2127. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ، وَعَلَيْهِ دَيْنٌ فَاسْتَعَنْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى غُرَمَائِهِ أَنْ يَضَعُوا مِنْ دَيْنِهِ، فَطَلَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ، فَلَمْ يَفْعَلُوا، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" اذْهَبْ فَصَنِّفْ تَمْرَكَ أَصْنَافًا، الْعَجْوَةَ عَلَى حِدَةٍ، وَعَذْقَ زَيْدٍ عَلَى حِدَةٍ، ثُمَّ أَرْسِلْ إِلَىَّ "". فَفَعَلْتُ، ثُمَّ أَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَلَسَ عَلَى أَعْلاَهُ، أَوْ فِي وَسَطِهِ ثُمَّ قَالَ "" كِلْ لِلْقَوْمِ "". فَكِلْتُهُمْ حَتَّى أَوْفَيْتُهُمُ الَّذِي لَهُمْ، وَبَقِيَ تَمْرِي، كَأَنَّهُ لَمْ يَنْقُصْ مِنْهُ شَىْءٌ. وَقَالَ فِرَاسٌ عَنِ الشَّعْبِيِّ حَدَّثَنِي جَابِرٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّاهُ، وَقَالَ هِشَامٌ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" جُذَّ لَهُ فَأَوْفِ لَهُ "".
பாடம் : 51 அளந்து கொடுப்பது விற்பவர், (தொகையைக்) கொடுப்பவர் ஆகியோரின் பொறுப்பாகும்.38 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இவர்கள் மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகிறார்கள். (83:3) அதாவது மக்களுக்காக இவர்கள் அளந்து கொடுக்கும்போதும், மக்களுக்காக இவர்கள் நிறுத்துக் கொடுக்கும்போதும் (அளவைக்) குறைத்துவிடுகிறார்கள். ‘‘(நீங்கள் அளந்து வாங்கும்போது, நீஙகள் கொடுத்த விலைக்கேற்ப) நிறைவாக அளந்து வாங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விற்கும் போது (சரியாக) அளந்துகொடுங்கள்; வாங்கும்போது (சரியாக) அளந்து வாங்குங்கள்” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
2127. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்கள் தம்மீது கடன் உள்ள நிலையில் இறந்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள், அவரது கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் உதவியை நான் நாடினேன். அவ்வாறே, நபி (ஸல்) அவர்களும் (கடனைத் தள்ளுபடி செய்யும்படி) அவர்களிடம் கோரினார்கள். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் சென்று உமது பேரீச்சம் பழத்தில் ‘அஜ்வா’ எனும் (உயர்) ரகத்தைத் தனியாகவும் யிஇப்னு ஸைத்’ எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் ஆளனுப்புவீராக!” என்றார்கள்.

அவ்வாறே நான் செய்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப் பினேன். அவர்கள் வந்து அதன் மேற் புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் ‘‘(கடன் கொடுத்த) இக்கூட்டத்தாருக்கு அளந்து கொடுப்பீராக!” என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். எனது பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாததைப் போன்று அப்படியே எஞ்சியிருந்தது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஃபிராஸ் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவர்களுக்கு (முழுமை யாக) கடனை அடைக்கும்வரை அளந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘கடன் கொடுத்தவருக்காக (பேரீச்சம் பாளையைத்) தனியாகப் பிரித்து, முழுமையாகக் கொடுத்துவிடு” என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 34
2128. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ "".
பாடம் : 52 அளந்துகொள்வது விரும்பத் தக்கது.
2128. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் உணவு(ப் பொருட்)களை அளந்துகொள்ளுங்கள்; உங்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும்.39

இதை மிக்தாம் பின் மஅதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2129. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَدَعَا لَهَا، وَحَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا، مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ لِمَكَّةَ "".
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் காலத்து (அளவைகளான) ஸாஉ, யிமுத்' ஆகியவற்றில் வளம் (பரக்கத்)40 இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.41
2129. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வைப் புனித நகரமாக அறிவித்து, அதற் காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக அதன் (அளவை களான) ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் (வளம் ஏற்பட) பிரார்த்தித்தேன்.

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2130. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ "". يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ.
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் காலத்து (அளவைகளான) ஸாஉ, யிமுத்' ஆகியவற்றில் வளம் (பரக்கத்)40 இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.41
2130. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவா! அவர்களின் லிஅதாவது மதீனாவாசிகளின்லி முகத்தலளவையில் நீ வளம் (பரக்கத்) வழங்குவாயாக! (குறிப்பாக) அவர்களது ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் நீ வளத்தை வழங்குவாயாக!

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2131. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ الَّذِينَ يَشْتَرُونَ الطَّعَامَ مُجَازَفَةً يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ حَتَّى يُئْوُوهُ إِلَى رِحَالِهِمْ.
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பது, பதுக்குவது தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
2131. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன்.


அத்தியாயம் : 34
2132. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَبِيعَ الرَّجُلُ طَعَامًا حَتَّى يَسْتَوْفِيَهُ. قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ ذَاكَ قَالَ ذَاكَ دَرَاهِمُ بِدَرَاهِمَ وَالطَّعَامُ مُرْجَأٌ. قَالَ أَبُو عَبْد اللَّهِ مُرْجَئُونَ مُؤَخَّرُونَ
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பது, பதுக்குவது தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
2132. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட் டேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உணவுப் பொருள் (அதை வாங்கியவரின் கைக்குப்) போய்ச்சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.42

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இங்கு மூலத்தில் யிவந்து சேராதது’ என்பதைக் குறிக்க யிமுர்ஜஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குர்ஆனில் இதன் பன்மையான) யிமுர்ஜஊ” (முர்ஜவ்ன) எனும் சொல் (9:106) ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிதாமதத்தில் (காத்திருப்பில்) வைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருளாகும்.


அத்தியாயம் : 34
2133. حَدَّثَنِي أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ "".
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பது, பதுக்குவது தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
2133. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2134. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، كَانَ عَمْرُو بْنُ دِينَارٍ يُحَدِّثُهُ عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، أَنَّهُ قَالَ مَنْ عِنْدَهُ صَرْفٌ فَقَالَ طَلْحَةُ أَنَا حَتَّى يَجِيءَ خَازِنُنَا مِنَ الْغَابَةِ. قَالَ سُفْيَانُ هُوَ الَّذِي حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ لَيْسَ فِيهِ زِيَادَةٌ. فَقَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسٍ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يُخْبِرُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ "".
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பது, பதுக்குவது தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
2134. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள், ‘‘(என்னிடமுள்ள தங்கத்திற்குப் பதிலாக) யாரிடமாவது வெள்ளிக் காசுகள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அப்போது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘என்னிடம் இருக்கிறது; ஆனால், (நாணய மதிப்பைக் கணிக்க) யிஃகாபா’ எனும் இடத்திலிருந்து எம் காசாளர் வந்தபிறகே தருவேன்” என்றார்கள்.

அப்போது (அங்கிருந்த) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்:

உடனுக்குடன் அல்லாமல் (தவணையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல், தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்.43

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்டு ம”மிட்டுள் ளோம்; அதில் கூடுதல் தகவல் இல்லை (எனவே, ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் சரியானதுதான்).

அத்தியாயம் : 34
2135. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الَّذِي حَفِظْنَاهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ سَمِعَ طَاوُسًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَهْوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ. قَالَ ابْنُ عَبَّاسٍ وَلاَ أَحْسِبُ كُلَّ شَىْءٍ إِلاَّ مِثْلَهُ.
பாடம் : 55 உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்குமுன் அதை விற்பதும் கைவசம் இல்லாததை விற்பதும்
2135. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தடுத்தது, உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்குமுன் அதை (மற்றவருக்கு) விற்பதைத்தான். ஆனால், அதைப் போன்றதுதான் மற்ற எல்லாப் பொருட்களும் என்றே நான் எண்ணுகிறேன்.


அத்தியாயம் : 34
2136. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ "". زَادَ إِسْمَاعِيلُ "" مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ "".
பாடம் : 55 உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்குமுன் அதை விற்பதும் கைவசம் இல்லாததை விற்பதும்
2136. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது முழுமையாக அவரது கைக்கு வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அதை அவர் கைப்பற்றாத வரை’ என்று இடம்பெற்றுள்ளது.44

அத்தியாயம் : 34
2137. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَقَدْ رَأَيْتُ النَّاسَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَبْتَاعُونَ جِزَافًا ـ يَعْنِي الطَّعَامَ ـ يُضْرَبُونَ أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِمْ حَتَّى يُؤْوُوهُ إِلَى رِحَالِهِمْ.
பாடம் : 56 குத்துமதிப்பாக உணவுப் பொருட் களை வாங்கியவர், அதைத் தமது இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்கு முன்பு விற்கக் கூடாது என்பதும் அதைச் செய்பவருக்கு ஒழுக்கம் கற்பிப்பதும்
2137. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள், குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கிக்கொண்டி ருந்தபோது, அவற்றைத் தம் இருப்பிடங் களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

அத்தியாயம் : 34
2138. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَقَلَّ يَوْمٌ كَانَ يَأْتِي عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ يَأْتِي فِيهِ بَيْتَ أَبِي بَكْرٍ أَحَدَ طَرَفَىِ النَّهَارِ، فَلَمَّا أُذِنَ لَهُ فِي الْخُرُوجِ إِلَى الْمَدِينَةِ لَمْ يَرُعْنَا إِلاَّ وَقَدْ أَتَانَا ظُهْرًا، فَخُبِّرَ بِهِ أَبُو بَكْرٍ فَقَالَ مَا جَاءَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي هَذِهِ السَّاعَةِ، إِلاَّ لأَمْرٍ حَدَثَ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ لأَبِي بَكْرٍ "" أَخْرِجْ مَنْ عِنْدَكَ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا هُمَا ابْنَتَاىَ. يَعْنِي عَائِشَةَ وَأَسْمَاءَ. قَالَ "" أَشَعَرْتَ أَنَّهُ قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ "". قَالَ الصُّحْبَةَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" الصُّحْبَةَ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي نَاقَتَيْنِ أَعْدَدْتُهُمَا لِلْخُرُوجِ، فَخُذْ إِحْدَاهُمَا. قَالَ "" قَدْ أَخَذْتُهَا بِالثَّمَنِ "".
பாடம் : 57 ஒரு பொருளையோ அல்லது கால்நடையையோ விலைக்கு வாங்கியவர் விற்றவரிடமே அதை விட்டுவைத்திருந்தா(ர். அப்போது அது சேதமடைந்துவிட்டா)ல், அல்லது கைக்கு வந்து சேர்வதற்கு முன் அது இறந்துவிட்டால்...?45 ‘‘வணிக ஒப்பந்தம் ஏற்பட்டபோது உயிருடனும் மொத்தமாகவும் (விற்பனை பிராணி) இருந்தால் அதன் பிறகு ஏற்படும் சேதத்திற்கு வாங்கியவரே பொறுப்பாளி” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2138. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாட்கள் மிகவும் அரிதாகும். மதீனாவிற்கு (புலம்பெயர்ந்து) செல்ல நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கிடைத்தபோது, (ஒரு நாள்) மதியம் (திடீரென) எங்களிடம் வந்து எங்களுக்கு அதிர்ச்சியளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘புதிதாக ஏற்பட்ட ஏதோ ஒன்றுக்காகத்தான் இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்ததும், ‘‘உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என் இரு புதல்வியர் மட்டுமே உள்ளனர்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக் கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன; அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறி னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நான் எடுத்துக்கொண்டுவிட்டேன்” என்றார்கள்.46

அத்தியாயம் : 34
2139. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ "".
பாடம் : 58 ஒருவர் தம் சகோதரர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டு வியாபாரம் செய்யக் கூடாது; அவர் விலைபேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு விலை பேசக் கூடாது; சகோதரர் அனுமதித்தாலோ அல்லது விட்டுவிட்டுச் சென்றாலோ தவிர!47
2139. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் வணிகம் செய்துகொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யக் கூடாது!

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2140. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلاَ تَسْأَلُ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا.
பாடம் : 58 ஒருவர் தம் சகோதரர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டு வியாபாரம் செய்யக் கூடாது; அவர் விலைபேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு விலை பேசக் கூடாது; சகோதரர் அனுமதித்தாலோ அல்லது விட்டுவிட்டுச் சென்றாலோ தவிர!47
2140. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (விற்பனை சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! ஒருவர் வணிகம் செய்துகொண்டிருக்கும் போது, மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்!

தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! தன் சகோதரி (சக்களத்தி)யின் (வாழ்க்கைப்) பாத்திரத்தில் உள்ளதைக் கொட்டி (அதைத் தனதாக்கி)விடுவதற்காக ஒரு பெண் (தன் மணாளரிடம்) தன் சகோதரியை மணவிலக்குச் செய்யுமாறு கேட்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அத்தியாயம் : 34
2141. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الْحُسَيْنُ الْمُكْتِبُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً أَعْتَقَ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ، فَاحْتَاجَ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنْ يَشْتَرِيهِ مِنِّي "" فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بِكَذَا وَكَذَا، فَدَفَعَهُ إِلَيْهِ.
பாடம் : 59 ஏலத்தில் விற்பது48 ‘‘போரில் கிடைத்த (ஃகனீமத்) பொருட்களை (ஏலம் விட்டு) அதிக விலைக்குக் கேட்பவரிடம் விற்பதை மக்கள் தவறாகக் கருதவில்லை” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2141. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், தாம் இறந்தபிறகு தமக்குச் சொந்தமான அடிமை ஒருவர் விடுதலையாகிக்கொள்ளட்டும் என்று (பின் தேதியிட்டு விடுதலை) அறிவித்திருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, ‘‘இவரை என்னிட மிருந்து (அதிக விலைக்கு) வாங்கிக் கொள்பவர் யார்?” என்று கேட்டார்கள். அவரை நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இன்ன விலைக்கு (எண்ணூறு வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கிக்கொண் டார்கள்; நபி (ஸல்) அவர்கள், அம்மனிதரி டம் அவ்விலையைக் கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 34
2142. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ النَّجْشِ.
பாடம் : 60 வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவது49 இவ்வாறு செய்யும் வியாபாரம் கூடாது எனும் கருத்து ‘‘வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுபவன் வட்டி உண்பவன் ஆவான்; மோசடிக்காரன் ஆவான். இது செல்லாததும் அனுமதிக்கப்படாததுமான மோசடியாகும்” என்று இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘மோசடி செய்பவர் நரகத்தில் இருப் பார்” என்றும், ‘‘நமது கட்டளையில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2142. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், வாங்கும் நோக்க மின்றி (ஒரு பொருளை அதிக விலைக்குக் கேட்டு) விலையை ஏற்றிவிடுவதைத் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 34
2143. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ حَبَلِ الْحَبَلَةِ، وَكَانَ بَيْعًا يَتَبَايَعُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، كَانَ الرَّجُلُ يَبْتَاعُ الْجَزُورَ إِلَى أَنْ تُنْتَجَ النَّاقَةُ، ثُمَّ تُنْتَجُ الَّتِي فِي بَطْنِهَا.
பாடம் : 61 மோசடி வியாபாரமும் சினை ஒட்ட கத்தின் வயிற்றிலுள்ள குட்டியை விற்பதும்50
2143. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஹபலுல் ஹபலா’வை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இந்த வியாபாரம் செய்துவந்தார்கள். (அதாவது) ஒருவர் ஒட்டகத்தை விலைக்கு வாங்குவார்; அந்த ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி தனது குட்டியை ஈனும்வரை (தவணை சொல்லி, அப்போதுதான் தாம் வாங்கிய ஒட்டகத்திற்கான விலையைத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொள்வார்).

அத்தியாயம் : 34
2144. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُنَابَذَةِ، وَهْىَ طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ بِالْبَيْعِ إِلَى الرَّجُلِ، قَبْلَ أَنْ يُقَلِّبَهُ، أَوْ يَنْظُرَ إِلَيْهِ، وَنَهَى عَنِ الْمُلاَمَسَةِ، وَالْمُلاَمَسَةُ لَمْسُ الثَّوْبِ لاَ يَنْظُرُ إِلَيْهِ.
பாடம் : 62 தொடுமுறை (முலாமசா) வணிகம்51 இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2144. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எறிமுறை (முனாபதா) வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுனாபதா’ என்பது, ஒருவர் தமது (விற்பனைத்) துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்குமுன் வாங்குபவரை நோக்கி எறிந்து(விட்டாலே அதை அவர் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும்.

மேலும், தொடுமுறை (முலாமசா) வியாபாரத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். யிமுலாமசா’ என்பது, துணியை (விரித்துப்) பார்க்காமலேயே அதைத் தொட்டவுடன் (வணிகம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன்) விற்பனை செய்வ தாகும்.


அத்தியாயம் : 34
2145. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نُهِيَ عَنْ لِبْسَتَيْنِ، أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ، فِي الثَّوْبِ الْوَاحِدِ، ثُمَّ يَرْفَعَهُ عَلَى مَنْكِبِهِ، وَعَنْ بَيْعَتَيْنِ اللِّمَاسِ وَالنِّبَاذِ.
பாடம் : 62 தொடுமுறை (முலாமசா) வணிகம்51 இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களால்) ஆடை அணியும் இரு முறை களுக்குத் தடை விதிக்கப்பட்டது: ஒரே துணியை ஒருவர் உடலில் சுற்றிக்கொண்டு, அத(ன் ஒரு மூலைத)னை (ஒரு) தோளில் போட்டு(க்கொண்டு மற்றொரு தோளை திறந்த நிலையில் விட்டு)விடுவது. (மற்றொன்று: ஒரே துணியைப் போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு தெரியுமாறு குத்துக்காலிட்டு அமர்வது).

மேலும், தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய இரு வணிகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

அத்தியாயம் : 34
2146. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، وَعَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ.
பாடம் : 63 எறிமுறை (முனாபதா) வணிகம் இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2146. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34