீரீன், அதாஉ, இப்ராஹீம் அந்நகஈ, ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் கருதுகின்றனர். ‘‘இந்த ஆடையை இன்ன விலைக்கு விற்றுவிடு! இதைவிட அதிகமாக விற்றால் அது உனக்குரியது என்று கூறுவது தவறாகாது” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை ‘‘இன்ன விலைக்கு விற்றுவிடு; கிடைக்கும் இலாபம் உனக்குரியது; அல்லது உனக்கும் எனக்கும் பொதுவானது” என்று கூறினால், அதில் தவறில்லை என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘முஸ்லிம்கள் தமக்கிடையே விதிக்கக் கூடிய நிபந்தனைகள் (மார்க்கத்திற்கு முரணாக இல்லாவிட்டால்) செல்லும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
2274. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சந்தைக்கு வரும் வணிகர்களை இடைமறித்து வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ‘‘கிராம வாசிக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக் கூடாது” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான், ‘‘இப்னு அப்பாஸ் அவர்களே! கிராமவாசிக்காக உள்ளூர்வாசி விற்கக் கூடாது என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இடைத் தரகராக இருக்கக் கூடாது’ என்றார்கள்.9

அத்தியாயம் : 37
2275. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، حَدَّثَنَا خَبَّابٌ، قَالَ كُنْتُ رَجُلاً قَيْنًا فَعَمِلْتُ لِلْعَاصِ بْنِ وَائِلٍ فَاجْتَمَعَ لِي عِنْدَهُ فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ فَقَالَ لاَ وَاللَّهِ لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ. فَقُلْتُ أَمَا وَاللَّهِ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ فَلاَ. قَالَ وَإِنِّي لَمَيِّتٌ ثُمَّ مَبْعُوثٌ قُلْتُ نَعَمْ. قَالَ فَإِنَّهُ سَيَكُونُ لِي ثَمَّ مَالٌ وَوَلَدٌ فَأَقْضِيكَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا}
பாடம் : 15 பகை நாட்டிலுள்ள இணைவைப்பாளரிடம் ஒருவர் கூலி வேலை பார்க்கலாமா?10
2275. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இரும்பு வேலை தெரிந்த) கொல்லனாக இருந்தேன்; (இணை வைப்பாளரான)ஆஸ் பின் வாயில் என்பவரிடம் கூலிக்கு வேலை செய்தேன். எனக்குரிய கூலி அவரிடம் தேங்கிவிட்டது; அதை கேட்பதற்காக அவரிடம் நான் சென்றபோது அவர், ‘‘நீர் முஹம்மதை நிராகரிக்காமல் இருக்கும் வரை உமக்குரியதை நான் தரமாட்டேன்” என்றார்.

நான், ‘‘நீ செத்து, பிறகு (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படும்வரை அல்லாஹ்வின் மீதாணையாக அது நடக்காது” என்றேன். ‘‘நான் செத்து, திரும்ப (உயிருடன்) எழுப்பப்படுவேனா?” என்று அவர் கேட்டார். நான், ‘‘ஆம்!” என்றேன். அதற்கு அவர், ‘‘அப்படியானால் அங்கே எனக்குப் பொருட்செல்வமும் மக்கட் செல்வமும் கிடைக்கும். அப்போது உமக்குரியதைத் தந்துவிடுகிறேன்” என்றார்.

அப்போதுதான், ‘‘நம் வசனங்களை நிராகரித்துவிட்டு, (மறுமையிலும்) நான், நிச்சயமாக பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் வழங்கப்படுவேன் என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா!” (19:77) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அத்தியாயம் : 37
2276. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفْرَةٍ سَافَرُوهَا حَتَّى نَزَلُوا عَلَى حَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الْحَىِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَىْءٍ لاَ يَنْفَعُهُ شَىْءٌ، فَقَالَ بَعْضُهُمْ لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَىْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا يَا أَيُّهَا الرَّهْطُ، إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَىْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ مِنْكُمْ مِنْ شَىْءٍ فَقَالَ بَعْضُهُمْ نَعَمْ وَاللَّهِ إِنِّي لأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضِيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلاً. فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الْغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ وَيَقْرَأُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمُ اقْسِمُوا. فَقَالَ الَّذِي رَقَى لاَ تَفْعَلُوا، حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا. فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرُوا لَهُ، فَقَالَ "" وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ ـ ثُمَّ قَالَ ـ قَدْ أَصَبْتُمُ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا "". فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ شُعْبَةُ حَدَّثَنَا أَبُو بِشْرٍ سَمِعْتُ أَبَا الْمُتَوَكِّلِ بِهَذَا.
பாடம் : 16 அரபுக் குலத்தாருக்கு ‘அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தை ஓதிப் பார்த்ததற்காகக் கொடுக்கப்பட்ட கூலி ‘‘நீங்கள் ஊதியம் பெற்றிட அதிகத் தகுதியானது இறைவேதம்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள்.11 ‘‘(குர்ஆனைக்) கற்பிப்பவர் (தமக்குக் கூலி தரப்பட வேண்டும் என்று) நிபந் தனையிடாமல் அவருக்கு ஏதேனும் கொடுக்கப்பட்டால் அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும்!” என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘கற்றுக்கொடுப்பவருக்குக் கூலி கொடுப்பதை எவரும் வெறுத்ததாக நான் கேள்விப்படவில்லை” என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் (தம் ஆசிரியருக்குப்) பத்து திர்ஹங்கள் கொடுத் திருக்கிறார்கள். ‘‘பொருட்களைப் பங்கு வைப்பவர் களுக்குக் கூலி கொடுப்பதில் தவறில்லை” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ‘‘சாதகமான தீர்ப்புப் பெறுவதற்காகக் கொடுக்கப்படுவதே ‘இலஞ்சம்’ என்று கூறப்பட்டுவந்தது” எனவும் இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மரத்திலுள்ள கனிகளை மதிப்பீடு செய்தவருக்கு கூலி கொடுக்கப்பட்டுவந்தது.
2276. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணம் மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) ஓர் அரபுக் குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித்தோழர்கள் அக்குலத் தாரிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சி களையும் செய்துபார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘‘இதோ! இங்கே நமக்கு அருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால், அவர்களிடம் (இதற்கு மருந்து) ஏதேனும் இருக்கலாம்” என்று கூறினர்.

அவ்வாறே அவர்களும் நபித்தோழர் களிடம் வந்து, ‘‘கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது; அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டனர். அப்போது, நபித்தோழர்களில் ஒருவர், ‘‘ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப்பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது” என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர்.

நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர்மீது ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்...’ என்று ஓதி (இலேசாக) உமிழ்ந்தார்.

உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை. பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘‘இதைப் பங்கு வையுங்கள்” என்று ஒருவர் கேட்டபோது, ‘‘நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது” என்று ஓதிப்பார்த்தவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டுவிட்டு, ‘‘நீங்கள் செய்தது சரிதான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 37
2277. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ حَجَمَ أَبُو طَيْبَةَ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَأَمَرَ لَهُ بِصَاعٍ أَوْ صَاعَيْنِ مِنْ طَعَامٍ، وَكَلَّمَ مَوَالِيَهُ فَخَفَّفَ عَنْ غَلَّتِهِ أَوْ ضَرِيبَتِهِ.
பாடம் : 17 ஆண் அடிமையின் வரி(யைக் குறைப்பது) மற்றும் அடிமைப் பெண்களின் வரி (எவ்வழியில் வந்தது என்பது) குறித்துத் தெரிந்துகொள்வது12
2277. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார்கள்; அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ அல்லது இரண்டு ‘ஸாஉ’கள் உணவு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவருடைய உரிமையாளர்களிடம் பேசி, அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத் தார்கள்.

அத்தியாயம் : 37
2278. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ.
பாடம் : 18 குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி
2278. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கு, அவருக்கான கூலியைக் கொடுத்தார்கள்.


அத்தியாயம் : 37
2279. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ، وَلَوْ عَلِمَ كَرَاهِيَةً لَمْ يُعْطِهِ.
பாடம் : 18 குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி
2279. இப்னு அப்பாஸ் அவர்கள் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கான கூலியை அவரிடம் கொடுத்தார்கள். அ(வ்வாறு குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவ)தை வெறுக்கத் தக்கதாகக் கருதியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் (கூலி) கொடுத்திருக்கமாட்டார்கள்.13


அத்தியாயம் : 37
2280. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْتَجِمُ، وَلَمْ يَكُنْ يَظْلِمُ أَحَدًا أَجْرَهُ.
பாடம் : 18 குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி
2280. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்; எவரது கூலியிலும் நபி (ஸல்) அவர்கள் அநீதி இழைக்கவில்லை.

அத்தியாயம் : 37
2281. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم غُلاَمًا حَجَّامًا فَحَجَمَهُ، وَأَمَرَ لَهُ بِصَاعٍ أَوْ صَاعَيْنِ، أَوْ مُدٍّ أَوْ مُدَّيْنِ، وَكَلَّمَ فِيهِ فَخُفِّفَ مِنْ ضَرِيبَتِهِ.
பாடம் : 19 அடிமைகளின் உரிமையாளர்களி டம் பேசி, அடிமைகள் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தல்
2281. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுக்கும் ஓர் அடிமையை அழைத்துவரச் செய்து குருதி உறிஞ்சி எடுத்துக்கொண் டார்கள். அவருக்காக ஒரு ‘ஸாஉ’ அல்லது இரண்டு ‘ஸாஉ’கள், ஒரு ‘முத்’ அல்லது இரண்டு ‘முத்’துகள் (அளவுக்கு உணவு) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர் தொடர்பாகப் பேசி அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்.

அத்தியாயம் : 37
2282. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ.
பாடம் : 20 விபசாரிகள் மற்றும் (விபசாரம் செய்யும்) அடிமைப் பெண்களின் வருமானம் ஒப்பாரி வைப்பவளுக்கும் பாடகி களுக்கும் கூலி கொடுப்பதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தங்கள் கற்பைப் பேணிக்கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, லிஅற்பமான உலக வாழ்க்கையைத் தேடிக் கொள்வதற்காகலி விபசாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள்! அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னரும், (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். (24:33)
2282. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாய்விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனுக்குரிய தட்சிணை ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.14


அத்தியாயம் : 37
2283. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ كَسْبِ الإِمَاءِ.
பாடம் : 20 விபசாரிகள் மற்றும் (விபசாரம் செய்யும்) அடிமைப் பெண்களின் வருமானம் ஒப்பாரி வைப்பவளுக்கும் பாடகி களுக்கும் கூலி கொடுப்பதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தங்கள் கற்பைப் பேணிக்கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, லிஅற்பமான உலக வாழ்க்கையைத் தேடிக் கொள்வதற்காகலி விபசாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள்! அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னரும், (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். (24:33)
2283. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடிமைப் பெண்கள் (தவறான வழியில்) பொருளீட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 37
2284. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ عَسْبِ الْفَحْلِ.
பாடம் : 21 பொலிகாளை புணர்ச்சிக்குக் கட்டணம் பெறுதல்
2284. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பொலிகாளை புணர்ச்சிக்குக் கட்டணம் பெறுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.15

அத்தியாயம் : 37