2237. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ.
பாடம் : 113 நாய் விற்ற காசு
2237. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாய் விற்ற காசையும் விபசாரியின் வருமானத்தையும் சோதிடரின் தட்சணை யையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34
2238. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ أَبِي اشْتَرَى حَجَّامًا، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ،. قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الأَمَةِ، وَلَعَنَ الْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ، وَآكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَلَعَنَ الْمُصَوِّرَ.
பாடம் : 113 நாய் விற்ற காசு
2238. அவன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவரது தொழிற் கருவிகளை உடைக்கும் படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அவை உடைக்கப்பட்டன.

அதுபற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாய் விற்ற கிரயம், அடிமைப் பெண்ணின் (தவறான) சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள்; பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி வாங்குபவனையும், வட்டி கொடுப்பவனையும், (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் அவர்கள் சபித்தார்கள்!’ என்று பதிலளித்தார்கள்.94

அத்தியாயம் : 34

2239. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ الْعَامَ وَالْعَامَيْنِ ـ أَوْ قَالَ عَامَيْنِ أَوْ ثَلاَثَةً. شَكَّ إِسْمَاعِيلُ ـ فَقَالَ "" مَنْ سَلَّفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ "". حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا "" فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ "".
பாடம் : 1 குறிப்பிட்ட முகத்தலளவையில் முன்பண வணிகம்2
2239. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் யிஓராண்டு அல்லது ஈராண்டுகளில்’ அல்லது யிஈராண்டு அல்லது மூன்றாண்டுகளில்’ பெற்றுக் கொள்வதாகக் கூறி, பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒருவர், (இவ்வாறு) பின்னால் பெற்றுக்கொள்வதாகக் கூறி பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட எடைக்காக வும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்!” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 35
2240. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، وَهُمْ يُسْلِفُونَ بِالتَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ "" مَنْ أَسْلَفَ فِي شَىْءٍ فَفِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ "". حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، وَقَالَ، "" فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ "".
பாடம் : 2 குறிப்பிட்ட நிறுத்தலளவையில் முன்பண வணிகம்3
2240. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி, பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட அளவுக்காகவும் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்!” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிகுறிப்பிட்ட அளவுக்காகக் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்!› என்று இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 35
2241. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ "" فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ "".
பாடம் : 2 குறிப்பிட்ட நிறுத்தலளவையில் முன்பண வணிகம்3
2241. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (முன்பண வணிகம் பற்றிக் குறிப்பிடுகையில்), ‘‘குறிப்பிட்ட அளவுக் காகவும் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட தவணைக்குக் கொடுக்கட்டும்!” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 35
2242. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي الْمُجَالِدِ،. وَحَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْمُجَالِدِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدٌ،، أَوْ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْمُجَالِدِ قَالَ اخْتَلَفَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادِ بْنِ الْهَادِ وَأَبُو بُرْدَةَ فِي السَّلَفِ، فَبَعَثُونِي إِلَى ابْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ فَسَأَلْتُهُ فَقَالَ إِنَّا كُنَّا نُسْلِفُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، فِي الْحِنْطَةِ، وَالشَّعِيرِ وَالزَّبِيبِ، وَالتَّمْرِ. وَسَأَلْتُ ابْنَ أَبْزَى فَقَالَ مِثْلَ ذَلِكَ.
பாடம் : 2 குறிப்பிட்ட நிறுத்தலளவையில் முன்பண வணிகம்3
2242. 2243 இப்னு அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூபுர்தா (ரலி) அவர்களும் முன்பண வணிகம் (அஸ்ஸலம்) தொடர் பாகக் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் காலத்திலும் கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம்பழம் ஆகியவற்றுக்காக முன்பணம் கொடுத்து வந்தோம்” என்றார்கள்.

பிறகு நான் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 35
2244. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي الْمُجَالِدِ، قَالَ بَعَثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ وَأَبُو بُرْدَةَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ فَقَالاَ سَلْهُ هَلْ كَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُسْلِفُونَ فِي الْحِنْطَةِ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا نُسْلِفُ نَبِيطَ أَهْلِ الشَّأْمِ فِي الْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالزَّيْتِ، فِي كَيْلٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ. قُلْتُ إِلَى مَنْ كَانَ أَصْلُهُ عِنْدَهُ قَالَ مَا كُنَّا نَسْأَلُهُمْ عَنْ ذَلِكَ. ثُمَّ بَعَثَانِي إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى فَسَأَلْتُهُ فَقَالَ كَانَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم يُسْلِفُونَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ نَسْأَلْهُمْ أَلَهُمْ حَرْثٌ أَمْ لاَ
பாடம் : 3 மூலப்பொருள் (விளைச்சல்) இல்லாத ஒருவரிடம் (விளை பொருளுக்காக) முன்பணம் அளித்தல்4
2244. 2245 முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா (ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் அனுப்பி, ‘‘நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா?” என்று கேட்கச் சொன்னார்கள்.

(அவ்வாறே நான் கேட்டபோது) அப்துல்லாஹ் பின் அபீஅஃவ்பா (ரலி) அவர்கள், ‘‘கோதுமை, தொலி நீக்கப்பட்ட கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட தவணைக்கு ஷாம் (சிரியா)வாசிகளான ‘அன்பாத்’ எனும் கலப்பின அரபியரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்துவந்தோம்” என்றார்கள். ‘‘மூலப்பொருள் (விளை நிலம்) யாரிடம் இருக்கிறதோ! அவரிடமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதைப் பற்றி விசாரிக்கமாட்டோம்” என்றார்கள்.

பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்பினர். நான் அவர்களிடம் (சென்று) கேட்டபோது, ‘‘நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித்தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) அவர்களுக்கு விளை நிலம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்பதில்லை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இஸ்ஹாக் பின் ஷாஹீன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை ஆகிய இரண்டு மட்டும் இடம்பெற்றுள்ளன. அப்துல்லாஹ் பின் அல்வலீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிஆலிவ்’ எண்ணெய்யும் காணப்படுகிறது.

கு(த்)தைபா பின் சயீத் (ரஹ்) அவர் களின் அறிவிப்பில் கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை ஆகியவை இடம்பெற்றுள்ளன.


அத்தியாயம் : 35
2246. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرٌو، قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِيِّ الطَّائِيَّ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ السَّلَمِ، فِي النَّخْلِ. قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ النَّخْلِ، حَتَّى يُؤْكَلَ مِنْهُ وَحَتَّى يُوزَنَ. فَقَالَ الرَّجُلُ وَأَىُّ شَىْءٍ يُوزَنُ قَالَ رَجُلٌ إِلَى جَانِبِهِ حَتَّى يُحْرَزَ. وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ أَبُو الْبَخْتَرِيِّ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 3 மூலப்பொருள் (விளைச்சல்) இல்லாத ஒருவரிடம் (விளை பொருளுக்காக) முன்பணம் அளித்தல்4
2246. அபுல்பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், பேரீச்சம்பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யிபேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணப்படும் பக்குவத்தை அடையும் முன்பும் எடைபோடப்படுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், ‘‘(மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்கு அருகிலிருந்த மற்றொரு மனிதர், ‘‘எடைபோடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று) மதிப்பிடப்படுவதாகும்” என்றார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 35
2247. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ السَّلَمِ، فِي النَّخْلِ فَقَالَ نُهِيَ عَنْ بَيْعِ النَّخْلِ، حَتَّى يَصْلُحَ، وَعَنْ بَيْعِ الْوَرِقِ، نَسَاءً بِنَاجِزٍ. وَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ السَّلَمِ، فِي النَّخْلِ، فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يُؤْكَلَ مِنْهُ، أَوْ يَأْكُلَ مِنْهُ، وَحَتَّى يُوزَنَ.
பாடம் : 4 பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம்
2247. 2248 அபுல்பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரத்திலுள்ள கனிகள் பக்குவ மடையாத வரை அவற்றை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது; மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக (தவணையில்) விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்கள்.

பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ‘‘மரத்தி லுள்ள கனிகள் உண்ணப்படும் பக்கு வத்தை அடையாத வரையிலும், எடை போடப்படாத வரையிலும் அவற்றை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 35
2249. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، سَأَلْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ السَّلَمِ، فِي النَّخْلِ فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَصْلُحَ، وَنَهَى عَنِ الْوَرِقِ بِالذَّهَبِ نَسَاءً بِنَاجِزٍ. وَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يَأْكُلَ أَوْ يُؤْكَلَ، وَحَتَّى يُوزَنَ. قُلْتُ وَمَا يُوزَنُ قَالَ رَجُلٌ عِنْدَهُ حَتَّى يُحْرَزَ.
பாடம் : 4 பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம்
2249. 2250 அபுல்பக்தரீ சயீத் பின் ஃபரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக (தவணையில்) விற்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்றார்கள்.

பேரீச்சம்பழத்தில் முன்பண வணிகம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ‘‘மரத்தின் கனிகள் உண்ணப்படும் பக்குவத்தை அடையும் முன்பும் எடைபோடப்படும் முன்பும் அவற்றை விற்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘மரத்திலுள்ளதை எவ்வாறு எடை போடுவது?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அருகிலிருந்த மற்றொரு மனிதர், ‘‘எடைபோடுவதன் கருத்து (இவ்வளவு எடை இருக்கும் என்று) மதிப்பிடப்படுவதாகும்” என்றார்.5

அத்தியாயம் : 35
2251. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامًا مِنْ يَهُودِيٍّ بِنَسِيئَةٍ، وَرَهَنَهُ دِرْعًا لَهُ مِنْ حَدِيدٍ.
பாடம் : 5 முன்பணத்திற்குப் பிணையாக ஒன்றைப் பெறுவது6
2251. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்; (அதற்காக) தமது இரும்புக் கவசத்தை அந்த யூதரிடம் அடைமானம் வைத்தார்கள்.

அத்தியாயம் : 35
2252. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَفِ فَقَالَ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى مِنْ يَهُودِيٍّ طَعَامًا إِلَى أَجَلٍ مَعْلُومٍ، وَارْتَهَنَ مِنْهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.
பாடம் : 6 முன்பண வணிகத்தில் அடைமானம் வைத்தல்
2252. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், முன்பண வணிகத்தில் (சலஃப்) அடைமானம் வைப்பது தொடர் பாக விவாதித்துக்கொண்டோம். அப்போது அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறி னார்கள்:

நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட தவணைக்கு (கடனாக) உணவுப்பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரும்புக் கவசத்தை அடைமானமாகப் பெற்றார்.

அத்தியாயம் : 35
2253. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ فِي الثِّمَارِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ "" أَسْلِفُوا فِي الثِّمَارِ فِي كَيْلٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، وَقَالَ، "" فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ "".
பாடம் : 7 குறித்த தவணையில் (மட்டுமே) முன்பண வணிகம் (செல்லும்)7 இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் இவ்வாறு (முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொருளைத் தருவதாகக் கூறி விற்பதற்கே யிசலம்’ என்று சொல்லப்படும் என்று)தான் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குறிப்பிட்ட விலைக்கு குறிப்பிட்ட தவணைக்கு, குறிப்பிட்ட இன்ன உணவுப் பொருளுக்கு முன்பணம் கொடுப்பது தவறாகாது; ஆனால், பலன் உறுதிப்படாத பயிராக அது இருக்கலாகாது.
2253. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி, கனிகளுக்காக முன்பணம் கொடுத்து வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘குறிப்பிட்ட அளவுக்காகக் குறிப்பிட்ட தவணைக்கு (மட்டுமே) முன்பணம் கொடுங்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் அல்வலீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிகுறிப்பிட்ட அளவுக்கு, குறிப்பிட்ட எடைக்கு’ என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 35
2254. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي مُجَالِدٍ، قَالَ أَرْسَلَنِي أَبُو بُرْدَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى فَسَأَلْتُهُمَا عَنِ السَّلَفِ،. فَقَالاَ كُنَّا نُصِيبُ الْمَغَانِمَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ يَأْتِينَا أَنْبَاطٌ مِنْ أَنْبَاطِ الشَّأْمِ فَنُسْلِفُهُمْ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ إِلَى أَجَلٍ مُسَمًّى. قَالَ قُلْتُ أَكَانَ لَهُمْ زَرْعٌ، أَوْ لَمْ يَكُنْ لَهُمْ زَرْعٌ قَالاَ مَا كُنَّا نَسْأَلُهُمْ عَنْ ذَلِكَ.
பாடம் : 7 குறித்த தவணையில் (மட்டுமே) முன்பண வணிகம் (செல்லும்)7 இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் இவ்வாறு (முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொருளைத் தருவதாகக் கூறி விற்பதற்கே யிசலம்’ என்று சொல்லப்படும் என்று)தான் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குறிப்பிட்ட விலைக்கு குறிப்பிட்ட தவணைக்கு, குறிப்பிட்ட இன்ன உணவுப் பொருளுக்கு முன்பணம் கொடுப்பது தவறாகாது; ஆனால், பலன் உறுதிப்படாத பயிராக அது இருக்கலாகாது.
2254. 2255 முஹம்மத் பின் அபீ முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னை அபூபுர்தா (ரலி), அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடமும் அப்துல்லாஹ் பின் அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடமும் அனுப்பினார்கள். அவ்விருவரிடமும் நான் முன்பண வணிகம் (அஸ்ஸலஃப்) குறித்துக் கேட்டேன்.

அவ்விருவரும், ‘‘நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் போர்ச் செல்வங்களைப் பெற்றுவந்தோம்; அப்போது எங்களிடம் ‘ஷாம்’ (சிரியா) நாட்டைச் சேர்ந்த ‘அன்பாத்’ எனும் கலப்பின அரபியர் வருவர்; குறிப்பிட்ட தவணையில் (தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்) கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுக்காக அவர்களிடம் முன்பணம் கொடுப்போம்” என்று கூறினார்கள்.

அப்போது நான், ‘‘அவர்களிடம் வேளாண்மை எதுவும் இருந்ததா, இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும், ‘‘நாங்கள் இது பற்றி அவர்களிடம் கேட்ட தில்லை” என்றனர்.

அத்தியாயம் : 35
2256. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَتَبَايَعُونَ الْجَزُورَ إِلَى حَبَلِ الْحَبَلَةِ، فَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ. فَسَّرَهُ نَافِعٌ أَنْ تُنْتَجَ النَّاقَةُ مَا فِي بَطْنِهَا.
பாடம் : 8 ஒட்டகத்தின் (வயிற்றிலுள்ள) குட்டியை வாங்க முன்பணம் கொடுத்தல்
2256. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் கால) மக்கள் ‘ஹபலுல் ஹபலாவுக்காக’ (சினை ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி சினையாகிப் பெறவிருக்கும் குட்டிக்காக) ஒட்டகத்தை விற்கவும் வாங்கவும் செய்துவந்தனர். இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.8

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘ஒட்டகம் தன் வயிற்றிலுள்ள குட்டியை ஈன்றெடுத்தல்’ என இதற்கு விளக்கம் அளித்தார்கள்.

™த்தியாயம் லி 36 : விலைக்கோள் உரிமை (™ஷ்ஷுஃப்ஆ)1

அத்தியாயம் : 35