2105. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ، فَلَمْ يَدْخُلْهُ، فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مَاذَا أَذْنَبْتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ "". قُلْتُ اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يَوْمَ الْقِيَامَةِ يُعَذَّبُونَ، فَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ "". وَقَالَ "" إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ "".
பாடம் : 40 ஆண்களும் பெண்களும் அணியத் தகாத ஆடைகளை விற்பது
2105. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று வினவினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். ‘‘நீங்கள் இதன்மேல் அமர்வதற்காகவும் தலை சாய்த்துக்கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்படும். உருவப்படங்கள் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” எனக் கூறினார்கள்.26

அத்தியாயம் : 34
2106. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ "". وَفِيهِ خِرَبٌ وَنَخْلٌ.
பாடம் : 41 பொருளின் உரிமையாளரே விலை கூறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்.
2106. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவில் பள்ளிவாசல் கட்ட எண்ணியபோது), ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதில் பாழடைந்த கட்டடங் களும் பேரீச்ச மரங்களும் இருந்தன.

அத்தியாயம் : 34
2107. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ سَمِعْتُ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْمُتَبَايِعَيْنِ بِالْخِيَارِ فِي بَيْعِهِمَا، مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَكُونُ الْبَيْعُ خِيَارًا "". قَالَ نَافِعٌ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا اشْتَرَى شَيْئًا يُعْجِبُهُ فَارَقَ صَاحِبَهُ.
பாடம் : 42 வியாபாரத்தை எத்தனை நாட்களில் முறித்துக்கொள்ளலாம்?27
2107. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை தமது வியாபாரத்தில் (ஒரு முடிவு எடுக்க) உரிமை பெற்றிருக்கிறார்கள்; (முன்நிபந் தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபார மாக இருந்தால் தவிர! (அப்போது முன் நிபந்தனையின்படி நடந்துகொள்ளலாம்.)

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான ஒரு பொருளை விலைக்கு வாங்கி(ட எண்ணி)னால், (அதை உறுதி செய்யும் வகையில்) விற்றவரைப் பிரி(ந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரு)வார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறி யுள்ளார்கள்.28

அத்தியாயம் : 34
2108. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَفْتَرِقَا "". وَزَادَ أَحْمَدُ حَدَّثَنَا بَهْزٌ، قَالَ قَالَ هَمَّامٌ فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي التَّيَّاحِ فَقَالَ كُنْتُ مَعَ أَبِي الْخَلِيلِ لَمَّا حَدَّثَهُ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بِهَذَا الْحَدِيثِ.
பாடம் : 42 வியாபாரத்தை எத்தனை நாட்களில் முறித்துக்கொள்ளலாம்?27
2108. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை பெறுகிறார்கள்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2109. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ "". وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ.
பாடம் : 43 வியாபாரத்தை முறித்துக்கொள்ள ஒரு காலக்கெடு நிர்ணயிக்கா விட்டால் அந்த வணிகம் செல்லுமா?
2109. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை, (வியாபாரத்தை முறிக்க) உரிமை பெறுகிறார்கள்; ஒருவர் மற்றவரிடம் ‘(வணிகத்தைத் தொடரவோ முறிக்கவோ) உமக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தால் தவிர’ அல்லது ‘அது (முன் நிபந்தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர!›.

அத்தியாயம் : 34
2110. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ قَتَادَةُ أَخْبَرَنِي عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ سَمِعْتُ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "".
பாடம் : 44 விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.29 இப்னு உமர் (ரலி), ஷுரைஹ், ஷஅபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்) ஆகியோர் இவ்வாறே கூறுகின் றனர்.
2110. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால், அவர் களின் வணிகத்தில் அவர்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி(க் குறையை) மறைத்தால் அவர்களுக்கு வணிகத்தின் வளம் அகற்றப்படும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2111. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمُتَبَايِعَانِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ عَلَى صَاحِبِهِ مَا لَمْ يَتَفَرَّقَا، إِلاَّ بَيْعَ الْخِيَارِ "".
பாடம் : 44 விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.29 இப்னு உமர் (ரலி), ஷுரைஹ், ஷஅபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்) ஆகியோர் இவ்வாறே கூறுகின் றனர்.
2111. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்நிபந்தனை) உரிமை வழங்கப் பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியா பாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை ஒவ்வொருவரும் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2112. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" إِذَا تَبَايَعَ الرَّجُلاَنِ فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ، مَا لَمْ يَتَفَرَّقَا، وَكَانَا جَمِيعًا، أَوْ يُخَيِّرُ أَحَدُهُمَا الآخَرَ فَتَبَايَعَا عَلَى ذَلِكَ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ، وَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ يَتَبَايَعَا، وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا الْبَيْعَ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ "".
பாடம் : 45 வணிக(ப் பேர)ம் முடிந்தபின் ஒருவர் மற்றவருக்கு முறித்துக்கொள்ளும் உரிமை வழங்கி(யும் அவர் அதைப் பயன்படுத்தா)விட்டால், வணிகம் ஏற்பட்டுவிடும்.30
2112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வணிகம் செய்தால், அவ்விருவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமல் சேர்ந்து இருக்கும்வரை (பேரத்தை) முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக்கொள்ளும் உரிமையை வழங்கியும் அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டால் வணிகம் ஏற்பட்டுவிடும்; இருவரும் ஒப்பந்தத்தை முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்துவிட்டால் அப்போதும் வணிகம் ஏற்பட்டுவிடும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2113. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ بَيِّعَيْنِ لاَ بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا، إِلاَّ بَيْعَ الْخِيَارِ "".
பாடம் : 46 விற்பவர் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கும்போது, அந்த வணிகம் செல்லுமா?
2113. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்கக்கூடியவரும் வாங்கக்கூடியவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை அவர்களுக்கிடையே வணிகம் ஏற்படுவதில்லை; (முன்நிபந்தனை) உரிமை வழங்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2114. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا "" ـ قَالَ هَمَّامٌ وَجَدْتُ فِي كِتَابِي يَخْتَارُ ثَلاَثَ مِرَارٍ ـ ""فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا فَعَسَى أَنْ يَرْبَحَا رِبْحًا، وَيُمْحَقَا بَرَكَةَ بَيْعِهِمَا "". قَالَ وَحَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ، يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 46 விற்பவர் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கும்போது, அந்த வணிகம் செல்லுமா?
2114. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெறுகின்றனர். விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவர்கள் பொய் சொல்லி (குறைகளை) மறைத்தால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம். ஆனாலும், வணிகத்தின் வளம் (பரக்கத்) அழிக்கப் பட்டுவிடும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘நான் பதிவு செய்த ஏட்டில், இவ்வாறு மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2115. وَقَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ لِعُمَرَ، فَكَانَ يَغْلِبُنِي فَيَتَقَدَّمُ أَمَامَ الْقَوْمِ، فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ، ثُمَّ يَتَقَدَّمُ فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعُمَرَ "" بِعْنِيهِ "". قَالَ هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" بِعْنِيهِ "". فَبَاعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ تَصْنَعُ بِهِ مَا شِئْتَ "".
பாடம் : 47 ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் அப்போதே அன்பளிப் பாக வழங்குவதும், ஓர் அடிமையை வாங்கி உடனே விடுதலை செய்வதும் ஒருவர் விற்பவரின் சம்மதத்துடன் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, பிறகு அவர் அதை (வேறொருவருக்கு) விற்றால் அந்த வணிகம் கட்டாயமாகிவிடும்; இலாபம் இரண்டாவதாக விற்றவருக்கு உரியது என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2115. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நான் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தாருக்கு முன்னால் சென்றது. உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள்; மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே இது உங்களுக்கு உரியது” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு இதை விலைக்குத் தருவீராக!” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்னி டம்), ‘‘அப்துல்லாஹ் பின் உமரே! இது உமக்குரியது; நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக்கொள்ளும்!” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2116. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بِعْتُ مِنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُثْمَانَ مَالاً بِالْوَادِي بِمَالٍ لَهُ بِخَيْبَرَ، فَلَمَّا تَبَايَعْنَا رَجَعْتُ عَلَى عَقِبِي حَتَّى خَرَجْتُ مِنْ بَيْتِهِ، خَشْيَةَ أَنْ يُرَادَّنِي الْبَيْعَ، وَكَانَتِ السُّنَّةُ أَنَّ الْمُتَبَايِعَيْنِ بِالْخِيَارِ حَتَّى يَتَفَرَّقَا، قَالَ عَبْدُ اللَّهِ فَلَمَّا وَجَبَ بَيْعِي وَبَيْعُهُ رَأَيْتُ أَنِّي قَدْ غَبَنْتُهُ بِأَنِّي سُقْتُهُ إِلَى أَرْضِ ثَمُودٍ بِثَلاَثِ لَيَالٍ وَسَاقَنِي إِلَى الْمَدِينَةِ بِثَلاَثِ لَيَالٍ.
பாடம் : 47 ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் அப்போதே அன்பளிப் பாக வழங்குவதும், ஓர் அடிமையை வாங்கி உடனே விடுதலை செய்வதும் ஒருவர் விற்பவரின் சம்மதத்துடன் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, பிறகு அவர் அதை (வேறொருவருக்கு) விற்றால் அந்த வணிகம் கட்டாயமாகிவிடும்; இலாபம் இரண்டாவதாக விற்றவருக்கு உரியது என்று தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2116. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் யிவாதில் குரா’ எனும் இடத்தில் இருந்த எனது சொத்தை கைபரில் அவர்களுக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள் வணிகம் பேசி முடித்ததும் உடனடியாக அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி, வந்தவழியே திரும்பி விட்டேன். அவர்கள் அந்த வியாபாரத்தை முறித்துவிடுவார்களோ என்ற அச்சமே அதற்குக் காரணமாகும்.

ஏனெனில், ‘‘(பேரம் நடந்த இடத்தை விட்டுப்) பிரியாத வரை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் (வியாபாரத்தை) முறித்துக்கொள்ளும் உரிமை உள்ளது” என்பது நபிவழியாக உள்ளது. நான் வாங்குவதும் அவர்கள் விற்பதும் முடிவானதும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாகக் கருதினேன்; ஏனெனில், மதீனாவிலிருந்து மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள, ஸமூத் குலத்தார் வசித்த பகுதிக்கு அவர்களை நான் தள்ளிவிட்டேன்; அவர்கள் (அங்கிருந்து) மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள மதீனாவுக்கு என்னைத் தள்ளினார்கள்.31

அத்தியாயம் : 34
2117. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ، فَقَالَ "" إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ "".
பாடம் : 48 வியாபாரத்தில் மோசடி கூடாது.
2117. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், தாம் வணிகத்தின்போது ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் வணிகம் செய்யும்போது ஏமாற்றுதல் கூடாது என்று (முன்பே) கூறிவிடுவீராக!” என்றார்கள்.32

அத்தியாயம் : 34
2118. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ، فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ "". قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ. قَالَ "" يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2118. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; யிபைதாஉ’ எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (உயிருடன்) பூமிக்குள் புதையுண்டுபோவார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை எவ்வாறு புதை யுண்டுபோவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதி களும் இருக்குமே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (எல்லாரும்) புதையுண்டுபோகத்தான் செய்வார்கள்; எனினும், (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2119. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" صَلاَةُ أَحَدِكُمْ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي سُوقِهِ وَبَيْتِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ بِأَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَ بِهَا دَرَجَةً، أَوْ حُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَالْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ "". وَقَالَ "" أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது, அவர் தமது கடைத்தெருவிலோ வீட்டிலோ (தனியாகத்) தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் அங்கத் தூய்மை செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை. தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்லவைக்கவில்லை.

இவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரைவிட்டு நீக்கப்படுகிறது. மேலும், உங்களில் ஒருவர், தாம் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றனர். அங்கே, அவருக்கு அங்கத் தூய்மை கலையாமல் இருக்கும்வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யா மலிருக்கும்வரை, ‘‘இறைவா! இவருக்குக் கருணை செய்வாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக் கிறார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக் காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2120. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ يَا أَبَا الْقَاسِمِ. فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّمَا دَعَوْتُ هَذَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2120. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘அபுல்காசிமே! (காஸிமின் தந்தையே!)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக்காட்டி) ‘‘நான் இவரைத்தான் அழைத்தேன். (தங்களை அழைக்கவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது (முஹம்மத் எனும்) பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்!” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2121. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ دَعَا رَجُلٌ بِالْبَقِيعِ يَا أَبَا الْقَاسِمِ. فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَمْ أَعْنِكَ. قَالَ "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي "".
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2121. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ‘அல்பகீஉ’ பொது மையவாடியில் ‘அபுல்காசிமே!› என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அவர், ‘‘உங்களை எண்ணி நான் அழைக்கவில்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள்; எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2122. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَائِفَةِ النَّهَارِ لاَ يُكَلِّمُنِي وَلاَ أُكَلِّمُهُ حَتَّى أَتَى سُوقَ بَنِي قَيْنُقَاعَ، فَجَلَسَ بِفِنَاءِ بَيْتِ فَاطِمَةَ فَقَالَ "" أَثَمَّ لُكَعُ أَثَمَّ لُكَعُ "". فَحَبَسَتْهُ شَيْئًا فَظَنَنْتُ أَنَّهَا تُلْبِسُهُ سِخَابًا أَوْ تُغَسِّلُهُ، فَجَاءَ يَشْتَدُّ حَتَّى عَانَقَهُ وَقَبَّلَهُ، وَقَالَ "" اللَّهُمَّ أَحْبِبْهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ "". قَالَ سُفْيَانُ قَالَ عُبَيْدُ اللَّهِ أَخْبَرَنِي أَنَّهُ رَأَى نَافِعَ بْنَ جُبَيْرٍ أَوْتَرَ بِرَكْعَةٍ.
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2122. அபூஹுரைரா அத்தவ்சி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் வேளையில் புறப்பட்டார்கள். (நானும் சென்றேன்.) அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேச வில்லை. யிபனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந் தார்கள். ‘‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?” என்று (பேரர் ஹசன் (ரலி) அவர்கள் குறித்துக்) கேட்டார் கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக்கொண்டிருக்கிறார்; அல்லது மகனை நீராட்டிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹசன் (ரலி) அவர்கள்) ஓடிவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். ‘‘இறைவா! இவரை நீ நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக!” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

(இதை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ஒரு ரக்அத் யிவித்ர்’ தொழுததை நான் பார்த்தேன். (இதிலிருந்து அவரை இவர் சந்தித்துள்ளார் என அறியலாம்.)

அத்தியாயம் : 34
2123. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَشْتَرُونَ الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ عَلَيْهِمْ مَنْ يَمْنَعُهُمْ أَنْ يَبِيعُوهُ حَيْثُ اشْتَرَوْهُ، حَتَّى يَنْقُلُوهُ حَيْثُ يُبَاعُ الطَّعَامُ.
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2123. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வியாபாரிகளிடம் (வழிமறித்து) வாங்கிக்கொண்டிருந்தனர். ‘‘உணவுப் பொருட்களை, அவை விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (சந்தைக்கு) கொண்டுசென்ற பின்புதான் விற்க வேண் டும்; வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது!” என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைப்பார்கள்.

அத்தியாயம் : 34
2124. قَالَ وَحَدَّثَنَا ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُبَاعَ الطَّعَامُ إِذَا اشْتَرَاهُ حَتَّى يَسْتَوْفِيَهُ.
பாடம் : 49 சந்தைகள் பற்றிய குறிப்பு33 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். ‘‘கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது” என்று சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.34 ‘‘எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.35 ‘‘சந்தைகளின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்ட”’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.36
2124. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உணவுப் பொருளை வாங்கினால், அது (முழுமையாக) கைக்கு வந்து சேருவதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அத்தியாயம் : 34