2007. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنْ أَسْلَمَ أَنْ أَذِّنْ فِي النَّاسِ "" أَنَّ مَنْ كَانَ أَكَلَ فَلْيَصُمْ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ لَمْ يَكُنْ أَكَلَ فَلْيَصُمْ، فَإِنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ "".
பாடம் : 69
ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2007. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘‘இன்று ஆஷூரா நாளாகும்; ஆகவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பு இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.
அத்தியாயம் : 30

தராவீஹ் தொழுகை
2008. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِرَمَضَانَ "" مَنْ قَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 1
ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2008. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறினார்கள்:
யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடு கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 31

2009.
பாடம் : 1
ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2009. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழி படுகிறாரோ அவர் முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதே நிலையில்தான் (மக்கள் தனியாக தராவீஹை நிறைவேற்றிவந்த நிலையில் தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது.
அத்தியாயம் :

2010. وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ لَيْلَةً فِي رَمَضَانَ، إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلاَتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلاَءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ. ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَىِّ بْنِ كَعْبٍ، ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ قَارِئِهِمْ، قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ، وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنَ الَّتِي يَقُومُونَ. يُرِيدُ آخِرَ اللَّيْلِ، وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ.
பாடம் : 1
ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2010. அப்துர் ரஹ்மான் பின் அப்து அல்காரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பல குழுக்களாகப் பிரிந்திருந்தனர். சிலர் தனியாகத் தொழுதுகொண்டிருந்தனர். சிலரைப் பின்பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுதுகொண்டி ருந்தனர்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே எனக் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு, அதில் உறுதியான முடிவெடுத் தார்கள். பிறகு மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்கள் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தனர்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வழிபடுவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வழிபடுவது சிறந்ததாகும்” என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுகொண்டிருந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3

2011. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى وَذَلِكَ فِي رَمَضَانَ.
பாடம் : 1
ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2011. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் (இரவில்) தொழுதார்கள்.

2012. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ لَيْلَةً مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي الْمَسْجِدِ، وَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ، فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ الْمَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى، فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ الْمَسْجِدُ عَنْ أَهْلِهِ، حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الْفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَىَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ فَتَعْجِزُوا عَنْهَا "". فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالأَمْرُ عَلَى ذَلِكَ
பாடம் : 1
ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2012. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானில் ஒருநாள்) நள்ளிரவில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்கள் சிலரும் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றிப்) பேசிக்கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளைவிட அதிகமான மக்கள் திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ, அவர்களுடன மக்களும் தொழுதனர். காலையில் (இது குறித்து) மக்கள் பேசிக்கொண்டனர். மூன்றாம் இரவு பள்ளிவாசலில் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர்.
நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். சுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, ‘‘நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள்மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
இதே நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

2013. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ يَزِيدُ فِي رَمَضَانَ، وَلاَ فِي غَيْرِهَا عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ قَالَ "" يَا عَائِشَةُ إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي "".
பாடம் : 1
ரமளானில் (இரவில்) நின்று வழிபடு வதன் சிறப்பு2
2013. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் ‘‘ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொன்று ரக்அத்களைவிட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழவில்லை; (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்: அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் (வித்ர்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வித்ர் தொழுவதற்குமுன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷா! என் கண்கள்தான் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்காது” என்று கூறினார்கள்.

லைலத்துல் கத்ரின் சிறப்பு
2014. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ وَإِنَّمَا حَفِظَ مِنَ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "". تَابَعَهُ سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 1
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் அருளினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்குத் தெரியுமா? கண்ணிய மிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர் களும் ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியின்பேரில் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்தவண்ணமிருக்கும்); அது வைகறை தோன்றும்வரை நீடிக்கும். (97:1லி5)
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
குர்ஆனில் எங்கெல்லாம் ‘‘உமக்குத் தெரியுமா?” (வ மா அத்ரா(க்)க) என்று வருகிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட செய்தியை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்கொடுத்திருப்பான். (இதன்படி லைலத்துல் கத்ர் இன்ன இரவுதான் என்பதை நபியவர்களுக்கு அல்லாஹ் தெரிவித்தான்.) எங்கெல்லம் ‘‘உமக்கு எப்படித் தெரியும்?” (வ மா யுத் ரீ(க்)க) என்று வருகிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட செய்தியை நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்திருக்கமாட்டான். (எடுத்துக்காட்டாக யுகமுடிவு நாள் எப்போது என்பதைச் சொல்லலாம்.)2
2014. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ‘லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க) இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32

2015. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رِجَالاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ "".
பாடம் : 2
லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) இறுதி ஏழு நாட்களில் தேடுதல்
2015. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமளானின்) இறுதி ஏழு (இரவு)களில் ஒன்றில் ‘லைலத்துல் கத்ர்' எனும் கண்ணிய மிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமளானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக்கொள்ளட்டும்!” என்று கூறி னார்கள்.

2016. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ وَكَانَ لِي صَدِيقًا فَقَالَ اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ، فَخَرَجَ صَبِيحَةَ عِشْرِينَ، فَخَطَبَنَا وَقَالَ "" إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ، ثُمَّ أُنْسِيتُهَا أَوْ نُسِّيتُهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ فِي الْوَتْرِ، وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلْيَرْجِعْ "". فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ.
பாடம் : 2
லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) இறுதி ஏழு நாட்களில் தேடுதல்
2016. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப் பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்' இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன். ஆகவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள்.
நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகச் சிதறல்கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந் தது. அதனால் பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்ச மட்டையால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்யும் நிலையில் நான் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை நான் பார்த்தேன்.3

2017. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ "".
பாடம் : 3
இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்
இது பற்றிய ஹதீஸை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2018. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ. كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُجَاوِرُ فِي رَمَضَانَ الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ، فَإِذَا كَانَ حِينَ يُمْسِي مِنْ عِشْرِينَ لَيْلَةً تَمْضِي، وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ، رَجَعَ إِلَى مَسْكَنِهِ وَرَجَعَ مَنْ كَانَ يُجَاوِرُ مَعَهُ. وَأَنَّهُ أَقَامَ فِي شَهْرٍ جَاوَرَ فِيهِ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا، فَخَطَبَ النَّاسَ، فَأَمَرَهُمْ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ قَالَ "" كُنْتُ أُجَاوِرُ هَذِهِ الْعَشْرَ، ثُمَّ قَدْ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الأَوَاخِرَ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا فَابْتَغُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ وَابْتَغُوهَا فِي كُلِّ وِتْرٍ، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ "". فَاسْتَهَلَّتِ السَّمَاءُ فِي تِلْكَ اللَّيْلَةِ، فَأَمْطَرَتْ، فَوَكَفَ الْمَسْجِدُ فِي مُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، فَبَصُرَتْ عَيْنِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَنَظَرْتُ إِلَيْهِ انْصَرَفَ مِنَ الصُّبْحِ، وَوَجْهُهُ مُمْتَلِئٌ طِينًا وَمَاءً.
பாடம் : 3
இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்
இது பற்றிய ஹதீஸை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2018. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப் பகுதியில் உள்ள பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்' இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி ஒரு மாதத்தில் ‘இஃதிகாஃப்' இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (வழக்கமாக இல்லம்) திரும்பும் இரவில் (இல்லம் திரும்பாமல் பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அல்லாஹ் நாடிய விஷயங் களை அவர்களுக்குக் கட்டளையிட் டார்கள்.
பின்னர், ‘‘நான் இந்தப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப் பட்டது: பின்னர் அது எனக்கு மறக்க வைக்கப்பட்டது; எனவே, (ரமளானின்) இறுதிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுங்கள்! (அந்த நாட்களிலுள்ள) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன்” எனக் குறிப்பிட்டார்கள்.
அந்த இரவில் வானம் (இரைச்சலுடன்) மழை பொழிய, பள்ளிவாசல் (கூரை ‘லிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, சுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன்.

2019. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْتَمِسُوا "".
பாடம் : 3
இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்
இது பற்றிய ஹதீஸை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2019. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(லைலத்துல் கத்ரை) தேடிக்கொள் ளுங்கள்!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
2019. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(லைலத்துல் கத்ரை) தேடிக்கொள் ளுங்கள்!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
2020. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُجَاوِرُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، وَيَقُولُ "" تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ "".
பாடம் : 3
இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்
இது பற்றிய ஹதீஸை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2020. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ‘‘ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்!” என்று கூறுவார்கள்.

2021. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ الْقَدْرِ فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى "".
பாடம் : 3
இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்
இது பற்றிய ஹதீஸை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2021. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்! (அதாவது) ‘‘லைலத்துல் கத்ரை இருபத் தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடிக்கொள்ளுங்கள்!”
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
2021. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்! (அதாவது) ‘‘லைலத்துல் கத்ரை இருபத் தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடிக்கொள்ளுங்கள்!”
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
2022. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هِيَ فِي الْعَشْرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ "". يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ. قَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ أَيُّوبَ. وَعَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ الْتَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ.
பாடம் : 3
இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்
இது பற்றிய ஹதீஸை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.
2022. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ர் இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது; அது இருபத்தொன்ப தாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2023. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيُخْبِرَنَا بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ الْمُسْلِمِينَ، فَقَالَ "" خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ "".
பாடம் : 4
மக்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த தால் லைலத்துல் கத்ர் பற்றிய குறிப்பு அகற்றப்படல்
2023. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘லைலத்துல் கத்ர்' பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சண்டையிட்டுக்கொண்டி ருந்தனர். (அவர்களைத் தடுக்கச் சென்ற) நபி (ஸல்) அவர்கள், ‘‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சண்டையிட்டுக்கொண்டிருந்த னர்; எனவே, அது (பற்றிய விளக்கம்) அகற்றப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத் தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடிக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள்.

2024. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ.
பாடம் : 5
ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வழிபாடு
2024. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறையை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள்.

இஃதிகாஃப்
2025. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ.
பாடம் : 1
(ரமளானின்) இறுதிப் பத்து நாட்க ளில் இஃதிகாஃப் இருப்பதும் எல்லாப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம் என் பதும்
ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அவற்றை நெருங்காதீர்கள்! இவ்வாறே தன் வசனங் களை அல்லாஹ் மக்களுக்குத் தெளிவு படுத்துகின்றான். (2:187)
2025. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துவந்தார்கள்.
அத்தியாயம் : 33

2026. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ.
பாடம் : 1
(ரமளானின்) இறுதிப் பத்து நாட்க ளில் இஃதிகாஃப் இருப்பதும் எல்லாப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம் என் பதும்
ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அவற்றை நெருங்காதீர்கள்! இவ்வாறே தன் வசனங் களை அல்லாஹ் மக்களுக்குத் தெளிவு படுத்துகின்றான். (2:187)
2026. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துவந்தார்கள்; அவர்களுக்குப்பின் அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.